Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் ‘மீனவர்’: தொல்.திருமாவளவன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரன் ‘மீனவர்’: தொல்.திருமாவளவன்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயருடன் ‘பிள்ளை’ என்ற பெயர் சேர்ந்து வருவதால் அவரை எல்லோரும் ‘பிள்ளைமார்’என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. பிரபாகாரன், ‘மீனவர்’ சமுதாயத்தைச் சேர்ந்தவர்’’என்ற புதிய தகவலை வெளியிட்டார் திருமாவளவன்.

மீனவர் உரிமை மீறலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு, மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் சார்பில் மீனவர் வாழ்வுரிமை மூன்றாவது மாநில மாநாடு திருச்செந்தூரை அடுத்துள்ள வீரபாண்டியப்-பட்டினத்தில் கடந்த 11-ம் தேதி நடந்தது.

திருச்செந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க.கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். கூட்டம் நடந்த வ.உ.சி. திடல் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகளின் ஃபிளக்ஸ் போர்டுகளே ஆக்கிரமித்திருந்தது.

திருமாவளவன் கூட்டத்திற்கு வருகிறார் என்பதாலோ என்னவோ தெரியவில்லை,அவர் வருவதற்கு முன்பாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில து ணைச் செயலாளர் சி.மகேந்திரன், அவசர அவசரமாக பேசிவிட்டுச் சென்றார்.

அகில இந்திய மீனவர் சங்கத் தலைவர் அண்டன் கோமஸ்,மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குனர் ஹென்றி டிபேன்,பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பால் பிரபாகரன் ஆகியோர்,தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு வரும் நிகழ்ச்சியையே பிரதானப்படுத்திப் பேசினார்கள். அவர்களின் பேச்சில் தி.மு.க. கூட்டணி மீதான தாக்குதல் அதிகம் இருந்தது.

அவர்களின் பேச்சை எந்தவித சலனமும் இல்லாமல் கவனித்துக் கொண்டிருந்த திருமாவளவன், இறுதியாகப் பேசும்போது சற்று சூடாகவே பதில் சொன்னார்.

“தமிழர்களின் பூர்வீகக் குடிமக்கள் மீனவர்கள். ஆனால், இன்றைக்கு நாதியற்ற சமுதாயமாக இருக்கிறார்கள்.மீனவர் சமுதாயத்தினர் சாதாரணமானவர்கள் அல்ல. மிகப்பெரிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவர்கள்.இந்த இடத்தில் ஒரு உண்மையைச் சொல்ல விரும்புகிறேன்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் நீங்கள் நினைப்பதுபோல பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவர் உங்களது மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். மீனவர் சமுதாயத்தின் உட்பிரிவுகளின் ஒன்றான ‘கரையாளர்’ சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

கடந்த 2002-ம் ஆண்டு வன்னியில் அவரை சந்தித்தபோது இந்தத் தகவலை தெரிவித்தார். எனினும், விடுதலைப் புலிகள் இயக்கம் சாதிகளுக்கு அப்பாற்பட்ட இயக்கம். 21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய புரட்சியாளராக விளங்கி உலக சரித்திரத்தில் இடம் பிடித்த பிரபாகரன் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது உங்களுக்கு சந்தோஷமான விஷயமாக இருக்கும் என்பதற்காக இதைச் சொல்கிறேன்’’ என்று பேசி மீனவர்களை உற்சாகப்படுத்திய அவர், அப்படியே தமிழக அரசியலுக்கு வந்தார்.

“எனக்கு எவனும் நெருக்கடி தரமுடியாது. ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்கள்தான் ஈழத்தைப் பற்றி பேசினால் அம்மா நமக்கு ஆப்படித்துவிடுவார் என்று ஈழத்தைப் பற்றி பேச பயப்படுகிறார்கள். வைகோ, நெடுமாறன், தா.பாண்டியன் ஆகியோருடன் சேர்ந்தும் மேடைகளில் பேசியிருக்கிறேன்.

தி.மு.க. கூட்டணியில் இருக்கிறேன் என்பதற்காக நான் ஒரு நாளும் ஈழம் பற்றி பேசத் தயங்கியதில்லை. ஆனால், அவர்கள் தயங்கினார்கள். 2006-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் இருந்தது. ஆனால், தேர்தல் நேரத்தில் எனக்கே தெரியாமல் விடுதலைச் சிறுத்தைகள் வே ட்பாளராகப் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் அ.தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தினார் ஜெயலலிதா.

அதற்குப் பிறகுதான் நாங்கள் தி.மு.க. கூட்டணிக்குப் போனோம். தி.மு.க. வேட்பாளர்களை ‘வாபஸ்’ பெறச் சொல்லிவிட்டு எங்கள் வேட்பாளர்களை ஆதரிக்கச் சொன்னார் கலைஞர்.

தி.மு.க.தலைவர் என்னை அப்படி பேசக் கூடாது என்றும் சொன்ன-தில்லை. எனக்கிருக்கும் அந்தத் துணிவு, அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள எந்த தலைவர்களுக்காவது இருக்கிறதா?

ஈழம் உருவாகக் கூடாது என்பதில் மற்ற நாடுகளை விட இந்தியாதான் உறுதியாக இருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எம்.ஜி.ஆர். உதவினார் என்றால் அப்போது இருந்த நிலை வேறு. அதற்குப் பிறகு ஒரு நாளாவது ஈழத்தை ஆதரித்துப் பேசியிருப்பாரா ஜெயலலிதா? பிரபாகரனைக் கைது செய்து தூக்கில் போடவேண்டும் என்று பேசியவர்தான் ஜெயலலிதா. விடுதலைப் புலிகளுக்கு தடை விதிக்க நான்தான் காரணம் என்று இன்றும் பெருமைப்பட்டுக் கொண்டி ருப்பவர் அவர்.

பிரபாகரனைச் சந்தித்தபோது ‘நார்வே நாடு ஏன் அமைதி ஏற்படுத்த இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது?’ என்று கேட்டேன். அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘அமெரிக்காவின் கோர முகம் இஸ்ரேல். அன்பு முகம் நார்வே’ என்றார். அதாவது, இலங்கையில் ஈழம் மலர்வதை அமெரிக்கா விரும்பவில்லை என்பதை சூசகமாக அப்படிச் சொன்னார்’’ என்று தனது விறுவிறுப்பான பேச்சை முடித்துக்கொண்டார் திருமாவளவன்.

சில நாட்களுக்கு முன்புதான் மீனவர் மக்கள் கட்சி சார்பில் இப்பகுதியில் மீனவர் மாநாடு நடந்து முடிந்தது. அந்த மாநாட்டில் அ.தி.மு.க. கூட்டணிக் கட் சியைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த இரண்டு மாநாடுகளிலும் அந்தப் பகுதி மீனவர்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து கலந்து கொள் ளவில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம்!

படங்கள்: மாரிராஜா

எஸ்.அண்ணாதுரை

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

http://meenakam.com/2010/12/17/16560.html

  • Replies 58
  • Views 14.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திரு திருமாவளவன் அவர்கட்கு, ஓரு ஈழத்தமிழனாக தங்களது இப்பேச்சின் சாராம்சத்தை என்னால் இரசிக்கவோ, வரவேற்கவோ அன்றேல் ஏற்றுக்கொள்ளவோ முடியாதுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளது தலைவர் மேதகு, வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை தமிழ்த்தேசியத் தலைவராகக் கருதுகிறோமே தவிர, இவர் அது அல்லது இது இன்னாருக்குச் சேர்மதியானவர் என ஒருபோதும் கருதுவதில்லை. உங்கள் சாதி அரசியலை உங்கள் தெருக்கோடியில் வைத்துக்கொள்ளவும் தேவையில்லாது எமது தலைவருடன் தொடர்புபடுத்தவேண்டாம். இதை நான் வேண்டுதலாகக் கூறவில்லை எச்சரிக்கையாகவே கூறுகிறேன். அவரது அடிப்பொடிகள் யாராவது இருந்தால் இச்செய்தியை அவரியட் சேர்ப்பிக்கவும். இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே (இக்கருத்துடன் யாழ்களமோ அன்றேல் யாழ்கள உறவுகளோ வேறு அமைப்புகளோ சம்பந்தமில்லை.)

திருமாவளவன் சாதிப்பிரிவினையை வைத்து அரசியல் செய்கிறார். அவருக்கு ஈழமண்ணில் உள்ள(இருந்த) சாதியற்ற நிலைப்பாடு பற்றி தெரிந்திருந்தும், இப்படியான கருத்துக்களை வெளியிடுவது கண்டிக்கப்படவேண்டியது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு திருமாவளவன் அவர்கட்கு, ஓரு ஈழத்தமிழனாக தங்களது இப்பேச்சின் சாராம்சத்தை என்னால் இரசிக்கவோ, வரவேற்கவோ அன்றேல் ஏற்றுக்கொள்ளவோ முடியாதுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளது தலைவர் மேதகு, வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை தமிழ்த்தேசியத் தலைவராகக் கருதுகிறோமே தவிர, இவர் அது அல்லது இது இன்னாருக்குச் சேர்மதியானவர் என ஒருபோதும் கருதுவதில்லை. உங்கள் சாதி அரசியலை உங்கள் தெருக்கோடியில் வைத்துக்கொள்ளவும் தேவையில்லாது எமது தலைவருடன் தொடர்புபடுத்தவேண்டாம். இதை நான் வேண்டுதலாகக் கூறவில்லை எச்சரிக்கையாகவே கூறுகிறேன். அவரது அடிப்பொடிகள் யாராவது இருந்தால் இச்செய்தியை அவரியட் சேர்ப்பிக்கவும். இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே (இக்கருத்துடன் யாழ்களமோ அன்றேல் யாழ்கள உறவுகளோ வேறு அமைப்புகளோ சம்பந்தமில்லை.)

இதை நான் வழிமொழிகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் குறுநிமிட கைதட்டல்களுக்காகவும்

சில நூறு வாக்குகளுக்காகவும்

என் தலைவனை வகைப்படுத்துவது

விபச்சாரத்தை விட கேவலமானது திரு. வளவன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரன் சாதிக்கு அப்பாற்பட்டவர்.

திருமாவளவனுக்கு சாதியை வைத்துத்தான் அரசியல் நடத்தவேண்டும் என்றால்.....

முதலில் மகாத்மாகாந்தி என்ன சாதி, சோனியா காந்தி என்ன சாதி..... என்று ஆராயுங்கள்.

ப்ளீஸ்.... இந்த விடயத்தில் எங்களை இழுக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சாதியும் மன்னாங்கட்டியும்.......

நான் என்டைக்கும் உந்த நாசமாய் போன சாதியை பார்த்தது இல்லை பார்க்கவும் போரத்தும் இல்லை ,

திருமாக்கு இது தேவை இல்லா வேலை , தன்ர நாத்தம் பிடிச்ச அரசியலுக்கான்டி இப்படியா ஜயோடா சாமி , :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனும் ஒரு சாதி வெறியர் என்பதனை மறந்துவிடாதீர்கள். அவர் எப்படிப்பட்ட சாதி வெறியர் என்பதனை தற்போது எஞ்சியிருக்கக்கூடிய தளபதிகள், போராளிகள், எழுத்தாளர்கள் ஆகியோரிடம் கள உறவுகள் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.

இயக்கத்தினை அத்தகைய மனப்பான்மையில்தான் அவர் கட்டி வளர்த்தார். போராட்டம் இன்று கவிழ்வதற்கு பிரபாகரனின் சாதி வெறியும் ஒரு காரணம்.

என்ன உங்களுக்கு நான் கூறுவது அபாண்டம் என்று தெரிகிறதா? யாரோ ஒருவன் பிற்காலத்தில் வரலாறு எழுதும்போது பிரபாகரனின் சாதி வெறியினை எழுதுவார்கள். அப்போது என்னை நினைத்துக்கொண்டால் சரி. என்னை வசைபாடி உங்கள் நேரத்தினை விரயமாக்காதீர்கள்.

நான் வரலாற்று ஆதாரத்துடன்தான் உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கின்றேன்.

திருமாவளவன் பேசியதில் தவறில்லை என இங்கே நான் கூற வரவில்லை. ஆனால், அவர் பேசுவதற்கும் பிரபாகரன்தான் காரணம். அதுதான் பாட்டிலேயே தேசிய மக்குகள் படித்து வைத்திருக்கின்றனரே. பேசாமல் பேசவைப்பான் பிரபாகரன்.

Edited by nirmalan

திரு திருமாவளவன் அவர்கட்கு, ஓரு ஈழத்தமிழனாக தங்களது இப்பேச்சின் சாராம்சத்தை என்னால் இரசிக்கவோ, வரவேற்கவோ அன்றேல் ஏற்றுக்கொள்ளவோ முடியாதுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளது தலைவர் மேதகு, வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை தமிழ்த்தேசியத் தலைவராகக் கருதுகிறோமே தவிர, இவர் அது அல்லது இது இன்னாருக்குச் சேர்மதியானவர் என ஒருபோதும் கருதுவதில்லை. உங்கள் சாதி அரசியலை உங்கள் தெருக்கோடியில் வைத்துக்கொள்ளவும் தேவையில்லாது எமது தலைவருடன் தொடர்புபடுத்தவேண்டாம். இதை நான் வேண்டுதலாகக் கூறவில்லை எச்சரிக்கையாகவே கூறுகிறேன். அவரது அடிப்பொடிகள் யாராவது இருந்தால் இச்செய்தியை அவரியட் சேர்ப்பிக்கவும். இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே (இக்கருத்துடன் யாழ்களமோ அன்றேல் யாழ்கள உறவுகளோ வேறு அமைப்புகளோ சம்பந்தமில்லை.)

  • கருத்துக்கள உறவுகள்

திரு நிர்மலன் அவர்கட்கு இப்போ பிரச்சனை என்னவெண்டால் யார் சாதிவெறியர் யார் சாதிவெறியர் என்பதில்லை பலலட்சக்கணக்கான தமிழர்களால் தலைவன் என ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவரை கட்டம்கட்டுவதை நாம் விரும்பவில்லை. தனிப்பட்ட விரோதங்களை இங்கு அள்ளிவிடுவதைத் தவிர்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D இப்ப என்ன,

பிரபாகரன் சாதி வெறியன், பயங்கரவாதி, கொலைகாரன், பிள்ளைபிடிகாரன், சனநாயக விரோதி...இவ்வளவும்தானோ வேற ஏதாச்சும் இருக்கோ??

ஏன் கேட்கிறன் எண்டால் வருகிற காலத்தில இவ்வளவையும் ஒருத்தர் சரித்திரத்தில எழுதப்போறாராம். மற்ற மா.மா ஆக்களின்ர வண்டவாளங்களை பொன் எழுத்தில பதியப்போறாராம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயக்கத்தினை அத்தகைய மனப்பான்மையில்தான் அவர் கட்டி வளர்த்தார்.

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும். குழந்தைக்கு கூடத் தெரியும் எம் போராட்டம் எப்படி கட்டி வளர்க்கப்பட்டதென்று.

குடுக்கிற காசுக்கு கொஞ்சம் ஓவராய் தான் கூவுகிறீர்கள் கொயாலே!

  • கருத்துக்கள உறவுகள்

அவர் பேசியதின் படி அவரே குறிப்பிட்டிருக்கிறார்.. தேசிய தலைவரை 2002 இல் சந்தித்த போது அவரே தான் இதைக் கூறியது என்று.

விடுதலைப்புலிகளின் தலைமை யதார்த்தத்தை புரிந்து கொள்ளாத ஒரு தலைமையல்ல. சாதிய வேறுபாடுகளை எல்லாம் எமது சமூகம் களைந்துவிட்டது என்பதை நம்ம பிரபாகரன் தயாராக இருக்கவில்லை. அவர் சாதியக் களைவை எவ்வளவு சாத்தியப்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு முயன்றாரே அன்றி.. எமது சமூகம் அதை கைவிட்டுவிட்டதாக புலிகள் இறுதி வரை நம்பவில்லை. அதை அவர்கள் நன்கே அறிந்திருந்தார்கள்.

ஆனால் நம்மில் சிலர் எழுத்துக்கு சாதியக் களைவை பற்றி பேசிக் கொண்டு திருமாவளவனை திட்டிக் கொண்டு தமக்கென்று வரும் போது.. தமக்கான குடும்ப சூழலில் வரும் போது அதே சாதியத்தை தூக்கிப் பிடிப்பார்கள்.

நான் மிகச் சமீபத்தில் அதுவும் வெளிநாடொன்றில் நடத்ததைக் கண்டிருக்கிறேன்.. ஊரில் சாதியால் குறைத்து மதிப்பிடப்பட்ட ஒரு பிரிவைச் சேர்ந்த பெண் தங்களை நாய்கள் என்று கூறிய இன்னொரு பிரிவைச் சேர்ந்த பையனை திட்டமிட்டு காதலிப்பதாகக் கூறி சாதி பற்றியே அறியாத அவனை தன் சமூகப் பிரிவை பழித்த அவனின் மூதாதையோருக்காக அந்தப் பெண் பழிவாங்கியதை கண்டிருக்கிறேன். இப்படியான நச்சு விதைகளை மூளையயில் சுமந்து கொண்டு நாம் திரிகிறோம். ஆனால் திருமாவளவன்.. எமது சமூகத்தின் உண்மையின் அடிப்படையில் வெளிப்படையா சொல்லும் விடயங்களை விரைந்து கண்டிக்கிறோம். நமக்குள் உள்ள அழுக்குகளை சீர் செய்யாமலேயே..! :D :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்,

நீங்கள் கதைகளை திசை திருப்புவதில் வல்லவர் என்று எமக்குத் தெரியும்.

இங்கு.. மூலக் கருத்து, எமது தேசியத்தலைவரை, திருமாவளவன் தனது நாட்டு அரசிலுக்காக பயன்படுத்துவதை எதிர்க்கின்றேன்.

தொழிலாக மீன் பிடிப்பவர்களை மீனவர் என்பர்.

பிரபாகரன் அவர்கள் நாம் அறிந்தவரை அவ்வாறு செய்யாவில்லை. அவர் தமிழினத்தின் ஒப்பற்ற மாபெரும் தலைவராக இருந்தவர்.

ஈனப் பிழைப்பு நடத்தும் தமிழ் நாட்டு அரசியல் கோமாளி திருமாவளவன் ஓர் "ஈனர்".

எதை திசை திருப்பல் எங்கிறீர்கள்.. கந்தையன் என்பவரை யாழ்ப்பாண நூலகத்தை திறக்க விடவில்லை என்று ஆனந்த சங்கரி புலிகள் மீது சாதிய சாயம் பூசி எழுதித் தள்ளவில்லையா...??!

எமக்குள்ளேயே சாதிய வெறி பிடித்ததுகள் இருக்கும் போது சாதிய கட்சிகளும் சாதிய அரசியலும் நடத்தும் தமிழகத்தில் திருமாவளவன் பேசியதை இட்டு நாம் ஏன் கொதிக்க வேண்டும்.

இதனால் நமக்கு என்ன நன்மை. நமது சமூகத்துக்குள் ஒழிந்து கிடப்பதால் அது இல்லை என்றாகிடாது. இப்படித்தான் பிரதேசவாதம் ஒழிக்கப்பட்ட தாகச் சொன்னோம். இறுதில் 6000 போராளிகளோடு ஒருவன் பிரதேசவாதம் பேசி ஓடிப் போய் பேரழிவு வரை அதை தொடர்ந்து இப்போதும் செய்கிறான். அவன் வழியில் இன்று பலர். நாம் யதார்த்தத்தின் வழியில் ஆராயாது மூடி மறைத்து எதிரிக்கு பலமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமன்றி.. ஓரிரண்டு தமிழக ஆதரவாளர்களையும் இப்படி போலி தோற்றம் காட்டப் போய் இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

சாதி முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையில் எமது சமூகம் இருக்கும் என்றால்.. நிச்சயம் நானும் இதைக் கண்டிப்பேன். ஆனால் நமக்கு அந்தத் தகுதி இருக்கா என்பதே கேள்வி..???! நமது சமூகம் அப்படியான ஒன்று. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரனும் ஒரு சாதி வெறியர் என்பதனை மறந்துவிடாதீர்கள். அவர் எப்படிப்பட்ட சாதி வெறியர் என்பதனை தற்போது எஞ்சியிருக்கக்கூடிய தளபதிகள், போராளிகள், எழுத்தாளர்கள் ஆகியோரிடம் கள உறவுகள் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.

இயக்கத்தினை அத்தகைய மனப்பான்மையில்தான் அவர் கட்டி வளர்த்தார். போராட்டம் இன்று கவிழ்வதற்கு பிரபாகரனின் சாதி வெறியும் ஒரு காரணம்.

என்ன உங்களுக்கு நான் கூறுவது அபாண்டம் என்று தெரிகிறதா? யாரோ ஒருவன் பிற்காலத்தில் வரலாறு எழுதும்போது பிரபாகரனின் சாதி வெறியினை எழுதுவார்கள். அப்போது என்னை நினைத்துக்கொண்டால் சரி. என்னை வசைபாடி உங்கள் நேரத்தினை விரயமாக்காதீர்கள்.

நான் வரலாற்று ஆதாரத்துடன்தான் உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கின்றேன்.

திருமாவளவன் பேசியதில் தவறில்லை என இங்கே நான் கூற வரவில்லை. ஆனால், அவர் பேசுவதற்கும் பிரபாகரன்தான் காரணம். அதுதான் பாட்டிலேயே தேசிய மக்குகள் படித்து வைத்திருக்கின்றனரே. பேசாமல் பேசவைப்பான் பிரபாகரன்.

நிர்மலன் கொண்டுவரும் ஒவ்வொரு பதிவுகளிலும் உமது சிந்தனையின் தராதரத்தை எமக்கு புரிய வைத்திருக்கின்றது.

உமது பதிவுகள் தாழ்த்துவது பிரபாகரனயோ, புலிகளையோ என்று கனவு காணாதீர், அவை அசிங்கப்படுத்துவது உமது சிந்தனையின் தரத்தைத்தான்!

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாளைய சந்தேகம், ஏன் எப்போதும் நிலவைப்பார்த்தே நாய்கள் குலைக்கின்றன?

சாதி வெறிக்கு எதிராக பேசிவரும் சாதி வெறியர்களை இத்திரி அடையாளம் காட்டுகிறது.

தொழிலாக மீன் பிடிப்பவர்களை மீனவர் என்பர்.

பிரபாகரன் அவர்கள் நாம் அறிந்தவரை அவ்வாறு செய்யாவில்லை. அவர் தமிழினத்தின் ஒப்பற்ற மாபெரும் தலைவராக இருந்தவர்.

ஈனப் பிழைப்பு நடத்தும் தமிழ் நாட்டு அரசியல் கோமாளி திருமாவளவன் ஓர் "ஈனர்".

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதை திசை திருப்பல் எங்கிறீர்கள்.. கந்தையன் என்பவரை யாழ்ப்பாண நூலகத்தை திறக்க விடவில்லை என்று ஆனந்த சங்கரி புலிகள் மீது சாதிய சாயம் பூசி எழுதித் தள்ளவில்லையா...??!

எமக்குள்ளேயே சாதிய வெறி பிடித்ததுகள் இருக்கும் போது சாதிய கட்சிகளும் சாதிய அரசியலும் நடத்தும் தமிழகத்தில் திருமாவளவன் பேசியதை இட்டு நாம் ஏன் கொதிக்க வேண்டும்.

இதனால் நமக்கு என்ன நன்மை. நமது சமூகத்துக்குள் ஒழிந்து கிடப்பதால் அது இல்லை என்றாகிடாது. இப்படித்தான் பிரதேசவாதம் ஒழிக்கப்பட்ட தாகச் சொன்னோம். இறுதில் 6000 போராளிகளோடு ஒருவன் பிரதேசவாதம் பேசி ஓடிப் போய் பேரழிவு வரை அதை தொடர்ந்து இப்போதும் செய்கிறான். அவன் வழியில் இன்று பலர். நாம் யதார்த்தத்தின் வழியில் ஆராயாது மூடி மறைத்து எதிரிக்கு பலமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமன்றி.. ஓரிரண்டு தமிழக ஆதரவாளர்களையும் இப்படி போலி தோற்றம் காட்டப் போய் இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

சாதி முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையில் எமது சமூகம் இருக்கும் என்றால்.. நிச்சயம் நானும் இதைக் கண்டிப்பேன். ஆனால் நமக்கு அந்தத் தகுதி இருக்கா என்பதே கேள்வி..???! நமது சமூகம் அப்படியான ஒன்று. :D

அதிகாரபலம், பணபலம் இருண்டும் இருந்தால் எளியவனின் குடும்பத்திற்குள் கூட கலகத்தை உண்டுபண்ணலாம்.

ஆனந்தசங்கரி என்னும் நாதாரி இன்று செத்த பாம்பு. சிங்களத்துக்கு வால் பிடிக்கப் போய்... முழுத்தமிழனையும் நடுத்தெருவில் விட்ட கோதாரி.

திருமாவளவுனும் அதே கேஸ் தான். தங்களுடைய சுயலாபத்திற்க்காக எதனையும் சொல்வார்கள். நீங்களும் அதனை நம்பிக்கொண்டு இளைய சமுதாயத்தை சீரளிக்க வேண்டாம். :D

ஆனந்த சங்கரி நாதாரி.. திருமாவளவன் நாதாரி.. சரி ஆகட்டும்.

அப்போ அண்மையில் கனடாவில் வேற்று சாதி பையனோடு ஓடினதென்று துரத்திப் போய் காரை மோதவிட்டு.. அடிபட்டு.. அண்மையில் வழக்கொன்றில் தண்டனை பெற்ற நம் தமிழர்.. அவை யாராம்...???! அவை சீரழிக்காத ஒன்றையாக நாங்க எழுதிச் சீரழிக்கப் போறம்.

பூனை கண்ணை மூடிட்டா உலகம் இரண்டது என்றாகிடாது. நாங்க உண்மைகளை ஏற்க மறுத்தது அல்லது மறைத்ததாலும்.. எதிரிகளை தவறாக எடை போட்டதாலும்.. நண்பர்களை சரியாக இனங்காணாததாலும் தான் முள்ளிவாய்க்கால் எமக்கு புதைகுழியானது.

அதே தவறையே மீண்டும் இங்கு திருமாவளவனை திட்டுவதன் மூலம் செய்கிறோம். நாங்கள் ஏதோ சாதி வெறியற்ற அப்பழுக்கற்ற ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற பொய்த்தோறனையில்..!

இதை தான் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது ஆபத்தானது. இதுவே இன்றைய தலைமுறைக்குள்ளும் சாதியத்தை காவுகிறது. நாங்கள் பிறந்து வளர்ந்த காலம் புலிகளின் காலம். நாங்கள் ஊரில் அறியாத சாதியை கூட புகலிடத்தில் காணக் கூடியதாக இருக்கிறது. அதை பிரபாகரன் காவவில்லை. திருமாவளவன் காவவில்லை. தமிழர்கள்.. ஈழத்தமிழர்கள் காவுகின்றனர். இதுவும் உண்மை. :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த சங்கரி நாதாரி.. திருமாவளவன் நாதாரி.. சரி ஆகட்டும்.

அப்போ அண்மையில் கனடாவில் வேற்று சாதி பையனோடு ஓடினதென்று துரத்திப் போய் காரை மோதவிட்டு.. அடிபட்டு.. அண்மையில் வழக்கொன்றில் தண்டனை பெற்ற நம் தமிழர்.. அவை யாராம்...???! அவை சீரழிக்காத ஒன்றையாக நாங்க எழுதிச் சீரழிக்கப் போறம்.

பூனை கண்ணை மூடிட்டா உலகம் இரண்டது என்றாகிடாது. நாங்க உண்மைகளை ஏற்க மறுத்தது அல்லது மறைத்ததாலும்.. எதிரிகளை தவறாக எடை போட்டதாலும்.. நண்பர்களை சரியாக இனங்காணாததாலும் தான் முள்ளிவாய்க்கால் எமக்கு புதைகுழியானது.

அதே தவறையே மீண்டும் இங்கு திருமாவளவனை திட்டுவதன் மூலம் செய்கிறோம். நாங்கள் ஏதோ சாதி வெறியற்ற அப்பழுக்கற்ற ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற பொய்த்தோறனையில்..!

இதை தான் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது ஆபத்தானது. இதுவே இன்றைய தலைமுறைக்குள்ளும் சாதியத்தை காவுகிறது. நாங்கள் பிறந்து வளர்ந்த காலம் புலிகளின் காலம். நாங்கள் ஊரில் அறியாத சாதியை கூட புகலிடத்தில் காணக் கூடியதாக இருக்கிறது. அதை பிரபாகரன் காவவில்லை. திருமாவளவன் காவவில்லை. தமிழர்கள்.. ஈழத்தமிழர்கள் காவுகின்றனர். இதுவும் உண்மை. :D

பிரபாகரன் ‘மீனவர்’: தொல்.திருமாவளவன்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயருடன் ‘பிள்ளை’ என்ற பெயர் சேர்ந்து வருவதால் அவரை எல்லோரும் ‘பிள்ளைமார்’என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. பிரபாகாரன், ‘மீனவர்’ சமுதாயத்தைச் சேர்ந்தவர்’’என்ற புதிய தகவலை வெளியிட்டார் திருமாவளவன்.

-------

நெடுக்ஸ்,

இன்னும்... நீங்கள் சின்னப்பிள்ளை மாதிரி.... அடம் பிடிக்கக் கூடாது.

தமிழ்நாட்டில்.... பெயருக்குப்பின் பிள்ளை, செட்டியார், சாமி, தேவர்.... என்றெல்லாம் வரும்

உதாரணம்: வேலுப்பிள்ளை, ராமசாமிச்செட்டியார்,கந்தசாமி என்று.....

அதில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்னும் பெயரை வைத்து... திருமாவளவன் நடத்துவது மலிந்த அரசியல்.

இதனை நான் வரவேற்கவில்லை. மற்றும் படி அவர் என்ன கூத்தாடினாலும் ஆடட்டும்.

அதுக்கு, நீங்கள் பக்க வாத்தியம் போட்டாலும்.... காரியமில்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் பல கருத்துக்களுடன் நான் உடன்படுகின்றேன்.

'சரிநிகர்' என முன்னர் ஒரு வார ஏடு கொழும்பில் இருந்து வந்தது. அதில்கூட பலதடவை பிரபாகரனின் சாதியம் தொடர்பான சிந்தனைகளை எழுதியிருந்தனர் என்பதனை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.

பலர் எனது கருத்துக்களுக்கு கடும் விமர்சனத்தினை முன்வைத்திருக்கின்றனர். அதற்கு முதலில் எனது மகிழ்ச்சியினை தெரிவிக்கின்றேன்.

என்ன செய்வது, எமது தமிழ் இனத்தில் கடவுள் நம்பிக்கை எவ்வாறு ஆழ வேரூன்றி இருக்கின்றதோ அதேயளவுக்கு பிரபாகரன் என்கின்ற தனிமனித வழிபாடும் அவர் தொடர்பான பிம்பமும் தலைதூக்கியிருக்கின்றது.

இதற்கு உங்களை நான் நொந்து என்ன பிரயோசனம். அவரும் ஒரு மனிதன்தான் அவரும் பல தவறுகளைச் செய்ததனால்தான் போராட்டம் 30 வருடத்துக்குள் முடிவடைந்தது என்பதனை நீங்கள் எப்போது நம்புகின்றீர்களோ அப்போதுதான் பல தெளிவுகளை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.

அதுவரைக்கும் நான் எழுதாது விடப்போவதில்லை. எனக்குத் தெரிந்த 100 வீதமான உண்மைகளை எழுதுவேன். இதுவரை காலமும் அவ்வாறுதான் எழுதி வருகின்றேன்.

எனது கருத்துக்களை விமர்சிக்க பலருக்கும் உரிமை உண்டு. அதற்காக நான் கூறுகின்ற கருத்தினை விமர்சிப்பவர்களுக்காக திருத்திக்கொள்ளப் போவதும் இல்லை. அதேநேரத்தில் அவர்களை மகிழ்ச்சியுறும் வகையில் எழுத வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

nirmalan அதுவரைக்கும் நான் எழுதாது விடப்போவதில்லை. எனக்குத் தெரிந்த 100 வீதமான உண்மைகளை எழுதுவேன். இதுவரை காலமும் அவ்வாறுதான் எழுதி வருகின்றேன்.

___________________

???????

Edited by வல்வை லிங்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.