Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதன்கிழமை, 12, ஜனவரி 2011 (23:13 IST)

துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலி

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற மீனவர் மரணம் அடைந்தார்.

ஜெகதாப்பட்டினதைச் சேர்ந்த 4 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குண்டு பாய்ந்ததில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த பாண்டியன் படகிலேயே உயிரிழந்தார். உயிரிழந்த பாண்டியனின் வயது 25.

இந்த சம்பவத்தால் ஜெகதாப்பட்டினம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் தாக்குதலை கண்டித்து, இறந்த பாண்டியனின் உடலுடன் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராமேஸ்வரம் - நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் சாலை மறியல் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

nakkheeran

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வியாழக்கிழமை, 13, ஜனவரி 2011 (12:47 IST)

மீனவர் படுகொலை:மருத்துவமனை முற்றுகை

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர் பாண்டியன் நேற்று மாலை இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடன் சென்ற மேலும் 3 பேர் காயம் பட்டு கோட்டைபட்டினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றூவருகின்றனர்.

மீனவர் படுகொலையை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் நடந்தது. அதன்பிற்கு 5 லட்சம் ஒரு உருப்பினருக்கு வேலை என்று அதிகாரிகள் சொன்னதால் மறியல் கைவிடப்பட்டது.

அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டுவரப்பட்ட பாண்டியனின் உடல் இன்னும் பிரேத பரிசோதனை நடக்காததால் மீனவ மக்கள் மற்றும் சிபிஐ, சிபிஎம், நாம்தமிழர் போன்ற அரசியல் கட்சியினர் மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர்.

தொடர்ந்து ஆர்பாட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

nakkheeran

யார் சொன்னது இலன்கை கடற்படை சுட்டது என்டு. அது உதிரிப்புலிகள் கடலில் இருந்த போது தமிழக மீனவன் கொல்லப்பட்டான் எனபதை தமிழக அரசு சார்பாக தெரியப்படுத்துகிறோம்.

இது தொடர்பாக ஒரு விளக்கம் மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்

  • கருத்துக்கள உறவுகள்

வியாழக்கிழமை, 13, ஜனவரி 2011 (12:47 IST)

மீனவர் படுகொலையை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் நடந்தது. அதன்பிற்கு 5 லட்சம் ஒரு உருப்பினருக்கு வேலை என்று அதிகாரிகள் சொன்னதால் மறியல் கைவிடப்பட்டது.

ஆக, தீர்வுக்காக தெருவில் இறங்கவில்லை..! இறப்பை வைத்து ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்று பார்த்திருக்கிறார்கள்..! :(

பாண்டியனின் விலை ஐந்து லட்சங்கள் மற்றும் ஒரு வேலை..! :unsure:

தானைத்தலைவர் ஸ்பெக்ட்ரம் மு. கருணாநிதி அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பெரிய விசயமா? ஆயிரம் பேர் செத்தாலும் ஐந்தைந்து லட்சங்களாக வாரிக் குடுப்பார்..! :wub:

ஆக, தீர்வுக்காக தெருவில் இறங்கவில்லை..! இறப்பை வைத்து ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்று பார்த்திருக்கிறார்கள்..! :(

பாண்டியனின் விலை ஐந்து லட்சங்கள் மற்றும் ஒரு வேலை..! :unsure:

தானைத்தலைவர் ஸ்பெக்ட்ரம் மு. கருணாநிதி அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பெரிய விசயமா? ஆயிரம் பேர் செத்தாலும் ஐந்தைந்து லட்சங்களாக வாரிக் குடுப்பார்..! :wub:

இந்திய உளவு றோ "தமிழகத் தமிழன்" என்ற எண்ணப் படம் வைத்திருக்கும். நிச்சியமாக அந்தப் படம் நல்ல படமாக இருக்காது.

அநேகமாக அது இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய துரைகள் வைத்திருந்த "இந்தியன்" என்ற எண்ணப் படத்தின் ஜெராக்ஸ் காப்பியாகத் தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சம்பவத்தை சிறீலங்கா மறுத்துள்ளதுடன் தனது கடற்படை அந்த இடத்திற்கு போனதே இல்லை என்று கூறி இருக்கிறது.

கோத்தா மண்டையை போட்டு பிச்சுக் கொண்டு இருக்கிறாராம். கடற்புலிகளையாவது விட்டு வைச்சிருக்கலாம்.. உப்படியான விசயங்களில் கூட பழிபோட புலிகள் இல்லையே என்ற கவலையில் வாடிப் போயுள்ளாராம்.

இந்த மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மீன் பிடி தொழில் செய்பவர்கள். இவர்களிடம் போய் அரசியல் செய்ய முடியாது. முதலில் அவர்களுக்கு இழப்பீடு அவசியம். வீழ்ந்த பிணத்தைக் கூட அடக்கம் செய்ய உதவி இல்லாமல் இருக்கும் அவர்களின் வாழ்வு.

நாங்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து செளகரியமாக இருந்து கொண்டு ஐயோ இதோட விட்டிட்டாங்களே என்று அழகாக அங்கலாய்க்கலாம். அவர்களுக்கோ கிடைப்பதை பெறுவதோடாவது பிழைத்துக் கொள்வோம்.. மாண்ட உயிர் மீளப் போகிறதா.. இன்னும் மரணங்கள் வராமல் இருக்கப் போகிறதா என்ற நிலை.

அவர்களின் துயரம் நீண்டது. அதை இவ்வளவு காலமும் தீர்க்க எவரும் முன்வரவில்லை. கச்சதீவு மீட்பு அரசியலாகி நிற்கிறதே அன்றி தமிழக மீனவர்களின் உயிர்களை காக்க என்றில்லை.

இதில் இன்னொரு பிரச்சனை இருக்கிறது. தமிழக மீனவர்களும் வடக்கு தமிழ் மீனவர்களும் கூடிப் பேச வேண்டும். கூட்டிணைந்து செயற்பட முனையும் போது மட்டுமே வடக்கு கிழக்கு கடலில் சிங்கள மற்றும் அந்நிய ஆதிக்கங்களை கட்டுப்படுத்த முடியும். கடற்புலிகள் இருந்த வேளையில் தமிழக இழப்பு வெகு குறைவாக இருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இப்போ வடக்கு கடலில் மீன்பிடிப்பவர்கள் சிங்களவர்கள். அவர்கள் இந்திய மீனவர்களை எல்லைக்கு அப்பால் விரட்டி மீன் வளங்களை சூறையாட நினைக்கின்றனர். இதன் மூலம் சிறீலங்கா கடற்படை அதிகாரிகள் மீன் வியாபாரம் செய்கின்றனர்.

பிபிசி போன்ற ஊடகங்கள் புலிகளை தோற்கடித்த சிறீலங்கா இராணுவம் மரக்கறி வியாபாரம் செய்வதாகவும் அதை ஒரு புரட்சி கர மாற்றம் என்றும் வர்ணிக்கும். பிரிட்டனிலும் அதன் இராணுவத்தை வைத்து மக்களின் நிலங்களை பறித்து கமரூன் வியாபாரம் செய்ய பிபிசி எழுதலாமே. ஆனால் அது அவர்களுக்கு ஆகாது. எங்களுக்கு என்றால் ஆகும்.

(டெல்லிக்கு தந்தி....)

தமிழக மீனவர் சுட்டுக்கொலை: இந்த செயல் தமிழர்கள் மத்தியில் பெரும் மன வேதனையையும், அதிருப்தியையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முதல்வரான நானும் கடும் கோபத்தில் உள்ளேன். உடனடியாக தலையிட்டு கடும் நடவடிக்கை எடுங்கள்

- கருணாநிதி

டெல்லியிலிருந்து பதில்: கருணாநிதிஜி.....ஸ்பெக்ட்ரம் 2ஜி 2ஜி

(டெல்லிக்கு பதில் தந்தி....)

உங்கள் பதில் திருப்திகரமாக உள்ளது! தமிழகம் அமைதியாக உள்ளது

- கருணாநிதி

  • கருத்துக்கள உறவுகள்

(டெல்லிக்கு தந்தி....)

தமிழக மீனவர் சுட்டுக்கொலை: இந்த செயல் தமிழர்கள் மத்தியில் பெரும் மன வேதனையையும், அதிருப்தியையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முதல்வரான நானும் கடும் கோபத்தில் உள்ளேன். உடனடியாக தலையிட்டு கடும் நடவடிக்கை எடுங்கள்

- கருணாநிதி

டெல்லியிலிருந்து பதில்: கருணாநிதிஜி.....ஸ்பெக்ட்ரம் 2ஜி 2ஜி

(டெல்லிக்கு பதில் தந்தி....)

உங்கள் பதில் திருப்திகரமாக உள்ளது! தமிழகம் அமைதியாக உள்ளது

- கருணாநிதி

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து செளகரியமாக இருந்து கொண்டு ஐயோ இதோட விட்டிட்டாங்களே என்று அழகாக அங்கலாய்க்கலாம். அவர்களுக்கோ கிடைப்பதை பெறுவதோடாவது பிழைத்துக் கொள்வோம்.. மாண்ட உயிர் மீளப் போகிறதா.. இன்னும் மரணங்கள் வராமல் இருக்கப் போகிறதா என்ற நிலை.

இறந்தவர் குடும்பம் நிவாரணம் பெறுவதில் தவறில்லை..! ஆனால் நிவாரணத்துடன் போராடுவதை எல்லோரும் நிறுத்திக்கொண்டார்களெனில், பின்னாட்களிலும் பிணங்களையும், நிவாரணங்களை வாங்கிக்கொண்டிருக்க வேண்டியதுதான்..! இதையே சொல்ல வந்தேன்..! :rolleyes:

மற்றும்படி இதில் அங்கலாய்ப்பு எதுவுமில்லை..! :wub:

தமிழக மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை தூதருக்கு இந்தியா அழைப்பாணை

தமிழக மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றுள்ளது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து டெல்லியில் உள்ள இலங்கை தூதரை இன்று நேரில் வரவழைத்து விளக்கம் கேட்டது இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம்.

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டதில் பாண்டியன் என்ற மீனவர் கொல்லப்பட்டார்.மேலு‌ம் இர‌ண்டு பே‌ர் காய‌ம் அடை‌ந்தன‌ர்.

‌மீனவ‌ர் ஒருவ‌ர் இல‌ங்கை கட‌ற்படை‌யினரால‌் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌நிக‌ழ்வு ஜெகதாப்பட்டின‌த்‌தி‌ல் ப‌த‌ற்ற‌த்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இப்பிரச்சனை இன்று தமிழக சட்டசபையிலும் எதிரொலித்த நிலையில், த‌மிழக மீனவர்களை சுட்டு கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று‌ம், இது போன்ற செயலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் கூறி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் கருணா‌நி‌தி தந்தி அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விளக்கமளிக்க நேரில் வருமாறு டெல்லியில் இலங்கை தூதர் பிரசாத் கரியாவாசமுக்கு இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம் அழைப்பாணை அனுப்பியது.

இதனைத் தொடர்ந்து இந்திய அயலுறவுத் துறை அமைச்சகத்திற்கு நேரில் வந்த கரியாவாசாமிடம், தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு இந்தியா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் வெளியே வந்த கரியாவாசம் செய்தியாளர்களிடம் பேசுகையில், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் தாங்கள் தாங்கள் இல்லவே இல்லை என்று இலங்கை கடற்படையினர் மறுத்துள்ளதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்றும் மறுப்பு தெரிவித்திருப்பதாக கூறினார்.

இருப்பினும் இதுகுறித்த புகார் வந்துள்ளதால் அதுகுறித்து விசாரிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

டெல்லியில் இன்று இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக இலங்கை தூதரகத்திடம் கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்துள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்களை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்றும் அதில் கூறியுள்ளது.

மேலும் கொழும்பிலுள்ள இந்திய தூதரகமும் இந்த விடயத்தை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, இந்தியாவின் ஆழ்ந்த வருத்தத்தையும், வேதனையையும் தெரிவித்ததாகவும், இலங்கை படையினரை கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா இப்படியே வருத்தத்தையும், வேதனையையும் தெரிவித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.இவற்றையெல்லாம் இலங்கை அரசாங்கமோ அல்லது படையினரோ ஒரு பொருட்டாகவே மதிக்கப்போவதில்லை.

பல்லாயிரம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சவின் படத்தை போட்டு இந்திய இராணுவத் துறை நடத்தும் உடுமலைப் பேட்டை பள்ளி ஒன்றுக்கு காலண்டர்களை வழங்கும் அளவுக்கு ராஜபக்சவை இந்திய இராணுவம் தூக்கிபிடித்துக்கொண்டிருக்கும் நிலையில், இலங்கை கடற்படையினர் அடங்கிப்போவார்கள் என எதிர்பார்ப்பதோ அல்லது இப்போதைய இந்திய அரசின் தலைமை பீடத்தில் இருப்பவர்கள் சொல்வதை கேட்பார்கள் என்று நினைப்பதோ கனவில்தான் நடக்கும் என்று குமுறுகிறார்கள் தமிழக மீனவர்கள்!

http://tamil.webdunia.com/newsworld/news/national/1101/13/1110113055_1.htm

Edited by akootha

தமிழக மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை தூதருக்கு இந்தியா அழைப்பாணை

இலங்கை தூதுவரை நேரடியாக அழைத்த வட இந்திய பயங்கரவாதிகள், தமிழக மீனவர்களைக் கொன்ற சிங்கள பயங்கரவாதிகளை வெகுவாக பாராட்டினர்.

அத்துடன் புது வருடத்தில் அதிக எலும்புத் துண்டுகளை நக்க ஆசைப்படுவதாகவும் கூறினர்.

  • கருத்துக்கள உறவுகள்

இனியும் சிங்களன் தாக்கினால் தமிழனின் கை மீன் பிடித்து கொண்டு இருக்காது..

-----மு.கருநாகம்..

அறிக்கை நெம்பர்:

3000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000001

டிஸ்கி:

கருணாவின் இந்த பேச்சை வீரவேச பேச்சு எனக்கொள்ளவேண்டாம் .. மாற்று தொழிலுக்கு ஏற்பாடு செய்ய போறாங்கள் என்று பொருள்.. ஏறத்தாழ இப்ப அதான் நடந்துகொண்டுள்ளது.. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வியாழக்கிழமை, 13, ஜனவரி 2011 (21:36 IST)

மீனவர் பாண்டியன் துப்பாக்கி குண்டு பாய்தே இறந்திருக்கிறார்: கடலோர காவல் டி.எஸ்.பி. அம்சவள்ளி

புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை துப்பாக்கியால் சுட்டதில் மீனவர் பாண்டியன் கொல்லப்பட்டார். இச்சம்பவம் இன்று தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.

எனினும் அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்ததாகத் தகவல் இல்லை என இலங்கை கடற்படை செய்தித்தொடர்பாளர் கேப்டன் அதுல சீனார்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

இந்நிலையில் கடலோர காவல் டி.எஸ்.பி. அம்சவள்ளி ஜெகதாப்பட்டினத்தில் பாண்டியனின் இறுதி ஊர்வலத்தின்போது கலந்துகொண்டு பாதுகாப்பு அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இரவு அடிபட்டு வந்த அந்த படகை, சோதனை செய்தோம். மீனவர்களும் அந்த படகில் இறங்கி சோதனை செய்தனர். துப்பாக்கி குண்டு பாய்ந்திருப்பது. தெளிவாக தெரிகிறது. அப்படகில் உள்ள மரப் பலகைகளில் துப்பாக்கி குண்டு: துளைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், மீனவர்கள் 2 துப்பாக்கி குண்டு மற்றும் கற்களை எடுத்து எங்களிடம் ஒப்படைத்துள்ளனர். பாண்டியன் துப்பாக்கி குண்டு துளைத்து கொல்லப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது எங்களது பாதுகாப்பு பணிகள் தொடரும் என்றார்.

nakkheeran

கூடச் சென்ற மீனவர் ஒருவர் சுட்டதினால்தான் அவர் கொல்லப்பட்டார் என்ற முடிவு விரைவில் வரும். யாராவது ஒரு மீனவர் கைது செய்யப்படுவார்.

:lol: :lol: :lol:

:D :D :D :D :D

(டெல்லிக்கு தந்தி....)

தமிழக மீனவர் சுட்டுக்கொலை: இந்த செயல் தமிழர்கள் மத்தியில் பெரும் மன வேதனையையும், அதிருப்தியையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முதல்வரான நானும் கடும் கோபத்தில் உள்ளேன். உடனடியாக தலையிட்டு கடும் நடவடிக்கை எடுங்கள்

- கருணாநிதி

டெல்லியிலிருந்து பதில்: கருணாநிதிஜி.....ஸ்பெக்ட்ரம் 2ஜி 2ஜி

(டெல்லிக்கு பதில் தந்தி....)

உங்கள் பதில் திருப்திகரமாக உள்ளது! தமிழகம் அமைதியாக உள்ளது

- கருணாநிதி

என்ன கொடுமைடா சாமி, இந்த உணர்ச்சிகளை கூடக்காட்டுகின்றீர்களாம், கொஞ்சம் குறைக்கட்டாம் எண்டு இந்தத் தளம் சொல்லுது... என்ன கொடுமைடா சாமி இது :D

கூடச் சென்ற மீனவர் ஒருவர் சுட்டதினால்தான் அவர் கொல்லப்பட்டார் என்ற முடிவு விரைவில் வரும். யாராவது ஒரு மீனவர் கைது செய்யப்படுவார்.

:(
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர் சுட்டுக் கொலை

விளக்கம் கேட்கிறது இந்தியா

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-14 09:07:15| யாழ்ப்பாணம்]

இந்திய மீனவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை உயர்ஸ்தானிகரிடம் இந்திய அரசாங்கம் விளக்கம் கோரியுள்ளது. நடுக்கடலில் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசமிடம் இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தேவையில்லாமல் இலங்கை கடற்படையினர் அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது என்ற இணக்கப்பாடு 2008-ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருந்தது.

எவ்வாறெனினும் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் மீள இந்தியா செல்வதற்கு தாம் உதவிகளை வழங்கியதாகவும் இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு மீனவர் கொல்லப்பட்டதுடன் மற்றொரு மீனவர் படுகாயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

valampurii.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை, 14, ஜனவரி 2011 (11:8 IST)

தமிழக மீனவர் சுட்டுக்கொலை:

இலங்கை கடற்படை மறுப்பு

தமிழக மீனவரை சுட்டுக்கொன்றதை இலங்கை கடற்படை மறுத்து உள்ளது. தமிழக மீனவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொல்லவில்லை என்று அதன் செய்தி தொடர்பாளர் அதுலா சேனரத் நேற்று கொழும்பு நகரில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதேபோல் டெல்லியில் உள்ள இலங்கை தூதர் பிரசாத் கரியாவசமும் மறுத்து இருக்கிறார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்;

தாங்கள் இதுவரை நடத்திய விசாரணையில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் இலங்கை கடற்படைக்கு சம்பந்தம் இல்லை என தெரியவந்து இருப்பதாகவும்,

என்றாலும் உண்மையில் நடந்தது என்ன? என்பது பற்றி இலங்கை அரசு விசாரணை மேற்கொள்ளும் என்றும் கூறினார். இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டி வந்தாலும் அவர்களை சுடக்கூடாது என இலங்கை கடற்படைக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

nakkheeran

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.