Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருத்துக்களம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களம் என்றால் என்ன...எமக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்வதற்கும் எமக்கு தெரியாதவற்றை அறிந்து கொள்ளவும் பயன்படும் ஒர் ஊடகம் தானே...கருத்துகளை கருத்தால் வெல்வது தானே பண்பு...ஆனால் இங்கே பலர் தமக்கு ஆதரவாக கருத்துகளை எழுதா விட்டால் துரோகி என்பதும்,திட்டுவதும் இது ஆரோக்கியமானாதா?...ஒருவரது கருத்துகளை நம்மால் கருத்துக்களால் வெல்ல முடியா விட்டால் பிழை நம்மிடம் தானே இருக்கிறது என்பதை ஏன் யோசிக்க மாட்டேன் என்கிறார்கள்...ஒரு விடயத்தில் எல்லோரும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள் அல்லவா உதாரணத்திற்கு வீட்டில் கூட நீங்கள் ஏதாவது சொன்னால் அதற்கு எதிராக ஒருவராவது கருத்து சொல்வார்கள் தானே...ஏன் உங்கள் ஜந்து விரல்களும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது!...இது பற்றிய உங்கள் பயனுள்ள கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...நன்றி.

ரதி, ... இது 30 வருடங்களுக்கு மேலாக நாம் வளர்த்து விட்டதன் விளைவு! ... சரி/பிழை சொன்னவன் எல்லாம் துரோகி என்றோம் ... நாங்களும்!!! கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை தொலைத்து பல வருடங்கள்! ... இது எம்மினத்தின் இன்றைய சாபத்துக்கும் ஒரு காரணமாகிவிட்டது! ... இதை மாற்றவும் முடியாது!! ... என்னவானாலும் ... இதனுடனேயே ... பயணங்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களம் என்றால் என்ன...எமக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்வதற்கும் எமக்கு தெரியாதவற்றை அறிந்து கொள்ளவும் பயன்படும் ஒர் ஊடகம் தானே...கருத்துகளை கருத்தால் வெல்வது தானே பண்பு...ஆனால் இங்கே பலர் தமக்கு ஆதரவாக கருத்துகளை எழுதா விட்டால் துரோகி என்பதும்,திட்டுவதும் இது ஆரோக்கியமானாதா?...ஒருவரது கருத்துகளை நம்மால் கருத்துக்களால் வெல்ல முடியா விட்டால் பிழை நம்மிடம் தானே இருக்கிறது என்பதை ஏன் யோசிக்க மாட்டேன் என்கிறார்கள்...ஒரு விடயத்தில் எல்லோரும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள் அல்லவா உதாரணத்திற்கு வீட்டில் கூட நீங்கள் ஏதாவது சொன்னால் அதற்கு எதிராக ஒருவராவது கருத்து சொல்வார்கள் தானே...ஏன் உங்கள் ஜந்து விரல்களும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது!...இது பற்றிய உங்கள் பயனுள்ள கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...நன்றி.

கருத்துக்களம் என்பது ஒரு விடையத்தைப் பற்றி ஒருவருக்கொருவர் தங்களுக்கிடையில் கருத்துக்களைப் பகிர்ந்தது கொள்ளுவது. ஒருவர் கூறிய கருத்துப் பிழையாக மற்றவருக்குத் தெரிந்ததால் அதைப் பண்பான முறையில் சுட்டிக்காட்டுவது. இங்கு வெற்றிக்காக யாரும் கருத்துக்களை எழுதுவதில்லை. மற்றவரின் கருத்தை வெல்ல வேண்டும் என்று கருத்து எழுதுபவர்களுக்குக் கருத்துக்களம் உகந்த இடம் இல்லை. பண்பான முறையில் சரியான கருத்துக்களை எழுதும் போது வாசிப்பவர்களுக்கு எழுதுபவருடைய கருத்தின் மீது ஒரு நம்பிக்கை ஏற்படும்.

ஒருவரின் கருத்திற்கு பிழையான கருத்துக்களை எழுதுபர்கள் எல்லோரும் பிழையானவர்களும் அல்ல.

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை முன்வைக்க அனைவருக்கும் சுதந்திரம் இருக்கிறது ஆனால் அவை நாகரிகமான முறையில் மற்றவர் மனதை புண்படாதவாறு அமைந்திருந்தால் அதுவே சிறப்பு.. கருத்துக்களத்துக்கும் அதுவே அழகு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்களம் தானே எதையும் எழுதலாம்,எழுதும் சுதந்திரம் இருக்கு என்பதற்காக மற்றவரை துன்புறுத்தும்,தொந்தரவு பண்ணும் கருத்துக்களை தவிர்த்தலே நன்று.

கருத்துக்கள் எழுதும் போது உனக்கு நீயே நீதிபதி என்பது போல பிரயோசனமில்லாத கருத்துக்களை கருத்துக்களத்திலும் வாசகர்களிடையேயும் குழப்பத்தை ஏற்படுத்தாவண்ணம் பார்த்தலே முக்கியம். சூழ்நிலைக்கு தக்கவாறு கருத்துக்கள் அமைந்தாலே சிறப்பு.

எங்களுக்கும் எல்லாம் தெரியும் என்ற அதிமேதாவித்தனத்தை காட்டாமல் விட்டால் போதும் :huh:

  • கருத்துக்கள உறவுகள்

நாகரீகமான் வார்த்தை பிரயோகங்கள் விரும்பத்தக்கது .தனது கருத்தை மற்றவர்களுக்கு திணிப்பது போன்றவை ஏற்றுக்கொள்ள் கூடியது அல்ல .

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை வாசித்து அதற்குப் பதில் எழுதுவதற்குப் பொறுமை இல்லை. பந்திகள் நிறைய இருந்தால் வாசிக்கவே முடியாது. ஆனால் எழுதும் நபர்களைப் பற்றி ஒரு பிம்பம் ஒன்றை மனத்தில் ஏற்றிவிட்டு எழுதுபவர்களை மனதில் வைத்துத்தான் பதில்கள் வரும். ஆரோக்கியமான கருத்துக்கள் இடையிடையே வரும்..

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிழுகிழூப்பான உதாரனம்.ரவிவர்மன் எழுதாத சிலையோ என்று ஒரு வைரமுத்துவின் பாடல் வரிகள்.அதில் சரனத்தில் ஒரு வரி--புதுச்சேலை கசங்காமல் உன்னை அனைப்பேன் என்று.ஒரு வாசகன் கேள்வி பதில் ஒன்றில் கேட்டிருந்தான் சேலை கசங்காமல் அணைப்பது எல்லாம் ஒரு அணைப்பா என்று.அதுக்கு வைரமுத்துவின் பதில்--சேலை இல்லாமல் அணைத்தால் சேலை கசாங்து தானே என்று.ஆனால் அவரே சொன்ன விளக்கம் தான் எப்படி தப்பித்தேன் என்று.அதாவது நினைத்து எழுதியது ஒன்று. ரசிகனுக்கு சொன்ன பதில் வேறு.அப்படி உங்கள் கருத்துக்கு நிஞாயம் கற்ப்பிக்க வேன்டும்.அல்லது மன்னிப்பு கோர வேண்டும்.இதுதான் நாகரீகமான கருத்துக்களமாக இருக்கும். :huh: இது எல்லாருக்கும் பொருந்தும்.எனக்கும்தான் :huh:

  • கருத்துக்கள உறவுகள்

ஜந்து விரல்களும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது!...

ஒவ்வொருவரும் விதம் விதமான அனுபவங்களை பெற்றிருப்பார்கள்.வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்து இருப்பார்கள்.அவர்கள் தம் உணர்வுகளை கூட வித்தியாசமாக தான் வெளிப்படுத்துவார்கள்.யாழ் களம் மட்டும் விதிவிலக்கா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களம் என்றால்.. கருத்தை கண்ணியம் உள்ள கருத்தால் வெல்லுதல் என்பது தான் சிலரின் எதிர்பார்ப்பு. அது சரிப்பட்டு வராத போது இப்படியான தலைப்புக்கள் முளைப்பது யாழிற்கு ஒன்றும் புதிதல்ல.

கருத்துக்களம் என்பது ஒருவர் தனது எண்ணத்தில் உதிப்பதை அல்லது அறிவதை அல்லது சமூகத்தில் காண்பதை மற்றவர்களும் அறிய முன் வைத்து கருத்துக் கேட்பதும் கருத்துப் பரிமாறிக் கொள்வதும் என்று கொள்வதே சிறந்தது. வைக்கப்படும் கருத்துக்களின் தன்மையை கள விதி நிர்ணயம் செய்யும். கருத்துக்களில் அவை பரிமாறப்படும் வகைகளில் ஒரு நாகரிகத்தன்மை பேணப்படுவது சதாரணமாக இருக்க வேண்டிய ஒரு விடயம். கண்ணியம் காத்தல் என்பது கருத்துக்களுக்குள் அவசியமான ஒன்றாக தெரியவில்லை.

வைக்கப்படும் கருத்துத்தான் கருத்துக்களத்தில் முக்கியம் பெற வேண்டுமே தவிர.. வைப்பவர் அல்ல. கண்ணியம் காத்து கருத்தை கருத்தால் வெல்லுதல் என்பது கருத்துக் களத்தின் தொனிப் பொருள் அல்ல.

கருத்துக்களம் என்பது கருத்துப் பகரப்படும் களம்... கருத்துக்கான போட்டிக்களம் அல்ல. இங்கு வெல்லுதல் என்ற பதத்தை பாவிப்பது.. போட்டி மனப்பான்மையை.. வெற்றி தோல்வியை நோக்கி கருத்துப் பகிரப்பட வழி செய்யுமே தவிர கருத்து கருத்தாளனின் நியாயபூர்வ சிந்தனைகளை ஆதாரங்களை எடுத்து வராது.

பலர் கண்ணியம் என்ற போர்வையில் பக்கச்சார்பு நிலை எடுத்துக் கருத்துச் சொல்லுதல்.. யாழிலும் இடம்பெற்று வருகிறது. கண்ணியம் பார்த்தால் கருத்தில் நியாயத்தை காண முடியாது.. கண்ணியத்தை தான் பேண முடியும்..! அது கருத்துக்களம்.. துதிபாடு களமாக மாறவே வழி செய்யும்.

கருத்துக்களில் அமையும் உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் துரோகிகள் தேசத்துரோகிகள் இனங்காட்டப்படுவது ஒன்றும் தவறான அம்சம் அல்ல. அவ்வாறு அழைப்பதை தவறென்று நிரூபிக்க வேண்டிய ஆதாரங்களை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொண்டு வர வேண்டுமே தவிர.. துரோகி.. என்று சொல்லவே கூடாது என்பது நியாயமான ஒரு நிலைப்பாடு அல்ல. துரோகிகள் இருக்கிறார்கள்.. அவர்கள் சரிவர ஆதாரங்களோடு இனங்காட்டப்படும் போது அதை கருத்துக்களத்தில் விவாதிப்பது அல்லது அது தொடர்பில் கருத்துப் பரிமாறுவது தெளிவை தருமே தவிர.. அதை மறைப்பது துரோகிகளுக்கே உதவி நிற்கும்..!

மாற்றுக்கருத்து என்பதன் பெயரால்.. புலி எதிர்ப்பைக் காட்டுவது என்பது ஜனநாயகம் கிடையாது. அல்லது கருத்துச் சுதந்திரம் கிடையாது. மாற்றுக் கருத்து என்றால் ஒரு கொள்கையை எதிர்ப்பதற்கான காரணம்.. அதற்கு பிரதியீடான கொள்கை என்ன.. அதனைக் கொண்டு இலக்குகளை எவ்வாறு அடைய முடியும் என்று இனங்காட்டுதலாக இருக்க வேண்டும். அதைவிடுத்து.. புலியை ஆதரிப்பதை எதிர்ப்பது என்பதெல்லாம் மாற்றுக் கருத்துக் கிடையாது. அது காழ்ப்புணர்ச்சியை கொட்டுதலாகும். அதற்கு கருத்துக்களத்தில் இடமளிக்கக் கூடாது. ஆனால் யாழ் மாற்றுக் கருத்தை அனுமதிப்பதாக புலிக் காழ்ப்புணர்ச்சியைக் கொட்ட அனுமதிப்பது அதன் கருத்துக்கள தார்மீகத்துக்கு சரியானதா என்பது கேள்விக்குரியது.

கருத்துக்களை பகராமல் விடயங்களை தவிர்ப்பது என்பது கருத்துக்களத்துக்கு உகந்ததல்ல. பெண்கள் தொடர்பான பல கருத்துக்களை பலர் வேண்டும் என்றே பரிமாற தயங்குகின்றனர். காரணம்.. தம்மை பெண்களுக்கு எதிரானவர்கள் என்று இனங்கண்டு விடுவரோ என்ற பயத்தில்..! இவ்வாறான பயத்தோடு வருபவை கருத்துக்களும் அல்ல.. அவற்றில் இருந்து உருப்படியான தீர்மானங்களை நீதியை நியாயத்தை பிரித்தறியவும் முடியாது..!

Edited by nedukkalapoovan

உதாரணமாக தலைவர், தமிழ்த்தேசியம், த.வி.பு பற்றிய விடயங்களை கூறலாம்? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணமாக தலைவர், தமிழ்த்தேசியம், த.வி.பு பற்றிய விடயங்களை கூறலாம்? :rolleyes:

அவை மட்டுமல்ல.. மாற்றுக்கருத்து என்ற போர்வையில்.. புலிப்பாசிசம்.. பிரபாகர துவேசம்.. புலி எதிர்ப்பு காட்டுதலும் அடங்கும். எந்த ஒரு ஆதார அடிப்படையும் இன்றி.. சொந்த காழ்ப்புணர்ச்சிகளின் வெளிப்பாடாக அல்லது சொந்தப் பாதிப்புக்களின் வெளிப்பாடாக அல்லது தனிநபர் விசுவாசத்தின் வெளிப்பாடாக இவற்றை செய்வதையே எமது சமூகத்தில் காண்கிறோம்.

இவை அல்ல மாற்றுக் கருத்து.. ஜனநாயகம் என்பது.

கிளிங்டன் பதவியில் இருந்து போனதும்.. புஷ் அவரைப் பற்றி விமர்சிப்பது கிடையாது. அவருடைய பிற சமூகப் பணிகளுக்கு தடைபோடுவது கிடையாது. தேசிய தலைவர் இறந்ததாக சொல்லப்பட்ட பின்னும் அவரை வைச்சு.. புலிப்பாசிசம் பேசிக் கொண்டு திரியும் ஜென்மங்களை.. பிரதேசவாதம் பேசித் திரியும் ஜென்மங்களை எல்லாம் கருத்தாளர்கள்.. அல்லது அவர்களின் கருத்துக்கள் மாற்றுக்கருத்துக்கள் என்று கொள்ள முடியாதவையே..! அங்கு ஒரு ஜனநாயகத் தன்மை இல்லை.

ஜனநாயகத்தன்மை என்பது முன்வைக்கப்படும் கருத்துக்கு பதில் சொல்ல அனுமதிக்கப்பட வேண்டும். புலிகளோ பிரபாகரனோ இல்லை என்ற தருணங்களில் இவ்வாறான விசமத்தனமான மாற்றுக்கருத்துக்கள் என்ற போர்வையிலான காழ்ப்புணர்ச்சியைக் கொட்டித் தீர்த்தல்.. கருத்தும் அல்ல.. அது ஜனநாயகமும் அல்ல. அப்படியான கருத்துக்களை கருத்துக்களங்களில் அனுமதிப்பது கருத்துக்களங்களின் தார்மீக அமைப்புக்கு கடமைக்கு எதிரானதாகும் என்றே நான் கருதுகிறேன். அதுமட்டுமன்றி இது ஜனநாயக கருத்தியல் சுதந்திரத்துக்கு அப்பாற்பட்ட ஒன்று.

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ், உங்கள் வியாக்கியானத்தை நீங்கள் ஓர் கருத்துக்களம் ஆரம்பித்து அங்கு கருத்துக்கள விதிமுறைகளில் வைத்துக்கொள்ளுங்கள். யாழ் கருத்துக்களத்தில் முதலாவது விடயமாக இப்படி கூறப்படுகின்றது:

1. கருத்து/விமர்சனம்

1. கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.

எல்லோராலும் கண்ணியம் இல்லாதவகையிலும் எழுதமுடியும் என்பதையும் கவனத்தில் வையுங்கள். ஒருவர் கண்ணியமாக எழுதும்போது மற்றவர் கண்ணியமாக எழுதாமல் அநாகரிகமான முறையில் எழுதும்போது அவர் பாணியில் மீண்டும் பதில்கொடுத்தால் என்ன நடைபெறும் என்பதை சிந்தித்து பாருங்கள்.

இப்படி கூறுவதற்கு மன்னிக்கவும்: கருத்துக்களம் பற்றிய உங்களின் கருத்து நீங்கள் இன்னமும் பண்பட்ட கருத்தாளர் இல்லை என்பதை தெளிவாக காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், உங்கள் வியாக்கியானத்தை நீங்கள் ஓர் கருத்துக்களம் ஆரம்பித்து அங்கு கருத்துக்கள விதிமுறைகளில் வைத்துக்கொள்ளுங்கள். யாழ் கருத்துக்களத்தில் முதலாவது விடயமாக இப்படி கூறப்படுகின்றது:

எல்லோராலும் கண்ணியம் இல்லாதவகையிலும் எழுதமுடியும் என்பதையும் கவனத்தில் வையுங்கள். ஒருவர் கண்ணியமாக எழுதும்போது மற்றவர் கண்ணியமாக எழுதாமல் அநாகரிகமான முறையில் எழுதும்போது அவர் பாணியில் மீண்டும் பதில்கொடுத்தால் என்ன நடைபெறும் என்பதை சிந்தித்து பாருங்கள்.

இப்படி கூறுவதற்கு மன்னிக்கவும்: கருத்துக்களம் பற்றிய உங்களின் கருத்து நீங்கள் இன்னமும் பண்பட்ட கருத்தாளர் இல்லை என்பதை தெளிவாக காட்டுகின்றது.

கருத்தில் கண்ணியம் காக்கப்பது என்றால் என்ன.. கருத்தில் நியாயம்.. ஆதாரம் இருக்க வேண்டுமா.. கண்ணியம் இருக்க வேண்டுமா..???!

நான் நினைக்கிறேன்.. நீங்கள் கண்ணியத்திற்கும்.. நாகரிகமாக கருத்துப் பரிமாறப்படுவதற்கும் இடையில் குழம்பி நிற்கிறீர்கள் என்று. யாழ் கள விதி கண்ணியம் என்பதால் சொல்லி நிற்பது நாகரிகமான முறையில் கருத்து வைப்பதை என்றே நினைக்கிறேன்.

கருத்துக்குள் கண்ணியம் வைப்பது என்றால்.. பல விடயங்களை ஆதாரம்.. நியாயம் இருந்தும் பகிர்ந்து கொள்ள முடியாத சூழலே இருக்கும். அப்படியான இடம் நிச்சயம் ஒரு உருப்படியான கருத்துக்களமாக இருக்க முடியாது.

எனக்குப் புரியவில்லை.. பண்பட்ட என்ற பதத்தை எவ்வாறான அளவீடு கொண்டு நீங்கள் அளக்கின்றீர்கள் என்று. அதேபோல் யாழ் கள நிர்வாகம் கண்ணியம் என்பதை எந்த அளவீடு கொண்டு அளக்கிறது என்றும் புரியவில்லை. காரணம்.. கருத்தாளர்கள்.. அவர்களின் சில தனிப்பட்ட நட்புகள்.. கருத்துக்களத்திலும்.. கண்ணியத்தின் தன்மையை மாற்றி அமைக்கிறது. சிலரிடம் கூடிய கண்ணியத்தை எதிர்பார்க்கும் யாழ்.. இன்னும் சிலர் விடயத்தில் குறைந்த கண்ணியத்தோடு அவர்கள் பற்றி எழுதுவதையும் அனுமதிக்கிறது.

அண்மையில் நகைச்சுவை பகுதியில் நடந்த ஒன்றில் மிகவும் நுட்பமாக கண்ணியம் பாதுகாக்கப்பட்டது. ஆனால் சில தினங்களுக்கு முன்னர் கண்ணியத்தோடு கருத்து வைக்கப்பட்டுக் கொண்டிருந்த போதும்.. காத்தான்குடி தலைப்பில் கள உறுப்பினரை ஒருமையில் விழித்து கருத்தெழுதிய போதும் அது அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. கண்ணியம் காற்றில் பறந்தது..!

இப்படி கண்ணியத்துக்கே ஒரு உருப்படியான கணிதம் இல்லை கருத்துக்களத்தில். அதிலும் நாகரிகமான முறையில் அமையாத கருத்துக்களை தன்னியக்க செயற்பாடுகள் (word filter கொண்டு) மூலம் கட்டுப்படுத்தலாம். மட்டுறுத்தினர்களை வைத்து கண்ணியம் காப்பதிலும் அது மேலும் திருத்தமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

அதேபோல் தான் உங்கள் கருத்தியல் பண்பாடு என்பதற்கான அளவுகோல் எதுவென்று தெரியாமல்.. வெறும் வார்த்தைகளில் வைக்கப்படும் அளவுகோல்களுக்கு எல்லாம் கருத்துக்களத்தில் பயந்து கருத்தெழுதிக் கொண்டிருப்பது என்பது கருத்துக்கள நியாயத்துக்கு அப்பாற்பட்ட ஒன்று என்றே நினைக்கிறேன்...!

Edited by nedukkalapoovan

கருத்துக்களை பகராமல் விடயங்களை தவிர்ப்பது என்பது கருத்துக்களத்துக்கு உகந்ததல்ல. பெண்கள் தொடர்பான பல கருத்துக்களை பலர் வேண்டும் என்றே பரிமாற தயங்குகின்றனர். காரணம்.. தம்மை பெண்களுக்கு எதிரானவர்கள் என்று இனங்கண்டு விடுவரோ என்ற பயத்தில்..! இவ்வாறான பயத்தோடு வருபவை கருத்துக்களும் அல்ல.. அவற்றில் இருந்து உருப்படியான தீர்மானங்களை நீதியை நியாயத்தை பிரித்தறியவும் முடியாது..!

அதாவது... இதை இவ்வாறும் கூறலாம்?

கருத்துக்களை பகராமல் விடயங்களை தவிர்ப்பது என்பது கருத்துக்களத்துக்கு உகந்ததல்ல. புலிகள் தொடர்பான பல கருத்துக்களை பலர் வேண்டும் என்றே பரிமாற தயங்குகின்றனர். காரணம்.. தம்மை புலிகளுக்கு எதிரானவர்கள் என்று இனங்கண்டு விடுவரோ என்ற பயத்தில்..! இவ்வாறான பயத்தோடு வருபவை கருத்துக்களும் அல்ல.. அவற்றில் இருந்து உருப்படியான தீர்மானங்களை நீதியை நியாயத்தை பிரித்தறியவும் முடியாது..!

Edited by கரும்பு

உலகம் எங்களை பயங்கரவாதிகள் என்கிறது ஆனால் நாங்கள் விடுதலைபோராளிகளே.அதே தான் துரோகிக்கும் பொருந்தும் உங்களுக்கு துரோகியாக தெரிபவன் மற்றொருவனூகு தலைவனாக தெரியலாம் அதை மாற்றியும் பார்க்காலாம்.இன்று அந்த யதார்த்தை கண்கூடாகபார்க்கின்றோம்.துரோகி-மாண்புமிகு ஆகிவிட்டான்.

அடுத்து கண்ணியம் காப்பது அதில் தான் இங்கு பலரின் வெற்றியே இருக்கின்றது தனக்கு பிடிக்காதவனை எந்த இழிவான வார்த்தையாலும் திட்டாலாம் தான் மதிப்பவனை ஒரு சொல்லு சொன்னாலும் இவர்களால் தாங்கமுடியாது.இப்படியே இவர்கள் வளர்ந்துவிட்டார்கள்.

தான் மதிப்பவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அவரை விமர்சிக்க எவருக்கும் தகுதியில்லை என்பது இவர்களது வாதம்.கடவுளே இங்கு விமர்சனத்திற்குள்ளாகும் போது தலைவர்கள் எம் மாத்திரம்.தாங்கள் அப்படிப் பட்ட ஒருமனநிலையில் வளர்ந்து அதுதான் முற்றிலும் சரியென்று நம்புபவரை ஒன்றும் செய்யமுடியாது.

புலம் பெயர்ந்து ஜனநாய நாட்டில் வாழும் நாங்கள் ஒரு அடிப்படை எழுத்து நாகாரிகத்தையாவது கடைப்பிடிக்க வேண்டும்.தங்களுடன் மாற்றுகருத்துள்ளவனுக்கு இவர்கள் வைத்திருக்கும் பட்டங்களியே ஒரு பட்டியலிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு, அர்ஜுன்..

கொள்ளைக் கூட்டத்துக்கும் தலைவன் இருக்கிறான். அதற்காக மக்கள் அவனையும் தலைவனாக கருத வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த வகையில் துரோகிகள்.. துரோகக் கூட்டத்திற்கு தலைவனாவதும்.. மாண்புமிகு ஆவதும் ஒன்றும் அதிசயமல்ல..!

கருத்து என்பது எவனை ஏன் எந்த வகையில் துரோகி என்கிறார்கள்.. அல்லது அடையாளப்படுத்துகிறார்கள் என்பதில் தான் இருக்கிறது. அதனை அவன் ஏற்றுக் கொண்டு தன்னை மாற்றிக் கொள்கிறானோ இல்லையோ என்பதில் அல்ல.

உங்களுக்கு சில மாண்புமிகுக்கள் துரோகிகளாக தென்படவில்லை என்றால்.. அதற்கான கருத்தை ஆதாரபூர்வமாக முன் வைக்கலாம். நான் நினைக்கவில்லை அதற்கு தடை இருக்கிறது என்று. ஆனால் அந்த மாண்புமிகுக்களை துரோகி என்று இனங்காண்பவன் வைக்கும் ஆதாரங்களையும் அதனடிப்படையில் அவன் எடுக்கும் தீர்மானங்களையும் நீங்கள் கூடவே கூடாது என்று சொல்லிக் கொண்டிருப்பது கருத்தல்ல. அது துதிபாடலாகும்.

கடவுள்.. காந்தி இவர்கள் பிற மனிதர்களால் உயர்வாக சித்தரிக்கப்படும் ஒரு கருத்தியலின் படி உங்களுக்குள் பெரிய ஒரு மாயையை கொண்டிருக்கலாம். ஆனால் அதை எல்லோரும் ஏற்க வேண்டும் என்பது கருத்தல்ல. நீங்கள் நம்புவதை மற்றவர் மீது திணிப்பது போன்றது. கடவுளை.. காந்தியை ஆதார அடிப்படையில் விமர்ச்சித்து கருத்து எழுதுவதை கருத்தாகவே நோக்க வேண்டும். ஆதார அடிப்படை அன்று உளறுவது கருத்தல்ல. காழ்ப்புணர்ச்சிகளைக் கொட்டுவது கருத்தல்ல..!

இப்போ காந்தி ஒரு பொ-- பொறுக்கி என்கிறோம் என்றால் அதற்கு அவர் செய்த செயல்களும் அவை மறைக்கப்பட்ட விதங்களும்.. ஆதாரமாகி நிற்கின்றன. உங்களால் மறுத்தலிக்க முடியுமா அவற்றை. முதலில் அதை உங்கள் கருத்தியலால் செய்யுங்கள். அதைவிடுத்து காந்தியின் தவறை மறைக்க பிரபாகரனை இழுத்து விடுவது கருத்தியல் அல்ல. அதுவும் பிரபாகரன் பற்றிய காழ்ப்புணர்வுகளை கொண்டு வருவது கருத்தும் அல்ல. ஒரு வலுவான சிந்தனையில் இருந்து அல்லது உங்களின் அனுபவம் அல்லது உங்களின் அவதானம் இவற்றில் இருந்து பெறப்படும் ஆதாரத்தின் அடிப்படையில் எழுவது கருத்து. உங்களின் கற்பனையில் எழுவது கருத்தல்ல.. அது படைப்பு. சிருஸ்டிப்பு.

யாழ் களம் ஒரு கருத்துக்களம் மட்டுமல்ல. அது படைப்புக்களமும் ஆகும். இங்கு பல கற்பனை படைப்புகளும்.. யதார்த்தப்படைப்புக்களும் இடம்பிடித்துள்ளன. ஆனால் அவற்றின் மீது கருத்துக் கேட்கும் போது அந்தப் படைப்புக்களே ஆதாரங்களாகி நிற்கின்றன. அரசியல் என்பது அப்படியல்ல. அங்கு ஆதாரமே கருத்தாக வேண்டும். காழ்புணர்ச்சியோ.. சுய புராணமோ அல்ல..! :rolleyes:

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ், நீங்கள் மற்றவனுக்கு வீசுவதாக உங்களுக்கே ஓர் வலையை ஆரம்பத்தில் எறிந்து கொண்டீர்கள். இப்போது மீண்டும் உங்களுக்கே நீங்கள் இன்னோர் வலையை எறிந்து உள்ளீர்கள். நீங்கள் மேலே எழுதிய கருத்து மூலமே உங்களை மீண்டும் சிக்க வைக்க முடியும். ஆனால், இங்கு எனது நோக்கம் வாதத்தில் வெற்றி பெறுவதோ அல்லது பெருன்பான்மையாக இருக்கக்கூடிய யாழ் உறவுகளினை நோகவைப்பதோ இல்லை. எனவே, இத்துடன் இக்கருத்தாடலில் இருந்து விலகிக் கொள்கின்றேன்.

இந்தக் கருத்தாடலில் ஆரம்பத்தில் கருத்து வைக்க நான் விரும்பவில்லை. ஏனென்றால், கருத்துக்களம் சம்மந்தமாக ஓர் கதைவடிவில் கருத்துக்களத்தின் பல்வேறு பரிணாமங்கள் பற்றி கருத்துக்களம் பற்றி புரியாதவர்களுக்காக எழுத நினைத்தேன். அதற்கு நேரம் கிடைக்கவில்லை. அதற்குள் இதுபற்றி ரதி ஓர் தலைப்பு ஆரம்பித்துவிடார். நீங்கள் "கண்ணியம்" பற்றி கூறியவிடயத்திற்காகவே பதில் எழுத விரும்பினேன்.

நன்றி! வணக்கம்!

இந்த வலைகள் என்று நீங்கள் சொல்பவற்றில் இருந்து கருத்துக்களால் என்னால் வெளி வர முடியும். நான் எழுதுவது தொடர்பில் எனக்கென்று ஆதாரங்கள் அடிப்படைகள் இருக்கின்றன. அப்படி இருக்கும் போது.. மீனுக்குப் போட்ட வலையில் இறால் அகப்படும் என்பதும்.. சுறாக்குப் போட்ட வலையில் மீன் நுழைந்து விளையாடும் என்பதும்.. நாம் அறிவோம்..!

கருத்துக்களம் ஒரு வலை என்றால்.. இங்கே பல மீன்கள் அந்த வலைக்குள்ளால் புகுந்து விளையாடும் நிலையிலும் இருக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்..! :lol::rolleyes:

Edited by nedukkalapoovan

அதாவது... இதை இவ்வாறும் கூறலாம்?

கருத்துக்களை பகராமல் விடயங்களை தவிர்ப்பது என்பது கருத்துக்களத்துக்கு உகந்ததல்ல. புலிகள் தொடர்பான பல கருத்துக்களை பலர் வேண்டும் என்றே பரிமாற தயங்குகின்றனர். காரணம்.. தம்மை புலிகளுக்கு எதிரானவர்கள் என்று இனங்கண்டு விடுவரோ என்ற பயத்தில்..! இவ்வாறான பயத்தோடு வருபவை கருத்துக்களும் அல்ல.. அவற்றில் இருந்து உருப்படியான தீர்மானங்களை நீதியை நியாயத்தை பிரித்தறியவும் முடியாது..!

உங்கட கருத்து நியாயமானதான் என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கிறது என்கிறீர்கள்... நீங்கள் சொல்வது உண்மையாகில் அது சரி எண்று 100% தெரியும் போது எதுக்காக பயப்பட வேண்டும்.... ?? :rolleyes::lol: :lol:

ஒருவேளை உங்கட கருத்தில் உங்களுக்கே சந்தேகம் இருக்கலாம்.... அதை எழுதாமல் கௌரவம் காக்கிறீர்கள் போல...

Edited by தயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி...வாத்தியார் எழுதிய மாதிரி வெல்லுதல் என்கிற பதத்தை நான் பாவித்தது தப்புதான்...வேணும் என்டால் இப்படி எழுதலாம் ஒரு கருத்தை மறுதலிக்க முடியாதவர்கள் தான் சம்மந்தம் அந்தக் கருத்துக்கு சம்மந்தம் இல்லாமல் ஏதோ எழுதுவார்கள் என நினைக்கிறேன்..கிருபன் எழுதிய மாதிரி தான் தற்போது கருத்துக் களத்தில் நடக்கிறது...முதலில் ஒருவரது கருத்து கொஞ்சம் புலி எதிர்க்கிற மாதிரி இருந்தால் அவர் எழுதும் எல்லாக் கருத்துகளையுமே அப்படித் தான் பார்க்கிறார்கள்.

கருத்துக்களம் என்றால்.. கருத்தை கண்ணியம் உள்ள கருத்தால் வெல்லுதல் என்பது தான் சிலரின் எதிர்பார்ப்பு. அது சரிப்பட்டு வராத போது இப்படியான தலைப்புக்கள் முளைப்பது யாழிற்கு ஒன்றும் புதிதல்ல.

கருத்துக்களம் என்பது ஒருவர் தனது எண்ணத்தில் உதிப்பதை அல்லது அறிவதை அல்லது சமூகத்தில் காண்பதை மற்றவர்களும் அறிய முன் வைத்து கருத்துக் கேட்பதும் கருத்துப் பரிமாறிக் கொள்வதும் என்று கொள்வதே சிறந்தது. வைக்கப்படும் கருத்துக்களின் தன்மையை கள விதி நிர்ணயம் செய்யும். கருத்துக்களில் அவை பரிமாறப்படும் வகைகளில் ஒரு நாகரிகத்தன்மை பேணப்படுவது சதாரணமாக இருக்க வேண்டிய ஒரு விடயம். கண்ணியம் காத்தல் என்பது கருத்துக்களுக்குள் அவசியமான ஒன்றாக தெரியவில்லை.

வைக்கப்படும் கருத்துத்தான் கருத்துக்களத்தில் முக்கியம் பெற வேண்டுமே தவிர.. வைப்பவர் அல்ல. கண்ணியம் காத்து கருத்தை கருத்தால் வெல்லுதல் என்பது கருத்துக் களத்தின் தொனிப் பொருள் அல்ல.

கருத்துக்களம் என்பது கருத்துப் பகரப்படும் களம்... கருத்துக்கான போட்டிக்களம் அல்ல. இங்கு வெல்லுதல் என்ற பதத்தை பாவிப்பது.. போட்டி மனப்பான்மையை.. வெற்றி தோல்வியை நோக்கி கருத்துப் பகிரப்பட வழி செய்யுமே தவிர கருத்து கருத்தாளனின் நியாயபூர்வ சிந்தனைகளை ஆதாரங்களை எடுத்து வராது.

பலர் கண்ணியம் என்ற போர்வையில் பக்கச்சார்பு நிலை எடுத்துக் கருத்துச் சொல்லுதல்.. யாழிலும் இடம்பெற்று வருகிறது. கண்ணியம் பார்த்தால் கருத்தில் நியாயத்தை காண முடியாது.. கண்ணியத்தை தான் பேண முடியும்..! அது கருத்துக்களம்.. துதிபாடு களமாக மாறவே வழி செய்யும்.

கருத்துக்களில் அமையும் உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் துரோகிகள் தேசத்துரோகிகள் இனங்காட்டப்படுவது ஒன்றும் தவறான அம்சம் அல்ல. அவ்வாறு அழைப்பதை தவறென்று நிரூபிக்க வேண்டிய ஆதாரங்களை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொண்டு வர வேண்டுமே தவிர.. துரோகி.. என்று சொல்லவே கூடாது என்பது நியாயமான ஒரு நிலைப்பாடு அல்ல. துரோகிகள் இருக்கிறார்கள்.. அவர்கள் சரிவர ஆதாரங்களோடு இனங்காட்டப்படும் போது அதை கருத்துக்களத்தில் விவாதிப்பது அல்லது அது தொடர்பில் கருத்துப் பரிமாறுவது தெளிவை தருமே தவிர.. அதை மறைப்பது துரோகிகளுக்கே உதவி நிற்கும்..!

மாற்றுக்கருத்து என்பதன் பெயரால்.. புலி எதிர்ப்பைக் காட்டுவது என்பது ஜனநாயகம் கிடையாது. அல்லது கருத்துச் சுதந்திரம் கிடையாது. மாற்றுக் கருத்து என்றால் ஒரு கொள்கையை எதிர்ப்பதற்கான காரணம்.. அதற்கு பிரதியீடான கொள்கை என்ன.. அதனைக் கொண்டு இலக்குகளை எவ்வாறு அடைய முடியும் என்று இனங்காட்டுதலாக இருக்க வேண்டும். அதைவிடுத்து.. புலியை ஆதரிப்பதை எதிர்ப்பது என்பதெல்லாம் மாற்றுக் கருத்துக் கிடையாது. அது காழ்ப்புணர்ச்சியை கொட்டுதலாகும். அதற்கு கருத்துக்களத்தில் இடமளிக்கக் கூடாது. ஆனால் யாழ் மாற்றுக் கருத்தை அனுமதிப்பதாக புலிக் காழ்ப்புணர்ச்சியைக் கொட்ட அனுமதிப்பது அதன் கருத்துக்கள தார்மீகத்துக்கு சரியானதா என்பது கேள்விக்குரியது.

கருத்துக்களை பகராமல் விடயங்களை தவிர்ப்பது என்பது கருத்துக்களத்துக்கு உகந்ததல்ல. பெண்கள் தொடர்பான பல கருத்துக்களை பலர் வேண்டும் என்றே பரிமாற தயங்குகின்றனர். காரணம்.. தம்மை பெண்களுக்கு எதிரானவர்கள் என்று இனங்கண்டு விடுவரோ என்ற பயத்தில்..! இவ்வாறான பயத்தோடு வருபவை கருத்துக்களும் அல்ல.. அவற்றில் இருந்து உருப்படியான தீர்மானங்களை நீதியை நியாயத்தை பிரித்தறியவும் முடியாது..!

நெடுக்ஸ் நீங்கள் எழுதியதில் நீங்களே வேறுபடுகிறீர்கள்...முதல் ஜந்து பந்திகளில் நீங்கள் எழுதியதையும் அதற்கு பிறகு வரும் இரு பந்திகளில் எழுதியதும் ஒன்டுக்கு ஒன்டு முரண்படுகிறது...ஆனால் கடைசிப் பந்தியில் நீங்கள் எழுதியது உண்மை பெண்கள் தொடர்பான கருத்துகள் மட்டுமல்ல பல விடயங்களில் தங்களுக்கு விருப்பமானவர்கள் எதாவது முரண்பாடாய் எழுதி இருந்தால் கருத்து எழுத மாட்டார்கள்...சில, சில விடயங்களில் அவர்கள் தலையிடுவதே இல்லை முக்கியமாய் பெண்கள்...இது ஆரோக்கியமான விடயம் இல்லை.

நெடுக்ஸ், உங்கள் வியாக்கியானத்தை நீங்கள் ஓர் கருத்துக்களம் ஆரம்பித்து அங்கு கருத்துக்கள விதிமுறைகளில் வைத்துக்கொள்ளுங்கள். யாழ் கருத்துக்களத்தில் முதலாவது விடயமாக இப்படி கூறப்படுகின்றது:

எல்லோராலும் கண்ணியம் இல்லாதவகையிலும் எழுதமுடியும் என்பதையும் கவனத்தில் வையுங்கள். ஒருவர் கண்ணியமாக எழுதும்போது மற்றவர் கண்ணியமாக எழுதாமல் அநாகரிகமான முறையில் எழுதும்போது அவர் பாணியில் மீண்டும் பதில்கொடுத்தால் என்ன நடைபெறும் என்பதை சிந்தித்து பாருங்கள்.

இப்படி கூறுவதற்கு மன்னிக்கவும்: கருத்துக்களம் பற்றிய உங்களின் கருத்து நீங்கள் இன்னமும் பண்பட்ட கருத்தாளர் இல்லை என்பதை தெளிவாக காட்டுகின்றது.

இதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்...நீங்கள் மேலே எழுதிய அனைத்தும் உண்மை...கலைஞன் என்னை மன்னியுங்கள் நீங்கள் எழுதும் முன் நான் இத் தலைப்பை அவச‌ர‌ப்பட்டு தொட‌ங்கியதற்கு.

Edited by ரதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.