Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலங்கள் வடிவமைப்பதில் நவீன தொழில் நுட்பங்கள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலங்கள் வடிவமைப்பதில் நவீன தொழில் நுட்பங்கள்..!

தற்காலத்தில் பாலங்களைக் கட்டுமானம் செய்வதற்குப் பலவகையான மேம்பட்ட முறைமைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பினால் சிலந்தி வலை போன்ற மிகவும் குழப்பகரமானதும், செலவு அதிகமானதும், கட்டுவதற்கு அதிக நாட்கள் பிடிக்கின்றதும், அழகியல் குன்றியதுமான பாலங்களைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். உதாரணத்துக்கு கீழே ஒன்று..

16-hwy99bridge.jpg

தற்போது காலமாற்றத்திற்கு ஏற்ப இத்துறையில் பலவகைப்பட்ட முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றுள் நான் அறிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். :lol: பண்ணைப் பாலத்தை சரி செய்வதற்கு ஒருநாள் உபயோகப்படும்தானே..! :lol:

1) படிப்படியாகத் தள்ளும் முறை (incremental Launching)

நீர்நிலைகளையோ தெருக்களையோ கடப்பதற்கான பாலங்கள் அமைக்கும்போது அவற்றைக் கட்டுவதற்குத் தேவைப்படும் உபகரணங்களும், பொருட்களுமே எவ்வகையில் பாலம் அமைக்கப்படும் என்பதை முடிவு செய்யும். அவ்வகையில், இந்த படிப்படியாகத் தள்ளும் முறை கட்டுமான வசதிகள் குறைந்த குறிப்பாக, பாரம் தூக்கிகள், மிதவைப் பாரம் தூக்கிகள் (Barge mounted Cranes) இல்லாத இடங்களில் பயன்படுத்தப்படும்.

ஒரு கரையில் பாலங்களைப் பகுதிகளாகக் கட்டி நீர்நிலைகளின் மேலாகத் தள்ளி நிலைநிறுத்துவதே இந்தத் தொழில்நுட்பம் ஆகும். இதற்கு மிகவும் அனுபவம் வாய்ந்த கட்டுமான நிறுவனங்களின் உதவி தேவைப்படும். இந்தத் தொழில்நுட்பத்தை விளக்கும் ஒரு காணொளி இதோ.. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்படும் பாலங்களுள் ஒன்று..! :lol:

பாலம் முழுவதும் முன்னோக்கி நகர்த்தப்படுவதை விளக்குகிறார் ஊழியர்.

  • கருத்துக்கள உறவுகள்

இசை, ஆழமான கடலுக்குள், எப்படி கொங்றீட் தூண்களை கட்டுகின்றார்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசை, ஆழமான கடலுக்குள், எப்படி கொங்றீட் தூண்களை கட்டுகின்றார்கள்?

அதிலும் பலவிதமான உத்திகள் உள்ளன. ஆழம் அதிகமற்ற நீர்ப்பரப்புக்களில் காற்றழுத்தப்பட்ட அறை (pneumatic caisson) என்கிற முறையைப் பயன்படுத்தலாம். இதன்படி காற்றை நீரினுள் உள்ளமர்த்தி நீரில்லாமல் செய்துகொள்வார்கள். கீழே உள்ள படத்தைப் பாருங்கள்..!

350px-Caisson_Schematic.svg.png

பின்னர் தூண்களுக்கான கொன்கிரீட்டை அடியில் செலுத்தி கட்டுமானத்தை மேற்கொள்வார்கள். அதிக அழுத்தத்தில் உள்ள காற்றுப்பகுதியில் வேலைசெய்வதால் தொழிலாளர்களுக்கு சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகள் எழும் வாய்ப்பு அதிகம்.

ஆழமான நீர்ப்பரப்புக்களுக்கு உருளை வடிவமான இரும்புக் கவசங்களை (Steel casing) உள்ளனுப்பி, அதனுள் நீரில்லாமல் செய்துகொண்டு, பின்னர் இரும்புக் கம்பிகளையும் கொன்கிரீட்டையும் கொட்டி கட்டுமானத்தை மேற்கொள்ளலாம். இவை நீரின் மேற்பரப்புவரை வரும்.

2203052345_5130e25238.jpg

ஆறுகளுக்குக் குறுக்காக பாலங்கள் அமைக்கும்போது, முடிந்தால் நீரை முழுமையாக வேறு வழியாகவோ அல்லது குறிப்பிட்ட தூண்கள் உள்ள இடங்களில் மட்டுமாவது வராதபடிக்கு திசை திருப்பி விடுவார்கள். இதன்படி கட்டுமானங்களை முடித்துக்கொண்டு பிறகு நீரைத் திறந்துவிடுவார்கள்.

ups_f4.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 2: பகுதிகளாகக் கட்டுமானம் செய்யும் முறை (segmental Launching)

மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில், கொன்கிரீட்டை முன்கூட்டியே கட்டுமானம் செய்துகொள்ளக்கூடிய வசதிகள் உள்ள இடங்களில் இம்முறையைப் பயன்படுத்தலாம். இதன்படி, பாலத்தின் பாகங்களை கொன்கிரீட் மூலம் வடிவமைத்துக்கொண்டு, பின்னர் பாலத்தின்மீது நிலை நிறுத்திவிட வேணும். கீழுள்ள காணொளியில் இரு தூண்களுக்கிடையே ஒரு துண்டாகப் பொருத்துகிறார்கள். இது பெரும்பாலும் பிரபலமற்றது. இரு தூண்களுக்கிடையே சிறுசிறு துண்டுகளாக லெகோ மாதிரி இணைக்கும் முறையே நானறிந்த வகையில் பிரபலமானது. எது எப்படியிருந்தாலும், எந்தமுறையில் செய்யவேண்டும் என்பதை எங்கே பாலத்தைக் கட்டப்போகிறோம் என்பதே தீர்மானிக்கும். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறு துண்டுகளாக வடிவமைத்து Balanced Cantilever முறையில் கட்டப்படும் பாலம்..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு காணொளி..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றிகள் இசை...

தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு டன்! அராலியில் புதுப் பாலம் கட்டும்போது தினமும் அவ் வழியால் 784 ல் போய் வரும்போது பார்த்திருக்கிறேன் , சதுரமாக பலகைகளை குத்தி நிறுத்தி அதற்குள் இருந்த நீரை யந்திரத்தால் வெளியேற்றிவிட்டு விசேசமான கொங்கிரீட் கலைவைகள் கொட்டி எழுப்பினார்கள்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பாலத்தின் மேலால் போகும் போது எப்படி கட்டியிருப்பார்கள் என்று நினைத்துப்பார்ப்பதுண்டு.

http://video.google.com/videoplay?docid=379019092644463620

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான ஒரு பதிவுக்கு நன்றி இசை

புலம்பெயர்ந்த நம் இளையோர்கள் இப்படியான நவீன தொழில் நுட்பத் துறைகளில் முன்னிலைக்கு வர வேண்டும். ஒரு காலத்தில் எம் இனத்திற்கு உதவியாக இருக்கும்

வத்தியார்

*********

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் விசுகு அண்ணை, சுவி மற்றும் நுணா.. :)

வித்தியாசமான ஒரு பதிவுக்கு நன்றி இசை

புலம்பெயர்ந்த நம் இளையோர்கள் இப்படியான நவீன தொழில் நுட்பத் துறைகளில் முன்னிலைக்கு வர வேண்டும். ஒரு காலத்தில் எம் இனத்திற்கு உதவியாக இருக்கும்

வத்தியார்

*********

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் வாத்தியார்..! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3) கம்பிகளால் நிலைநிறுத்திய பாலம் (Cable Stayed Bridge)

5898448-md.jpg

வளர்ச்சியடைந்த நாடுகளில் (கனடாவைத் தவிர :) ) இவ்வகையான பாலங்களைக் கண்டிருப்போம். தற்போது மிகவும் பிரபலமாக உள்ள தொழில்நுட்பமுறை இதுவாகும்.

கொன்கிறீட்டில் அதிகமான தூண்களைக் கட்டுவதை விடுத்து இரும்புக் கம்பிகளின் துணைகொண்டு பாரத்தை மையத்தூணை நோக்கிச் செலுத்துவது இந்த முறையாகும். பல கம்பிகள் குழாய் ஒன்றுக்குள் அடக்கி வைக்கப்படும். ஒரு கம்பி கிட்டத்தட்ட 20 தொன்களுக்கு மேலான எடையைத் தாங்கும் வல்லமை கொண்டது. ஒரு குழாய்க்குள் சில வேளைகளில் 90 வரையான கம்பிகள் இருக்கும். இவ்வாறு பல குழாய்கள் ஒரு பாலத்தில் இருக்கும். வெளியே தெரிவது குழாய்கள் மட்டுமே..

இப்போது ஒரு காணொளி.. :)

Cable Stayed bridge

தேம்ஸ் நதியின் மேலால் கட்டப்பட்டுள்ள Dartford Bridge ஐ இந்த தொழில்நுட்பத்திலேயே 1990 இல் கட்டினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

84 ம் ஆண்டு என்பதற்குப் பதில் 784 என்று எழுதி விட்டீர்களோ

சுவி :)

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

பஸ் இலக்கம் 784 யாழ்ப்பாணம் , கல்லுண்டாய் ஊடாக காரைநகர் வாத்தியார். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென்னங்குத்தி பனங்குத்தியிலை பாலம் கட்டி வாழ்ந்த எங்களுக்கு??????

நவீனமாய் நாலு நல்லவிசயம் செய்ய வல்லவர்களும் வலுவுமிருந்தும் எமக்கு நாடொன்றில்லையே :)

  • கருத்துக்கள உறவுகள்

JaffnIslets_17_12_06_01.jpg

தோழர் இசைகலைஞ்சன் தனித்தனியா இருக்கும் தீவுகளுக்கெல்லாம் ஈழம் அமையும் போது ஒரு முடிவு கட்டவேண்டும் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் புரட்சியின் ஊரிலிருந்து எனது ஊருக்கு பாலம் போடுங்கள்

அதுதான் பக்கத்திலிலுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்திராத விடயம் அறியத்தந்த மைக்கு நன்றி

இந்தப் பாலத்தில் ஒருநாள் காரில் ஓடிப்பார்க்க வேண்டும் !

பிரான்சில் இருப்பவர்கள் எப்படி இருக்கும் என்று சொல்லவும்.

உலகத்தின் உயரமான பாலமாம்.

scary_bridge.jpg

millau_viaduc.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் ஈசன்..! நான் முன்னர் வேலை பார்த்த நிறுவனம்தான் இந்தப் பாலத்தின் தாங்கு கம்பிகளை நிறுவித் தந்தது..! :wub:

உலகின் அதி நீளமான பாலம்(?) கனடாவில் உள்ளது, "கண்பெடறேஷன்" Confederation.

இதன் நீளம் 12.9 கிலோ மீடர்கள்.

http://www.confederationbridge.com/en/index.php

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் புரட்சியின் ஊரிலிருந்து எனது ஊருக்கு பாலம் போடுங்கள்

அதுதான் பக்கத்திலிலுள்ளது

58228550.FortdeGingee3.jpg

gingee-fort-picture-01.jpg

அந்தா மலையில் இருந்தே போட்டுவிடலாம் தோழர் :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

4) தொங்குபாலம் (Suspension Bridge)

028%20Suspension%20bridge.jpg

இந்தப்பாலத்தைப் பற்றி அதிகம் அலசத் தேவையில்லை. :rolleyes: உங்கள் எல்லோருக்கும் நன்கு அறிமுகமானதுதான். கடக்கும் தூரம் அதிகமாகும்போது இந்த தொங்குபாலமே கைகொடுக்கும். ஒரு கி.மீ. தூரத்தை இடையில் தூண்கள் இல்லாமல் தொங்குபாலத்தைக்கொண்டு வடிவமைக்கமுடியும்.

அமெரிக்காவில் முன்பு கட்டப்பட்ட ரக்கோமா பாலம் இவ்வகையில் கட்டப்பட்டதே..! அது பின்னர் காற்றில் ஆடி இடிந்து விழுந்ததை அறிந்திருப்பீர்கள். காணொளி கீழே..

காற்றின் அதிர்வும் பாலத்தின் இயற்கை அதிர்வெண்ணும் சமப்படும்போது கட்டுப்பாட்டை மீறிய ஊசலாட்டம் (Resonance) ஏற்படுகிறது. இந்தப் பாலத்தின் வீழ்ச்சியிலிருந்து கற்றுக்கொள்ளப்பட்ட இந்தப் பாடத்தை வைத்தே நவீனமயப்பட்ட பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.