Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களிடம் ஒரிரு வார்த்தை…..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய எனது தமிழ் உறவுகளே!

கடந்த வருடம் உங்களுடன் மலேசியாவில் இருந்து உரையாடிய பின்பு தனிமைச் சிறையிலிருந்து உங்களுடன் தொடர்பு கொள்ள எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டு நான் சோகம் கலந்த மகிழ்ச்சியுடன் இம்மடலை வரைகின்றேன்.

நான் பிடிபட்ட போது எனது வாழ்க்கை முடிந்து விட்டது. என்று நினைத்தேன், எனது மக்களுக்காக எனது நினைவலையில் கட்டிய மாளிகைகள்

தூளாகி நொருங்கி துண்டு, துண்டாக விழுந்த போது சில மணிநேரம் அதிர்ச்சியில், மயக்கநிலையிலேயே இருந்தேன். மனம், நினைவு எல்லாம் மங்கலாகி ஏதோ சித்து பிடித்த நிலைக்கு தள்ளப்பட்டேன்.

ஆனால் இன்று இதையெல்லாம் தாண்டி நான் ஒரு மறு பிறவி எடுத்தது போல தான் உணர்கிறேன்.

பல சந்தர்பங்களீல் மரணத்தின் வாய்க்குள் போய் மீண்டு வரும்போதெல்லாம் எப்படி இது சாத்தியம்? எனக்கு பதில் கிடைக்கவில்லை. இம்முறை நான் நினைக்கிறேன். எனது மக்களுக்கு செய்ய வேண்டிய பணி பாக்கியிருக்கிறது. அதனால் தான் படைத்தவன் என்னை விட்டு வைத்திருக்கிறான்.

எனது வாழ்க்கையில் எனது உயிர் நண்பர் தேசியத் தலைவர் திரு பிரபாகரனுடன் விடுதலைப் புலிகள் ஆமைப்பை கூட்டி வளர்க்க அர்ப்பணித்தேன் இதனை வெற்றிகரமாக முடித்து அதிஉயர் நிலையில் இருக்கையில் சற்று ஓய்வெடுக்கவோ என்னவோ இயக்க வேலைகளில் இருந்து சற்று தள்ளி வைக்கப்பட்டேன். சில காலத்திற்கு பின்பு 2009 இல் மீளவும் என் பணியை தொடரவேண்டிய அழைப்பு வந்தது. அதில் முக்கிய பணியாக எனது மக்களையும், இயக்கத்தின் உடன் பிறப்புக்களையும் காப்பாற்ற முயற்சித்தேன், அனால் துரதிஸ்ட வசமாக இதில் நான் தோல்வி கண்டேன்.

தற்போது எனது 3வது பயணம் சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பமாகின்றது. அது தான் NERDO – புனித பயணம்.

நான் பிடிபட்டதில் இருந்து எனது மக்களையும் சிறைகளில் இருக்கும் இயக்க தோழர்களையும் பிள்ளைகளையும் போரினால்; பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகளையும் கணவன்மாரை இழந்து தவிக்கும் சகோதரிகளையும் எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும். என்று இரவுபகலாக தியானித்தேன், தவமிருந்தேன் தனியறையில் எத்தனையோ இரவுகள் தூக்கமின்றி புரண்டேன், அழுதேன். எனது மதிப்பிற்குரிய டாக்டர் இப்ராகிட்டிகாதர் பல தடைவ எனக்கு கூறுவார் நீ எப்படி ஆக வேண்டு என்று கனவு காண்கின்றாயோ அதுபோலவே ஆவாய். வீண் போகாது. நம்பிக்கையுடன் முயற்சி செய். இது எப்படி நடக்கும் என்பது மனிதருக்கு அப்பாற்பட்ட விடயம்.

இவரின் அறிவுரையை தவிர என் கண்முன் வேறு ஒரு தெரிவும் இருக்கவில்லை. முயற்சித்தேன் நம்பிக்கையுடன் இந்த வாய்ப்பை அடைந்தேன்.

நான் எனது வாழ்க்கையில் தனி அறைகளில் தான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வந்திருக்கிறேன் – Interpol இல் என்னை தோடத் தொடங்கிய காலம் நான் ஒரு சிறைப்பட்டவன் போல்தான் வாழ்ந்தேன். அதனால்தானோ என்னவோ தற்போதைய சிறைவாசமும் எனக்கு பெரிதும் அதிர்ச்சியை தரவில்லை. ஆனால் தனிமை தான் என்னை நீண்ட காலம் வாட்டியது.

எதிர்க்கட்சியினர் மேடைகளிலும், பத்திரிகைகளிலும் கூறுவது போல் நான் சொர்க்க போகத்தில் வாழவில்லை. அப்படி கிடைத்தாலும் அது நரக வாழ்க்கைதான் எனக்கு ஒரு சிறிய வீட்டில் ஒரு அறை Mess சாப்பாட்டுடன் எனது வாழ்க்கை போகிறது. அவ்வளவுதான்.

ஆரம்பத்தில் என்னை எதிரியாக பார்த்த காவலுக்கு பொறுப்பானவர்களுடன் அன்பை கொடுத்து அன்பினை திரும்ப பெற்றேன். கைவிலங்கு, கால்விலங்கு போட்டவர்தான் இன்று எனக்கு நோய் வந்த நேரத்தில் காலுக்கு ஒத்தணம் தருகிறார்கள். இதுவும் ஒருவித மனிதபண்பு தான். நான் பிடிபட்டதிலிருந்து இன்று வரை எமது மக்கள் மத்தியிலெழும் குழப்பங்கள், சந்தேகங்கள், நண்பர்கள், எதிரிகளையும், நம்பிக்கையானவர்கள் கைவிட்டதாயும் நான் உணர்ந்து மனம் உடைந்து போனேன். அந்த வலி தான் என்னவோ நெஞ்சு வலியாக மாறி மாரடைப்பின் ஆரம்பத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறது.

நான் எப்படி பிடிபட்டேன்? அதற்கு எனக்கே இன்றுவரை சரியான தெளிவான பதில் கிடைக்கவில்லை. இதன் பின்னணியில் யார்? புதில் கிடைக்கும் போது கூறுகிறேன்.

கடந்த சில வாரங்களிற்கு முன் எனது வன்னிப்பயணம் எனது பிள்ளைகள் மக்களை சந்தித்த பின்பு என்னிடத்தில் ஏற்பட்ட வலியில் இருந்து மீள முடியவில்லை.

மனிததர்களில் இரண்டு வகை. ஒன்று வாழ்;க்கையில் ஏழைகளாக பிறந்து ஏழைகளாக வாழ்கிறார்கள். மற்றது ஏழைகளாக பிறந்து செல்வந்தர்களாக வாழ்கிறார்கள் இது மறுவகை இந்த இரண்டு வகையும் வலியோ பாதிப்போ இல்லை. ஆனால் இலங்கையில் குறிப்பாக வட – கிழக்கில் இருந்த, இருக்கும் தமிழ் மக்கள் வளமுடன் ஒர காலத்தில் வாழ்ந்தவர்கள். இன்றைய தலைமுறை வளமுடன் பிறந்தவர்கள். ஆனால் குறிப்பாக வன்னி, படுவான்கரை பகுதிகளில் இடம்பெயர்ந்தவர்கள் வாழ் – நாள் முழுவதும் சேமித்ததை ஒரு இரவில் இழந்து அனாதரவற்ற நடைப்பிணங்களாக இன்று இருக்கின்றார்கள். . இவர்கள் அனுபவிக்கும் வலி, (உடல், உளரீதியினால்)… இதனை கூறுவதற்கு வார்த்தை இல்லை.

இந்த பிரதேசத்தில் வாழும் 1 – 20 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் எந்த வித சந்தோசத்தையும் அனுபவிக்காமலே தமது உன்னதமான உயிரை விடுதலைத் தீயில் எரித்தார்கள், மிகுதி மிஞ்சி இருப்பவர்களும் இதே நிலையில் தான் இன்று இருக்கிறார்கள். அனால் ஒரு வகையில் உயிரை அற்பணித்தவர்களை விட உயிருடன் இருப்பார்கள் தான் இன்று அதிக வலியை தாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

அண்மையில் எனது வன்னிப் பயணத்தின் போது வைகறை என்ற காப்பகத்தில் எம்முடன் ஒன்றுகலந்துவிட்ட சிறு தம்பி ஒருவர் – வயது 10 அன்று அவரின் பிறந்த நாள். இவரை ஒரு பாட்டுப்பாடும்படி எல்லோரும் வைகறையில் கேட்டோம். அந்த சிறுவன் பாடியபாட்டு எனது கண்களை குளமாக்கியது. “என்னை பெற்ற தாயே என்னை ஏன் படைத்தாய்” என்ற அந்த பையனின் பாடலுக்கு எனக்க பதில்இல்லை. வெளிநாட்டில் இருக்கும் அன்பு உள்ளங்களே இந்த பாலகனை போல உங்கள் குழந்தை பாடியிருந்தால் எப்படி உங்களுக்கு இருக்கும்? உங்கள் மனசாட்சியை கேளுங்கள் பதில் கிடைக்கும்.

எனது இந்த வன்னி விஜயத்தின்போது மனதை வாட்டிய இன்னொரு சம்பவம் “ காலையில் 6 மணி தொடக்கம் கொட்டும் பனியிலும், மழையிலும் பாடசாலை சீருடையில் சிறு சிறு வண்ணத்தி பூச்சிகளை போல தெரு ஓரங்களில் எமது குஞ்சுகள் நீண்ட தூரம் நடந்து பாடசாலைக்கு செல்கிறார்கள். வெளிநாடுகளில் வாழும் அன்புள்ளங்களே குளிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் இப்படி பனியில் நடந்து பாடசாலைக்கு செல்வதனை பார்த்துக் கொண்டு இருப்பீர்களா? இதயம் வெடிக்காதா?

இதனை நான் கூறுவது உங்களை புண்படுத்துவதற்காக அல்ல. உங்களில் பெரும்பாண்மையோருக்கு இந்த விடயங்கள் தெரியாமல் இருக்கிறது. நான் விஜயம் செய்த பாடசாலைகளில் பெரும்பான்மை மாணவர்களின் வேண்டுகோள் தமக்கு ஒரு சைக்கிள் வேண்டும். நாம் அயிரமம் இலட்சம் கேட்கவில்லை ஒரு சிறுதொகை! அவ்வளவுதான் ஒரு சைக்கிளின் பெறுமதி இதனை உங்களிடம் நான் கூறும் போது சிலர் என்மீது புதுவிதமான குற்றச்சாட்டை முன்வைப்பார்கள். “அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை இவர் ஏன் தனது தயவில் எடுத்துப் போடுகின்றார்? உங்கள் பிள்ளைகள் படிக்கும் பாடசாலைக்கு நீங்கள் உதவுவதில்லையா? அரசாங்கம் தான் எல்லாம் செய்ய வேண்டும் என்றால் ஏன் மகாஜனா, மத்திய கல்லூரி, இந்துக்கல்லூரி, ST – Jhon’s, ST – Patric’s என்ற பெயர்களில் வெளிநாடுகளில் பழைய மாணவர் சங்கங்கள் உருவாக்கி பணம் சேர்க்கிறார்கள்?

நான் மகாஜன கல்லூரில் படித்துக் கொண்டு இருக்கும் போது “துரையப்பா ஜெயரட்ணம்” மண்டபம் கட்டுவதற்கு மாணவர்கள் எல்லோரையும் அழைத்து தற்போதைய அதிபர் – கனகசபாபதி (எனது அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய ஆசான்) ஒரு கூட்டம் வைத்தார். அதில் இந்த மண்டபத்தை நாம் எல்லோரும் சேர்ந்து நிதியை எமது மக்களிடம் சேர்த்து மண்டபத்தை கட்ட வேண்டும். அதன்படி எல்லோருக்கும் ஒவ்வொரு “நிதி சேர்ப்பு சீட்டு புத்தகம் வழங்கப்பட்டது. எனக்கும் ஒன்று தரப்பட்டது. நான் எனக்கு தெரிந்த எல்லோரிடத்திலும் கதைத்து அதிகளவு நிதியை சேகரித்து கொடுத்தேன். இதுவும் அரசாங்கத்தின் கடமை என்று நாம் தட்டிக் கழித்தால் இன்று கம்பீரமாக எழுந்து நிற்கும் இந்த மண்டபத்தை மகாஜனா கல்லூhயில் நாம் பார்த்திருக்க முடியாது.

இதே போன்றுதான் கிழக்கு மாகாணத்தில் 1979இல் சூறாவளி தாண்டவம் ஆடிய போது நாம் யாழ் – பல்கலைக்கழக மாணவர்கள் அரசு செய்யும் என்று தட்டி கழிக்கவில்லை. மாறாக – பல்கலைக்கழக மாணவர்கள் தெருதெருவாக திரிந்து துணிசேர்த்துக் கொண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து முதலாவதாக கிழக்கை அடைந்த பஸ் – தொகுதி நாம் தான். தற்போதும் எனது சக பல்கலைக்கழக மாணவர்களுடன் கற்கும்போது ஞாபகப்படுத்துவார்கள். அந்த நேரத்தில் பாடசாலை, படிப்பு எல்லாம் ஆழ்ந்த வேலைகளை எல்லாம் நாம் பிரத்தியோகமாக வகுப்புகளை நடத்தி A/L – Exam இற்கு மாணவர்களை தயார் படுத்தினோம். இதையும் நாம் அரசின் தலையில் போட்டுவிட்டு இருந்தால் அந்த நேரத்தில் எமது உறவினர் எப்படி பணம் உழைத்து இருப்பார்கள். நான் இப்படி கூறுவதில் அரசிற்கு வக்காளத்து வாங்குவதனால் சிலர் என்மீது குற்றம் சுமத்தலாம்.

ஒரு உண்மையையும் யதார்த்தத்தையும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன். மூன்றாம் உலக நாடுகளுக்கு இருக்கும் பெரும் சவால் அரச இயந்திரம் சரியாக, செயற்படாமையும், உழைத்தலும் இது இங்கும் புரையோடியுள்ளது, கடந்த இரு தசாப்தகாலமாக போர் நடந்து கொண்டு இருந்த பிரதேசங்களில் அரசு இயந்திரம், எப்படி இயங்கியிருக்கும் என்பதனை சற்று நிதானத்துடன் சிந்தியுங்கள். இங்கும் இது தான் பிரச்சினை. எத்தனையோ தவறுகள் அரச இயந்திரத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. இதனை மாற்றி அமைப்பதற்கு எத்தனை வருடங்கள் எடுக்கும் என்று கூறமுடியாது. ஆனால் முடிந்தவரை நடக்கும் தவறுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடைய கவனத்துக்கு எடுத்துச் சென்று தவறுகளை தருவிப்பதற்குரிய முயற்சிகளையும் NERDO செய்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு பக்கத்தில் அரச இயந்திரம் இன்னொரு பக்கத்தில் எமக்கு எதிராக குறைகூறுவோர் இரண்டுக்கும் இடையில் NERDO

நசிந்து கொண்டு தான் நகர வேண்டியுள்ளது.

மீண்டும் விரைவில் சந்திப்போம்..

என்றும் அன்புடன்

Mr. T.S Pathmanathan (K.P)

அறிக்கை தொடர்பான இணைப்பு:

Edited by nirmalan

  • Replies 80
  • Views 5.2k
  • Created
  • Last Reply

இன்றுதான் குறிப்பிட்ட நிறுவனத்தின் வலைத்தளத்தை பார்வையிட்டேன். வலைத்தளம் ஊடாக நன்கொடை அளிக்கக்கூடிய உ+ம்: paypal வசதியை ஏற்படுத்தினால் சமயம் கிடைக்கும்போது நம்மாலும் ஓர் சிறிய உதவியை வழங்கமுடியும்.

North-East Rehabilitation and Development Organization (NERDO) வலைத்தளம்: http://nerdolanka.org/

noparents1.jpg

letter.jpg

Edited by கரும்பு

உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்........

என்னை பெற்ற தாயே என்னை ஏன் படைத்தாய்” என்ற அந்த பையனின் பாடலுக்கு எனக்க பதில்இல்லை. வெளிநாட்டில் இருக்கும் அன்பு உள்ளங்களே இந்த பாலகனை போல உங்கள் குழந்தை பாடியிருந்தால் எப்படி உங்களுக்கு இருக்கும்? உங்கள் மனசாட்சியை கேளுங்கள் பதில் கிடைக்கும்.

எனது இந்த வன்னி விஜயத்தின்போது மனதை வாட்டிய இன்னொரு சம்பவம் “ காலையில் 6 மணி தொடக்கம் கொட்டும் பனியிலும், மழையிலும் பாடசாலை சீருடையில் சிறு சிறு வண்ணத்தி பூச்சிகளை போல தெரு ஓரங்களில் எமது குஞ்சுகள் நீண்ட தூரம் நடந்து பாடசாலைக்கு செல்கிறார்கள். வெளிநாடுகளில் வாழும் அன்புள்ளங்களே குளிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் இப்படி பனியில் நடந்து பாடசாலைக்கு செல்வதனை பார்த்துக் கொண்டு இருப்பீர்களா? இதயம் வெடிக்காதா

நீங்கள் ஆயுதம் வாங்கி அனுப்பும் பொழுது எங்கு போனது இந்த சுடலை ஞானம்.....அப்பவும் இப்படியான இளைஞர்கள்தான் இறந்தவை அப்பவும், போரட வேண்டும் ஆயுதம் வாங்கி சிங்களவனை அடிக்க வேண்டும் என்று உளையிட்டுப்போட்டு .அழிவுகளையும் செய்து போட்டு .இப்ப அந்த சிறுவர்களை பராமரிக்க வேண்டும் என்று புலத்து மக்களிடம் வேண்டுகோள் விடுகிறீயள்

அப்ப உங்களுக்கு போர் மூலம் உங்கள் புகழ் மக்களிடம் போக வேண்டும் என்று நினைத்தீர்கள் ..இப்ப தர்மம் மூலம் புகழ் பெற வேண்டும் என்று நினைக்கிறீயள்.....

  • கருத்துக்கள உறவுகள்
:lol: புலத்தில இருக்கிற ஆக்களிட்ட காசைக் கேக்க முதல் நீங்கள் மகிந்தவுக்கும், பசிலுக்கும் தாரை வார்த்த கோடிக்கணக்கான பணத்தில எத்தினையோ விஷயங்களைச் செய்திருக்கலாம். அதைச் செய்யாமல் அவன் எழுதிக்குடுக்கிறதை வாசிச்சுப்போட்டு " தனிமைச் சிறை" எண்டு இன்னும் எத்தினை நாளுக்குத்தான் ஊளையிடப்போறியள்?? உங்கட கண்ணீருக்கு வேணுமெண்டால் புலத்தில இருக்கிற மரை கழன்ற மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் எடுபடலாம், ஆனால் சனம் நம்பாது கண்டியளோ??!!!

ஒவ்வொரு சாமியார்களினதும் உண்மையான உள்நோக்கங்கள் எவை என்பதை நாம் கண்டறிவது கடினம்.

ஆயினும், மக்களை வசீகரிப்பதற்காகவும், அவர்களை தொடர்ச்சியாக தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதற்காகவும் வெவ்வேறு சாமியார்கள் வெவ்வேறு விதமான நுட்பங்களை கையாள்கின்றார்கள்.

இவற்றில் முக்கியமான ஒன்று மீண்டும் மீண்டும் தமது உரைகளில் – பிரச்சாரங்களில் சாவு – நோய் – தோல்வி – பிரச்சனை – வறுமை - அவலம் - மனிதாபிமானம் .... பெயர்களால் மக்களை மூளைச்சலவை செய்வதாகும்.

நில் – சிந்தி – செயற்படு!

தயவு செய்து இந்த அமைப்புக்கு ஊடாக ஒரு சத உதவியும் செய்யவேண்டாம் என மறைமுகமாக கூறுகிறார், எழுதியவர்.

1. தான் இன்றும் "இன்ரபோலால்" தேடப்படுவதையும், "சிறையுள்" உள்ளதையும் சொல்கின்றரர்.

"நான் எனது வாழ்க்கையில் தனி அறைகளில் தான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வந்திருக்கிறேன் – Interpol இல் என்னை தோடத் தொடங்கிய காலம் நான் ஒரு சிறைப்பட்டவன் போல்தான் வாழ்ந்தேன். அதனால்தானோ என்னவோ தற்போதைய சிறைவாசமும் எனக்கு பெரிதும் அதிர்ச்சியை தரவில்லை. ஆனால் தனிமை தான் என்னை நீண்ட காலம் வாட்டியது."

"எதிர்க்கட்சியினர் மேடைகளிலும், பத்திரிகைகளிலும் கூறுவது போல் நான் சொர்க்க போகத்தில் வாழவில்லை. அப்படி கிடைத்தாலும் அது நரக வாழ்க்கைதான் எனக்கு ஒரு சிறிய வீட்டில் ஒரு அறை Mess சாப்பாட்டுடன் எனது வாழ்க்கை போகிறது. அவ்வளவுதான்."

2. தான் ஒரு கைதி எனவும் தனக்கு வெளிப்படையாக ஒன்றையும் கூற உரிமை இல்லை என்றும் நாசூக்காக சொல்லுகின்றார்.

"நான் எப்படி பிடிபட்டேன்? அதற்கு எனக்கே இன்றுவரை சரியான தெளிவான பதில் கிடைக்கவில்லை. இதன் பின்னணியில் யார்? புதில் கிடைக்கும் போது கூறுகிறேன்."

3. இந்த நாட்டில் சிங்களவர்கள் தமிழர்களை முன்னேற விடமாட்டார்கள், வாழ விடமாட்டார்கள்

என கீழுள்ள பந்தியில் சொல்லுகிறார்.

"மனிததர்களில் இரண்டு வகை. ஒன்று வாழ்;க்கையில் ஏழைகளாக பிறந்து ஏழைகளாக வாழ்கிறார்கள். மற்றது ஏழைகளாக பிறந்து செல்வந்தர்களாக வாழ்கிறார்கள் இது மறுவகை இந்த இரண்டு வகையும் வலியோ பாதிப்போ இல்லை. ஆனால் இலங்கையில் குறிப்பாக வட – கிழக்கில் இருந்த, இருக்கும் தமிழ் மக்கள் வளமுடன் ஒர காலத்தில் வாழ்ந்தவர்கள்."

4. தானும் உதவி கட்டி எழுப்பிய கல்லூரி இன்று "அதி உச்ச பாதுகாப்பு வலயம்" என்ற பெயரில் கல்வி மறுக்கப்படுவதை சொல்லுகின்றார்.

"இன்று கம்பீரமாக எழுந்து நிற்கும் இந்த மண்டபத்தை மகாஜனா கல்லூhயில் நாம் பார்த்திருக்க முடியாது."

5. மொத்தத்தில் அமைப்பு ஒரு ஒட்டு அமைப்பே ( சுயமாக செயற்பட முடியாத ) என சொல்லி முடிக்கின்றார்.

"ஒரு பக்கத்தில் அரச இயந்திரம் இன்னொரு பக்கத்தில் எமக்கு எதிராக குறைகூறுவோர் இரண்டுக்கும் இடையில் NERDO நசிந்து கொண்டு தான் நகர வேண்டியுள்ளது."

இன்று செஞ்சிலுவை சங்கம் உட்பட அநேகமாக எல்லா அரச சார்பற்ற அமைப்புக்களும் சிங்களத்தால் வெளியேற்றபட்டுள்ளது.

தாயகத்தில் எமது மக்களை ஒரு பகடை காய்களாக வைத்து, இன்று பலமாக உள்ள புலம்பெயர் சமூகத்தை ஒரு நெகிழ்வுத்தன்மை ஊடாக பிளவு படுத்துவதே சிங்கள புலனாய்வு துறையின் இன்றைய செயற்பாடு.

Edited by akootha

உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்........ நீங்கள் ஆயுதம் வாங்கி அனுப்பும் பொழுது எங்கு போனது இந்த சுடலை ஞானம்.....அப்பவும் இப்படியான இளைஞர்கள்தான் இறந்தவை அப்பவும், போராட வேண்டும் ஆயுதம் வாங்கி சிங்களவனை அடிக்க வேண்டும் என்று உளையிட்டுப்போட்டு, அழிவுகளையும் செய்து போட்டு, இப்ப அந்த சிறுவர்களை பராமரிக்க வேண்டும் என்று புலத்து மக்களிடம் வேண்டுகோள் விடுகிறீயள்.

அவருக்கு சுடலை ஞானம் வந்தது ஒருபுறம் அமைய, இன்னமும் இவ்வளவு அழிவுகளிற்கு பிறகும் தூக்கம் களையாமல் ஊளையிடுகின்றவர்கள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? இன்னமும் வெட்டுவோம், கொத்துவோம், கிழிப்போம் என்று புலத்தில் இருந்து ஊளையிடுகின்றவர்களைவிட இவருக்கு வந்த சுடலை ஞானம் மேலாக தெரிகின்றது.

ஆனால் சனம் நம்பாது கண்டியளோ??!!!

ஆமாம் நிச்சயமாக தாயகத்தில் வாழ்கின்ற சனம் புலத்தில் இருந்து ஊளையிடுகின்ற அறிவாளிகளை (?) நம்பாது.

இவற்றில் முக்கியமான ஒன்று மீண்டும் மீண்டும் தமது உரைகளில் – பிரச்சாரங்களில் சாவு – நோய் – தோல்வி – பிரச்சனை – வறுமை - அவலம் - மனிதாபிமானம் .... பெயர்களால் மக்களை மூளைச்சலவை செய்வதாகும். நில் – சிந்தி – செயற்படு!

நீங்கள் குருக்கள் குசுவிடலாம், பிரச்சனை இல்லை.

ajan-copy.jpg

I have sacrificed 2 of my children to the Tamil course and lost my ability to use my hands due to an elephant attack. I have to look after my wife and two young children who survived this war. When I approached NERDO for help they immediately gave me Rs. 1000 and promised to look after me. But If the Diaspora Tamil community donates more money then NERDO will be able to setup a small business for me and others who are in a similar situation to me. Please do not ignore us! We are in a desperate situation and we need help!

மூலம்: Please do not ignore us!

அவலத்தை வைத்து சிங்களவன் செய்யும் வியாபாரம் இது..

உறவுகளே நீங்கள் உங்களின் உறவுகளுக்கு ஏதாவது செய்ய விரும்பினால் உங்களுக்கு தெரிந்தவர் ஊடாக தாராளமாக செய்யலாம்... அதுக்கான வசதிகளும் தொடர்புகளும் உங்களுடன் பேசும் நண்பர்கள் உறவுகள் பலரின் ஊடாக நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்... கரணம் உங்களின் உறவுகள் தான் அங்கு இன்னல்களுக்குள் இருக்கிறார்கள்... ஆனால் NERDO போண்ற சிங்களவனின் அமைப்புகளூடாக வேண்டாம்...

உங்களது பணம் சிங்களவனுக்கு நேரடியாக வர வேண்டும் என்பதுக்காக தான் இந்த அமைப்பை அவன் அங்கு நிறுவ அனுமதி அளித்து இருக்கிறான்...

NERDO க்கு பின்னால் ஒரு நீண்டகால அரசியல் திட்டம் ஒண்றையும் சிங்களம் செய்து வருகிறான்... டக்கிளஸ் தேவானந்தா எப்படி சில தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கள், சலுகைகள் எண்று தனக்கு பின்னால் ஒரு சிறிய கூட்டத்தை கூட்டினானோ அதே போண்று KP க்கு பின்னால் பெரிய சமூகத்தை சிங்களம் எதிர்ப்பார்க்கிறது...

மிக முக்கியமான ஒண்று.... தாய்லாந்தில் KP யின் மனைவி பெயரில் புலிகளால் நடத்தப்பட்ட நிறுவனம் இப்போது சட்ட பூர்வமாக KP யினால் கையகப்படுத்தப்பட்டு அதே பெயரில் அப்படியே இயங்கி வருகிறது... தாய்லாந்து அரசோ சிங்கள அரசோ அதை கையகப்படுத்தவில்லை... என்பதை உறுதிபட சொல்கிறேன்... ( மன்னிக்க வேண்டும் என்னால் மேலதிக விபரம் தரமுடியாத நிலையில் இருக்கிறேன்) அந்த நிறுவனம் தமிழர்களின் பணம்தானே...??

Edited by தயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலையை வரிந்து கட்டிக்கொண்டு வீரச்சாவடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நம்பி தற்போது தடுப்பு முகாமில் உள்ள 12,000 போராளிகளுக்கும் விடுதலைப் போராட்டத்துக்கு உறுதுணையாக நின்று- இன்று தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவித் தமிழ் மக்களுக்கும் ஏதாவது உதவும் திட்டம் இருந்தால் கூறுங்கள். அவர்களுக்கு ஏதாவது செய்து கொண்டிருந்தால் அதனை மனச்சாட்சியுடன் இதில் கூறுங்கள். (நாங்கள் எவ்வளவோ செய்கிறோம், அதனை எல்லாம் இதன் வழியாகக் கூறமுடியாது என சமாளிப்பு வேலைகளை விட்டுவிட்டு உண்மையை மட்டும் இதில் எழுதுங்கள்)

இங்கே நெர்டோ ஊடாக செய்யுமாறு நான் பரிந்துரை செய்யவில்லை. அவர்கள் ஓரளவு ஏதாவது ஒருவகையில் செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்தளவில் போற்றப்பட வேண்டிய செயல்.

தயா, கே.பி.யைப் பற்றி புட்டுப்புட்டு வைக்கின்ற நீங்கள் எல்லாம் யார் என்பது இப்போது எல்லாம் கள நண்பர்களுக்கு நன்கு தெரியும். யாரின் நிகழ்ச்சி நிரலுக்கு கீழ் நீங்கள் இயங்குகின்றீர்கள் என்பதும் எங்களுக்கும் தெரியும். உங்களைப்பற்றி நாமும் ஆதி தொடக்கம் அந்தம் வரை இதில் எழுத முடியும். ஆனால், பாவம் உங்களைப் போன்ற ஏமாளிகளை எல்லாம் இதில் எழுதி எமது பொன்னான நேரத்தினை வீணடிக்க விரும்பவில்லை.

எல்லாக் கருத்துக்களுக்கும் உடனுக்குடன் பதில் அளிக்கின்றீர்கள். உங்களுடைய இந்தச் செயலை நாம் பாராட்ட வேண்டியதில்லை. அதற்கான அவசியமும் எமக்கு இல்லை. பாராட்ட வேண்டியவர்கள் உங்களைப் பாராட்டிக்கொள்ளட்டும், மெய்ச்சிக்கொள்ளட்டும். உங்களுக்கு கிடைக்கின்ற நேரம் போன்று எமக்கும் கிடைத்தால் அதாவது, யாராவது பணம் தந்தால் உங்களைவிட உச்சகட்டமாக நாங்கள் வக்காளத்து வாங்க முடியும்.

மீண்டும், மீண்டும் தெளிவாக நான் கூறிக்கொள்வது இதுதான். மாய உலகுக்குள் இருந்துகொண்டு அரசியல் செய்யாது, யதார்த்தத்தினைப் புரிந்துகொண்டு தாயகத்தில் அல்லற்படுகின்ற முன்னாள் போராளிகளுக்கும் மக்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவுங்கள். மற்றவர்கள் மீது சேறு வாரிப்பூசிக் கொண்டு காலத்தினை வீ ணடிப்பதால் எத்தனையோ பேரின் உயிரிழப்புக்களுக்கும் வாழ்க்கைச் சிதைவுக்கும் புலத்தமிழர்களாகிய நாமே மறைமுக காரணிகளாக இருந்து கொண்டிருக்கின்றோம் என்பதுதான் உண்மை.

புலத் தமிழர்களே நீங்கள் கொடுத்த நிதியினை பின்வரும் அமைப்புக்கள் வைத்திருக்கின்றன. முடிந்தால் அவர்களிடம் கேள்வி கேட்டுப்பாருங்கள்.

இறுதிப் போருக்கு என தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்ற போர்வையில் அனைத்துலக தொடர்பகப் புலிகள் இறுதிக்காலத்தில் புலம்பெயர் மக்களிடம் சேகரித்த நிதி எங்கே?

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் சேகரித்த நிதி எங்கே?

தமிழர் மருத்துவ நிதியம் சேகரித்த நிதி எங்கே? (இது பிரித்தானியாவில் வேறொரு பெயரிலும் கனடாவில் வேறொரு பெயரிலும் அமெரிக்காவில் வேறொரு பெயரிலும் இயங்கி வருகின்றது)

வெண்புறா சேகரித்த நிதி எங்கே?

கனடிய வானொலிகளான சிஎம்ஆர், சிரிஆர், ரிவிஐ சேகரித்த நிதி எங்கே?

முடிந்தால் யாராவது தொடர்புபட்டவர்களிடம் கேட்டுப் பெற்று இதில் எழுதி விடுங்கள்.

ஏமாறுகின்றவன் இருக்கும் வரை ஏமாற்றுப் பேர்வழிகள் தொடர்ந்து இருந்துகொண்டுதான் இருப்பார்கள்.

அண்ணை நீங்கள் NERDO ஊடாக சனத்துக்கு குடுத்த பணிசுக்கும் தேத்தண்ணீக்கும் நண்றியை சிங்களவனிடம் சரண் அடைந்த KP அண்ணையிட்டை சொல்லி விடுங்கள்.... !

உங்கட KP அண்ணையை எங்களுக்கு எல்லாத்தையும் விட அதிகமாக தெரியும்...

எல்லாக் கருத்துக்களுக்கும் உடனுக்குடன் பதில் அளிக்கின்றீர்கள். உங்களுடைய இந்தச் செயலை நாம் பாராட்ட வேண்டியதில்லை. அதற்கான அவசியமும் எமக்கு இல்லை. பாராட்ட வேண்டியவர்கள் உங்களைப் பாராட்டிக்கொள்ளட்டும், மெய்ச்சிக்கொள்ளட்டும். உங்களுக்கு கிடைக்கின்ற நேரம் போன்று எமக்கும் கிடைத்தால் அதாவது, யாராவது பணம் தந்தால் உங்களைவிட உச்சகட்டமாக நாங்கள் வக்காளத்து வாங்க முடியும்

நான் எழுதுறதுகளை நீங்கள் பாக்கிறீயள், தெரிஞ்சு கொள்ளுறீயள்... ஆனால் நேரம் போத இல்லை... :D

ஆக பணப்பிரச்சினையாலை தான் காசு கேட்டு வந்து இருக்கிறீயள்.... :lol: :lol: :lol: KP அண்ணை உங்களுக்கு இப்ப தான் தர தொடங்கினவர் போல... ??

Edited by தயா

அண்ணை நீங்கள் NERDO ஊடாக சனத்துக்கு குடுத்த பணிசுக்கும் தேத்தண்ணீக்கும் நண்றியை சிங்களவனிடம் சரண் அடைந்த KP அண்ணையிட்டை சொல்லி விடுங்கள்.... !

உங்கட KP அண்ணையை எங்களுக்கு எல்லாத்தையும் விட அதிகமாக தெரியும்...

நான் எழுதுறதுகளை நீங்கள் பாக்கிறீயள், தெரிஞ்சு கொள்ளுறீயள்... ஆனால் நேரம் போத இல்லை... :D

ஆக பணப்பிரச்சினையாலை தான் காசு கேட்டு வந்து இருக்கிறீயள்.... :lol: :lol: :lol: KP அண்ணை உங்களுக்கு இப்ப தான் தர தொடங்கினவர் போல... ??

புனர்வாழ்வுக்கழகம் முள்ளிவாய்க்கால் வரை அங்கு பணி செய்தது. அந்த பணியின் போது அவர்கள் 12 பொறுப்பாளர்களையும் 56 தொண்டர்களையும் பலிகொடுத்து பணிசெய்தார்கள். இப்போதும் பல அமைப்புக்கள் ஊடாக செய்துவருகின்ரார்கள். புனர்வாழ்வுக்கழகம் முள்ளிவாய்க்காலிற்கு பின்னர் நிதி சேகரிப்பதில்லை.

இலங்கை, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் நிதி முடக்கப்பட்டுள்ளது. வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றது. ஒவ்வொரும் மக்களிற்கு பணி செய்ய நிதி தேவை எனின் நேர்மையாக மக்களிடம் கேழுங்கள் தந்தால் செய்யுங்கள் பணம் பெறுவதற்கு வழி ஏனைய அமைப்புக்களையும் அனைவர்களையும் பழிசுமத்துவது அல்ல.

அண்மையில் ஒருவர் என்னிடம் சொன்னார்.. முதல் காசு வாங்கினவர்களை அப்பிடி இப்பிடி சொன்னால் தான் சனங்கள் எங்களுக்கு தருங்கள் என்றார். இதில என்ன பகிடி என்றால் அந்த நபர் தான் முள்ளிவாய்க்காலிற்கு முன்னர் பழி சுமத்தும் அமைப்புகளிற்காக நிதி சேர்த்தவர். இப்போ பளசுகள் சரிவராது அதான் புதுசில ஓட வெளிக்கிட்டு இருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் உதிரிகளாக, பலவீனமாக உள்ளார்கள் என்ற யதார்த்தத்தை இம்மாவீரர் நாளில் பதியவேண்டிய துர்பாக்கியம் எங்களுக்கு.

தமிழர்கள் தமது தனித்துவத்தை இழக்காமல், தாயகத்தை இழக்காமல் இருப்பதற்கு தமிழர்கள் மேல் அக்கறையுள்ளதாகக் காட்டும் "தலைவர்கள்" வெற்றறிக்கைகளுக்கு மேல் செயல்வடிவில் என்ன செய்கின்றார்கள் என்பதை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

தமிழர்களின் சார்பில் அரசுடன் சேர்ந்து அரசியல் செய்பவர்கள் தமிழர்களின் தாயகத்தை சிங்கள மயமாக்கும் இலங்கை அரசின் திட்டத்தைக் கண்டும் காணாமல் இருப்பது நீண்ட கால நோக்கில் ஆபத்தானது என்பதை ஏன்தான் மூடிமறைக்கின்றார்கள்?

KP அவர்கள் பசில், கோத்தபாய, மகிந்த போன்றோருடன் இத்தகைய சிங்கள மயமாக்கும் திட்டத்தைத் தடுக்க எதையும் செய்யாமல் புனர்வாழ்வில் மாத்திரம் கவனம் செலுத்துவது சிங்கள மயமாக்கலுக்குத் துணையாகத்தான் முடியும் என்பதையும் அவர் தெரிந்துதான் இருக்கவேண்டும்.

முரளீதரன் அவர்கள், மேன்மை மிகு முதலமைச்சர் சந்திரகாந்தன், மேன்மை மிகு அமைச்சர் டக்கிளஸ் அவர்கள் போண்றவர்கள் KP அவர்களிடம் இருந்து எவ்வளவு தூரம் விலகலான கொள்கையை கொண்டு உள்ளார்கள்...?? :D:lol: :lol:

கொழும்பில் தமிழர், முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் சிங்களவர்கள் குடியேறுவதை தவறென்பது எப்படி? – மஹிந்த

கொழும்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் சிங்கள மக்கள் குடியேறுவதை தவறு என எப்படி கூற முடியும் என தமிழ்க்கட்சிகளின் அரங்கத்திடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

சிங்களக் குடியேற்றங்கள் என்பது தொன்று தொட்டு நடந்துவருகின்றது. ஆயுதப்போராட்ட காலங்களிலும் கிழக்கின் பெரும் பகுதிகள் சிங்கள மயமானது. அதற்கு முன்னும் நடந்தது. இங்கே மகிந்தாவின் கேள்வியை புரிந்துகொள்ளுதலே அவசியமானது. நாம் சிங்களவனின் கொல்லைக்குள் போயிருப்போம் சிங்களவன் எம்பகுதிக்கு வரக்கூடாது என்பதை சிங்களவனோ அல்லது சர்வதேசமோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. வேணுமானால் தமிழர்களின் காணிகளை அத்துமீறி பறித்துக் குடியேறுவதற்கு சர்வதேசம் கண்டனம் மட்டும் தெரிவிக்கும். ஆனால் நாட்டை விட்டு வெளியேறியவர்களின் காணிகள் ஏராளமாக இருக்கும்போது அதற்கும் முற்றுப்புள்ளி வைக்க சிங்களத்துக்கு நன்கு தெரியும். இதை கே பியாலோ அல்லது சம்மந்தனாலோ இல்லை உருத்திரகுமார் போன்ற வகையாறாக்களாலோ தடுக்கமுடியாது. சிங்களத்துக்கு உள்ளாக தமிழர்களின் வாழ்வை தக்கவைப்பதுதான் நடைமுறைக்குச் சாத்தியமானது. புலம்பெயர் தேசங்களில் இருந்துகொண்டு சவுண்டு விடலாம் அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை. எமது புலப்பெயர்வும் தமிழர்கள் தென்னிலங்கையில் வாழ்வதும் முதலில் சிங்களவர்கள் தமிழ்பிரதேசங்களில் வாழ்வதற்கான அடிப்படையை தோற்றுவிக்கின்றது. சிங்களவனை வராதே என்பதற்கு முதல் நாம் எமது நிலங்களை நோக்கி செல்லத் தயாரா? மீள நாம் சிங்களவன் விடமாட்டான் சிங்களவனால்தான் இடம்பெயர்ந்தோம் புலம்பெயர்ந்தோம் என்று நியாயங்கள் பேசலாம் ஆனால் தென்னிலங்கையில் இருக்கும் தமிழர்களும் புலம்பெயர்ந்த பெரும்பான்மைத் தமிழர்களும் தமது சொந்த நிலங்களுக்கு போய் வரக்கூடியவாறே நிலமை உள்ளது. போய் வந்துகொண்டும்தான் உள்ளனர். நேற்று எமது நிலங்களை ஆக்கிரமித்த வெள்ளைகளின் நாடுகளில் அவர்களை அனுசரித்து வாழ்வது எமக்கு சாத்தியமாகின்றபோது போரற்ற நிலையில் சிங்களத்தை அனுசரித்து வாழ்வது சாத்தியமாகும். அதற்கான அடிப்படை எம்மிடம் இருக்கின்றது. இந்தியா எவ்வாறு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இனக்குழுக்களை பொருளாதார உறவுகள் மூலம் கலந்து இடம்மாற்றி தனித்துவமானதேசியவாதத்தை பின்தள்ளி இந்தியா என்றொரு பொதுக்கட்டமைப்பை நிறுவமுற்படுகின்றதோ அதுவே இலங்கையிலும் நடக்கின்றது. இதை அவனைக் கட்டுப்படுத்து இவனைக் கட்டுப்படுத்து அப்பதான் அவனை நம்புவோம் என்பது சாத்தியமில்லை.

அண்ணை எங்கட சனம் யாரும் சிங்களவனின் பிரதேசத்தில் வலுக்கட்டாயமாக போய் குடியேற இல்லை... ! காணியையும் வீடுகளையும் காசு குடுத்து தான் வாங்கிப் போய் குடி ஏறினவர்கள்...

தவிர குடியேறின தமிழர்கள் யாரும் அருகில் இருந்த வீட்டில் இருந்து சிங்களவர்களை விரட்டி அடிக்கவும் இல்லை...

ஆண்டாண்டு காலமாக சிங்கள அரசுகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்... நில உச்சவரம்பு சட்டம் மூலம் அரசாங்கத்தால் தமிழர் காணிகள் பறிப்பு பிறகு அவை சிங்களவர்களுக்கு தாரை வார்ப்பு... அதுக்கு பிறகு வந்த சிங்களவர்களால் பூர்வீக குடிகள் விரட்டி அடிப்பு...

இண்டைக்கு தமிழர் பிரதேச காணிகள் இலவசமாக சிங்களவர்களுக்கு குடுக்க படுகிறது... இதைத்தான் சமத்துவம் எண்டுறீர்களோ... சொந்த வீட்டில் இருந்து இடம் பெயர்ந்தவனை மீண்டும் குடியேத்த முடியவில்லை ஆனால் வந்தேறு குடிகளுக்கு முதல் மரியாதை... காரணம் சிங்களவர் என்பதால்...

ஒரு தமிழனுக்கு கொழும்பிலை இலங்கை அரசின் காணியை இலவசமாய் வாங்கி குடுத்திடுங்கோ பார்க்கலாம்...

கொழும்பில் இருந்து பிரேமதாசா காலத்தில் மலையகத்தில் இருந்து குடிபெயர்ந்த மக்கள் வாழ்ந்த நிலத்துக்கு பதிவு பத்திரம் கொடுக்கப்பட்டது... இண்று அந்த மக்களின் பத்திரங்கள் கிளிக்கப்பட்டு விரட்டப்பட்டு நிர்கதியாக நிற்க்கிறார்கள்... அவர்களின் தொகை 92 000 ... அவர்கள் குடியிருந்த பிரதேசம் சிங்களவன் யாருக்காவது வியாபார கட்டிடங்கள் கட்ட குறைந்த விலைக்கு அரசு கொடுக்கும்... இது தானே சம தர்மம்...??

வடக்கு கிழக்கு அபிவிருத்தி எண்டு சிங்களவருக்கு சிங்காரம் செய்ய படுவதுக்கு நீங்க்ள் எல்லாம் வக்காலத்து... தமிழினம் உருப்பட்டிடும் அண்ணை... !

மஹிந்த குடும்பம் தமிழர்களை மட்டுமல்ல தனக்கு உதவாத சிங்களவன்ர காணிகளையும் பறிக்கின்றான் .. சேலான் பாங் கொத்தலாவலவும் இதுக்கு விதி விலக்கல்ல..

இவருக்கு இந்த நிலமை என்றால் தமிழர்கு எம்மாத்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்

முரளீதரன் அவர்கள், மேன்மை மிகு முதலமைச்சர் சந்திரகாந்தன், மேன்மை மிகு அமைச்சர் டக்கிளஸ் அவர்கள் போண்றவர்கள் KP அவர்களிடம் இருந்து எவ்வளவு தூரம் விலகலான கொள்கையை கொண்டு உள்ளார்கள்...?? :D:lol: :lol:

அவர்கள் தமது நிலையில் மிகவும் தெளிவாகத்தான் உள்ளனர். தமிழர்கள் எதிர்காலத்தில் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை; ஆனால் அவர்களின் தற்போதைய உடனடித் தேவைகளுக்கு அரசிடம் இருந்து ஒரு சில சலுகைகளைப் பெற்றுக்கொடுத்து அவர்களை ஒரு மயக்க நிலையில் வைத்து தமது அரசியல்/பொருளாராத வாழ்வை நிலை நிறுத்துவதுதான். அதனால்தான் அவர்களால் "மாண்புமிகு"க்களாக நிலைகொள்ள முடிந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களக் குடியேற்றங்கள் என்பது தொன்று தொட்டு நடந்துவருகின்றது. ஆயுதப்போராட்ட காலங்களிலும் கிழக்கின் பெரும் பகுதிகள் சிங்கள மயமானது. அதற்கு முன்னும் நடந்தது. இங்கே மகிந்தாவின் கேள்வியை புரிந்துகொள்ளுதலே அவசியமானது. நாம் சிங்களவனின் கொல்லைக்குள் போயிருப்போம் சிங்களவன் எம்பகுதிக்கு வரக்கூடாது என்பதை சிங்களவனோ அல்லது சர்வதேசமோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

ஒரு முப்பது தமிழ்க் குடும்பங்கள் தங்கள் சொந்தக் காசைச் கொடுத்து நடுச் சிங்கள ஊரான மிகுந்தலையில் குடியேற முயற்சித்தால் என்ன நடக்கும்?

அரசாங்கம் பாதுகாப்பு, பொருளாதார உதவிகள் செய்யுமா?

அங்கு குடியேறிய தமிழ் வாலிபர்கள் சிங்களப் பெண்களுடன் "சில்மிஷம்" செய்தால் கண்டும் காணாமல் விடுமா?

தமிழர்கள்/சிங்களவர்கள்/முஸ்லிம்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்வதையும், சிங்களவர்கள் தமிழர்களின் கிராமங்களை அரச உதவியுடன் அபகரிப்பதையும் ஒரே தராசில் வைத்து சமமாகப் பார்க்கமுடியாது.

உலக வரலாற்றில் ஒரு தேசிய இனத்தை அழித்து தனது தேசிய வெறியை தீர்த்துக் கொண்ட எந்த இனமும் அட்ககப்படும் இனத்தை வாழவிட்டதாகச் சரித்திரம் இல்லை.அப்படிக் கனவு காணுபவர்கள் உலக வரலாறுகளை ஊன்றிப் படிக்கவும்.இந்திய சிறிலங்கா அரசுகள் எக் காலத்திலும் தமிழரின் விடுதலையைப் பெற்றுதரப் போவதில்லை.இந்திய சிறிலங்கா அரசுகளை எதிர்த்து நடத்தப்படும் போராட்டமே தமிழருக்கான விடுதலையைப் பெற்றுத் தரும்.

அவர்கள் தமது நிலையில் மிகவும் தெளிவாகத்தான் உள்ளனர். தமிழர்கள் எதிர்காலத்தில் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை; ஆனால் அவர்களின் தற்போதைய உடனடித் தேவைகளுக்கு அரசிடம் இருந்து ஒரு சில சலுகைகளைப் பெற்றுக்கொடுத்து அவர்களை ஒரு மயக்க நிலையில் வைத்து தமது அரசியல்/பொருளாராத வாழ்வை நிலை நிறுத்துவதுதான். அதனால்தான் அவர்களால் "மாண்புமிகு"க்களாக நிலைகொள்ள முடிந்துள்ளது.

இன்னும் ஒரு மாண்பு மிகு உருவாகிறார் அண்ணை... இது காலத்தின் கட்டாயமாம்...

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களக் குடியேற்றங்கள் என்பது தொன்று தொட்டு நடந்துவருகின்றது. ஆயுதப்போராட்ட காலங்களிலும் கிழக்கின் பெரும் பகுதிகள் சிங்கள மயமானது. அதற்கு முன்னும் நடந்தது. இங்கே மகிந்தாவின் கேள்வியை புரிந்துகொள்ளுதலே அவசியமானது. நாம் சிங்களவனின் கொல்லைக்குள் போயிருப்போம் சிங்களவன் எம்பகுதிக்கு வரக்கூடாது என்பதை சிங்களவனோ அல்லது சர்வதேசமோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. வேணுமானால் தமிழர்களின் காணிகளை அத்துமீறி பறித்துக் குடியேறுவதற்கு சர்வதேசம் கண்டனம் மட்டும் தெரிவிக்கும். ஆனால் நாட்டை விட்டு வெளியேறியவர்களின் காணிகள் ஏராளமாக இருக்கும்போது அதற்கும் முற்றுப்புள்ளி வைக்க சிங்களத்துக்கு நன்கு தெரியும். இதை கே பியாலோ அல்லது சம்மந்தனாலோ இல்லை உருத்திரகுமார் போன்ற வகையாறாக்களாலோ தடுக்கமுடியாது. சிங்களத்துக்கு உள்ளாக தமிழர்களின் வாழ்வை தக்கவைப்பதுதான் நடைமுறைக்குச் சாத்தியமானது. புலம்பெயர் தேசங்களில் இருந்துகொண்டு சவுண்டு விடலாம் அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை. எமது புலப்பெயர்வும் தமிழர்கள் தென்னிலங்கையில் வாழ்வதும் முதலில் சிங்களவர்கள் தமிழ்பிரதேசங்களில் வாழ்வதற்கான அடிப்படையை தோற்றுவிக்கின்றது. சிங்களவனை வராதே என்பதற்கு முதல் நாம் எமது நிலங்களை நோக்கி செல்லத் தயாரா? மீள நாம் சிங்களவன் விடமாட்டான் சிங்களவனால்தான் இடம்பெயர்ந்தோம் புலம்பெயர்ந்தோம் என்று நியாயங்கள் பேசலாம் ஆனால் தென்னிலங்கையில் இருக்கும் தமிழர்களும் புலம்பெயர்ந்த பெரும்பான்மைத் தமிழர்களும் தமது சொந்த நிலங்களுக்கு போய் வரக்கூடியவாறே நிலமை உள்ளது. போய் வந்துகொண்டும்தான் உள்ளனர். நேற்று எமது நிலங்களை ஆக்கிரமித்த வெள்ளைகளின் நாடுகளில் அவர்களை அனுசரித்து வாழ்வது எமக்கு சாத்தியமாகின்றபோது போரற்ற நிலையில் சிங்களத்தை அனுசரித்து வாழ்வது சாத்தியமாகும். அதற்கான அடிப்படை எம்மிடம் இருக்கின்றது. இந்தியா எவ்வாறு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இனக்குழுக்களை பொருளாதார உறவுகள் மூலம் கலந்து இடம்மாற்றி தனித்துவமானதேசியவாதத்தை பின்தள்ளி இந்தியா என்றொரு பொதுக்கட்டமைப்பை நிறுவமுற்படுகின்றதோ அதுவே இலங்கையிலும் நடக்கின்றது. இதை அவனைக் கட்டுப்படுத்து இவனைக் கட்டுப்படுத்து அப்பதான் அவனை நம்புவோம் என்பது சாத்தியமில்லை.

சிங்களவர்களும் எம்மை போல பலர் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா, சுவீடன், இத்தாலி,அமெரிக்கா போன்ற இடங்களில் அதிகமாக குடியேறியுள்ளார்கள்.அப்போ நாங்களும் போய் அவர்களின் வீட்டை ,காணியை,சொத்தை அபகரிக்கலாமா??.

சிங்களவர்கள் ஒரு போதுமே வாழாதா மணியம் தோட்டத்தில் அரச படைகளின் உதவியோடு சிங்கள மக்கள் அடாத்தாக குடியேற்றப்பட்டுள்ளனர்.இதே போல் கொஞ்ச தமிழ் அல்லது முஸ்லிம் மக்கள் மகிந்தவின் அம்பாந்தோட்டையில் அடாத்தாக குடியிருக்க முடியுமா? எவ்வகையில் நியாயமாக இவற்றை பார்க்கிறீர்கள்??

.இதே போல் கொஞ்ச தமிழ் அல்லது முஸ்லிம் மக்கள் மகிந்தவின் அம்பாந்தோட்டையில் அடாத்தாக குடியிருக்க முடியுமா? எவ்வகையில் நியாயமாக இவற்றை பார்க்கிறீர்கள்??

மகிந்தா சிந்தனையை சோசலிசத்தில போட்டு பார்த்தால் நியாயமாக தெரியுமாக்கும்??????

அவருக்கு சுடலை ஞானம் வந்தது ஒருபுறம் அமைய, இன்னமும் இவ்வளவு அழிவுகளிற்கு பிறகும் தூக்கம் களையாமல் ஊளையிடுகின்றவர்கள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

இவரின் சுடலை ஞானத்தை புலத்தில இருக்கிறவர்கள் புறக்கணிப்பு செய்வது போல்,புலத்தில் இருந்து வெட்டுவோம் கொத்துவோம் கோஸ்டிகளையும் நாம் புறக்கணிப்பு செய்ய வேண்டும்.

இவரின் சுடலை ஞானத்தைவிட அன்று தொடக்கம் இன்று வரை மத்தி மாநிலம் என்று உளையிடுகிற டக்கி ,சித்தார்த்தன்,எவ்வள்வோ மேல்......

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா சிந்தனையை சோசலிசத்தில போட்டு பார்த்தால் நியாயமாக தெரியுமாக்கும்??????

இந்த வடக்கில் வசந்தம் , கிழக்கில் விடிவெள்ளி அஃதோ?? :D

இந்த வடக்கில் வசந்தம் , கிழக்கில் விடிவெள்ளி அஃதோ?? :D

வசந்தமும் வெள்ளியும் சிங்களவருக்கே எண்டுறார்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.