Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திசை மாறிய பறவைகள்

Featured Replies

கரும்பு, மற்றவனுடைய அனுபவத்தை அல்லது நாங்கள் விரும்பும் அனுபவத்தை எழுதும் படி யார் கேட்டது? சொந்த அனுபவத்தை எழுதும் போது மற்றவனுடைய அனுபவம் (அது ஊடகங்களில் வந்திருந்தாலும் சரி, சின்னக் குட்டியினது மாதிரி கதை வடிவில் வந்திருந்தாலும் சரி) "ஊதிப் பெருக்கி உடுக்கடிக்கப் பட்ட விடயம்" என்ற வியாக்கியானம் வேண்டாம் என்று தான் சொல்லப் படுகிறது. "எனக்கு இது நடக்கவில்லை" என்பதோடு நிறுத்திக் கொள்வது வேறு. மற்றவர்களுக்கும் எதுவும் நடக்கவில்லை, எல்லாம் ஊடகப் பரப்புரை என்ற தொனியில் எழுதுவது பாதிக்கப் பட்டவர்களை மேலும் புண்படுத்துவது மாதிரியல்லவா இருக்கிறது? அது தான் எழுதினேன்: எங்கள் வாசலில் நெருப்பு இல்லையென்றால் நாம் எல்லாம் ஓ.கே தான் எண்டு போட்டுப் போய்க் கொண்டே இருப்போம். பக்கத்து வீட்டில எரியுது எண்டாலும் நம்ப மாட்டம்!

இங்கு சின்னக்குட்டி அவர்கள் படைத்த ஆக்கத்தில் ஊதிப் பெருக்கி உடுக்கு அடிக்கப்படும் பகுதிகளை (?) நீங்கள் மேற்கோள் காட்டமுடியுமா? சின்னக்குட்டி அவர்களின் மேற்கண்ட ஆக்கத்தில் மற்றவர்களை புண்படுத்தும் பகுதிகள் எவை என்று சுட்டிக்காட்டுங்கள், தொடர்ந்து ஆராய்வோம். :D

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, நீங்கள் ஊதிப்பெருப்பித்து வாழ்க்கையை ஓட்டவில்லை, வால்பிடித்து வாழ்க்கையை ஓட்டுகிறீர்கள். வால்பிடிப்பவர்களிற்கு நடுவுநிலையாளர்களை கண்டால் வயிற்றில் புளியைக்கரைத்து ஊற்றுவதுபோல்த்தான் காணப்படும். :D

இவ்வளவு என்னைப்பற்றி தெரிந்த தங்களுக்கு நான் யாருக்கு வால் பிடிக்கின்றேன் என்றும் தெரிந்திருக்குமே.

அதையும் எழுதுங்கள். நானும் என்னைப்பற்றி தங்களின் ஆற்றலின் உதவியுடன்கண்டு கொள்ள ஆவலாக உள்ளேன் ஐயா.

கோடை விடுமுறைக்கு போன 80,000 பேரில் ஒரு 40.000 தான் இப்ப திரும்பியிருக்கு மற்றவர்களை பிடித்துவைத்திருக்கின்றார்கள்.அதிலும் 20.000 ஒரு தொகை பணம் கொடுத்துத்துதான் திரும்பவந்தவை.ஒரு பிரச்சனையில்லாமல் திரும்பிய 20,000 மும் கைகூலிகளாக செயல்படுபவர்களும் செயல்பட சம்மதித்துள்ளவர்களும்.இவர்களின் வலைபின்னல்களுக்குள் அகப்படவேண்டாமென புலம் பெயர் அப்பாவி பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றேன்.

சின்னக்குட்டியும் அவர்களில் ஒருவராக இருக்கலாம் கள நண்பர்களே ஜாக்கிரதை.

  • கருத்துக்கள உறவுகள்

.உடுக்கடித்து ஊதி பெருப்பித்து புலம் பெயர் ஊடகங்கள் சில உருவாடுவது மாதிரி இல்லாமால் இலங்கை எங்களை வரவேற்றது.http://sinnakuddy.blogspot.com/2010/11/blog-post.html

கரும்பு, நீங்கள் கனேடியராக இருக்கலாம், அதற்காக தமிழைச் சரியாக புரிந்து கொள்ளாத மாதிரி நடிப்பது சரியாகப் படவில்லை. சி.கு உடுக்கடித்து ஊதிப் பெருப்பிப்பதாக அல்ல நான் எழுதியது. தமிழ் பயணிகள் மீதான கெடுபிடியை புலம் பெயர் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டதை சி.கு அவர்கள் "உடுக்கடித்து ஊதிப் பெருப்பிக்கப் பட்ட விடயம்" என தன் கதையில் குறிப்பிட்டிருக்கிறார். இதை மேலே மேற்கோள் காட்டியிருக்கிறேன். இது உண்மையாகப் பாதிக்கப் பட்டவர்கள் பொய்யர்கள் அல்லது அவர்களது பயங்கள் துன்பங்கள் ஊதிப் பெருப்பிக்கப் பட்ட phobia எனக் காட்டும் கருத்தாக நான் பார்க்கிறேன். உங்களுக்கு அப்படித் தெரியவில்லையென்றால் அது உங்கள் பார்வை.

Edited by Justin

அண்மைக்காலத்தில் சிறீ லங்கா செல்வது ஆபத்தானது எனும் வகையில் புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் செய்திகள் வெளிவிட்டதாக நான் காணவில்லை. சிறீ லங்கா செல்வதை புறக்கணிக்குமாறு, அதிலும் குறிப்பாக வருவாயை ஈட்டிக்கொடுக்கும் வழிகளை தவிர்க்குமாறு கூறியே பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது போல் உள்ளது. ஆயினும்,

சிறிது காலத்திற்கு முன்னர் ( சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் ) சிறீ லங்கா செல்வது ஆபத்தானது எனும் வகையில் சில தமிழ் ஊடகங்களினால் செய்திகள் வெளிவிடப்பட்டன. சின்னக்குட்டி கதையில் ஊடகங்கள் பற்றி கூறியது அதன் தாக்கமாய் இருக்கலாம். அவர் அதை மிகைப்படுத்தலாக எண்ணக்கூடும்.

பலப்பல வருடங்களிற்கு நேரடியாக பார்வையிட முடியாத வகையில் உள்வாங்கும் செய்திகள் மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை உலகு நிஜத்தில் தரிசிக்கப்படும்போது அது பல்வேறு விதமான மாற்றங்களை கொண்டிருப்பது, அதிலும் குறிப்பாக பத்து, பதினைந்து வருடங்களின் பின்னர் ஊருக்கு செல்லும்போது கிடைக்கின்ற அனுபவங்கள், இலகுவாக உணர்ச்சிவசப்படுதல் கதாசிரியரை இவ்வாறு எழுதத்தூண்டலாம்.

உண்மையும் அதுதான் கரும்பு. முன்னர் கூட பிரச்சனை இல்லையென யார் சொன்னது நீங்கள் சொல்லும் அளவிற்கு இல்லையெனத்தானே போய் வந்தவர்கள் சொன்னார்கள்.இதில் முக்கிய விடயம் என்னவென்றால் எப்பவும் அதிவிசுவாசியாக இருப்பவர்கள்தான் உடனே பிளேட்டை மாத்துபவர்களாகவும் இருக்கின்றார்கள்(இவர்கள் காட்டும் அதிவிசுவாசம் என்பது தமது தேவைக்கேற்ற போடும் ஒரு வேசமே)

இலங்கைக்கு போகவே முடியாது என கத்திக்கொண்டிருந்த பலர் தான் இப்ப போட்டுவந்து "அந்தமாதிரி இருக்கு இது இவங்கட விசர்கதை என்கின்றார்கள்" விசயம் விளங்கினவனுக்கு தெரியும் நாட்டில் அப்பவும் பிரச்சனைதான் இப்பவும் பிரச்சனைதான் அளவுகள் கொஞ்சம் வேறுபட்டிருக்கின்றன.ஆனால் ஊதிப் பெருப்பிக்க ஒருகூட்டம் எப்போதும் தான் இருக்கும்.

இப்போது சீ.ரீ.ஆர் இல் இருக்கும் ஒரு அறிவிப்பாளர் இளையபாரதியுடன் இருக்கும் போது விசுவாசம் என்றால் அப்படி ஒரு விசுவாசம் பின் கலாதரனுடன் பிரிந்து வந்து கலாதரனுக்கு இணைபிரியா நண்பனாகவும் விசுவாசியாகவும் இருந்தார் இப்ப தனிதவில் வாசிக்கின்றார் கிட்டத்தட்ட தனக்கு பொறுப்பு கிடைகின்றதென்றவுடன்.

எதற்கும் சத்தியராஜின் "அமைதிப் படையை "ஒருக்கா பாருங்கோ

வேசங்களை களைத்துவிட்டு வெளிச்சத்திற்கு .வரப் பழகுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்குப் போனபோது ஏற்பட்ட தனிப்பட்ட உணர்வுகளை சின்னக்குட்டி தவிர்த்தமாதிரி உள்ளது.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகு, நீங்கள் ஊதிப்பெருப்பித்து வாழ்க்கையை ஓட்டவில்லை, வால்பிடித்து வாழ்க்கையை ஓட்டுகிறீர்கள். வால்பிடிப்பவர்களிற்கு நடுவுநிலையாளர்களை கண்டால் வயிற்றில் புளியைக்கரைத்து ஊற்றுவதுபோல்த்தான் காணப்படும். :lol:

நடுநிலை என்பது போலியான ஒன்று, தம்மைபாதுகாக்க போட்டு கொள்ளும் வேலி, உன்மையின் முன் நடுநிலை என்பது என்ன?

ரஜபக்சா இனவாதி ஆம் இல்லை இதுதான் பதில் இதில் எங்கு இருக்கிறது நடுநிலமை?

எனக்கு பசிக்கிறது, ஆம் இல்லை இதுதான் பதில் இதில் எங்கு இருக்கிறது நடுநிலமை? :):D:blink:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

நடுநிலை என்பது போலியான ஒன்று, தம்மைபாதுகாக்க போட்டு கொள்ளும் வேலி, உன்மையின் முன் நடுநிலை என்பது என்ன?

ரஜபக்சா இனவாதி ஆம் இல்லை இதுதான் பதில் இதில் எங்கு இருக்கிறது நடுநிலமை?

எனக்கு பசிக்கிறது, ஆம் இல்லை இதுதான் பதில் இதில் எங்கு இருக்கிறது நடுநிலமை? :lol::):D

ராஜபக்ச இனவாதி மாதிரி இருக்கிறார்; எனக்கு பசிக்கிற மாதிரி இருக்கு... இப்பிடிச் சொன்னால் அது நடுநிலைமை இல்லையா?? :blink::huh: :huh:

நடுநிலை என்பது போலியான ஒன்று, தம்மைபாதுகாக்க போட்டு கொள்ளும் வேலி, உண்மையின் முன் நடுநிலை என்பது என்ன?

ஆமாம்.. அதனால்தான் திருவள்ளுவர் கூட நடுவுநிலமைபற்றி தனது தமிழ்வேதத்தில் பேசியுள்ளார். :rolleyes::wub: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம்.. அதனால்தான் திருவள்ளுவர் கூட நடுவுநிலமைபற்றி தனது தமிழ்வேதத்தில் பேசியுள்ளார். :lol::):lol:

சி.கு சந்தோசப் பேருவைகியில உணர்ச்சி வசப்பட்ட மாதிரி தி.வ வும் உணர்ச்சி வசப்பட்டிருக்கலாம் இல்லையா? :lol:

உதே இப்ப உந்த வெளிநாட்டுக்கு ஓடி வந்தவைட பிழைப்பா போச்சு. இதுக்காகத்தான் அன்று ஓடி வந்தவை..! எப்படா ஊருக்கு விலாசம் காட்டப் போகலாம் என்று போறது.. போயிட்டு வந்து அங்க நொந்து போய் உள்ளதுகளை வைச்சு கதை வடிக்கிறது.

அப்ப நீங்கள் வெளிநாட்டுக்கு நடந்தே வந்தனீங்கள்?

Edited by கறுவல்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நீங்கள் வெளிநாட்டுக்கு நடந்தே வந்தனீங்கள்?

எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் கறுவல்..! அவர் விசா எடுத்து முறைப்படி வந்தவராக்கும்..! :D

எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் கறுவல்..! அவர் விசா எடுத்து முறைப்படி வந்தவராக்கும்..! :D

முறைப்படி விசா எடுத்த அண்ணன் நெடுக்காலே போவானுக்கு ஜே !

முறைப்படி விசா எடுத்த அண்ணன் நெடுக்காலே போவானுக்கு ஜே !

சி.கு சந்தோசப் பேருவைகியில உணர்ச்சி வசப்பட்ட மாதிரி தி.வ வும் உணர்ச்சி வசப்பட்டிருக்கலாம் இல்லையா? :D

ஆமாம்.. திருவள்ளுவரும் ஒரு துரோகியாக அல்லது எட்டப்பனாக அல்லது ஒரு மாற்றுக்கருத்தாளராக அமையலாம். ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்று வேறு கூறுகின்றார்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

நடுநிலை என்பது போலியான ஒன்று, தம்மைபாதுகாக்க போட்டு கொள்ளும் வேலி, உன்மையின் முன் நடுநிலை என்பது என்ன?

ரஜபக்சா இனவாதி ஆம் இல்லை இதுதான் பதில் இதில் எங்கு இருக்கிறது நடுநிலமை?

எனக்கு பசிக்கிறது, ஆம் இல்லை இதுதான் பதில் இதில் எங்கு இருக்கிறது நடுநிலமை? :D :D :lol:

மகிந்த இனவாதி ஆனாலும் சில நேரங்களில் உலகிற்கு பயந்து ஏதோ சில நல்லது செய்கிறான்

எனக்குப் பசிக்கிறது ஆனாலும் சாப்பிடவில்லை....இப்படியும் எழுதலாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் என் இனத்தில் கேள்விப்பட்ட நடுநிலை

ராஜபக்ச மட்டுமல்ல எந்த சிங்களவனும் நல்லவனல்ல

புலிகள் தான் அவர்களை நல்லவனாக விடுகிறார்களில்லை

புலிகள் தான் அவர்களை ஒன்றையும் தரவிடுகிறார்கள் இல்லை

புலிகள் இல்லாத தற்போதைய நிலையில்நடுநிலை

அவனுக்கு காயம் ஆறவில்லை எல்லாம் இவர்களால் வந்தது

என்றாவது ஒருநாள் தருவான்தானே அமைதி காப்போம்

அதற்கிடையில்

கொஞ்ச தமிழரை இல்லாது ஆக்குவான்

கொஞ்சம்அம்மா அக்கா தங்கையை கேட்பான்

கொஞ்ச நிலம் பறிப்பான்

கொஞ்சம் பௌத்தத்தை பரப்புவான்

கொஞ்சம் சிங்களம் படிப்பிப்பான்

கொஞ்சம் ....கொஞ்சம்.....கொஞ்சம்...

எல்லாம் புலிகள் இட்ட வடு

மாறியதும் செய்வான்தானே....

இருபத்தைந்து வருடங்களாக நாட்டுக்குப் போகாதவர் இப்போது போயிருக்கிறார் எனும்போதே அதில் ஒரு காரணம் இருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா? அதோடு, ஓரு பிரச்சனைகளும் இல்லாமல் போயிருக்கிறார் என்பது எதைச் சொல்கிறது????

அர்ஜுன், நீங்கள் சொல்வதுபோல்தான் பலரும் வெளிவேசம் போட்டு நடித்திருக்கிறார்கள். காற்று எந்தப் பக்கம் அடித்ததோ அந்தப் பக்கம் சாய்பவர்கள்தான் அதிகம். இளையபாரதிக்கு மவுசு இருந்தபோது இளையபாரதியோடு இருந்தார்கள். புலிகளுக்கு மவுசு இருந்தபோது புலிகளின் பின்னால் திரிந்தார்கள். இப்போது, தனிநபர்களுக்கு மவுசு இருப்பதால் தனியாகத் திரிகிறார்கள். அவர்கள் காட்டிய விசுவாசம் இருக்கிறதே? அப்பாடி. நடிகர் திலகம் சிவாஜியை வென்றுவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சி.கு உங்கள் நன்பன் ஒரு நகைச்சுவை உள்ளவர் என்று எழுதியுள்ளீர்கள்.அப்படியானவர்கள் இப்படி கொடூரமாக இருந்தது வியப்பை தருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.