Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெஸ்ட் கிரிக்கெட்: 800 விக்கெட் எடுத்து முரளிதரன் சாதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் என்ற பெருமையை முரளிதரன் பெற்றுள்ளார்.

இந்தியா இலங்கை இடையே 3 டெஸ்ட் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 4 வது நாள் ஆட்ட நேர முடிவின் போது 798 விக்கெட்களுடன் இருந்த முரளிதரன் இன்று 5 வது ஆட்டத்தில் ஹர்பஜன், ஓஜா ஆகிய இருவரின் விக்கெட்களை எடுத்தார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட் எடுத்து முரளிதரன் சாதனை படைத்துள்ளார். அவர் இன்னிங்சில் 5 விக்கெட்களும், 2 வது இன்னிங்சில் 3 விக்கெட்களும் எடுத்து உள்ளார்.

தனது 133 வது டெஸ்டில் விளையாடும் முரளிதரன் காலே போட்டியுடன் டெஸ்டில் இருந்து விடைபெறுகிறார்.

முரளிதரனுக்கு உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

congratulations.270213814_std.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

.

நல் வாழ்த்துக்கள் முரளிதரன்.

congratulations_blue_rainbow.gif

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் முரளி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் ஒருவர் சாதனை படைத்ததையிட்டு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

_48457208_muraligraphicnew.jpg

img: bbc.co.uk

இவர்கள் தான் ரெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்கள். இவர்களில் முரளிதரனைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே தாம் விளையாடிய அணிக்கு தலைவராகவோ உபதலைவராகவோ இருந்திருக்கின்றனர். ஆனால் இவர்களில் முன்னிலையில் இருக்கும் முரளிதரனுக்கு இறுதிவரை அந்த வாய்ப்பை சிங்கள அணி வழங்கவே இல்லை.

ஒரு அணியில் மதிப்பில்லாது விளையாடி பெற்ற சாதனையாகவே இதனை பார்க்க முடிகிறது. இப்படி ஒரு சாதனை முரளிதரனுக்கு எந்த வகையில் பெருமை சேர்க்குமோ எனக்குப் புரியவில்லை.

சிங்களவனுக்கு விளையாட்டிலும் கூட தமிழன் தலைமை தாங்கக் கூடாது என்ற இனவெறி இருப்பதையே இது காட்டுகிறது. வெறும் பாராட்டுக்கள் என்பது சிங்கள அணிக்கு வெற்றிகளை வாங்கிக் கொடுத்ததற்காக அளிக்கப்படுகிறதே அன்றி.. முரளியின் சாதனையை சிங்களம் உளமாற விரும்பவில்லை.

அதனால் தான் முரளியின் 1000 விக்கெட் இலக்கையும் திட்டமிட்டு அவரை போட்டிகளில் விளையாடாமல் செய்து அரசியலுக்குள் வலிந்து இழுக்க முயன்று தகர்த்துவிட்டனர். முரளி உண்மையில் பழிவாங்கப்பட்டிருக்கிறாரே அன்றி பாராட்டப்படவில்லை சிங்களத்தால்..!

இருந்தாலும் இத்தனை குழிபறிப்புக்களையும் தாண்டி அவர் இந்த இலக்கை அடைந்திருப்பது பாராட்டத்தக்கதே.

Edited by nedukkalapoovan

வாழ்த்துக்கள் முரளி.கண்முன்னே வந்து சாதனை நிலை நாட்டிய ஒரு தமிழன்

முரளி எந்த வகையிலும் கப்டனுக்கு ஏற்ற நபரல்ல.கப்டன் பதவியை இவர் எடுத்திருந்தால் இவர் இந்த சாதனையை நிலை நாட்டியிருபாரோ தெரியாது. இலஙகை இன்று உலகில் ஒரு நல்ல ரீமாக இருப்பதற்கு இலங்கை ரீமில் இருப்பவர்களின் ஒற்றுமை பெரிய காரணம்.

யாழ்ப்பாணத்தில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் (புஸ்பரகம?) பயிற்சி கொடுக்கின்றாரம்.இலங்கை அணி தேர்விற்கு யாழ் இந்து மாணவன் ஒருவனை அவர் தெரிவு செய்ய பெற்றோர் மறுத்துவிட்டார்களம் பிள்ளையின் படிப்பு தான் முக்கியமென்று.இவ்வளவுக்கும் அவரின் தாயார் இந்துக் கல்லூரியில் ஆசிரியராம்.

Edited by arjun

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

_48457208_muraligraphicnew.jpg

img: bbc.co.uk

இவர்கள் தான் ரெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்கள். இவர்களில் முரளிதரனைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே தாம் விளையாடிய அணிக்கு தலைவராகவோ உபதலைவராகவோ இருந்திருக்கின்றனர். ஆனால் இவர்களில் முன்னிலையில் இருக்கும் முரளிதரனுக்கு இறுதிவரை அந்த வாய்ப்பை சிங்கள அணி வழங்கவே இல்லை.

ஒரு அணியில் மதிப்பில்லாது விளையாடி பெற்ற சாதனையாகவே இதனை பார்க்க முடிகிறது. இப்படி ஒரு சாதனை முரளிதரனுக்கு எந்த வகையில் பெருமை சேர்க்குமோ எனக்குப் புரியவில்லை.

சிங்களவனுக்கு விளையாட்டிலும் கூட தமிழன் தலைமை தாங்கக் கூடாது என்ற இனவெறி இருப்பதையே இது காட்டுகிறது. வெறும் பாராட்டுக்கள் என்பது சிங்கள அணிக்கு வெற்றிகளை வாங்கிக் கொடுத்ததற்காக அளிக்கப்படுகிறதே அன்றி.. முரளியின் சாதனையை சிங்களம் உளமாற விரும்பவில்லை.

அதனால் தான் முரளியின் 1000 விக்கெட் இலக்கையும் திட்டமிட்டு அவரை போட்டிகளில் விளையாடாமல் செய்து அரசியலுக்குள் வலிந்து இழுக்க முயன்று தகர்த்துவிட்டனர். முரளி உண்மையில் பழிவாங்கப்பட்டிருக்கிறாரே அன்றி பாராட்டப்படவில்லை சிங்களத்தால்..!

இருந்தாலும் இத்தனை குழிபறிப்புக்களையும் தாண்டி அவர் இந்த இலக்கை அடைந்திருப்பது பாராட்டத்தக்கதே.

சுத்தம்

கண்ண திறந்து போட்டு பாருங்கோ கிரிக்கெட் விளையாட்டில என்ன நடக்குது என்று..இப்ப டெஸ்ட் விளையாட்டை மக்கள் பெரிசா விரும்பி பார்ப்பது இல்லை..20 - 20 கிரிக்கெட் வந்த கொஞ்ச நாளிளே அந்த விளையாட்டு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்ப்பு கிடைச்சது.... முரளி 1000 விக்கெட் எடுப்பார் என்று நான் நினைக்க வில்லை.. முரளி 2006 ஆண்டு தான் 600 விக்கெட் எடுத்தவர், 4 வருசம் கழிச்சு தான் 800 விக்கெட் எடுத்து இருக்கிறார், முரளிக்கு வயது இப்ப 38 , வயது போக்க போக்க அவட்ட விளையாட்டும் மங்கி கிட்டெ போக்குது..இளமையில முரளி விளையாடின விளையாட்டுக்கும் இப்ப விளையாடுர விளையாட்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு... ஒரு தரும் முரளியை வற்புருத்த வில்லை நீ டெஸ்ட் விளையாட்டில இருந்து ஓய்வு பெறு என்று..அவர் தானாயே தான் முடிவேடுத்தார். அவர் இந்த முடிவை எடுத்ததுக்கு ஒரு காரனம் இருக்கு அவரால் கூட நேரம் நிண்டு பந்து போட முடிய வில்லையாம்..HMm போன வருடத்தில் இருந்து முரளி தானே வைஸ் கப்டன் அது தெரியா உங்களுக்கு..ஏதோ எல்லாம் தெரிஞ்ச மாரி ஒப்பாரி வைக்கிறது :( முரளி பந்தை எறிகிறார் என்று அம்பியர் மார் அவர ஓரம் கட்ட நினைக்க , சிங்கள சொறி நாயல் தான் அவருக்கு அப்ப ஆதரவு தெரிவிச்சது. 2004லில் அவுஸ்ரேளியா பிரதமர் முரளி பந்தை எறிகிறார் என்று சொல்ல. முரளிக்கு அப்ப ஆதரவாய் குரல் கொடுத்தத்து மகிந்தா ராஜபக்ஸ்சா தான்..முரளி இண்டைக்கு இந்த சாதனையை படைத்து முண்ணுக்கு வருறத்துக்கு காரனமாய் இருந்தது அர்ச்சுனா ரன்னதுங்கா தான்..யாரவது ஒரு தமிழன் முரளிக்கு ஆதரவு தெரிவிச்சதை நான் இன்று வறைக்கும் கேல்வி பட வில்லை.. :(

20 - 20 மக்களால் விரும்பப்பட்டாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையான ரெஸ்ட் மச்களை அணிகள் விளையாட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை ஐ சி சி ஒன்றும் தளர்த்திக் கொள்ளவில்லை. ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் தகுதி பெற்ற அணிகள் பல.. ரெஸ்ட் தகுதி இன்றி இருக்கின்றன. ரெஸ்ட் போட்டிகளே வீரர்களுக்கு அதிக பயிற்சிக்களங்களை அளிப்பதாக அண்மையில் ரெண்டுல்கர் குறிப்பிட்டிருந்தார். அவர் ரெஸ்ட் போட்டிகளில் மக்கள் ஆர்வம் இழப்பது குறித்தும் கவலை வெளியிட்டிருந்தார்.

அர்ச்சுனா ரணத்துங்க 40 வயது தாண்டியும் அணியில் இடம்பிடித்திருந்தவர். அரவிந்த டி சில்வாவும் கிட்டத்தட்ட அப்படித்தான் நிலைத்திருந்தவர்.

சேன் வோன் ஓய்வு பெறும் நிலையில் முரளி 1000 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைக்க வாழ்த்தி இருந்தார். முரளியும் செவ்விகளில் அதனை தெரிவித்தே வந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளில் பல போட்டிகளில் காரணமின்றி முரளி விளையாடுவதில் இருந்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.

முரளி உப தலைவரானது ஊருக்கே தெரியாத விடயம். அதுமட்டுமன்றி அவர் ஓய்வுபெறப் போவதாக சென்ற ஆண்டே செய்திகள் பரவ ஆரம்பித்து விட்டன. அதன் பின்னர் அவரை உபதலைவர் ஆக்குவது என்பது சேடம் இழுக்கும் நிலையில் பால் வார்ப்பது போன்றது. முரளி அணியில் உச்ச பங்களிப்புக்களைச் செய்து கொண்டிருந்த போது அவருக்கு அந்தச் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. எந்த மரியாதையும் அணியில் வழங்கப்படவில்லை. இதனை எதனை வைத்து நியாயப்படுத்தப் போகிறீர்கள்.

மற்றைய முன்னணி வீரர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு அணியின் தலைமைப்பதவிகளை வகித்துள்ளனர். முரளிக்கு அது அளிக்கப்படவில்லை என்பதைத்தான் சுட்டிக்காட்டி இருக்கிறேன். ஓரிரண்டு மச் களில் முரளிக்கு தற்காலிக தலைமைப் பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதைப் போன்றதுதான் அவரின் ஓய்வை நெருங்கிய கட்டத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட சலுகை உப தலைமை என்பதும் இருக்கும். அதையெல்லாம் பெரிய கெளரவிப்பாக கருத முடியாது. முரளி அணிக்காக கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் விளையாடி இருக்கிறார். அதில் போன வருடம் தானாம் உப தலைவர் பதவி கொடுத்தவை. ஏன் முரளிக்கு தலைமைப்பதவி எல்லோ கொடுத்திருக்க வேண்டும்..??! அவரின் அனுபவம் சாதனைகளைக் கருத்தில் கொண்டு.. ஏன் செய்யவில்லை.

முரளி பந்தை எறிவதாக குற்றம் சுமத்திய போது அவருக்கு ஆதரவளித்தவர்களில் இந்திய முன்னாள் வீரர்கள் சிலரே அதிகம் அக்கறை காட்டினர். குறித்த குற்றச்சாட்டு உச்சத்தில் இருந்த போது சிறீலங்கா கிரிக்கெட் சபைக்குள் அதிகாரப் போட்டியும் குத்துவெட்டும் தான் நடந்து கொண்டிருந்தது. சந்திரிக்கா சார்பு அர்சுனாவும் பிறரும் மோதிக்கொண்டனர். அப்போது அதில் மகிந்த முரளிக்கு ஆதரவு அளித்தது ஒன்றும் ஆச்சரியப்படும் விடயமல்ல. அங்கு அரசியல் இருந்தது.

இறுதியில் இந்திய மற்றும் ஆசிய அணிகள் சிலவற்றின் தூண்டுதலின் பின்னரும் அவர்களின் தூண்டுதலை பார்த்தும்.. முரளியின் பங்களிப்பு அணிக்கு அவசியம் என்று கண்டதாலும் தான் சிங்களம் முரளியை காப்பாற்ற முனைந்தது. ஒரு கட்டத்தில் முரளி தான் எதிர்காலத்தில் இந்திய அணிக்காக கூட விளையாடலாம் என்று சென்னையில் வைத்து பேட்டி அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார். அந்தளவுக்கு அவர் சிங்கள அணிக்குள் நெருக்கடிகளை சந்தித்திருக்கிறார்.

வெறுமனவே சிங்களம் எல்லா வகையிலும் முரளிக்கு வெட்டி விழுத்தினது என்பது போலான உங்கள் கருத்து பரப்புரையாக உள்ளதே அன்றி யதார்த்தம் வெகு தொலைவில் இருக்கிறது. இப்போ சொல்லுங்கள் எது சுத்தம் என்று,. :(

Edited by nedukkalapoovan

முரளி பற்றி இன்றைய கனடிய முக்கிய நாளிதழில் வந்த கட்டுரை... கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்காத நாட்டில் முன் பக்கத்தில் இந்த கட்டுரை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது

இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்

முத்தையா முரளிதரன் பந்தை எறியவில்லை என்பதற்கான சான்று.

  • கருத்துக்கள உறவுகள்

சாதனைக்கு வாழ்த்துக்கள்

ஆனால் தமிழன் என்பதற்காக பெருமைப்பட முடியவில்லை.

ஆனாலும் இதுவும் அவருக்கு ஒரு தடையாக இருந்திருக்கும்

அவர் அதை ஒத்துக்கொள்ளாவிட்டாலும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20 - 20 மக்களால் விரும்பப்பட்டாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையான ரெஸ்ட் மச்களை அணிகள் விளையாட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை ஐ சி சி ஒன்றும் தளர்த்திக் கொள்ளவில்லை. ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் தகுதி பெற்ற அணிகள் பல.. ரெஸ்ட் தகுதி இன்றி இருக்கின்றன. ரெஸ்ட் போட்டிகளே வீரர்களுக்கு அதிக பயிற்சிக்களங்களை அளிப்பதாக அண்மையில் ரெண்டுல்கர் குறிப்பிட்டிருந்தார். அவர் ரெஸ்ட் போட்டிகளில் மக்கள் ஆர்வம் இழப்பது குறித்தும் கவலை வெளியிட்டிருந்தார்.

அர்ச்சுனா ரணத்துங்க 40 வயது தாண்டியும் அணியில் இடம்பிடித்திருந்தவர். அரவிந்த டி சில்வாவும் கிட்டத்தட்ட அப்படித்தான் நிலைத்திருந்தவர்.

சேன் வோன் ஓய்வு பெறும் நிலையில் முரளி 1000 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைக்க வாழ்த்தி இருந்தார். முரளியும் செவ்விகளில் அதனை தெரிவித்தே வந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளில் பல போட்டிகளில் காரணமின்றி முரளி விளையாடுவதில் இருந்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.

முரளி உப தலைவரானது ஊருக்கே தெரியாத விடயம். அதுமட்டுமன்றி அவர் ஓய்வுபெறப் போவதாக சென்ற ஆண்டே செய்திகள் பரவ ஆரம்பித்து விட்டன. அதன் பின்னர் அவரை உபதலைவர் ஆக்குவது என்பது சேடம் இழுக்கும் நிலையில் பால் வார்ப்பது போன்றது. முரளி அணியில் உச்ச பங்களிப்புக்களைச் செய்து கொண்டிருந்த போது அவருக்கு அந்தச் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. எந்த மரியாதையும் அணியில் வழங்கப்படவில்லை. இதனை எதனை வைத்து நியாயப்படுத்தப் போகிறீர்கள்.

மற்றைய முன்னணி வீரர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு அணியின் தலைமைப்பதவிகளை வகித்துள்ளனர். முரளிக்கு அது அளிக்கப்படவில்லை என்பதைத்தான் சுட்டிக்காட்டி இருக்கிறேன். ஓரிரண்டு மச் களில் முரளிக்கு தற்காலிக தலைமைப் பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதைப் போன்றதுதான் அவரின் ஓய்வை நெருங்கிய கட்டத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட சலுகை உப தலைமை என்பதும் இருக்கும். அதையெல்லாம் பெரிய கெளரவிப்பாக கருத முடியாது. முரளி அணிக்காக கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் விளையாடி இருக்கிறார். அதில் போன வருடம் தானாம் உப தலைவர் பதவி கொடுத்தவை. ஏன் முரளிக்கு தலைமைப்பதவி எல்லோ கொடுத்திருக்க வேண்டும்..??! அவரின் அனுபவம் சாதனைகளைக் கருத்தில் கொண்டு.. ஏன் செய்யவில்லை.

முரளி பந்தை எறிவதாக குற்றம் சுமத்திய போது அவருக்கு ஆதரவளித்தவர்களில் இந்திய முன்னாள் வீரர்கள் சிலரே அதிகம் அக்கறை காட்டினர். குறித்த குற்றச்சாட்டு உச்சத்தில் இருந்த போது சிறீலங்கா கிரிக்கெட் சபைக்குள் அதிகாரப் போட்டியும் குத்துவெட்டும் தான் நடந்து கொண்டிருந்தது. சந்திரிக்கா சார்பு அர்சுனாவும் பிறரும் மோதிக்கொண்டனர். அப்போது அதில் மகிந்த முரளிக்கு ஆதரவு அளித்தது ஒன்றும் ஆச்சரியப்படும் விடயமல்ல. அங்கு அரசியல் இருந்தது.

இறுதியில் இந்திய மற்றும் ஆசிய அணிகள் சிலவற்றின் தூண்டுதலின் பின்னரும் அவர்களின் தூண்டுதலை பார்த்தும்.. முரளியின் பங்களிப்பு அணிக்கு அவசியம் என்று கண்டதாலும் தான் சிங்களம் முரளியை காப்பாற்ற முனைந்தது. ஒரு கட்டத்தில் முரளி தான் எதிர்காலத்தில் இந்திய அணிக்காக கூட விளையாடலாம் என்று சென்னையில் வைத்து பேட்டி அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார். அந்தளவுக்கு அவர் சிங்கள அணிக்குள் நெருக்கடிகளை சந்தித்திருக்கிறார்.

வெறுமனவே சிங்களம் எல்லா வகையிலும் முரளிக்கு வெட்டி விழுத்தினது என்பது போலான உங்கள் கருத்து பரப்புரையாக உள்ளதே அன்றி யதார்த்தம் வெகு தொலைவில் இருக்கிறது. இப்போ சொல்லுங்கள் எது சுத்தம் என்று,. :(

ஆகா ஹாஹா

என்ன கதை சொல்லுறார் இவர்..இந்தியா முரளியை தூக்கி வைச்சு கொஞ்சினது.. இரண்டு வருடத்துக்கு முதல் இந்தியா வீரர் ஒருதர் வெளிப்படையாய் சொன்னார் முரளி பந்தை எறிகிறார் என்று..ஆனால் நீங்கள் ஏதோ எல்லாம் சொல்லுறிங்கள்.. முரளிக்கு வெளி நாட்டு வீரர் ஆதரவு வளங்கினது என்ரா அவுஸ்ரேளியா வீரர் ஸ்ரிவோக் தான்...என்ன கதை இது அர்ச்சுனா ரன்னதுங்கா 40வயது மட்டும் விளையாடினார் என்று..அவர் 35 வயதோடையே ஓய்வு எடுத்து விட்டார் . ஆதாரம் இங்கை http://www.cricinfo.com/sri-lanka-v-india-2010/content/player/50244.html :(:(

இந்த விடியோவை பார்த்தா தெரியும் முரளிக்கு யார் கூட ஆதரவு வளங்கினத்து என்று..அப்ப அர்ச்சுனா ரன்னதுங்கா விடாத பிடியில இருந்த படியாய் தான் இண்டைக்கு முரளியால் இந்த சாதனை படைக்க முடிஞ்சது

http://www.youtube.com/watch?v=20Msqs-iQt4

என்ன பொறுத்த மட்டில் உங்களின் கருத்துடன் எனக்கு உடன் பாடு இல்லை :lol::wub:

Edited by பையன்26

என்ன பொறுத்த மட்டில் உங்களின் கருத்துடன் எனக்கு உடன் பாடு இல்லை :wub::(

முரளி மீது குற்றச்சாட்டு வந்த போது பிரட்மன் கவாஸ்கர்.. கும்ளே.. ரவிசாத்ரி போன்றவர்கள் தான் முதலில் குரல் கொடுத்தார்கள். நான் இதை அப்போது Sports star சஞ்சிகையில் வாசித்திருந்தேன்.

அதன் பின்னர் தான் மற்றையவர்கள் ஆதரவு தரவுக் குரல் கொடுத்தார்கள்.

அர்ச்சுனா.. 1981 முதல் 2001 வரை கிரிக்கெட்டில் இருந்தவர். அவர் பிறந்தது 1963 இல். அவர் ரெஸ்டில் இருந்து ஓய்வுபெறும் போது வயது 38. அதன் பின்னரும் அவர் சிறீலங்கா கிரிக்கெட் சார்ந்து இருந்தார். 2008 இல் தான் சிறீலங்கா கிரிக்கெட்டை விட்டே அவர் போனார்.. இப்படி இருக்க எப்படி அவர் 35 இல் ஓய்வு பெற்றதாகச் சொல்கிறீர்கள்..???!

Tests

Test Debut: vs England, Colombo, 1981-1982

Last Test: vs South Africa, Colombo, 2000-2001

http://en.wikipedia.org/wiki/Arjuna_Ranatunga

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முரளி மீது குற்றச்சாட்டு வந்த போது கவாஸ்கர்.. கும்ளே.. ரவிசாத்ரி போன்றவர்கள் தான் முதலில் குரல் கொடுத்தார்கள். நான் இதை அப்போது Sports star சஞ்சிகையில் வாசித்திருந்தேன்.

அதன் பின்னர் தான் மற்றையவர்கள் ஆதரவு தரவுக் குரல் கொடுத்தார்கள்.

அர்ச்சுனா.. 1981 முதல் 2001 வரை கிரிக்கெட்டில் இருந்தவர். அவர் பிறந்தது 1963 இல். அவர் ரெஸ்டில் இருந்து ஓய்வுபெறும் போது வயது 38. அதன் பின்னரும் அவர் சிறீலங்கா கிரிக்கெட் சார்ந்து இருந்தார். 2008 இல் தான் சிறீலங்கா கிரிக்கெட்டை விட்டே அவர் போனார்.. இப்படி இருக்க எப்படி அவர் 35 இல் ஓய்வு பெற்றதாகச் சொல்கிறீர்கள்..???!

Tests

Test Debut: vs England, Colombo, 1981-1982

Last Test: vs South Africa, Colombo, 2000-2001

http://en.wikipedia.org/wiki/Arjuna_Ranatunga

Arjuna Ranatunga ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து 1999 ஆண்டோடையே விளையாட வில்லை , அப்ப அவருக்கு வயது35 ... 2000 ஆண்டுஓடை டெஸ்ட் விளையாட்டில இருந்து ஓய்வு அப்ப அவருக்கு வயது 36..இதுதான் உண்மை :(:(:(

a-1.jpg

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

Arjuna Ranatunga ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து 1999 ஆண்டோடையே விளையாட வில்லை , அப்ப அவருக்கு வயது35 ... 2000 ஆண்டுஓடை டெஸ்ட் விளையாட்டில இருந்து ஓய்வு அப்ப அவருக்கு வயது 36..இதுதான் உண்மை :(:wub::(

a-1.jpg

2000-2001 சீசனில் தான் அவர் ரெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். அப்போது அவருக்கு வயது 37/38. அதுவும் 2000-01 சீசனில் இறுதியாக தென்னாபிரிக்காவிற்கு எதிராக விளையாடி இருக்கிறார். அவர் பிறந்தது 1963 இல். இதனை விட வேறு வழிகளில் இதனைச் சொல்ல எனக்குத் தெரியவில்லை..! இதற்கு அப்பால் இதில் தர்க்கிக்க எதுவும் இல்லை..! ஆனால் அர்ச்சுனா ரணதுங்க சிறீலங்கா கிரிக்கெட்டோடு தொடர்ந்து இருந்தார். அதற்காகவே தான் அவர் அணியில் இருந்து ஓய்வுபெறுவதாக சொல்லிக் கொண்டார்..! :(

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ், பையன் சொல்வதில பல யதார்த்தமானவை, உண்மை. கீழ் உள்ள பேட்டியில அவரே எல்லாம் விரிவாக சொல்லுறார்.

வணக்கம், கடந்த மாதம் விஜய் தொலைக்காட்சியில ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை பார்க்க எனக்கு இன்று சந்தர்ப்பம் கிடைச்சது. மிக நன்றாக இருந்திச்சிது. நீங்களும் பார்த்து மகிழுங்கள்:

பகுதி 01

http://www.youtube.com/watch?v=cd5nrYossFM

பகுதி 02

http://www.youtube.com/watch?v=fYdeAgqr304

மிகுதி பகுதிகளை பார்க்க: http://www.islandcricket.lk/videos/muttiah_muralitharan_koffee_with_anu_season_3_chithirai_thirunal_special_interview

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், பையன் சொல்வதில பல யதார்த்தமானவை, உண்மை. கீழ் உள்ள பேட்டியில அவரே எல்லாம் விரிவாக சொல்லுறார்.

நன்றி கரும்பு. நான் இங்கு முன்வைத்த பிரதான விடயம்.. எல்லா முன்னணி சாதனையாளர்களும் (கிரிகெட்டில்) அணித்தலைவர் பதவி கொடுத்து கெளரவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் முரளி மட்டும் விதிவிலக்காக்கப்பட்டிருக்கிறார்.. என்பதையே. அதற்கு பையன் சொன்னது கடந்த ஆண்டில் இருந்து அவர் உப தலைவர் என்று. இத்தனை பெரிய சாதனைகளை அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவருக்கு.. இதுதானா சிங்கள அணி வழங்கிய கெளரவிப்பு என்பதுதான்.

விஜய் ரீவியில் முரளிதரன் சார்ப்பாக மாணவர்களிடம் கேட்கப்பட்ட 10 கேள்விகளில் ஒன்று முரளி அணியின் தலைவராக இருந்துள்ளாரா என்று. அதற்கு அவர் இருக்கவே இல்லை என்று பதிலளிக்கும் போது முரளியின் முகம் மாறுவதை அவதானிக்கலாம். இந்த இணைப்பில் 6 வீடியோ என்று நினைக்கிறேன் பாருங்கள்.

இத்தனை பெரிய சாதனையாளனுக்கு கிடைக்க முடியாத பதவியா அணித்தலைவர் பதவி..???! சிங்களம் வேண்டும் என்றே புறக்கணித்துள்ளது இவரை.

அர்ச்சுனா ரணத்துங்கா இவரின் திறமையை அணிக்காக பயன்படுத்தி இருப்பதில் வல்லராக இருக்கலாம். ஆனால் முரளியை கெளரவப்படுத்துவதில் இருந்து அவர் தவறிவிட்டார். காரணம் அவருக்குள் இருந்த சிங்கள இனவாதமே ஆகும்.

இந்த யதார்த்தத்தையும் மறுதலிக்க முடியாது கரும்பு.

மற்றும்படி நான் சிறீலங்கா சிங்கள கிரிக்கெட் அணியின் ரசிகனாக இருந்ததில்லை. அந்த அணியில் யார் யார் விளையாடுகிறார்கள் என்றே அவ்வளவுக்கு தெரியாது. இருந்தாலும் முரளிக்கு ஆதரவளித்திருக்கிறேன். தனிப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரன் என்ற வகையில் மட்டும்.

மற்றும்படி பகிரப்பட்ட சிறீலங்கா அணி பற்றிய வரலாற்றில் சில மாறுபாடுகள் இடம்பெற்றிருக்கலாம். அவற்றை திருத்திக் கொள்ளத்தக்க வகைக்கு தரவுகளை திரட்டக் கூடியதாக இருந்துள்ளது இக் கருத்துப் பகிர்வு. மற்றும்படி சிங்கள அணியின் இனவாதப் போக்கை கண்டிக்காமல் என்னால் அதனை சமாளிக்க முடியவில்லை...! :(

Edited by nedukkalapoovan

முரளியோ,தண்டுல்கரோ கப்டன்களாக வந்திருந்தால் உந்த சாதனைகளை நடாத்தியிருக்க மாட்டார்கள் தான் என்றுதான் என் கணிப்பு.பற்ஸ்மன் என்றாலும் பரவாயில்லை ஒரு போலர் அணித்தலைவராக இருந்து கொண்டு தனக்கு எந்த நேரம் போலிங்கை எடுப்பது என்று கொஞ்சம் திண்டாட வேண்டியிருக்கும்(அனுபவம்).அதைவிட கப்டனாக இருந்து ஒரு சீரிஸ் படு தோல்வியடைந்தால் சிலவேளை அணியில் இருந்தே இல்லாமல் போகும் நிலை வரலாம்.

ஒருவர் சீ.டீ,ஆர் வானொலியில் வந்து முரளியை சிங்களவன் ஒரு போதும் பற் பண்ண முன் வரிசையில் அனுப்புவதில்லை என்று குறைப்பட்டுகொண்டார்.

சிங்களவனுக்கு முரளியில் பிடிக்காமலும் இருந்திருக்காலாம் ஆனால் அதை அவர்கள் காட்டிக் கொள்ளவில்லை என்றுதான் நினக்கின்றேன்.அதைவிட காலியில் அவருக்கு கொடுத்த கவுரம் அது இனபாகுபாட்டைத் தாண்டியிருந்தது போல்தான் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

கபில்தேவால் தலைவர் பதவியை ஏற்க முடிந்தது என்றால் ஏன் முரளியால் முடியாது? பதவி அவருக்கு கொடுக்க இலங்கை குழு விரும்பவில்லை. முரளி இல்லாமல் பல தொடர்கள் தோல்வியையே தழுவி இருந்திருக்கும். குறிப்பாக 1996 உலக கிண்ணம்.மொத்தத்தில் முரளி சிறிலங்கா குழுவால் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

வணக்கம் நுணா அண்ணை..1996 உலக்க கோப்பையில் முரளின்ட ஆதிக்கம் வலு குறைவு என்று தான் சொல்ல வேனும்..சனத் ஜயசூரியாவின் அதிரடியும் அரவிந்தடிசில்வாட நிதானம்மான ஆட்டமும் தான் 1996 உலக்க கோப்பை வெல்ல காரனம்.. 2003 உலக்க கோப்பை 2007 உலக்க கோப்பையில் முரளின்ட விளையாட்டு பாராட்டும் படியா இருந்தது..1996இல் அல்ல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.