Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்வாணியின் சத்திய கடிதத்தின் அடிப்படையிலேயே பிரித்தானிய தமிழர் பேரவை மேஜர் ஜெனரல் சாகி கால்லகேவை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுத்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்வாணியின் சத்திய கடிதத்தின் அடிப்படையிலேயே பிரித்தானிய தமிழர் பேரவை மேஜர் ஜெனரல் சாகி கால்லகேவை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுத்தது – திவயின கூறுகிறது‐

07 December 10 02:06 am (BST)

தமிழ்வாணி என்ற பெண்ணின் சத்திய கடிதத்தின் அடிப்படையில் பிரித்தானிய தமிழர் பேரவை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தலைமையதிகாரியான மேஜர் ஜெனரல் சாகி கால்லகேவை கைதுசெய்வதற்காக வெஸ்மினிஸ்டர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்வாணி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, பாதுகாப்பு படையினர் கைதுசெய்யப்பட்டிருந்துடன் பிரித்தானிய அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டதாக அரசாங்கம் கூறியுள்ளது. எவ்வாறாயினும் இங்கிலாந்து பிரஜையான தமிழ்வாணி வன்னி போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இறுதிக்கட்ட போரின் போது, பொதுமக்களுடன் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்ற போதே இவர் கைதுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

GTN

  • Replies 80
  • Views 6k
  • Created
  • Last Reply

தமிழ்வாணி ஞானகுமார் அவர்கள் உண்மையில் ஒரு மன உறுதியும் தமிழ் மக்கள் மீது உண்மையான பாசமும் கொண்ட ஒரு பெண்மணி.

வார்த்தைகளுடன் மட்டும் நிற்காது செயலிலும் தன சொல்லை காட்டியதை நாம் எல்லோரும் முன் உதாரணமாக கொள்ளலாம்.

"இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிகட்ட போரின் போது பலர் உயிரிழந்தது தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்று மனித உரிமை அமைப்புகள் கோரி வருகின்றன.

அப்படியாக போர் குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறுமாயின் அது தொடர்பில் சாட்சியம் அளிக்க தான் தயாராகவுள்ளதாக போரின் இறுதிகாலத்தின் வன்னிப் பகுதியில் தங்கியிருந்த லண்டனில் இருக்கும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழ் பெண்மணி தமிழ்வாணி ஞானகுமார் தமிழோசையிடம் தெரிவித்தார். "

http://www.yarl.com/forum3/index.php?showtopic=63973&view=findpost&p=540821

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்வாணியையும் இசைப்பிரியா போல போட்டுத்தள்ளாம விட்டிட்டமே என்று சிங்களம் கடுமையா கவலைப்படுற மாதிரித் தெரியுது.

சிங்களம் தான் தமிழர்களை முன்னர் இனக்கலவரங்களைத் தூண்டி பயங்கரவாதிகளாக்கியது. இனி அதி பயங்கர பயங்கரவாதிகள் ஆக்கினால் அதற்கும் சிங்களமே காரணம் என்பதை உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும். :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
சிங்களம் தான் தமிழர்களை முன்னர் இனக்கலவரங்களைத் தூண்டி பயங்கரவாதிகளாக்கியது
:wub:
  • கருத்துக்கள உறவுகள்

:wub:

நாங்க என்ன தான் சாத்வீகம் பேசினாலும்... சிங்களம் எங்களை பயங்கரவாதியாகக் காட்டுவதில் தான் திருப்தி கொள்கிறது. உலகமும் எங்களைப் பயங்கரவாதி என்று அழைக்கத்தான் பிரியப்படுகிறது.

இவ்வளவு ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டு தான் போர்க்குற்றம் நிரூபிக்கப்பட வேண்டுமா..???! 1952 இல் இருந்து 2009 மே வரை கொல்லப்பட்டது எல்லாமே பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாகத்தானே கொள்ளப்படுகின்றன.

அதென்ன பயங்கரவாதம் என்றால்.. அந்தப் பதத்தின் கீழ் மனித உயிர்களை எந்த கேள்வியும் இன்றி கொன்றொழிக்கலாம் என்று யார் சட்டம் இயற்றி வைத்துள்ளது.

எவ்வளவு துணிவா சொல்லுறான்.. மகிந்த.. கொல்லப்பட்டது எல்லாம் பயங்கரவாதிகளாம்.. அதனால விசாரணை தேவை இல்லையாம்.. உலகம் அதுக்கு ஆமாப் போடுதாம்.

ஆக.. சிங்களவனும்.. இந்தியப் படைகளும்.. நேட்டோ படைகளும் தான் மனிதர்கள்.. மிச்சம் எல்லாம் பயங்கரவாதிகள்.

இந்தப் பயங்கரவாதம் என்ற உச்சரிப்புக்கு முடிவு கட்டாமல்.. உலகில் மனித உரிமைகளை பாதுகாக்க முடியாது என்ற சிந்தனை வளர்க்கப்பட்டு அதற்காக போராட வேண்டிய நிலைக்கு மனித இனம் தள்ளப்பட்டுள்ளது.

2008 இதே கிளிநொச்சியில் மக்கள் ஐ நா வெளியேற்றத்தை தடுக்கப் போராடிய போது அதற்கு ஒரு சாட்டு. 2009 இல் மக்கள் கொல்லப்பட்ட போது மனிதக் கேடயம் என்ற சாட்டு. ஆக அவர்கள் (அதிகாரம் உள்ள ஆட்சியாளர்கள்) செய்வதெல்லாம் நியாயம்.. மக்கள் செய்வது பயங்கரவாதம். இந்த நிலையை தகர்த்து எறியாமல்.. நமக்கு மனித உரிமையும் இல்லை.. வாழ்வுரிமையும் இல்லை.

நாம் ஒரு வழியில் அல்ல பல வழிகளில் எதிரிகளால் ஊட்டப்பட்டுள்ள எம்மைப் பற்றிய எண்ணங்களை இந்த உலகில் மாற்ற வேண்டி இருக்கிறது. அதற்காக பல வழிகளில் போராட வேண்டியும் இருக்கிறது.

வல்லாதிக்க சக்திகள் தங்களின் ஆக்கிரமிப்பு நலன்களுக்காக பாவிக்கும் பயங்கரவாதம் என்ற எண்ணக் கோட்பாட்டை அழிக்காமலும் நமக்கு விடுதலை சாத்தியப்படப் போவதில்லை. அதனால் பயங்கரவாதம் என்ற உச்சரிப்பின் பின்னால் நிகழும் அனைத்துக் கொடுமைகளையும் சில அதிகாரசக்திகள் மேற்கொள்ளும் தற்துணிவான நடவடிக்கைகளின் கீழ் அவர்கள் செய்யும் அனைத்துக் கொடுமைகளையும் நாம் உலக மக்கள் முன் நிறுத்தி மக்களை விழிப்புணர்வூட்ட வேண்டும். அதன் மூலமே பயங்கரவாதம் என்ற எண்ணக் கோட்பாட்டுக்குள் விடுதலையை விரும்பும் மக்களை அடக்கி அடக்குவதை முடிவுக்கு கொண்டு வர முடியும்.

Edited by nedukkalapoovan

நாங்க என்ன தான் சாத்வீகம் பேசினாலும்... சிங்களம் எங்களை பயங்கரவாதியாகக் காட்டுவதில் தான் திருப்தி கொள்கிறது. உலகமும் எங்களைப் பயங்கரவாதி என்று அழைக்கத்தான் பிரியப்படுகிறது.

ஜயா நெடுக்ஸ் சிங்களவன்பற்றி சொன்னது சரி.....ஆனால் சர்வதேசம் பற்றிய உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளமுடியாது...எதோ சர்வதேசம் ஒழுங்காக இருப்பதால்தான் நானும் நீங்களும் அட்லீஸ் இதில கிறுக்க கூடியதாக இருக்கிறது.... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா நெடுக்ஸ் சிங்களவன்பற்றி சொன்னது சரி.....ஆனால் சர்வதேசம் பற்றிய உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளமுடியாது...எதோ சர்வதேசம் ஒழுங்காக இருப்பதால்தான் நானும் நீங்களும் அட்லீஸ் இதில கிறுக்க கூடியதாக இருக்கிறது.... :icon_idea:

அப்படிச் சொல்ல முடியாது...

சண்டைக்கு போகப் பயந்து ஓடிய சிங்களப் படைகளை அமைதி பேச்சு வார்த்தை என்று பலப்படுத்தி பயிற்சி அளித்து ஆலோசனை வழங்கி வழிநடத்தியது சர்வதேசம் என்பதை இவ்வளவு விரைவா மறந்திட்டீங்களே.

கிளிநொச்சி முன்னேற்றத்துக்கு முன் முடங்கிக் கிடந்த படைகளுக்கு 7 நாட்டு அதிகாரிகளை அனுப்பி தெம்பும் ஆலோசனையும் வழங்கினார்கள்.

அதில் இடம்பெற்றிருந்த அதிகாரிகள்.. உங்களை கிறுக்க அனுமதித்த நாடுகளையும் சார்ந்தவர்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமன்றி ஓர் பேரழிவு நிகழப் போவது தெரிந்தும் அது நடக்கும் வரை அனுமதித்துவிட்டு.. இப்போ மனித உரிமைகள் என்பதன் பெயரால்.. அவர்கள் தங்களுக்கு வசதியான நிலையை இந்து சமுத்திர பிராந்தியத்தில் உருவாக்க நிற்கிறார்களே அன்றி எமக்காக இரங்குபவர்களாக இருந்தால் அதை இந்தப் பேரழிவுகளுக்கு முன்னரே பலவற்றைச் செய்திருப்பர்.

ஓர் இசைப்பிரியாவா.. இவர்களின் கண்முன்னே கிருசாந்திகள் செம்மணியில் புதையுண்டதைக் கூட கிளறாது மண்ணோடு மண்ணாக்கினார்களே.. அப்போது எங்கே போனது இந்த மனித உரிமைகள் போர் குற்றங்கள் மீதான அக்கறை.. அவை போர் குற்றங்கள் இல்லையோ. அது அவர்களுக்கு வேண்டிய சந்திரிக்காவால் செய்யப்பட்டதால் அவை மறைக்கப்பட்டு மறக்கப்பட்டு விட்டன.

ஏதோ.. எமது ஏக்கங்களோடு இன்று அவர்களின் தேவையும் ஒரு சேர இன்றைய இந்தச் சந்தர்ப்பத்தில் இருப்பதால் முள்ளிவாய்க்கால் புதைகுழிகள் கிண்டப்படுகின்றன. ஆனால் இவர்களை முழுமையாக நம்பி நாம் இருப்போமானால்.. எம்மைப் போல் முட்டாள்களும் யாரும் இருக்க முடியாது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர இவர்களை நல்லவர்கள் என்று முத்திரை குத்தி பத்திரப்படுத்தக் கூடிய அளவுக்கு இவர்கள்.. சர்வதேசம்.. குறிப்பாக மேற்குலகம்... இந்தியா.. சீனா.. ரஷ்சியா.. இஸ்ரேல்.. பாகிஸ்தான்.. ஈரான்.. என்று யாருமே நடந்து கொள்ளவில்லை. அதையும் நாம் நினைவிருத்திக் கொண்டு செயற்பட வேண்டும். :wub:

Edited by nedukkalapoovan

எங்களுக்குதான் எல்லாம் தெரியுமே ,பிறகேன் சர்வதேசத்தை பற்றிய அக்கறை.நாங்கள் சொல்வதை அவர்கள் கேட்கவேண்டுமே ஒழிய அவர்கள் சொல்வதை நாங்கள் கேட்கமாட்டோம் ஏனெனில் நாங்கள் தமிழர்.

அரசு கேள்வி-பதில்.

ஈழப்போராட்டம் வீழ்ந்ததற்கான உண்மையான காரணம் என்ன?

விடுதலைப்புலிகளின் உலகம் அறியாமை.

அப்படியல்ல. உலகம் ஒன்றுமே செய்யாது என்பது தான்.ஏன் பல லட்சம் மக்கள் வீதிகளில் இறங்கி எமது இறக்கப்போகும் மக்களை காப்பாற்றும் படி இறைஞ்சும் போது கண்மூடி மௌனியாக இருந்தார்கள்?? தங்களின் நாய் தெருவில் அடிபட்டால் கண்ணீர் விட்டு அழும் இவர்கள் ஒரு மனித இனம் அழியும் போது பேசாமல் இருந்தவர்கள் தானே!! பெரிய மனிதாபிமானம் பேசுபவர்கள் அரசியல், மதங்களுக்கு அப்பால் இறக்கப்போகும் மனித உயிர்களை காப்பாற்றி இருக்க வேண்டும். இவர்களின் இந்த இரட்டை வேடம் தான் புலிகளானாலும் சரி, மக்களானாலும் சரி அவநம்பிக்கை கொள்ள வைத்தது.

வி.புலிகளுக்கும் , இலங்கை அரசுக்கும் நடுவராக செயற்பட்ட நோர்வே அரசின் பல போர் நிறுத்த மீறல்களை கண்டும் காணாமல் இருந்து விட்டு புலிகளின் சிறிய பிழைகளையே பெரிதாக காட்டவில்லையா? நடுநிலை வகிக்க வந்தவர்களே இந்த நிலமை எனில் ஏனைய சுயநல மேற்கு நாடுகள் பற்றி சொல்ல வேண்டுமோ?

இந்தியா இலங்கை தமிழர்களுக்கு உதவுவதாக கூறி விடுதலை இயக்கங்களுக்கு பயிற்சி வளங்கியது. பின்னர் ஒவ்வொரு இயக்கதையும் கையாண்டது என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை

மொத்தத்தில் புலிகள் போன்ற விடுதலை இயக்கங்கள் ஒரு முன் உதாரணமாக உலகில் இருக்க கூடாது என்பதில் மேற்கு நாடுகள், இந்தியா போன்றன உறிதியாக இருந்தன.அதற்கான தருணத்தை முள்ளிவாய்க்காலில் பயன்படுத்தி இப்படியான சிந்தனை உலகில் ஒரு மக்களுக்கும் வரக்கூடாது என்பதை காட்டினார்கள்.

உலகம் சொல்வதை கேட்டு தான் கொஞ்சப்பேர் சுய அறிவு இல்லாமல் மாலை தீவை போய் அடித்து மூக்கு அடிபட்டவை என்பது நல்ல உதாரணம். மேலும் இந்தியாவின் சொல்லைக்கேட்டு மக்களை கட்டாய இராணுவப்பயிற்சிக்கு அனுப்பியது ஞாபகம் இருக்குமென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்குதான் எல்லாம் தெரியுமே ,பிறகேன் சர்வதேசத்தை பற்றிய அக்கறை.நாங்கள் சொல்வதை அவர்கள் கேட்கவேண்டுமே ஒழிய அவர்கள் சொல்வதை நாங்கள் கேட்கமாட்டோம் ஏனெனில் நாங்கள் தமிழர்.

அரசு கேள்வி-பதில்.

ஈழப்போராட்டம் வீழ்ந்ததற்கான உண்மையான காரணம் என்ன?

விடுதலைப்புலிகளின் உலகம் அறியாமை.

எமக்கு உலகம் சொல்லியோ அரசு சொல்லியோ கேட்கும் நிலையில்லை. ஏனெனில் நாம்உண்மையை தரிசிக்கின்றோம். தரிசித்தவர்கள். ஒவ்வொரு மாவீரர் உரையிலும் சர்வதேசம் நோக்கி விடப்பட்ட அழைப்புக்கள் சர்வதேசம் பற்றி புரிந்து கொள்ளாததால் அல்ல. அரசுக்கும் அதைக்கேட்கும் தங்களுக்கும் ஈழத்தமிழனின் பிரச்சினை என்ன என்றாவது தெரியுமா...?

கால்காயத்துக்கு மருந்து போடுங்கள் என்று கேட்டதற்கு காலையே வெட்டியதை சரி என்பதுதானே தங்களது பதில்.

இதில் ஆராய்ச்சி வேறு.

தொடர்ந்து இது போன்ற வல்லுனர்களுடைய கற்பனைகளைப்படியுங்கள். நியமான ஈழத்தவனாக கண்முன்னே நடக்கும் நியத்தை தொடர்ந்து ஒதுக்குங்கள்.

எங்களுக்குதான் எல்லாம் தெரியுமே ,பிறகேன் சர்வதேசத்தை பற்றிய அக்கறை.நாங்கள் சொல்வதை அவர்கள் கேட்கவேண்டுமே ஒழிய அவர்கள் சொல்வதை நாங்கள் கேட்கமாட்டோம் ஏனெனில் நாங்கள் தமிழர்.

அரசு கேள்வி-பதில்.

ஈழப்போராட்டம் வீழ்ந்ததற்கான உண்மையான காரணம் என்ன?

விடுதலைப்புலிகளின் உலகம் அறியாமை.

இன்று "உலகம் அறிதல்" பற்றி தமிழர்கள் என்ன செய்யவேண்டும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?

உலகம் விடுதலைபுலிகளை பற்றி எடுத்தமுடிவுகள் ஏதோ எழுந்தமானமாகவோ அல்லது அரைகுறையாக இரண்டு மூன்று மாதங்களில் எடுததல்ல.காலம் காலமாக சேகரிக்கபட்ட செய்திகளும் தொடர்ந்து கிளிநொச்சிக்கு சென்றுவந்த அரசியல்வாதிகளின் முடிவுகளுமெ ஆகும்.அதைவிட புலம் பெயர் நாடுகளில் இவர்களின் செயற்பாடுகளும் அதற்கு துணையாக இருந்தது..புலிகள் உலகின் நம்பகத்தன்மையை எப்போதோ இழந்துவிட்டர்கள்.இன்று கூட விடுதலைபுலிகளை அழித்தது பற்றி யாரும் பிழை சொல்லவில்லை பொதுமக்களை அழித்தது பற்றிதான் விமர்சனம் வைக்கின்றார்கள்.

எங்களுக்கு நியாயமாகபடுவதெல்லாம் உலகத்திற்கு நியாயமாக இருகவேண்டுமென பலர் எதிர்பர்க்கின்றார்கள்.புலிகள் செய்த கொலைகள் அவர்களின் இருப்பிற்காகவே அன்றி வேறெதற்காகவும் இல்லை.இவைகள் காலம் காலமாக தொடர்ந்தன .இன்று நாங்கள் போய் போர்குற்றவிசாரணை பற்றி முறையிடும் அமைப்புக்களே புலிகளை பற்றி வெகு காட்டமாக அறிக்ககளை வெளிவிட்டுவந்தன.ஒன்றையுமே காதில் வாங்காமல் நாங்கள் அடித்துப் பிடிப்போம் என வீராப்பு காட்டிவிட்டு அவன் அடிக்கதொடங்க றோட்டில இறங்கினால் யார்வருவான் உதவிக்கு.

இன்றும் அதே தவறுகளையே மீண்டும் செய்கின்றோம்.எல்லோரும் ஒற்றுமையாக வாங்கோ என்பதன் அர்த்தம் என்ன?எல்லோரும் எங்களுக்கு கீழே வாங்கோ என்பதா?தமிழரின் ஏகப்பிரதிநிதிகள் என்றபதம் தான் பிரபாகரனை இந்த நிலைக்கு கொண்டுவந்தது.ஏன் அதை மக்கள் தீர்மானிக்கவிடுங்களேன்.

மகிந்தாவை புலிக்கொடியுடன் போய் லண்டனில் விரட்டியது வீரமல்ல.அனைத்து தமிழ் அமைப்புகளும்,மகிந்தாவை போர்குற்றம் செய்தவரென சொல்லும் வேற்று நாட்டு அமைப்புகளும்,அதைவிட மகிந்தாவிற்கெதிரான சிங்கள அமைப்புகளியும் கொண்டு போய் கோசம் போட்டிருந்தால் அதுவே வெற்றி.அதற்கு எங்கள் கொடி தூக்கும் வீரர்கள் இடம் தர மாட்டார்கள்.இன்று பிரிட்டனுக்கு ஒரு தேவை இருந்தது மகிந்தாவிற்கு ஒரு பாடம் படிப்பிற்க.இனி வரும் காலங்களிலும் இதையே நாங்கள் தொடர்ந்து செய்யலாம் என்று யாரும் கனவு காண வேண்டாம்.அனுமதி தர மறுத்துவிட்டு அதையும் மீறி யாரும் போனால் ஒரு நாலு பேரை பிடித்து உள்ளுக்கபோட பின்னர் ஒரு குருவியும் வராது .இனிமேலாவது நாலு பேருடன் அனுசரித்து போக பழகுங்கள்.தமிழனுக்கு தமிழன் விலாசம் காட்டுவதை விட்டு விட்டு.

  • கருத்துக்கள உறவுகள்

.இன்று கூட விடுதலைபுலிகளை அழித்தது பற்றி யாரும் பிழை சொல்லவில்லை பொதுமக்களை அழித்தது பற்றிதான் விமர்சனம் வைக்கின்றார்கள்.

இதை தமிழராகிய தாங்கள் சொல்லும்போது

சொல்லிக்கொடுக்கும்போது

வெளிநாட்டவருக்கு எதற்கு வீண் ஆராய்ச்சி

புலிகள் தவறு செய்யவில்லை

வம்புக்கு இழுத்து தங்கள்போல் ஆட்களால் தவறு செய்ய வைக்கப்பட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் விடுதலைபுலிகளை பற்றி எடுத்தமுடிவுகள் ஏதோ எழுந்தமானமாகவோ அல்லது அரைகுறையாக இரண்டு மூன்று மாதங்களில் எடுததல்ல.காலம் காலமாக சேகரிக்கபட்ட செய்திகளும் தொடர்ந்து கிளிநொச்சிக்கு சென்றுவந்த அரசியல்வாதிகளின் முடிவுகளுமெ ஆகும்.அதைவிட புலம் பெயர் நாடுகளில் இவர்களின் செயற்பாடுகளும் அதற்கு துணையாக இருந்தது..புலிகள் உலகின் நம்பகத்தன்மையை எப்போதோ இழந்துவிட்டர்கள்.இன்று கூட விடுதலைபுலிகளை அழித்தது பற்றி யாரும் பிழை சொல்லவில்லை பொதுமக்களை அழித்தது பற்றிதான் விமர்சனம் வைக்கின்றார்கள்.

உண்மை தான். நீங்கள் ஊர் போராட்டத்தை சாக்கு வைச்சு.. உங்களை வளப்படுத்த வெளிநாட்டுக்கு ஓடிவந்திட்டு இல்லாத பொல்லாத பொய்களை எல்லாம் வெளிநாட்டு நீதிமன்றங்களில் விசாரணையாளர்களிடம் ஒப்பிவித்ததற்கு தண்டனை தான்.. முள்ளிவாய்க்கால். அந்த உண்மையை வெளிப்படையாச் சொல்லலாமே. அதையேன் மறைக்கிறீர்கள்.

கனடாவில்.. பிரித்தானியாவில் புலிகளைப் பற்றி அவதூறு கருத்துக்களை அள்ளி வழங்கிய பெருமை மாற்றுக்கருத்து மாணிக்கங்களையே சாரும். அவை ஏதோ.. நல்ல மனிசரா வாழ்ந்து கொண்டிருந்தவை புலிகள் தான் அவையை குழப்பி அடிச்சு விரட்டின கணக்கு.

இந்தியப் படைகளோடு சேர்ந்து நீங்க புலிகள் இல்லாத போது மக்களை வதைச்ச வதை இன்னும் மறக்கல்ல. இப்போ சிங்களத்தோடு இணைந்து.

புலிகள் பயங்கரவாதிகளாக இருந்தும்.. அமெரிக்கா.. ஐரோப்பா எங்கனும் வலம் வந்தார்கள். சிங்கப்பூர் ஜப்பான் தாய்லாந்து என்று போனார்கள். ஆனால் அங்க ஒருத்தர் 25 வருடமான தாடியும் வைச்சுக் கொண்டு ஆயுத சன நாய் அகம் செய்கிறார்.. அவரை சத்தப்படாமலே கறுப்புப் பட்டியலில போட்டு வைச்சிருக்காங்கள். அப்ப அவர் புலிகளை விடக் கொடும் பயங்கரவாதி தானே..!

கொல்லப்பட்டது புலிகள் என்று சொல்லி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று எந்த நாடும் சொல்லவில்லை. இரு தரப்பும் போர் குற்றம் புரித்துள்ளதாகவே சொல்லப்பட்டுள்ளன. வெள்ளைக்கொடி விவகாரத்தை ஐநா முன்னிலைப்படுத்தியது. அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அது புலிகள் தானே என்று புறக்கணிக்கச் சொல்லவில்லை.

இவர் எப்போதும் கருத்துக்களை தனக்கு வசதியா மட்டும் திரித்து புரிந்து வைச்சிருக்கிறார். இவருக்கு தமிழ் மக்கள் தான் புலிகள் என்ற உண்மையை தரிசிக்க திராணி கிடையாது. அதுதான் உண்மை. :icon_idea:

உலகம் விடுதலைபுலிகளை பற்றி எடுத்தமுடிவுகள் ஏதோ எழுந்தமானமாகவோ அல்லது அரைகுறையாக இரண்டு மூன்று மாதங்களில் எடுததல்ல.காலம் காலமாக சேகரிக்கபட்ட செய்திகளும் தொடர்ந்து கிளிநொச்சிக்கு சென்றுவந்த அரசியல்வாதிகளின் முடிவுகளுமெ ஆகும்.அதைவிட புலம் பெயர் நாடுகளில் இவர்களின் செயற்பாடுகளும் அதற்கு துணையாக இருந்தது..புலிகள் உலகின் நம்பகத்தன்மையை எப்போதோ இழந்துவிட்டர்கள்.

உண்மையில் சர்வதேசம் தான் தமிழர் தரப்பு மீதாக நம்பிக்கை தரும் விதமாக நடந்ததில்லை.

உங்களால் ஒரு உதாரணம் தர முடியுமா அவர்கள் அவ்வாறு நடந்தமைக்கு?

சரி சர்வதேசத்தின் சிங்களத்தின் மீதான் உங்கள் கணிப்பு என்ன?

அவர்கள் கொழும்பு போய் வந்த முடிவுகள் எவ்வாறு இன்று இருக்கின்றன?

ஒன்றையுமே காதில் வாங்காமல் நாங்கள் அடித்துப் பிடிப்போம் என வீராப்பு காட்டிவிட்டு அவன் அடிக்கதொடங்க றோட்டில இறங்கினால் யார்வருவான் உதவிக்கு.

இன்றும் அதே தவறுகளையே மீண்டும் செய்கின்றோம்.எல்லோரும் ஒற்றுமையாக வாங்கோ என்பதன் அர்த்தம் என்ன?எல்லோரும் எங்களுக்கு கீழே வாங்கோ என்பதா?தமிழரின் ஏகப்பிரதிநிதிகள் என்றபதம் தான் பிரபாகரனை இந்த நிலைக்கு கொண்டுவந்தது.ஏன் அதை மக்கள் தீர்மானிக்கவிடுங்களேன்.

மகிந்தாவை புலிக்கொடியுடன் போய் லண்டனில் விரட்டியது வீரமல்ல.அனைத்து தமிழ் அமைப்புகளும்,மகிந்தாவை போர்குற்றம் செய்தவரென சொல்லும் வேற்று நாட்டு அமைப்புகளும்,அதைவிட மகிந்தாவிற்கெதிரான சிங்கள அமைப்புகளியும் கொண்டு போய் கோசம் போட்டிருந்தால் அதுவே வெற்றி.அதற்கு எங்கள் கொடி தூக்கும் வீரர்கள் இடம் தர மாட்டார்கள்.இன்று பிரிட்டனுக்கு ஒரு தேவை இருந்தது மகிந்தாவிற்கு ஒரு பாடம் படிப்பிற்க.இனி வரும் காலங்களிலும் இதையே நாங்கள் தொடர்ந்து செய்யலாம் என்று யாரும் கனவு காண வேண்டாம்.அனுமதி தர மறுத்துவிட்டு அதையும் மீறி யாரும் போனால் ஒரு நாலு பேரை பிடித்து உள்ளுக்கபோட பின்னர் ஒரு குருவியும் வராது .இனிமேலாவது நாலு பேருடன் அனுசரித்து போக பழகுங்கள்.தமிழனுக்கு தமிழன் விலாசம் காட்டுவதை விட்டு விட்டு.

சரி இந்த கொடி தூக்கும் வீரர்களை விட்டுவிடுங்கள்.

நீங்கள் "அனைத்து தமிழ் அமைப்புகளும்,மகிந்தாவை போர்குற்றம் செய்தவரென சொல்லும் வேற்று நாட்டு அமைப்புகளும்,அதைவிட மகிந்தாவிற்கெதிரான சிங்கள அமைப்புகளியும் கொண்டு போய் கோசம் போட்டிருந்தால் அதுவே வெற்றி" - இதற்கு என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என சொல்லுங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் விடுதலைபுலிகளை பற்றி எடுத்தமுடிவுகள் ஏதோ எழுந்தமானமாகவோ அல்லது அரைகுறையாக இரண்டு மூன்று மாதங்களில் எடுததல்ல.காலம் காலமாக சேகரிக்கபட்ட செய்திகளும் தொடர்ந்து கிளிநொச்சிக்கு சென்றுவந்த அரசியல்வாதிகளின் முடிவுகளுமெ ஆகும்.அதைவிட புலம் பெயர் நாடுகளில் இவர்களின் செயற்பாடுகளும் அதற்கு துணையாக இருந்தது..புலிகள் உலகின் நம்பகத்தன்மையை எப்போதோ இழந்துவிட்டர்கள்.இன்று கூட விடுதலைபுலிகளை அழித்தது பற்றி யாரும் பிழை சொல்லவில்லை பொதுமக்களை அழித்தது பற்றிதான் விமர்சனம் வைக்கின்றார்கள்.

எங்களுக்கு நியாயமாகபடுவதெல்லாம் உலகத்திற்கு நியாயமாக இருகவேண்டுமென பலர் எதிர்பர்க்கின்றார்கள்.புலிகள் செய்த கொலைகள் அவர்களின் இருப்பிற்காகவே அன்றி வேறெதற்காகவும் இல்லை.இவைகள் காலம் காலமாக தொடர்ந்தன .இன்று நாங்கள் போய் போர்குற்றவிசாரணை பற்றி முறையிடும் அமைப்புக்களே புலிகளை பற்றி வெகு காட்டமாக அறிக்ககளை வெளிவிட்டுவந்தன.ஒன்றையுமே காதில் வாங்காமல் நாங்கள் அடித்துப் பிடிப்போம் என வீராப்பு காட்டிவிட்டு அவன் அடிக்கதொடங்க றோட்டில இறங்கினால் யார்வருவான் உதவிக்கு.

இன்றும் அதே தவறுகளையே மீண்டும் செய்கின்றோம்.எல்லோரும் ஒற்றுமையாக வாங்கோ என்பதன் அர்த்தம் என்ன?எல்லோரும் எங்களுக்கு கீழே வாங்கோ என்பதா?தமிழரின் ஏகப்பிரதிநிதிகள் என்றபதம் தான் பிரபாகரனை இந்த நிலைக்கு கொண்டுவந்தது.ஏன் அதை மக்கள் தீர்மானிக்கவிடுங்களேன்.

மகிந்தாவை புலிக்கொடியுடன் போய் லண்டனில் விரட்டியது வீரமல்ல.அனைத்து தமிழ் அமைப்புகளும்,மகிந்தாவை போர்குற்றம் செய்தவரென சொல்லும் வேற்று நாட்டு அமைப்புகளும்,அதைவிட மகிந்தாவிற்கெதிரான சிங்கள அமைப்புகளியும் கொண்டு போய் கோசம் போட்டிருந்தால் அதுவே வெற்றி.அதற்கு எங்கள் கொடி தூக்கும் வீரர்கள் இடம் தர மாட்டார்கள்.இன்று பிரிட்டனுக்கு ஒரு தேவை இருந்தது மகிந்தாவிற்கு ஒரு பாடம் படிப்பிற்க.இனி வரும் காலங்களிலும் இதையே நாங்கள் தொடர்ந்து செய்யலாம் என்று யாரும் கனவு காண வேண்டாம்.அனுமதி தர மறுத்துவிட்டு அதையும் மீறி யாரும் போனால் ஒரு நாலு பேரை பிடித்து உள்ளுக்கபோட பின்னர் ஒரு குருவியும் வராது .இனிமேலாவது நாலு பேருடன் அனுசரித்து போக பழகுங்கள்.தமிழனுக்கு தமிழன் விலாசம் காட்டுவதை விட்டு விட்டு.

எங்களுக்கு நியாயமாகபடுவதெல்லாம் உலகத்திற்கு நியாயமாக இருகவேண்டுமென பலர் எதிர்பர்க்கின்றார்கள்

ம் பாதிக்கப்பட்டது நாங்கள்.நாங்கள் நியாயம் சொல்லாமல் பக்கத்துவீட்டுக்காரன் நியாயம் சொல்வது எந்த விதத்தில் நியாயம்??

வன்னியில் மக்கள் பட்ட அவலம் கனடாவில் வாழும் வெள்ளைக்கு எப்படி தெரியும்.உங்களை போல அவர்களுக்கு ஞான(ல) :D கண் உள்ளதா??

நீங்கள் போய்(ஒரு தமிழர்) ஸ்ரிவன் காப்பரிடம் ஆப்கான் போருக்கு போகாதே என கூற முடியுமா?

அதற்கு எங்கள் கொடி தூக்கும் வீரர்கள் இடம் தர மாட்டார்கள்

தமிழரின் தேசியக்கொடி புலிக்கொடி எனத்தெரியாமல் திம்பு பேச்சுவார்த்தைக்கு போனதாக ஏன் கதை அளக்கிறீர்கள்?? உண்மையில் புலிகள் மேல் உள்ள ஆத்திரத்தில் தான் புலிக்கொடி தூக்குபவன் உங்களை போன்றவர்களுக்கு எதிரியாக தெரிகிறான்.

பிரபாகரனை இந்த நிலைக்கு கொண்டுவந்தது

அந்தாள் தான் போராட்டத்தை இவ்வளவு தூரம் கொண்டு வந்தது. 6000 பேரை சேர்த்து ஒரேயடியாக தமிழீழம் காண்போம் என்று சொன்ன ஆட்களலல்லோ நீங்கள்.பிறகு இயக்க காசையும் யாருக்கும் சேராமல் சுவிஸ் வங்கியில் போட்டு பிறகு உள்ளுக்குள் மாறி மாறி சுடுபட்டு இறந்ததை தமிழ் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருந்தவர்கள்.மக்களின் சோற்றை சாப்பிட்டு விட்டு அவர்களை கடத்தி காசையும் பறித்து கொலை செய்தவர்கள் தானே நீங்கள். அப்போ கருத்து எழுதாதவர் புலிகல் தோற்றவுடன் பாய்ந்து பாய்த்து கருத்து எழுதும் விண்ணாதி விண்ணர் நீங்கள்.

இன்று பிரிட்டனுக்கு ஒரு தேவை இருந்தது மகிந்தாவிற்கு ஒரு பாடம் படிப்பிற்க.இனி வரும் காலங்களிலும் இதையே நாங்கள் தொடர்ந்து செய்யலாம் என்று யாரும் கனவு காண வேண்டாம்.அனுமதி தர மறுத்துவிட்டு அதையும் மீறி யாரும் போனால் ஒரு நாலு பேரை பிடித்து உள்ளுக்கபோட பின்னர் ஒரு குருவியும் வராது

இதென்ன மகிந்த சிந்தனையோ?? :lol:

இன்று கூட விடுதலைபுலிகளை அழித்தது பற்றி யாரும் பிழை சொல்லவில்லை பொதுமக்களை அழித்தது பற்றிதான் விமர்சனம்

அது தான் விடையை நீங்களே கூறிவிட்டீர்களே.

எங்களுக்கு நியாயமாகபடுவதெல்லாம் உலகத்திற்கு நியாயமாக இருகவேண்டுமென பலர் எதிர்பர்க்கின்றார்கள்
:icon_idea::icon_idea:

Edited by nunavilan

இன்று பிரிட்டனுக்கு ஒரு தேவை இருந்தது மகிந்தாவிற்கு ஒரு பாடம் படிப்பிற்க.

அது என்ன தேவை? எப்படி வந்தது?

எமது மக்களின் ஆர்ப்பாட்டம் மூலம் பாடம் படிப்பித்தனரா ??

அதற்காக தான் எம்மை ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதித்தனரா ???

  • கருத்துக்கள உறவுகள்

அரசு கேள்வி-பதில்.

ஈழப்போராட்டம் வீழ்ந்ததற்கான உண்மையான காரணம் என்ன?

விடுதலைப்புலிகளின் உலகம் அறியாமை.

நினைத்துப் பார்க்க கஷ்டமாக இருந்தாலும் இந்த உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டியே இருக்கு..! :icon_idea:

புலிகள் உலக அறிவு இருந்திருந்தால், இவ்வளவுக்கும் கள்ளப் பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டு அகதியா வந்திருப்பினமே..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் விடுதலைபுலிகளை பற்றி எடுத்தமுடிவுகள் ஏதோ எழுந்தமானமாகவோ அல்லது அரைகுறையாக இரண்டு மூன்று மாதங்களில் எடுததல்ல.காலம் காலமாக சேகரிக்கபட்ட செய்திகளும் தொடர்ந்து கிளிநொச்சிக்கு சென்றுவந்த அரசியல்வாதிகளின் முடிவுகளுமெ ஆகும்.அதைவிட புலம் பெயர் நாடுகளில் இவர்களின் செயற்பாடுகளும் அதற்கு துணையாக இருந்தது..புலிகள் உலகின் நம்பகத்தன்மையை எப்போதோ இழந்துவிட்டர்கள்.இன்று கூட விடுதலைபுலிகளை அழித்தது பற்றி யாரும் பிழை சொல்லவில்லை பொதுமக்களை அழித்தது பற்றிதான் விமர்சனம் வைக்கின்றார்கள்.

எங்களுக்கு நியாயமாகபடுவதெல்லாம் உலகத்திற்கு நியாயமாக இருகவேண்டுமென பலர் எதிர்பர்க்கின்றார்கள்.புலிகள் செய்த கொலைகள் அவர்களின் இருப்பிற்காகவே அன்றி வேறெதற்காகவும் இல்லை.இவைகள் காலம் காலமாக தொடர்ந்தன .இன்று நாங்கள் போய் போர்குற்றவிசாரணை பற்றி முறையிடும் அமைப்புக்களே புலிகளை பற்றி வெகு காட்டமாக அறிக்ககளை வெளிவிட்டுவந்தன.ஒன்றையுமே காதில் வாங்காமல் நாங்கள் அடித்துப் பிடிப்போம் என வீராப்பு காட்டிவிட்டு அவன் அடிக்கதொடங்க றோட்டில இறங்கினால் யார்வருவான் உதவிக்கு.

இன்றும் அதே தவறுகளையே மீண்டும் செய்கின்றோம்.எல்லோரும் ஒற்றுமையாக வாங்கோ என்பதன் அர்த்தம் என்ன?எல்லோரும் எங்களுக்கு கீழே வாங்கோ என்பதா?தமிழரின் ஏகப்பிரதிநிதிகள் என்றபதம் தான் பிரபாகரனை இந்த நிலைக்கு கொண்டுவந்தது.ஏன் அதை மக்கள் தீர்மானிக்கவிடுங்களேன்.

மகிந்தாவை புலிக்கொடியுடன் போய் லண்டனில் விரட்டியது வீரமல்ல.அனைத்து தமிழ் அமைப்புகளும்,மகிந்தாவை போர்குற்றம் செய்தவரென சொல்லும் வேற்று நாட்டு அமைப்புகளும்,அதைவிட மகிந்தாவிற்கெதிரான சிங்கள அமைப்புகளியும் கொண்டு போய் கோசம் போட்டிருந்தால் அதுவே வெற்றி.அதற்கு எங்கள் கொடி தூக்கும் வீரர்கள் இடம் தர மாட்டார்கள்.இன்று பிரிட்டனுக்கு ஒரு தேவை இருந்தது மகிந்தாவிற்கு ஒரு பாடம் படிப்பிற்க.இனி வரும் காலங்களிலும் இதையே நாங்கள் தொடர்ந்து செய்யலாம் என்று யாரும் கனவு காண வேண்டாம்.அனுமதி தர மறுத்துவிட்டு அதையும் மீறி யாரும் போனால் ஒரு நாலு பேரை பிடித்து உள்ளுக்கபோட பின்னர் ஒரு குருவியும் வராது .இனிமேலாவது நாலு பேருடன் அனுசரித்து போக பழகுங்கள்.தமிழனுக்கு தமிழன் விலாசம் காட்டுவதை விட்டு விட்டு.

அர்ஜீன் அண்ணா நீங்கள் சொல்லும் இந்தக் காரணம் சரியாகப்படவில்லை.புலிகள் எப்ப போராட தொடங்கினார்களோ அப்பவே நாட்டைப் பிரிக்க கூடாது என்பதில் சர்வதேச நாடுகள் முன் நின்றன முக்கியமாக இந்தியா.நாட்டைப் பிரித்தால் தங்கள் நாடுகளீலும் பிரச்சனை வரும் என அந்த நாடுகள் பயந்தன.அதை தவிர‌ சர்வதேசத்தில் ஒர் முக்கிய இடத்தில் இலங்கை இருப்பதால் உலக நாடுகளூக்கு இலங்கையின் நட்பு அவசியம்.புலிகள் அமைதியான வழியில் சாத்வீக வழியில் போராடினால் கூட சர்வதேசம் எதுவும் தரப் போவதில்லை.புலிகள் விட்ட முக்கிய பிழை என்டால் இந்தியாவிற்குப் பின்னால் போனது தான்.இந்தியாவிற்கு பின்னால் போனதை விட சீனாவின் பின் அல்லது பாக்கிஸ்தான் பின்னால் போயிருந்தால் சீக்கிரம் ஓர் தீர்வு கிடைத்திருக்கும்.சனங்கள் சாவதை சர்வதேசம் கணக்கில் எடுத்திருந்தால் அவர்கள் அழிய முன்னே தடுத்திருப்பார்கள்.இது எல்லாம் சர்வதேசத்தின் நாடகம்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா நீங்கள் சொல்லும் இந்தக் காரணம் சரியாகப்படவில்லை.புலிகள் எப்ப போராட தொடங்கினார்களோ அப்பவே நாட்டைப் பிரிக்க கூடாது என்பதில் சர்வதேச நாடுகள் முன் நின்றன முக்கியமாக இந்தியா.நாட்டைப் பிரித்தால் தங்கள் நாடுகளீலும் பிரச்சனை வரும் என அந்த நாடுகள் பயந்தன.

ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்டை பிரிப்பதற்கு உலக நாடுகள் இலகுவில் ஆதரவளிக்க மாட்டா. இன்று உலகில் பத்துக்கு மேற்பட்ட நாடுகள் தமது இராணுவ பலத்தால் தனி நாடாக பிரிந்தும் ஐக்கிய நாடுகள் சபையாலும் பல நாடுகளாலும் அங்கிகரிக்கப்படாமல் இருக்கின்றன. சோமலிலாந்து என்ற நாடு எந்த ஒரு நாட்டாலும் அங்கிகரிக்கப்படாமல் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தனி நாடாக இயங்கி வருகிறது.

Map-of-Somaliland-in-Somalia.jpg

இந்த சர்வதேச நிலைப்பாட்டை தமிழீழ விடுதலைப்புலிகள் எவ்வளவுக்கு விளங்கிக்கொண்டு தனிநாட்டு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள் என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது. தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு தனி நாடுதான் ஒரே தீர்வு என்ற உறுதிப்பாடு எவ்வளவுக்கு உண்மையானது என்பதும் கேள்விக்குரியது. இன்று வரை தனி நாடு தவிர்ந்த எந்த தீர்விலும் விடுதலைப்புலிகள் இந்த அளவுக்கு தியாகமும், முயற்சியும், முதலீடும், ஆட்பலமும் செலவிடவில்லை என்பதையும் இங்கு நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கிறது. ஒரு வேளை, தனி நாட்டுக்கான போராட்டத்துக்கு செலவிட்ட அளவுக்கு ஆட்பலமும், முதலீடும், முயற்சியும், தனிநாட்டுக்கு மாற்றீடான திட்டங்களில் செலவிட்டு, ஜயலத் ஜெயவர்த்தன, விக்கிரமபாகு கருணாரத்தின போன்றவர்களுடன் இணைந்து செயற்பட்டிருந்தால், தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைத்திருக்குமோ என்று எண்ணவும் தோன்றுகிறது.

jayalath.gif

அதை தவிர‌ சர்வதேசத்தில் ஒர் முக்கிய இடத்தில் இலங்கை இருப்பதால் உலக நாடுகளூக்கு இலங்கையின் நட்பு அவசியம்.புலிகள் அமைதியான வழியில் சாத்வீக வழியில் போராடினால் கூட சர்வதேசம் எதுவும் தரப் போவதில்லை.

யாரும் எவருக்கும் எதையும் இலவசமாக தருவதில்லை. சர்வதேச நாடுகள் தமது நலன் கருதி மட்டுமே செயற்படுகின்றன. மற்ற நாடுகளின் தேவைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையானதை கொடுத்து நமக்கு தேவையானதை பெற்றுகொள்வது இராஜதந்திரங்களில் முக்கியமானது. கிழக்கு தீமோர் இந்தோநேசிய படைகளால் அழிக்கப்பட்டு கொண்டிருந்த போது, கிழக்கு தீமொரியரின் பலம் குன்றிய போராளிகள் அவுஸ்திரேலிய எண்ணை வணிக நிறுவனங்களுடன் ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை செய்தார்கள். கிழக்கு தீமோர் விடுதலை பெற்றால் முழு எண்ணை வளங்களும் இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்பதே அந்த ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தை அடுத்து எண்ணை நிறுவனங்களின் தூண்டுதலில் அவுஸ்திரேலிய அரசும் அரசியல்வாதிகளும் கிழக்கு தீமோரின் விடுதலைக்காக ஐக்கிய நாடுகள் சபையில் மிகுந்த முயற்சி செய்து விடுதலையை பெற்று கொடுத்தார்கள்.

east-timor-map.gif

சிறிலங்கா தமிழ்பிரதேசங்களில் உள்ள எண்ணை வளத்தை சீனாவுக்கும், இந்தியாவுக்கும் ஆயுதங்களுக்கு விலையாக எழுதிக்கொடுத்து இருக்கிறது. விடுதலைப்புலிகளும் இந்த எண்ணை வளத்தையும், இல்மனைட்டையும், மற்ற கனியவளங்களையும் பலம்வாய்ந்த அமெரிக்க, இந்திய நிறுவனங்களுக்கு கொடுக்க தயாராக இருந்திருந்தால், அமெரிக்க அரசையும், இந்திய அரசையும் ஒரு வேளை தமிழீழ விடுதலைக்கு ஆதரவளிக்க வைத்திருக்கலாம்.

புலிகள் விட்ட முக்கிய பிழை என்டால் இந்தியாவிற்குப் பின்னால் போனது தான்.இந்தியாவிற்கு பின்னால் போனதை விட சீனாவின் பின் அல்லது பாக்கிஸ்தான் பின்னால் போயிருந்தால் சீக்கிரம் ஓர் தீர்வு கிடைத்திருக்கும்.சனங்கள் சாவதை சர்வதேசம் கணக்கில் எடுத்திருந்தால் அவர்கள் அழிய முன்னே தடுத்திருப்பார்கள்.இது எல்லாம் சர்வதேசத்தின் நாடகம்.

இந்தியாவுக்கு என்ன தேவை என்று புரிந்து கொண்டு அதை கொடுக்க தமிழீழ விடுதலைப்புலிகள் தயாராக இருக்காதது இன்றைய நிலைக்கு காரணமாக இருக்கலாம். குறிப்பாக தமிழ்நாட்டின் தமிழ் தேசியவாதிகளுடன் உறவை துண்டித்து, இந்திய தேசியவாதிகளுடன் உறுதியான உறவை தமிழீழ விடுதலைப்புலிகள் பேணியிருந்தால் தமிழீழம் சாத்தியமாகி இருக்கலாம்.

எல்லாவற்றிற்கும் விமர்சனமும், எப்படி நடந்தது என்றும் விளக்கம் எழுதிக்கொண்டிருக்க முடியாது.காரணம் நாங்கள் இப்போ பயணிப்பது 90 களுக்கு பிறகு ஊடகங்களால் எமது போராட்டம் பற்றிஅறியப்பட்டு விமர்சிப்பவர்களே அதிகம்.அவர்களுடன் நேரம் செலவழிக்கமுடியாது.

உதாரணமாக ஒருவர் இங்கு கேட்கின்றார் ஜெயபாலன் என்றவுடன் தேசம் நெற் ,அல்லது இங்கு வந்து மொக்கை போடும் பொயட்டா என்று.இன்னொருவர் திம்புவுக்கு போன உங்களுக்கே என்று என்னை விழிக்கின்றார்.யார் யார் திம்புவிற்கு போனதென்றே தெரியாதவர்களும் இருக்கின்றார்கள்(ஆய்வாளர் திருச்செல்வம் பாலசிங்கம் திம்பு போனதென கதை அளக்கின்றார்)எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டியதில்லை ஆனால் நான் ஒரு 80 களில் இருந்து இதே தொழிலாக இருப்பவன்.30 வருட அனுபவத்தை ஒரு பந்தியில் எழுத முடியாது.

புலிகளின் சார்பில் திம்பு போனவர்கள் அன்டனும்,திலகரும்.அனடன் கனடா வந்திருக்கும் போது அவருடன் எந்த நாளும் ஒரே வாக்கு வாதம்.அவர் முழு பிரபா வாசி.ஆனால் இருவரும் நண்பர்களாகவே இருந்தோம்.அப்படியான ஒரு புரிந்துணர்வைத்தான் நான் எல்லோரிடமும் இருந்து எதிர்பார்க்கின்றேன்.

வரிந்துகட்டிக்கொண்டு எம்மவர்களை நாமே எதிரியாக்கும் நோக்கம் வேண்டாம்.வித்தியாசமாக சிந்திப்பதில் தவறொன்றுமில்லை.எம்மை நாம் வலிய பொய்யான இறுக்கத்துடன் நடைமுறை சாத்தியமில்லாத்தை நம்பினதால் தான் இவ்வளவ்ய்ம் வந்தது.இனியாவது மற்றவர்கள் கருத்துக்களை,உணர்வுகளை மதிக்க பழகுவோம்.விடுதலை வெகு தூரமில்லை.

குறிப்பு ஜ்யரின் பதிவில் வந்த ராஜா நித்தியனின் படங்கள் அஜீவனின் முகபுத்தகத்தில் பார்க்கலாம்.

டெல்கியில் மிகப்பெரிய தமிழர் மகாநாடு.அப்துல் கலாம்,சிதம்பரம்,எமது சேரன்,நித்தியானந்தன் முதலியவர்கள் பங்கு பற்றுகின்றார்கள்.எனது மிக நெருங்கிய நண்பன் ஜான் சுந்தரும் இருக்கின்றார்.

நித்தியானந்தன் எப்படி லண்டன் வந்தார் என தெரிந்தவர்கள் யாரும் கேட்டுப்பாருங்கள்.

மற்றது ரதியக்கா,உலகம் பிரிவினையை விரும்பாது போராட்டம் என்பதே எங்கள் பக்க நியாயத்தை உலகிற்கு சொல்வதுதானே.அதை புலிகள் சரி வர செய்யவில்லை என்றுதானே சொல்லுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பதிவு கீழ் குறிப்பிட்ட திகதியில் என்னால் வரையப்பட்டு யாழ் இணையத்தளத்திலும், வேறு பல இணையத்தளங்களிலும் வெளி வந்திருந்தன, எங்களால் விவாதிக்கப்படும் இந்த தலைப்பிற்கும், என்னால் வரையப்பட் இந்த ஆக்கத்திற்கும் தொடர்பு இருப்பதினால் மீள் பதிவு செய்கின்றேன்.

வணக்கம் தமிழ்நெஞ்சங்களே!

தமிழீழத்தில் இடம்பெற்றுக்கொண்டிருப்பது என்ன?

"தமிழீழத்தில் இடம்பெற்றுக்கொண்டிருப்பது என்ன? " என்ற தலைப்பில் மறைக்கப்பட்ட, மறுக்கப்படுகின்ற உண்மைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளுக்கும், இந்தியா உட்பட சர்வதேச நாடுகளிற்குமிடையில் மறைமுகமாக செய்யப்பட்ட ஒப்பந்தங்களும், ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளினால் மேல் குறிப்பிடப்பட்ட நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவாதங்களும், அந்த நாடுகளினால் ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட விடயமும் என்ன என்பதையும், உண்மையில் தாயகத்தில் இப்போது இடம்பெற்றுக்கொண்டிருப்பது என்ன, என்பதையும் ஒவ்வொரு தமிழ்மகனும் அறிந்திருக்கவேண்டிய அவசியம் இருப்பதினால், காலத்தின் தேவை கருதி இந்த ஆக்கத்தை பதிவு செய்கின்றேன்.

தாயகத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பை நிறுத்தும்படி புலம்பெயர் தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் தீவிரம் அடைய, அடைய, ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளின் கொலை வெறியாட்டமும் தீவிரமடைந்து கொண்டே போகின்றது. அப்படியென்றால் இந்த வெறியாட்டம் அதாவது இனச்சுத்திகரிப்பு ஸ்ரீலங்காவினால் தன்னிச்சையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்றால் இல்லை என்ற பதில் இலகுவாகவே கிடைத்துவிடும்.

நாங்கள் புலம்பெயர் நாடுகளில் மேற்கொண்டுவரும் இந்த கவனயீர்ப்பு போராட்டங்களை, அந்தந்த நாடுகள் உதாசீனப்படுத்துவதாகவே தோன்றுகின்றன.

இருந்தும் சில நாடுகள் எங்களை சாந்தப்படுத்தும் நோக்கத்துடன், எங்கள் கோரிக்கைகளை உள்வாங்குவது போல் பாசாங்கு காட்டுவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

ஆகவேதான் இன்று தாயகத்தில் அதி உச்சமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இனவழிப்பு நிகழ்வுக்கும், சர்வதேசத்திற்கும் இடையில் நிறையவே தொடர்பு இருப்பதாக புலப்படுகின்றது.

அப்படியென்றால் இவர்களது நோக்கம் என்ன? எதை எதிர்பார்க்கின்றார்கள்? இவர்களது நோக்கம் என்ன என்று ஆராய்ந்தோமானால், பூமிப்பந்தில் இன்னுமொரு நாடு உருவாகுவதை இவர்கள் விரும்பவில்லை, அதிலும் முக்கியமாக போராட்டத்தின் மூலம் ஒரு நாடு உருவாகுவதை எல்லா நாடுகளுமே எதிர்க்கின்றன.

இந்தவிடயத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளையும், தமிழீழ மக்களையும் அதிகமாக வெறுப்பதிற்கு பல காரனங்களை கூறலாம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் எந்தவொரு நாட்டினதும் உதவிகளின்றி, சுயமாகவே சொந்த மக்களினது ஆதரவுடன் மட்டுமே இயங்குவதை அவர்களினால் அதாவது சர்வதேச நாடுகளினால் சகிர்த்துக்கொள்ள முடியவில்லை.

ஒரு விடுதலை இயக்கம் சுயமாக முப்படைகளையும், ஒரு தொகை மக்களையும் பல வருடங்களாக தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருப்பதை இந்த நாடுகள் விருப்பவில்லை.

தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ தமிழீழ விடுதலையிற்கு ஆதரவு தெரிவித்தால், இதையே காரணமாக வைத்து தங்கள் நாடுகளிலும் விடுதலைப்போராட்டங்கள் ஆரம்பித்துவிடும் என்ற ஏக்கமும் இவர்களுக்கு உள்ளது.

ஆகவேதான் இன்று தமிழீழத்தில் எவ்வளவு மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை, விடுதலைப்புலிகளை ஒழித்தால் போதும் என்ற நோக்கில் பல நாடுகள் தங்களிற்குள் உள்ள பகமைகளை மறந்து இந்த விடயத்தில் ஒன்றிணைந்து செயல்படுகின்றார்கள்.

-வல்வை மைந்தன்.-

[Monday, 2009-04-27 08:26:24]

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் எந்தவொரு நாட்டினதும் உதவிகளின்றி, சுயமாகவே சொந்த மக்களினது ஆதரவுடன் மட்டுமே இயங்குவதை அவர்களினால் அதாவது சர்வதேச நாடுகளினால் சகிர்த்துக்கொள்ள முடியவில்லை.

ஒரு விடுதலை இயக்கம் சுயமாக முப்படைகளையும், ஒரு தொகை மக்களையும் பல வருடங்களாக தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருப்பதை இந்த நாடுகள் விருப்பவில்லை.

சோமாலிலாந்து என்ற நாடு முப்படைகளுடனும் எந்த ஒரு நாட்டின் உதவியுமின்றி தனிநாடாக கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. சர்வதேச நாடுகள் சோமாலிலாந்தை அழிக்க முயற்சிக்கவில்லை. விடுதலைப்புலிகளுக்கும் தமிழீழத்துக்கும் சர்வதேச நாடுகள் எதிராக செயற்பட்டதற்கு நீங்கள் சொல்லும் காரணம் பொருந்துமானால், சோமாலிலாந்தையும் சர்வதேச நாடுகள் அழித்திருக்க வேண்டும். ஆகவே உங்கள் காரணம் பொருத்தமானதாக தெரியவில்லை.

நீங்கள் சொல்லும் காரணம் சரியானதென்றே வைத்துக்கொண்டால், சர்வதேச நாடுகள் எதிர்க்கும் நிலையில் அவை அனைத்துக்கும் தாக்குபிடித்துக் கொண்டு தமிழ்மக்கள் நிம்மதியாக வாழ தாம் வழிசெய்ய முடியும் என்று விடுதலைப்புலிகள் நினைத்திருந்தால், அது சாத்தியமற்ற ஒன்றல்லவா? ஆகவே விடுதலைப்புலிகள் சர்வதேச அரசியலை சரிவர புரிந்து கொள்ளவில்லை என்பதை உங்கள் கருத்து உறுதிப்படுத்துகிறது.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

"நீங்கள் சொல்லும் காரணம் சரியானதென்றே வைத்துக்கொண்டால், சர்வதேச நாடுகள் எதிர்க்கும் நிலையில் அவை அனைத்துக்கும் தாக்குபிடித்துக் கொண்டு தமிழ்மக்கள் நிம்மதியாக வாழ தாம் வழிசெய்ய முடியும் என்று விடுதலைப்புலிகள் நினைத்திருந்தால், அது சாத்தியமற்ற ஒன்றல்லவா? ஆகவே விடுதலைப்புலிகள் சர்வதேச அரசியலை சரிவர புரிந்து கொள்ளவில்லை என்பதை உங்கள் கருத்து உறுதிப்படுத்துகிறது."

யா Jude !!!

சர்வதேச நாடுகளை தாக்குப்பிடித்துக்கொண்டு மக்களை காப்பாற்றுவோம் என்று புலிகள் உறுதியளித்ததாக நான் அறியவில்லை. இன்று எதையோ பறைசாத்த நீங்க முற்படுகின்றீர்கள், உங்கள் ஆடுபுலியாட்டத்திற்கு நான் வரவில்லை.

Edited by வல்வை லிங்கம்

மகிந்தாவை புலிக்கொடியுடன் போய் லண்டனில் விரட்டியது வீரமல்ல.அனைத்து தமிழ் அமைப்புகளும்,மகிந்தாவை போர்குற்றம் செய்தவரென சொல்லும் வேற்று நாட்டு அமைப்புகளும்,அதைவிட மகிந்தாவிற்கெதிரான சிங்கள அமைப்புகளியும் கொண்டு போய் கோசம் போட்டிருந்தால் அதுவே வெற்றி.அதற்கு எங்கள் கொடி தூக்கும் வீரர்கள் இடம் தர மாட்டார்கள்.இன்று பிரிட்டனுக்கு ஒரு தேவை இருந்தது மகிந்தாவிற்கு ஒரு பாடம் படிப்பிற்க.இனி வரும் காலங்களிலும் இதையே நாங்கள் தொடர்ந்து செய்யலாம் என்று யாரும் கனவு காண வேண்டாம்.அனுமதி தர மறுத்துவிட்டு அதையும் மீறி யாரும் போனால் ஒரு நாலு பேரை பிடித்து உள்ளுக்கபோட பின்னர் ஒரு குருவியும் வராது .இனிமேலாவது நாலு பேருடன் அனுசரித்து போக பழகுங்கள்.தமிழனுக்கு தமிழன் விலாசம் காட்டுவதை விட்டு விட்டு.

அண்ணை உலகத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீயள் எண்டது எப்பவும் எங்களுக்கு முக்கியம் இல்லை...

உலக அரசியல் என்பது அவர்களுக்கு என்ன தேவை என்பதின் அடிப்படையில் தான் கட்டி எழுப்ப படுகிறது... அவர்களுக்கு கொடுக்க எங்களிடம் எதுவும் இருக்க வில்லை( முக்கியமாக புலிகளிடம்) என்பது தான் உண்மை... ஆனால் இலங்கை அரசிடம் இருந்தது அதனால் தான் அந்தப்பக்கம் நிண்றார்கள்...

உலக அரசியலை புரிய வேணும் எண்டால் உயிர் வாழ்வை (Survival) பற்றி புரிந்து கொள்ள வேண்டும் எண்று புலிகளில் நான் இருந்த காலத்து அரசியல் வகுப்புக்களில் சொல்வார்கள்... அதாவது எலி செத்தால் தான் பாம்பு வாழ முடியும் , பூனையும் வாழ முடியும்... அதுக்காக பாம்பும் பூனையும் நட்பு எண்று நீங்கள் நினைப்பது இல்லை ஜதார்த்தம்... நாளைக்கு அவை எதிரியாகலாம்...

மற்றும் படி உலக அரங்கில் மனிதாபிமானம், மண்ணாங்கட்டி எல்லாம் சுத்தமான பூச்சுத்தல்கள் பூசி மெழுகல்கள்... புலிகள் பிழை விட்டவை எண்டதை வன்னி போய் கண்டு பிடிச்ச உலக அரசியல் வாதிகள் இலங்கை அரசின் அடக்கு முறையை கண்டு பிடிக்க வில்லை எண்டா சொல்ல வாறியள்...?? இல்லை இலங்கை அரசு கொடுமைகளே செய்யவில்லையா....??

மற்றவர்களை முட்டாள் ஆக்கும் வேலையை விட்டு போட்டு உருப்படியாக ஏதும் செய்யுங்கோ...

இலங்கைக்கு பாடம் படிப்பீக்க எண்ட உடனை மட்டும் பிரித்தானியாவுக்கு தமிழரின் பிரச்சினை தெரிய வந்துட்டுதோ இல்லை முன்னமே தெரியுமோ....??? உங்களுக்கே இது கோமாளித்தனமாய் இல்லையோ...?? :icon_idea:

இப்ப அவர்களுக்கு குடுக்க எங்களிடம் இருக்கிறது அதனால் எங்களோடு உறவாடுகிறார்கள் ... இந்த நிலையை நீட்டிக்க வைப்பது தான் எங்களால் இப்போதையும் வெல்லக்கூடிய நிலையை தோற்றுவிக்கும்...

இது உங்களுக்கு கசப்பான செய்திதான்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.