Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விண்ணியல் விநோதங்கள்...

Featured Replies

சூரியன் எப்போதும் ஒரே அளவாய்த் தான் கண்ணுக்குத் தெரிகின்றதா?

பூமியிலிருந்து கோடை காலத்தில் சூரியன் வெகுஅருகிலும், குளிர்காலத்தில் சூரியன் வெகு தொலைவிலும் இருப்பதாய்த் தானே நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்? இரண்டுமே தவறாகும்!

suncloseandfar_cervigon.jpg

இந்தப் படத்தைப் பாருங்கள். பூமியின் அருகில் சூரியன் வருவது குளிர்காலத்தில். தொலைவில் செல்வது கோடை காலத்தில்! மேலும் பார்வைக்கு ஒன்று போல் தெரிந்தாலும், தூரத்தில் சென்று விடுவதால் சூரியன் கோடை காலத்தில் சிறியதாகவே தெரியும்! அப்புறம் ஏன் இப்படிச் சுடுகின்றது?

அது எத்தனை மணிநேரம் பகலாகவும், எத்தனை மணி நேரம் இரவாகவும் இருக்கின்றது என்பதிலும், சூரியன் எவ்வாறு உதிக்கின்றது என்பதையும் பொருத்தது. குளிர்காலத்தில் பூமியின் நீள் வட்டப் பாதையில் ஏற்படும் அச்சு மாற்றத்தால் சூரியன் அடிவானத்தில் குறைந்த நேரமே இருப்பதாகச் செய்கின்றது. மிகப் பெரிய சூரியன் (இடது) ஜனவரியிலும் (குளிர்காலத்திலும்) மிகச் சிறிய சூரியன் (வலது) கோடைகால இறுதியான ஜூலையிலும் எடுத்தது.

  • Replies 419
  • Views 70.6k
  • Created
  • Last Reply

சூரியக் குடும்பத்திலேயே மிக உயரமான சிகரம் தற்போது பார்த்த வரை யுரேனஸ் கிரகத்தின் சந்திரனான மிராண்டாவின் வெரோனா ரூப்ஸ் (Verona Rupes) என்னும் மலையே ஆகும். இந்தச் சிகரத்தின் உயரம் 20 கி.மீ. உயரமாகும். ஆனால் மிராண்டாவின் ஈர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருப்பதால், மேலிருந்து விழுந்தால் கீழே போய் தரையைத் தொட 12 நிமிடங்கள் ஆகும். கீழே காற்றுப் பை வைத்துப் பிடித்தால் உயிர் பிழைக்கவும் வாய்ப்புண்டாம். வாயேஜர் 2 1986ல் எடுத்த படம் இது.

mirandascarp_vg2.jpg

2300 டிகிரி வெப்பத்துடன் வியாழனை விட பெரிய புதிய கிரகம்: விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பு

சூரியனை மையமாக வைத்து புதன், வீனஸ், பூமி, செவ்வாய், வியாழன் (ஜுபிடர்) சனி, யுரேனஸ், நெப்டிïன், புளூட்டோ ஆகிய கிரகங்கள் சுற்றி வருகின்றது. இந்த சூரிய குடும்பத்தில் வியாழன் கிரகம் சூரியனில் இருந்து 48 கோடி மைல்களுக்கு, அப்பால் உள்ளது. சூரியனை ஒரு தடவை சுற்றி வர 11.9 ஆண்டுகள் ஆகிறது. வியாழன் (ஜுபிடர்) கிரகத்தின் விட்டம் 1 லட்சத்து 41 ஆயிரத்து 968 கிலோ மீட்டர். ஆனால் இந்த வியாழன் கிரகத்தை விட 70 சதவீதம் பெரிதான புதிய கிரகம் ஒன்றை வான இயல் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். சூரிய குடும்பத்திலேயே இதுதான் மிகப் பெரிய கிரகம். இந்த புதிய கிரகத்துக்கு டி.ஆர்.இ.எஸ்.4 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய கிரகம் பூமியில் இருந்து 1435 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும். ஜி.எஸ்.சி.ஓ.2620 நட்சத்திர கூட்டத்தை சுற்றி வருகிறது. இந்த புதிய கிரகத்தின் வெப்பம் 2300 டிகிரி பாரன் ஹீட். ஆனால் அதன் அடர்த்தி மிகவும் குறைவு.

அமெரிக்க விண்வெளி ஓடம் 7 பேருடன் விண்ணில் பறந்தது: பள்ளி ஆசிரியையும் பயணம்

வான வீதியில் அமைக்கப் பட்டுள்ள சர்வதேச விண் வெளி மையத்தில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்காக அமெரிக்கா விண்வெளி வீரர்களையும், தேவையான பொருட்களையும் விண் வெளிக்கு அனுப்பி கட்டு மான பணிகளை செய்து வருகிறது.

இந்த ஆண்டு 4 தடவை விண்வெளி ஓடங்களை அனுப்ப அமெரிக்க திட்ட மிட்டு இருந்தது. அதன்படி முதன் விண்வெளி ஓடம் அட்லாண்டில் ஜுன் மாதம் அனுப்பப்பட்டு பத்திரமாக திரும்பியது. அப்போது விண்வெளியில் தங்கி இருந்த இந்திய வம்சா வளி வீராங்கனை சுனிதா வில்லியம்சும் பூமிக்கு திரும்பினார்.

இதையடுத்து 2-வது பயணமாக `என் டேவர் விண்வெளி ஓடத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்காக 7 வீரர்கள் தயார் படுத்தப்பட்டனர்.

அதை புளோரிடா விண் வெளி ஆய்வு மையத் தில் இருந்து இன்று விண்ணுக்கு அனுப்ப ஏற்பாடு செய் திருந்தனர்.

அதன்படி இன்று அதிகாலை இந்திய நேரப்படி 4 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. என்டேவர் ஓடத்தை முதுகில் சுமந்து கொண்டு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

விண்வெளி ஓடம் குறிப் பிட்டப்படி திட்டமிட்ட பாதை யில் சென்று விண்வெளியை அடைந்தது.

இதில் 6 விண்வெளி வீரர்களும், பார்பரா என்ற ஆசிரியையும் சென்றனர். 1996-ல் சேலஞ்சர் விண்வெளி ஓடம் விண்ணில் ஏவப்பட்ட போது வெடித்து சிதறி அனை வரும் பலியானார்கள். அதில் பள்ளிக்கூட ஆசிரியர் கிறிஸ் டாவும் இறந்தார். அதையடுத்து 21 வருடங்களுக்கு பிறகு பள்ளிக் கூட ஆசிரியர் ஒருவர் விண்வெளிக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளி ஓடம் சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைய உள்ளது. அதன் பிறகு அவர்கள் கட்டுமான பணியில் ஈடுபடுவார்கள்.

1 டன் எடையுடன் டிரஸ் என்ற கருவியை விண்வெளி ஓடத்தில் பொருத்த உள்ளனர். இதை எடுத்து சென்றுள்ளனர். அதே போல 3 டன் எடை யுள்ள சாதனங்கள் 2.7 டன் எடையுள்ள உணவு மற்றும் பொருட்கள் ஆகியவற்றையும் கொண்டு சென்றுள்ளார்.

வீரர்கள் 3 தடவை விண் வெளி நடை பயணம் செல்ல வும் திட்டமிட்டுள்ளனர்.

14 நாட்கள் விண்வெளியில் இருந்து விட்டு அவர்கள் பூமி திரும்புவார்கள்

F2179~NASA-Endeavour-on-Pad-Spaceshots-Posters.jpg

F2187~Endeavour-Day-Launch-Posters.jpg

அண்டவெளியில் இதுவரை இல்லாத அளவில் பெரியதொரு கோளைக் கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

புவியிலிருந்து 1,400 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் ஹெர்குலஸ் எனப்படும் நட்சத்திரக் கூட்டத்தில் இந்தக் கோள் உள்ளது. நமது சூரிய மண்டலத்திலுள்ள வியாழனை விட புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கோள் எழுபது மடங்கு பெரியது என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு விண் பௌதிகப் பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ளது.

டிரெஸ்-4 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோள்தான் மனித வர்க்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கோளாகும். மூன்று தொலை நோக்கிகளை கொண்டு இந்தக் கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் இரண்டு அமெரிக்காவிலும் ஒன்று கனேரித் தீவிலும் உள்ளன. இந்தக் கோள் அருகாமையிலுள்ள நட்சத்திரத்தை கடந்து செல்லும் போது, அந்த நட்சத்திரத்தின் ஒளியை எவ்வாறு மறைக்கிறது என்பதை அளந்து அதன் அடிப்படையில் இந்தப் புதிய கோளின் அளவை கணித்துள்ளார்கள்.

ஆனாலும் டிரெஸ்-4 எனப்படும் இந்தப் புதிய கோள் வியாழனிடமிருந்து பலவகையில் மாறுபடுகிறது. அது அளவில் பெரியதாக இருந்தாலும் எடை குறைந்தே காணப்படுகிறது. வியாழன் ஒரு குளிர்ந்த கோள். ஆனால் இந்தப் புதிய கோளின் வெப்பநிலை 1300 டிகிரி செல்சியஸ் அளவிலுள்ளது.

இந்தப் புதிய கோளானது அதனைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தின் மீது குறைந்த அளவே ஈர்ப்பு சக்தியை வெளிப்படுத்துவதால், அந்தக் காற்றுப் பகுதி அண்டவெளியில் ஒரு வால் நட்சத்திரம் போன்று வளைந்து வெளியேறக் கூடும் எனவும் விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள்

bbc.com

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

_44071645_shutt_nasa_203.jpg

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இரு வார பயணத்திட்டத்தின் கீழ் சென்ற எண்டவர் விண்ணோடம் இன்று அமெரிக்க கெனடி விண்வெளி ஆய்வு மைய ஓடுதளத்தில் தரையிறங்கியது.

விண்ணோடம் தரையிறங்கும் காட்சியை இவ்விணைப்பில் உள்ள காணொளியில் காணலாம்

http://news.bbc.co.uk/player/nol/newsid_69...sb=1&news=1

எண்டவர் விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தோடு இணையும் போது அதன் வெப்பத்தடுப்பு சுவரில் சிறிது தேசத்துக்குள்ளானது என்பதுடன் அச்சேதம்.. விண்வெளி வீரர்களின் விண்வெளி நடப்புக்கள் மூலம் திருத்தம் செய்ய முற்ப்பட்டனர் இருந்தாலும் பின்னர் அது அவசியமில்லை என்று தீர்மானிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/6953423.stm

Edited by nedukkalapoovan

வான வெளியில் மாய ஓட்டை: விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர்

நமது சூரிய மண்டலத்தில் உள்ள பால்வீதியை அடுத்து பிரபஞ்சம் உள்ளது. அங்கு ஏராளமான சூரிய மண்டலங்கள் உள்ளன.

இவற்றில் 25-வது டிகிரி கோணத்தில் மாய ஓட்டை ஒன்று தெரிகிறது. அமெரிக்க மின்னோஸ்டோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள் இதை கண்டு பிடித்து உள்ளனர்.

பூமியில் இருந்து லட்சக் கணக்கான ஒளி ஆண்டுகள் தூரத்தில் இது தென் படுகிறது. அது என்ன ஓட்டை? ஏதாவது பெரிய கோளில் உள்ள பள்ளமா? என்று எந்த விவரமும் தெரியவில்லை.

மிக தூரத்தில் இருப்பதால் அது என்ன என்பதை கணிக்க முடியவில்லை என்று விஞ்ஞானி ருட்னிக் தெரிவித்தார்.

அமெரிக்க நாசா விண்வெளி மையத்தின் செயற்கை கோள் மூலம் இந்த ஓட்டை படம் பிடிக்கப்பட்டுள்ளது.

லங்காசிறீ

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

bigbangcv0.png

Big bang theory..ஆங்கில மூலமான.. கலந்துரையாடல் காணொளி வடிவில்..

கீழுள்ள இணைப்பை அணுகவும்..

http://www.allaboutscience.org/big-bang-theory-video.htm

  • கருத்துக்கள உறவுகள்

_44115592_rocket_ap203.jpg

சந்திரனை ஆய்வு செய்ய என்று மூன்று விண்கலங்களை ( ஒரு பிரதான கலமும் இரண்டு செய்மதிகளும்) ஜப்பான் இன்று விண்ணுக்கு ஏவியது. 1960 களில் அமெரிக்கா சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பியதாகக் கூறும் சந்திரப் பயணத்துக்குப் பின்னர் முக்கியத்துவம் பெற்ற பயணமாக இந்த ஜப்பானின் சந்திரனை ஆய்வு செய்வதற்கான பயணம் அமையும்.

ஜப்பானிய விண்கலங்கள் சந்திரனில் தரையிறங்குவதற்கு பதிலாக சந்திரனுக்கு மேலே 100 கிலோமீற்றர்கள் தொலைவில் நிலையெடுத்து சந்திரனைச் சுற்றி வந்தபடி.. ஆய்வுகளைச் செய்யவுள்ளன என்று ஜப்பானிய விண்வெளி ஆய்வு மையம் Jaxa அறிவித்துள்ளது.

கானொளி இங்கு. முழுக்க முழுக்க ஜப்பானிய மொழியில் உரையாடி... (ஆங்கில மொழிபெயர்ப்பும் அளிக்கப்பட்டது) இந்தப் பயணம் ஆரம்பிக்கப்படுவதை இங்கு காணலாம். ஜப்பானியர்களின் தேசிய மற்றும் மொழிப் பற்றை பிற மொழி பேசும் மக்களும் கருத்தில் கொள்வது சிறப்பு.

http://news.bbc.co.uk/player/nol/newsid_69...sb=1&news=1

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

_44115118_star_science_203l.jpg

ஆரம்ப பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரம் தனித்துவத்தன்மை மிக்க நீண்ட இழைபோன்ற அமைப்பில் இருந்து உருவாகி இருக்க வேண்டும் என்று கணணி உதவி கொண்டு பெறப்பட்ட வடிவமைப்பு ஆய்வியில் இருந்து முன்மொழிந்துள்ளனர்.

இப்படியான கட்டமைப்புக்கள் விண்ணில் இருப்பது குறித்து விஞ்ஞானிகள் சிறிய அளவிலான விளக்கத்தையே கொண்டுள்ளனர்.

_44115117_star_science_203b.jpg

அதுமட்டுமன்றி பிரபஞ்சத்தில் ஆக்கியுள்ள கூறுகளில் 75% மானவை இருளானவை என்றும் இவை மனிதன் உணரத்தக்க ஒளி வடிவங்களை வெளியிடுவதில்லை என்றும் ஆனால் இவற்றின் ஈர்ப்புத்தாக்கம் பிரபஞ்சத்தில் நிறைந்துள்ளது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

(பிரபஞ்சம் தொடர்பில் விஞ்ஞானிகளால் விளக்கம் அளிக்க முடியாத பல விடயங்கள் உண்டு எனினும் இவை குறித்த ஆய்வுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

பிரபஞ்ச அடிப்படையில் இயற்கையில் இவைதான் உண்மைகள் என்று இன்னும் அறுதியிட்டு வரையறுக்க முடியாத நிலையே அறிவியல் ரீதியாகவும் தொடர்கிறது.)

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/6993870.stm

Yuichi-Takasaka2.jpg

கடந்த ஆகஸ்டு 28ம் தேதி முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. வடமேற்கு அமெரிக்காவில் இது காணக் கிடைத்தது. 90 நிமிடங்கள் வரை நீடித்தது இந்தக் கிரகணம். சந்திரனுக்கும் சூரியனுக்கும் நடுவில் பூமி வருவதால், பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும் போது சந்திரகிரகணம் நடைபெறுகின்றது என்பது நாம் அறிந்ததே.

சூரிய கிரகணம் போலல்லாது, சந்திர கிரகணத்தின் போது மொத்த சந்திரனும் மறைந்து விடாது. ஒளிச் சிதறல் காரணமாக செந்நிறத்தில் காட்சியளிக்கும்.

4 நிமிடங்களுக்கு ஒரு முறை எடுக்கப் பட்ட படம் மேலே இருக்கின்றது. கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து பின் சிவப்பாகி, பின் கொஞ்சம் கொஞ்சமாக தெரிகின்றது நிலா.

இதோ பால் நிலா, ரத்த நிறத்தில்!

EclipsedMoonPugh720.jpg

  • கருத்துக்கள உறவுகள்

க்ட்ட்ப்://ந்ந்ந்.அலைகல்.cஒம்/இன்டெx.ப்க்ப்?ஒப்டிஒன்=cஒம்_cஒன்டென்ட்&டச்க்=விஎந்&இட்=895&ஈடெமிட்=52

சூரியக்கிரகத்திற்கு அப்பால் தண்ணீர் உள்ள கிரகம்! நாஸா தகவல்.

வியாழன், 12 ஏப்ரல் 2007 16:20

சூரியக்கிரகத்திற்கு அப்பால் இருக்கும் கிரகம் ஒன்றில் புவியில் இருப்பதைப் போலவே தண்ணீர் இருப்பதாக நாஸா அறிவித்துள்ளது. எச்.டி.209458 பீ என்று இதன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 150 ஒளி வருடங்களுக்கு அப்பால் ஒரு சூரியனை சுற்றி இது வலம் வருகிறது.

நமது கிரகத் தொகுதியில் சூரியனும், வெள்ளியும் அமைந்திருப்பது போல இதன் அமைவு இருக்கிறது. சுமார் மூன்றரை நாட்களில் இதன் ஒரு நாள் பயணம் இருக்கிறது. கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் பூமியில் இருந்து 600 கிமீ தொலைவில் நிறுத்தப்பட்ட உறபிள் தொலை நோக்கி இதைக் கண்டு பிடித்துள்ளது. இந்தக் கிரகத்தில் விழும் சூரிய ஒளியானது வித்தியாசமான அளவில் விழுவதாகக் கூறப்படுகிறது. இதனுடைய தோற்றம் பூமி போன்ற ஒரு காட்சியாகவே இருக்கிறது. உலகத்தில் முதல் முதலாக இப்படியொரு செய்தி வெளியாகியுள்ளதால் பலத்த அதிர்ச்சியை அறிவியல் சமூகத்தில் இது ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் 15 வருடங்களுக்குள் புவியில் உள்ளது போல கடல்கள், தாவரங்கள் கொண்ட அழகிய கிரகமொன்றின் படத்தை இந்த உலகத்திற்கு தருவேன் என்று கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் நாஸாவின் தலைவராக இருந்த விஞ்ஞானி டான் கோல்டன் தெரிவித்தார். அவர் குறிப்பிட்ட காலத்திற்கு மேலும் சில வருடங்கள் இருக்க இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. ஒரு கிரகத்தில் நீர் இருந்தால் அதில் இருந்து உயிரினங்கள் தாவரங்கள் போன்றன உருவாகலாம். இது குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் தொடர்ந்து வர வாய்ப்புள்ளது. வானியலாளர் ராவிஸ் பிறீமன் இக்கிரகத்தில் இருப்பது தண்ணீரே என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அடுத்து என்ன மேலும் சுவாரஸ்யமான தகவல்கள் காத்துள்ளன.

புவிமீது ஒவ்வொரு தினமும் பல்லாயிரக்கணக்கான றேடியோ சமிக்ஞைகள் வருகின்றன. இவை எங்கிருந்து வருகின்றன என்று தெரியவில்லை என்று கூறி, அண்ட வெளிக்கு புவி பற்றிய தகவல்களை காலஞ்சென்ற விஞ்ஞானி கார்ள் சாகன் அனுப்பி வைத்தது தெரிந்ததே. அவர் அனுப்பிய றேடியோ சமிக்ஞைகள் புவியில் ஆண் - பெண் என்று இரு பாலருண்டு, 0 முதல் 9 வரை எமது இலக்கங்கள் உள்ளன, உம்முடன் சமாதானமாக நாம் இருக்க விரும்புகிறோம் ஆகிய செய்திகளை உள்ளடக்கியிருந்தது. குறிப்பிடத்தக்கது.

http://www.alaikal.com/index.php?option=co...5&Itemid=52

  • 3 months later...

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !பிரபஞ்சம் ஒன்றா ? பலவா ?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

வெறுமையிலிருந்து எதுவுமே உருவாக முடியாது."

லுகிரிடியஸ் ரோமானிய வேதாந்தி (Lucretius) கி.மு. (99-55)

"நமது பிரபஞ்சம் பத்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெய்யாகவே வெறுமையிலிருந்து தோறியதாக நான் அனுமானம் செய்கிறேன் ! . . .ஏன் அவ்விதம் நிகழ்ந்தது என்னும் கேள்விக்கு எனது தாழ்மையான முன்னறிவிப்பு இதுதான் : எப்போதாவது ஒரு யுகத்தில் அப்படி நேரும் தோற்றங்களில், நமது பிரபஞ்சமும் ஒன்று என்பது !"

எட்வேர்டு டிரையன், பௌதிகப் பேராசிரியர் நியூயார்க் பல்கலைக் கழகம் (1975)

"கவிஞன் அண்டக் கோள்களில் மண்டையை நுழைக்க வேண்டுகிறான். தர்க்கவாதி தன் மண்டைக்குள் அண்டங்களைத் தேடிச் செல்கிறான். அப்புறம் அவன் தலைதான் பிளக்கிறது."

ஜி.கே. செஸ்டர்ஸன் (G.K. Chesterson) (1874-1936)

40801101a01qk3.jpg

Fig. 1

Parallel Universe

(1234)

இணைப் பிரபஞ்சங்கள் விண்வெளியில் உள்ளனவா ?

விஞ்ஞானிகள் இப்போது நமது பிரபஞ்சத்தைப் போல ஓர் இணையான பிரபஞ்சம் (Parallel Universe) இருக்கலாம் என்று மெய்யாக நம்புகிறார்கள். புத்தகத்தில் படிக்கும் விஞ்ஞானப் புனைகதை இல்லை இது ! "Multiverse" என்னும் சொல்லை முதலில் ஆக்கியவர் அமெரிக்க வேதாந்தி வில்லியம் ஜேம்ஸ் (1848-1910). சொல்லப் போனால் நமக்குத் தெரியாமல் குறிப்பிட முடியாத எண்ணிக்கையில் இணையான "பல்லரங்கப் பிரபஞ்சங்கள்" (Multiverses) இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறார்கள் ! நாம் அவற்றில் ஒன்றான நமக்குத் தெரியும், உப்பி விரியும் ஒரு பெருவெடிப்புப் பிரபஞ்சத்தில்தான் வாழ்ந்து வருகிறோம். அந்தப் பிரபஞ்சங்கள் காலவெளியும், மர்மமான, புதிரான பண்டங்களும் கொண்டிருக்கலாம் ! மெய்யாக நமது பிரபஞ்சத்தில் உள்ள ஈர்ப்பாற்றல் வலுவற்ற சமிக்கை மற்ற இணைப் பிரபஞ்சத்திலிருந்து கசிந்து புகுந்து விட்ட ஒன்றுதான் ! இதில் வியப்பென்ன வென்றால் இந்த இணைப் பிரபஞ்சம் நமது பிரபஞ்சத்துக்கு மிக்க அருகில் இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

40801101b02db6.jpg

Fig. 2

Superstring Universe

(Clip02)

பிரபஞ்சத்தின் பரிமாணங்கள் நான்கு அல்ல பதினொன்று !

உன்னத இழை நியதி (Superstring Theory) பெருவெடிப்புக்கு முந்தய சில அடிப்படை விளைவுகளையும் விளக்க உதவுகின்றது ! ஒற்றை நியதியில் இழை நியதி பராமாணுக்கள், அடிப்படை இயற்கை உந்துவிசைகள் (Particles & Fundamental Forces of Nature) யாவும் உன்னத சீரான நுண்ணிழைகளின் அதிர்வுகள் (Vibrations of Tiny Supersymmetric Strings) என்று தெளிவாகக் கூறுகிறது. பரமாணுக்களின் அணுக்கூண்டில் இயங்கும் "நுண்துகள் ஈர்ப்பாற்றல்" (Quantum Gravity) தன்மைகளை விளக்கும் மகிமை கொண்டது இந்த உன்னத இழை நியதி ! இது ஏறக்குறைய உயிரியல் பிறவி மூலமான "டியென்னே" (DNA) போன்றது பிரமஞ்சத்தின் ஒற்றை உன்னத இழை நியதி என்று வைத்துக் கொள்ளலாம் !

புரட்சிகரமான இந்த இணைப் பிரபஞ்சக் கோட்பாடு எப்போது உதயமானது என்னும் கேள்வி எழுகிறது இப்போது ! உன்னத இழை நியதி, பெருவெளி, கருமைப் பிண்டம் (Superstring Theory, Hyperspace & Dark Matter) ஆகிய புதிய கோட்பாடுகள் எழுதப்பட்டதும் பௌதிக விஞ்ஞானிகள் பிரமஞ்சத்தின் விஞ்ஞானத்தை விளக்க நாமறிந்த நான்கு காலவெளிப் பரிமாணங்கள் மட்டும் போதா வென்றும், அவை மெய்யாகப் பதினொன்று எண்ணிக்கைகள் என்றும் உணர்ந்தார்கள் ! அவ்வித முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்ததும், அடுத்தோர் முடிவும் உதயமானது ! அதாவது நாமறிந்த பிரபஞ்சமானது எண்ணிற்ற "சவ்வியல் குமிழிகளில்" (Membraneous Bubbles) ஒன்றானது ! சவ்வுக் குமிழிகள் பதினொன்றாம் பரிமாணத்தில் கொந்தளிக்கும் போது அலைகள் எழுகின்றன !

40801101c04cm1.jpg

Fig. 3

Parallel Worlds

(Clip03)

பெருவெடிப்பு மீளும் காலவெளித் தொடர் நிகழ்ச்சி

இப்போது குமிழிப் பிரபஞ்சங்கள் இரண்டு ஒன்றை ஒன்று தொட்டால் என்ன நிகழும் என்று நினைக்கிறீர்கள் ? பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் விஞ்ஞானி நீல் துராக் (Neil Turok), அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி பர்ட் ஓவ்ரட் (Burt Ovrut), & பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி பால் ஸ்டைன்ஹார்ட் (Paul Steinhardt) ஆகிய மூவரும் அவ்விதம் இரண்டு குமிழிப் பிரபஞ்சங்கள் ஒரு யுகத்தில் தொட்டன என்று நம்புகிறார்கள் ! அதன் விளைவென்ன ? மெய்யாக ஒரு மிகப் பெரும் வெடிப்பு நேர்ந்து ஓர் புதிய பிரபஞ்சம் << நமது பிரபஞ்சம் >> பிறந்ததாம் ! அப்படி அவர்கள் அறிவித்ததும் உலக விஞ்ஞானச் சமூகத்திற்கு ஓர் அதிர்ச்சி உண்டானது ! அந்த விளக்கவுரை சம்பிரதாய பெருவெடிப்பு நியதியின் முகத்தைத் திருப்பி விட்டது !

40801101d05oo4.jpg

Fig. 4

Level II Multiverse

(Clip08)

அதாவது நாமறிந்த பெருவெடிப்பு மெய்யாக பிரபஞ்சத்தின் ஆரம்பகால முதற் தோற்றமில்லை. காலவெளிப் படைப்பு அதற்கும் முற்பட்டது; மேலும் பெருவெடிப்பு அடுத்தும் தொடராய் நிகழலாம் என்னும் புரட்சிகரமான ஓர் அதிசய பிரபஞ்சத் தோற்றங்களின் "காலவெளித் தொடர் நிகழ்ச்சியை" (Space-Time Chain Event) அவர்கள் எடுத்துக் கூறினார். பெருவெடிப்புகள் எப்போதும் நிகழலாம் ! இப்போது பிரபஞ்சத்தின் மூலத் தோற்றத்தை வைத்து நமக்கு எச்சரிக்கையாய்ப் பூதகரமான ஒரு பயங்கரக் கேள்வி எழுகிறது ! பிரபஞ்சக் குமிழிகள் ஒன்றை ஒன்றை மோதி நமது பிரபஞ்சம் தோன்றிய தென்றால் மீண்டும் அவ்விதம் மோதும் ஒரு வாய்ப்புள்ளதா ? பதினொன்று பரிமாணமுடைய அகில வெளியில் எந்த நிகழ்ச்சியும் ஏற்படலாம் !

நான்கு வகுப்பு வடிவ நிலைகளில் பிரபஞ்ச அமைப்புகள்

"பல்லரங்கப் பிரபஞ்சம்" அல்லது "மேநிலைப் பிரபஞ்சம்" (Multiverse, Multi-Domain Universes or Meta-Universe) என்பது நிகழக் கூடிய பல்வேறு இணைப் பிரபஞ்சங்கள் பற்றிய ஓர் சித்தாந்தப் பௌதிகக் கோட்பாடு (Hypothesis of Possible Multiple Universes). அதனுள் நாம் வாழும் பிரபஞ்சமும் அடங்கும். அது ஒரு பௌதிக விஞ்ஞான மெய்ப்பாடுதான் ! பற்பல பிரபஞ்சங்களின் கட்டமைப்புகள் (Structures of the Multiverse), ஒவ்வொரு பிரபஞ்சத்தின் இயல்பான பண்பாடு (The Nature of Each Universe), பல்வேறு பிரபஞ்ச உட்பண்டங்களின் உறவுப்பாடு (The Relationship between the Constituent Universes), ஆகியவை குறிப்பிட்ட பிரபஞ்சத்தின் சித்தாந்த பௌதிகக் கோட்பாடைச் சார்தவை. "Multiverse" என்னும் சொல்லை ஆக்கியவர் அமெரிக்க வேதாந்தி வில்லியம் ஜேம்ஸ் (1848-1910). அவற்றை (Alternate Universes, parallel Universes, Quantum Universes, Parallel Worlds, Alternate Realities & Alternate Timelines) என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள்.

40801101e06wx7.jpg

Fig. 5

Parallel Universe

Clip0)11

பல்லரங்க பிரபஞ்சங்கள் வகுப்பு -1, வகுப்பு -2, வகுப்பு -3 & வகுப்பு -4 (Level I, Level II, Level III & Level IV) என்று நான்கு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் வகுப்பு முறைகளை ஆக்கியவர் மூவர் : 1. ஜியார்ஜ் எல்லிஸ் (George Ellis). 2. யு. கெர்ச்செனர் (U. Kirchner) & 3. டபிள்யு. ஆர். ஸ்டோஜர் (W.R. Stoeger). அப்பிரிவு முறைகளுக்கு "டெக்மார்க் வகுப்பியல்" (Tegmark Classification) என்பது பெயர்.

1. பல்லரங்க பிரபஞ்சங்கள் (Multi-Domain Universes)

வகுப்பு : 1 (திறந்த வெளிப் பிரபஞ்சம்)

யுகங்கள் கடந்த பிரபஞ்சத்தின் எல்லையிலா அகிலவெளி வீக்கம் பற்றி ஒரு பூர்வீக முன்னறிவிப்புச் சித்தாந்தம் இது. அதனில் ஆதிகால நிபந்தனைகள் எடுக்கப்பட்டு ஹப்பிள் தொலைநோக்கி காணமுடிந்த கொள்ளளவுகள் இருக்க வேண்டும்.

(Level : 1 A Generic Prediction of Cosmic Inflation is an infinite Ergodic Universe which, being infinite, must contain Hubble Volumes, realizing all initial conditions)

40801101f07ba7.jpg

Fig. 6

Superstring Universe

(Clip 03)

2. வேறுபட்ட பௌதிக நிலைத்துவம் கொண்ட பிரபஞ்சங்கள் (Universes with Different Physical Constants)

வகுப்பு : 2 (ஆன்ரி லிண்டேயின் குமிழ் நியதி) (Andrei Linde's Bubble Theory)

கொந்தளிக்கும் அகிலவெளி வீக்கத்தில் வெப்ப அரங்கங்கள் பரிமாணவியல், நுண்துகள் இருப்புகளுடன் வேறுபட்ட, வளப்பூட்டும் பௌதிக நிலைப்பாடுகள் அடைவது.

(Level : 2 In Chaotic Inflation other Thermalized Regions may have different Effective Physical Constants Dimensionality & Particle Content. Also it includes Wheeler's Oscillating Universe Theory)

3. பல்வேறு பிரபஞ்சங்கள் (Multiverses)

வகுப்பு : 3

நுண்துகள் யந்திரவியலை விளக்கும் போது சமத் தோற்றம் கொண்ட ஆனால் மாறுப்பட்ட தன்மையுள்ள பல்வேறு பிரபஞ்சங்களைப் பற்றிக் கூறுகிறது. 2007 செப்டம்பரில் டேவிட் டாய்ட்ஸ்ட் (David Deutsch) பல்வேறு உலகங்களைப் பற்றி விளக்கமும் நிரூபணமும் அளித்தார்

(Level : III An Interpretation of Quantum Mechanics that proposes of Multiple Universes which are identical but exist in possibly different States)

4. முடிவான முழுத்தோற்றப் பிரபஞ்சங்கள் (Ensemble Theory of Tegmark - Ultimate Ensemble)

வகுப்பு : 4 மற்ற கணித அரங்குகள் வெவ்வேறு அடிப்படைப் பௌதிகச் சமன்பாடுகளை உண்டாக்குகின்றன.

(Level : IV Other Mathematical Structures give different fundamental Equations of Physics)

எண்ணற்ற பிரபஞ்சங்களின் குமிழ்க் கோட்பாடு (Bubble Theory of Infinite Universes)

40801101g09ei0.jpg

Fig. 7

Level IV Universes

(Clip 04)

வகுப்பு -2 இல் வரும் அகிலவெளி வீக்கத்தில் தோன்றும் பொருத்தமான குமிழ்ப் பிரபஞ்சங்களைப் பற்றி ஆன்ரி லிண்டே எடுத்து விளக்கினார். விஞ்ஞானிகள் பலர் ஒப்புக்கொண்ட கோட்பாடி இது. இந்த கோட்பாடு கூறுவது என்ன ? நுண்துகள் திரட்சி நுரையிலிருந்து (Quantum Foam) ஒரு "தாய்ப் பிரபஞ்சத்திலிருந்து" (Parent Universe) மற்ற பிரபஞ்சங்கள் உதித்தன என்பதே !

"இணையான உலகங்கள்" என்னும் நூலை எழுதிய ஜப்பானிய அகிலவியல் மேதை மிச்சியோ காக்கு (Parallel Worlds By : Michio Kaku) தான் 2004 இல் வெளியிட்ட கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்:

நான் எழுதிய "இணையான உலகங்கள்" நூலில் காலவெளி அமைப்புகளை விளக்குவதற்குப் பதிலாக கடந்த பல ஆண்டுகளில் வளர்ந்த அகிலவியல் உளவுப் புரட்சிகளைக் குறிப்பாகக் காட்டுகிறேன். முதல் பாகத்தில் பிரபஞ்சத்தைப் பற்றியும், முற்போக்கான அகில வீக்கம் பற்றியும் கூறி முடிவில் பெருவெடிப்புடன் முடிகிறது. இரண்டாம் பாகத்தில் பல்லரங்கப் பிரபஞ்சங்கள் பற்றி எழுந்த கோட்பாடுகளை விளக்கி பரிமாண எண்ணிக்கை விரிவானது பற்றியும், உன்னத இழை நியதி பற்றியும் கூறுகிறேன். மூன்றாவது பாகத்தில் எப்படிக் கோடான கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பிரபஞ்சம் குளிர்மயமாகி முடிவடையும் என்பதை விளக்கம் செய்கிறேன்.

http://www.thinnai.com/

  • கருத்துக்கள உறவுகள்

தகவலைப் பகிர்ந்து கொண்டத்துக்கு நன்றிகள் இறைவன்.

அதென்ன கனடா இஞ்சினியர் மாரெல்லாம். P.Eng என்று ஒன்றும் போடினம்.. அப்படி என்றால் என்ன அர்த்தம்..??! ஏன் அதைப் போடினம்.. அதைப் போட என்ன செய்தவை (படிப்பில)...??! :lol:

அதென்ன கனடா இஞ்சினியர் மாரெல்லாம். P.Eng என்று ஒன்றும் போடினம்.. அப்படி என்றால் என்ன அர்த்தம்..??! ஏன் அதைப் போடினம்.. அதைப் போட என்ன செய்தவை (படிப்பில)...??! :lol:

Professional Engineer என்று நினைக்கின்றேன்....

  • கருத்துக்கள உறவுகள்

Professional Engineer என்று நினைக்கின்றேன்....

நன்றி கவரிமான்.

இந்த குறியீட்டைப் பெற என்ன செய்கிறார்கள். பொறியியல் இளமானிப் பட்டத்துக்குப் பின்னர் மேற்படிப்பின் வாயிலாக இது பெறப்படுகிறதா..??! அல்லது இளமானிப் பட்டம் பெற்ற பின் Professional body ஒன்றில் பதிவு செய்வதால் இவ்வாறிட முடிகிறதா..??!

உதாரணத்துக்கு இலங்கையில் பொறியியல் இளமானிப் பட்டம் எடுப்பவர்களின் ஆங்கிலப் பிற்சேர்க்கை இவ்வாறு அமையும்.. BSc (Eng). இவர்கள் IESL என்ற Engineering Professional body இல் தம்மைப் பதிவு செய்த பின்னர் தான் தரமான பொறியலாளன் என்ற நிலையை அடைவர். அங்கு அவர்களின் பதிவுநிலை அடிப்படையில் MIE, FIE போன்ற ஆங்கிலப் பிற்சேர்க்கைகளைச் சேர்க்க அனுமதிக்கப்படுவர். அதற்கு பெறுமதியும் உண்டு..!

http://www.iesl.lk/index.php?option=com_co...3&Itemid=28

சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேட்கிறேன். அண்மையில் எனது நண்பன் ஒருவன் சொன்னான் தான் கனடாவில் Professional Engineer ஆக இருக்கிறன் என்று. ஆனால் அவன் ஊரில் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் படிக்கவில்லை. வேறோர்துறையில் தான் பயின்றான். அவனிட்ட கேட்டால்.. உனக்கு எதுக்கு உந்த விபரங்கள்.. என்று கடிப்பான். கணிதத்துறையில் பயிலாதவர்களும் இப்படி ஆக முடியும் என்றால் எப்படி என்று தெரிஞ்சவை சொல்லுங்கோ..??! எல்லாம் படிச்சுப் பார்க்கனும் என்ற ஒரு ஆசையிலதான் கேட்கிறன்..! :D:lol:

Edited by nedukkalapoovan

இந்துக்கள் கட்டிய அடுக்குமாடி விமானம்

- மயூரன் P.Eng

புஸ்பக விமானத்தின் ஓடுபாதை

- மயூரன் P.Eng

:lol:

Professional Engineer is the term for registered or licensed engineers. They are permitted to offer their professional services directly to the public. The license symbolizes that the engineer has completed certain training and has demonstrated a specific degree of competency in a field of engineering.

What is the process for becoming a P.Eng?

  • Graduation from an accredited engineering curriculum
  • Successful completion of the Fundamentals of Engineering exam (FE)
  • Four years of engineering experience
  • Successful completion of the Principles and Practice of Engineering exam (PPE)

http://www.aiche.org/CareersEducation/Care.../Licensure.aspx

சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேட்கிறேன். அண்மையில் எனது நண்பன் ஒருவன் சொன்னான் தான் கனடாவில் Professional Engineer ஆக இருக்கிறன் என்று. ஆனால் அவன் ஊரில் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் படிக்கவில்லை. வேறோர்துறையில் தான் பயின்றான். அவனிட்ட கேட்டால்.. உனக்கு எதுக்கு உந்த விபரங்கள்.. என்று கடிப்பான். கணிதத்துறையில் பயிலாதவர்களும் இப்படி ஆக முடியும் என்றால் எப்படி என்று தெரிஞ்சவை சொல்லுங்கோ..??! எல்லாம் படிச்சுப் பார்க்கனும் என்ற ஒரு ஆசையிலதான் கேட்கிறன்..! :D:lol:

உங்கள் நண்பன் Economic engineering or Marketing engineering செய்து முடித்தபின், PE செய்து இருந்தால் அவர் கணிதப்பிரிவில் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை தானே..... இதர்க்கு வர்த்தக துறை படித்திருந்தால் போதும் என்று நினைக்கின்றேன்.

இந்துக்கள் கட்டிய அடுக்குமாடி விமானம்

- மயூரன் P.Eng

புஸ்பக விமானத்தின் ஓடுபாதை

- மயூரன் P.Eng

:D

:(:(

ம்.. Parallel Universe என்பதை ஒன்றுடன் ஒன்று பக்கம் பக்கமாக வரைவதை என்றுதான் விடப் போகிறார்களோ தெரியவில்லை.

உண்மையில், முப்பரிமாணத்தை மட்டுமே காணப் பழகியுள்ள எமது கண்களுக்கு நாற்பரிமாண உருவம் ஒன்று எவ்வாறு தெரியும்? அல்லது இதே கேள்வியை இன்னொரு விதமாக கேட்பதானால், நாம் நாற்பரிமாண உலகம் ஒன்றை பார்த்தால் அதில் இருக்கும் பொருட்களையோ அல்லது அமைப்புக்களையோ முற்றுமுழுதாக பார்க்க முடியுமா? அங்கு நமக்கு தென்படுவன என்ன?

:(:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல இணைப்புகள் எல்லோராலும் வரவேற்கப்படவேண்டியது.

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

news.2008.854.jpg

அகிலம் (universe) எல்லையற்றது,பிரமாண்டமானது என்ற கருதுகோள்கள் பல காலமாக அறிவியல் உலகில் இருந்து வரும் ஒரு அம்சம். ஆனால் அண்மைய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட விண்ணியல் அவதானிப்புக்களின் பிரகாரம் அகிலம் என்பது எல்லையுடையது ஒப்பீட்டளவில் சிறியது ஒரு காற்பந்து வடிவிலோ அல்லது ஒரு டோனட் (doughnut) வடிவிலோ இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் தற்போது கருதுகின்றனர். இந்தப் புதிய கருதுகோள் 2003 இல் இருந்து பெரிதும் பிரபல்யமடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அகிலத்தின் மீது செய்யப்பட்ட அவதானிப்பின் படி அங்கு எதிர்பாராத வகையில் ஒத்த தன்மைகள் மீளப்படுவதாக பெரு வெடிப்புக்குப் பின்னர் காழற்பட்டதாக கருதப்படும் விண்ணில் உள்ள நுண்ணலைகளின் தன்மைகளை ஆராய்ந்த வேளை தெரிய வந்துள்ளதாம்.

source: http://kuruvikal.blogspot.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிகள் ஆரம்பித்து வைத்த இந்த பகுதியை முகம்கோணாமல் முன்னெடுத்து செல்லும் நெடுக்காலபோவானுக்கு என் வாழ்த்துக்கள் :huh:

  • கருத்துக்கள உறவுகள்

குருவிகள் ஆரம்பித்து வைத்த இந்த பகுதியை முகம்கோணாமல் முன்னெடுத்து செல்லும் நெடுக்காலபோவானுக்கு என் வாழ்த்துக்கள் :huh:

நானும் அவரின் வலைப்பூவில் உதவிப்பதவிராக இருக்கிறேன்..! :(

  • கருத்துக்கள உறவுகள்

விண்வெளி அதிசயங்களை பற்றி அறிவதற்கு நல்ல ஒரு பகுதி. இன்று தான் என் கண்ணில் பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

_44680846_landing_1_sites466.gif

Phoenix lander செவ்வாயில் தரையிறங்க தீர்மானிக்கப்பட்டுள்ள பகுதியும் இதற்கு முன்னர் செவ்வாய்க்கான கலங்கள் செவ்வாயில் தரையிறங்கிய இடங்களும் படத்தில் காட்டப்பட்டுள்ளன.

அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் Phoenix lander எனும் புதிய தன்னியக்க கலம் செவ்வாயில் இன்னும் சில தினங்களில் (25 or 26-05-2008) தரையிறங்க உள்ளது.

கடந்த ஆகஸ்ட் திங்களில் அமெரிக்க புளோரிடாவில் இருந்து டெல்ரா II உந்துவாகனம் மூலம் செவ்வாய் நோக்கி ஏவப்பட்ட மேற்படி தன்னியக்க கலம், பூமியில் இருந்து சுமார் 423 மில்லியன் மைல்கள் தனது பயணத்தை மேற்கொண்டு செவ்வாயில் தரையிறங்க உள்ளது.

_44680850_phoenix_lander466.gif

Phoenix lander உம் அதன் 7 பிரதான விஞ்ஞான உபகரணப் பகுதிகளும்.

இக்கலம் செவ்வாயில் உயிரினங்கள் மற்றும் நீர் (அல்லது பனிக்கட்டி) இருக்கிறதா அல்லது இருந்ததா என்பதற்கான ஆதாரங்களைத் தேடும் நடவடிக்கையில் இறங்கும் என்று இதன் செயல்நோக்கைத் தீர்மானித்துள்ள விஞ்ஞானிகள் கூறியுள்ளதுடன் அதற்கேற்ப உபகரண வசதிகளை உள்ளடக்கிய வகையில் இக்கலம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். மாதிரிகளை சேகரிக்க என்று கட்டளைக்கு அமைய தன்னியக்க பொறியில் இயங்கும் கையும் இந்தக் கலத்துக்கு உண்டு.

செவ்வாயில் நீர் அல்லது பனிக்கட்டிப் படிவுகள் இருக்கலாம் அல்லது இருந்திருக்கலாம் என்று கருதும் பகுதியில் Phoenix lander தரையிறங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

source: http://kuruvikal.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் Pகொஎனிx லன்டெர் எனும் புதிய தன்னியக்க கலம் செவ்வாயில் இன்னும் சில தினங்களில் (25 ஒர் 26-05௨008) தரையிறங்க உள்ளது.

கடந்த ஆகஸ்ட் திங்களில் அமெரிக்க புளோரிடாவில் இருந்து டெல்ரா ஈஈ உந்துவாகனம் மூலம் செவ்வாய் நோக்கி ஏவப்பட்ட மேற்படி தன்னியக்க கலம், பூமியில் இருந்து சுமார் 423 மில்லியன் மைல்கள் தனது பயணத்தை மேற்கொண்டு செவ்வாயில் தரையிறங்க உள்ளது.

423 மில்லியன் மைல்கள் பயணம் செய்த போனிக்ஸ் லான்டர் இன்றோ அல்லது நாளையோ செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்க வாழ்த்துகின்றேன்.

தகவலுக்கு நன்றி நெடுக்ஸ்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.