Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனையும் குடும்பத்தினரையும் வெளியேற்ற ஹெலி வாங்க முயன்றேன்: குமரன் பத்மநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹெலி வாங்க கே.பி. முயற்சித்த கதையினை யாழ். கள நண்பர்கள் நையாண்டி செய்கிறீர்கள்.

ஹெலி வாங்கித்தான் காப்பாற்ற முடியும். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இவ்வளவு கப்பல்களை வாங்கிவிட்ட கே.பி.யால் ஹெலி வாங்குவது பெரிய விடயம் அல்ல.

உங்கள் வாதத்துக்கு வேண்டுமெனில் கே.பி. தனது பேட்டியில் வாடகைக்குப் பெற முயற்சித்தேன் எனக் கூறியிருந்தால் ஒருவேளை அதனை நம்பியிருப்பீர்கள். ஆனால், அதுதான் கேலிக்குரியதாகவும் நையாண்டித்தனத்துக்கும் உரியதாக இருந்திருக்கும்.

அதாவது, ஆபத்தான பகுதிகளுக்கு ஹெலியினை ஓட்டிச் செல்வதற்கு எந்தவொரு ஓட்டியும் வரமாட்டான் என்பதனை விட எந்தவொரு நிறுவனமும் ஒப்புக்கொள்ளாது என்பதனை நினைவில் வைத்திருங்கள்.

இங்கே உரையாடுபவர்களைப் பார்த்தால் கே.பி. பொய் கூறுகின்றார் என்று வாதிடுகின்றீர்கள். என்னைப் பொறுத்த வரை இங்கே எழுதுகின்றவர்களுக்கு கே.பி. கூறுகின்ற உண்மைகள் புரிகின்றதோ இல்லையோ சிந்திக்கக்கூடிய பலர் கே.பி.யின் பேட்டியில் உள்ள உண்மைத்தன்மையை ஏற்றுக்கொள்கின்றனர்.

நிற்க, இந்த இடத்தில் நாங்கள் அனைவரும் நெடியவன் குழுவுக்கு நன்றி கூறவேண்டும்.

ஏனெனில், கே.பி.யின் நடவடிக்கைக்கு நெடியவன் குழு உதவியிருந்து- விடுதலைப் புலிகளின் தலைவரோ அல்லது அவரின் வாரிசுகளில் ஒருவரோ காப்பாற்றப்பட்டிருந்தால்- மேலும் 30 வருடங்களுக்கு தமிழ் மக்கள் துன்பப்பட்டிருப்பார்கள். (இவ்வாறு நான் கூற வருவதற்கான காரணம், எல்லா படைக்கட்டுமாணத்தையும் கட்டி எழுப்பி நிர்வாகத்தையும் வளர்த்து எடுத்த விடுதலைப் புலிகளின் தலைவரால் இராஜதந்திர விடயங்களை சரியாக கையாளத் தெரியவில்லையே)

வாழ்க நெடியவன் குழு, வாழ்க அனைத்துலகத் தொடர்பகம், என்னை வசைபட முனைபவர்கள்.

மீண்டும், மீண்டும் தெளிவாக உங்களிடம் கேட்டுக்கொள்வது யாதெனில் யதார்த்தமாக சிந்திக்க முனையுங்கள்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனெனில், கே.பி.யின் நடவடிக்கைக்கு நெடியவன் குழு உதவியிருந்து- விடுதலைப் புலிகளின் தலைவரோ அல்லது அவரின் வாரிசுகளில் ஒருவரோ காப்பாற்றப்பட்டிருந்தால்- மேலும் 30 வருடங்களுக்கு தமிழ் மக்கள் துன்பப்பட்டிருப்பார்கள். (இவ்வாறு நான் கூற வருவதற்கான காரணம், எல்லா படைக்கட்டுமாணத்தையும் கட்டி எழுப்பி நிர்வாகத்தையும் வளர்த்து எடுத்த விடுதலைப் புலிகளின் தலைவரால் இராஜதந்திர விடயங்களை சரியாக கையாளத் தெரியவில்லையே)

ஆடு (தலைமை) பகை. குட்டி (கே.பி) உறவு.......... நன்றி!!!! நீங்கள் யாரால் அனுப்பப்பட்டவர் என தெளிவாக அடையாளம் காட்டியமைக்கு. :(

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

மின்னஞ்சலில் வந்த செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவ காலத்தில் தலைவர் பிரபாகரன் தனது குடும்பத்தை காப்பாற்றும் நோக்கத்துடன் மனைவி மதிவதனி, சாள்ஸ், துவாரகா ஆகிய மூவரையும் இதே கேபியின் பாதுகாப்பிலும் ஒழுங்கிலும் சுவீடனுக்கு அனுப்பியிருந்ததை இங்கு நினைவுபடுத்துகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் முதல்வன். அத்தோடு இதே காலப்பகுதியில் 2ம் தலைவராக அறியப்பட்ட மாத்தையா, பிற்பாடு இந்திய ரோவின் வலையில் விழுந்ததையும், மட்டகளப்பை நம்பி ஒப்படைக்கப்பட்ட கருணா எதிரியிம் விலை போனதையும் நினைவூட்டுங்களேன். எதையுமே கடந்த காலத்தை வைத்து எடை போடுவது சரியா?

ஒரு சிங்கள இராணுவத்னனின் பிடியில் இருக்கின்ற ஒருவரின் கருத்தினைச் சுதந்திரமான கருத்தாக நம்பி வக்களத்து வாங்குவது நன்றாகப் படவில்லை

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவ காலத்தில் தலைவர் பிரபாகரன் தனது குடும்பத்தை காப்பாற்றும் நோக்கத்துடன் மனைவி மதிவதனி, சாள்ஸ், துவாரகா ஆகிய மூவரையும் இதே கேபியின் பாதுகாப்பிலும் ஒழுங்கிலும் சுவீடனுக்கு அனுப்பியிருந்ததை இங்கு நினைவுபடுத்துகின்றோம்.

இவரின் இந்தக் கூற்று தவறு.

இந்தியப் படைகள் காலத்தில் பிரபாகரனின் பிள்ளைகளான துவாரகா.. சாள்ஸ்.. அவர்களின் அம்மம்மா அம்மப்பாவோடு.. யாழ் இந்து மகளிர் கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட காலம் இருந்தனர். கேபியும் பாதுகாப்புக் கொடுக்கல்ல. ஒருத்தரும் கொடுக்கல்ல. சனம் தான் பாதுகாத்தது..! பின்னர் இயக்கம் அவர்களைப் பொறுப்பில் எடுத்தது..! :lol::(

தன்னைத் தானே அழித்துக் கொள்ளக் கூடிய ஒரு பிற்போக்கான இனம் என்றால் அது நாங்கள் தான்.

ஒருவேளை சிங்களவர் உண்மையாகவே மோடராக இருந்து தமிழீழ் என்று ஒன்று கிடைத்திருந்தால் தலைவர் பிரபாகரனிற்கு பிறகு குடும்ப அரசியலும் குடுமிச்சண்டையும் செய்து அழிந்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

காட்டாறு, ஒருவன் ஒரு கருத்தினை எழுதினால் அவனுடைய கருத்துடன் மோதுவதுதான் அழகு.

இயலாத்தன்மையால்தான் அவனை கள்ளன் என்றும் இவன் அவரின் ஆளோ என்றும் இவன் அவனின் ஆளோ என்றும் சந்தேகப்படுவது எம்மவர்களின் பழக்கம்.

மீண்டும் அடித்துக் கூறுகின்றேன். இராஜதந்திரம் என்பது எமது விடுதலைப் போராட்டத்தில் சிறு துளியும் இருந்தது இல்லை. (அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் காலத்தில் இராஜதந்திர அணுகுமுறை இருந்தது) நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் கூறிவிட்டுப் போங்கள் எனக்கு அது தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

அன்டன் பாலசிங்கம் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் விடுதலைப் புலிகளின் தலைவர் முள்ளிவாய்க்காலுக்குள் வந்து வீரச்சாவடைந்திருக்க மாட்டார். இந்த விடயம் உங்களுக்குப் புரிகின்றதோ இல்லையோ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த உயர்மட்டத் தலைவர்களில் இருந்து இடைநிலைத் தளபதிகள் வரை நன்கு தெரியும்.

காட்டாறு, நீங்கள் எழுதிய கருத்துக்களுக்கும் முன்னர் பலர் எழுதிய கருத்துக்களுக்கும் என்னால் எதிர்நிலை வாதங்கள் புரியமுடியும். ஆனால் எதனை எழுதினாலும் எமது சமூகம் உள்வாங்கிக் கொள்ளப் போவதில்லை.

ஏனெனில், தனிமனித வழிபாட்டு முறையிலும் அந்தத் தனிமனிதனின் கூற்றினையும் அவர்சார்ந்த அமைப்பினையும் நம்பிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் எதனைக் கூறினாலும் எடுபடப் போவதில்லை. இதனை நான் காலாகாலமாக கண்டு வந்திருக்கின்றேன்.

சுருக்கமாகச் சொல்வதனால், யாவும் விழலுக்கு இறைத்த நீராகவே போகும்.

கே.பி. துரோகியாகவே இருந்துவிட்டு போகட்டும். (உங்களுடன் சேர்ந்து நானும் கே.பி. துரோகிதான் என்று கூறிவிடுகின்றேன்) நெடியவன் குழுவும் அனைத்துலகத் தொடர்பகத்தினரும்தான் வீரர்கள், தேசியவாதிகள்.

சரி, இப்போதுள்ள கேள்வி யாதெனில், தடுப்பு முகாம்களில் உள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகளினதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களினதும் விடுதலைக்கு நெடியவன் குழுவும் அனைத்துலகத் தொடர்பகமும் என்ன செய்து கொண்டிருக்கின்றது அல்லது செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதனை அறியத்தாருங்கள் அல்லது அறிந்தவர்கள் இதில் எழுதுங்கள்.

விடுதலைப் புலிகளின் தலைமையை நம்பி போராட வந்த போராளிகளும் அவர்களுக்கு முண்டுகொடுத்த மக்களும்தானே தடுப்பு முகாம்களில் உள்ளனர். வேறு எவரும் இல்லையே.

Edited by nirmalan

இந்திய இராணுவ காலத்தில் தலைவர் பிரபாகரன் தனது குடும்பத்தை காப்பாற்றும் நோக்கத்துடன் மனைவி மதிவதனி, சாள்ஸ், துவாரகா ஆகிய மூவரையும் இதே கேபியின் பாதுகாப்பிலும் ஒழுங்கிலும் சுவீடனுக்கு அனுப்பியிருந்ததை இங்கு நினைவுபடுத்துகின்றோம்.

1987 காலப்பகுதியில் கேபி மீது தலைவர் வைத்திருந்த நம்பிக்கைக்கும். புலத்தில் கிட்டு அண்ணையின், வீர மரணம், நாதனின் படுகொலை, அதனைத்தொடர்ந்து, திலகர் தாயகம் சென்றமை., கேபி புலத்துக் கட்டமைப்புகளைக் கொம்பனியாக்கியமை, கொம்பனியில் பணிக்கு அமர்த்திக் கொண்ட நிர்வாக இயக்குணர்கள் , இக்காலப்பகுதியில் கேபிக்கு கிடைத்த அன்னியசக்திகளின் தொடர்புகளின் அடிப்படையில் , 2009 இல் தலைவர் கேபி மீ து நம்பிக்கை வைத்திருப்பாரா?

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குள் ஒருகேள்வி

நமது போராட்டம் எதற்கானது..?

அது முடிவடைந்து விட்டதா?

புலிகள் இல்லை என்றே வைத்துக்கொள்ளுவோம்

ஏன் தலைவர் இல்லையென்றும் எடுத்துக்கொள்ளுவோம்

நமது போராட்டம் முற்றுப்பெற்றுவிட்டதா?

எமது கனவை நாம் அடைந்துவிட்டோமோ?

எமது மக்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா..?

ஆம் என்றால்

நாம் எமக்குள் புடுங்குபடுவோம்

இல்லையென்றால் இலட்சியத்தில் உறுதியாக இருந்தால்

எமக்குள் இருக்கும்வேற்றுமையை

இலட்சியத்துக்காக மறந்து அடுத்த கட்த்தை மட்டும் சிந்தித்து

அதற்கான வழிகளை ஆராய்வோம்

அதுவும் இல்லை இப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கப்போகின்றோம் என்றால்...........

இதிலிருந்து விலகி வெளியில் நிற்பவர்கள் எம்மைவிட மேல் என்பது தான் எனது கருத்து

ஒரு போராட்டத்தை போராட்டமாகவும் அதை உரிமை மீட்ப்பாகவும் பார்க்காமல் அதில் பங்கு பற்றியவர்களை பார்க்கும் மனோப்பாவம் கொண்டவராக உங்களை போண்ற பல பேர் இருந்து இருக்கிறீர்கள்... இப்படியான காழ்ப்புணர்ச்சிதான்... இவன் எனக்கு தலைவனோ எனக்கு மேலான ஆளோ எனும் மனோபாவத்துக்கை உங்களை எல்லாம் கொண்டு போய் இருந்து இருக்கிறது...

அப்படியான மனோபாவம் கொண்ட நீங்கள் தமிழர்களின் மீட்ச்சிக்கு போனவர்களை சிங்களத்தோடை நிண்டு எதிர்த்தார்கள் காட்டிக்கொடுத்தார்கள் இதுதான் வரலாறு...!

நீங்களோ உங்களை அடையாளப்படுத்தியமைக்கு நண்றி...

இது தான் தமிழன் தனது இனம் அழிந்தாலும் பரவாயில்லை ஆனால் தனது எதிரி அழிய வேண்டும், சரி பிரபாகரன் ஒரு கொடுமைக்காரன், சர்வாதிகாரி, காட்டுமிராண்டி என்றே வைத்துக்கொள்வோம், அப்படியானால் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும், முதலில் தமிழ் ஈழம் அடைவோம், எமது சுதந்திரத்தை மீட்போம் அதன் பின்னர் பிரபாகரனுக்கு பாடம் புகட்டுவோம் என்ற அடிப்படையில் செயற்பட்டிருக்க வேண்டும், அப்படி அவர்கள் நடந்தால் அவர்களது நியாயங்களை நாம் அலசி ஆராயலாம், ஆனால் பிர்பாகரனை அழிக்க, தமிழ் இனத்தின் நியாய்மான உரிமையான தமிழ் ஈழத்தை அழிக்க எமது எதிரியுடன் கூட்டு சேர்ந்தார்களே அது தான் கொடுமை, ஏன் யூதர்கள் மத்தியிலும் ஒற்றுமை இல்லை ஆனால், அவர்கள் தமது தனிப்பட்ட கோபதாபங்களுக்காக ஒரு நாளும் பலஸ்த்தீன்காரனுடன் கூட்டுச் சேர மாட்டார்கள். முள்ளிவாய்க்கால் அவலம் நடந்த பின்னர் பிரபாகரனும் புலியும் அழிந்தது என துள்ளிக்குதித்தவர்கள் எத்தனை பேர், ஆனால் இவர்கள் ஒன்றை மட்டும் மறந்து விட்டார்கள் அழிந்தது புலி மட்டும் அல்ல உன்னுடைய சொந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் 50000 பேரும் சேர்ந்து தான் என்பது. :(:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனையும், குடும்பத்தையும் காக்க கடுமையாக முயற்சித்தோம்-கேபி

திங்கள்கிழமை, ஆகஸ்ட் 16, 2010, 17:22[iST]

கொழும்பு: விடுதலைப் புலிகள் [^] [^] இயக்கத் தலைவர் பிரபாகரனையும், அவரது குடும்பத்தினரையும் காக்க கடுமையாக முயற்சித்தும் அது பலன் தரவில்லை என்று கேபி கூறியுள்ளார்.

கேபி கொடுத்த பேட்டி என்று கூறி படிப்படியாக வெளியாகி வருகின்றன இலங்கை இதழ்களில். அந்த வகையில், டெய்லி மிரர் இதழுக்கு கேபி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

போர் பகுதியிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற எடுக்கப்பட்ட முடிவுகளை பிரபாகரன் [^] ஏற்கவில்லை. அவ்வாறு செய்தால் புலிகள் எளிதில் தோற்கடிக்கப்படுவார்கள் என்பதால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனிடையே, பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி என்னுடன் தொடர்பில் இருந்தார்.

மார்ச் 2009ல், போர்நிறுத்தம் ஏற்பட முயற்சிகளை மேற்கொண்டேன். புலிகள் வசமிருந்த பொன்னேரின், பரந்தன், யானைஇறவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளை இழந்ததும் பிரபாகரன் போர்நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டார். ஆனால், இது காலம் கடந்த முடிவாக இருந்தது.

பிரபாகரனை ஒரு கப்பலில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் யோசனையும் முன்வைக்கப்பட்டது. ஆனால், இதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அவரது இந்த முடிவுக்கு காரணம் நார்வேயில் செயல்படும் புலிகளின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான நெடியவன் தான்.

இந்நிலையில், பிரபாகரன் மற்றும் குடும்பத்தினரை பாதுகாப்பாக வேறொரு பகுதிக்கு அழைத்துச் செல்லுமாறு அவரது மகன் சார்லஸ் ஆண்டனி கேட்டுக்கொண்டார். தான் போர்க்களத்தில் இருந்து தொடர்ந்து போரிடப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால், இந்த முடிவையும் பிரபாகரன் ஏற்கவில்லை. போர்க்களத்தில் அவரும் தொடர்ந்து இருந்து போரிட விரும்பினார்.

கடைசி முயற்சியாக பிரபாகரனை ஹெலிகாப்டர் மூலம் வன்னி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்லவும், அவரது குடும்பத்தினரை சர்வதேச கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு அழைத்துச் செல்லவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், இந்த திட்டமும் தோல்வியடைந்தது என்று கூறியுள்ளார் கேபி.

தற்ஸ்தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

"83 கலவரத்தில் உலகம் பார்க்க தமிழர் அடித்து கொல்லப்படார்கள் உலகம் பார்த்துக் கொண்டிருந்தது ஒன்றும் செய்யவில்லை"

உலகம் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒன்றும் செய்யாது.அவரர் பூகோள அமைப்பின் அடிப்படையில் அந்த பிராந்திய வல்லருசுக்கூடாகவே உலகம் எதையும் செய்யும்.அதை தமிழனுக்கு உலகம் தாரளமாக செய்தது.எமது பிரச்சனை 83 இலேயே சர்வதேசமயப் படுத்தப்பட்டுவிட்டது.இயக்கங்கள் விடுதலை போராளிகள் என்ற அந்தஸ்து கொடுக்கப் பட்டு இந்தியாவில் பப்பிளிக்காக அலுவலகம் நடாத்த அனுமதியும் கொடுத்து 84 திம்புவிற்கு ஒரு அரசியல் அந்தஸ்துடன் இலங்கை அரசுக்கு சமமாக மேசையில் இருக்க இடமும் கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் ஊடகங்களும் குறிப்பாக தமிழ் நாட்டு மக்கள் எமக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் தந்தனர்.இயக்கங்களும் ஓரளவு ஒற்றுமையாகி புளொட்டைதவிர மற்றவர்கள் ஓரணியில் வந்தனர்.

இங்குதான் வெளிவருகின்றது தமிழனின் கொலைமுகம். ரோவின் பின்ணணி கொஞ்சம் இருந்தாலும் எங்கே போனது எமது தலைவர்களின் மதி.குறிப்பாக உமா,பிரபா,சிறீ. தமது தகுதிக்கு மேல் தங்களை மாபெரும் தலைவர்களாக உருவகப் படுத்தி துதி பாடுவனுக்கு முன்னுரிமை கொடுத்து உண்மையை சொன்னவனையெல்லாம் ஓரம் கட்டி கொலை வேறு செய்து , இயக்கங்களுக்குள் கொலை மலிவுப் பொருளாகிவிட்டது.அதைவிட நாட்டில் இவர்கள் வைத்ததுதான் சட்டம்.சிங்கள அரசிடம் விடுதலை கேட்டவன் இவர்களிடம் இருந்து விடுதலை பெற உலகெங்கும் ஓடினான்.இவர்கள் நடாத்திய போராட்டம் சரியென்றால் .இவ்வளவு தமிழர்களும் புலம் பெயர்ந்திருக்க மாட்டார்கள்.தங்களுக்குள் ஆடிய கொலை வெறி முடித்து பின்னர் மற்றவர்களில் கை வைக்கின்றார்கள்.சுளிபுரம் 6 பேரின் கொலை இதற்கு அச்சவாரம் போடுகின்றது.

2009 மே வரை கொலை அரசியலே நாம் செய்தோம்.

அன்றுநடந்தது மாபெரும் மானிட அழிவு அதை கூட நாம் விரும்பியிருந்தால் தடுத்திருக்கலாம்.அந்த அழிவால் எமக்கு சிலவேளை விடுதலை கிடைக்கும் என்று ஒரு கணக்கு போட்டு அவர்களையும் கொலை செய்தது நாங்களே அன்றி உலகமல்ல.

கொலை அரசியலை வெறுப்போம். மானுடத்தை மதிப்போம் .உலகம் எங்கள் பின்னால் வரும்.

அதென்ன திம்பு இடையிலேயே நிற்குது.............. பின்பு 1986ற்கு உடனேயே பல்ற்றி அடித்து கொலை கொள்ளை என்று தொடருது?

தின்றவைகளில் எல்லாத்தையும் கலந்து எடுப்பதுதான் வாந்தி என்பது எமக்கு தெரியும்....... அதற்காக இப்படியா?

திம்புவில் கடைசிநாள் எல்லோரும் ஒரு முடிவைதான் வைத்தார்கள். ஆனால் கூட்டிசென்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதை...

பார்த்தசாரதி தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் வேண்டி படிக்கலாம். ஆனால் வாந்தி தொழிலால் வாழ்வை நடத்துபவர்களுக்கு அது வில்லங்கமான விடயம் வாசிக்க வேண்டாம்.

நீங்கள் என்ன ஆப்பிரிக்கா காரனுக்கோ எழுதிகொண்டிருக்கின்றீர்கள். உங்களோடு கூடிதிரிய கூடியவர்களாக இருப்பவர்களுக்கு எம்மட்டு அறிவிருக்கும் என்பது ஒரு எண்விகிசாதாரபடி எம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆக அவர்களுக்கு அவிப்பவைகளை இங்கும் வேகும் என்று எதிர்பார்பது என்பது........... கரண்கம்பியில் மண்ணெண்ணை எடுப்பது போன்றது.

குடிகாரனுக்கு வெறி என்றால் இப்படித்தான் இருக்கும் என்று புத்தகத்தில படித்தனான் என்பதுபோலூள்ளது அண்ணையின் கருத்து.போராட்டதை பற்றி எதுவித அனுபவமுமில்லை நாலு புத்தகத்தை தான் வாசித்தனான் என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி.

திம்பு பேச்சுவார்த்தையின் போது அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை பத்திரிககைளுக்கு கொடுத்துக் கொண்டிருந்ததே நான் தான்.தினமும் பேச்சுவார்த்தை முடிய என்ன நடைபெற்றததென பேச்சுவார்த்தையில் பங்கு பற்றிய ஒரு அங்கத்தவர் எனக்கு போன் பண்ணுவார்.சிலவற்றை பத்திரிகைகளுக்கு சொல்ல வேண்டாமெனவும் கேட்டுக் கொள்வார்.பீ.ரீ.ஜ இல் இருந்த சந்திரசேகரனுக்கு மட்டும் செய்திகளி கொடுத்துக்கொண்டிருந்தேன்.ரைம்ஸ் ஒf இந்தியாவில் மட்டுமே திம்புவில் என்ன நடக்கின்றது என ஓரளவிற்கு செய்திகள் வந்துகொண்டிருந்தன.திம்புவில் இருந்து நேரடி போன் தொடர்பு சென்னைக்கு இல்லை என்று ரோ சந்திரன் லண்டன் போய் கொட் லைன் சென்னைக்கு கொடுத்தார்.அங்கு தான் இயக்க தலைவர்களுடன் திம்புவிற்கு போனவர்கள் தொடர்பில் இருந்தார்கள்.

இந்தியா ஓரளவிற்கு இரகசியமாகவே பேச்சுவார்த்தையை நடாத்த தீர்மானித்திருந்தது.அனறாடம் நடப்பவை பத்திகையில் வெளிவர பாவம் அமிர்தலிங்கம் மீது தான் அந்த பழியும் விழுந்தது.

இங்கு பலர் அந்தப் புத்தகத்தில் வாசித்தனான்,இந்த புத்தகத்தில் வாசித்தனான் என மேளம் அடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.இந்தியாக்காரர்கள் பலர் எமது போராட்டைதை பற்றி எழுதி பணம் பண்ணிக் கொண்டிருகின்றார்கள்.அவற்றை வாசித்துவிட்டு எமது போராட்ட வரலாற்றையே மாத்திவிடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

குடிகாரனுக்கு வெறி என்றால் இப்படித்தான் இருக்கும் என்று புத்தகத்தில படித்தனான் என்பதுபோலூள்ளது அண்ணையின் கருத்து.போராட்டதை பற்றி எதுவித அனுபவமுமில்லை நாலு புத்தகத்தை தான் வாசித்தனான் என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி.

திம்பு பேச்சுவார்த்தையின் போது அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை பத்திரிககைளுக்கு கொடுத்துக் கொண்டிருந்ததே நான் தான்.தினமும் பேச்சுவார்த்தை முடிய என்ன நடைபெற்றததென பேச்சுவார்த்தையில் பங்கு பற்றிய ஒரு அங்கத்தவர் எனக்கு போன் பண்ணுவார்.சிலவற்றை பத்திரிகைகளுக்கு சொல்ல வேண்டாமெனவும் கேட்டுக் கொள்வார்.பீ.ரீ.ஜ இல் இருந்த சந்திரசேகரனுக்கு மட்டும் செய்திகளி கொடுத்துக்கொண்டிருந்தேன்.ரைம்ஸ் ஒf இந்தியாவில் மட்டுமே திம்புவில் என்ன நடக்கின்றது என ஓரளவிற்கு செய்திகள் வந்துகொண்டிருந்தன.திம்புவில் இருந்து நேரடி போன் தொடர்பு சென்னைக்கு இல்லை என்று ரோ சந்திரன் லண்டன் போய் கொட் லைன் சென்னைக்கு கொடுத்தார்.அங்கு தான் இயக்க தலைவர்களுடன் திம்புவிற்கு போனவர்கள் தொடர்பில் இருந்தார்கள்.

இந்தியா ஓரளவிற்கு இரகசியமாகவே பேச்சுவார்த்தையை நடாத்த தீர்மானித்திருந்தது.அனறாடம் நடப்பவை பத்திகையில் வெளிவர பாவம் அமிர்தலிங்கம் மீது தான் அந்த பழியும் விழுந்தது.

இங்கு பலர் அந்தப் புத்தகத்தில் வாசித்தனான்,இந்த புத்தகத்தில் வாசித்தனான் என மேளம் அடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.இந்தியாக்காரர்கள் பலர் எமது போராட்டைதை பற்றி எழுதி பணம் பண்ணிக் கொண்டிருகின்றார்கள்.அவற்றை வாசித்துவிட்டு எமது போராட்ட வரலாற்றையே மாத்திவிடாதீர்கள்.

திம்புவில் இருந்து உங்களுக்கு செய்திகளை தந்துகொண்டிருந்த எனக்கே............. அவிக்கிறீங்கள்?

நான் போனில் உங்களுக்கு சொல்லாத பல விடயங்கள் இருக்கின்றன. அதைதான் பார்த்தசாரதி பின்னாளில் புத்தகமாக எழுதியுள்ளார்.

ஈழதமிழர்கள் இலகுவாக சமாதனபடுவதை எந்தளவில் இந்தியா(குறிப்பிட்ட சில அதிகாரிகள்) குழிபறித்தது என்பதை விரிவாக எழுதியுள்ளார்.

என்ன அண்ணே நாங்கள் எல்லாம் ஆப்ரிக்கா நாட்டுகரார்களாக இருந்து யாழழகளத்திலே தமிழ்படித்து உங்கள் கருத்துகளை வாசித்துகொண்டிருக்கிறோம் என்றா நினைக்கிறீர்கள்?

எல்லாம் முடிஞ்சுபோச்சு இனி மேடையிலே ஏறி தலைவருக்கு தாக்குதல் திட்டங்கள் வகுத்ததே நான்தான் என்றொரு வேசம் போடலாம் என்று................... உங்களின் அறிவை வைத்து நீங்கள் நினைப்பது தவறில்லை,

  • கருத்துக்கள உறவுகள்

தன்னைத் தானே அழித்துக் கொள்ளக் கூடிய ஒரு பிற்போக்கான இனம் என்றால் அது நாங்கள் தான்.

ஒருவேளை சிங்களவர் உண்மையாகவே மோடராக இருந்து தமிழீழ் என்று ஒன்று கிடைத்திருந்தால் தலைவர் பிரபாகரனிற்கு பிறகு குடும்ப அரசியலும் குடுமிச்சண்டையும் செய்து அழிந்திருப்போம்.

நூறு வீதமம் உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.