Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய காதலுக்கு மரியாதை...

Featured Replies

ஒரு பாடசாலை கலைவிழாவில் நான் அவர்களை சந்தித்தேன். அவர்கள் வேறு பாடசாலையை பிரதிநிதித்துவபடுத்துபவர்களாக இருந்த போதும் குறும்புகளால் நண்பிகளானோம்.

மலரும் நிவேதாவும் அதற்குப்பிறகு எனது இணைய்பிரியா தோழிகள். ஆண்டுதோறும் நடைபெறும் கலைவிழாக்களில் ஆண்களுக்கு சாவாலாக விளங்கிய பெண் சிங்கங்கள். (கொஞ்சம் ஓவராக புளுகிறேனோ .சரி சரி நான் கதைக்கு வாறேன்)

மலர் அவர்கள் வீட்டில் மூத்த பெண்பிள்ளை, மலரின் தாய் இறந்த பிறகு தகப்பனின் இரண்டாம் கல்யாணத்தின் மூலம் மலருக்கு ஒரு சித்தியும் தங்கையும் கிடைத்தார்கள். அதுவரை செல்லப்பிள்ளையாக இருந்த மலரின் வாழ்வில் வசந்தம் போய் புயல் சித்தி வடிவில் வந்தது. வீட்டில் ஒரு செல்லாக்காசானாள். இருந்தும் வீட்டு துன்பங்களை வெளிக்காட்டாமல் எல்லோருடனும் கலகலப்பாக பழகும் சுபாவம் கொண்டவள்.

அவளின் அந்த சுபாவம் பிடித்துப்போய் சந்தோஷ் அவளை காதலிக்கத்தொடங்கினான். சந்தோஷ் பெயருக்குகேற்ற சந்தோசமானவன். மருத்துவக்கல்லூரியில் கடைசிவருடம் முடித்துவிட்டு பயிலுனராக இருந்தான். மலரிடம் வந்து நேரடியாகவே தன் காதலை வெளிப்படுத்தினான். முதலில் மறுத்த மலர் ஒரு மாதத்தில் மனம் மாறி அவனை ஏற்றுக்கொண்டாள்.

என்னெடா யாருடையோ கதையைச்சொல்லுறேன் என் கதை எங்கே வருகிறது என்று தானே பார்க்கிறீங்க ..வரும் வரும் கொஞ்சம் பொறுங்க...

அவர்களின் காதல் வீட்டில் தெரியவரும்போது. பூகம்பம் வெடித்தது இந்தோனேசியாவில் இல்லைங்க..மலர் வீட்டில்.(.பின்னர் வெட்டியாக என்ன ரெக்டர் அளவு , சுனாமி வரவில்லையா என்று எல்லாம் கேட்டு தொலைக்காதீங்க..ஒரு பேச்சுக்கு தான் பூகம்பம் என்று சொன்னேன். ) முதலில் மலரின் சித்தி எதிர்ப்பு தெரிவித்து, அவுஸ்ரலியா காட்டுதீ போல மலரின் அப்பாவுக்கும் பரவியது. (எனது பொது அறிவை நினைத்து நீங்கள் மனசுக்குள்ளே பெருமூச்சு விடுவது எனக்கும் கேட்குது). சினிமா வில்லன் ராதாரவியானார் மலரின் அப்பா.

மலரை வீட்டில் மறைக்கத்தெரியாமல் எங்கள் வீட்டில் கொண்டு வந்து விட்டார்.

சுஜி இங்கே பாருங்க .என் மலரையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அவளை வாடாமல் பார்க்க வேண்டும் என்று விடும்போது சொன்னார் மலரின் அப்பா.

மனசுக்குள்ளே அதுக்கு நாங்கள் என்ன தண்ணியா ஊத்தி கொண்டிருக்க முடியும் என்று நினைத்து கொண்டு, சரி அப்பா நாங்கள் கவனமாக பார்த்துக்கொள்ளுகிறோம்" என்று உறுதிமொழி வழங்கினேன். (ஒளிக்கதெரியாமல் உடையார் வீட்டில் ஒளிச்சானாம் என்று ஒரு பழமொழி தமிழில் உண்டு என்று மலரின் அப்பா மறந்து விட்டார்.)

நானும் நிவேதாவும் மலரும் ஒன்றாக கூடி குசுசுத்ததை, திடீர் என்று வந்த ராதாரவி மன்னிக்கவும் மலரின் அப்பா பார்த்துவிடவே என் மீது இருந்த நம்பிக்கையும் பஞ்சாக பறந்தது. ( ஏன் ஓடி போய் பிடிக்கவில்லை என்று கேட்காதீகள். அடிச்ச காத்துக்கு நிறைய தூரம் போய்விட்டது..தூ இதெல்லாம் ஒரு கேள்வியா ??)

அடுத்ததாக என்ன ..(எனக்கே மறந்து போச்சு)

எத்தனை சினிமா பார்த்திருப்பீர்கள்.? நீங்களே சொல்லுங்க பார்போம்..

இது கூட தெரியாதா..

மலர் ஒரு கடற்கரை குப்பத்துக்கு இடம்மாற்றப்பட்டாள். நாங்கள் பின் தொடந்து போய் பார்த்தும். கடைசியில் அவளை ஒளிச்ச இடத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கட வீட்டுக்கு எப்படி திரும்பி வாறது என்ற வழியையும் தொலைச்சுவிட்டோம் என்றால் கற்பனை பண்ணிப்பாருங்கள் அந்த குப்பம் எப்படி இருக்கும் என்று. :lol:

இடைவேளை

முதன்முதலாக கதைக்கு இடைவேளை விட்டேன். பாருங்கோ இப்பவே தொலைபேசி அடிக்கிது. எடுத்து பேசிவிட்டு வந்து மிச்சம் சொச்சம் எழுதுகிறேன்.

என்ன இப்பவே உங்களுக்கு கண்ணை கட்டுமே.. போய் படுத்து எழும்பி வாங்கோ மிச்ச கதையை படிக்கலாம்..

கருத்தாளர்களே இது உங்களுக்கான சவால். . ]இது ஒரு நகைச்சுவை பகுதி என்பதை மனசிலே நிறுத்துங்கள். இடைவேளைக்கு பின்னர் இந்தக்கதை எப்படி அமையும் என்று உங்கள் பாணியில் எழுதுங்கள்...

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

samosa-recipe.jpg

ஆடியன்ஸ் எல்லாம் சமோசா தின்றுவிட்டு அப்படியே பேப்பரை கையில் துடைத்து கொண்டு வந்து உக்காருகின்றனர்...

இடைவேளைக்கு பிறகு கதையின் கதாநாயகன் உங்கள தேடி வருவார்... நீங்க அந்த சந்து பொந்தான குப்பத்தை நினைவில் நிறுத்த முடியாமல் தவிப்பீர்கள்.. ஆனா சில குறிப்புகளை மட்டும் வழங்குவீர்கள்

டிஸ்கி:

மொத்தமா முழு அட்ரசையும் குடுத்தா கதையில் கிரோவுக்கு முக்கியவத்துவம் குறைந்துவிடுமோன்ன்னோ :lol:

கிரோ அந்த அரைகுறை குறிப்புகளோடு தேடி அலைந்து சிறைவைக்கப்பட்டுள்ள இடத்தினை அடைந்துவிடுவார் ... அப்பதான் நாம கதைய இங்க கட் பண்ணோறொம்... அப்படியே நேராக ஆப்பிரிக்கவுக்கு(ஒரு சேன்சுக்கு) போறம்... அங்க ஒரு இனிமையான காதல் டூயட்டு...

சாம்பிள்...

http://www.youtube.com/watch?v=jDuoUS-xJ-Q

ஆண்: அள்ளவா அள்ளவா..

பெண்: ஒண்ண கிள்ளவா கிள்ளவா...

ஆண்: நீ தொட்டுக்கோ தொட்டுக்கோ என்ன தொட்டுக்கோ தொட்டுக்கோ

402.jpg

பெண்: ஊறுகா ஊறுகா நீ எம்.டி.ஆர் ஊறுகா...

இளமை கவிஞ்சர் வாலியின் பாடலுக்கு துள்ளலான யுவன் சங்கர் ராஜா இசை ...

அப்படியே ஆப்ரிக்காவை கட்பண்ணிட்டு நேரா மறுபடி குப்பத்துக்கு கேமராவை டார்ன் பண்றம்.. பாத்திங்கன்னா ... டூயட் சாங்கின் முடிவில் மறுபடி குப்பத்து வீட்டு கூரை குடிசையில் கண்ணா மூடி மெய்மறந்து இருப்பாங்கள்ளோ .. அந்த சீனில் காட்சி நிற்கும் போது பெண்ணின்ற அப்பா அவர்களை பார்த்து விடுவார்.. அப்புறம் தான் தீபாவளி... அடியாடகள் எல்லாம் போட்டு கிரோவினை போட்டு உதைப்பார்கள்... ஆனா கிரோயின் தந்தையாயிற்றே என்று கிரோவும் பேசாமல் கொடுக்கும் உதையை செக்குமாடு போல வாங்கி கொள்வார்..

bullock-cart-ride.jpg

அடித்து ஆஸ்பத்திரியில் போட்டவுடன்... நமக்காக செக்குமாடு கணக்கா அடிவாங்குறாரே என நம்ம கிரோயின் துடித்து போய்விடுவார்.. அவரின்ட தந்தையின் மீது அவருக்கு ஆட்டோ மெடிக்கா வெறுப்பு வந்துடுது கண்டியளோ.. இருந்தாலும் சூழ்நிலை கருதி அமைதியாக இருக்குறார்... இதற்கு இடையில் திருமணம் நிச்சயக்கபடுகிறது... நிச்சயக்கப்ட்ட செய்தி அறிந்தவுடன் கிரோ பொங்குகிறார்... அவரின்ட தோழியான உங்களுக்கெல்லாம் போன் போட்டு புலம்புகிறார்.. இதையறிந்த கிரோயின் தந்தை டெலிபோன் ஒயரை பிடுங்கிவிடுகிறார்... சோ உங்களுக்கன தொடர்பு துண்டிக்கபடுகிறது(இத்தோட நீங்க கடைசி சீன்ல தான் வரணும் :lol: )

பிறகு கல்யாண செய்தி அறிந்தவுடன் மாப்பிள்ளை அந்த மருத்துவமனை உடையிலேயே வீறு கொண்டு வருகிறார்... அவர் மோட்டர் சைக்கிளில் வரும் வேகத்தில் சூப்பரான கிளைமேக்ஸ் பாட்டு ஒண்ணு வைக்கிறோம்..

படையப்பா சிங்கம் ஒண்று புறப்பட்டதே மெட்டில் படிக்கவும்...

http://www.youtube.com/watch?v=G00r5xhNGXg

தூசி எல்லாம் பறக்கின்றதே...

நீ வரும் வேகத்தில்..

தூசி எல்லாம் பறக்கின்றதே...

உன் வேகத்தோடு போட்டி போட

எந்த தூசி இங்கு உண்டு..

(பேகரவுண்டு மியுசிக்: சம் சம் சனக்கு சனக்கு சம் சம் சனக்கு)

பாடலில் இடைக்கிடையில் நீங்க கிரோயினுக்கு எப்படியும் வந்துருவாரிடி என்று ஆறுதல் சொல்கிறீர்கள்... (இது ஒன்லி லிப் மூவ் மெண்டுத்தான்)

கிரோ வருவதை தெரிந்துகொண்ட கிரோயின் தந்தை அடியாட்களுக்கு தகவல் கொடுக்கிறார் கூடவே கல்யாண மண்டப கேட்டையும் பூட்ட நல்ல திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்ட உத்தரவு இடுகிறார்.. கிரோ வந்து மோட்டர் சைக்கிளில் வந்து கேட்டை முட்டியதும் அந்த இரண்டு பக்க கதவுகளில் ஒன்று நேராக மேலே பறக்கிறது... பார்த்தீர்கள் என்றால் மேலே அப்பத்தான் ஒரு பிளைட்டு மேலே பறக்க எழுந்திருக்கிறது ... விமானத்தில் இருப்ப்வர்கள் எல்லாம் எங்கே அது நம்மீது மோதிவிடுமோ என்று கத்து கிறார்கள்...

indian_airlines.jpg

கிரோ ஒரு பார்வை பார்த்தவுடனே அதற்கு புவி ஈர்ப்பு விசை அதிகமாக கீழ தொப்பென்று விழுகிறது... போக கேட்டு கதவுகளில் ஒன்று இண்ணும் டிராவலிங்கில் இருக்கு அது நெராக போய் தொப்பென்று கிரோயின் தந்தை முன் விழுகிறது... அதை பார்த்த வுடன் கிரோயின் முகத்தில் ஆயிரம் வாட்ஸு பல்ப் எரியுது...

zzlightbulb.jpg

கிரோயின் தந்தை அவன் வந்துடான்ட ... அடிங்க டா ப்டிங்கடா என கத்துகிறார்... அடிக்க ஓடி வந்தவர்கள் எல்லாம் அப்படியே கிரோ விட்ட குத்தில் ரிவர்சில் வந்து ராதாரவின் கால் அடியில் தொப்பு தொப் என விழுகிறார்கள்... (சண்டை பயிற்சி ஜாக்குவார் தங்கம்.... :lol: )அடிவிழும் சத்தத்தை கேட்ட மணமகன் ஓடிவருகிறார்.. அப்பதான் கதையோட டர்னிங்க் பாயிண்ட் வக்கிறோம்.. கல்யாண மாப்பிள்ளையான்வர் வாடா சந்தோஸ் எப்ப வந்த ...கொஞ்சம் லேட்டா வந்தா அவ்வள்வுதான் என சிரித்தபடி கூறுகிறார்(ஆனா மனதுக்குள் இவன் வராமலே இருந்திருக்கலாம் நல்ல பிகர் ஒண்ணு மிஸ்ஸாயிடுச்சே :lol: )... ராதவாரவி "மாப்பிளை என்ன சொல்றீங்க என வினவுகிறார்... மாப்பிளை அட சந்தோச எனக்கு முன்னமே தெரியுமுங்க இதெலாம் நாங்க செய்த செட்டபு என்கிறார்... அப்புறம் என்ன ஆளாளுக்கு வாய் வந்தபடி காதல் தத்துவாத்தை கொடுப்பட்ட 5 பிரேமுக்குள் அடக்குகின்றனர் அதில் தோழியானௌ உங்களுக்கு ஒரு பிரேம் தான் டைரக்டரால் அலாட் செய்யப்பட்டுள்ளது.

முடிவு என்ன ?(வெண்திரையில் காண்க)

http://www.thiraipaadal.com/tempdownloads/084097109105108/7779867369657666857783/53655265747585776582/Vaanathai%20Pola%20-%20Yengalveetil....mp3

டிஸ்கிக்கு டிஸ்கி:

திரைப்படம் விட்டு வெளியே வரும் ரசிகர்கள் .... இந்த மாதிரி கதை யாராலும் எடுக்கவே மிடியாது ரொம்ப வித்தியாசமான(!) கதை... அதைவிட தலீவரின் நடிப்பு ரொம்ப பிரமாதம்.. கட்டாயம் தலீவருக்கு ஹாஸ் கார் அவார்டோ அல்லது

2010-ford-fusion-front.jpg

போர்டு கார் அவார்டோ கிடைக்கும் என பேசி கொண்டே சென்றனர்... :D

இது தோழர் சுஜி அவர்கள் கேட்டமைக்காக நகைச்சுவையாக எழுதபட்டது... :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

மலர் ஒரு கடற்கரை குப்பத்துக்கு இடம்மாற்றப்பட்டாள். நாங்கள் பின் தொடந்து போய் பார்த்தும். கடைசியில் அவளை ஒளிச்ச இடத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கட வீட்டுக்கு எப்படி திரும்பி வாறது என்ற வழியையும் தொலைச்சுவிட்டோம் என்றால் கற்பனை பண்ணிப்பாருங்கள் அந்த குப்பம் எப்படி இருக்கும் என்று. :lol:

கருத்தாளர்களே இது உங்களுக்கான சவால். . ]இது ஒரு நகைச்சுவை பகுதி என்பதை மனசிலே நிறுத்துங்கள். இடைவேளைக்கு பின்னர் இந்தக்கதை எப்படி அமையும் என்று உங்கள் பாணியில் எழுதுங்கள்...

அப்போது நடந்தது என்ன என்றால்.. ஓர் பஞ்சு பறந்து வந்தது. ( அது தானுங்கோ முன்பு நீங்கள் பிடிக்கமுடியாமல் ஓடிப்போன பஞ்சு ) அந்தப்பஞ்சு உங்கள் மூக்கில் நுழைந்தது. அப்போது நீங்கள் தும்மினீர்கள். விட்டு விட்டு தும்மினீர்கள். தொடர்ச்சியாக தும்மினீர்கள். உங்கள் தும்மல் சத்தத்தினால் குழப்பம் அடைந்த குப்பத்து சனங்கள் உங்களை அடிப்பதற்காக ஆளாக்கு கட்டை பொல்லுடன் உங்களை நோக்கி சத்தமிட்டவாறு ஆவேசத்துடன் ஓடிவற... நீங்கள் கால்தெறிக்க ஓடி ஓர் குடிசையினுள் புகுந்து கொண்டீர்கள்.

என்ன ஆச்சரியம்.. அந்தக்குடிசையில் மலர்! :lol:

நீங்கள் "வாடி ரெண்டு பேரும் சேர்ந்து தப்பி ஓடலாம்" என்று மலரிடம் கூறியவாறு விரைவாக குடிசையை விட்டு வெளியேறுகின்றீர்கள். ஆனால்.. வீடு செல்வதற்கு வழிதான் தெரியவில்லை. அப்போது..

என்ன அதியசயம்...!

மீண்டும் அதே பஞ்சு..! காற்று தற்போது எதிர்ப்புறமாக அடித்ததனால் வேறு பக்கமாக அந்தப்பஞ்சு பறந்து சென்றது. ஏற்கனவே உங்கள் வீட்டில் இருந்து ஓடிய பஞ்சாகையினால் குறிப்பிட்ட பஞ்சுக்கு பின்னால் ஓடினால் மீண்டும் நீங்கள் வீட்டை அடையமுடியும் என்று உங்கள் மூளையில் மின்னலாக ஓர் பொறி தட்டுகின்றது... உடனடியாகவே மலரும் நீங்களுமாக பஞ்சுக்கு பின்னால் ஓடுகின்றீர்கள். வீட்டை அடைகின்றீர்கள். :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான்.. படத்துக்குப் பெயர் என்ன பஞ்சா? :lol:

நம்பிக்கைதானே பஞ்சாய் பறந்தது என்று சுஜி ஆரம்பத்தில் சொல்கிறா. எனவே படத்திற்கு நம்பிக்கை என்று பெயர் வைக்கலாம் டங்க்ஸ். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஏதோ ஆபத்து போல கிடக்கு

சுஜிக்கு

இடைவேளைக்கு பிறகு முன்னாலும் போக முடியல

பின்னாலும் போகமுடியல (அவருடைய காதலில்தான்)

அடுத்த கட்டத்துக்கு ஆலோசனை கேட்பது போலுள்ளது

பாவம் யாராவது உதவி செய்யுங்கோ

நான் இந்த விளையாட்டுக்கு வரல.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மலர் ஒரு கடற்கரை குப்பத்துக்கு இடம்மாற்றப்பட்டாள். நாங்கள் பின் தொடந்து போய் பார்த்தும். கடைசியில் அவளை ஒளிச்ச இடத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கட வீட்டுக்கு எப்படி திரும்பி வாறது என்ற வழியையும் தொலைச்சுவிட்டோம் என்றால் கற்பனை பண்ணிப்பாருங்கள் அந்த குப்பம் எப்படி இருக்கும் என்று.

அப்பொழுது சிலர் அக் குப்பம் வழியாக தோளில் வலைகளும் மற்றும் மீன் பிடிக்கும் உபகரணங்களுடனும் கடலுக்கு செல்ல அவ்வழியால் வருகின்றனர். ஒரு குடிசையில் விசும்பல் சத்தம் கேட்டு ஒருவன் கிடுகு ஓட்டையின் வழியாகப் பார்த்தான் உள்ளே ஒரு பெண் குத்துக்காலிட்டு (இருந்து அழ கதிரையோ, படுத்துஅழ கட்டிலோ இல்லை.) அழுதுகொண்டிருந்தாள். உடனே சிலர் அக் குடிசையின் கிடுகை விலக்கி உள்ளே புகுந்து அவளை தூக்கிக் கொண்டு கதவில்லாத முன் பக்கத்தால் ஓடி போட்டில் போட்டுக்கொண்டு... போட் இப்ப கடலில் போய்க் கொண்டிருக்கிறது. போட் திரும்பிவர பதினைந்து நாளாகும். ( மீண்டு ம் வருவாள்). :lol:

சுஜி, அதென்ன .... புதிய ... காதலுக்கு மரியாதை!! ... இடையில் இனி வரப்போகிற காதலா??????? ... புதிய ... இப்படிப்போனால் எப்படி ... மலருக்கு தூதாக நின்ற சுஜிக்கும், மலரின் சந்தோஷுக்கும் ... மலர்ந்து விட்டால் ... வித்தியாசமாக ... புதிதாக ... இருக்காதா????

... இப்படி எனக்கு தெரிந்த இருவர் இங்கு லண்டனில் எனக்கருகில் இருக்கிறார்கள், அப்பென் முன்பு ஒருவரை காதலித்தார், அதற்கு இப்ப கட்டியவர் தான் தூது நின்றாராம், இறுதியில் தூது காதலரை வென்று விட்டது!! ...

... சுஜி, இப்படி திருப்பமாக முடிக்கப் பாருங்கள் ... சுவாரஸ்யமாக இருக்கும்!

Edited by Nellaiyan

மலரின் இருப்பிடம் தெரியவில்லை. திரும்பி போகும் வழியும் புரியவில்லை. முடிவெடுத்தோம் மலரை எப்படியாவது கண்டுபிடிக்கவேண்டும். :rolleyes:

தூவி விட்டமாதிரி குடிசைகள். ஓடும் சாக்கடை. இடையில் நீந்தும் பண்ணிக்குட்டிகள். இடம் வலம் தெரியவில்லை. தலை சுற்றியது. நம்பிக்கைதானே வாழ்க்கை. என்ன செய்வது?

குப்பத்துக்கு அப்பால் களங்கரை விளக்கம் தெரிந்தது. திசையும் புரிந்தது. ஒரு சின்ன நம்பிக்கை கீற்று. மீண்டும் நடந்தோம். நிவேதிதாவால் முடியவில்லை. அவள் வேறு டயட் பண்ணி குப்பத்துக் கொசுவைப் போல இளைத்திருந்தாள்.

ஒரு சந்தில் நிறைய கூட்டம். அருகே சென்றோம்.

ஐயோ!........ பட்டைச் சரக்கு காய்ச்சிக் குடித்து கொண்டிருந்தார்கள். சில பெண்களும் இருந்தார்கள். ஆபத்துக்கு பாவமில்லை. மலர் இருக்குமிடத்தை தெரிந்து கொள்ள வேறு வழி? ஊறுகாயின் உதவியுடன் சில 'கல்புகள்' உள்ளேபோயிற்று. மலரின் இருப்பிடமும் தெரிந்தது. தள்ளாடி நடந்தோம்.

மலர் அங்கே படுக்கையில் கிடந்தாள். டெங்கு பீவராம். கொசுக்கள் அவளை சாரமாரியாக பதம் பார்த்திருந்தன. :D

உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. ஹாஸ்பிட்டலுக்கு தொலை பேசினோம். நம்பவே முடியவில்லை வந்தது

டாக்டர் சந்தோஷ்..................

சந்தோசிற்கோ பழைய நினைவுகள்.

http://www.youtube.com/watch?v=DK4foxsQrXM&feature=related

சிறு விளம்பர இடைவேளை

Edited by thappili

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த குப்பம் வேறு எங்கும் இல்லை அது நம்ம சுறா வாழும் குப்பம்..மலர் அந்த குப்பத்தை அடைந்து சில நிமிடங்களிலேயே சுறா மலர் வந்ததை அறிந்து கொள்ளுகிறார். பிறகு என்ன சுறா, மலருக்கு அறிவுரை சொல்லி, மலரின் அப்பாவுக்கும் பேச்சு கொடுத்து, மலரின் சித்திக்கும் நிறைய பேச்சும் அத்வ்வைசும் கொடுத்து..சந்தொசை கண்டுபிடித்து கைபிடித்து வைக்கிறார். ஆனால் இப்ப சுறா .................

சுஜி! புதுசு புதுசா... காதலுக்கு மரியாதை கொடுக்குறீங்கள்.

ம்ம்ம்...... என்ன விஷயம்????? :D

காதல்கதையை ஏன் பாதியில நிப்பாட்டிட்டீங்கள்? :lol:

கதையின்ட பின்பாதியினை எங்களை நம்பிக் குடுக்கிறீங்களே!?

யாழில உள்ளவங்கள் ஹீரோவை மாத்தி தங்களை ஹீரோவாப் போட்டிருவாங்கள்.... தெரியுமோ!???????? :D

எனக்கும் அந்த ஐடியா இருக்கு.... :) அதுக்குள்ள நீங்களே கதையை முடித்தால் நல்லா இருக்கும்! :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இதில் வந்து மிச்ச கதையை எழுத விருப்பம் தான் சுஜி ஆனால் என்ன யாழில் கதைகள் எழுதும் ஒரு சக உறவு ஒருவர் உனக்கு எழுத தெரியாது நீ எழுத வேண்டாம் என சொல்லி விட்டார்... சீ great insuilt ரதி அதற்கு பிறகும் எழுத எனக்கு மானம்,ரோசம் இல்லையா? அதனாலே நான் எழுத மாட்டேன்...அப்பாடா யாழ் கள் வாசகர்கள் தப்பித்தார்கள் :lol::):D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.