Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

50வது சதம் அடித்தார் சச்சின்

Featured Replies

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஐம்பது சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் அவர் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார். தனது 175 ஆவது போட்டியிலேயே டெண்டூல்கர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையும் ஏற்படுத்தி விட்டார்.

சச்சின் டெண்டூல்கர் 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். கராச்சியின் தேசிய மைதானத்தில் இடம்பெற்ற அப்போட்டியில் அவர் 15 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார். 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தனது முதல் சதத்தை டெண்டூல்கர் அடித்தார். அப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் 119 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிகப்படியான சதங்களை அடித்தவர்களின் வரிசையில் டெண்டூல்கருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ரிக்கி பாண்டிங் இருக்கிறார். அவர் இதுவரை 39 சதங்களை அடித்துள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/12/101219_sachinfifty.shtml

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் தொடர்ந்து ஏதாவதொரு சாதனைக்கு மேல் சாதனையாக நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார். வாழ்த்துக்கள்!! :wub:

இணைப்புக்கு நன்றி அகூதா!! :D

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் சாதனையாளன் சச்சினுக்கு வாழ்த்துக்கள். ஒரு நாள் போட்டிகளிலும் 50 சதம் அடிக்க வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடிக்காத வீரர் என்டால் சச்சின் ஆகவே அவருக்கு என்ட வாழ்த்து இல்லை :wub:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடிக்காத வீரர் என்டால் சச்சின் ஆகவே அவருக்கு என்ட வாழ்த்து இல்லை :D

நேர்மையான விளையாட்டுக்காரரைப் பிடிக்காதோ? :wub:

கிரிக்கெட் சாதனையாளன் சச்சினுக்கு வாழ்த்துக்கள். ஒரு நாள் போட்டிகளிலும் 50 சதம் அடிக்க வேண்டும்!

இது எல்லாம் ஒரு பிழைப்பா? சச்சினுக்கு இது ஒரு வேலை அடிக்கூர ஒவரு சதத்துக்கு அவன் காசு கண்டு கொள்ளுவான்.

நேர்மையான விளையாட்டுக்காரரைப் பிடிக்காதோ? :wub:

என்ன நக்கலோ?

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையான விளையாட்டுக்காரரைப் பிடிக்காதோ? :wub:

சச்சின் ஒரு நாளும் தன்ட டீம் வெல்ல வேண்டும் என்ட எண்ணத்தில் விளையாடுவது இல்லை.அவரது நோக்கம் அவர் சதமடித்தால் சரி :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் ஒரு நாளும் தன்ட டீம் வெல்ல வேண்டும் என்ட எண்ணத்தில் விளையாடுவது இல்லை.அவரது நோக்கம் அவர் சதமடித்தால் சரி :wub:

அடடா. நீங்கள் கிரிக்கெட்டை அண்மையில்தான் ரசிக்கத் தொடங்கினீர்கள் போலுள்ளது :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் ஒரு நாளும் தன்ட டீம் வெல்ல வேண்டும் என்ட எண்ணத்தில் விளையாடுவது இல்லை.அவரது நோக்கம் அவர் சதமடித்தால் சரி :wub:

உங்கட இந்த கருத்தை வாசிக்க எனக்கு கினத்துக்கை விழுந்து தர்கொலை செய்யனும் போல இருக்கு, ஆனால் நான் வசிக்கும் நாட்டில் கினறு இல்லை அதாலை தான் உயிர் வாழுறேன் இப்பவும் :wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

ரதி சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை..! :wub: இந்த 50 ஆவது சதம் அடிச்சதிலயும் பிரச்சினைப் படுகினம்..! :D

கடைசி ஆட்டக்காரர்களையும் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க விடாமல் செய்வதுதான் முன்னணி ஆட்டக்காரர்களின் வழக்கம்..! இதற்காக சில ஓட்டங்களை எடுக்காமல் கூட விடுவார்கள்..! :wub:

ஆனால் சச்சின் தான் 100 அடித்தவுடன் கடைசி ஆட்டக்காரர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டார்..! ஐந்தாவது நாளில் இன்னும் சில மணிநேரங்கள் போக்குக் காட்டியிருந்தால் போட்டியை சமமாக்கியிருக்கலாம் எண்டு நான் சொல்லவில்லை..! ஆய்வாளர்கள் சொல்லுகினம்..! :D

சச்சினுக்கு நூறு அடித்தமா வீட்டுக்குப் போனமா எண்டு இருக்கவேணுமாம்..! :wub:

பி.கு.: ராகுல் டிராவிட் அணித்தலைவராக இருந்தபோது நடந்தது இது. சச்சின் விளையாடிக்கொண்டிருந்தபோது ஆட்டத்தை டிக்ளேர் செய்துவிட்டார். இதில் சச்சினின் நூறோ அல்லது இருநூற்ரி ஐம்பதோ பாதிக்கப்பட்டு விட்டது..! அதனால அவர் டிராவிட் மேல சினம் கொண்டதா படிச்ச ஞாபகம்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சிறு வயதில் சச்சின்

th_65809_172553042784596_100000897050151_369367_2266587_n.jpg

சச்சின் சரியான இனத்துவேசி. சிறீகாந் தலைவராக இருந்தபோதுதான் இவர் அறிமுகமானார். அந்த நேரத்தில் கூட இவர் சிறீகாந் தமிழன் என்று அவருக்கு மரியாதை கொடுப்பதில்லை. சிறீகாந் ஒரு பேட்டி ஒன்றில் கூறினார். அனைத்து வீர்ர்களும் ஆங்கிலத்தில் உரையாடுவார்களாம். தான் அங்கு சென்றால் உடன் வேண்டுமென்று இந்தியில் கதைப்பார்கள் என . அதில் இவன் சச்சினும் அடக்கம். அதலிருந்து இவனை எனக்கு பிடிக்காது.

எனக்குப் பிடிக்காத வீரர் என்டால் சச்சின் ஆகவே அவருக்கு என்ட வாழ்த்து இல்லை :wub:

எனக்கும் தான்

ஆனால் என்னவென்றால், எனக்கு எந்த ஒரு இந்திய கிரிகட் பேர்வழியையும் பிடிக்கவே பிடிக்காது... இந்திய அணி தோற்கும் போதெல்லாம் மனசு நிறைந்து போகும்..அது இந்திய கிரிகட் அணிதான் என்று இல்லை, எந்த இந்திய தேசிய விளையாட்டு அணியாக இருந்தாலும்

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் சரியான இனத்துவேசி. சிறீகாந் தலைவராக இருந்தபோதுதான் இவர் அறிமுகமானார். அந்த நேரத்தில் கூட இவர் சிறீகாந் தமிழன் என்று அவருக்கு மரியாதை கொடுப்பதில்லை. சிறீகாந் ஒரு பேட்டி ஒன்றில் கூறினார். அனைத்து வீர்ர்களும் ஆங்கிலத்தில் உரையாடுவார்களாம். தான் அங்கு சென்றால் உடன் வேண்டுமென்று இந்தியில் கதைப்பார்கள் என . அதில் இவன் சச்சினும் அடக்கம். அதலிருந்து இவனை எனக்கு பிடிக்காது.

94645.jpg

சச்சின் அப்படி பட்டவர் என்று நான் நிவைக்க வில்லை இந்தியன் கிரிக்கெட் ரீம்மில் ரொம்ப நாகரிகம்மான வீரர்கள் யார் என்று என்னிட்டை கேட்டா நான் முதல் சுரஸ் ரெயினாவை தான் சொல்லுவன் அவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் ராகுல்டாவிட்

சச்சின் கர்நாடகக்காரன் என்று நினைக்கின்றேன்.....

இவர்கள் தமிழரை மதிக்க விரும்பாதவர்கள்.

அவர்களுக்கு இந்தியா... என்னும் சினிமா மாயை தேசத்தில் தான் பல கிரிக்கெட் ரசிகர்கள்.

இதுவே... உலகளாவிய உதை பந்தாட்டத்தில் ஊறிப்போன பெரிச்சாளி நாடுகள் எல்லாம் இப்படிப் பட்டவர்களை காலத்திற்க்கு ஏற்ப பாவிக்கும்.

இங்கிலாந்து அறிமுகப் படுத்திய கிரிக்கெட்டை, இந்தியா இன்னும் வைத்து ஆடுது என்றால்......

அதுக்குப் பெயர் அடிமைத்தனம். மகாத்மாகாந்தி கேள்விப் பட்டால் சரியாய் கவலைப் படுவார். :wub:

சச்சின் மும்பாய் சிறி அண்ணா , அனில் கும்பிளே ராகுல்டாவிட் சிறிநாத் அவங்கள் தான் கர்நாடக்கா காரங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் மும்பாய் சிறி அண்ணா , அனில் கும்பிளே ராகுல்டாவிட் சிறிநாத் அவங்கள் தான் கர்நாடக்கா காரங்கள்...

உங்கள் தகவலுக்கு நன்றி பையா.....

எல்லாம் ஒரே, குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.... (நான் கிரிக்கெட் மட்டையை சொன்னேன்)

சின்ன ஒரு கிரிக்கெட் விளையாட்டு.... உங்கள் ரசனைக்காக...

DSCN1053%20559x419.jpg

படத்தில் பொல்லுடன் நிற்பவர் யார்?

.

மாகாத்மா காந்தி போல இருக்கு :wub::wub::wub:

94645.jpg

சச்சின் அப்படி பட்டவர் என்று நான் நிவைக்க வில்லை இந்தியன் கிரிக்கெட் ரீம்மில் ரொம்ப நாகரிகம்மான வீரர்கள் யார் என்று என்னிட்டை கேட்டா நான் முதல் சுரஸ் ரெயினாவை தான் சொல்லுவன் அவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் ராகுல்டாவிட்

நாகரீகமானவர்கள் இனத்துவேசமாக இருக்கமாட்டார்களா?

சிறீகாந்த்தும் சச்சினும் ஒன்றாக விளையாடிய போட்டிகளின் காணொளிகளிருந்தால் பாருங்கள் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

பையன் இந்தியாவிற்காக சச்சின் விளையாடிய போட்டிகளை வைத்துப் பார்த்தால் தெரியும்.பல போட்டிகளில் சச்சின் சதமடித்திருப்பார்[அல்லது அரைச் சதம்] ஆனால் இந்தியா தோத்திருக்கும்...மாறாக சச்சின் குறைந்த ஓட்டத்தில் ஆட்டம் இழந்திருந்தால் இந்தியா வென்றிருக்கும்...ஆட்டம் இழக்கவும் மாட்டார் ஆனால் அதிரடியாக விளையாடும் பின் வருசை துடுப்பாட்டக்காரரை துடுப்பாடவும் விட மாட்டார்...துடுப்பை வைத்து சும்மா தட்டிக் கொண்டு இருப்பார்...சரியான கர்வம் பிடித்தவர் அவருக்கு நினைப்பு அவர் இந்தியா அணியில் இல்லா விட்டால் இந்தியா நன்றாக விளையாடாது என...இவரது முக்கியமான குறிக்கோளே இவர் சதமடிக்க வேண்டும்[சாதனை புரிய வேண்டும்]ஆனால் போட்டிகளில் வெற்றிகளைப் பற்றி இவர் என்டுமே கவலைப்பட்டதில்லை.

பி.கு எனக்குப் பிடிக்காத அணி என்டால் இந்தியா,இந்தியா,இந்தியா...விளையாட்டில் மட்டும் இல்லை எதிலுமே இந்தியா வெல்லக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

மாகாத்மா காந்தி போல இருக்கு :wub::wub::wub:

ஓம்... சரியான பதில் பையா....

மகாத்மாகாந்தி..... தொடக்கம் ராஜீவ்காந்தி, சீனியா காந்தி, நாகுல் காந்தி எல்லாம்....

ஈழத்தமிழனை பொல்லாலை அடிக்க வெளிக்கிட்ட மாதிரி ஒரு ஃபீலிங்.

இன்னும் எத்தினை காந்தீஸ் வரப் போகுதோ...

  • கருத்துக்கள உறவுகள்

பையன் இந்தியாவிற்காக சச்சின் விளையாடிய போட்டிகளை வைத்துப் பார்த்தால் தெரியும்.பல போட்டிகளில் சச்சின் சதமடித்திருப்பார்[அல்லது அரைச் சதம்] ஆனால் இந்தியா தோத்திருக்கும்...மாறாக சச்சின் குறைந்த ஓட்டத்தில் ஆட்டம் இழந்திருந்தால் இந்தியா வென்றிருக்கும்...ஆட்டம் இழக்கவும் மாட்டார் ஆனால் அதிரடியாக விளையாடும் பின் வருசை துடுப்பாட்டக்காரரை துடுப்பாடவும் விட மாட்டார்...துடுப்பை வைத்து சும்மா தட்டிக் கொண்டு இருப்பார்...சரியான கர்வம் பிடித்தவர் அவருக்கு நினைப்பு அவர் இந்தியா அணியில் இல்லா விட்டால் இந்தியா நன்றாக விளையாடாது என...இவரது முக்கியமான குறிக்கோளே இவர் சதமடிக்க வேண்டும்[சாதனை புரிய வேண்டும்]ஆனால் போட்டிகளில் வெற்றிகளைப் பற்றி இவர் என்டுமே கவலைப்பட்டதில்லை.

பி.கு எனக்குப் பிடிக்காத அணி என்டால் இந்தியா,இந்தியா,இந்தியா...விளையாட்டில் மட்டும் இல்லை எதிலுமே இந்தியா வெல்லக் கூடாது.

சாதனைக்காக ஆடவில்லை: உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை; தெண்டுல்கர் சொல்கிறார்

50-வது சதம் குறித்து தெண்டுல்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது சதம் எண்ணிக்கையில் மேலும் ஒன்று உயர்ந்துள்ளது. 50 சதம் என்பது வெறும் எண்ணிக்கைதான். நான் சாதனைக்காக ஒருபோதும் ஆடியது இல்லை. அணிக்காக தொடர்ந்து விளையாடுவதுதான் எனது லட்சியமாக இருக்கிறது.

50-வது சதம் அடித்தது மகிழ்ச்சிதான். மகிழ்ச்சி அடையவில்லை என்று என்னால் கூற இயலாது. ஆனால் எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்பதுதான் உண்மை. எனது உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை.

50-வது சதத்தோடு நான் நின்று விடமாட்டேன். எதிர்காலத்திலும் தொடர்ந்து சதம் அடிப்பேன். நேற்று முன்தினம் எனது தந்தையின் பிறந்தநாள் 50-வது சதத்தை எனது தந்தைக்கு அர்பணிக்கிறேன்.

50-வது சதம் அடிப்பதற்காகவே நியூசிலாந்து எதிரான ஒருநாள் தொடரில் நான் விலகவில்லை.

இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/2010/12/20145229/sachin-50-century-sachin-inte.html

நான் ஒரு கிரிக்கெட் டைகாட் விசிறி.சச்சினிலும் குறை கூறுபவர்களை இன்றுதான் பார்க்கின்றேன்.சச்சின் ஒரு நாளும் சுயநலத்திற்காக விளையாடியதில்லை.போன ஆஸி சீரிஸ் பார்த்தால் தெரியும்.மிகவும் கட்டுக்கோப்பான அனைவரையும் மதிக்கும்,எந்த கொன்ரவேசிக்கும் போகாத ஒரு ஜென்டில்மன்.ஒரே ஒரு குறை 90 களில் கொஞ்சம் தடுமாறுவது.ஆரம்பத்தில் அதுவும் இல்லை பின்னர் வந்து, இப்போ அதுவும் இல்லை.

போனமுறை ஜ்.பீ.எல் பார்த்தவர்களுக்கு தெரியும் சச்சினின் அருமை.சும்மா தமிழங்களுக்கு சான்ஸ் கொடுப்பத்தில்லை என சப்பு கொட்டாதையுங்கோ.இப்போ எத்தனை சான்ஸ் தினேஷ் கார்த்திக்கு கொடுத்தார்கள் பயன் படுத்தவில்லை.முதல் இரண்டு உலககோப்பையும் கப்டின் பண்ணியது வெங்கட்ராகவன் தான்.முதல் உலககோப்பை கடைசிக்கு முதல்,இரண்டாவது உலககோப்பை கடைசி.மூன்றாவது உலக கோப்பை கபில் கப்டன் பண்ணி சாம்பியனும் ஆனார் அதுவும் சொதப்பல் ரீமுடன்.பைனலில் அதிக ரன் அடித்தது சிறிகாந்த் தான்.

தமிழ் சிறி எந்த காந்தி வந்தாலும் எங்களுக்கு அடிதான்.நாங்கள் ஒழுங்காக இருந்தால் அவங்கள் ஏன் அடிக்கின்றாங்கள்.காந்தியில்லை கார்ப்பர் தொட்டு ஒபாவரை அடித்துப்போட்டாங்கள்.இப்பவும் நாங்கள் அவங்களிலதான் பிழை சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா இதுக்கு என்ன சொல்ல போறிங்கள்

sascin.jpg

ரதி அக்கா இதுக்கு என்ன சொல்ல போறிங்கள்

sascin.jpg

இந்த போட்டியில் சச்சினுக்கு நூறு அடிக்க வாய்ப்பு வழங்காமையால் ஏற்பட்ட பிரச்சனைகள் எவ்வளவு தெரியுமா. இது ஒன்றும் சச்சின் விட்டுக்கொடுத்ததல்ல.

நான் ஒரு கிரிக்கெட் டைகாட் விசிறி.சச்சினிலும் குறை கூறுபவர்களை இன்றுதான் பார்க்கின்றேன்.சச்சின் ஒரு நாளும் சுயநலத்திற்காக விளையாடியதில்லை.போன ஆஸி சீரிஸ் பார்த்தால் தெரியும்.மிகவும் கட்டுக்கோப்பான அனைவரையும் மதிக்கும்,எந்த கொன்ரவேசிக்கும் போகாத ஒரு ஜென்டில்மன்.ஒரே ஒரு குறை 90 களில் கொஞ்சம் தடுமாறுவது.ஆரம்பத்தில் அதுவும் இல்லை பின்னர் வந்து, இப்போ அதுவும் இல்லை.

போனமுறை ஜ்.பீ.எல் பார்த்தவர்களுக்கு தெரியும் சச்சினின் அருமை.சும்மா தமிழங்களுக்கு சான்ஸ் கொடுப்பத்தில்லை என சப்பு கொட்டாதையுங்கோ.இப்போ எத்தனை சான்ஸ் தினேஷ் கார்த்திக்கு கொடுத்தார்கள் பயன் படுத்தவில்லை.முதல் இரண்டு உலககோப்பையும் கப்டின் பண்ணியது வெங்கட்ராகவன் தான்.முதல் உலககோப்பை கடைசிக்கு முதல்,இரண்டாவது உலககோப்பை கடைசி.மூன்றாவது உலக கோப்பை கபில் கப்டன் பண்ணி சாம்பியனும் ஆனார் அதுவும் சொதப்பல் ரீமுடன்.பைனலில் அதிக ரன் அடித்தது சிறிகாந்த் தான்.

தமிழ் சிறி எந்த காந்தி வந்தாலும் எங்களுக்கு அடிதான்.நாங்கள் ஒழுங்காக இருந்தால் அவங்கள் ஏன் அடிக்கின்றாங்கள்.காந்தியில்லை கார்ப்பர் தொட்டு ஒபாவரை அடித்துப்போட்டாங்கள்.இப்பவும் நாங்கள் அவங்களிலதான் பிழை சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.

சிறீகாந் தலைவராக சிறப்பாக செயற்பட்டும் அவரை ஏன் தலைமைப்பொறுப்பிலிருந்தும் அணியிலிருந்தும் தூக்கினர்? சடகோபன் ரமேசினை ஏன் அணியிலிருந்து தூக்கினர்? எதற்கெடுத்தாலும் தமிழர்களை மட்டும் குறைசொல்லாதீர்கள். முதலில் இனவுணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். சிறீகாந் தேர்வுக்குழுத்தலைவரராக வந்தமையால்தான் தினேஸ் கார்த்திக் முரளி விஜய் போன்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.