Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா இறுதிநாள் கவனயீர்ப்பு நிகழ்வு பிற்போடப்படலாம் - 8வது நாளில் சிவந்தனின் ஐ.நா நோக்கிய மனிதநேயப் பயணம்

Featured Replies

தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு இன்று 8வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றார்.

நேற்று 12 மணித்தியாலங்கள் நடந்து 41 கிலோமீற்றர் தூரத்தை சிவந்தன் கடந்துள்ளார். கடந்த 23ஆம் திகதி லண்டனில் இருந்து மனிதநேயப் பயணத்தை ஆரம்பித்த இவர், நூற்றுக்கும் மேற்பட்ட தூரத்தை நடந்து கடந்திருந்தார்.

கடந்த திங்கட்கிழமை இரவு பிரான்சின் கடற்கரையான கலையை சென்றடைந்த பின்னர் இன்று காலை 11:00 மணிவரை காலைப் பிரதேசத்தில் இருந்து 52 மணித்தியாலங்களில் சுமார் 170 கிலோமீற்றர்கள் அவர் நடந்து கடந்துள்ளார்.

பரிஸ் நகரை அடைவதற்கு இன்னும் 126 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியிருப்பதுடன், அங்கிருந்து ஜெனீவா நோக்கி 600 கிலோமீற்றர்கள் மலைப்பாங்கான பிரதேசங்கள் ஊடாக நடந்து செல்ல வேண்டியுள்ளது.

சிவந்தன் ஒரு நாளைக்கு அண்ணளவாக 50 கிலோமீற்றர்கள் கடந்து செல்வதால், எதிர்வரும் 6ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வை பிற்போடுவது பற்றி ஐரோப்பிய அமைப்புக்கள் அனைத்தும் ஆலோசித்து வருகின்றன.

ஜெனீவா காவல்துறையினரிடம் அனுமதி பெற்ற பின்னர் இறுதிநாள் கவனயீர்ப்பு பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படும் எனவும், அனைத்து தமிழ் அமைப்புக்களும் தெரிவித்துள்ளன.

கடும் வெயில், காற்றின் மத்தியில் ஏற்றம் இறக்கமான பிரதேசங்கள் ஊடாக இன்று அவரது பயணம் நடைபெறுவதால், மிகவும் களைத்த நிலையிலேயே சிவந்தன் தனது உறுதிமிக்க மனிதநேயப் பயணத்தை தொடருகின்றார்.

சிவந்தனுக்கு துணையாக லண்டனில் இருந்து அவருடன் சென்றிருந்த இலக்கியனும் அவ்வப்பொழுது இணைந்து நடந்து செல்வதுடன், பிரான்சின் கடற்கரையான கலைசில் இருந்து பொஸ்கோ என்ற இளைஞன் தொடர்ச்சியாக சிவந்தனுடன் இணைந்து நடந்து செல்லுகின்றார்.

பிரான்ஸ் தமிழ் உறவுகள் அடிக்கடி சிவந்தனுடன் இணைந்து நடந்து தமது ஆதரவையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், கொல்லப்பட்ட அப்பாவி மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

W4J_001_20100731.jpg

W4J_002_20100731.jpg

W4J_003_20100731.jpg

W4J_004_20100731.jpg

W4J_005_20100731.jpg

W4J_006_20100731.jpg

W4J_007_20100731.jpg

முயற்சிக்கு உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாளை இவரை நான் நேரில் சந்திப்பேன் என்று நினைக்கின்றேன்

எமக்காக தன்னை வருத்தி

எம்மை அங்கீகரிக்க கோரும் இவரது பயணம் நல்லபடியாக முடியவும்

இவரது உடல் நலம்பெறவும் வேண்டுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தோழரின் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

00020116.gif

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்தின் இருப்புக்காய்

இந்த நீதியற்ற உலகிடம்

முருகாதாசரோ தன்னை

அக்கினியால் குளிப்பாட்டடி

நீதி கேட்டார்!

பரமேஸ்வரனோ பட்டினியாய்

தானிருந்து நீதி கேட்டார்!

சிவந்தனோ நடைபயணம்

ஊடாக ஐநாவிடம் நீதி கேட்டு......

நீதி ஒருநாள் வெல்லுமென்ற

நம்பிக்கைகள்

நனவாகும் காலம் வரும்...

கால இடைவெளியில்

யுகச் சாரதிகளாய்

பயணிக்கும் இளையோரே

வெற்றி பெற வாழ்த்துகிறோம்!

நடை நடையாய்

நாடற்றலையும்

ஈழத்தமிழனத்தின் இருப்புக்கு

ஓரு நடைப்பயணம் !

எமது

தேசிய விடுதலைப் பயணத்த்தில்

இதுவும் ஒரு பயணம்

நடைப்பயணம் !

மனித நேய நடைப்பயணம் !!

இது

ஓரு தனிமனிதனின்

பயணமல்ல !

ஒட்டுமொத்த தமிழினத்தின்

உணர்வுகளையும்

நெஞ்சினில் ஏந்திச் செல்லும்

பயணம் !

ஒற்றைப் பயணம் !!

இவன் கடக்கின்ற

தூரங்கள்

எமது விடுதலைப் பயணத்துக்கான

தூரத்தை குறைக்கட்டும் !

விட்டுச் செல்லும்

பாதச் சுவடுகளில்

விடுதலைப் பூ

மலரட்டும் !

அது

அய் நா சபைவரை

வாசம் வீசட்டும் !

பிரபாகரம்

உனக்கு துணைநிற்கும்

வாழ்த்துக்கள் ஐயா

சுதன்ராஜ்

மக்கள் பிரதிநிதி (நாடு கடந்த தமிழீழ அரசு )

Edited by அகரன்

  • கருத்துக்கள உறவுகள்

சிவந்தனின் உளவலிமைக்காகவும் உடல் வலிமைக்காகவும் இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.

உங்கள் நடைப்பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள் சிவந்தன்

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

சிவந்தனின் நடை பயணம் வெற்றியளிக்க வாழ்த்துகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.