Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் :

12 டிசம்பர் 2010

Bookmark and Share

தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் :

எதிர்வரும் காலங்களில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் மட்டும் இசைப்பதென அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, அரச நிகழ்வுகள் மற்றும் வைபவங்களில் தமிழ் மொழி மூலம் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா மாதா என்ற இலங்கையின் தேசிய கீதம் சகல பிரதேசங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், வடக்கு கிழக்கில் தமிழ் மொழி மூலம் தேசிய கீதம் இசைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கடந்த புதன் கிழமை அமைச்சரவையில் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தையின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக ஒக்ஸ்பொர்ட் பல்கலைக்கழக விரிவுரையை ரத்து செய்து நாடு திரும்பியதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் எந்தவொரு நாட்டிலும் தேசிய கீதம் பல மொழிகளில் இசைப்பதில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சிறிமாவோ பண்டாரநாயக்க வடக்கில் ஓர் நிகழ்வில் கலந்து கொண்ட போது தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாம் அனைவரும் இலங்கையை ஒரே நாடாக கருத வேண்டும் எனவும், இரண்டுமொழிகளில் தேசிய கீதங்கள் காணப்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் இந்த யோசனைத் திட்டத்திற்கு வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச ஆதரவளித்துள்ளார்.

300 மொழிகள் புழக்கத்தில் உள்ள இந்தியாவில் ஹிந்தி மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைத் திட்டத்திற்கு தேசிய மொழி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோhர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்தத் தீர்மானம் பொருத்தமாக அமையாது என வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறெனினும், சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதத்தை பாடுவதென அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டும் இசைக்கப்படும் என்ற அறிவிப்பு சகல அரசாங்க நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

GTN

தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் :

12 டிசம்பர் 2010

Bookmark and Share

தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் :

எதிர்வரும் காலங்களில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் மட்டும் இசைப்பதென அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, அரச நிகழ்வுகள் மற்றும் வைபவங்களில் தமிழ் மொழி மூலம் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GTN

தவறுள்ளது இந்தச் செய்தியில்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தவறுள்ளது இந்தச் செய்தியில்

உண்மைதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் தேசியக்கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்க ஜனாதிபதி உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 12 டிசம்பர் 2010 06:32

இலங்கையின் தேசியக்கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்படும் என இலங்கையின் அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது.

இதன்படி தற்போது தமிழிலும் பாடப்படும் தேசிய கீதம் எதிர்காலத்தில் தேசிய நிகழ்வுகளின் போது பாடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசியக்கீதத்தில் வரும் மாதா என்ற சொல் வடக்கு - கிழக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் உரித்தான சொல் என்பதை கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்திதாள் தெரிவித்துள்ளது.

லண்டனுக்கு சென்று திரும்பிய நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வேறு எந்த நாட்டிலும் தேசியக்கீதம் ஒரு மொழிக்கு அதிகமான மொழிகளில் பாடப்படுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, தமது ஆட்சிக்காலத்தின் போது வடக்கில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது தமிழில் தேசியக்கீதம் பாடப்பட்ட போது வெளிநடப்பு செய்ததையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் இலங்கை ஒரேநாடு என்ற அடிப்படையில் தேசியக்கீதம் இசைக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த கருத்துக்கு அமைச்சர் விமல் வீரவன்ச தமது ஆதரவை வெளியிட்டார்.

எனினும் அமைச்சர் வாசுதேச நாணயக்கார மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் இது நடைமுறைக்கு சாத்தியமற்றது எனக் குறிப்பிட்டனர்.

எனினும் அமைச்சரவை ஜனாதிபதியின் யோசனையை ஏற்றுக் கொண்டது.

இந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்ட போது இலங்கையின் அமைச்சரவையில் உள்ள டக்ளஸ் தேவானாந்தா, ஆறுமுகன் தொண்டமான், ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம் அத்தாவுல்லா உட்பட்டவர்கள் தமது பதவிகளை காப்பாற்றிக்கொள்வதற்காக மௌனிகளாகவே இருந்துள்ளனர்.

sankamam.com

ஒரு பக்கம் "நல்லிணக்க ஆணைக்குழு" என்பதை நடத்தி உலகத்தையும் தமிழர்களையும் ஏமாற்றும் சிங்களம் மறுபக்கத்தில்

சரித்திரத்தில் இருந்தும் எதையும் படித்ததாக தெரியவில்லை.

1956ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட சிங்கள மொழிச் சட்டம் எவ்வாறு தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏற்தக் காரணமாக இருந்ததுவோ, அவ்வாறான ஓர் நிலைமையை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இத்தகைய இனவாத நடவடிக்கைகள் தோற்றுவிக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
:lol:

Edited by பையன்26

அரசியல் சாசனத்தின்படி தமிழிலும் பாடலாம்.

அரசியல் சாசனத்தை மாற்றும் வல்லமை அமைச்சரவைக்கு இல்லை.

சிங்களத்தில் மட்டும் பாடவேண்டும் என்பதற்கு ஆதரவளித்த அனைவரும் பிரிவினைக்கு தூண்டுதலாக இருக்கிறார்கள் என்பதால் - அவர்களின் பதவிகள் சிங்கள அரசின் சட்டப்படி பறிக்கப்படவேண்டும். வழக்கு தாக்குதல் மூலம் அமைச்சரவையின் முடிவை ரத்துச் செய்யலாம்.

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், காட்டுமிராண்டிகள், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், போர்க் குற்றவாளிகள், ஏமாற்றிகள், ………….., சிங்களவர் வந்தேறு குடிகள், போலி வரலாறுகளை தயாரித்து மகா பொய்வம்சத்தை உருவாக்கி வருபவர்கள், ......, ……

அரசியல் சாசனத்தின்படி தமிழிலும் பாடலாம்.

அரசியல் சாசனத்தை மாற்றும் வல்லமை அமைச்சரவைக்கு இல்லை.

சிங்களத்தில் மட்டும் பாடவேண்டும் என்பதற்கு ஆதரவளித்த அனைவரும் பிரிவினைக்கு தூண்டுதலாக இருக்கிறார்கள் என்பதால் - அவர்களின் பதவிகள் சிங்கள அரசின் சட்டப்படி பறிக்கப்படவேண்டும். வழக்கு தாக்குதல் மூலம் அமைச்சரவையின் முடிவை ரத்துச் செய்யலாம்.

இந்த ஒருவிடயத்தில் மட்டும் உலக நாடுகளை உதாரணத்துக்கு இழுக்கும் சிங்கள வெறியர்களின் முகமூடிகளை தமிழரின் அரசியல் பிரதிநிதிகளாக மார்தட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள் கிழித்தெறிவார்களா?

தமிழில் தேசிய கீதம் பாடுவதை ரத்து செய்தார் ராஜபக்சே

இலங்கையின் தேசிய கீதம் இனி சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும் என்ற முடிவை அந்நாட்டு அமைச்சரவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் தமிழர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். எனவே இலங்கையில் சிங்களத்துடன் தமிழும் ஆட்சி மொழியாக உள்ளது. இதனால் அரசு நிகழ்ச்சிகளிலும் விழாக்களிலும் இலங்கை தேசிய கீதம் தமிழிலும் பாடப்படும்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தேசிய கீதம் தமிழில் பாடப்படும். மற்ற பகுதிகளில் சிங்களத்தில் பாடப்படும். ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த வழக்கத்தை அதிபர் ராஜபக்சே இப்போது ரத்து செய்துள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=45067

நல்ல செய்தி.... உண்மையானா தமிழர்கள் இந்த தேசிய கீதத்தை பாடத்தேவை இல்லை... ( தமிழர்கள் உளமார பாடுவதில்லை எண்றாலும்) எண்று முடிவு எடுத்து விட்டார்கள்.... :lol:

Edited by தயா

அரசியல் சாசனத்தின்படி தமிழிலும் பாடலாம்.

அரசியல் சாசனத்தை மாற்றும் வல்லமை அமைச்சரவைக்கு இல்லை.

சிங்களத்தில் மட்டும் பாடவேண்டும் என்பதற்கு ஆதரவளித்த அனைவரும் பிரிவினைக்கு தூண்டுதலாக இருக்கிறார்கள் என்பதால் - அவர்களின் பதவிகள் சிங்கள அரசின் சட்டப்படி பறிக்கப்படவேண்டும். வழக்கு தாக்குதல் மூலம் அமைச்சரவையின் முடிவை ரத்துச் செய்யலாம்.

இந்த ஒருவிடயத்தில் மட்டும் உலக நாடுகளை உதாரணத்துக்கு இழுக்கும் சிங்கள வெறியர்களின் முகமூடிகளை தமிழரின் அரசியல் பிரதிநிதிகளாக மார்தட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள் கிழித்தெறிவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லமுடிவு

ஏதோ எல்லாம் போயிற்றுதாம்

தேசிய கீதம் தமிழில் ஒரு கேடா...?

இதன் மூலமும் சர்வதேசத்துக்கு உரைப்போம் சிங்களத்தின் நோக்கங்களை....

நல்ல முடிவு வரவெற்கிறேன்.இது தம்மை சிறிலங்கன் என்று சொல்லும் தமிழர்களுக்கும், தம்மை இலங்கையர் என்று சொல்லி நமோ நமோ மாதா பாட வெளிக்கிட்ட சிவத் தம்பி வகையறாக்களுக்கும் விழுந்த பலத்த அடி.அடுத்தாக அமைச்சரவைக் கூட்டங்களையும் சிங்களத்தில் மட்டும் நடத்தினால் நல்லம்.

.. கோடானு கோடி நன்றிகள், சிங்களவனுக்கு ... அவன் திரும்ப திரும்ப தெளிவாக/உரக்க சொல்கிறான் .. எமக்குத்தான் ஏறுகிறதில்லையே????

... நாளை எம்மினத்தில் பிறந்த வடுக்கள் எழுதப் போகிறார்கள் .. இதனை அரசியலாக்காதீர்கள் என்று ....

Indian national anthem is in bangali.

Indian national anthem is in bangali not in hindi. Bangali is the national language of bangladesh

தேசிய கீதத்தின் மொழி?

இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைக்க வேண்டுமென அமைச்சரவையில் எவ்வித இறுதித் தீர்மானமும் நிறைவேற்றப்பட வி்ல்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தேசியக் கீதத்தைப் பாடவேண்டிய விதிமுறைகள் பற்றிய அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு வந்த போது, தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்க வேண்டும் என்கின்ற முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டதாகவும் அது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தேவானந்தா கூறினார்.

ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் கனடா போன்ற சில நாடுகளில், இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகின்றமை ஜனாதிபதிக்கு எடுத்துக்காட்டப்பட்டதாகவும் டக்ளஸ் தெரிவித்தார்.

அமைச்சர்களான ராஜித்த சேனாரத்னவும் வாசுதேவ நாணாயக்காரவும், தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்கும் படி சட்டம் கொண்டுவருவது சாத்தியப்படாது என்று கருத்துக் கூறியதாகவும் சில முஸ்லிம் அமைச்சர்களும் இந்தக்கருத்தையே கொண்டிருந்ததாகவும் அமைச்சர் டக்ளஸ் கூறினார்.

இந்தக் கருத்துக்களையெல்லாம் கவனத்தில் எடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, ஒரு மொழியில் தேசிய கீதம் இசைக்கும் திட்டத்தை நிறைவேற்றாது ஒத்திவைத்ததாகவும், சில ஊடகங்களில் வெளியான தகவலைப் போல, சிங்கள மொழியில் மட்டும் என்ற திட்டம் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை எனவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தமிழோசையிடம் கூறினா

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/12/101212_nationalanthem.shtml

தீர்மானத்தை ஒத்தி வைச்சிட்டாங்களாம்.... :lol:

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ.. எங்க எங்கட.. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி கேட்ட மந்தி.. நாணயக்கார எதிர்ப்பாவது தெரிவிச்சுது.. இது மாங்கொட்டை சூப்பப் போயிட்டுது போல...! இதுகள் எல்லாம் யாழ்ப்பாணத்துக்கு குட்டி மன்னராமல்லே. மன்னரல்ல... மாமாக்கள் என்றதை பசில் மாத்திச் சொல்லிட்டார் போல..!

வரவேற்க வேண்டிய மாற்றம். வாழ்க சிறீலங்கா. வாழ்க புலி அழிப்பை கூண்டோடு வரவேற்ற மாணிக்கங்கள்..! வளர்க்க அவர்களின் வாரிசுகள் உலகெங்கும் பலமொழி பேசி..! :blink::lol:

தமிழீழத்தைப் பொறுத்தவரை நாங்கள் உதைப் பாடுறதே கைவிட்டு பல காலமாச்சுது. நமக்கென் எந்த மொழில பாடினால் என்ன விட்டால் என்ன. ஆனால் மாற்றுக் கருத்து மாணிக்கங்கள் தான் பாவங்கள். ஆப்பா அடிக்கிறார் மகிந்தா. :wub:

Edited by nedukkalapoovan

தேசிய கீதத்தின் மொழி?

இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைக்க வேண்டுமென அமைச்சரவையில் எவ்வித இறுதித் தீர்மானமும் நிறைவேற்றப்பட வி்ல்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தேசியக் கீதத்தைப் பாடவேண்டிய விதிமுறைகள் பற்றிய அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு வந்த போது, தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்க வேண்டும் என்கின்ற முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டதாகவும் அது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தேவானந்தா கூறினார்.

ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் கனடா போன்ற சில நாடுகளில், இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகின்றமை ஜனாதிபதிக்கு எடுத்துக்காட்டப்பட்டதாகவும் டக்ளஸ் தெரிவித்தார்.

அமைச்சர்களான ராஜித்த சேனாரத்னவும் வாசுதேவ நாணாயக்காரவும், தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்கும் படி சட்டம் கொண்டுவருவது சாத்தியப்படாது என்று கருத்துக் கூறியதாகவும் சில முஸ்லிம் அமைச்சர்களும் இந்தக்கருத்தையே கொண்டிருந்ததாகவும் அமைச்சர் டக்ளஸ் கூறினார்.

இந்தக் கருத்துக்களையெல்லாம் கவனத்தில் எடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, ஒரு மொழியில் தேசிய கீதம் இசைக்கும் திட்டத்தை நிறைவேற்றாது ஒத்திவைத்ததாகவும், சில ஊடகங்களில் வெளியான தகவலைப் போல, சிங்கள மொழியில் மட்டும் என்ற திட்டம் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை எனவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தமிழோசையிடம் கூறினா

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/12/101212_nationalanthem.shtml

தீர்மானத்தை ஒத்தி வைச்சிட்டாங்களாம்.... :lol:

ம்ம்ம்ம் ... நாலறிவு பிராணி சொல்லுது ... விழுந்தோம்" மீசையில் மண் முட்டவில்லையாம்!!! ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மகிந்த.

ஆமா, இந்தப்புலத்தில் இருக்கும் மாற்றுக்கருத்து மாணீக்கங்கள் இனி என்ன மொழியில் பாடப்போகிறார்கள்?????????????????

மானம், ரோசம் உள்ள தமிழன் எவனுமே இலங்கை தேசிய கீதத்தை உணர்வுபூர்வமாக பாடப் போறது இல்லை. அந்த லட்சணத்தில இலங்கை தேசிய கீதம் எந்த மொழியில் இருந்தால் என்ன? :lol:

Indian national anthem is in bangali. Indian national anthem is in bangali not in hindi. Bangali is the national language of bangladesh

தகவலிற்கு நன்றி. கனடாவில் இரண்டு உத்தியோகபூர்வ மொழிகள் உள்ளன. இரண்டு உத்தியோகபூர்வ மொழியிலும் தேசியகீதத்தை இசைக்கின்றார்கள். தமிழிலும் கனேடிய தேசிய கீதத்தை மொழிபெயர்த்து உள்ளார்கள். ஆனால், தமிழில் இசைக்கின்றார்களா என்று தெரியவில்லை.

இப்படியே உலகம் விளங்காமல் போனால் இவருக்கும் ஒரு முள்ளிவாய்க்கால் தான் முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைக்க வேண்டுமென அமைச்சரவையில் எவ்வித இறுதித் தீர்மானமும் நிறைவேற்றப்பட வி்ல்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். தேசியக் கீதத்தைப் பாடவேண்டிய விதிமுறைகள் பற்றிய அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு வந்த போது, தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்க வேண்டும் என்கின்ற முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டதாகவும் அது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தேவானந்தா கூறினார்.

ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் கனடா போன்ற சில நாடுகளில், இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகின்றமை ஜனாதிபதிக்கு எடுத்துக்காட்டப்பட்டதாகவும் டக்ளஸ் தெரிவித்தார். அமைச்சர்களான ராஜித சேனாரத்னவும், வாசுதேவ நாணாயக்காரவும், தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்கும்படி சட்டம் கொண்டு வருவது சாத்தியப்படாது என்று கருத்துக் கூறியதாகவும் சில முஸ்லிம் அமைச்சர்களும் இந்தக் கருத்தையே கொண்டிருந்ததாகவும் அமைச்சர் டக்ளஸ் கூறினார்.

http://www.tamilulakam.com/news/view.php?id=20504

உவர் குத்தியர் எப்பதான் உண்மையைப் பேசப் போறாரோ. கட்டையில போனாலும் பொய்யோட தான் போவான் போல. புலிகள் இருக்கும் வரை தமிழ் மக்களிடம் ஒன்றை உளறிக் கொண்டு திரிஞ்சார்.. தான் சிங்களத்தின் எலும்பு பொறுக்கி உயிர் வாழ.. இப்போ தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைத்து அரசியல் செய்யுறான். இவன் எல்லாம் ஒரு அரசியல் வாதி.. அவனை ஒரு தமிழன் என்று சொல்லி ஊடகங்களில அவரின்ர கருத்து வேறு போடினம். போங்கையா நீங்களும் உங்கட மாற்றுக் கருத்தும்.. அரசியலும்.. ஆயுதமும்.

பிபிசி உண்மையை சொல்லிட்டுதே.

Sri Lanka abolishes Tamil national anthem

Now only the Sinhala version of the national anthem can be sung at official events

The Sri Lankan cabinet has abolished the Tamil version of the country's national anthem.

Now the national anthem, Sri Lanka matha, can only be sung in the majority Sinhala language at official functions.

The Tamil version had been in use mainly in the north and east of the island, where most Tamils live.

It was an exact translation of the Sinhala version, sung to the same tune, and had been in use since Sri Lanka gained independence in 1948.

The decision to scrap the Tamil version was taken at a cabinet meeting headed by President Mahinda Rajapaksa.

The president said that no country in the world uses the national anthem in other than one language, according to Sri Lanka's Sunday Times newspaper.

Mr Rajapaksa said everyone should think of Sri Lanka as one country.

Correspondents say the move is likely to further alienate the ethnic Tamils in the country.

Tamil Tiger rebels fought a 25-year battle for a separate homeland for the Tamil minority.

The Sri Lankan army gained a decisive victory over the rebels in May 2009.

http://www.bbc.co.uk/news/world-south-asia-11980434

Edited by nedukkalapoovan

தேசிய கீதத்தின் மொழி?

இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைக்க வேண்டுமென அமைச்சரவையில் எவ்வித இறுதித் தீர்மானமும் நிறைவேற்றப்பட வி்ல்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தேசியக் கீதத்தைப் பாடவேண்டிய விதிமுறைகள் பற்றிய அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு வந்த போது, தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்க வேண்டும் என்கின்ற முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டதாகவும் அது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தேவானந்தா கூறினார்.

ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் கனடா போன்ற சில நாடுகளில், இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகின்றமை ஜனாதிபதிக்கு எடுத்துக்காட்டப்பட்டதாகவும் டக்ளஸ் தெரிவித்தார்.

அமைச்சர்களான ராஜித்த சேனாரத்னவும் வாசுதேவ நாணாயக்காரவும், தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்கும் படி சட்டம் கொண்டுவருவது சாத்தியப்படாது என்று கருத்துக் கூறியதாகவும் சில முஸ்லிம் அமைச்சர்களும் இந்தக்கருத்தையே கொண்டிருந்ததாகவும் அமைச்சர் டக்ளஸ் கூறினார்.

இந்தக் கருத்துக்களையெல்லாம் கவனத்தில் எடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, ஒரு மொழியில் தேசிய கீதம் இசைக்கும் திட்டத்தை நிறைவேற்றாது ஒத்திவைத்ததாகவும், சில ஊடகங்களில் வெளியான தகவலைப் போல, சிங்கள மொழியில் மட்டும் என்ற திட்டம் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை எனவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தமிழோசையிடம் கூறினா

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/12/101212_nationalanthem.shtml

... குத்திக்கு அங்கு சிங்கள அமைச்சரவையில் என்ன நடைபெற்றதென்பதில்..... பாசை புரியவில்லை போல்??? ... பாவம் பன்னாடை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழி தேசிய கீதம் அறிமுகப்படுத்தப்பட்டமை ஒரு சிரிப்புக்கிடமான விடயம்

திங்கட்கிழமை, 13 டிசம்பர் 2010 15:15

சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென்ற அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைச்சர் விமல் வீரவங்ச பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கடந்த காலத்தில் விடப்பட்ட ஒரு தவறு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறுகின்றார்.

உலகில் வேறெந்த நாட்டிலும் தேசிய கீதம் வேறு மொழிகளில் பாடப்படுவதில்லை. ஏன் பல மொழிகளைப் பேசும் இந்தியாவிலும் கூட ஹிந்தியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது.

1978ம் ஆண்டின் அரசியலமைப்பு மாற்றத்தின் போது தமிழ் மொழி தேசிய கீதம் அறிமுகப்படுத்தப்பட்டமை ஒரு சிரிப்புக்கிடமான விடயம் மட்டுமே என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

இதற்கிடையே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகரவும் அரசாங்கத்தின் தீர்மானத்தை வரவேற்றிருப்பதுடன், அதனை துணிச்சலான தீர்மானம் என்றும் சிலாகிக்கின்றார்.

தமிழில் தேசிய கீதம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னணியில் பிரிவினைவாதிகள் இருந்ததாகச் சுட்டிக்காட்டும் கலாநிதி குணதாச அமரசேக்கர, அதனை நீக்குவதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவு துணிச்சலானது என்று பாராட்டுகின்றார்.

அந்த வகையில் தற்போது ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றவர்கள் பிரிவினைவாதிகளின் கையாட்களே என்றும் அவர் குற்றம் சாட்டுகின்றார்.

sangamam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.