Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிர்வாணமாக ஓடிவந்தவர்கள் ஓரினச்சேர்க்கை பற்றி பேசுகின்றார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமயத்தை பழிப்பதில் உள்ள சந்தோசத்தை பார்க்க பெருமையாக இருக்கிறது , இது எப்படி என்றால் தமிழனாக இருந்து கொண்டு தமிழனை இழிவு படுத்துவது போல இருக்கிறது அத்தோடு இவற்றையும் ஏற்று கொள்வீர்கள்தானே.

ஐயா

இது ஒரு மோகம்

தன் குடியை பழித்து எழுதுவது என்பது புடம்போடுவதாம்

அதாவது மல்லாக்காகக்கிடந்து கொண்டு துப்பிவிட்டு சிரித்துக்கொண்டு எழும்பி சேட்டு கொலரைத்தூக்கிவிடுவது..

இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்.அறிவாற்றல்பற்றியும் விஞ்ஞானம் பற்றியும்........... பற்றியும் காது செவிடாகும்வரை கத்தும் இவர்கள் ஆணுக்கும் ஆணுக்கும் பிள்ளை பிறக்குமா என்று ஆராய்ச்சி செய்யமாட்டார்கள். உலக நாடுகளில் தன் இனச்சேர்க்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாதாக எழுதும் இவர்கள் அவற்றை அந்த நாட்டு மக்களோ அரசுகளோ மனதார ஏற்கவில்லை என்பது பற்றியும் இதே நிலையை தங்கள் வாரிசுகள் எடுத்தால் ஒத்துக்கொள்வார்களா என்பது பற்றியும் சிந்திப்பதில்லை. அப்படி இயற்கைக்கு மாறான தொடர்புகளை விரும்புபவர்களை மாற்ற அவர்களது அரசும் மக்களும் எடுக்கும் முயற்சிகளையும் செலவுகளையும் பார்க்கமாட்டார்கள். தேடமாட்டார்கள்

தனிமனித விருப்பங்கள் அல்லது சுதந்திரங்கள் என்ற பித்தலாட்டங்களின் வேகம் அதிகரித்து தற்போது துப்பாக்கி எடுத்து பிள்ளைகளைச்சுடுதல் என்றநிலைக்கு வந்துள்ளது. இதையும் சில வருடங்களின் பின் நாம் அனுமதிப்போம். ஏனெனில் அது அவருக்கு சுகம் தருமென்றால்.......???

Edited by விசுகு

  • Replies 133
  • Views 21.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அதைவிட்டு எதற்கெடுத்தாலும் சிங்கள ஊடுருவல், ரோவின் சதி என்று இந்த 30 வருடமாக சிந்தித்த மாதிரி சிந்திக்காமல் சுயமாக சிந்தியுங்கள்.

இப்படி பேசுவது கருத்துச்சுதந்திரம் என்று கூறுகின்றார்கள்.

  • தொடங்கியவர்

முதலில் கனடாவில் அரசியலில் மதம் கலக்கப்படுவது இல்லை. இரண்டாவதாக நாம் எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என்பதும் கனேடிய நன்றி, விசுவாசம்

கனேடிய அரசியலில் ஒருவரின் Gender Identity கலக்கப்படுவது இல்லை, பாலியல் துவேசமும் கலக்கப்படுவதில்லை, குறிப்பிட்ட விளம்பரம் பாலியல் துவேசத்தின் அடிப்படையில் அமைந்தது. இது உங்களுக்கு புரியவில்லை.

தமிழர்களில் சைவர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், மத நம்பிக்கை இல்லாதவர்கள் என இன்னும் பலர் உள்ளனர்.

சைவ சமய விளக்கம் தரப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்கள் எல்லாருமே சைவர்கள் அல்லவே :lol:

இது நிர்வாணமாக ஓடிவந்த மணியண்ணைக்கு புரியவில்லையே.

  • தொடங்கியவர்

ஓரினச் சேர்க்கை, சமயம் மற்றும் கலாச்சாரம்

அரசியல் கட்டுரை ஒன்றை எழுதுகின்ற திட்டத்தில் இருந்தேன். ஆனால் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட ஒரு விளம்பரம் என்னை இதை எழுத வைத்து விட்டது.

அண்மையில் அங்கே நடந்த நகராட்சித் தேர்தலை ஒட்டி ஒரு அருவருக்கத்தக்க விளம்பரத்தை அந்த வானொலி ஒலிபரப்பியது. ஒரு வேட்பாளரை ஆதரிக்கும் தமிழர்கள் சிலர் கட்டணம் செலுத்தி அந்த விளம்பரத்தை வானொலியில் ஒலிபரப்பச் செய்தார்கள்.

பொறுப்போடு நடந்த கொள்ள வேண்டிய அந்த தமிழ் வானொலி பொறுப்பற்றத்தனமாகவும் அறிவுகெட்டத்தனமாகவும் நடந்து அந்த விளம்பரத்தை ஒலிபரப்பியது.

இருவர் பேசுவது மாதிரி உருவாக்கப்பட்டிருந்த விளம்பரம் இதுதான். ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கேட்கிறார், “மேயர் எலக்ஸனில் உங்களுடைய ஓட்டு யாருக்கு?”. அதற்கு மற்றவர் சொல்கிற பதில் இதுதான், “என்ன கேள்வி, நான் தமிழனடா, எங்களுக்கு ஒரு சமயம் கலாச்சாரம் இருக்கிறது, ரோப் பேட்டை பாருங்கள், அவருடைய மனைவி ஒரு பெண்…” இப்படிப் போகிறது அவருடைய பதில். ரோப் பேட் என்பவருக்குத்தான் தன்னுடைய வாக்கு என்று விளம்பரம் முடிகிறது.

அதாவது அவர் ஒரு தமிழராம். அவரிடம் சமயம் கலாச்சாரம் எல்லாம் இருக்கிறதாம். அதனால் ஒரு ஆணுடன் வாழ்கின்ற ஜோர்ஜ் ஸ்மிர்தமன்னுக்கு வாக்கைப் போடாமல் ஒரு பெண்ணுடன் வாழ்கின்ற ரோப் பேட்டுக்கு வாக்கு போடப் போகிறாராம்.

இப்படி ஒரு அருவருப்பானதும் முட்டாள்தனமானதுமான விளம்பரத்தை இந்த வானொலி ஒலிபரப்பியது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வெட்கித் தலை குனிய வேண்டிய ஒரு செயல் இது.

இது விளம்பரதாரரும் வானொலியும் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று சொல்லி யாரும் தப்பிக் கொள்ள முடியாது. இந்த விளம்பரம் புலம்பெயர் தமிழர்களைப் பற்றி சில செய்திகளை சொல்கிறது.

  • மேயர் தேர்தலில் வேட்பாளர் தன்பால் மீது நாட்டம் கொண்டவரா அல்லது எதிர்பால் மீது நாட்டம் கொண்டவாரா என்பதில் தமிழர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்

  • அதை வைத்து வாக்கை போடுகின்ற அளவிற்கு தமிழர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள்

  • ஓரினச் சேர்க்கையாளர்களை கிண்டல் செய்கின்ற விளம்பரங்களை வெளியிடுவதை அனுமதிக்கின்ற நிலையில் தமிழ் சமூகம் இருக்கிறது

இதில் மூன்றாவது விடயம் முக்கியமானது. தமிழர்களில் யாரோ சிலருக்கு அவர்களின் அறியாமை காரணமாக ஒரு வேட்பாளரின் ஓரினச்சேர்க்கையை வைத்;து கிண்டல் செய்கின்ற எண்ணம் வந்திருந்தால் அதை பெரிதுபடுத்தாது விடலாம். வேண்டும் என்றால் அவர்களுக்கு ஓரினச் சேர்க்கை பற்றி சொல்லி புரிய வைக்கலாம்.

ஆனால் அவர்கள் அதை வைத்து விளம்பரம் ஒன்றை உருவாக்குகிறார்கள். கனேடியத் தமிழர்களின் முக்கிய வானொலி ஒன்று அதை கட்டணம் பெற்றுக் கொண்டு ஒலிபரப்புச் செய்கிறது. அந்த விளம்பரம் ஓரினச்சேர்க்கையாளர்களை அவமதிக்கிறது என்பது கூட அந்த வானொலியில் உள்ளவர்களுக்குப் புரியவில்லை.

விளம்பரத்தை உருவாக்கியவர்களும் வானொலியைச் சேர்ந்தவர்களும்தான் அறிவு கெட்டு நடந்தார்கள் என்றால், வானொலியை கேட்பவர்களுக்கு அறிவு எங்கே போனது? கனேடியத் தமிழர்களிடம் இருந்து இந்த விளம்பரத்திற்கு குறிப்பிடும்படியான எதிர்ப்புகள் வரவில்லை.

காரணம் இந்த விளம்பரத்தின் உள்ளடக்கத்தை ஆதரிப்பவர்களைத்தான் தமிழ் சமூகம் பெரும்பான்மையாக கொண்டிருக்கிறது. அந்தத் துணிவிலேயே இப்படியான விளம்பரத்தை வெளியிட்டு விட்டு எதுவும் நடக்காதது போன்று அந்த வானொலியாலும் இருக்க முடிகிறது.

ஒரு அநீதியை எதிர்க்காதவர்களும் அதற்கு துணை போனவர்களாகவே கருதப்படுவார்கள் என்று சொல்வார்கள். இந்த விளம்பரம் ஒரு சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட ஒரு குற்றம். இதைக் கண்டித்தே ஆக வேண்டும்.

இங்கே ஓரினச் சேர்க்கை பற்றி சில விடயங்களை சொல்ல வேண்டும். ஓரினச்சேர்க்கை என்பது குற்றமோ, பாவமோ இல்லை. ஒரு காலத்தில் ஓரினச் சேர்க்கையை ஒரு உளவியல் பிரச்சனையாக வரையறுத்த அறிவியல் இன்றைக்கு அந்தக் கருத்தை மாற்றிக் கொண்டு விட்டது.

எப்படி பல ஆண்களுக்கு பெண்கள் மீது நாட்டமோ அதே போன்று சில ஆண்களுக்கு ஆண்கள் மீது நாட்டம். எப்படி பல பெண்களுக்கு ஆண்கள் மீது நாட்டமோ அதே போன்று சில பெண்களுக்கு பெண்கள் மீது நாட்டம். இதைப் போன்றே இரு பாலிலும் நாட்டம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். அவ்வளவுதான்.

வலது கையால் எழுதுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்காக இடது கையால் எழுதுபவர்கள் ஒன்றும் ஊனமானவர்களோ அசாதரணமானவர்களோ இல்லை. அதே போன்று எதிர்பாலின் மீது நாட்டம் கொள்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்காக தன்பால் மீது நாட்டம் உள்ளவர்களை அசாதரணமானவர்களாவும் குற்றவாளிகளாகவும் பார்ப்பது மிகத் தவறான ஒன்றாகும்.

எனக்கு ஒரு ஆணுடன் உறவு கொள்வது உவப்பற்றதாக இருக்கிறது. அவனுக்கு ஒரு பெண்ணுடன் உறவு கொள்வது உவப்பற்றதாக தெரிகிறது. ஆனால் என்னுடைய விருப்பத்தை அவன் புரிந்து கொள்வது போன்று, அவனுடைய விருப்பத்தை நானும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இதை வைத்து அவனை கிண்டல் செய்வதோ, அவனைப் போன்றவர்களை அவமதிப்பதோ மனிதகுலத்திற்கு விரோதமாக அமையும்.

இங்கே ஒரு சிறுபான்மைச் சமூகத்தை கிண்டல் செய்து அவமதிக்கின்ற விளம்பரத்தை வெளியிட்ட வானொலி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதே சரியானது. இந்த விளம்பரம் கனடாவின் பல ஊடகங்களில் கண்டனத்தை பெற்று வருகின்றது. இது ஏற்படுத்தப் போகின்ற தாக்கம் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு பாதகமானதாகவே இருக்கும்.

இந்த விளம்பரத்தில் இன்னும் ஒரு அறியாமையும் வெளிப்பட்டு நிற்கிறது. விளம்பரத்தில் ஒரு வசனம். “நான் தமிழனடா, எங்களுக்கு ஒரு சமயம், கலாச்சாரம் என்று இருக்கிறது”, இப்படி ஒருவர் சொல்கிறார்.

அடே, நீ தமிழனாகவே இருடா! அது பிரச்சனை இல்லை. ஆனால் உனக்கு எங்கேயடா கலாச்சாரம் இருக்கிறது? எங்கேயடா சமயம் இருக்கிறது? சொல்லடா மடையா!

இது என்னுடைய மிகப் பணிவான பண்பான கேள்விகள். பணிவும் பண்பும் இல்லையென்றால் இதிலே வேறு சொற்கள் இருந்திருக்கக் கூடும்.

வட இந்தியன் போன்று ஆடைகள் உடுத்தி, ஆரிய விழாக்களை கொண்டாடி, ஆரிய மொழியில் நிகழ்வுகளை செய்கின்ற உனக்கு எங்கேயடா கலாச்சாரம் இருக்கிறது? உடல் உறுப்புகள் எந்தப் பாகத்தில் சேர்கின்றன என்பதற்குள்ளே அடங்கிவிடக்கூடிய ஒன்றா உன்னுடைய கலாச்சாரம்?

அட, கலாச்சாரத்தை விடுங்கள். சமயத்தை கொண்டு வந்தான் பாருங்கள், புல்லரித்து விட்டது.

சமயம் என்ன சொல்கிறது?

தேர்தலிலே போட்டியிட்ட ரெப் பேட்டும் ஜோர்ஜ் ஸ்மிர்தனும் சாந்திருக்கின்ற கிறிஸ்தவ சமயமே ஓரினச் சேர்க்கையை தடை செய்கிறது. ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் உறவு கொள்வதை பாவம் என்று சொல்கிறது. அதற்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறது.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்ற கன்னியாஸ்திரிகள், பாதிரிமார்கள் இல்லையா என்று இங்கே முட்டாள்தனமாக கேட்க வேண்டாம். இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய மதம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் இங்கே சொல்லப்படுகின்ற விடயம்.

ஆனால் இந்த விளம்பரத்தை வெளியிட்டவர்கள் பின்பற்றுகின்ற சமயம் ஓரினச் சேர்க்கையை ஏற்றுக் கொள்கிறது என்பதுதான் இங்கே முரண்நகையாக நிற்கிறது.

இந்து மதத்தின் வேதங்கள் ஓரினச் சேர்க்கை பற்றி பேசுகின்றன. புராணங்கள் ஆண் கடவுள்கள் உறவு கொண்ட கதைகளை சொல்கின்றன. எங்குமே இந்த ஓரினச் சேர்க்கைய கண்டித்தோ, அதைப் பாவம் என்றோ சொல்லப்படவில்லை.

சிவனும் விஸ்ணுவும் உறவு கொண்டு ஐயப்பனைப் பெற்றார்களாம். நாரதரும் விஸ்ணுவும் உறவு கொண்டு அறுபது குழுந்தைகளை பெற்றெடுத்தார்களாம். எத்தனையோ கோயில்களில் உள்ள சிற்பங்கள் ஓரினச் சேர்க்கையை சொல்லி நிற்கின்றன.

சைவ சமயத்திலும் மாணிக்கவாசகர் தன்னை பெண்ணாகப் பாவித்து சிவனை தன்னுடைய காதலனாக கற்பனை செய்து பல பாடல்கள் எழுதியிருக்கிறார். இவற்றை சிற்றின்பமாக பார்க்காமல் பேரின்பமாக பார்க்கச் சொல்லி சிலர் சமாளித்துக் கொண்டு திரிகிறார்கள்.

ஆனால் ஓரினச் சேர்க்கை தமிழ் சமூகத்தில் புரிந்து கொள்ளப்படுகின்ற காலத்தில் மாணிக்கவாசகரின் பாடல்கள் புதிய அர்த்தங்கள் பெற்று நிற்பதை யாராலும் தடுக்க முடியாது போகும்.

இந்து சமயம் ஓரினச் சேர்க்கையை பாவமாகவோ குற்றமாகவோ பார்க்கவில்லை என்பதை புரிந்து கொள்ளாதவர்களே இந்த விளம்பரத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இப்படி எந்த வகையில் பார்த்தாலும் குறிப்பிட்ட விளம்பரம் முட்டாள்தனத்தின் உச்சக் கட்டமாகத்தான் நிற்கிறது. தமிழர்களை முட்டாள்களாகவும் மனிதகுல விரோதிகளாகவும் சித்தரிக்கின்ற விளம்பரங்களை வெளியிடாது கவனித்துக் கொள்கின்ற கடப்பாடு ஊடகங்களுக்கு உண்டு.

ஒரு இனத்தின் ஊடகங்களே அந்த இனத்தை பிரதிபலிக்கின்ற கண்ணாடிகள் என்பதை ஊடகங்கள் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.

பிரான்ஸில் யாரும் மதம் பற்றியோ ஓரினச் செயற்கை பற்றியோ தமது தனிப்பட்ட விமர்சனத்தை முன்வைக்கலாம். அது கருத்துச் சுதந்திரம்.

ஒருவரை நோக்கி அவரது மதத்தையோ பாலின உணர்வையோ சுட்டிக் காட்டி விமர்சிப்பது தண்டமைக்குரிய குற்றம்.

சபேசனுக்கு அரசியல் எழுதுவதற்கு கூட சிவனும்,விஸ்னுவும் தேவைப்பட்டு இருக்கிறார்கள் என நினைக்க ஆச்சரியமாய் இருக்கிறது...நெடுக்ஸ் மேலே எழுதிய மாதிரி ஆத்மிகவாதிகள் ஆன எங்களுக்கு தெரியாதது எல்லாம் நாத்வீகம் பேசும் சபேசன் தெரிந்து வைத்துக் கொண்டு எழுதுகிறார்...சிவனுக்கும்,விஸ்னுவுக்கும் தான் ஜயப்பன் பிறந்தவர் ஆனால் அந் நேரத்தில் விஸ்னு பெண் அவதாரத்தில் இருந்தார்...அப்படிப் பார்த்தால் ஒரு பெண்ணுக்கும்,ஆணுக்கும் பிறந்தவர் தான் ஜயப்பன்...அப்படி இல்லை சபேசனின் வாதப்படி விஸ்னு ஆண் தான் என்டால் உலகத்திற்கே ஓரினச் சேர்க்கையை அறிமுகப்படுத்தியது எங்கள் முன்னோர்கள் தான் என எடுத்துக் கொள்ளலாமா...இனி மேலாவது சபேசன் அவர்கள் எதற்கெடுத்தாலும் எங்கள் மதத்தினை தூற்றுவதை நிற்பாட்டட்டும்...அல்லது அதை,அதை அந்த இடங்களில் எழுதவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து சமயத்தை பழிப்பதில் உள்ள சந்தோசத்தை பார்க்க பெருமையாக இருக்கிறது , இது எப்படி என்றால் தமிழனாக இருந்து கொண்டு தமிழனை இழிவு படுத்துவது போல இருக்கிறது அத்தோடு இவற்றையும் ஏற்று கொள்வீர்கள்தானே.

ஆபிரகாமுக்கு பிள்ளை பேறு இல்லை என்று, பிள்ளை பேறுக்காக ஒரு அடிமைபெண்னை திருமணம் செய்து வைத்து, பிள்ளையும் பிறக்கிறது. அதன் பின்னர், ஆபிரகாமின் மனைவிக்கு பிள்ளை பிறக்கிறது, அதனால் அந்த அடிமை பெண்ணையும், அவருக்கு பிறந்த மகனான ஈசாக்கையும், பாலைவன பிரதேசத்துக்கு துரத்தி விடுகிறார்கள். அந்த அடிமை இனத்தில் இருந்து தோன்றியவர்கள்தான் முஸ்லீம்கள், அதாவது முறையற்ற பிறப்புகள்.

அடுத்தது ஜோசப்புக்கும் மேரிக்கும் திருமணம் முடிந்த பின்னும், அவர்களை இணை சேரக்கூட்டாது என கூறுகிறார்கள் இறை தூதர்கள், அதன்காரணமாக, கன்னியான மேரி கர்பம் தரிக்கிறாள், ஒரு ஆண் இல்லாமல் ஒரு பெண்ணால் கர்பம் தரிக்க முடியுமா? அப்படி என்றால் மேரியின் மேல் அன்று இரவு இறங்கியவர், ஆண்டவரா? பக்கத்து அறை சிறைக்காவலாலியா? இதை ஒரு ஜெகோவாவின் சாட்சியிடம் கேட்ட போது, அவர் சொன்னார், இது ஒரு கொம்பிளிகேட்டான விடயம்தான் என்று, ஒப்பு கொண்டார் இவற்றையும் உங்கள் தவலுடன் ஏற்றுகொள்ளுகள் ராசா :lol: :lol: :lol:

வேறு மதங்களில் கை அட சா, வாய் வைக்க முடியாது, காரணம் பயம், இந்து மதம் இளிச்சவாய் மதம் எப்படிவேண்டும் என்றாலும், பின்னிப்பெடல் எடுக்கலாம், யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள், தன் இனத்தை கேவலமாக பேசும் மனிதனை மற்றய இனத்தவன் கோபித்து கொள்வதில்லை, அதுவே இங்கே மதத்துக்கும் பொருந்துகிறது, மற்றய மதங்களை பற்றி பேச சொன்னால் உடனே சொல்லவார்கள், அவர்களது நம்பிக்கைகளை நாம் மதிக்க வேண்டும் என்று, இந்து மதம் என்றால் போட்டு மிதிக்கலாம், மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அதை பற்றி கதைக்க என்ன அருகதை இருக்கிறது, அவை அனைத்தும் புனைகதைகள் என்று நிராகரித்தவர்கள், அவ் மதத்தில் இப்படி நடந்து இருக்கிறது ஆகவே, இப்படி கதைக்கலாமா என நிறுவ முறபடுவதில் என்ன நேர்மை இருக்கிறது?

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரினச்சேர்க்கை ஊரில இல்லையோ?............அதற்கு ஒரு சொல்லும்(வார்த்தையும் ) இருக்கு அதை நாம் எழுதினால் பாவம்...........க................................... :lol:

பிறகு என்ன? அவன் மேடை போட்டு சொல்லுகிறான் ஆனால் நாங்கள் ஒழிச்சு செய்யிறோம் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரினச்சேர்க்கை ஊரில இல்லையோ?............அதற்கு ஒரு சொல்லும்(வார்த்தையும் ) இருக்கு அதை நாம் எழுதினால் பாவம்...........க................................... :lol:

பிறகு என்ன? அவன் மேடை போட்டு சொல்லுகிறான் ஆனால் நாங்கள் ஒழிச்சு செய்யிறோம் :lol:

இங்னே ஒரு அமைச்சர் பாரளுமண்றத்திலேமே நான் ஓர் இன சேர்கையாளன்தான் என்று பகிரங்கமாக் உரையாடுகிறார் , எமது பெரு நகரத்தில் வருடா வருடம், அதற்க்கு பெரு விழாவே எடுக்கிறார்கள், சம்மாசாரியை சம்சாரி என அழைகிறார்கள், ஓரின சேர்கையாளனை ஓரினசேர்கையாளன் என்று அழையாது எப்படி அழைப்பது, யாரொ ஒரு நாதாரி சொன்னதுக்காக ஒட்டு மொத்த தமிழினத்தையும் நிர்வானப்படுத்து பார்க்குது ஒருகூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

வேறு மதங்களில் கை அட சா, வாய் வைக்க முடியாது, காரணம் பயம், இந்து மதம் இளிச்சவாய் மதம் எப்படிவேண்டும் என்றாலும், பின்னிப்பெடல் எடுக்கலாம், யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள், தன் இனத்தை கேவலமாக பேசும் மனிதனை மற்றய இனத்தவன் கோபித்து கொள்வதில்லை, அதுவே இங்கே மதத்துக்கும் பொருந்துகிறது, மற்றய மதங்களை பற்றி பேச சொன்னால் உடனே சொல்லவார்கள், அவர்களது நம்பிக்கைகளை நாம் மதிக்க வேண்டும் என்று, இந்து மதம் என்றால் போட்டு மிதிக்கலாம், மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அதை பற்றி கதைக்க என்ன அருகதை இருக்கிறது, அவை அனைத்தும் புனைகதைகள் என்று நிராகரித்தவர்கள், அவ் மதத்தில் இப்படி நடந்து இருக்கிறது ஆகவே, இப்படி கதைக்கலாமா என நிறுவ முறபடுவதில் என்ன நேர்மை இருக்கிறது?

அவ்வாறான ஓரினச் செயற்கையாளரான சிவன் மீது பாடப்பட்ட தேவாரங்களைப் பாடித் தான் ஒரிரு வருடங்களுக்கு முன்னர் சபேசன் திருமணம் செய்தார் என்பதை நினைவில் கொள்ளவும்.

  • தொடங்கியவர்

சபேசனுக்கு அரசியல் எழுதுவதற்கு கூட சிவனும்,விஸ்னுவும் தேவைப்பட்டு இருக்கிறார்கள் என நினைக்க ஆச்சரியமாய் இருக்கிறது...நெடுக்ஸ் மேலே எழுதிய மாதிரி ஆத்மிகவாதிகள் ஆன எங்களுக்கு தெரியாதது எல்லாம் நாத்வீகம் பேசும் சபேசன் தெரிந்து வைத்துக் கொண்டு எழுதுகிறார்...

விளம்பரத்தில் அரசியல் பேசுவதற்கு பாலியல் துவேசம் தேவைப்பட்டுள்ளது. அந்த பாலியல் துவேசத்தை சபேசன் மேற்கண்ட உதாரணங்கள் மூலம் அணுகி இருப்பதில் தவறு தெரியவில்லை. நாத்திகர் ஒருவர் சமயம் சம்பந்தமாக விரிவாக பல விடயங்களை அறிந்துள்ளார்; பகுப்பாராய்வு மேற்கொள்ளக்கூடிய ஒருவர் இவற்றை அறிந்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லையே. இங்கு மதம் தூற்றப்படவில்லை. தம்மை மதம் சார்ந்தவர்களாக இனம்காட்டும் பாலியல் துவேசம் கொண்டவர்களுக்கு சபேசன் மூலம் நல்ல விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சபேசனுக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நபர் 1: மணியண்ணை மேயர் எலக்சனில யாருக்கு உங்கட ஓட்டுக்கள்?

நபர் 2: கக்க.. (சிரிக்கிறாராம்) என்ன கேள்வி? நான் தமிழனடா! எங்களுக்கு ஒரு சமயம் கலாச்சாரம் எண்டு இருக்கு. ரொப் போட்டை எடுங்கோ, அவற்றை மனுசி ஒரு பொம்பிளை. அதுமட்டுமல்ல வீடுவாங்கேக்க மாற்றுவரி, மற்றவரிகளையும் குறைப்பாராம்.

நபர் 1: அப்ப இமிகிரேசன்?

நபர் 2: கக்க.. (திரும்பவும் சிரிக்கிறாராம்) அது பெடரல் கவர்மண்ட் விசயம். வெள்ளையனிண்ட வோட்டை எடுக்கவாக்கும்.

நபர் 1: நானும் ரொப் போட்டுக்குத்தான் போடப்போறன்.

நான் இந்த வானொலிக்காக வக்காலத்து வாங்க வரவில்லை. ஆனால் இந்த விளம்பரத்தில் ஜோர்ஜ் ஸ்மிதர்மனைப் பற்றியும், ஓரினச் சேர்க்கையைப் பற்றியும் ஒன்றும் சொல்லப்படவில்லையே? :lol:

அவற்றை மனிசி பொம்பிளை. - இந்த வாக்கியம் சரிதானே..! அவற்றை மனிசி பொம்பிளை; அவவின்ர மனுசன் ஆம்பிளை. இதிலென்ன குற்றம் கண்டீர்? :lol:

இந்த விளம்பரங்களின் பின்னால் யார்?

எக்ஸ்ரா என்ற இணையத்தள ஊடகம் க. த. வா. (CTBC) தொடர்பு கொண்டபோது அவர்கள்:

அதிசய குடும்ப கோயிலின் (Miracle Family Temple http://www.miraclefamily.org/ ) மூத்த பாதிரியான லோகநாதன் அவர்களே இதற்கு பொறுப்பு என்றார்கள். இந்த மத சார் அமைப்பு ஒரு நீண்ட கால வாடிக்கையாளர்கள் என்பதால் இந்த விளம்பரத்தை உன்னிப்பாக கவனிக்காததற்கு ஒரு காரணம் என்றார்கள்.

எக்ஸ்ரா என்ற இணையத்தள ஊடகம் மீண்டும் இந்த பாதிரியாரை தொடர்பு கொண்டபோது தமக்கும் இதற்கும் தொடர்பில்லை என சொல்லி அழைப்பையும் துண்டித்து விட்டார். ஆனால் வெற்றி பெற்ற நகர பிதாவுக்கு டிவிட்டர் (Twitter) மூலம் வாழ்த்து செய்தி சொல்லி உள்ளார், " கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை பலன் அளித்துள்ளது".

Wednesday, October 27, 2010

Who is behind the anti-gay Tamil radio ad? (UPDATE)

(Oct 27): In a phone interview with xtra.ca on Tuesday, CTBC program manager Thumi Siva countered claims made by Miracle Family Temple’s lead pastor.

Siva said Pastor David Loganathan is "100 percent responsible for the ad.... He's personally responsible for it,” he said. “We don't have anything against George Smitherman or Rob Ford, as we stay neutral." Since the Miracle Family Temple is a long-time customer of the station, Siva said that station staff didn't review the advertisement before airing it.

In a follow-up call to Pastor Loganathan, he said, "the Church has nothing to do with it. I have nothing to say to you," before abruptly hanging up.

Immediately following Ford's win on Monday Pastor Loganathan expressed his support for the new mayor via Twitter: "God Bless Rob Ford new Toronto mayor. He is an answer to our prayers. Many Christians have prayed and voted for this landslide victory".

http://www.xtra.ca/blog/national/post/2010/10/24/Toronto-mayoral-race-who-is-behind-Tamil-radio-ads.aspx

பின் குறிப்பு : இதில் தமிழர்களின் ஒரு மதமான சைவ மதத்தை பற்றி எதுவும் சொல்லப்படவில்லை

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

பின் குறிப்பு : இதில் தமிழர்களின் ஒரு மதமான சைவ மதத்தை பற்றி எதுவும் சொல்லப்படவில்லை

சைவ மதம் வேண்டாத பெண்டாட்டி மாதிரி.... :lol:

Edited by விசுகு

சைவ மதம் வேண்டாத பெண்டாட்டி மாதிரி.... :lol:

எல்லா மதங்களிலும் போதிக்கப்படுவது ஒன்றே. மதங்களில் பிழை இல்லை. அவற்றை தமக்கு ஏற்றவாறு அவற்றை மொழிபெயர்த்து தமது குறுகிய அரசியல் இலாபத்தை அடைய முற்படுவதே பல பிரச்சனைகளுக்கு காரணம்.

  • தொடங்கியவர்

இந்த விளம்பரங்களின் பின்னால் யார்? எக்ஸ்ரா என்ற இணையத்தள ஊடகம் க. த. வா. (CTBC) தொடர்பு கொண்டபோது அவர்கள்: அதிசய குடும்ப கோயிலின் (Miracle Family Temple http://www.miraclefamily.org/ ) மூத்த பாதிரியான லோகநாதன் அவர்களே இதற்கு பொறுப்பு என்றார்கள். இந்த மத சார் அமைப்பு ஒரு நீண்ட கால வாடிக்கையாளர்கள் என்பதால் இந்த விளம்பரத்தை உன்னிப்பாக கவனிக்காததற்கு ஒரு காரணம் என்றார்கள். எக்ஸ்ரா என்ற இணையத்தள ஊடகம் மீண்டும் இந்த பாதிரியாரை தொடர்பு கொண்டபோது தமக்கும் இதற்கும் தொடர்பில்லை என சொல்லி அழைப்பையும் துண்டித்து விட்டார். ஆனால் வெற்றி பெற்ற நகர பிதாவுக்கு டிவிட்டர் (Twitter) மூலம் வாழ்த்து செய்தி சொல்லி உள்ளார், " கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை பலன் அளித்துள்ளது". பின் குறிப்பு : இதில் தமிழர்களின் ஒரு மதமான சைவ மதத்தை பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.

குறிப்பிட்ட விளம்பரத்தில் உரையாடலை வானொலியின் கலைஞர்கள்தானே நிகழ்த்துகின்றார்கள்? விளம்பரத்திற்கான உரையாடலை எழுதியவர் யார்? நிச்சயம் ஓர் விளம்பரத்தை பரிசீலனை செய்யாமல் ஒலிபரப்பு செய்திருக்கமாட்டார்கள். தமக்கு தெரியாமல் தவறுதலாக இந்த விளம்பரம் இடம்பெற்றுவிட்டது என வானொலி கூறி தப்பிக்கமுடியாது. குறிப்பிட்ட விளம்பரம் சம்பந்தமாக எதிர்ப்புக்கள் வருவதனால் தற்போது உன்னிப்பாக கவனிக்கவில்லை மண்ணாங்கட்டி என்று கூறுகின்றார்கள். நகரபிதாவிற்கு வாழ்த்து கூறியதால் பாதிரியாரே விளம்பரத்தின் காரணகர்த்தா எனும் வகையினாலான மறைமுகத் திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. தவிர, இங்கு விளம்பரத்தின் Target Audience யார் என்று பார்க்கும்போது.. "பின்குறிப்பு: : இதில் தமிழர்களின் ஒரு மதமான சைவ மதத்தை பற்றி எதுவும் சொல்லப்படவில்லை." என கூறுவது வேடிக்கையாக உள்ளது.

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மதங்களிலும் போதிக்கப்படுவது ஒன்றே. மதங்களில் பிழை இல்லை. அவற்றை தமக்கு ஏற்றவாறு அவற்றை மொழிபெயர்த்து தமது குறுகிய அரசியல் இலாபத்தை அடைய முற்படுவதே பல பிரச்சனைகளுக்கு காரணம்.

அப்படியானால்

தமிழர்களைத்தாக்க

சபேசன் மதத்தையும்

கரும்பு ஒரு வானொலி விளம்பரத்தையும் எடுத்துள்ளனர்

அப்படித்தானே...

Edited by விசுகு

  • தொடங்கியவர்

அப்படியானால் தமிழர்களைத்தாக்க சபேசன் மதத்தையும் கரும்பு ஒரு வானொலி விளம்பரத்தையும் எடுத்துள்ளனர் அப்படித்தானே...

புரியவில்லை. வானொலி விளம்பரம் மூலம் கரும்பு எப்படி தமிழர்களை தாக்குகின்றார்? மதம் மூலம் சபேசன் எப்படி தமிழர்களை தாக்குகின்றார்?

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு சார்

இது ரொம்ப ஓவர்

நிர்வாணமாக ஓடிவந்தவர்கள் ஓரினச்சேர்க்கை பற்றி பேசுகின்றார்கள் 1235 → கரும்பு

94 Replies

2,830 Views

Today, 07:20 PM

Edited by விசுகு

"பின்குறிப்பு: : இதில் தமிழர்களின் ஒரு மதமான சைவ மதத்தை பற்றி எதுவும் சொல்லப்படவில்லை." என கூறுவது வேடிக்கையாக உள்ளது.

நிச்சயமாக :lol:

இந்த தலைப்பையும் அதனுள் உள்ள செய்தியையும் இதில் கூடுதலாக எழுதப்பட்ட/அலசப்பட்ட விடயமான "மதமும்" வேடிக்கையாகத்தான் உள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

stop_war.gif

சண்டை போடதீங்கப்பா...

முடியல......

யாராவது கத்தரிகோல் படத்தை இங்கு ஒட்டினால் புண்ணியம் கிடைக்கும்

Edited by நிழலி

முடியல......

யாராவது கத்தரிகோல் படத்தை இங்கு ஒட்டினால் புண்ணியம் கிடைக்கும்

*...* அதை கத்தரித்தால் எல்லாம், சரியாகிவிடும்

சிவனும் தேவையில்லை, மாணிக்கவாசகரும் தேவையில்லை ... ஏன் அல்லா/யீஸஸையும் கூப்பிட தேவையில்லை! <_<

  • கருத்துக்கள உறவுகள்

முடியல......

யாராவது கத்தரிகோல் படத்தை இங்கு ஒட்டினால் புண்ணியம் கிடைக்கும்

This post has been edited by நிழலி: Today, 08:08 PM

நீங்கள் எழுதிதற்கே கத்திரிக்கோல் பாவித்துள்ளீர்கள் நிழலி

இது தகுமா...?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.