Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரவும் பகலும் ஒன்றாகச் சாத்தியமில்லை.

Featured Replies

அடயாளத்தேடலுக்காக நிதானத்தை சாகடிக்கும்

வித்தை தெரிந்தவர்கள் வித்துவான்கள்

முடுக்கிக் கொண்டுவரும் மூத்திரம்போல்

எதோ ஒரு திசையை சுட்டிக்காட்டுகின்றார்கள்

சுட்டிக்காட்டுதலே இங்கு அனைத்திலும் பிரதானம்

காட்டும் திசையில் பயணிக்கப் பாதைகள் இல்லையென்பதை

சுட்டிக்காட்டினால் அது துரோகம்.

சிறுபோகமோ பொரும்போகமோ

எதுவும் இங்கு சாத்தியமில்லை

தற்போதைக்கு சாவை மட்டுமே

யதார்த்தம் உணர்த்துகின்றது

இருந்தும்

பாடைகட்ட கொஞ்சப்பேர்

பாடைக்கு குஞ்சம் கட்ட கொஞ்சப்பேர்

தெளிவுதண்ணி கொடுப்பது குறித்துப்பேசினால் அது துரோகம்

கேள்விக்குறிகளில் ஊஞ்சல்கட்டி

ஆடிக்கொண்டிருப்பதில் எப்போதும் பெருமை

செய்திகளும் புத்தகங்களும் தரும் அரசியலை விட

போர் தந்த ஊனமே அரசியல் என்றால்

முகமிழந்த எமக்கு வடுக்களே அடயாளம் என்றால் அது துரோகம்.

பழமைகளின் ஆச்சரியக் குறிகள்

எப்போதும் நிர்வாணத்தை

அலங்கரித்துக்கொண்டே இருக்கின்றது

தவிர

அது ஒருபோதும்

கோவணமாக இருக்கப்போவதில்லை என்றால்

அது துரோகம்

விழைநிலங்களை தேடிப்போக

விருப்பம் இல்லை

எதையும் தின்னலாம் என்றால்

என்னும் சோறு கறி இன்றி பத்தியப்படவில்லை

பணமுள்ளவன் எங்கிருந்தால் என்ன

அரிசியும் பணியாரமும் அவர்களை தேடிவரும்

நேற்று நாங்கள் விழைவித்த அரிசிக்கும்

உயிருக்கு உலைவைத்த போருக்கும்

இங்கிருந்துதான் விலைகள் தீர்மானிக்கப்பட்டது

இன்று நாங்கள் தீர்மானங்களில் பங்காளிகள் என்றால்

அது துரோகம்

அடிமை வாழ்வில்

மானம் மரியாதை சாமியாடி உருவேறி நிற்கின்றது

இத்தால் மானம் மரியதைக்கு காவுகொடுக்க

எவன் அகப்படுவான் என்று திட்டமிடுவதுக்கு தேசியம் என்று பெயர்.

என்ரை அம்மணத்தை மறைக்க

என்னுமொருவனின் உயிரை கோமணமாக்குவதில்தான்

எமது சமூகப்பற்று எப்போதும் ஆரம்பிக்கின்றது என்றால் அது துரோகம்.

உண்மையும் மனிதநேயமும் மானுட இயல்பும்

பல நேரங்களில் துரோகமாகின்றபோது

தியாகம் அற்தமற்றதாக்கப்படுகின்றது

இப்படித்தான் கண்ணீரும் கதறலும்

கொல்லப்பட்ட குழந்தைகளும்

பயங்கரவாத அலகால் அளக்கப்பட்டனர்

அலகுகள் மாறினாலும் மீள அளப்பதற்கு

உயிர்கள் திரும்பப்போவதில்லை.

தியாகத்துக்கும் துரோகத்துக்கும் எல்லைகள் இல்லை

இடையில் வாழ்வு குறித்த அர்த்தம் செத்துப்போகின்றது

அடிமை வாழ்வுக்கு வரைவிலக்கணம் இல்லை

மனிதாபிமானம் இல்லா அத்திவாரத்தில்

மானம் மரியாதை கோபுரமாக உயர்ந்து நிற்கின்றது

இன்னும் எழுந்திருக்க முடியாத பிரம்மையில்

தேசியக் கனவுகளுடன் தேசிய முதலாளிகள்

சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றனர்

புலத்து வாழ்வின் விருப்பில்

விசத்தில் துளி பாலாக தேசப்பற்று

எம்மாலும் பருகமுடியாது

அடுத்தவனுக்கு கொடுத்தாலும் அவனுக்கு மரணம்

இருந்தும் தொடர்ந்து சோதித்துப் பார்த்தால்

தேசியத்தை உயிருடன் வைத்திருக்க முடியும் என்பது

முதலாளிகளின் புராணக் கணக்கு.

போலியோவுக்கு சொட்டுமருந்து தந்தார்கள்

ஆனைக்காலுக்கும் தந்தார்கள்

அடிமைக் குணத்திற்கு தரவில்லை

ஏதோ ஒரு காரணம்

எப்போதும் இருக்கின்றது நியயங்கள் பேச

தர்மத்தின் சாவில் ஒவ்வொரு காலையும் விடிகின்றபோது

பகலும் மனிதநேயத்துக்கு இரவுதான்.

புலரும் பொழுதுகளும் உங்களுக்கானது என தீர்மானிக்கப்பட்டபின்

இரவுகளுக்குள் பயணம் தொடரும்.

முற்றும்.

என்னத்தை எழுதி.... என்னத்தை சொல்லி... தற்போது தேசியத்தின் உச்சாணிக்கொம்பில் உள்ளவரின் அல்லது உள்ளவர்களின் அரைஞாண் கயிற்றில் உங்கள் இருகரங்களினாலும் இறுகப்பற்றி தொங்கியபடி நீங்களும் பயணம் செய்தால் இப்படி எல்லாம் விரக்தியில் கவிதை படைக்கவேண்டி வராது சுகன். :lol:

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக உள்ளது. இப்பொழுதும் இன்றைய சூழலையும் நாம் வாழும் காலத்தையும் புரியாமல் தொடர்ந்தும் பழைய மாதிரியாக சிந்தித்தும் பிரக்ஞையற்றும் செயற்படுகின்றோம். சாத்தியமில்லாதவற்றை எவ்வாறு சாத்தியமாக்கலாம் என்ற கனவுகளின் சொந்தக்காரர் நாம்!

  • கருத்துக்கள உறவுகள்

செத்த பாம்பை அடித்தல் தொடர்கிறது

செயலற்ற வீம்புகள் தர்மமாகின்றன

துன்பத்தை தந்தவனை தூசிக்க தகுதியற்று

துதிபாடுதல் விதியாச்சு

தட்டிக்கேட்டவனை தண்டித்தும் துண்டித்தும்

தாகம்அடங்கவில்லை

தேடல் தொடர்கிறது

உன் விதியை நீ தீர்மானி

அதற்கு நான் உடந்தை என்பது சுயநலமாகிறது

செத்த பாம்பை கொண்டு வா

நானும் அடிக்கணும்

நூறு தரம் திரும்ப திரும்ப சொல்லி

எனக்கும் மனது சொல்லுது...............

  • கருத்துக்கள உறவுகள்

போராடினாலும் சாவோம்.போராடாவிட்டாலும் சாவோம்.போராடினால் உயிர்தப்ப வாய்ப்புள்ளது என்ற வாக்கியம் எம்மக்களுக்கு சாலவே பொருந்தும். இனிமேல் எப்படி போராடவேண்டும் என்று சொல்ல யாருக்கும் துணிவில்லை அல்லது சொல்ல திராணி இல்லை.தம்மை துரோகியாக உருவகப்படுத்தி அல்லது மனச்சாட்சி உறுத்தியதோ என்னவோ போராடி மடிந்த போராளிகளையும் ,போராட்டத்தையும் கொச்சைப்படுத்த ஒரு கூட்டம் ஆலாய் பறக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

மக்களுக்கு அறிவுரை சொன்ன கூட்டம் அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களை காட்டிக்கொடுத்ததையும் மக்கள் நன்கு அறிவர்.போராட்டம் சரியோ பிழையோ மக்களின் காலடியில் எதிரியின் குண்டை ஏந்தி அதே மக்களுக்காக இறந்த மாவீரர்களையும் மக்கள் அறிவர்.

படம் கீறி அப்படி அடிப்பார்கள் இப்படி அடிப்பார்கள் என்று படம் படமாக கீறிய பரபரப்புகள் இன்று பணிசுக்கு, பலஸ்தீனத்துக்கும் விளக்கம் சொல்லும் பச்சோந்திகளையும் மக்கள் நன்கே அறிவர்.

சுகனின் கவிதைக்கு நன்றி.

வெட்டப்பட்ட மரத்தில்

சிதைந்த கூட்டைப்பற்றி

கவிதை எழுதி

முடிப்பதற்குள்..

வீழ்ந்த மரத்தின்

குச்சிகளை கொண்டே

கட்டியது மற்றொரு கூட்டை..

காக்கை.

- வாழ்க்கையே நம்பிக்கை தான்

முயற்சி செய்!

வீழ்ந்தால் என்ன?

இன்னொரு முறை முயற்சி செய்!

எழும் வரை முயற்சி செய்!

எத்தனை முறை வீழ்ந்தாய் என்ற

வரலாற்றை மாற்றி எழுதும் செய்தி

உலகில் உண்டென்றால்… – அது

வீழ்ந்த பொழுதிலெல்லாம்

முயற்சித்து எத்தனை முறை

நாம் எழுந்து நின்றோம் என்பதே!

அதுவே உண்மையான எழுச்சியின் வரலாறு!

நம்பிக்கையின் வரலாறு!

- அப்படி இருக்கும்போது ஒரு இனத்திற்கு எவ்வளவு இருக்கும் நம்பிக்கை!

வாசு பத்தாம் வகுப்பு சித்தியடைவதும்

சுப்பண்ணாவுக்கு பதவியுயர்வு கிடைப்பதும்

மைதிலிக்கு கனடா மாப்பிள்ளை அமைவதும்

சாந்தி அத்தை உடல் நலம் அடைவதும்

நன்றாக உடைபடும் தேங்காயிலிருந்துதான்

சிதறுகிறது நம்பிக்கைகளாக.

பார்த்து உடையுங்கள் நீங்களும் தேங்காயை !

- (சுட்ட கவிதைகள்)

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இன்று

பிறப்பெடுக்கும்

சுடலை ஞானங்களுக்கு

அன்று

தப்பியோடியென்

வாழ்வை அமைத்துக் கொண்டு

மனைவி என்ற ஒன்றை ஓர் கையாலும்

குழந்தை என்ற ஒன்றை மற்றோர் கையாலும்

அணைத்துக் கொஞ்சி....

மிச்ச மீத நேரத்துக்கு..

ஓடி உழைத்து...

அவனை அடிபட விட்டு

நான் தூர இருந்து

சமுதாயத் தூசி தட்டிக் கொண்டிருந்தன்..!

இன்று

இதயத்தின் ஓரத்தில் சின்ன

வலிப்பு...

கொலஸ்ரோல் கூடியதோ

முள்ளிவாய்க்கால் கிள்ளியதோ

மனச்சாட்சியை

பூட்டி வைத்த இதய அறையில்..!

பாவ மன்னிப்புக்காய்

இன்று

காகிதங்களில்

அல்ல

இணையங்களில்

மண்டி இடுகிறேன்.

மன்னித்துவிடு...!

இதுதான் இன்று பலரின் சுடலை ஞானத்துக்கு காரணம். ஆனால் இவர்களுக்காக மடிகிறேன்.. இவர்கள் எப்படியாவது எனிப் போராடுவார்கள் என் இலட்சியம் வெல்வார்கள் என்று நம்பிப் போனவனுக்கு.. இவை விளக்கப் போவதில்லை. ஏனெனில் அவன்/அவள் செத்துவிட்டான்/ள்.

Edited by nedukkalapoovan

தியாகத்துக்கும் துரோகத்துக்கும் எல்லைகள் இல்லை

இடையில் வாழ்வு குறித்த அர்த்தம் செத்துப்போகின்றது

அடிமை வாழ்வுக்கு வரைவிலக்கணம் இல்லை

மனிதாபிமானம் இல்லா அத்திவாரத்தில்

மானம் மரியாதை கோபுரமாக உயர்ந்து நிற்கின்றது

இன்னும் எழுந்திருக்க முடியாத பிரம்மையில்

தேசியக் கனவுகளுடன் தேசிய முதலாளிகள்

சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றனர்

புலத்து வாழ்வின் விருப்பில்

விசத்தில் துளி பாலாக தேசப்பற்று

எம்மாலும் பருகமுடியாது

அடுத்தவனுக்கு கொடுத்தாலும் அவனுக்கு மரணம்

இருந்தும் தொடர்ந்து சோதித்துப் பார்த்தால்

தேசியத்தை உயிருடன் வைத்திருக்க முடியும் என்பது

முதலாளிகளின் புராணக் கணக்கு.

போலியோவுக்கு சொட்டுமருந்து தந்தார்கள்

ஆனைக்காலுக்கும் தந்தார்கள்

அடிமைக் குணத்திற்கு தரவில்லை

ஏதோ ஒரு காரணம்

எப்போதும் இருக்கின்றது நியயங்கள் பேச

தர்மத்தின் சாவில் ஒவ்வொரு காலையும் விடிகின்றபோது

பகலும் மனிதநேயத்துக்கு இரவுதான்.

புலம் பெயர் சூழலில் இன்று இருக்கும் நிலையை பார்த்து மனதுள் வரும் கோபத்தை உக்கிர வரிகளாக கவிதை தந்து இருக்கு.

இந்த கவிதையையும், இம்ரான் பாண்டியனின் நிர்வாகச் செயலாளர் என்ற பெயரில் வந்த அறிக்கையினையும் அடுத்தடுத்து வசித்ததால் மனதில் இனம் புரியாத ஆத்திரம் உறுப் பெறுகின்றது

கவிதைக்கு நன்றி சுகன்

  • கருத்துக்கள உறவுகள்

செத்த பாம்பை அடித்தல் தொடர்கிறது

சாவே இல்லாததை செத்துவிட்டதென்று சொல்லலாமா? ^_^

  • கருத்துக்கள உறவுகள்

இரவும் பகலும் ஒன்றாகச் சாத்தியமில்லை, விடியலும் தென்படவில்லையே!

கவிதைக்கு நன்றி சுகன்!!

உங்கள் உணர்வுகள் வழமைபோல் மிகுந்த வினைத்திறனுடன் வெளிப்பட்டுள்ளன. இன்ன செயற்பாடுகள் தான் ஏற்றுக்கொள்ளப்படும். இன்ன சிந்தனைகள் தான் வட்டத்திற்கு உள்ளுக்குள் நிற்கும், இன்ன எழுத்துக்கள் தான் ஆதரிக்கப்படும் என்ற நிலை சார்ந்த உங்கள் விமரிசனமாக, ஏறத்தாள இன்னது தான் எமது அடையாளம் என்பதாக எமது தேசியத்தின் இலக்கணம் இதுதான் என்பதாக ஆதிக்கம் செலுத்தும் ஒரு மனவமைப்புப் பற்றிய விமர்சனத்தில் உங்கள் வாதத்திற்கு ஆதரவாக "கேள்விக்குறி" "ஆச்சரியக்குறி" முதலிய தமிழ் மொழியின் இலக்கண அடையாளங்களையும் கவிதையில் உபயோகித்தமை இரசிக்கும் படி உள்து.

பின் வரும் வரிகளோடு முற்றாக உடன்படமுடியவில்லை. ஒருவேளை நீங்கள் சொல்வதை நான் சரியாகப்புரியாதது தான் காரணமாயிருக்கும் என்று நினைக்கிறேன்:

"புலத்து வாழ்வின் விருப்பில்

விசத்தில் துளி பாலாக தேசப்பற்று

எம்மாலும் பருகமுடியாது"

  • கருத்துக்கள உறவுகள்

சாவே இல்லாததை செத்துவிட்டதென்று சொல்லலாமா? :D

உண்மைதான்

இதை நான் மதிக்கின்றேன்

அப்படியே இருக்கக்கடவது.....

நன்றி கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.