Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காமராஜரை சீனிவாசன் தோற்கடிக்கும்போது, கருணாநிதியை சீமான் தோற்கடிக்க முடியாதா?

Featured Replies

நூற்று ஐம்பத்தொரு நாள் சிறைவாசம் சீமானின் சீற்றத்தை கொஞ்சமும் முடக்கியதாகத் தெரிய-வில்லை. முன்பைவிட கூடுதல் முறுக்கோடு, வார்த்தைகளில் அனல் கக்கப் பேசுகிறார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தை இரண்டாவது முறையாக தகர்த்தெறிந்துவிட்டு கடந்த பத்தாம் தேதி விடுதலையாகியிருக்கும் சீமானை அவரது இல்லத்தில் சந்தித்தோம். அலைபேசி வழியிலான பலரது நலம் விசாரிப்புகளுக்கு மத்தியில் நம்மிடம் பேசினார்.

சிறை அனுபவம் கொடுமையாக இருந்ததா?

“அப்படியெல்லாம் இல்லை. நான் அடைபட்டிருந்த கொட்டடி மிகச் சிறியது. நல்ல புத்தகங்களை படிப்பதற்கும், எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கும் நல்ல வாய்ப்பாக இருந்தது.எம் இனப்பிரச்னையைத் தீர்ப்பதற்கான செயல் வடிவத்திற்கும், ‘நாம் தமிழர்’ இயக்கத்தை கட்டமைப்பதற்கும் சிறை வாழ்க்கை பெரிதும் உதவியாக இருந்தது. இது எனக்கு ஐந்தாவது முறை வாய்த்திருக்கும் சிறைவாசம்.என் சிறு உடலைத்தான் அவர்களால் சிறைப்படுத்த முடிந்ததே தவிர,ஈழ விடுதலைக்கான என் சிந்தனைகளை அவர்களால் ஒருபோதும் சிறைப்படுத்த முடியாது.’’

நீங்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்’ என உங்கள் அனுமதியின்பேரில்தான் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்ததாக தங்கர்பச்சான் கூறியிருக்கிறாரே?

“முதல்வர் கருணாநிதியைப் பார்க்கப் போவதாக என்னிடம் அவர் சொன்னார். ‘என்னைப் பற்றிக் கேட்டால் எதுவும் சொல்ல வேண்டாம்’ என்றுதான் சொன்னேன். இது உண்மையா? இல்லையா? என தங்கர்பச்சான் சொல்லட்டும். சுப.வீ. அண்ணன், எங்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சாகுல் அமீதுவிடம் ‘என் விடுதலை பற்றி முதல்வரிடம் பேசுவதாகக்’ கூறியபோதுகூட, ‘வேண்டாம்’ என்றுதான் சொன்னேன். எங்கள் இயக்கமே வழக்கறிஞர்களால் சூழப்பட்டது. அவர்களை அவமானப்படுத்த நான் விரும்பவில்லை. நான் எதிர்பார்த்த விடுதலைதான் கிடைத்தது.’’

தி.மு.க.வை தற்போது காங்கிரஸ் ஒதுக்குகிறது. எனவே, சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை எதிர்க்க நீங்கள் பயன்படுவீர்கள் என்பதால்தான் நீங்கள் விடுதலையானதாகச் சொல்கிறார்களே சிலர்?

“என் விடுதலையை தி.மு.க. விரும்பியதாகச் சொல்வது தவறு. யார் கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸ் தோற்கும். என் போல் பல லட்சம் தம்பிகள் இதற்காக களத்தில் உழைப்பார்கள்.பீகாரில் தனித்துப் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சி நான்கு இடங்கள்தான் வாங்கியது. இங்கு அதுவும் கிடைக்கப் போவதில்லை.காமராஜர் ஆட்சி அமைப்போம் என இங்குள்ள காங்கிரஸ்காரர்கள் சொல்கிறார்கள். காமராஜர் ஆட்சி வேண்டும் என்றால் தனித்து நிற்க வேண்டியதுதானே? உங்களில் யார் காமராஜர்? தேசம் முழுவதும் கொள்ளையடித்துவிட்டு,இங்கேயும் கொள்ளையடிக்க காமராஜர் பெயரைப் பயன்படுத்துகிறார்கள்.ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு, அப்புறம் என்ன காமராஜர் ஆட்சி?’’

ஈழப் போரின் இறுதிக்கட்டம் பின்தங்கியதில் அதிக பங்கு தி.மு.க.வுக்கா? காங்கிரஸுக்கா?

“யுத்தத்தை நடத்தியதே இந்திய அரசுதான். அப்போது காங்கிரஸ் ஆட்சியைத் தாங்கிப் பிடித்தது தி.மு.க.அப்போது இங்குள்ள 40 எம்.பி.க்களும் ராஜினாமா செய்திருந்தால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்திருக்கும். சர்வதேசத்தின் பார்வை திரும்பியிருக்கும். அதை இந்தத் தமிழினத் தலைவர் செய்தாரா? ஏன், உங்களுடைய முதலமைச்சர் பதவியைத் தூக்கியெறிந்திருக்க வேண்டியதுதானே? ‘இந்திய ஜனநாயகத்-தைக் காப்பாற்ற ராசா பதவி விலகினார்’ என்றார் கருணாநிதி. ஏன், ஈழ விடுதலைக்காக எம்.பி.க்-களை ராஜினாமா செய்யச் சொல்லியிருக்க வேண்டியதுதானே? ஈழத்திற்காக இரண்டு முறை ஆட்சியை இழந்தேன் என்கிறீர்கள். உயிரைவிட பதவி முக்கியமா? சிங்களத்தை எதிர்த்து ஒரு தீர்மானமாவது சட்டமன்றத்தில் நிறைவேற்றினீர்களா?

எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என குற்றம்சாட்டி எங்கள் மீனவர்கள் 537 பேர் சுட்டுக் கொல்லப்படுவதற்கு என்ன காரணம்? இதுபோல் ஒரே ஒரு சீக்கியன் செத்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ஒரு கேரளத்தான் செத்திருந்தால் அவன் விடுவானா?கேட்க நாதியற்றவன் தமிழன். அதனால்தான் சுடுகிறான்.’’

முதல்வர் கருணாநிதியை எதிர்த்து சட்டமன்றத் தேர்தலில் போட்டி’ என அறிவித்-திருக்-கிறீர்களே?

“விருதுநகரில் சீனிவாசன் காமராஜரை எதிர்த்து நின்று தோற்கடிக்கும்போது, கருணாநிதியை சீமான் தோற்கடிக்க முடியாதா? நாங்கள் இப்போது அமைப்பின் கட்டமைப்பைக் செதுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறோம்.அடித்தட்டு மக்களிடம் எங்கள் அமைப்பைக் கொண்டு செல்லும் வேலையில் தீவிரமாக களமிறங்கியிருக்கிறோம். அடிப்படை மாற்றத்தை விரும்புகிறவர்கள் புரட்சியாளர்கள்.இங்கு அரசியல் புரட்சி நடக்க வேண்டும்.கட்டடத்தை இடித்துவிட்டு மறுகட்டடத்தைக் கட்ட விழைகிறோம்.ஓட்டுக்குப் பணம் வாங்கும் மக்களின் மனதை மாற்றும் முயற்சியில் களமிறங்குவோம்.நாங்கள் வந்தால் நல்லது என மக்கள் நினைக்கும்வரை போராடுவோம்.இங்கு தமிழர்கள் ஒன்றாதல் வேண்டும்.அதை நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.’’

வரும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்ன?

“நாங்கள் மக்கள் மன்றத்தில் பேசினால் ரெட்டையிலைக்கு ஓட்டு விழும், பம்பரத்திற்குப் போகும்,சுத்தி அரிவாளுக்குப் போகும் என்பதைப் பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை. ஜெயலலிதா வந்தாலும் சீமானுக்கு சிறைதான். ராகுல் டெல்லியிலேயே இருக்கட்டும். அவர் ‘நோ காவேரி, நோ இஷ்யூ’ என்கிறார். நாங்கள் அதைத்தான் சொல்கிறோம். நோ காங்கிரஸ், நோ ஓட்டு. சுப்பிரமணியன் சுவாமி பேசும்போது, ‘சோனியாவின் உறவினர் ஸ்பெக்ட்ரம் ஊழலில் அறுபதாயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தாக’ குற்றம் சாட்டினார். இதை எதிர்த்து எந்த காங்கிரஸ்காரனும் போராட்டம் நடத்தவில்லையே?ஒருவேளை இது இந்திய இறையாண்மைக்குள் வருகிறதோ என்னவோ? நாங்கள் எது பேசினாலும் இறையாண்மைக்கு எதிரானது என்கிறார்கள்.

இறையாண்மைக்குள் எது எது வரும்? என்று முரசொலியில் கருணாநிதி ஒரு கடிதம் எழுதினால் பரவாயில்லை.காங்கிரஸ் கட்சிக்கு கருணாநிதியைவிட ஒரு அடிமை கிடைக்கமாட்டார். எனவே, சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதியை விட்டுவிடாதீர்கள் என காங்கிரஸ்காரர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். எங்கள் இலக்கு 2016-ம் ஆண்டு தேர்தல்தான். எங்கள் அமைப்பு ஒரு சர்வதேச அமைப்பு. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், சிங்கப்பூர் என எல்லா நாடுகளிலும் நாம் தமிழர் அமைப்பின் கிளை தொடங்கப்பட்டுக் கொண்டிருக்கும். இனி இந்தியாவைத் தவிர ராஜபக்ஷே எந்த நாட்டிலும் கால் வைக்க முடியாத நிலைதான் உருவாகப் போகிறது. இங்குதான் தமிழர்கள் வாழவில்லையே?’’ என கர்ஜித்து முடித்தார் சீமான்

Thanks to Kumudam Reporter

சீமானின் அரிய புகைப்படங்கள் பார்க்க....

http://www.thedipaar.com/news/news.php?id=22018

Edited by easyjobs

உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை புண்ணாக்கிடுவாங்ள் போல :lol:

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்

உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை புண்ணாக்கிடுவாங்ள் போல biggrin.gif

அன்று வடிவேலு நக்கல் செய்தார்தான்.. :D ஆனாலும் பாவம்.. கருணாநிதி 2011, 2014 தேர்தல்களில் படுதோல்வியைத்தான் சந்தித்திருக்கிறார்..  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அன்று வடிவேலு நக்கல் செய்தார்தான்.. :D ஆனாலும் பாவம்.. கருணாநிதி 2011, 2014 தேர்தல்களில் படுதோல்வியைத்தான் சந்தித்திருக்கிறார்..  :wub:

பிரபாகரனின் தம்பி.... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இனி இந்தியாவைத் தவிர ராஜபக்ஷே எந்த நாட்டிலும் கால் வைக்க முடியாத நிலைதான் உருவாகப் போகிறது. இங்குதான் தமிழர்கள் வாழவில்லையே?’’ என கர்ஜித்து முடித்தார் சீமான்

சீமான் 2010 இல் சொன்னது இன்று உண்மையாகிக்கொண்டு வருகிறது.. :huh:  ராஜபக்ச இப்போதெல்லாம், ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு மட்டுமே பெருமளவில் விஜயம்..  :wub:  

இந்த திரிகளில் என்ன கருத்து எழுத முடியும்..சீமானின் சீலைகேடு எல்லாருக்கும் தெரிந்ததே... ஜே.ஜே எப்படி சீமானை மதிக்கின்றார் என்று நாங்கள் சொல்லி நீங்கள் தெரிய தேவையில்லை..

சீமானை மக்கள் மதிக்கிறார்கள் என்றால் கடைசி தானாவது ஒரு தேர்தலில் நின்று இருக்கலாம்...ஒரு தொகுதிக்காவது....(எல்லா தொகுதிகளிலும் செலவு செய்ய காசு இல்லை என்றாலும்)

சீமான் சொல்லுவாரா 2016 தங்களது ஆட்சி தான் தமிழகத்தில் என்று... அந்த தைரியம் சீமானுக்கு இருந்தால் சீமானை பற்றி கதைக்கலாம்...

இல்லை என்றால் ஏன்???

சீமான் ஒரு internet/video புலி :) ஈழ தமிழருக்கு மட்டும் :)

விஜயகாந்தின் சாயம் வெளுக்க 2 வருடம் எடுத்த மாதிரி...சீமானின் சாயம் (இங்குள்ளவர்களுக்கு) வெளுக்க இன்னும் 2 வருடம் பொறுக்கணுமா...... :)

Edited by naanthaan

சீமானை பற்றி கதைக்க முதல் என்ன இருக்கு ?

முதலில் எங்கு என்னத்தை பேச வேண்டும் என்றாவது முதலில் யாரும் சொல்லி கொடுங்கோ ?  

நான்தான்.. சரியான தகவல்களுக்கும், உங்களுக்கும் காத தூரம் உள்ளது..! :D

நாம் தமிழர் கட்சி 2010 இல் ஆரம்பித்தபோதே சொல்லி விட்டார்கள்..

1) 2016 சட்டசபை தேர்தலில்தான் போட்டியிடுவோம். அதுவும் குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும்.

2) இன்னொரு கூட்டணியில் சேரமாட்டோம்.

3) நாம் கூட்டணி அமைத்தால், நாமே தலைமைக் கட்சியாக இருப்போம்.

4) 2021 சட்டசபைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் போட்டியிடுவோம்.

5) நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட மாட்டோம்.

இப்போது புரிந்ததா??

  • கருத்துக்கள உறவுகள்

இசை அவர்களுக்கு இவை புரியாது. அவர்களைப் பொறுத்த வரை.. ஒரு குழப்பகரமான கருத்தை விதைத்துவிட்டால் போதும். தங்களைப் போலவே மற்றவர்களும் குழம்பிக்கிடக்கட்டும் என்பது தான்.. இவர்களின் வரவும் நோக்கமும். அதுக்கு யாழ் சரிவராது. தேனீ.. கீனிதான் சரி. இவைக்கு தோதான ஆக்கள் அங்க தான் இருக்கினம். :D:icon_idea:

அப்ப உவையள் அந்த ஆட்களே :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உவையள் அந்த ஆட்களே :D

சந்தேகமென்ன... அதே கூட்டம் தான்.

புத்தன் சரியான.... அப்பாவியாய் இருப்பார் போலுள்ளது. :)

நான்தான்.. சரியான தகவல்களுக்கும், உங்களுக்கும் காத தூரம் உள்ளது..! :D

நாம் தமிழர் கட்சி 2010 இல் ஆரம்பித்தபோதே சொல்லி விட்டார்கள்..

1) 2016 சட்டசபை தேர்தலில்தான் போட்டியிடுவோம். அதுவும் குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும்.

2) இன்னொரு கூட்டணியில் சேரமாட்டோம்.

3) நாம் கூட்டணி அமைத்தால், நாமே தலைமைக் கட்சியாக இருப்போம்.

4) 2021 சட்டசபைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் போட்டியிடுவோம்.

5) நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட மாட்டோம்.

இப்போது புரிந்ததா??

இசை அதை எங்கே சொன்னார் என்று காட்டுங்கள் ..(எனக்கு அது தெரியாது...அது அவர்களது ஈழ ஆதரவாளர்களின் கூற்று என்று தான் இதுவரை நினைத்திருந்தேன்...)

சரி ஒரு 2 வருடம் பொறுத்து பார்ப்போம்....அப்போ என்ன நடகின்றது என்று...

(வை. கோவுக்கே இந்த நிலைமை ... :) இவருக்கு என்ன நடக்குது என்று பார்ப்போம்.. :) )

ஏகப்பட்ட காணொளிகள் உள்ளன. குறிப்பாக உட்கட்சி கூட்ட காணொளிகளைப் பார்த்தால் தெரியும். இங்கேயும் எத்தனையோ தடவைகள் இணைக்கப்பட்டுள்ளன. இருந்தும் என்ன பயன்.. பார்க்காமலே கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி அதே கேள்வியை கேட்கிறீங்க.. :D (ஆனாலும் உங்களுக்காக ஒரு காணொளியை இன்று இணைக்க முயற்சிக்கிறன்.)

சீமான் நிலைப்பாரா போவாரா என்பதெல்லாம் தெரியாது. மக்கள் தங்களை தேர்ந்தெடுக்காமல் போனால் தமக்கு வேறுவேலைகள் உண்டு என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்கள்.. :lol:

சீமான் நிலைப்பாரா போவாரா என்பதெல்லாம் தெரியாது. மக்கள் தங்களை தேர்ந்தெடுக்காமல் போனால் தமக்கு வேறுவேலைகள் உண்டு என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்கள்.. :lol:

நீங்க கொடுக்கிற பில்ட் அப்பை பார்த்தா இது ஏன்??? இதை யாரும் செய்யலாமே?

இதை தானே நாங்கள் சொல்லுகிறோம்....ஈழமக்களிடம் இருந்து கலேக்சனுக்காக தான் இந்த நாடகம் எல்லாம் என்று...இவர்களால் வெல்ல முடியாது... சும்மா சவுண்டு மட்டுமே கொடுக்க முடியும்... (இப்போ நாங்கள் என்ன செய்கிறோம் என்று நீங்கள் சொல்லுகிறீர்களோ... :):icon_mrgreen: )

பி.கு: சீமானின் பேச்சை எல்லாம் ஒரு பொருட்டாக மதித்து யாரவது கேட்பார்களா???????

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க கொடுக்கிற பில்ட் அப்பை பார்த்தா இது ஏன்??? இதை யாரும் செய்யலாமே?

இதை தானே நாங்கள் சொல்லுகிறோம்....ஈழமக்களிடம் இருந்து கலேக்சனுக்காக தான் இந்த நாடகம் எல்லாம் என்று...இவர்களால் வெல்ல முடியாது... சும்மா சவுண்டு மட்டுமே கொடுக்க முடியும்... (இப்போ நாங்கள் என்ன செய்கிறோம் என்று நீங்கள் சொல்லுகிறீர்களோ... :):icon_mrgreen: )

யாரையாவது மட்டம் தட்ட வேண்டுமென்றால் உடனே பாவிப்பது கலெக்சன்.. :D ஆதாரம் இல்லாமல் சொன்னால் அது புரளி..

தமிழக மக்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இவர்கள் நேர்மையாக, உண்மையாக இருந்தால் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

2016 இல் தேர்தல் வர உள்ளதால் அடித்தட்டில் இருந்து கட்டமைப்பை பலமாக்க முயன்று வருகிறார்கள். என்ன நடக்கப் போகிறது என்பது 2015 இல் தெரிந்துவிடும்.. :D

 இவர்கள் நேர்மையாக, உண்மையாக இருந்தால் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் வெல்லுவதற்கு ஏதேனும் பொது பிரச்சனையை வைத்து மக்களை தன பக்கம் வளைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்...அல்லது மக்களுக்கு இவர் நல்லவர் ஏதேனும் செய்வார் என்னும் நம்பிக்கையாவது வரவேண்டும்...இவர் தமிழ்நாட்டில் அதை செய்வதாகவே தெரியவில்லை...சும்மா ஒப்பாரி வைத்து கொண்டும் சும்மா வாய் சவடால்கள் விட்டுக்கொண்டும் தான் இருக்கிறார்...இவருக்கு பின் புலமாக யாரும் பலமானவர்களும் (தென்னிந்தியர் :) ) இருப்பதாக தெரியவில்லை....

அரவிந்த் கேஜ்ரிவால், விஜயகாந்தின் கதையை பார்த்தால் இனி இவர்களை மாதிரி ஆட்களுக்கு பெரும்பாலான மக்கள் வாக்கு போடுவார்களா என்பதே பெரிய கேள்வி....இவர் கடைசி தான் மட்டுமாவது எங்காவது ஒரு தொகுதியில் வெல்வதற்காக..இப்பவே அந்த தொகுதியை தயார் படுத்துவது நல்லது....

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க கொடுக்கிற பில்ட் அப்பை பார்த்தா இது ஏன்??? இதை யாரும் செய்யலாமே?

இதை தானே நாங்கள் சொல்லுகிறோம்....ஈழமக்களிடம் இருந்து கலேக்சனுக்காக தான் இந்த நாடகம் எல்லாம் என்று...இவர்களால் வெல்ல முடியாது... சும்மா சவுண்டு மட்டுமே கொடுக்க முடியும்... (இப்போ நாங்கள் என்ன செய்கிறோம் என்று நீங்கள் சொல்லுகிறீர்களோ... :):icon_mrgreen: )

பி.கு: சீமானின் பேச்சை எல்லாம் ஒரு பொருட்டாக மதித்து யாரவது கேட்பார்களா???????

பேச்சைக் கேட்டமாட்டேன் என்பது உங்களது விருப்பம். அப்படி சீமானைக் கண்டு கொள்ளாத உங்களுக்கு ஏன் அவரைப் பற்றி விதண்டாவதம் கதைக்க வேண்டிய தேவை இருக்கின்றது. எதுவுமே முழுதாக அறியாமல் கதைப்பதற்குத் தான் கிணற்றுத் தவளை என்பார்கள். எல்லா விவாதங்களையும் இப்படித் தான் அறிவுபூர்வமாகச் செய்வீர்கள் போலுள்ளது.

அவரது செயல்களே அவரை எவ்வளவு மதிக்க வேண்டும்/செவி சாய்க்க வேண்டும் என்று உந்தும்....

ஆரம்பம் முதலே அவாரது செயல்கள் ஒரு செயற்கை தனமாகவே எனக்கு படுகிறது....

எங்க ஈழத்தை வைத்து அவரும் வியாபாரம் செய்வதால் அவரை பற்றியும் கதைக்க வேண்டியுள்ளது....

அவர் ஏதாவது நல்லது செய்தால் கூடிய கவனம் பெறுவார்...அவருக்கு ஜால்ரா அடிப்பவர்களை தவிர அவரை பற்றி யாரும் மேலாக சொல்லுவதில்லை..ஆகவே அவரை பற்றி PHd  செய்யுமளவுக்கு நேரத்தை வீணாக்க தேவையில்லை....

ஒருவரை பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தி விட்டு குற்றம் சொல்வதும் பிழை தான்...ஆகவே தான் கேட்கிறேன் அவரும் தேர்தலில் நின்று விட்டு கதைக்கலாம்...அவரின் செயல்களும் இந்த யாழ் களத்தில் நாங்கள் ஒருவரை யொருவர் குற்றம் சாட்டி அடிபடுவதர்க்கும் எந்த வித்தியாசமும் இல்லை....

முள்ளிவாய்க்கால் முற்றத்தை (சுவரை) இடித்த அம்மாவை பற்றி பொங்கினாரா?? அப்போ பம்மினார் தானே....(அது தான் அம்மா இவர்களுக்கு வைத்த ஆப்பு...தன்னோடு முண்டினால் முழுவதையும் அழிப்பேன் என்று....அதோடு கப்.சிப்)..இவரால் இந்திய தமிழர்களுக்கும் பிரயோசினம் இல்லை..ஈழத்தமிழருக்கும் இல்லை..என்ன எங்களுக்கு நாங்கள் (இவரின் ஈழ ஆதரவாளர்கள்) இவரின் மேல் கட்டும் பணமும் வீண்.....

அதை அவர் மாற்றி காட்டினால் நம்பலாம்.....அதுக்கு தான் இன்னும் 2 வருடம் இருக்கே :)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுமாறன் ஐயாவும்,வைகோவும், சீமானும் இல்லையென்றால் தமிழக அரசியலில் ஈழத்தமிழர் பிரச்சனைகள்/போராட்டங்கள் எப்படியிருக்கும்?

நெடுமாறன் ஐயாவும்,வைகோவும், சீமானும் இல்லையென்றால் தமிழக அரசியலில் ஈழத்தமிழர் பிரச்சனைகள்/போராட்டங்கள் எப்படியிருக்கும்?

பெரிய கட்சிகள் (பதவியில் இல்லாதவை) இவர்கள் செய்ததை மாற்றி மாற்றி செய்திருப்பார்கள்.....

தமிழ்நாட்டு மக்களை உணர்ச்சி வசப்பட வைக்க .... இப்போ காங்கிரசும் திமுகவும் படுத்து விட்டன..இனி என்ன செய்வார்?  ஈழமக்களுக்காக நாடுளுமன்றில் போராடு என்று அதிமுக MPகளை/இந்திய அரசை pressure பண்ணுவாரா? :)

இப்போ அது தானே அடுத்த கட்டம்..அதற்க்கு அவருக்கு துணிவு இருக்கா?

அது தானே அவர் செய்ய வேண்டியது? அல்லது...கடைசி தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான வர்ருக்காகவாவது (மின்சாரம், பொருளாதார வளர்ச்சி, சுற்று வட்டாரத்தில் நடை பெறும் சீரழிவுகளை தடுத்தல்) போராடுவாரா?

அது தானே அவர் தன்னை வளர்க்க வேண்டும் என்றால் செய்ய வேண்டியது....அவர் அப்படி எதையும் உருப்படியாக செய்ய காணோம் :)  இப்போ அம்மா உள்ள கடுப்பில் இவர் எதாவது செய்ய போய் கச்டபடுவார்..ஆனால் துணிவும்..நம்பிக்கையும்..நேர்மையும் உள்ளவன் அதை தானே செய்வான்........

இவர் தேவையென்றால் ஒரு உணர்ச்சி பேச்சாளர் என்று சொல்லலாம் :) :)

Edited by naanthaan

நெடுமாறன் ஐயாவும்,வைகோவும், சீமானும் இல்லையென்றால் தமிழக அரசியலில் ஈழத்தமிழர் பிரச்சனைகள்/போராட்டங்கள் எப்படியிருக்கும்?

சிவவேளை எவரும் கொடி பிடித்திருக்கமாட்டார்கள் .

அரசியல் ரீதியில் பார்த்தால் எதுவித வித்தியாசமும் இருந்திருக்காது .ஆனானபட்ட கருணாநிதி ,எம்ஜிஆர் ஜெயலிதாவிற்கு எதுவும் செய்யமுடியவில்லை பாவம் பச்சை பிள்ளைகள் என்ன செய்யமுடியும் .

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை பற்றி கதைக்க முதல் என்ன இருக்கு ?

முதலில் எங்கு என்னத்தை பேச வேண்டும் என்றாவது முதலில் யாரும் சொல்லி கொடுங்கோ ?  

தலைப்பில் ஸ்ரீதேவி என்றா போட்டிருக்கு ?
சீமான் என்றுதானே போட்டிருக்கு ............. பேச ஒண்டும் இல்லை என்றால் அப்ப்டடியே பொத்திக்கொண்டு போயிருக்கலாமே?

தலைப்பில் ஸ்ரீதேவி என்றா போட்டிருக்கு ?
சீமான் என்றுதானே போட்டிருக்கு ............. பேச ஒண்டும் இல்லை என்றால் அப்ப்டடியே பொத்திக்கொண்டு போயிருக்கலாமே?

ஸ்ரீதேவி தலைப்பு என்றால் திரி பத்து பக்கம் போயிருக்கும் .

பாவம் சீமான் ஒரு செய்திகளிலும் ஆளை காணோம் .யாழில் மாத்திரம் சீமானால் ஜெயலலிதா வென்றார் என்று ரீல் ஓடுது . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
அதுதான் கேட்கிறேன் .......
ஏன் ஓட வைகிறீர்கள் என்று?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.