Jump to content

சைஸ் பிரச்சனையா..??!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

வெளியில் சொல்லிக் கேட்க முடியாத படிக்கு இது பல சமூகங்களில் மறைக்கப்பட்ட விடயமாக இருப்பினும்.. இந்த சைஸ் பிரச்சனைகள் பல இடங்களிலும்.. Myths மற்றும் தாழ்வு மனப்பான்மைக்கு இட்டுச் செல்வதால் இதனை இங்கு பகிர்ந்து கொள்வது உள நலனுக்கு நல்லது என்று நினைக்கிறேன்.

--------------------

சைஸ் பிரச்சனையா...

செக்ஸ் தொடர்பான பிரச்சினைகள் குவிந்து கிடக்கிறது. இங்கென்று, அங்கென்று இல்லை. எந்த நாட்டுக்குப் போனாலும், யாரைக் கேட்டாலும் ஏதாவது ஒரு பிரச்சினையை சொல்லத்தான் செய்கிறார்கள்.

பிரச்சினைகளைப் போலவே செக்ஸ் தொடர்பான சந்தேகங்களும் ஏராளம், ஏராளம். நிறைய பேருக்கு இதுகுறித்து மனப் புழுக்கம், தாழ்வு மனப்பான்மை, வருத்தம், கவலை இருக்கும். அப்படிப்பட்ட சந்தேகங்களில் ஒன்றுதான் ஆண் குறியின் அளவு சம்பநத்ப்பட்டது.

இளம் வயது ஆண்களிடம் குறிப்பாக டீன் ஏஜ் இளைஞர்களிடம் இந்த சைஸ் பிரச்சினை பெரும் கவலையாகவே இருப்பதைக் காண முடியும். எனக்கு ஆண்குறி மிகவும் சிறியதாக இருக்கிறது. இதனால் என்னால் இயல்பான செக்ஸ் உறவை மேற்கொள்ள முடியுமா என்பதில் சந்தேகமாக உள்ளது. சைஸ் பெரிதாக இருந்தால்தான் அதிக இன்பம் அனுபவிக்க முடியும் என்கிறார்கள். ஆண் குறி பெரிதாக இருந்தால்தான் மாவீரன் என்று பெண்கள் பாராட்டுவார்கள் என சக நண்பர்கள் கூறுகிறார்கள் என்று விசனப்படுபவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.

ஆனால், உங்களுக்கு சிறிய ஆண் குறியா, கவலையே படாதீங்க, நீங்க மிகவும் அதிர்ஷ்டமானவர் என்கிறார்கள் டாக்டர்கள். எப்படி..?

பெரிய ஆண்குறியை விட சிறிய ஆண்குறிகளுக்குத்தான் செக்ஸ் எழுச்சி அதிகமாக இருக்குமாம். ஆண் குறி எந்த சைஸில் இருக்கிறது என்பது முக்கியமில்லை. எழுச்சி எப்படி உள்ளது என்பதில்தான் இன்பத்தின் அளவை நாம் மதிப்பிட முடியும். ஆண் குறி பெரிதாக இருந்தால்தான் இன்பத்தின் அளவு அதிமாக இருக்கும் என்பது தவறு.

பெண்ணுறுப்பானது எந்த வகையான ஆண் குறியையும் அனுமதிக்கக் கூடிய அளவிலான எலாஸ்டிக்தன்மை கொண்டதே. அதற்கு சிறிதா, பெரிதா என்ற கணக்கெல்லாம் கிடையாது. எனவே ஆண் குறி சிறிதாக இருந்தால் எதையும் செய்ய முடியாது என்பது மூட நம்பிக்கையே தவிர வேறு எதுவும் இல்லை.

எனவே சைஸை நினைத்து புழுங்குவதோ அல்லது தாழ்வு மனப்பான்மை கொள்வதோ அவசியமே இல்லாத ஒன்று.

இப்படிப்பட்டவர்கள் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழியை நினைத்துக் கொண்டால் போதும், கவலையேல்லாம் போயே போய் விடும்.

http://thatstamil.oneindia.in/lifestyle/kamasutra/2010/sex-kamasutra-penis-breasts-size.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மைதான் நெடுக்கர்!உந்த சின்னன்பெரிசு வந்து உலகளாவிய பிரச்சைனை ஒண்டு.

ஆனால் உண்மையிலை 13,14 சென்ரி மீற்றரும் கொஞ்ச ரெக்கினிக்கும் இருந்தால்.......

Posted

உண்மைதான் நெடுக்கர்!உந்த சின்னன்பெரிசு வந்து உலகளாவிய பிரச்சைனை ஒண்டு.

ஆனால் உண்மையிலை 13,14 சென்ரி மீற்றரும் கொஞ்ச ரெக்கினிக்கும் இருந்தால்.......

இரண்டு பிள்ளையள் பெத்துப்போட்டன் இனிமேல் தான் உதை பற்றி படிக்க வேணும்... :huh:

எழுதுங்கோவன்...

Posted

பெண்ணுக்கு பாலியல் உறவின் போது கிளர்ச்சியை தரும் அனைத்தும் பெண் உறுப்பில் ஆண் குறி செலுத்தும் இடத்தின் ஆரம்பத்திலேயே அமைந்துள்ளது.. உள்ளுக்குள் அல்ல. ஆண் குறி சிறிதென்றாலும் அது உள் நுழையும் பகுதியில் பெண்ணின் உணர்வுகள் காணப்படுவதால் சைஸ் ஒரு பிரச்சனை இல்லை

Posted

என்ன ஆயுதம் வைத்துள்ளோம் என்பதை விட அந்த ஆயுதத்தை எப்படி வெற்றிகரமாக பயன்படுத்துகிறோம் என்பதிலேயே தங்கியுள்ளது. இது உடலுறவிற்கும் பொருந்தும். ஆனால் புற விளையாட்டின்(foreplay) பொது நீண்ட ஆண்குறி பெண்களுக்கு கூடுதல் இன்பமளிக்ககூடியதாக இருக்கலாம்.

இதற்கு சரியான பதிலளிக்க கூடியவர்கள் அதனை உணரும் நிலையில் உள்ள பெண்களே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கு.சாண்ணா.. ஊரில கிராமங்களில் சொல்லுவினம்.. உரலுக்கு ஏற்ற உலக்கை தான் அவசியமே அன்றி.. உலக்கைக்கு ஏற்ற உரல்..??!

மனிதப் பெண்களின் யோனிமடல் சராசரியாக 10 சென்ரிமீற்றர்கள் (பெண் பாலுணர்வுத் தூண்டல் கண்ட நிலையில்......) தான் நீளம். இது இனத்துக்கு இனம் மாறுபடலாம்.

கட்டுரையாளர் கூறியபடி.. யோனிமடல் சுருங்கி விரியக் கூடியது மட்டுமன்றி அது செலுத்தப்படும் உறுப்பிற்கு ஏற்ப அதனைக் கையாளக் கூடியது என்று மனித உடலமைப்பியலில் படித்திருக்கிறேன். அதனால் சைஸ் ஒரு பிரச்சனை இல்லை. விறைப்புத் தன்மை தான் முக்கியம். அதிலும்.. பல ஆண்களுக்கு உள்ள பிரச்சனை பெண் பாலுறவு உச்சநிலை (orgasm) அடைய முதல் ஆண் அடைந்து விடுவதுதான். அது பெண்களின் மனநிலையை பாதிக்கலாம். பெண்கள் பல தடவைகள் பாலுறவு உச்சநிலையை அடையும் தன்மை உடையவர்கள் என்பதால் ஆண்கள் அதனை பல வழிகளினூடு அடையச் செய்ய வேண்டும். பொதுவாக foreplay மூலம். அதன்பின்னர் தான் ஆண்கள் பெண்களோடு இணைந்து தமது உச்ச நிலையை அடைய வேண்டும்.

சில ஆண்களுக்கு முன்பாய்ச்சல் நிகழ்ந்தும் விடும். அதாவது பெண் தன்னை பாலுறவுக்கு உள உடல் ரீதியில் தயார் செய்ய முதலே ஆண் உச்சநிலையை அடைந்திடுவார். ஒரு ஆண் பாலுறவு உச்சநிலையை அடைந்தால் குறைந்தது 30 நிமிடங்கள் வரை செல்லும் மீண்டும் அவர் உச்சநிலைக்குப் போக. பல ஆண்களால் அது கூட முடிவதில்லை. ஆனால் பெண்கள் அப்படியல்ல... சில விநாடிகளிலேயே அவர்கள் அடுத்த உச்சநிலைக்கு தயாராகிவிடுவர். பெண்கள் multiple orgasms கொள்ளக் கூடியவர்கள். இதனை பல ஆண்கள் அறிந்திருப்பதும் இல்லை.. அதற்கேற்ப செயற்படுவதும் இல்லை.

நிழலி சொன்னது போல பெண்ணின் பாலுறவுத் தூண்டல் என்பது யோனிமடலுக்குள் உள்ளதை விட வெளியில் தான் அதிகம். பெண்கள் தொட்டுணரும் வகையில் பாலுறவுத் தூண்டலுக்குரியவர்கள். தொடுகை தான் அங்கு முக்கியம்.

இதை நான் கல்வியில் கற்றதை வைத்து சொல்கிறேன். மற்றும்படி செயன்முறையில் எப்படி என்பது பற்றி எனக்கு தெரியாது.

Posted

இதை நான் கல்வியில் கற்றதை வைத்து சொல்கிறேன். மற்றும்படி செயன்முறையில் எப்படி என்பது பற்றி எனக்கு தெரியாது.

நெடுக்ஸ்.. நீங்கள் ஒரு நவீன ஞானசம்பந்தர்..! :huh:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்ஸ்.. நீங்கள் ஒரு நவீன ஞானசம்பந்தர்..! :huh:

இதுக்குப் போய் என்னை ஒரு ஞானசம்பந்தர் என்றால்.. இவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்து மனித உடலமைப்பியலும் உடற்றொழிலியலும் என்று 1000 பக்கத்துக்கு மேல புத்தகம் எழுதிறவங்கள.. என்னென்று சொல்வது.. ஞானசம்பந்தர்களின் வர்க்கத்தின் வர்க்கம் என்றா..??! :huh: :huh:

இதோ ஈபுக் வடிவில்.. இலவசமாக..

http://www.freebookcentre.net/medical_text_books_journals/anatomy_books_online_texts_download.html

Posted

இதுக்குப் போய் என்னை ஒரு ஞானசம்பந்தர் என்றால்.. இவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்து மனித உடலமைப்பியலும் உடற்றொழிலியலும் என்று 1000 பக்கத்துக்கு மேல புத்தகம் எழுதிறவங்கள.. என்னென்று சொல்வது.. ஞானசம்பந்தர்களின் வர்க்கத்தின் வர்க்கம் என்றா..??! :huh: :huh:

இதோ ஈபுக் வடிவில்.. இலவசமாக..

http://www.freebookcentre.net/medical_text_books_journals/anatomy_books_online_texts_download.html

ஆராய்ச்சி செய்யிறவை அநேகமா பழம்திண்டு கொட்டை போட்ட ஆக்களா இருப்பினம்..! :huh: உங்களைப் பார்த்தால் பிரம்மச்சரியத்திலயே ஞானம் பெற்ற ஞானக்குழந்தை மாதிரி இருக்கு..! :huh:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆராய்ச்சி செய்யிறவை அநேகமா பழம்திண்டு கொட்டை போட்ட ஆக்களா இருப்பினம்..! :huh: உங்களைப் பார்த்தால் பிரம்மச்சரியத்திலயே ஞானம் பெற்ற ஞானக்குழந்தை மாதிரி இருக்கு..! :huh:

அதெல்லாம் படிப்பால அமைஞ்சது. தானா அமையல்ல..! சிலருக்கு அனுபவத்தால தெரிய வரும். சிலருக்கு படிப்பால தெரிய வரும். நான் இப்ப வரைக்கும் வகை இரண்டு. அனுபவத்தை விட படிப்பு நல்லது.. சுத்தமானது என்று நினைக்கிறன். ஏனென்றால்.. Female reproductive system dissection செய்த பிறகு ஒரு சில தினங்கள் சாப்பிடவே முடியல்ல..! ஆனால் பலர் அதோட எப்படித்தான் மிணக்கட்டு... வேணாம்... அதுக்கு மேல சொன்னா மனித வாழ்க்கை அசிங்கமாயிடும்..! :huh: :huh:

இதையும் பாருங்கோ...

http://www.youtube.com/watch?v=q6eU2XduHBo&feature=related

Posted

ஏனென்றால்.. Female reproductive system dissection செய்த பிறகு ஒரு சில தினங்கள் சாப்பிடவே முடியல்ல..! ஆனால் பலர் அதோட எப்படித்தான் மிணக்கட்டு... வேணாம்... அதுக்கு மேல சொன்னா மனித வாழ்க்கை அசிங்கமாயிடும்..! :huh: :huh:

இதையும் பாருங்கோ...

நான் உதைப் பார்க்க மாட்டன்..! :huh:

ஏதோ சிவனே எண்டு ஓரஞ்சாரமா ஓடிக்கிட்டிருக்கு..! :huh: அதுவும் பிடிக்கேல்லையா?? :huh:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் உதைப் பார்க்க மாட்டன்..! :huh:

ஏதோ சிவனே எண்டு ஓரஞ்சாரமா ஓடிக்கிட்டிருக்கு..! :huh: அதுவும் பிடிக்கேல்லையா?? :huh:

வீடியோவிலையே பார்க்கவே பிடிக்கல்ல.. எங்க நிலைல இருந்தா.. நீங்க என்னாவது..??! நேரில இதைச் செய்தா போமலின் மற்றும் இதர கெமில்களின் நாற்றம் தலையை சுத்தும். பிறகு நாளடைவில் அதுவும் பழகிடும். :huh: :huh:

இன்னொன்று இணைச்சிருக்கிறன்.. நல்ல தெளிவா இருக்கு அதில..! :huh:

Posted

வீடியோவிலையே பார்க்கவே பிடிக்கல்ல.. எங்க நிலைல இருந்தா.. நீங்க என்னாவது..??! நேரில இதைச் செய்தா போமலின் மற்றும் இதர கெமில்களின் நாற்றம் தலையை சுத்தும். பிறகு நாளடைவில் அதுவும் பழகிடும். :lol::D

இன்னொன்று இணைச்சிருக்கிறன்.. நல்ல தெளிவா இருக்கு அதில..! :D

நானும் கடைசி வரைக்கும் பார்க்க போவதில்லை..... :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சைஸ் பிரச்சனை பற்றி கதைக்கிறீங்கள் . எனக்குமே ஒன்னுமே விளங்குறமாதிரியில்ல

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தனிய ஆண்வர்க்கமே பேசாப்பொருளில் நின்று பேசுகிறீர்கள். இதையெல்லாம் வாசிக்கிறமே நம்ம தலைவிதியை எண்ணி யாரை நோவது? :lol:

Posted

தனிய ஆண்வர்க்கமே பேசாப்பொருளில் நின்று பேசுகிறீர்கள். இதையெல்லாம் வாசிக்கிறமே நம்ம தலைவிதியை எண்ணி யாரை நோவது? :D

நீங்களும் கொஞ்சம் ரிப்ஸ் குடுத்தால் நாங்களும் கொஞ்சம் முன்னேறுவமில்ல..?! :lol::D:D

Posted

தனிய ஆண்வர்க்கமே பேசாப்பொருளில் நின்று பேசுகிறீர்கள். இதையெல்லாம் வாசிக்கிறமே நம்ம தலைவிதியை எண்ணி யாரை நோவது? :D

உண்மையான பதில் பெண்களுக்குத்தான் தெரியும். ஏற்கனவே பெண்களை கருத்து கூறும்படி கேட்டுள்ளோம். உங்கள் பதில்கள் எங்கள் தலைவிதியை கொஞ்சமேனும் மாற்ற உதவும். :lol:

இதற்கு சரியான பதிலளிக்க கூடியவர்கள் அதனை உணரும் நிலையில் உள்ள பெண்களே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இசை இங்கு நின்று அதிகம் பேசினால்....

இதை வாசிக்கிற சமூகம் எனக்கு கொடுக்கும் பெயர் என்னவாக இருக்கும்?

உண்மையான பதில் பெண்களுக்குத்தான் தெரியும். ஏற்கனவே பெண்களை கருத்து கூறும்படி கேட்டுள்ளோம். உங்கள் பதில்கள் எங்கள் தலைவிதியை கொஞ்சமேனும் மாற்ற உதவும். :lol:

இரு மனம் இணையாத தாம்பத்தியத்தில் சிறிதென்ன பெரிதென்ன எல்லாமே வேஸ்டு

Posted

இசை இங்கு நின்று அதிகம் பேசினால்....

இதை வாசிக்கிற சமூகம் எனக்கு கொடுக்கும் பெயர் என்னவாக இருக்கும்?

உங்கள் இயங்கு முயங்கு தயங்கு வை வாசித்தவர்கள் நாம்.. எனவே பயப்பிடாமல் சொல்லுங்கள்

இரு மனம் இணையாத தாம்பத்தியத்தில் சிறிதென்ன பெரிதென்ன எல்லாமே வேஸ்டு

இணைந்த இரு மனங்களும் விலகாமல் இருக்க சைஸ் பற்றிய கவலை இல்லாமல் சந்தோசம் அனுபவியுங்கள் என்றுதான் சொல்றம் :lol:

Posted

ஆண்குறி

ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கிறது. குறியானது விரைப்புத்தன்மை அடைந்த நிலையில் அடிப்புற உருளை ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போலத் தோன்றும். மெத்து மெத்தென்ற அமைப்பில் இரு புறமும் அமைந்துள்ளன.

இந்த மூன்று உருளைகளிலும் மெத்து மெத்தென்ற திசுக்கள் உள்ளன. அவற்றின் உள்ளே ஏராளமான நுண்ணிய ரத்தக்குழாய்கள் செல்கின்றன. கிளர்ச்சியுற்ற நிலையில் ரத்தம் நிறையப் பாய்வதால் திசுக்கள் உப்பி குறி விரைக்கிறது. குறி முழுவதும் ஓடும் ஏராளமான நரம்புகள் தொடவும், அழுத்தவும் படும்போது எளிதில் கிளர்ச்சியுறும் விதத்தில் அமைந்துள்ளது.

ஆண் குறியின் நுனி அல்லது தலைப்பகுதி நுரை மெத்தை போன்றது. இதில் ஏராளமான நரம்பு நுனிகள் உள்ளன. இது மிக உணர்வுள்ள பகுதி.

ஆண் குறியின் நடுப்பகுதியை விட தலையில் தான் உணர்வலைகள் மிகுதியாக இருக்கும். தலைக்கும் இடைப்பகுதிக்கும் இடையே உள்ள திசுக்களின் வளையமும் தலையோடு முன் தோலைக் கீழ்ப்பகுதியில் இணைக்கும் தோலும் மிக நுண்ணிய நரம்பு நுனிகளைக் கொண்டவை. இவற்றிலும் உணர்வலைகள் அதிகமாக இருக்கும்.

ஆண் குறியின் தலைப்பகுதியை நேரடியாகத் தூண்டுவதை விட நடுப்பகுதியை உராய்வதிலோ மேலும் கீழுமாக இழுப்பதிலோ தான் ஆண்கள் அதிக இன்ப உணர்வை அனுபவிக்கிறார்கள்.

தலைப்பகுதி நேரடியாகத் தூண்டப்படும் போது சில சமயம் வலயும், எரிச்சலும் ஏற்படும்.

ஆண் குறியின் மேல் தோல் மேலும் கீழும் நகரக் கூடியது. முன்தோலில் தொற்றுநோயோ, காயமோ இருந்தால் புணர்ச்சியின் போது வலி எடுக்கும் சிலருக்கு முன்தோல் கழன்று பின்னே போகாமல் வலி எடுக்கும். இதற்கு அறுவை சிகிச்சை உண்டு. ஆண்கள் தினமும் முன்தோலை நீக்கிக் குறியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சுன்னத் முறை மூலம் முன்தோலை நீக்கி விட்டால் இந்த வேலை சுலபமாகி விடும்.

முன் தோல் நீக்கும் இந்த அறுவை சிகிச்சையை யூதர்களும், முஸ்லீம்களும் செய்து கொள்கின்றனர். இது அந்த மதத்தினரின் தலைவரான ஆபிரகாம் கடவுளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி நடப்பதாகக் கருத்து. அமெரிக்காவில் மதம் சம்பந்தப்பட்ட சடங்காக இது நடை பெறுவது கிடையாது. கனடா, மற்றும் ஐரோப்பாவில் இந்த முறை பிரபலம் அடையவில்லை. இந்த முறை சுகாதாரமானது.

காரணம், இதனால் தொற்றுநோய்கள் தாக்கும் வாய்ப்பு குறைகிறது. ஆனால் இதன் காரணமாக ஆண் குறியின் உணர்வாற்றல் குறைவதாகவும் சிலர் எண்ணுகின்றனர் என்பது ஒரு கருத்து. இதனால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியும் என்பது இன்னொரு சாரர் கருத்து. ஆனால் இவை அனைத்தும் அறிவியல் அடிப்படையிலான உண்மைகள் அல்ல என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஆண் குறிகள் ஆணுக்கு ஆண் மாறு படும். நிறம்,. அளவு, வடிவம், முன் தோல் இருத்தல் அல்லது நீக்கப்பட்டிருத்தல், ஆகியவற்றில் வேறுபாடுகள் உண்டு. சராசரி ஆண்குறி 9.5 செ.மீ. நீளம் இருக்கும். நீண்ட ஆண்குறிகளைக் காட்டிலும் சிறிய ஆண் குறிகளில் நிறைய ரத்தம் பாய்ந்து விரைத்த நிலையில் இரண்டு வகையும் ஏறக்குறைய ஒரே நீளம் அடைய வழி செய்கின்றன.

பெரிய அல்லது நீண்ட ஆண்குறியே பெண்ணைப் புணரும் போது திருப்தி அடையச் செய்யும் என்பது வெறும் நம்பிக்கை மட்டும் தான். ஆனால் எத்தனை சிறிய ஆண் குறியும் பெண்ணுக்குப் பொருந்தும் என்பது தான் உண்மை. காரணம் பெண் குறியின் நுழை வாயிலில் ஏராளமான நரம்பு நுனிகள் உள்ளன.

அபூர்வமாகச் சிலருக்கு 2 செ.மீ. நீளத்துக்கும் குறைவான ஆண் குறி அமைந்து விடுவதுண்டு. இது இயற்கை செய்யும் குரோமோசோம் கோளாறு. ஒரு வேளை ஆண் சுரப்பான டெஸ்டோஸ்டீரான் என்ற ஹர்மோன் மிகக் குறைவாகச் சுரப்பதால் இந்த நிலை உருவாகலாம். ஆனால் பிற எந்தக் காரணங்களாலும் குறி சிறுத்துப் போயிருந்தால் அதைப் பெரிதாக்க எந்த மருந்தும், களிம்பும், மாத்திரையும் பயன் தராது. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதாவது சிறிய ஆண்குறியால் எந்தப் பெண்ணையும் திருப்திப் படுத்த முடியும். ஆனால் நமக்கு மிகச்சிறிய குறி நம்மால் பெண்ணைத் திருப்திப் படுத்த முடியாது என்று நினைத்துக் கொண்டே இருந்தால் நிச்சயம் பின்நாளில் மன ரீதியான பாதிப்புக்குள்ளாகி ஆண்மைக்குறைவு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

ஆண் குறியின் அடிப்பகுதியில் இருக்கும் விதைப்பை மிகவும் மெல்லிய உறுப்பு. இதன் மேல் பகுதியில் மயிர் வளர்ச்சி காணப்படும். இதன் உள்ளே டெஸ்டிகிள் எனப்படும் விதைகள் சிப்பிக்குள் முத்துப் போல அமைந்துள்ளன. இந்த உறுப்பு வெப்பம், குளிர்ச்சி, கிளர்ச்சி மற்றும் பயிற்சி போன்றவற்றால் சுருங்கவோ, விரியவோ செய்யும். வெப்பக் காலத்தில் நெகிழ்ந்து தொங்கிய நிலையில் காணப்படும். குளிரில் இறுகிச் சுருங்கி மிகச் சிறியதாகக் காணப்படும். இது தான் விதைகளின் வெப்பம் பாதுகாக்கப்பட முக்கியக் காரணம்.

பொதுவாக ஒரு மனித உடலில் இருக்கக் கூடிய வெப்ப நிலை அதிகம். அந்த வெப்ப நிலையில் விதைப்பைகள் நன்றாகச் செயல் பட முடியாது. அதனால் தான் விதைப்பைகள் உடலுக்கு வெளியே தனியாகத் தொங்கிய நிலையில் இயற்கையாகவே அமைந்துள்ளது.

ஆண் விதைகள் இரண்டு. அவை விதைப்பையில் உள்ளே பக்கத்திற்கு ஒன்றாக உள்ளன. ஒரு விதை மற்றொன்றைக் காட்டிலும் கீழே தொங்கும். பெரும்பாலும் இடது விதை கீழே இருக்கும். இடது கைப்பழக்கம் உள்ளவர்க்கு வலது விதை கீழே இருக்கும். சிலர் புணர்ச்சியின் போது விதைகளை வருடினாலோ பிசைந்தாலோ அதிகக் கிளர்ச்சி அடைவார்கள். இன்னும் சிலர் அப்படி எதுவும் கிளர்ச்சி அடைய மாட்டார்கள். அது அவர் அவர் உடல் அமைப்பைப் பொறுத்தது

ஆண் குறியின் அடிப்பகுதியில் அமைந்துள்ள விதைகளுக்கு இரண்டு தொழில்கள். ஒன்று ஆண் ஹர்மோனைச் சுரக்கிறது.

இன்னொன்று உயிரணு உற்பத்தி. டெஸ்டோஸ்டீரான் என்னும் ஆண் ஹர்மோனைச் சுரப்பது விதைகளே. ஆணுக்குரிய கிளர்ச்சியை இந்த ஹர்மோனே நிர்ணயம் செய்கிறது. இந்த ஹர்மோன் இல்லையேல் ஆண்மை இல்லை.

விந்து விதையில் உள்ள குழாய்களில் உற்பத்தியாகிறது. இந்தக் குழாய்கள் 500 மீட்டர் நீளமுள்ளவை. உயிரணு உற்பத்தியாக 70 நாட்கள் ஆகும்.

ஒரு விந்தணு மூன்று பாகங்களைக் கொண்டது. தலை, இடை, வால் என்பது அந்த மூன்று பகுதிகள். இதன் தலைப்பகுதி அக்ரோசோம் எனப்படுகிறது. இங்கு தான் இதன் ஆற்றல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இதனால் தான் விந்தணு நீந்திச் சென்று கரு முட்டையை அடைய முடிகிறது.

விந்தணுக்கள் உற்பத்தியானதும் பல வாரங்கள் விதைகளின் பிற்பகுதியில் உள்ள சுருண்ட குழாய்களில் தங்கி இருக்கும். அவை முதிர்ச்சி அடைந்த பிறகு விதையில் உள்ள குழாயிலிருந்து புறப்பட்டு ப்ரோஸ்டேட் எனப்படும் விந்துப்பையின் உள்ளே சென்று தங்கும். விதையிலிருந்து புறப்படும் 40 சென்டி மீட்டர் நீளமுள்ள வாஸ்டெபரன்ஸ் என்ற நீண்ட குழாயை வெட்டுவதன் மூலம் தான் ஆண் கருத்தடை செய்யப்படுகிறது.

இந்த விந்துப்பையானது சிறுநீர்ப்பைக்குக் கீழே அமைந்துள்ளது. இரண்டுக்கும் இடையில் உள்ள தசை அமைப்பு சிறுநீர் கழித்தலும் விந்து வெளியேற்றமும் ஒரே சமயத்தில் நேரா வண்ணம் தடுக்கிறது. ரெக்டம் எனப்படும் குதம் விந்துப்பையின் பின் புறத்தில் அமைந்துள்ளது. ஆகவே ரத்தப்பரிசோதனை செய்யும் போது விந்துப்பையையும் பரிசோதனை செய்யலாம்.

விந்துப்பை ஒரு விதத் திரவத்தை உற்பத்தி செய்கிறது. இந்தத் திரவத்தின் ஊடே தான் விந்தணுக்கள் உச்சக்கட்ட இன்ப நிலையின் போது பெண் குறியின் உள் பீய்ச்சி அடிக்கப்பட்டுக் கருப்பையைச் சென்று அடைகிறது. விந்துப்பையானது குறைந்தது 30 சதவிகிதம் தான் விந்தை உற்பத்தி செய்யும். மற்ற 70 சதவிகிதம் விந்து நீர்க்குழாயில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒரு முறை வெளியாகும் விந்து ஒரு தேக்கரண்டி அளவு (5.மில்லி) ஆகும். ஒரு மில்லி மீட்டர் விந்தில் 4 முதல் 12 கோடி விந்தணுக்கள் உண்டு. அதாவது ஒரு முறை வெளியிடும் விந்தில் 12 முதல் 60 கோடி விந்தணுக்கள் உள்ளன.

ஒருவன் ஒரு முறை பாய்ச்சும் விந்தணுக்களைக் கொண்டு 60 கோடி மக்கள் தொகையை உருவாக்க முடியும் எனக் கற்பனையில் நினைத்துப் பார்க்கவே இயற்கையின் அற்புதத்தை நம்மால் உணர முடிகிறதல்லவா?

விந்தின் நிறம் வெள்ளை அல்லது மஞ்சள். அல்லது சாம்பல் ஒட்டக்கூடிய வழவழப்பான திரவம் அது. வெளியாகும் போது கெட்டியாக இருக்கும். வெளி வந்த பிறகு நீர்த்துப் போய்விடும்.

அதில் தண்ணீர், சளி போன்ற திரவம், ரசாயானப் பொருட்கள், (விந்தணுக்களுக்கு ஆற்றல் தரும் ரசாயனப் பொருட்களும் இதில் அடக்கம்.) ஆண் குழாய்களிலும், பெண் குழாய்களிலும் உள்ள அமிலங்களை எதிர்த்து உயிர் வாழக்கூடிய ரசாயனமும் இதில் உள்ளது.

மன்மதச் சுரப்பிகள் எனப்படும் பட்டாணி அளவில் உள்ள அமைப்புக்கள் சிறுநீர்க்குழாயின் பின்புறத்தில் ப்ரோஸ்டேட் சுரப்பிகளுக்கு அடியில் காணப்படுகின்றன. அவை சுரக்கும் திரவமானது கிளர்ச்சியின் போது உச்சக்கட்டத்திற்கு சற்று முன்னர் ஆண் குறியின் நுனியில் வந்து பனி நீர்த்திவலைகள் போல இருக்கும்.

ஆனால் பெரும்பாலானோர் இதைக் கண்டதே கிடையாது என்பது தான் உண்மை. இன்னும் ஒரு சிலருக்கு ஒரு கரண்டி அளவு கூட வெளியில் கொட்டுவதும் உண்டு. இந்தத் திரவத்தை நாம் சாதாரணமாக நினைக்கக்கூடாது. காரணம் இந்தத்திரவத்தின் வழியாகவும் விந்தணுக்கள் வந்து அபூர்வமாகக் கருப்பிடிக்கச் செய்யும் வாய்ப்புகள் உண்டு. எனவே இதில் அலட்சியம் கூடாது.

குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத ஒரு சில ஆண்கள் உடலுறவின் போது விந்தைப் பெண் குறியின் உள்ளே செலுத்தக்கூடாது என்று மட்டும் கருதி விந்து வரும் வரை பெண்குறியின் உள்ளேயே ஆண் குறியை வைத்திருப்பார்கள். விந்து வரும் போது மட்டுமே குறியை வெளியே எடுத்து விடுவார்கள். ஆனால் இது தவறு. காரணம் ஏற்கனவே வந்த திரவத்தின் வழியாக ஒரு சில நேரங்களில் விந்தணுக்கள் சென்று கருப்பையை அடையக்கூடும் என்பதை மறந்து விடக்கூடாது.

உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சூடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும். சில சமயம் உரக்கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும்.

சில சமயம் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப் போய் சத்தமே இன்றி மூர்ச்சையாகிப் போகும் நிலை வரலாம். இப்படி இதற்கு விளக்கம் எத்தனை தான் சொன்னாலும் தீராது. முடிவும் கிடையாது. பூமியில் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் முதல் மனிதன் வரை இதற்குள் கட்டுப்பட்டுக் கிடப்பதிலிருந்தே இந்த உச்சக்கட்டத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம் அல்லவா?

அவரவருக்குத் தோன்றும் விதத்தில் பலவாறு இந்த உச்சக்கட்ட நிலையானது விவரிக்கப்படும். உதாரணமாக, அந்தக் கட்டத்ததை நெருங்கும் முயற்சியிலேயே பாதி வேடிக்கை முடிந்து விடுகிறது. மீதி வேடிக்கை அத்தனை சிறப்பாக இல்லை...* இது ஒருவரின் மதிப்பீடு.

உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை...

பெண் குறி

பெண்ணின் பாலுறுப்பின் வெளிப்பகுதி பெண்குறி எனப்படும். அதில் மூன்று பகுதிகள். முறையே குறிமேடு, உதடு, மன்மதபீடம். குறிமேடு என்பது லத்தின் மொழி வார்த்தை. வீனஸ் மேடு எனப் பொருள். (வீனஸ் என்பவள் ரோமானியரின் காதல் தேவதை)

பெண் குறி என்பது எலும்பின் மேல் அமைந்த சதைப்பிடிப்பான பகுதி. மேல்புறம் மயிர் வளர்ச்சி கொண்டது. இந்தப் பகுதயில் நிறைய நரம்பு நுனிகள் உள்ளதால் தொடுதலோ,. அழுத்துதலோ ஒரு பெண்ணைக் கிளர்ச்சியுறச் செய்யும்.

வெளி உதடுகள் என்பவை தோல் மடிப்புகள். இவற்றிலும் மயிர் வளர்ச்சி காணப்படும். கிளர்ச்சியுறாத நிலையில் இவை மடிந்திருக்கும். கிளர்ச்சியுற்ற நிலையில் இவை விரிந்து கொடுக்கும். உள் உதடுகள் மடிந்த இதழ்கள் ஆகும்.

நுண்ணிய ரத்தக்குழாய்கள் உள்ள பஞ்சுத்திசுக்கள் இவற்றில் உள்ளன. இவற்றில் மயிர் வளர்ச்சி இல்லை. இவை மன்மத பீட்த்தின் மேற் பகுதியில் இணைகின்றன. அப்படி இணையும் போது மன்மத பீடத்தின் உறை போல விளங்குகின்றன.

வெளிப்புறப்புறுப்பு பெண்ணுக்குப் பெண் மாறுபடும். அளவு, வடிவமைப்பு, நிறம், மென்மை, மயிரின் அடர்த்தி-நிறம், மன்மத பீடத்தின் அளவு., குறியின் நுழைவாயில், கன்னித்தோல் ஆகியவை நாட்டுக்கு நாடு-இனத்துக்கு இனம்- பெண்ணுக்குப் பெண் மாறுபடும். பார்த்தோலின் சுரப்பிகள் எனப்படுபவை உள் உதடுகளில் அமைந்துள்ளன. இவை சுரக்கும் நீர் உதடுகளைப் பளபளப்பாக்குகிறது.

மன்மத பீடம் தான் மிக நுண்ணிய உணர்வு மையம். நுண்ணிய நரம்பு நுனிகள் ஏராளம் இதில் இணைகின்றன. கிளர்ச்சியின் போது ஆணுறுப்பைப் போல இது நீளா விட்டாலும் ஓரளவுக்குப் புடைத்து எழுகிறது. இதற்குக் காரணம் இதில் உள்ள நுண்ணிய ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பது தான்.

இதனைப் பெண்ணின் ஆண்குறி என்கின்றனர். காரணம் இதுவும் ஆண்குறியும் ஒரே விதமான திசுக்களினால் ஆனது. மன்மத பீடத்தின் அளவு பெண்ணுக்குப் பெண் மாறுபடுகிறது. அளவில் பெரியதாக இருக்கும் மன்மதபீடம் அதிகமான சுகத்தைத் தரும் என்று நினைப்பது தவறான எண்ணம்.

அதே போல சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணின் மன்மதபீடம் சைஸ் பெரியதாகி விடும் என நினைப்பதும் தவறான எண்ணம். அதே போல மன்மதபீடத்தின் மேலுறையை நீக்கி விட்டால் அதிக சுகம் கிடைக்கும் என நினைப்பதும் தவறு. காரணம் மன்மதபீடம் நேரடியாகத் தொடுவதற்கு ஏற்றதல்ல. உறவின் போது பீடத்தின் மேலுறை உள்ளும் வெளியும், மேலும் கீழும் உராய்வதன் மூலம் கிடைக்கும் இன்பம் அந்த உறையை அகற்றுவதால் கிடைக்காது.

பெரினியம் என்பது மயிர் அற்ற பகுதி. உதட்டின் அடிப்பகுதிக்கும் ஆசன வாய்க்கும் இடையே உள்ளது. தொடும்போதும் அழுத்தும் போதும் இந்தப் பகுதி கிளர்ச்சி அடைகிறது. பெண்குறி நுழைவாயிலில் கன்னித்திரை என்னும் மெல்லிய திரை உள்ளது. அதிலுள்ள நுண்ணிய துளைகள் வழியே மாதவிடாய் ரத்தம் வெளியே கசியும். இதுவும் பெண்ணுக்குப் பெண் அளவு, பருமன் ஆகியவற்றில் மாறுபடும்.

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. இதுவும் ஒரு மூட நம்பிக்கையே. இதற்காகவே ஜப்பானிலும், இத்தாலியிலும் சில மருத்துவர்கள் புதிய கன்னித்திரையைப் பெண்களுக்குப் பொருத்தி விடுகிறார்கள் எனத் தெரிகிறது.

கன்னித்திரை சில பெண்களுக்கு இளம் வயதிலேயே கிழிந்து விடும். தேகப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், சுய இன்பத்தின் போது கை விரலையோ அல்லது வேறு பொருளையோ நுழைப்பதன் மூலம் கன்னித்திரை கிழிந்து போகலாம். சில பெண்கள் பிறக்கும் போதே கன்னித்திரை இன்றிப் பிறப்பதுவும் உண்டு. உடலுறவினாலும் சில பெண்களுக்கு கிழிந்து போகாது. இதை வைத்து அவர்களது நடத்தையைக் கணக்கிடுவது தவறு.

பெண் குறியின் உட்பகுதி 45 டிகிரி மேல் நோக்கிச் செல்கிறது. கிளர்ச்சியுறாத நிலையில் அதன் சுவர்கள் சுருங்கியுள்ளன. கிளர்ச்சியின் போது விரிந்து தருகின்றன. குழந்தை பெறாத பெண்ணின் உறுப்பு 8 செ.மீ. நீளம்,. முன் சுவர் 6 செ.மீ. நீளம் இருக்கும். ஒரு விரலைக் கெட்டியாகப் பிடிக்கும் அளவு அதன் குறுக்களவு அமையும். குழந்தை பெறும் போது குழந்தையின் தலை வெளியே வரும் அளவு விரிந்து கொடுக்கும். ஆகவே சிறிய ஆண்குறி, பெரிய ஆண்குறி என்னும் வேறுபாடு இதற்கு இல்லை.

என்னதான் சுருங்கிய போதிலும் பெண்குறியின் உட்சுவர் ஆண்குறியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதை வெளியே விடாத வண்ணம் சிறைப்படுத்தும் அளவு வலிமை இல்லாதது. இந்த வல்லமை மிருகங்களில் நாய்க்கு மட்டும் அமைந்துள்ளது. நாயின் பெண் குறியில் இப்படி பூட்டி வைத்துக் கொள்ளும் அமைப்பு உள்ளது.

பெண்குறியின் உட்சுவர்த் தசைகளைச் சுருக்கும் பயிற்சி மூலம் இன்ப உணர்வுகளை அதிகரிக்கலாம் என்ற நோக்கில் அதற்கென உள்ள சில பயிற்சிகள் தரப்படுகின்றன. சிறுநீர் கழிக்கும் போது நிறுத்தி நிறுத்திக் கழிப்பது ஒரு பயிற்சி. சும்மா இருக்கும் போது ஆசன வாய்த்தசைகளை இறுக்கியும், தளர்த்தியும் ஒரு பயிற்சி, கெகல் என்று இதனைச் சொல்கின்றனர்.

பெண் குறியின் ஆழத்தில் நுண்ணிய நரம்பு நுனிகள் இல்லை. எல்லா நுனிகளும் நுழை வாயில் அருகிலேயே உள்ளன. உட் பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு ஆழம் உணர்ச்சியை உணர வல்லது இல்லை. எனவே தான் சிறிய ஆண்குறி பெரிய ஆண்குறி என்ற வேறுபாடு பெண்குறிக்கு இல்லை என்கின்றனர்.

கருப்பையின் அடிப்பகுதி செர்விக்ஸ் எனப் படுகிறது. குறியின் நுழை வாயிலின் வழியே பார்த்தால் செர்விக்ஸ் ஒரு மென்மையான வெளிர் சிவப்புப் பட்டன் போலத் தோற்றமளிக்கும். உடலுறவின் போது இதன் வழியாகத்தான் ஆணிடமிருந்து வெளிப்படும் விந்தணுக்கள் கருப்பையை அடைகின்றன. தவிர மாதவிடாயின் போது வெளிப்படும் கழிவு ரத்தமும் வெளியே வருவதும் இதன் வழியாகத்தான்.

கருப்பையில் முட்டைகள் உருவாகி வெளி வரும் நேரத்தில் செர்விக்ஸ் வடிக்கும் நீர் நீர்த்திருக்கும். பிற நேரங்களில் கெட்டியாக இருக்கும். ஒரு வழ வழப்பான திரையை ஏற்படுத்தி செர்விக்ஸ் வாயிலை மூடும் அமைப்பு அது. செர்விக்ஸ் உணர்வலைகள் ஏற்படுவது இல்லை. அதனை அறுவை சிகிச்சை மூலம் அப்புறப் படுத்தினாலும் பாலுணர்வு கெடுவது கிடையாது.

கருப்பை (யூட்டரஸ்) ஒரு உள்ளீடற்ற உறுப்பு. ஏழரை செ.மீ. நீளம். 5 செ.மீ.அகலம் இருக்கும். மாதவிடாயின் போது அதன் உள்சுவர் மாறுதல் அடைகிறது. உள் சுவரில்தான் கருவான முட்டை ஒட்டிக் கொண்டிருக்கும். உட்சுவரின் தசைகள் பிரசவக் காலத்தில் குழந்தையை வெளியே தள்ளுவதற்கு உதவுகின்றன.

கருத்தரிக்கும் காலத்தில் சுரக்கும் நீர் தான் கருப்பையின் வேலைகளைச் செய்வதற்கு உதவியாக உள்ளன. அடி வயிற்றின் உள்ளே கருப்பை மற்ற உறுப்புக்களின் மீது அழுத்தாமல் தொங்கிய வண்ணம் உள்ளது. சாதாரணமாக கருப்பை பெண்குறிக் கால்வாய்க்கு நேர் கோணத்தில் அமைந்திருக்கிறது.

பலோபியன் குழாய்கள் அல்லது முட்டை நாளங்கள் கருப்பையில் தொடங்கி 10 செ.மீ. நீளத்தில் இருபுறமும் புனல் போன்ற வடிவத்தில் நீண்டிருக்கும். இந்தக் குழாய்களே அருகில் உள்ள கருக்கலங்கள் வெளியிடும் முட்டைகளைப் பிடித்து வைத்துக் கொள்கின்றன. ஆணின் விந்தணுக்கள் பெண்குறியின் உள்ளே பீச்சப்பட்டதும் அவற்றுள் ஒன்று முட்டையுடன் சேர்ந்து சினையாக இவை உதவியாக இருக்கின்றன.

பெண் குழந்தை பிறக்கும் முன்பாகவே அதன் கருப்பையில் எதிர்கால முட்டைகள் உருவாகத் தொடங்கி விடுகின்றன. 60 அல்லது 70 லட்சம் எதிர்கால முட்டைகள் குழந்தை பிறப்பதற்கு முன்பே அழுகி வீணாக விடுகின்றன.

புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் கருப்பையில் 4 லட்சம் முட்டைகள் இருக்கின்றன. அதன் பிறகு புதிய முட்டைகள் உருவாவதில்லை. போகப்போக அந்தப் பெண் வளர வளர அவற்றுள் ஏராளமானவை அழுக ஆரம்பிக்கின்றன. பெண் பருவம் அடைந்ததும் மாதவிலக்குத் தோன்றுகிறது.

http://sivastar.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இசை இங்கு நின்று அதிகம் பேசினால்....

இதை வாசிக்கிற சமூகம் எனக்கு கொடுக்கும் பெயர் என்னவாக இருக்கும்?

இரு மனம் இணையாத தாம்பத்தியத்தில் சிறிதென்ன பெரிதென்ன எல்லாமே வேஸ்டு

இது என்னக்கா சிறுபிள்ளைபோல்

எல்லாவற்றையும் நின்று நிதானமாக வாசித்துவிட்டு...

இது என்ன கேள்வி.............???

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆண்கள் எல்லோரும் எப்படியான குழப்பத்தில் இருக்கிறீர்கள் என்று சிறிது வாசித்து வாய்விட்டுச் சிரித்தேன். நெடுக்குத்தம்பியின் கொடுமை தாங்க முடியாமல் மற்றைய தம்பிகள் படும் பாட்டை என்னவென்று சொல்வது? நெடுக்குத்தம்பியின் கணிப்புப்படி வைத்தியத்துறையைச்சார்ந்த ஆண்கள் துறவிகளாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் கிளறிக்கிழித்துப் படித்தபின்னும் பெண்மீதான ஆசையை ஆண்வைத்தியர்கள் முற்றுமுழுதாகத் துறந்ததாகத் தெரியவில்லை. காதல் செய்கிறார்கள், காமம் துய்கிறார்கள் எப்படி அவர்களால் ஊனும், உதிரமும், எலும்பும் சேர்ந்து தோற்றம் பெற்ற ஒரு உருவத்தை அணைத்துக் காமுற முடிகிறது? நெடுக்குத்தம்பி உங்களால் இதற்குப் பதில் சொல்ல முடியுமா?

பேரீச்சைப் பொறுக்கி ஆன்னா ஊன்னா 'தயங்கு, இயங்கு, முயங்கு, மயங்கு" கவிதையை விரலிடுக்கில் வைத்துள்ளீர்களா? உங்களைப் பேரீச்சைப் பொறுக்கியாக்கியதில் ஏதாவது கோபமா?

நீங்களெல்லாம் என்ன நினைப்பீர்கள் என்று நான் பயப்படுவேனா? இங்கு எழுதும் கத்துக்குட்டிகளைவிட வெளியில் இருந்து வாசிக்கும் சிகரங்கள் அதிகம் அதனால்தான் யோசிக்கிறேன்.

விசுகு அண்ணா இவற்றை அதாவது ஆண்கள் எழுதுவதை வாசிப்பதன் மூலம் ஆண்களின் பிரச்சனைகளை அறியவும் வாய்ப்புக் கிடைக்கிறது. என்ன சில சமயங்களில் லொள்ளு தாங்க முடியிறதில்லை :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெண்களுக்கே உரித்தான அதே அளந்தவரிகள்.

இதிலிருந்து எதையாவது கணக்கு போடு என்பது போன்ற நுனிப்புல் மேயத்தக்கதான சில வரிகள்

ஆண்களுடைய வரிகளுக்கு சிரிப்பு என்பதனூடாக என்னைப்பற்றிய ஆராய்சியில் நீ அருவரி என்ற முறுக்கு.

இன்னும் எதையெல்லாம் சொல்லவேண்டுமோ அத:தனையும் இதற்குள்....

ஆனால் புரிந்து முடிப்பதற்குள் ஆயுள் முடிந்திருக்கும் எனக்கு.

ஆராய்சி தொடரும் என் வாரிசால்............???

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆண்கள் எல்லோரும் எப்படியான குழப்பத்தில் இருக்கிறீர்கள் என்று சிறிது வாசித்து வாய்விட்டுச் சிரித்தேன். நெடுக்குத்தம்பியின் கொடுமை தாங்க முடியாமல் மற்றைய தம்பிகள் படும் பாட்டை என்னவென்று சொல்வது? நெடுக்குத்தம்பியின் கணிப்புப்படி வைத்தியத்துறையைச்சார்ந்த ஆண்கள் துறவிகளாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் கிளறிக்கிழித்துப் படித்தபின்னும் பெண்மீதான ஆசையை ஆண்வைத்தியர்கள் முற்றுமுழுதாகத் துறந்ததாகத் தெரியவில்லை. காதல் செய்கிறார்கள், காமம் துய்கிறார்கள் எப்படி அவர்களால் ஊனும், உதிரமும், எலும்பும் சேர்ந்து தோற்றம் பெற்ற ஒரு உருவத்தை அணைத்துக் காமுற முடிகிறது? நெடுக்குத்தம்பி உங்களால் இதற்குப் பதில் சொல்ல முடியுமா?

அக்கா.. ஆய்வுசாலையும் பஞ்சணையும் ஒன்றல்ல. தாயும் தாரமும் ஒன்றா.. இரண்டு பேரும் பெண்ணாக இருந்தாலும்.. தாரம் வேறு.. தாய் வேறு.

வைத்தியர்கள் என்போர் மனிதர்கள். முதலில் அவர்களை மனிதர்களாக அடையாளம் காண வேண்டும். அதன் பின்னர் தான் அவர்கள் வைத்தியர்கள்.

வைத்தியர்கள் சாமியார்கள் அல்ல. அவர்களை அப்படி பார்ப்பதும் தவறு. நான் அறிய மருத்துவ பீடத்துக்கு தெரிவானது முதல்.. பலவகை புளூ பிலிம்களை யாழ்ப்பாணத்திலேயே போட்டுப் பார்த்தவர்கள் இருக்கின்றனர். அதுமட்டுமன்றி மருத்துவ பீடத்தைச் சேர்ந்தோர் ராக்கிங்கில் அதிகம் வதைகளை செய்ததையும் குறிப்பாக மாணவிகளை பாலியல் ரீதியில் இம்சித்ததையும் அறிந்திருக்கிறேன். இதற்காகவே மருத்துவ பீட அனுமதி கிடைத்தும் போகாமல் விட்ட மாணவிகள் இருக்கின்றனர்.

என்னைப் பொறுத்தவரை எனக்கு இந்த வெட்டிக்கிழித்ததுதான் அதிகம் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. அப்படித்தான் எல்லோருக்கும் இருக்கும் என்றும் இல்லை.

எனக்கு அசிங்கமாகத் தெரிவது சிலருக்கு அப்படி இல்லாமல் இருக்கலாம். அது ஆளாளுக்கு வேறுபடும் அக்கா. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

யோவ் இப்ப என்னைய்யா சொல்றிங்க? :lol:

நான் உள்ளை வரவா வெளிய நிக்கவா? :D

நெடுக்ஸ் அண்ணோய் பாவம்ணே பசங்க‌

இப்படி வீடியோ போட்டுகாட்டி ஏன்யா பயமுறுத்துறிங்க?

வாயுள்ள பிள்ளை பிளைக்கும்னு சொல்லுவாங்க அந்த வாய்க்கே பூட்டு போடபண்ணிடுவிங்க போல. :D

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கும் அசாத்திற்கு வெள்ளை அடிக்கவில்லை என்பதை இங்கு உறுதியாக கூறுகின்றேன்.  நான் மேற்குலகின் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதினால் ஏன் இவர் ரஷ்யாவில் தஞ்சம் கோரவில்லை என எழுதுகின்றார்கள். எனக்கு எதிராக எழுதுபவர்கள் ஒன்றும் இலங்கையில் இருந்து எழுதுபவர்களல்ல.  எனவே தாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஆட்சியில் இருக்கும்  அரசை விட மாற்றுக்கருத்து கட்சிகள் இல்லையா என யாராவது பதில் சொல்ல முடியுமா?  தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு செய்யும் நடவடிக்கைகளை மட்டும் ஆதரிப்பீர்களா? நீங்கள் ஆதரிக்கும் இந்த மேற்குலகுதானே முள்ளிவாய்க்கால் நிகழ்வை வேடிக்கை பார்த்தது. 👈 அப்போது வராத உணர்ச்சிகளும் வார்த்தைகளும் உக்ரேன்,சிரியா ,காஸா போன்ற நாடுகளின் கலவரங்களில் மேற்குலகு சார்பான கருத்துக்கள் வருகின்றனவே அது ஏன்? எப்படி? விடுதலைப்புலிகள் செய்தவை மாறானவை என்பதையே உங்கள்  அன்றைய மௌனம் சொல்லி நிற்கின்றது. மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கும் காசா அழிவிற்கும் சிரியா வீழ்சிக்கும் சந்தோசமாக ஆர்ப்பரிப்பவர்கள் ஏன் முள்ளிவாய்க்கால் அழிப்பை ஆர்ப்பரிக்கவில்லை?    அண்மைய மேற்குலகின் அழிவுகள் எல்லாம் நான், என் மண், என் தேசம், என்பவர்களை தான் தேடி அழித்தொழித்துக்கொண்டிருக்கின்றது. எல்லா மனிதர்களுடனும் எல்லா கருத்துக்களுடனும் ஒருமித்து நிற்க முடியாது.
    • ஒரு படைவீரர் இப்படி தன் நிலையைச் சொல்லியிருந்தார். இது அவரின் வார்த்தைகளே...........   கொடுங்கோலின் கடைசிப் படைவீரன் ------------------------------------------------------------- என்னுடன் இருந்தவர்கள் என்னவானார்கள் என்று எனக்குத் தெரியாது   சிலர் அந்தப் பக்கமாக போனார்கள் சிலர் இந்தப் பக்கமாக போனார்கள்   நான் பிரதான தெருவுக்கு போக விரும்பினேன்   அங்கிருந்து எந்த ஊருக்கும் போகலாம் பின்னர் என்னை யாருக்கும் தெரியாது அதன் பின் எனக்கு கவலையும் இல்லை   ஒரு ஊருக்கு போனேன் பின்னர் இன்னொரு ஊருக்கு போனேன்   எங்கும் மக்கள் கூட்டங்களாக கூடியிருந்தனர் அவர்கள் எல்லோரும் ஓடி விட்டனர் என்றனர்   அழுது அழுது மகிழ்வாக இருந்தேன்   இறைவனே எல்லாப் புகழும் உனக்கே.
    • அடே, இதுவும் நல்ல தொழிலா இருக்கே! சத்தமில்லாமல், எதிர்ப்பில்லாமல், வந்தோமா போனோமா என்று கைநிறைய பணம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள், திட்டம் போடுகிறார்கள், கூட்டு சேர்கிறர்கள், இடம் தெரிகிறார்கள், அபாரமாய் உழைக்கிறார்கள், உல்லாசமாய் வாழ்கிறார்கள். திருமண உறவாய்,, தொழில் சிநேகித  இருக்குமோ இருவருக்கும்? 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.