Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திராவிடம் என்ற சொல் தமிழினத்தை, ஈழத்தை அழித்தது -பாரதிராஜா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கோடைகால விடுமுறைகளில் வருட வருடம் தமிழ் விழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் இருந்து திரைப்படக் கலைஞர்கள், தமிழ் அறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொள்வார்கள். இதில் பாரதிராஜா அவர்கள் உரையாற்றும் போது ஈழத்து அவலம் பற்றி பகுதி2ல்(clip2) இருந்து கேட்கலாம்

http://www.sivajitv.com/events/bharathiraja-speech-fetna-2010.htm

இந்த ஆள் மட்டுமல்ல நிறைய அயல் நாட்டவர்கள் சந்தர்ப்பவாதிகள்தான்

.

திராவிடம் = தீரா + விடம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆள் மட்டுமல்ல நிறைய அயல் நாட்டவர்கள் சந்தர்ப்பவாதிகள்தான்

நாங்க மட்டும் என்ன சார்.. எங்களை கொன்றவனுக்கே.. வாக்குப் போட்டு.. சுற்றுலாப் போ.. வால் பிடிக்கிறமே.. இதை விடக் கேவலமா சார் அந்த ஆள்...! அந்த ஆளுக்கு இன உணர்விருக்கு.. ஆனால் அந்த உணர்வை மதிக்கிற இடத்தில தான் அவனால் அதனைக் காட்ட முடியும். மதிக்காத இடத்தில அவனும் மெளனமாக இருந்துதான் தன் வாழ்வை பாத்துக்கனும்.

ஆனால் அவனை நான் எங்களிலும் உயர்வா பார்க்கிறன். எங்களுக்குள்ளேயே இருந்து காட்டிக் கொடுத்து போராட்டத்தை காட்டி பிழைக்கும் இழி நாய்களைக் காட்டிலும்.. அவன் போகுமிடத்திலாவது தமிழுணர்வை கொட்டி காட்டிறானே அது உணர்வு. எதிரியின் வால் பிடிக்காமல் இருக்கிறானே.. அங்க அவன் எங்களை விட உயர்ந்து நிற்கிறான்.

ம்ம்ம்ம் அதுவும் சரிதான்.

ஆமென்

"திராவிடம் என்ற சொல் தமிழினத்தை, ஈழத்தை அழித்தது"

அப்பாடா கேட்கவே காது இனிக்குது, கடைசியாக தமிழகத்தில் இருந்து ஒருவர் உண்மையை ஒத்துக்கொண்டு விட்டார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே இப்படி பேசுங்க அங்கே கலைஞர் காலில் விழுங்க,,,, சினிமாக்காரன் என்றாலே நிஜத்திலும் நடிகர் என்பதை நிரூபியுங்கள்.

பாரதிராசாவே முதலில் உங்கள் ஊரில் உங்கள் உறவினரால் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் தொல்குடித்தமிழரை( தாழ்த்தப்பட்டோர் - தலித்) விடுவிக்கப்பாருங்கள், பின்னர் ஈழத்தைப்பேசுங்கள்.

திராவிடம் என்பது ஒழிந்தால் உங்களுக்கும் அடிமைகளாக தலித் கள் இருப்பார்கள் என்ற எண்ணம் உங்களுக்கு உண்டு என்பது உங்கள் திரைப்படங்களிலேயே நாங்கள் அறிந்துள்ளோம்.

ராஜூவ் காந்திக்கு தண்டனை கொடுத்த வழக்கில் பல ஆண்டுகளாக சிறையிலிருக்கும் பேரறிவாளன் செய்த குற்றம் திராவிடக்கொள்கையில் இருந்ததே, அவரது குடும்பம் இன்னும் திராவிடராக இருப்பது அதை விட பெரிய குற்றம் தான்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முதன் முதலாக தமிழகத்தில் தனது தோட்டத்தில் பயிற்சிக்கொடுத்த திராவிடன் கு.இராமகிருட்டிணன் 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்ததுக்கு அவர் செய்தக்குற்றம் திராவிடனாக இருப்பதே,

கடந்த ஆண்டு ஈழச்சொந்தங்களை அழிக்க கோவை வழியாக இராணுவ தளவாடங்கள் போவதை அறிந்து கோவை இராமகிருட்டிணன் இராணுவ வாகனங்களை பொதுமக்களுடன் மறித்து சிறைவாசம் செல்வதற்கு காரணமானது அந்த வீணாப்போன திராவிடமே.

புலிகளின் மூன்றாம் பேட்சிலிருந்து தங்குமிடம் அழித்து உணவழித்து இன்று வரை பொருளுதவி அளித்து பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து இப்பொழுதும் வழக்குக்காக அலைந்துகொண்டு சொத்துக்களை இழந்து வாடகை வீட்டில் இருக்கும் கொளத்தூர் மணி செய்த குற்றம் திராவிடனாக இருப்பதே.

உடல நலக்குறைவிலும் ஊர் ஊராக சென்று மக்களிடம் எழுச்சி ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கொளத்தூர் மணி கூடிய விரைவில் இறந்தாலும் அதற்குக்காரணம் திராவிடமே...

ராஜீவ்காந்தி வழக்கில் புலிகளின் தலைவருக்கு இந்திய அரசாங்கம் சம்மன் அனுப்பிய முகவரி திராவிடர்களின் பெரியார் திடல் முகவரி...

பிரபாகரன் என்ன சாதிக்காரன் என்று தமிழ்நாட்டில் நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் சாதி மதங்களை ஒழித்து மக்களை ஒன்றிணைக்கப்போராடிய திராவிடன் தானே உடனடியாக ஈழப்போருக்கு அன்று முதல் இன்று வரை முழு மூச்சாக கரம் கொடுத்தார்கள்........

ஆம் இப்பொழுது சொல்லுங்கள் திராவிடம் தான் ஈழத்தை மட்டுமல்ல இங்குள்ள நல்லவர்களான திராவிடர்களையும் அழித்துக்கொண்டிருக்கிறது என்று....

Edited by விடியல்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் திராவிடம் என்ற பெயரில் ஒளிந்திருக்கும் காதல் கடித மன்னன் கருநாவிற்கு ... அறிக்கை மன்னன் சூரமணிக்கு ...நாசூக்காக உள்குத்து குத்தியுள்ளார்.. அதை ஈழத்தோழர்கள் பெரியார் தி.க(கொளத்த்தூர் மணி) மற்றும் பெரியாரிய மார்கசிய இயக்கம் (வெ.ஆனைமுத்து) ஆகியோருக்கு எதிரானது என எடுத்து கொள்ள கூடாது..

கொளத்தூர் மணி எமக்காக தோள் கொடுக்கத்தொடங்கியது இன்று, நேற்றல்ல ... 80களில் தொடங்கிய எமக்கான பயணம் ... ஆனால் .. ஏன் இந்த திராவிட சாக்கடைக்குள் வீழ்ந்தார்களோ தெரியவில்லை! ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆள் மட்டுமல்ல நிறைய அயல் நாட்டவர்கள் சந்தர்ப்பவாதிகள்தான்

தற்பொழுது தமிழகத்தில் கருணா நிதியின் ஆட்சி நடைபெறுகிறது. ஈழத்தமிழர்கள், அப்பாவித்தமிழக மீனவர்கள் கொல்லும் போது கடிதம் எழுதும் இவர் தனது கட்சிக்கும் ,பிள்ளைகளுக்கும் மந்திரிப்பதவி கிடைப்பதற்காக டெல்லிக்கு ஓடிச்சென்று பிரதமரைச் சந்தித்தவர். டெல்லி அரசோ சிங்களத்துக்கு நட்பாக இருக்கிறது. கருணா நிதியோ காங்கிரசுக்காக என்னவும் செய்யத்தயாராக இருக்கிறார். காங்கிரசு, திமுகவுக்கு எதிராகக் கதைப்பவர்களை எல்லாம் சிறையில் அடைக்கிறார். சீமான் மீனவர்களுக்காகக் கதைக்கப் போய் மீண்டும் 1வருடம் சிறைத்தண்டனை. பாரதிராஜாவும் 99ல் ஈழத்தமிழர்களுக்காகக் கதைக்கப்போய் சிறை சென்று வந்திருக்கிறார். நான் மேலே இணைத்த காணொளியில் பாராதிராஜா தான் கதைப்பதை அங்கே போட்டுக் கொடுக்கவேண்டாம் என்று நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார்.

அவுஸ்திரெலியாவில் அரசியல் அல்லாத கவியரங்கம், பாடசாலை நிகழ்வுகளில் எம்மவர்கள் பாரதி, கம்பன், காந்தி பற்றித்தான் கதைக்கிறார்கள். ஆனால் பாராதிராஜா அவர்கள் அமெரிக்காவில் 95 வீதத்துக்கு மேலாக அமெரிக்கா வாழ் தமிழகத்தினைப் பிறப்பிடமாகக் கொண்டோர் கலந்து கொண்ட நிகழ்வில் ஈழ அவலம் பற்றி உரையாற்றி இருக்கிறார். சென்ற வருடம் இந்திய நாடாளுமன்றத்தேர்தலில் ஈழ விரோதிகளான காங்கிரஸ் இளங்கோவன், ப.சிதம்பரம், தங்கபாலு ஆகியோருக்கு எதிராக பாராதிராஜா தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. அத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. காங்கிரசும் கிட்டத்தட்ட 9 இடங்களைப் பிடித்திருந்தது. ஆனால் இத்தேர்தலில் இளங்கோவன், தங்கபாலு ஆகியோர் தோற்றுவிட்டார்கள். இவர்களின் தோல்விக்கு பாராதிராஜாவின் தலைமையிலான தீவிர பிரச்சாரமும் ஒரு காரணம். சிதம்பரம் மிகவும் முறைவான வாக்குகளினால் வெற்றி பெற்று விட்டார். எனினும் அவரின் வெற்றியில் சில சந்தேகங்கள் இருப்பதாக தமிழக ஊடகங்களில் செய்தி வந்தன.

இப்பொழுது புலம் பெயர்ந்த நாடுகளில் பலர் சிங்களதேசத்து பொருட்களுக்கு அதிகளவு ஆதரவு தருகிறார்கள். சிறிலங்கா விமானத்தில் சுற்றுலா செல்கிறார்கள். தமிழனக் கொலைக்கு உடந்தையாக இருந்த காங்கிரசுக் கூட்டணி அரசில் இருந்து சிங்களத்துக்கு ஆதரவான செய்திகள் வெளியிட்ட சன், கலைஞர் தொலைக்காட்சிகளுக்கு காசு கொடுத்து ஆதரவு தருகிறார்கள். இதனைப் பலரால் புறக்கணிக்கமுடியவில்லை. ஆனால் ஆதரவாகக் கதைக்கும் பாராதிராஜாவைப் பற்றி குறை கூற வருகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே இணைத்த காணொளியில் பாரதிராஜா " ஈழ அவலம் நடந்த போது தமிழன் தான் குரல் கொடுத்தான். ஆந்திராக்காரர், மலையாளிகள், கன்னடர்கள் குரல் கொடுக்கவில்லை. நாங்கள் எல்லோரும் திராவிடம் என்று சொல்கிறோம். ஆனால் தமிழர்களுக்குப் பிரச்சனை என்று வரும் போது ஏன் குரல் கொடுக்கவில்லை" என்று கேட்கிறார். "கன்னடத்தில் கன்னடர் அல்லாத யாரும் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியாது. ஆனால் தமிழ் நாட்டில் யாரும் போட்டியிட முடியும்" என்றும் சொல்கிறார். தமிழர் அல்லாதவர்களுக்கு எங்கே தமிழ் உணர்வு இருக்கும். உ+ம் - காங்கிரஸ் இளங்கோவன் ஒரு கன்னடன். தமிழ் செம்மொழிக்கு எதிராக வழக்குப் போட்டவர். காங்கிரஸ் மத்திய அமைச்சராக 2004ல் தமிழகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்.

Edited by கந்தப்பு

திராவிடம் என்ற சொல் தமிழினத்தை, ஈழத்தை அழித்தது -பாரதிராஜா

உண்மையை உரக்க உரைத்துள்ளார்.

இவர் திராவிடம் என்ற பெயரில் ஒளிந்திருக்கும் காதல் கடித மன்னன் கருநாவிற்கு ... அறிக்கை மன்னன் சூரமணிக்கு ...நாசூக்காக உள்குத்து குத்தியுள்ளார்.. அதை ஈழத்தோழர்கள் பெரியார் தி.க(கொளத்த்தூர் மணி) மற்றும் பெரியாரிய மார்கசிய இயக்கம் (வெ.ஆனைமுத்து) ஆகியோருக்கு எதிரானது என எடுத்து கொள்ள கூடாது..

தயவு செய்து பெரியார், திராவிடம் போன்ற சொற்களை தமிழ் ஈழ விடுதலைப் போராட்டதுடன் சம்பந்தப்படுத்த வேண்டாம், திராவிடம் என்பது தமிழ் நாட்டில் ஒரு சிலர் ஆட்சிபீடம் ஏறவும், சைவ மதத்தை வேரோடு அழிப்பதற்கும் பயன் படுத்தப்பட்ட வியூகமே, கர்நாடகாவிலோ, கேரலாவிலோ,ஆந்திராவிலோ திராவிடம் என்ற சொல் பாவிப்பதில்லை இது தமிழ் நாட்டில் மட்டும் தான் இந்தப் பிரச்சனை. திராவிட இயக்கங்களை எமது போராட்டதுடன் இணைப்பது எமக்காக உயிர் நீத்த மாவீரர்களை அவமதிப்பதற்கு ஒத்ததாகும்

நீர் சொல்வது ரொம்ப சரி தோழர் ... இங்கும் அண்டை மாநில கைத்தடிகள்... மாநில ஆட்சியேற திராவிடம் எனும் சொல் பயன் படுகிறது... க்டசி ஆரம்பிக்க பயன்படுகிறது.... மக்களை திராவிடம் திராவிடம் என்று கூறி மயக்கிவைத்திருக்கிறார்கள்.... அண்டை மாநில கைத்தடிகள்... ஈவிகேஸ் இளங்கோவன்... விஜயகாந்து.... தங்கபாலு... இது வைக்கோ உட்பட அனைவருக்கும் பொருந்தும்...

தெலுங்கு கன்னடர்களை வெளியேற்ற வேண்டும் தோழர்

இதுக்கு என்ன காரணம், நாம் எமது வரலாற்றை அறியாமை, எமக்கு எமது இனம் பற்றிய பெருமை இன்மை இந்த ஜரோப்பியர் எல்லாம் இறைச்சியை பச்சையாக உண்ட காலத்தில், ராஜ ராஜ சோழன் தஞ்சைப் பெரிய கோயிலை கட்டினான் என்பது இவர்களுக்குத் தெரியுமா, இல்லை ஆனால் சைவ மததை கேவலப்படுத்த மட்டும் முன்னுக்கு நிப்பார்கள். இந்த் கருணாநிதி இருக்கே சைவ மத விழாவென்றால் கடவுள் பொய் என்று நாத்திகம் பேசும் ஆனால் கிறிஸ்மஸ், ரம்ஸான் என்றால் முண்டியடிச்சுக் கொண்டு வாழ்த்துத் தெரிவிக்கும். திருமாவளவன் தான் தலித் மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற்ப போகிறதாம் எப்படி எல்லொறையும் மதம் மாற்றி, இப்படி சொந்த மதம் மீது பற்ரு இல்லாதவன் சொந்த இனம் மீதும் பற்றுடன் இருக்க வாய்ப்பில்லை, சென்ற வருடம் இவர் உண்ணாவிரதம் இருந்த போது நான் இதை சுட்டிக்காட்டிய போது நிர்வாகம் அந்தக் கருத்தை நீக்கியது -இறுதியில் நான் எதிர்பார்த்தது போலவே அவர் நலமாக தனது உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டார்

ஆம் உங்கள் வாதத்தின் படியெ வருவோம்... சாதியை ஒழிக்க இங்கு பொதுதளத்தில் திராவிடம் தேவைபடுகிறது.. அதை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்ற இருக்கும் மொள்ளமாறிகளை பற்றி நான் கூறவில்லை ... நான் கூறவருவது... தேர்தல் அரசியல் சாராத இயக்கங்களை... அவர்கள் சரியாகவே செயல்படுகிறார்கள்... போகட்டும் தாங்கள் கூறும் சைவ/ தமிழர் மதத்தில் சாதி முறைகளே இல்லை என்று கூற வருகிறீர்களா? முதலில் நம்முடையதை சுத்த படுத்தி கொள்வோம் தோழரே.... சைவமததில்/தமிழர் மதத்தில் சாதி முறை இல்லையென கூற முடியுமா?

brahmans2.jpg

தமிழர்களின் சாதிப்பிரிவுகளின் அடிப்படை பற்றிய தவறான கருத்து தமிழர்களிடையே நிலவி வருகிறது. தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளின் அடிப்படை ஆரிய வர்ணாசிரமமே ( பிராமண, ஸத்திரிய, வைஸ்ய, சூத்திர) என்ற கருத்து தவறானதென்கின்றனர் பல அறிஞர்கள், அதில் குறிப்பாகத் தமிழறிஞரும், சமக்கிருதம் உட்பட பல இந்தியமொழிகளில் புலமை வாய்ந்தவருமாகிய பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட் தன்னுடைய The Four Hundred Songs of War and Wisdom” என்ற புறநானூற்றுப் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலிலும், திரு.பார்த்தசாரதி அவர்கள் The Tales of An Anklet’ என்ற நூலிலும், கலாநிதி. N.சுப்பிரமணியம் அவரது ‘The Tamils’ என்ற நூலிலும் அவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளை உருவாக்கியவர்கள் தமிழர்களே, தமிழர்களின் சாதி முறைகளும், சாதிப்பெயர்களும் பார்ப்பன வருணாசிரமத்துக்குப் பெருமளவு வேறுபட்டவை என நிரூபிக்கின்றனர் அறிஞர்கள்.

வருணாசிரமச் சாதிப்பாகுபாட்டிலுள்ளது பிரமிட் போன்ற மேலாதிக்கத் தன்மை தமிழர்களின் சாதிப்பிரிவுகளில் கிடையாது, அத்துடன் சாதியடிப்படையிலான வெறுப்பும் தமிழ்ச்சாதிப் பிரிவுகளுக்கிடையில் கிடையாது. ஆனால் அதன் கருத்து, தமிழ்ச்சாதிகளுக்கிடையில் சமத்துவமின்மை கிடையாது என்பதல்ல.

தமிழர்களின் சாதிமுறைக்கு அடிப்படை பார்ப்பனர்களின் வருணாசிரமல்ல, நிலவுரிமை அடிப்படையிலான ஆண்டான் – அடிமை வழக்கமே தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளுக்கு அடிப்படையாகும். தமிழ்மண்ணில் நிலவுரிமையுடன், நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருந்த தமிழ் மக்கள் குழுக்கள் பல “வெள்ளாளர்” என்ற பொதுவான பெயருடன் அரசியல், பொருளாதார வலிமையையும் , ஆதிக்கத்தையும் தமதாக்கிக் கொண்டனர்.

தமிழர்களின் சாதிப்பாகுபாட்டுக்கு அடிப்படை எதுவாக இருந்தாலும், இந்த சாதிமுறைகள் தமிழ்ச்சமுதாயத்தைப் பிளவடையச் செய்து, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. நாம் தமிழர் என்ற அடையாளத்தை மட்டும் தமது ஓரே அடையாளமாகத் தமிழர்களை நினைக்க ஊக்குவிப்பதும், அந்த நோக்கத்தையடைய உழைப்பது மட்டுமே தமிழர்களுக்கிடையேயுள்ள சாதியடிப்படையிலான வேறுபாடுகளைக் களைந்து, நாளடைவில் சாதியற்ற தமிழ்ச்சமுதாயம் உருவாக வழிவகுக்கும்.

பல அறிஞர்களின் கருத்துப்படி தமிழர்களின் சாதிப்பாகுபாட்டை உருவாக்கியது தமிழர்களே அப்படியானால் பார்ப்பனர்களுக்கும், தமிழர்களின் சாதி முறைக்கும் தொடர்பு கிடையாது. பார்ப்பன வருணாசிரமத்துக்கும் தமிழ்ச்சாதிகளுக்கும் தொடர்பில்லை என்றால் அந்தணர்கள், பெருமானார்கள் எனப் பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப் படுவதெல்லாம் தமிழர்களையே தவிர, வருணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனர்களையல்ல என்பது தெளிவாகிறதல்லவா?

தமிழர்களை ஆரியமயமாக்குதல் (Sanskritization) பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது.

இக்காலத்தில் கூட, தமிழ்ச்சாதியையும், வேறு மாநிலங்களில் உள்ள தமிழரல்லாத சாதிக்குழுக்களில் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்ட சாதிக்குழுவினரையும் ஒன்றாக்கித், தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரிப்பதன் மூலம் தமிழர்களின் தனித்துவத்தைக் குலைக்கச் சிலர் முயன்றதை நாம் அறிவோம்.(கவுடா-கொங்கு வெள்ளாள கவுண்டர், நாயர்-பிள்ளைமார்)

உதாரணமாக, கலப்பில்லாத தமிழ்ச்சாதியும், சிலப்பதிகாரத்துக்கும், காவிரிப்பூம் பட்டினத்தின் காலத்துக்கு முன்பிருந்தும் தம்முடைய தமிழ் வேர்களை அடையாளம் காணும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களைத் தெலுங்குச் செட்டி என்ற சாதியுடன் இணைத்து, தமிழர்களைப் பிரித்துத் தமிழர்களை ஒரு தனித்துவமில்லாத, கலப்பினமாகக் கிட்டத்தட்ட அமெரிக்காவின் கறுப்பின மக்களின், இரண்டும் கெட்டான் நிலைக்குக் கொண்டு வருவதற்குச் சிலர் முனைந்ததைப் பலரும் அறிவர்.

இப்படி எல்லாத் தமிழ்க்குழுக்களுக்கும், சாதியைத் தமிழர்களுக்கு அறிமுகப் படுத்திய ஆரியர்களும் அவர்களின் வாலாயங்களாகிய தமிழெதிரிப் பார்ப்பனர்களும், தமிழர்களை ஆரியமயமாக்கல் மூலம் அதாவது, புராணத்துப் புனைகதைகளை தமிழர்களிடையே இன்றுள்ள பல சாதிப்பிரிவுகளுக்கும் இணைத்து, தமிழர்களைப் பிரித்தனர் ஆனால் அவர்களை விட மோசமாக அந்தப்புனைகதைகளை இன்றும் தாங்கிப்பிடித்துக் கொண்டு, தமக்கும் சத்திரியர் என்ற வருணப் பிரிவுக்கும் ஏதோ தொடர்பிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, தமிழர்களே தமிழர்களைத் தாழ்த்தும் கொடுமையை வன்னியர்கள் மட்டுமல்ல தமிழர்களின் பல சாதிக்குழுவினர்களும் செய்வது தான் தமிழினத்தின் சாபக்கேடு

அண்மைக் காலம் வரையில் தமிழர்களில் எல்லாச்சாதியினரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் சாதிக்கு ஆரியச் சாயம் பூசுவதற்கும், ஆரிய வேர் கண்டு பிடித்து, ஒரு புராணக்கதையை அதனுடன் இணைத்து விட்டுத் தம்மை உயர்வாகவும் காட்டுவதற்கு ஆளுக்காள் முந்திக் கொண்டார்கள், ஏனென்றால் ஆரியத் தொடர்பு உயர்ந்ததாகப் பார்ப்பனர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டது.

இவ்வாறு இடையில் வந்த பச்சைப் புளுகுக் கதை தான், உண்மையில் சுத்தத் தமிழர்களா இருந்த , மலையாளிகளும் அவர்களின் பரசுராம கோத்திரத்தில் வந்ததாகக் கூறப்படும் குப்பைக்கதையும், தமிழர்களைப் பிரித்தாளுவதற்காக நம்பூதிரிப் பார்ப்பான்கள், சேர நாட்டுத் தமிழர்களின் காதில் சுற்றிய பூத் தான் இந்தப் பரசுராம கோத்திரக் கதை.அவர்களை கலப்படமாக்கியது இவ்வாறுதான்.

என்ன தான், பிராமணர்களைத் தாக்கக் கூடாது என்று நினைத்தாலும், தமிழர்களின் சரித்திரத்தை நாம் உற்று நோக்கும் போது பாரதியார் போன்ற சில தமிழ்ப்பற்றுள்ள பிராமணர்கள் இருந்தாலும், பெரும்பாலான பிராமணர்கள், தமிழினத்தின் முதுகில் குத்தியுள்ளார்கள் என்பதை அறியலாம், இன்றைய பிராமண நண்பர்கள் விரும்பாது விட்டாலும், உண்மையை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், இன்று இஸ்ரேலும், ஜேர்மனியும் நட்பு நாடுகள், அதற்காக, ஹிட்லரையும், ஆறு மில்லியன் யூதர்களின் இறப்பையும் யூதர்கள் யாரும் மறந்து விடுவதில்லை, அது போல் தான் இதுவும்.

இந்த தமிழ்ச்சாதியினரை அல்லது தமிழர்களின் தொழில் அடிப்படையிலான, கிராமக் குழுக்களை ஆரியமயமாக்கும் முயற்சியின் முதல் படி தான், மனுசாத்திரத்தைப் பாவித்து, தமிழர்களை வடமொழிப் பெயர் கொண்ட, சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரித்தது, இதே பிரிவினையைத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், வேறு மாநிலத் திராவிடர்களிடமும் செய்ததால், ஒரே மாதிரியான சாதிப்பெயர்கள், பல மொழி மக்களிடம் பாவனைக்கு வந்தன.

அந்த அடிப்படையில், உதாரணமாக், தமிழ்நாட்டுத் தமிழர்களான வெள்ளாளரும், பறையரும் ஆளுக்காள் பகைத்துக் கொண்டு, வேற்று மொழி, வேற்று மாநில அதே சாதிப்பெயர் கொண்ட மக்களிடம் நெருங்கிய தொடர்பிருப்பதாக உணர்ந்தார்கள் என்பதை விடத் திட்டமிட்ட ஆரியமயமாக்கலாலும், புராணக்கதைகளாலும் உணர வைக்கப்பட்டார்கள். அதனால் தான் தமிழர்களான வன்னியர்கள் தம்மைச் சத்திரியர்களென்று சொல்லிக் கொண்டு, மகாபாரதத்துப் புளுகுகளுடன் தம்மை இணைத்துக் கொண்டு தாம் சத்திரியர்கள் என்று பொய்யான பெருமையளக்கிறார்கள். இப்படிச் செய்வதால், தம்முடைய தனித்துவமான, தமிழ்ப்பண்பாட்டை இழந்து, ஒரு கலப்புச் சாதியாகத் தம்மை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

இதற்கெல்லாம் காரணம் தமிழர்களின் தாழ்வு மனப்பான்மையும், யாராவது கலப்பில்லாத தமிழாக, தமிழராக இருந்தால் குறைவானவர்கள், தமிழர்கள் என்றால் கூலிகள் என்ற நிலை ஏற்பட்டதாலும் தான், சோழர்களின் வீழ்ச்சியின் பின்பு, தமிழர்கள் தமது படைப்பலத்தை இழந்ததால், தமிழ்நாட்டை ஆண்ட தமிழரல்லாத பிற மாநிலத்தினரால், தமிழினம் சிறுமைப் படுத்தப் பட்டது, சொந்தமண்ணில் அதிகாரத்தை இழந்து கூலிகளாக்கப் பட்டனர். இன்று கூடத் திராவிடர்கள் என்றால், பெரும்பாலும் அது தமிழர்களைத் தான் குறிக்கும், தமிழர்கள் என்றால் பல வடநாட்டவரின் மனதில் கூலிகள் என்ற நினைப்பு.

ஒவ்வொரு தமிழ்ச்சாதிப் பிரிவும், ஆரியமயமாக்கப் பட்டது. தமிழர்களும் ஆரியத் தொடர்பையும், அதனுடன் சம்பந்தப்பட்ட புளுகு மூட்டைப் புராணக்கதைகளையும், அதன் மூலம் தமக்கு மற்றவர்களை விடச் சிறப்பு வந்ததாக நினைந்து, அவற்றை உண்மையாக நம்பியதும் தான், தமிழ்மண்ணுக்குப் பிழைப்புத் தேடி வந்தவர்களால் தமிழர்களைப் பிரித்தாள முடிந்தது மட்டுமல்ல, அன்னியப் படையெடுப்புகளின் போது, அவர்களுக்கு உளவு பார்த்துத் தமிழரசர்களைக் கவிழ்க்கவும் முடிந்தது.

tamil_nadu_farmer_20070226.jpg

உதாரணமாக, வெள்ளாளர் அல்லது வேளாளர் கலப்பில்லாத தமிழ்ச்சாதி, வேளாண்மை – அதாவது விவசாயம் செய்பவர்கள் அல்லது நிலவுடமைக்காரர், இலங்கையில் இன்றும் வெள்ளாளர்கள் நிலச் சொந்தக்காரர்கள். வெள்ளாளர்- வெள்ளம் – தண்ணீர்- அதாவது குளங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விவசாயிகள். இப்படியான தமிழ்ச்சாதியான வெள்ளாளர்களுக்கும், ஆரியப் புராணத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்.

இந்த பொய்யான ஆரியத்தொடர்பில் இருந்த மாயையில் தான் யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னர்கள் கூடத் தம்முடைய பட்டப் பெயராக ஆரியச் சக்கரவர்த்திகள் என்று வைத்துக் கொண்டார்கள், ஆனால் அவர்கள் உண்மையில் பாண்டிய நாட்டுத் தமிழர்கள்.

இத் தமிழர்களை ஆரியமயமாக்கலும்,( Sanskritization process) தமிழர்களின் ஆரிய மோகமும், ஏதாவது புராணத்தை தமது தமிழ்ச்சாதிக்கு இணைத்து வீரம் பேசுவது தொடரும் வரை தமிழினம் உருப்படாது, சாதிப்பிரிவே தமிழர்களின் சாபக்கேடு அதற்கும் புராணக்கதையை இயற்றி, நான் உயர்ந்தவன் என்னுடைய வேர்கள் மகாபாரத்ததில் பாண்டவ்ர்களிடம் இருந்து வந்தது அல்லது வடக்கிலிருந்து வந்த முனிவரிலிருந்து வந்தது என்று கதை விட்டு, நாங்கள் தமிழர்கள் வெறும் கலப்பினம் தான், எங்களிடம் எந்த விதமான தனித்துவமும் கிடையாது , நாங்கள், பண்பாட்டையும் நாகரீகத்தையும் வடக்கில் இருந்து வந்த முனிவர்களிடமும், வட மொழியிலிருந்தும் பெற்றுக் கொண்டோம் என்று தமிழெதிரிகள் வெளிப்படையாகச் சொல்வதையும்,வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல், ஜால்ரா போடுவதையும் நாம் தமிழர்களும் ஏற்றுக்கொள்வதாகி விடுகிறது என்பதை விடக் கேவலம் வேறெதுவும் கிடையாது.

நன்றி தமிழ்தேசிய தோழர் ஆரூரான்

மற்றது தேவையை மட்டும் உறுஞ்சும் அன்ன பறவை போல வாழவேண்டும் ... இப்போதைய சூழ்நிலையில் தாஙக்ள்... அவர்களின் நதி மூலம் ரிசி மூலம் ஆராய்ந்து கொண்டிருந்தால் விடுதலை இப்போதைக்கு சாத்தியமில்லை...

ஒரு பக்கம் RSS, VHP போன்ற ஹிந்தி வெறி அமைப்பினரால் திணிக்கப்படும் போலிப் பாரதத்துவமும் (இந்தியனிசம்),

மறுபக்கம் பெரியாரின் பகுத்தறிவற்ற வால்களால், ஆக்கிரமிப்பாளன் பண உதவியுடன் உருவாக்கப்பட்ட போலித் திராவிட மாயையும் அழியும் போது மட்டும் தான் தமிழன் உண்மையான பகுத்தறிவைப் பெற்று விவேகத்துடன் கூடிய வீரனாக வாழத் தலைப்படுவான்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் சைவமதம்/தமிழர்மதம் பற்றி உயர்வாக பேசுபவர்களுத்தான்.... தனிப்பட்ட ரீதியில் யாருக்கும் எந்த மத ஆதரவாளனும் நான் இல்லை...

அன்றொரு சிவபக்தன் மார்கண்டேயனை காக்க .... ஐ மீன் திருக்கடையூர்... நடைபெற்ற சம்பவம்....

Shiva%20and%20Markandeya.jpg

இன்றொரு.......ஈழம்...

TC0519QP.jpg

இனியாவது காக்க வந்தால் சரி... பகுத்தறிவை விட்டுவிடலாம்... நன்றி...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.