Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் தலைவன்?

Featured Replies

ஈழ விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல பல்வேறு விடுதலைப் போராட்டங்களினையும் எடுத்துக்கொண்டால் அதிலே இருப்பது தலைமைத்துவத்தின் போட்டிகள். அதிலும் குறிப்பாக எமது விடுதலைப் போராட்டத்தினையும், இந்திய அரசியலையும் எடுத்துக் கொண்டால் இது வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஒன்று. 60 வருடங்களுக்காகப் போராடிய ஓர் இனம் தமது இனத்தின் பல இழப்புக்களையும் தாங்கியவண்ணம் இன்றும் அந்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டும் என்கின்ற ஒரு முனைப்பில் இருந்துவருகின்றது. யதார்த்தத்தில் எமது இனம் விடுதலை பெறுவதற்கு எம்முள் தோற்றுவிக்கப்பட்ட தலமைத்துவப் போட்டியே எமது இனத்தின் அழிவினை இட்டுச் சென்றது என்றால் மிகையாகாது. தென் ஆசிய வல்லரசு எனக் கூறிக்கொண்டிருக்கும் இந்தியாவின் உளவுத்துறையான 'ரோ' என்கின்ற அமைப்பு எமக்குள் ஊடுருவி பல உட்பிரச்சனைகளைத் தோற்றுவித்ததும், பின்னர் அவர்களையே மோதவிட்டு வேடிக்கை பார்த்ததும், சில செயல்களைத் தாமே செய்து ஒவ்வொரு அமைப்புக்கள் மீது போட்டதுமாக பல அரசியற் காய்நகர்த்தல்களை இந்தியாவின் நலனிற்காகவும், இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதற்காகவும் செய்து முடித்தது. இந்தியாவின் இன்றைய கனவு 2020 இல் இந்தியா வல்லரசாகவேண்டும் என்பது.

இந்தியாவின் இப்பகற் கனவினை நனவாக்க எமது இனத்தினைப் பலியெடுத்தது. சீனாவுடன் ஓர் போர் ஏற்படும் பட்சத்தில் அது எவ்வாறு இருக்கும் என, இந்தியா சீனாவுக்கு எதிராகத் தான் பாவிக்கப்போகும் யுக்திகளையும், தனது கண்காணிப்புக் கருவிகளையும், இரசாயன ஆயுதங்களையும் பிரயோகித்தது. ஆனால் சீனா தன்னிடமிருக்கும் பழைய இருப்புக்களைக் காலி செய்து தன்னிடம் இவைதான் இருக்கின்றன என்று ஓர் மாயையை ஏற்படுத்திக்கொண்ட சீனா பரிசோதித்தது தன்னுடைய பொருளாதாரத்தினையும், தன்னுடைய உளவு அமைப்பின் திறமையையும். இங்கே மையம் கொள்ளப்பட்டது ஒன்றே ஒன்றுதான், அதாவது ஆசியாவின் தலைவன் யாரென்பதுவே. இதற்குப் பலிக்கடாவாக்கப்பட்டவர்கள் எமது இனத்தினர்.

பல்வேறு அமைப்புக்கள் எமது இனத்தின் விடுதலைக்ககப் போராடினார்கள். அதனை நாம் மறுக்க முடியாது, ஆனால் ஆரம்பத்தில் ஒரே கொள்கையில் நின்ற எமது அமைப்புக்கள் யாவும் பின்னர் சதிவலைகளினாலும் சுயநலப் போக்கினாலும் சிதறுண்டு போயின. ஒரு சிறந்த தலமைத்துவம் என்று பலராலும் போற்றப்பட்டவர் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன். ஏன் அவர் அவ்வாறு போற்றப்படவேண்டும்?

ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகள் நிறைந்திருந்தது அவரிடத்தில் இருந்த விசேடத்துவம் ஆகும். ஒரு தலைவனாக வருவதற்கு அவர் பட்ட பாடுகளும், அவருடன் இருந்து வழிகாட்டியவர்களுமே அவரை ஒரு சிறந்த தலைவனாக ஆக்கியது என்றால் மிகையாகாது. எந்த ஒரு விடயத்தையும் பற்றிய தெளிவான சிந்தனை, தெரியாத விடயங்களைக் கேட்டறிதல், பொறுமை, திட்டமிடல், வழிகாட்டல் அத்துடன் மக்கள் மனங்களை அறிதல் என்பனவற்றையும் விட தன்னுடன் இருப்பவர்களை சிறந்த வழிகளில் ஆளாக்குதல் என்பதே ஓர் தலைவனுக்கு இருக்க வேண்டிய மிக உயர்ந்த பண்பு.

எப்படி ஓர் ஆசான் தானறிந்த விடயங்களை மற்றவனுக்குச் சொல்லிக்கொடுத்து அவன் மேலே போக அதே இடத்தில் இருந்து கொண்டு தன் பணியைத் தொடர்கின்றாரோ அதேபோன்றுதான் தலைவனும். தன்னுடன் இருக்கும் திறமையானவர்களை அடையாளங்கண்டு அவர்களை மெருகூட்டி, அவர்களை முன்னே செல்லவிடுவதுதான் ஓர் சிறந்த தலைவனுக்கு அடிப்படை. போராட்ட ஆரம்ப காலங்களில் போராட ஆளில்லை என்பதற்காக சட்டங்களை இறுக்கினார்கள். ஈழ தேசத்தை விட்டு வெளியே செல்வதற்கு அதி கூடிய கட்டுப்பாடுகளை விதித்தார்கள். அவர்களின் அன்றைய ஒரே நோக்கு கல்வியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் தமக்கான கல்விப் போதனைகள் கிடைக்காது என்பதுதான்.

பின்னர் வந்த காலங்களில் அது தவறு என்றும் உணர்ந்துகொண்டார்கள். அதனால் தாமே கல்விகற்பதற்கான வரலாற்று மாற்றத்தினைக் கொண்டுவந்தார்கள். அதன் மூலம் பல தலைவர்களை அவர்கள் உருவாக்கினார்கள். அதிற் சிலர் தாம் கற்றவற்றை உணர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். சிலர் விலைபோயினர்.

அவ்வாறு வளர்த்துவிடப்பட்டவர்களிடம் இன்று காணப்படுவது ஒன்றே ஒன்றுதான், நான் தலைவனாகிவிடவேண்டும். அதிகார வர்க்கம் என்றுமே தன் கையில் இருக்கும்போதுதான் தன் மதிப்புக் கூடும் என்பதுதான் இன்றிருக்கும் சிலர்(நான் யாரையும் பெயரோ அல்லது பதவியோ குறிப்பிடவில்லை) எண்ணும் ஒன்றாகும். அதற்கு முதலில் சரியான தலமைத்துவப் பண்பு அவசியம் என்பதை உணரத்தலைப்படுகின்றார்களில்லை.

ஓர் சிறந்த தலைவனுக்கு இருக்கும் ஓர் பண்பு, அவனை விட சிறந்த தலைவனை உருவாக்குவதே. எப்படி இன்று எல்லோர் மனதிலும் சேகுவாரோ இடம்பிடித்திருக்கின்றானோ அதுபோன்றதுதான் உண்மையான தலைமைத்துவத்தின் வாழ்வியல் வரலாறு.

குறிக்கோள் ஒன்று, பாதை ஒன்று, பயணிக்கும் வழிகளே வேறு...

[மன்னிக்கவேண்டும், கீழே உள்ள தொடர்ச்சி இந்த ஆக்கத்தில் நீக்கப்பட்டுள்ளது, கருத்து மோதல்களையும், பிரிவினைகளையும் தவிர்ப்பதற்காகவும், ஒன்றுமையை வலுப்படுத்துவதற்காகவும்] தொடரும்....

  • Replies 99
  • Views 11.1k
  • Created
  • Last Reply

ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகள் நிறைந்திருந்தது அவரிடத்தில் இருந்த விசேடத்துவம் ஆகும். ஒரு தலைவனாக வருவதற்கு அவர் பட்ட பாடுகளும், அவருடன் இருந்து வழிகாட்டியவர்களுமே அவரை ஒரு சிறந்த தலைவனாக ஆக்கியது என்றால் மிகையாகாது. எந்த ஒரு விடயத்தையும் பற்றிய தெளிவான சிந்தனை, தெரியாத விடயங்களைக் கேட்டறிதல், பொறுமை, திட்டமிடல், வழிகாட்டல் அத்துடன் மக்கள் மனங்களை அறிதல் என்பனவற்றையும் விட தன்னுடன் இருப்பவர்களை சிறந்த வழிகளில் ஆளாக்குதல் என்பதே ஓர் தலைவனுக்கு இருக்க வேண்டிய மிக உயர்ந்த பண்பு.

எப்படி ஓர் ஆசான் தானறிந்த விடயங்களை மற்றவனுக்குச் சொல்லிக்கொடுத்து அவன் மேலே போக அதே இடத்தில் இருந்து கொண்டு தன் பணியைத் தொடர்கின்றாரோ அதேபோன்றுதான் தலைவனும்.

  • கருத்துக்கள உறவுகள்

பல்வேறு அமைப்புக்கள் எமது இனத்தின் விடுதலைக்ககப் போராடினார்கள். அதனை நாம் மறுக்க முடியாது, ஆனால் ஆரம்பத்தில் ஒரே கொள்கையில் நின்ற எமது அமைப்புக்கள் யாவும் பின்னர் சதிவலைகளினாலும் சுயநலப் போக்கினாலும் சிதறுண்டு போயின. ஒரு சிறந்த தலமைத்துவம் என்று பலராலும் போற்றப்பட்டவர் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன். ஏன் அவர் அவ்வாறு போற்றப்படவேண்டும்?

ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகள் நிறைந்திருந்தது அவரிடத்தில் இருந்த விசேடத்துவம் ஆகும். ஒரு தலைவனாக வருவதற்கு அவர் பட்ட பாடுகளும், அவருடன் இருந்து வழிகாட்டியவர்களுமே அவரை ஒரு சிறந்த தலைவனாக ஆக்கியது என்றால் மிகையாகாது. எந்த ஒரு விடயத்தையும் பற்றிய தெளிவான சிந்தனை, தெரியாத விடயங்களைக் கேட்டறிதல், பொறுமை, திட்டமிடல், வழிகாட்டல் அத்துடன் மக்கள் மனங்களை அறிதல் என்பனவற்றையும் விட தன்னுடன் இருப்பவர்களை சிறந்த வழிகளில் ஆளாக்குதல் என்பதே ஓர் தலைவனுக்கு இருக்க வேண்டிய மிக உயர்ந்த பண்பு.

அர்ச்சுனுக்கு பாலை சா புண்ணில் புளியை கரைத்தது போல் இருக்குமே?? :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் அண்ணை.

  • தொடங்கியவர்

அர்ச்சுனுக்கு பாலை சா புண்ணில் புளியை கரைத்தது போல் இருக்குமே?? :lol::lol:

இதில் ஏதும் உட்குத்துக்கள் இல்லையே!

வணக்கம் அண்ணை.

வணக்கம் அண்ணை

அவர் தனக்கு தெரிந்ததை எழுதுகின்றார்.

உப்பிடித்தான் வைரமுத்துவும்,கமலும்,ரஜனியும் கருணாநிதியை சொல்லுகினம்.அதையும் ஒருக்கா கேட்டெழுத சொல்லுங்கோ.

மன்னாராட்சி காலத்தில் இருந்தே அரசனை புகழ்ந்து பாடி புலவர்மார் பொற்காசு அள்ளிக்கொண்டு போனவர்கள்.

பொற்காசுதான் இவ்வளவு காலமும் எமது அரசியலையும் ஆட்டிப்படைக்கின்றது.

நல்லவர்,நேர்மையானவர் வேறு அரசியல் தெரிவது வேறு.சும்மா இருந்த மகிந்தாவை ஜனாதிபதியாக்கி அவர் கையாலேயே அழிந்தது அதனால் தான்.

தான் அழிந்தால் பரவாயில்லை முழுத்தமிழினத்தையும் நடுத்தெருவில கொண்டுவந்துவிட்டுவிட்டார்.அதுதான் உண்மை.

தலைமைத்துவம் என்பதனைக் கேட்டால் அவ்வழி விடிவுகிடைக்கும் என்பது எனது கொள்கை. 40,000 போராளிகளைத் தாருங்கள் யாழ்ப்பாணத்தை மீட்டுத்தருகின்றேன், 100000 போராளிகளைத் தாருங்கள் முழு ஈழத்தையும் மீட்டுத்தருகின்றேன் என்று 2002 இல் கூறிய போது எங்கிருந்தீர் நீர்? தமிழனின் இனம் விடுதலை பெறவேண்டும் என்பதற்காக எந்த ஒரு நாட்டின் உதவியும் இன்றி போராடிக்கொண்டிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பை சர்வதேச ரீதியில் பயங்கரவாத அமைப்பு என்று குறும்போது என்ன புத்தகத்தில் புல்லா பிடுங்கிக்கொண்டிருந்தீர்?

நான் இங்கே யாரையும் புகழ் பாடவேண்டும் என்பதற்காக இந்த ஆக்கத்தை எழுதவில்லை, தரம் 8 வரை கல்வி கற்ற ஒரு குடிமகன் தலைவனாகப் பார்க்கப்பட்டான் என்றால், அதற்காக அவர் பட்ட பாடுகளையும், அதற்காக அவரது உழைப்பையும் தான் நான் இங்கே கூறவந்தேன். வேகம் மட்டுமிருந்தாற் போதாது, விவேகமும் வேண்டும் என்பதற்காகவே இந்த ஆக்கத்தின் மூலம் சொல்லவந்தேன். 2004 ஆம் ஆண்டு போர் தொடங்கு முன்னரே விடுதலைப்புலிகள் தாம் தோற்றுவிடுவோம் இந்த யுத்தத்தில் தோற்றுவிடுவோம் என்று நோர்வேயிடம் சொன்னதாக அண்மையில் விக்கி வெளியீடு கூறியதே அறியவில்லையா நீவிர்?

அதுதான் தீர்க்கம், தொடர்ந்து போராடுதல் என்பது எமது இனத்தின் முற்று முழுதான அழிப்புக்கு வழிவகுக்கும் என முடிவெடுத்த விடுதலைப்புலிகள், சிங்களத்திற்குக் கொடுக்கும் இழப்பைக் கொடுத்து ஆயுதத்தை மௌனிப்பது என்று முடிவெடுத்த போதும் கூட் தாம் ஆயுதப் போரை கைவிடுகின்றோம் என்று கூறவில்லை.

இன்று போர்க்களம் சர்வதேச ரீதியில் விஸ்தரிக்கப்பட்டு உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. போராட்ட வடிவம் மாறலாம் ஆனால் போராட்ட இலக்கு மாறாது என்ற கோட்பாட்டை மறந்தா நீர் பேசுகின்றீர்?

இதுவரை தமிழனின் விடிவிற்காக நீர் என்ன செய்தீர் என்பதை எண்ணிவிட்டு நீர் செய்தது எல்லாம் சரி என்று நீர் நினைத்தால் வாதிடவாரும்....

நான் ஓர் தமிழனாக இருந்தும் எனது இனத்திற்காகப் பாடுபடமுடியவில்லையே என்கின்ற ஏக்கத்துடனிருக்கும் என்னிடம் விவாதிப்பதானால் கருத்துக்களத்தில் வாரும். விவாதிப்போம்...

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கே யாரையும் புகழ் பாடவேண்டும் என்பதற்காக இந்த ஆக்கத்தை எழுதவில்லை, தரம் 8 வரை கல்வி கற்ற ஒரு குடிமகன் தலைவனாகப் பார்க்கப்பட்டான் என்றால், அதற்காக அவர் பட்ட பாடுகளையும், அதற்காக அவரது உழைப்பையும் தான் நான் இங்கே கூறவந்தேன். வேகம் மட்டுமிருந்தாற் போதாது, விவேகமும் வேண்டும் என்பதற்காகவே இந்த ஆக்கத்தின் மூலம் சொல்லவந்தேன். 2004 ஆம் ஆண்டு போர் தொடங்கு முன்னரே விடுதலைப்புலிகள் தாம் தோற்றுவிடுவோம் இந்த யுத்தத்தில் தோற்றுவிடுவோம் என்று நோர்வேயிடம் சொன்னதாக அண்மையில் விக்கி வெளியீடு கூறியதே அறியவில்லையா நீவிர்?

அண்ணா கேட்கிறேன் எனக் கோவிக்காதிங்கோ புலிகள் சண்டை பிடிக்கும் போது தோற்கப் போகிறோம் எனத் தெரிந்தா சண்டை பிடித்தார்கள்[அது உண்மையாயிருந்தாலும் அதைப் போய் எரிக் சொல்ஹமிடம் சொல்வார்களா?]...இந்த செய்தி உண்மையாயிருந்தால் புலிகளது மிகப் பெரிய பலவீனம் இது தானே!

நான் இங்கே சொன்னால் ஏற்றுக்கொள்வதற்கு யாருமிருக்கப்போவதில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பு இந்த ஆயுதப் போராட்டத்தை மௌனிப்பதற்கு நினைத்ததும், சிந்தனைத் தொக்கு ஏற்படுத்தப்பட்டதும் இறுதி யுத்த நேரம் 2009 இல் அல்ல. இதற்கான திட்டமும் அடுத்த திட்டங்களும் கூட முற்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை. அடுத்த கட்டமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் திட்டங்கள் பல. தமிழீழம் அமைவது என்பதற்கான முழுத் திட்டங்களும் ஒழுங்கு முறைப்படி வகுக்கப்பட்டுள்ளன. இதனைச் சரிவரப் புரிந்துகொள்ளாதவரகளாலேயே குழப்பங்கள் மக்களிடத்திலே ஏற்படுத்தப்படுகின்றது. இப்போதைய அடுத்த கட்டத் தெவையும் போரும் ஒன்றே

http://www.yarl.com/forum3/index.php?showtopic=80326

தொடர்ந்து ஆயுதத்தினை தாங்கி தாயக மண்ணிலே நின்றால் எமக்கான உரிமை கிடைக்காது விட்டுவிடுவதோடு மட்டுமல்லாது, வல்லரசுகளுடன் மோதுமளவிற்கு தனியாக ஒரு இனத்தினால் முடியாது. ஓர் வல்லரசாக இருந்தால் மோதமுடியும், இரண்டாக இருந்தால் மோதிப் பார்த்துவிடலாம் என்று எண்ண முடியும் ஒட்டு மொத்த வல்லரசுகளும் ஓரணியில் நின்றால் எப்படி ஓர் சிறுபான்மை இனம் நின்று போரிட முடியும்? இதற்கு ஒரே தீர்வு, ஆயுதங்களை மௌனிப்பது. குறிப்பு : கைவிடுவதல்ல...

பணிகள் விரிந்து கிடக்கின்றன. செய்வதற்கு எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன. போராட்டம் நெறிப்படுத்தப்படவேண்டும், ஒழுங்கமைக்கப்படவேண்டும். நெறிப்படுத்த வேண்டியவர்களே சிதறி நிற்கின்றார்கள். முதலில் அவர்கள் அனைவரும் ஒருங்கிணையவேண்டும், அத்துடன் சிங்களத்தின் ஊடுருவலைத் தவிர்த்து அவர்கள் ஓரணியிற் திரள வேண்டும். ராஜபக்ஸே திட்டம் தீட்டினால், மறு திட்டம் பலமாக தீட்டப்படவேண்டும். ஒன்று மட்டும் தெளிவாகவும் உறுதியாகவும் சொல்லுகின்றேன், "துரோகி" என்னும் வார்த்தையைத் தூக்கி எறியுங்கள். நெறிப்படுத்தாளர்கள் தான் தேவை என்றில்லை. நீ ஓவ்வொருவரும் உனக்கான உரிமையைக் கேள்! நெறிப்படுத்துபவர்கள் சிலர் அவசரப்படுகின்றார்களோ என்று கூட எண்ணத் தோன்றுகின்றது. விடுதலைப்புலிகள் தாம் போரில் தோற்றுவிடுவொம் என்று கூறியது செய்தியல்ல. அதன் உள்ளர்த்தங்கள் பொதிக்கப்பெற்ற இராஜதந்திர மொழி அது. காலம் கிட்டும்போது குறிப்பிடுகின்றேன். ஈழம் அமையும் நாள் தொலைவினில் இல்லை. ஆனால் நாம் இப்படியே இருந்தால் மிக தொலைவில் சென்றுவிடுவோம். என் கனவும் கூட, நான் உயிருடனிருக்கும் போதே ஈழத்தைக் கண்டுவிடவேண்டும் என்பதுதான். அது நிச்சயம் நடந்தேறும். அதுவரை என் பணி தொடரும்.

  • தொடங்கியவர்

நான் இதே போன்றுதான், பங்குனி மாதம் 2009 ஆம் ஆண்டு முல்லை மண்ணும் வீழும் என்று கூறியபோது கூட என்னைக் குதறித் தள்ளியவர்கள் ஏராளம். அன்று நான் சொன்ன அதே கருத்தை மீண்டும் ஓர் தடவை இங்கே "முல்லை மண்ணும் வீழும், முப்பதாயிரம்தான் சாகுமோ?" முல்லை மண் வீழினும் போராட்டம் தொடரும். என்று அன்று நான் அடித்துச் சொன்னபோது எனக்கு எதிர்ப்புக்கள் ஓரிரண்டல்ல, எனக்குத் தனிமடலில் ஏசியவர்கள் ஓரிருவரல்ல.

இன்று சொல்கின்றேன் மீண்டும், எமது ஈழம் கிடைக்கும் நாள் தொலைவினில் இல்லை. ஒரே கொள்கையில் அனைவரும் ஒன்று திரண்டால், போராட்டங்களை முன்னெடுத்தால், எமது ஈழம் கிடைக்கும். இது திண்ணம்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின் புலிகளது போராட்ட முறை மாறிப் போனது என்பது உண்மை தான் அதற்காக புலிகள் வரும் போரில் தோற்போம் எனத் தெரிந்து கொண்டே போரில் பங்கு பற்றி ஆயிரக் கணக்கான மக்களையும்,போராளிகளையும் பலி கொடுத்தார்கள் என நீங்கள் புலிகள் மீது மிகப் பெரிய குற்றச்சாட்டை வைக்கிறீர்கள்...ஒரு கதைக்கு நீங்கள் சொல்வது உண்மை என வைத்துக் கொண்டாலும் புலிகள் இந்த கடைசி யுத்தம் தொடங்க முதலே ஆயுதங்களை மெளனித்து விட்டு உலக நாடுகளுக்கு முன்னால் சரண் அடைந்தது இருக்கலாமே!...மற்றப் படி ஒருவரையும் துரோகியாக்க கூடாது எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ட உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குள் ஆயிரம் சூட்சுமங்கள் இருக்கின்றன..! அவை வெளியே சொல்ல முடியாதவை..! :unsure::rolleyes:

எல்லாமே நடந்தேறும்..! :rolleyes:

  • தொடங்கியவர்

வணக்கம் ரதி,

நான் புலிகள் மீது எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. நடந்ததையும் நடக்கப்போவதையும் தான் பேசுகின்றேன். உண்மையில் இலங்கை அரசு சமாதான ஒப்பந்தத்தை மீறாமல் இருந்திருந்தால் 2006இல் ஆயுக்கையளிப்பு என்கின்ற ஓர் விடயத்தில் தெளிவாக இருந்ததாக அறிந்தேன். அது சாத்தியமில்லாமையாக்கப்பட்டது. ஏன் அப்படியானால் சமாதான காலத்தில் புலிகள் ஆயுதக் கொள்வனவில் மும்முரம் காட்டவில்லை? விமானப் படை ஒன்றினை மட்டுமே உருவாக்குவதில் குறிக்கோளாக இருந்தார்கள்? வரி அறவீட்டிலே ஏன் கவனம் செலுத்தினார்கள்? அப்படியாயின் ஆயுதக் கொள்வனவில் அதிக சிரத்தை எடுக்காதது ஏன் என்கின்ற கேள்விக்கு அப்பால், வடக்கில் இருக்கின்ற அனைவருக்கும் ஆயுதப் பயிற்சி என்கின்ற ஒன்றினை ஏன் ஏற்படுத்தினார்கள்? என்கின்ற கேள்விகளுக்கு விடைகாண முயலுங்கள். சுருக்கமாகச் சொல்கின்றேன், காலம் இதுவல்ல அவர்களுடைய சிந்தனைகளைப் போட்டுடைப்பதற்கு. மக்கள் புரட்சி வெடிக்கும். சுதந்திர தமிழீழம் மலரும்.

அவர்கள் மக்களைக் கொன்றார்கள் என்பதற்கு அப்பால், விடுதலைப் புலிகள் என்கின்ற அமைப்பு, ஆயுத ரீதியில் சர்வதேச ஒழுங்கில் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டது என்கின்ற செய்தியே அவர்களுக்கு தேவைப்பட்டது. அதனைக் காட்டிலும், ஆயுதக் கையளிப்பிற்கு வந்தால், இந்தியாவிடம் 80களில் ஆயுதங்களைக் கொடுத்துவிட்டே இருந்திருக்கலாமே? இல்லை, ஏன் அவர்கள் கையளிக்கவில்லை. ஆயுதம் கையளிக்கப்பட்டால், பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்பு போன்றாகிவிடும் என்பதனை உணர்ந்த தலைமத்துவம், கொள்கை சிதறடிக்கப்பட்டுவிடும் என்பதில் அதி சிரத்தை எடுத்தது. இப்போது சர்வதேசத்தைப் பொறுத்தவரையில் 2 அம்சங்கள் விட்டுச் செல்லப்பட்டிருக்கின்றன.

1.விடுதலைப் புலிகள் என்கின்ற அமைப்பு முற்று முழுதாக அழிக்கப்பட்டுவிட்டது

2. இலங்கை அரசு தமிழின அழிப்பை மேற்கொண்டது.

இப்போது விசாரணைகள் ஏதும் நடாத்தினாற்கூட, ஐ.நா சபையால் இல்லாத விடுதலைப்புலிகள் அமைப்பு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது. இன அழிப்பிற்கான காரணகர்த்தா இலங்கை அரசு என்கின்றமையால், இலங்கை அரசை இலங்கை அரசே அழிக்கவும் முடியாது. எனவே வரப்போகும் முடிவை இலங்கை அரசு தாங்கித்தான் ஆகவேண்டும்.

இதனால் தமிழர்களின் பிரச்சனை என்பது சர்வதேச அரங்கில் கொண்டுசெல்லப்படும். சர்வதேச அரங்கில் பயங்கரவாத அமைப்பாகப் பார்க்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பு, தமது அரசியல், பொருளாதார இலக்கில் முன்னேறமுடியும். அவ்வாறு முன்னேறும் சந்தர்ப்பத்தில் ஆயுதமின்றிய அமைப்பு மேல் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கமுடியாத சர்வதேசம், தமிழர்களின் கருத்துக்களுக்கு செவிமடுக்கும். இதன் போது... பொறுத்திருங்கள் ரதி... காலம் வர வர எழுதுகின்றேன்... விடுதலைப்புலிகள் மக்களைப் பாதுகாத்தார்கள், சிங்கள அரசுதான் படுகொலைகளைச் செய்தது. இதனை சர்வதேச அரங்கில் நிரூபியுங்கள் எல்லா தமிழர்களுமாக ஒன்றிணைந்து... இதுதான் தற்போதைய ஈராண்டுத் திட்டம்...

அண்ணா கேட்கிறேன் எனக் கோவிக்காதிங்கோ புலிகள் சண்டை பிடிக்கும் போது தோற்கப் போகிறோம் எனத் தெரிந்தா சண்டை பிடித்தார்கள்[அது உண்மையாயிருந்தாலும் அதைப் போய் எரிக் சொல்ஹமிடம் சொல்வார்களா?]...இந்த செய்தி உண்மையாயிருந்தால் புலிகளது மிகப் பெரிய பலவீனம் இது தானே!

விடுதலைப்புலிகள் 2004 இல் அதனை சொல்லவில்லை. எரிக் சொகெய்ம் தமிழ்செல்வண்ணர் ஊடாக வெருட்டல் விட்டர். அதாவது இந்த முறை நீங்கள் சண்டை பிடித்தால் சர்வதெசம் எல்லாம் உங்களுக்கு எதிராக வரும் , தலைவருக்கு ஆபத்து என வெருட்டினார். ஆனால் புலிகள் அவருக்கு சொன்ன [அதில் நாங்கள் இப்படியான வெருட்டல்களுக்கு அடிபணிய மாட்டோம். சண்டை செய்ய வே|ண்டாம் என்றால் என்ன செய்யவேணும் என நோர்வே சொல்லட்டும் சொன்னதை செய்து காட்டட்டும் என்று சொன்னார்கள்.

2009 இல் இதே விசயத்தை நோர்வே சொன்னது. உங்கள் உயிருக்கு ஆபத்து சரண்டையுங்கள் என்று. அதற்கு தலைவர் சொன்ன பதில்.. நீங்கள் மக்களை வந்து பொறுப்பெடுங்கள் அதன் பின்னர் நான் என்ன செய்வது என முடிவு எடுக்கின்றேன்.

இந்த விடயம் உண்மை இந்த விடயங்களை சொன்ன சொல்கெய்ம் இப்போ இருக்கின்றார். சொன்னதை கேட்டு அங்கால சொன்னவரும் இருக்கின்றார்.

நன்றி உமை,

புலிகளை வெருட்டினார்கள் என்பதற்கு அப்பால், அந்த இடத்தில் அவர்கள் சொன்ன கருத்தின் உள்ளடக்கம், இதுதான், அதாவது சர்வதேச ஒழுங்கில் வல்லரசுநாடுகள் ஒன்று சேர்ந்து நிற்கும் சந்தர்ப்பத்தில் தனி ஓர் இனமாக நின்று வல்லரசுகளை எதிர்க்கமுடியாது என்பது திட்டவட்டமாகத் தெரிந்த ஓர் விடயமாகியது. இதனால் கொள்கை வகுப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. மேற்கொண்டு நோர்வேயின் வெருட்டல்களையும், அவர்களின் செயற்பாடுகளையும் இங்கே இப்போது அலசுவது தருணமல்ல என நினைக்கின்றேன். மிகுதி விடயங்களின் தொகுப்புக்கள் கால தேவையின் போது எழுதுவேன்...

இதற்குள் ஆயிரம் சூட்சுமங்கள் இருக்கின்றன..! அவை வெளியே சொல்ல முடியாதவை..! :unsure::rolleyes:

எல்லாமே நடந்தேறும்..! :rolleyes:

நீங்கள் எல்லாம் இருக்குறீங்கள் எண்டுதாண்டாப்பா நானும் இருக்குறன். கடைசியில கவுத்து விட்டுடாதைக்கோடாப்பா....

  • கருத்துக்கள உறவுகள்

. இப்போது சர்வதேசத்தைப் பொறுத்தவரையில் 2 அம்சங்கள் விட்டுச் செல்லப்பட்டிருக்கின்றன.

1.விடுதலைப் புலிகள் என்கின்ற அமைப்பு முற்று முழுதாக அழிக்கப்பட்டுவிட்டது

2. இலங்கை அரசு தமிழின அழிப்பை மேற்கொண்டது.

இப்போது விசாரணைகள் ஏதும் நடாத்தினாற்கூட, ஐ.நா சபையால் இல்லாத விடுதலைப்புலிகள் அமைப்பு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது. இன அழிப்பிற்கான காரணகர்த்தா இலங்கை அரசு என்கின்றமையால், இலங்கை அரசை இலங்கை அரசே அழிக்கவும் முடியாது. எனவே வரப்போகும் முடிவை இலங்கை அரசு தாங்கித்தான் ஆகவேண்டும்.

. விடுதலைப்புலிகள் மக்களைப் பாதுகாத்தார்கள், சிங்கள அரசுதான் படுகொலைகளைச் செய்தது. இதனை சர்வதேச அரங்கில் நிரூபியுங்கள் எல்லா தமிழர்களுமாக ஒன்றிணைந்து... இதுதான் தற்போதைய ஈராண்டுத் திட்டம்...

இதை உணராது

இதை செயற்படுத்தாது காலம் தாழ்த்துகின்றோம்

நாம்தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் சிங்களம் முன்னேறுகிறது. எம்மை பின்னுக்கு தள்ளுகிறது.

சர்வதேசம் எம்மை மறக்க தொடங்குகிறது என்பதை உணர்வோமாக.............

நன்றி விசுகு

இதனை விரிவாக http://www.yarl.com/forum3/index.php?showtopic=80326 கொடுத்துள்ளேன். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இவற்றைச் செய்வது சாலச் சிறந்தது என்று எண்ணுகின்றேன். நடந்து முடிந்தவற்றை அலசிக்கொண்டிருப்பதில் காலத்தை செலவழிக்காது போராட்டங்களை விரைவாக தொடருங்கள். இது எமது காலத்தின் கட்டாயம்.

விக்கி லீக்சை வைத்து நிறைய சரடுகள் வருகின்ற மாதிரி தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சொல்கின்றேன் மீண்டும், எமது ஈழம் கிடைக்கும் நாள் தொலைவினில் இல்லை. ஒரே கொள்கையில் அனைவரும் ஒன்று திரண்டால், போராட்டங்களை முன்னெடுத்தால், எமது ஈழம் கிடைக்கும். இது திண்ணம்.

ஈழம் கிடைக்கும் என்று சொல்லி விட்டு அதற்கு ஒரே கொள்கையில் அனைவரும் திரளவேண்டும் என்ற நிபந்தனையை வேறு சொல்லியுள்ளீர்கள். தலைவர் பிரபாகரனின் காலத்தில் ஒரே அணியில் திரள முடியாதவர்கள் எதிர்காலத்தில் ஒன்றாக இணைவார்கள், சேர்ந்து உழைப்பார்கள் என்பதையெல்லாம் நம்பக்கூடியமாதிரியா தற்போதைய தமிழர்களின் அரசியல் போக்கு இருக்கின்றது?

சிங்களத்தின் போக்கே அதை தீர்மானிக்கும். அவர்கள்; மாறவில்லையென்றால் தமிழர் ஒற்றுமைப்படுவதை தவிர வேறுவழியில்லை.

சிங்களத்தின் கோரமுகம் என்றும் மாறப்போவதில்லை.

  • தொடங்கியவர்

ஈழம் கிடைக்கும் என்று சொல்லி விட்டு அதற்கு ஒரே கொள்கையில் அனைவரும் திரளவேண்டும் என்ற நிபந்தனையை வேறு சொல்லியுள்ளீர்கள். தலைவர் பிரபாகரனின் காலத்தில் ஒரே அணியில் திரள முடியாதவர்கள் எதிர்காலத்தில் ஒன்றாக இணைவார்கள், சேர்ந்து உழைப்பார்கள் என்பதையெல்லாம் நம்பக்கூடியமாதிரியா தற்போதைய தமிழர்களின் அரசியல் போக்கு இருக்கின்றது?

ஐய்யா பெரியவரே!

நான் சொன்னதில் என்ன தவறு இருக்கின்றது? ஈழம் ஒன்ற ஒற்றைக் குடையின் கீழ்த்தானே பல பகுதிகளாக போராட ஆரம்பித்தோம். ஈழம் என்கின்ற ஒரு கனவிற்தானே போராட ஆயுதம் ஏந்தினோம், ஈழம் என்கின்ற ஒரே கனவிற்தானே பிரிவுகளுக்குள் பிரிவுகளை உண்டு பண்ணினோம். மொத்தத்தில் பார்க்கப்போனால், ஆரம்பித்த கொள்கை ஒன்றாக இருக்கையில் பின்னர் ஏன் திசை திரும்பினீர்கள்? பின்னர் ஏன் பிரிவுகளை உண்டாக்கினீர்கள்? நான் இன்று சொல்லவில்லையே ஒரு அமைப்புக்குள் இருந்து போராடச் சொல்லச் சொல்லி. இன்று சிங்கள அரசோடு நிற்கும் ஈ.பி.டி.பி யாக இருந்தாலும் சரி, மகிந்தவிற்குச் சாமரம் வீசும் கருணாவாக இருந்தாலும் சரிதான், தமது போராட்டத்தை ஆரம்பித்தது ஈழம் என்கின்ற ஒன்றிற்காகத்தானே? அதைத்தான் நான் சொல்கின்றேன். நான் அனைவரையும், ஈ.பி.டி.பி பின்னாலோ, கருணா பின்னாலோ, அல்லது விடுதலைப் புலிகள் பின்னாலோ அணிதிரளவேண்டும் என்று கூறவில்லையே! அனைவரும் அணிதிரளவேண்டும் ஒரே கொள்கையின் கீழ், அதுவும் ஈழம் என்கின்ற கொள்கையின் கீழ். அவ்வாறு அனைவரும் மீண்டும் ஒருமுறை ஈழம் என்கின்ற ஒரு கொள்கையின் கீழ் அணிதிரண்டால் மனச் சுத்தியுடன் நிச்சயம் எமது ஈழம் கிடைக்கும்.

முடியாது என்று எண்ண வேண்டாம், முடியும் நிச்சயம் முடியும். சிங்கள அரிவருடிகளிடம் அடிமைப் பட்டு, அவர்களின் பணத்திற்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழர்கள் ஒவ்வொருவடும் எண்ணவேண்டியது ஒன்றுதான், விடுதலைப்புலிகளைப் பிடிக்காதவர்கள் இலங்கை அரசு பக்கம் சேர்ந்தார்கள் அன்று. இல்லாத விடுதலைப்புலிகளை நினைத்துக்கொண்டு ஏன் இன்னமும் அரசு பக்கம் இருக்கவேண்டும் எனக் கேட்கின்றேன்? தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமா? இன்னமும் எதற்கு சிங்கள அரசுடன் சமரசம் வேண்டி இருக்கின்றது? தூக்கி எறிந்து விட்டு வாருங்கள். உனது தாயின் கற்பை அழித்தவனை, உன் இனமானத்தை அழித்தவனை நீ என்ன வாழ்வு பூராகவும் சாமரம் வீசித்தான் வாழப்போகின்றாயென்றால் அப்படியான வாழ்வு ஒன்றும் தேவையற்றது.

உனது கொள்கையிலே உனக்குப் பிடிப்பில்லையானால், மற்றவர்களுக்கான வாழ்க்கையிலே நீ எப்படி நீதியை நிலைநாட்ட உன்னால் உறுதியாகப் பாடுபடமுடியும் என்று கேட்கின்றேன் நான். உன் கை உனக்கு உதவும் என்று பாராது, உனது அன்றாட உணவிற்கே அடுத்தவன் கை நக்கி வாழவேண்டும் என்கின்ற நிலையிலிருந்து எப்படி உன்னால் சுயமாக சிந்திக்கமுடியும் என்று கேட்கின்றேன் நான்.

ஓரே கொள்கையில் ஈழம் என்கின்ற ஒரே கொள்கையின் கிழ் அனைவரும் ஒன்று திரண்டால் எதுவும் சாத்தியமே!

இதற்குள் ஆயிரம் சூட்சுமங்கள் இருக்கின்றன..! அவை வெளியே சொல்ல முடியாதவை..!

எல்லாமே நடந்தேறும்..! :rolleyes:

அப்ப நீங்கள் பகவத் கீதை ஸ்டைலில் சொல்லுறீயள்.....

எது நடந்ததோ அது நல்லாவே நடந்தது

எது நடக்க இருக்குதோ அதுவும் நல்லாவே நடக்கும்

எவ்வளவு அழகாக எங்கன்ட பகவான் கிருஸ்ணன் சொல்லியிருக்கிறார் பார்த்தியளோ :D

விடுதலைப் புலிகள் என்கின்ற அமைப்பு, ஆயுத ரீதியில் சர்வதேச ஒழுங்கில் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டது என்கின்ற செய்தியே அவர்களுக்கு தேவைப்பட்டது

இதில் உண்மை இருக்கத்தான் செய்யும்......30 வருடப் ஆயுத போராட்டம் 3 வருடத்திற்க்குள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றால் அதில் எதோ ஒரு ஜில்மால் இருக்கத்தான் வேணும்.....

மகிந்தா ஆட்சிக்கு வாரார்...பிறகு மகிந்தாவே புலிகளை அழிக்கிறார் என்றால் ...சம்திங் இஸ் தெயர்

  • தொடங்கியவர்

அப்ப நீங்கள் பகவத் கீதை ஸ்டைலில் சொல்லுறீயள்.....

எது நடந்ததோ அது நல்லாவே நடந்தது

எது நடக்க இருக்குதோ அதுவும் நல்லாவே நடக்கும்

எவ்வளவு அழகாக எங்கன்ட பகவான் கிருஸ்ணன் சொல்லியிருக்கிறார் பார்த்தியளோ :D

ஐயோ இந்த பகவான் விடயத்துக்கு மட்டும் நான் வரேல்லையப்பா இப்போதைக்கு... அதிலே ஆயிரமாயிரம் விடயங்கள் கிடக்குது. ஆரியன் பகவான் எண்டு நான் சொல்ல வீண் பிரச்சனைகள் ஏற்படும்... இப்போதைக்கு இது வேண்டாம்... பின்னர் நான் எழுதுகின்றேன்...

  • தொடங்கியவர்

இதில் உண்மை இருக்கத்தான் செய்யும்......30 வருடப் ஆயுத போராட்டம் 3 வருடத்திற்க்குள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றால் அதில் எதோ ஒரு ஜில்மால் இருக்கத்தான் வேணும்.....

மகிந்தா ஆட்சிக்கு வாரார்...பிறகு மகிந்தாவே புலிகளை அழிக்கிறார் என்றால் ...சம்திங் இஸ் தெயர்

ஐயோ என்ர ராசா, நீதாண்டாப்பா புத்திசாலி... நானும் உதுகள் கன்னக்கப் பேருக்கு விளங்கப்படுத்துவம் எண்டா, ஒண்டுக்கும் விளங்குது இல்லை. இதுக்குத்தான் சொல்லுறது சில ஜில்மால் காரர்களையும் கூடவே வச்சிருக்கோணும் எண்டு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.