Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் தேவையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?...காதல் என்பது ஓர் உணர்வாகும் அந்த உணர்வு நேரத்திற்கு நேரம் மாறும்...காதல் நிறைவேறாமல் காதலுக்காய் இறந்தவர்கள் இருந்தது அந்தக் காலம்... நீ இல்லா விட்டால் வேறொருவனுடன்/வேறொருத்தியுடன் வாழ்ந்து காட்டுவேன் என்பது இந்தக் காலம்.

ஒருவனை/ஒருத்தியைப் பார்த்தவுடன் வரும் காதல் நல்லதா அல்லதா அவர்களுடன் நன்றாகப் பழகிய பின் வரும் காதல் நல்லதா?...நன்றாகப் பழகிய பின் காதலித்தால் அவர்களுக்குள் புரிந்துணர்வு ஏற்படும்.அவனது பலம்,பலவீனம் அவளுக்கும்,அவளது பலம்,பலவீனம் அவனுக்கும் தெரிய வரும் போது இருவரும் இல் வாழ்க்கையில் இணையும் போது பிரச்சனைகள் ஏற்படாது என நினைக்கிறேன்...பொதுவாக பெற்றோர்கள் ஒரு பெண்ணை முகம் தெரியாத ஆணுக்கு கட்டிக் கொடுப்பதை விட பெண்ணோடு நன்கு பழகி பெண்ணை நன்கு புரிந்தவனுக்கு கட்டிக் கொடுக்கலாம்...காதலிக்கும் போது இருக்கும் மிக முக்கிய பிரச்சனை ஜாதி,அந்தஸ்து.என்ன தான் ஜாதியை ஒழித்து விட்டோம் என சொன்னாலும் தற்போதும் ஜாதி தான் காதலிப்பவர்களுக்கு முக்கிய தடையாய் உள்ளது...சில பேர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஜாதி,அந்தஸ்து பார்க்காமல் காதலித்தவர்களை திருமணம் செய்கிறார்கள் ஆனால் பல பேரின் காதல் அதே காரணத்திற்காக கை கூடுவதில்லை.

இனி மேல் காதலிப்பவர்களின் உணர்வுகளைப் பார்ப்போம்!முன்பு இருந்ததை விட தங்களை நிறைய அலங்கரிப்பார்கள்...ஒரு நாளைக்கு ஒரு தரம் பார்க்கா விட்டால் அல்லது ஒரு நாளைக்கு ஒருக்கால் கதைக்கா விட்டால் அவர்களுக்கு மண்டை வெடித்து விடும்...எந்த நேரம் பார்த்தாலும் கதைத்துக் கொண்டே இருப்பார்கள்[அப்படி என்ன இருக்கோ தெரியாது கதைப்பதற்கு அதுவும் மற்றவர்களோடு கதைப்பது பிடிக்கவே பிடிக்காது].பொதுவாக ஒருவரையொருவர் மற்றவர்களுக்கு முன் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் அதுவும் [அவர்கள் என்ன பிழை செய்து இருந்தாலும்]பொதுவாக ஆண்கள் தான் தாங்கள் காதலிக்கும் பெண்களைப் பற்றி விட்டுக் கொடுக்காமல் கதைப்பார்கள்... அவனோ/அவளோ வேறொரு பெண்ணோடு/ஆணோடு கதைத்தால் சந்தேகம் வரும்.அதுவும் குறிப்பாக பெண்கள் தான் கூட சந்தேகப்படுவார்கள்.அவர்கள் மேல் உள்ள பாசத்தால் அல்லது எங்கே தங்களை விட்டுப் போய் விடுவார்கள் என்ட காரணத்தாலும் சந்தேகப்பட காரணம் உண்டு ஆனால் எனக்குப் புரியாதது ஒரு ஆண்/பெண் தன்னை நிச்சயமாய் காதலிக்கிறான்/ள் எனத் நிச்சயமாய் தெரிந்த பிறகும் அவனை/ளை சந்தேகப்படுவது தப்பில்லையா?...பின்பு அவர்கள் திருமண வாழ்க்கையில் இணைந்த பிறகு அதுவே பெரிய பிரச்சனையாகாதா?...காதலிக்கும் போது விட்டுக் கொடுப்பவர்கள் திருமணத்தின் பின்பும் அப்படி விட்டுக் கொடுப்பார்களா?...ஒரு கட்டத்தின் பின்பு அவர்களுக்கே வெறுப்பு வராதா?...அவன்/அவள் இல்லா விட்டால் உயிர் வாழ மாட்டேன் என்டு சொல்லுவார்கள் ஆனால் அது பொய் :D இணையும் காதலர்களை விட பிரியும் காதலர்கள் தான் அதிகம் அதற்காக அவர்கள் எல்லோரும் செத்தா போய் விட்டார்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து காட்டவில்லை.

காதலிப்பவர்களே புரிந்து கொண்டு காதலியுங்கள்.காதலித்த பின் மனஸ்தாப படாதீர்கள்...வாழ்க்கையை அனுபவியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

காதல்

எனக்கு = ஆம் :wub:

என் பிள்ளைக்கு = இல்லை :(

காதல்

எனக்கு = ஆம் :wub:

என் பிள்ளைக்கு = இல்லை :(

இது எந்த விதத்தில் நியாயம் விசுகு அண்ணா? :blink:

  • கருத்துக்கள உறவுகள்

காதல் தேவையா = உயிர் வாழ மூச்சு தேவையா

இது ஒரு அபரிமிதமான சமன்பாடு என்றே நினைக்கிறேன்.

மூச்சின்றி எவரும் வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. ஆனால் பெண்ணோடு ஆணும்.. ஆணோடு பெண்ணும்.. காதல் என்ற உறவாடல் இன்றி வாழ்ந்தோர் பலர் உண்டு.

காதல்... அவசியமில்லாது... தொந்தரவை விலைக்கு வாங்குவது போன்றது. இதைத்தான் காதலின் பெயரால் பலர் அனுபவிக்கக் கண்டிருக்கின்றனர்.

இது ஒரு அபரிமிதமான சமன்பாடு என்றே நினைக்கிறேன்.

மூச்சின்றி எவரும் வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. ஆனால் பெண்ணோடு ஆணும்.. ஆணோடு பெண்ணும்.. காதல் என்ற உறவாடல் இன்றி வாழ்ந்தோர் பலர் உண்டு.

காதல்... அவசியமில்லாது... தொந்தரவை விலைக்கு வாங்குவது போன்றது. இதைத்தான் காதலின் பெயரால் பலர் அனுபவிக்கக் கண்டிருக்கின்றனர்.

காதலித்தவர்களுக்கு, காதலிக்கப்பட்டவர்களுக்கு காதல் மூச்சை விட அதி தேவையானது என்று புரியும். இப்படியான திரி எல்லாம் காதல் அனுபவம் கொண்டவர்கள் விவாதிக்கத்தான், பிரமசாரிகளுக்கு இல்லை :D

அனுபவமே இல்லாதர்கள் எப்படி ஒன்றை பற்றி தேவையா இல்லையா என கேட்க முடியும்? :)

  • கருத்துக்கள உறவுகள்

இது எந்த விதத்தில் நியாயம் விசுகு அண்ணா? :blink:

எனக்கு தெரியாது தாயே

ஆனால் உண்மை இதுதான்.

காதல் அவசியம். காதலித்து கல்யாணம் அல்லது கல்யாணம் கட்டிய பின் காதல்.

காதல்... அவசியமில்லாது... தொந்தரவை விலைக்கு வாங்குவது போன்றது.

உங்களுக்கும் ஒருநாள் பட்டாம்பூச்சி படபடத்து அடி வயிற்றிலிருந்து ஒரு பந்து மேலெழுந்து மெதுமெதுவாக உருப்பெருத்து நெஞ்சுக்குள் அடைத்து நிற்பதுபோல் ஒரு உணர்வு வரும். அப்பொழுது உணர்வீர்கள் காதலை. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் தேவையா = உயிர் வாழ மூச்சு தேவையா

இப்படி சொல்பவர்கள் காதலைப் பெரிதாக உணர்ந்திருக்க மாட்டார்கள் ஆனால் நெடுக்ஸ் போன்றவர்கள் காதலை நன்றாக உணர்ந்த படியால் தான் காதல் ஒரு பொய் என எழுதுகிறார் :lol:

ரதி...காதல் எப்போ வரும் எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. உங்களுக்கே காதல் எப்பவும் வரலாம் அதனால் காதலைப்பற்றிய ஆராச்சியை விட்டுவிட்டு காதலிக்கும் வழியைப்பாருங்கோ :D காதலித்துப்பார் கவிதையை நீங்கள் இன்னும் படிக்கல போல......... அந்தக்கவிதை முற்றிலும் உண்மையங்கோ :)

காதலித்துப்பார்.....!

உன்னைச் சுற்றி

ஒளிவட்டம் தோன்றும்

உலகம் அர்த்தப்படும்

ராத்திரியின் நீளம்

விளங்கும்

உனக்கும்

கவிதை வரும்

கையெழுத்து

அழகாகும்

தபால்காரன்

தெய்வமாவான்

உன் பிம்பம் விழுந்தே

கண்ணாடி உடையும்

கண்ணிரண்டும்

ஒளிகொள்ளும்

காதலித்துப் பார்

------------------------------

தலையணை நனைப்பாய்

மூன்றுமுறை பல்துலக்குவாய்

காத்திருந்தால்

நிமிஷங்கள் வருஷமென்பாய்

வந்துவிட்டால்

வருஷங்கள் நிமிஷமென்பாய்

காக்கைக்கூட உன்னை

கவனிக்காது

ஆனால் - இந்த உலகமே

உன்னையே கவனிப்பதாய்

உணர்வாய்

வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்

உருவமில்லா உருண்டையொன்று

உருளக் காண்பாய்

இந்த வானம் இந்த அந்தி

இந்த பூமி இந்த பூக்கள்

எல்லாம்

காதலை கௌரவிக்கும்

ஏற்பாடுகள் என்பாய்

காதலித்துப்பார்

--------------------------------

இருதயம் அடிக்கடி

இடம்மாறித் துடிக்கும்

நிசப்த அலைவரிசைகளில்

உனது குரல் மட்டும்

ஒலிபரப்பாகும்

உன் நரம்பே நாணேற்றி

உனக்குள்ளே அம்புவிடும்

காதலின் திரைச்சீலையைக்

காமம் கிழிக்கும்

ஹார்மோன்கள்

நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கும்

உதடுகள் மட்டும்

சகாராவாகும்

தாகங்கள் சமுத்திரமாகும்

பிறகு

கண்ணீர்த் துளிக்குள்

சமுத்திரம் அடங்கும்

காதலித்துப்பார்

-----------------------------------

பூக்களில் மோதி மோதியே

உடைந்து போக

உன்னால் முடியுமா?

அகிம்சையின் இம்சையை

அடைந்ததுண்டா

அழுகின்ற சுகம்

அறிந்ததுண்டா?

உன்னையே உனக்குள்ளே

புதைக்கத் தெரியுமா?

சபையில் தனிமையாகவும்

தனிமையை சபையாக்கவும்

உன்னால் ஒண்ணுமா?

அத்வைதம்

அடைய வேண்டுமா?

ஐந்தங்குல இடைவெளியில்

அமிர்தம் இருந்தும்

பட்டினி கிடந்து பழகியதுண்டா?

காதலித்துப்பார்

---------------------------------------

சின்னச்சின்னப் பரிசுகளில்

சிலிர்க்க முடியுமே

அதற்காகவேனும்

புலன்களை வருத்திப்

புதுப்பிக்க முடியுமே

அதற்காகவேனும்

ஆண் என்ற சொல்லுக்கும்

பெண் என்ற சொல்லுக்கும்

அகராதியில் ஏறாத

அர்த்தங்கள் விளங்குமே

அதற்காகவேனும்

வாழ்ந்துகொண்டே

சாகவும் முடியுமே

செத்துக்கொண்டே

வாழவும் முடியுமே

அதற்காகவேனும்

காதலித்துப்பார்

------------------------------------

சம்பிரதாயம்

சட்டை பிடித்தாலும்

உறவுகள்

உயிர்பிழிந்தாலும்

விழித்துப் பார்க்கையில்

உன் தெருக்கள்

களவு போயிருந்தாலும்

ஒரே ஆணியில் இருவரும்

சிக்கனச் சிலுவையில்

அறையப்பட்டாலும்

நீ நேசிக்கும்

அவனோ அவளோ

உன்னை நேசிக்க மறந்தாலும்

காதலித்துப்பார்

சொர்க்கம் - நரகம்

இரண்டில் ஒன்று

இங்கேயே நிச்சயம்

காதலித்துப்பார்

கவிஞர் - கவிப்பேரரசு வைரமுத்து

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனி

கொடுத்து வைத்தவர் தாங்கள்

ரசிப்பதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்

அது தங்களிடம் உள்ளது. தங்களுக்கு கிடைத்துள்ளது. வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்க இன்றுபோல் பல்லாண்டு ...... :wub:

ரதி...காதல் எப்போ வரும் எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. உங்களுக்கே காதல் எப்பவும் வரலாம் அதனால் காதலைப்பற்றிய ஆராச்சியை விட்டுவிட்டு காதலிக்கும் வழியைப்பாருங்கோ :D காதலித்துப்பார் கவிதையை நீங்கள் இன்னும் படிக்கல போல......... அந்தக்கவிதை முற்றிலும் உண்மையங்கோ :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி...காதல் எப்போ வரும் எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. உங்களுக்கே காதல் எப்பவும் வரலாம் அதனால் காதலைப்பற்றிய ஆராச்சியை விட்டுவிட்டு காதலிக்கும் வழியைப்பாருங்கோ :D காதலித்துப்பார் கவிதையை நீங்கள் இன்னும் படிக்கல போல......... அந்தக்கவிதை முற்றிலும் உண்மையங்கோ :)

காதலித்துப்பார்.....!

உன்னைச் சுற்றி

ஒளிவட்டம் தோன்றும்

உலகம் அர்த்தப்படும்

ராத்திரியின் நீளம்

விளங்கும்

உனக்கும்

கவிதை வரும்

கையெழுத்து

அழகாகும்

தபால்காரன்

தெய்வமாவான்

உன் பிம்பம் விழுந்தே

கண்ணாடி உடையும்

கண்ணிரண்டும்

ஒளிகொள்ளும்

காதலித்துப் பார்

------------------------------

தலையணை நனைப்பாய்

மூன்றுமுறை பல்துலக்குவாய்

காத்திருந்தால்

நிமிஷங்கள் வருஷமென்பாய்

வந்துவிட்டால்

வருஷங்கள் நிமிஷமென்பாய்

காக்கைக்கூட உன்னை

கவனிக்காது

ஆனால் - இந்த உலகமே

உன்னையே கவனிப்பதாய்

உணர்வாய்

வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்

உருவமில்லா உருண்டையொன்று

உருளக் காண்பாய்

இந்த வானம் இந்த அந்தி

இந்த பூமி இந்த பூக்கள்

எல்லாம்

காதலை கௌரவிக்கும்

ஏற்பாடுகள் என்பாய்

காதலித்துப்பார்

--------------------------------

இருதயம் அடிக்கடி

இடம்மாறித் துடிக்கும்

நிசப்த அலைவரிசைகளில்

உனது குரல் மட்டும்

ஒலிபரப்பாகும்

உன் நரம்பே நாணேற்றி

உனக்குள்ளே அம்புவிடும்

காதலின் திரைச்சீலையைக்

காமம் கிழிக்கும்

ஹார்மோன்கள்

நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கும்

உதடுகள் மட்டும்

சகாராவாகும்

தாகங்கள் சமுத்திரமாகும்

பிறகு

கண்ணீர்த் துளிக்குள்

சமுத்திரம் அடங்கும்

காதலித்துப்பார்

-----------------------------------

பூக்களில் மோதி மோதியே

உடைந்து போக

உன்னால் முடியுமா?

அகிம்சையின் இம்சையை

அடைந்ததுண்டா

அழுகின்ற சுகம்

அறிந்ததுண்டா?

உன்னையே உனக்குள்ளே

புதைக்கத் தெரியுமா?

சபையில் தனிமையாகவும்

தனிமையை சபையாக்கவும்

உன்னால் ஒண்ணுமா?

அத்வைதம்

அடைய வேண்டுமா?

ஐந்தங்குல இடைவெளியில்

அமிர்தம் இருந்தும்

பட்டினி கிடந்து பழகியதுண்டா?

காதலித்துப்பார்

---------------------------------------

சின்னச்சின்னப் பரிசுகளில்

சிலிர்க்க முடியுமே

அதற்காகவேனும்

புலன்களை வருத்திப்

புதுப்பிக்க முடியுமே

அதற்காகவேனும்

ஆண் என்ற சொல்லுக்கும்

பெண் என்ற சொல்லுக்கும்

அகராதியில் ஏறாத

அர்த்தங்கள் விளங்குமே

அதற்காகவேனும்

வாழ்ந்துகொண்டே

சாகவும் முடியுமே

செத்துக்கொண்டே

வாழவும் முடியுமே

அதற்காகவேனும்

காதலித்துப்பார்

------------------------------------

சம்பிரதாயம்

சட்டை பிடித்தாலும்

உறவுகள்

உயிர்பிழிந்தாலும்

விழித்துப் பார்க்கையில்

உன் தெருக்கள்

களவு போயிருந்தாலும்

ஒரே ஆணியில் இருவரும்

சிக்கனச் சிலுவையில்

அறையப்பட்டாலும்

நீ நேசிக்கும்

அவனோ அவளோ

உன்னை நேசிக்க மறந்தாலும்

காதலித்துப்பார்

சொர்க்கம் - நரகம்

இரண்டில் ஒன்று

இங்கேயே நிச்சயம்

காதலித்துப்பார்

கவிஞர் - கவிப்பேரரசு வைரமுத்து

தமிழினி உங்களுக்கும் காதல் அனுபவம் இருக்கு போல :D ... எனக்கு இந்த கவிதை பயன் படாது ஆனால் யாழில் காதலித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு மிகவும் பயன்படும் :lol: ...கவிதை நல்லாய் இருக்குது :rolleyes:

தமிழினி உங்களுக்கும் காதல் அனுபவம் இருக்கு போல :D ... எனக்கு இந்த கவிதை பயன் படாது ஆனால் யாழில் காதலித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு மிகவும் பயன்படும் :lol: ...கவிதை நல்லாய் இருக்குது :rolleyes:

அனுபவம் இல்லாமலா இக்கவியில் வரும் அனைத்தும் உண்மை என்று சொல்லியிருப்பன் :rolleyes::) ஆனால் என்ன இக்கவியில் சொல்லியிருப்பவை திருமணத்திற்கு பிறகு பலருக்கு பொருந்துவதில்லை :)

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி நீங்கள் சொல்வது சரியோ பிழையோ தெரியாது. காதல் அனுபவம் என்பது பலருக்கு கசப்பாக அமைந்தும் இருக்கிறது. அதில் திட்டமிட்ட ஏமாற்றங்களும் அடங்கும். ஒருத்தரோட முளைத்த காதல் தேவைகள் வசதிகள் பெருக.. பிறகு சிறகு கட்டி பறந்து இன்னொருத்தரோட தொத்தி பிறது அது இன்னொருத்தர் மேல தொத்தி.. அப்பப்பா.. இதுகளையும் நீங்கள் காதல் என்றோ வரையறுக்கிறீங்கள்.

இப்படியான நாய்க் காதல் செய்யும் மனித ஜந்துகளையும் சமூகத்தில் காண முடிகிறது தானே..! இவற்றையும் காதல் என்று வரையறுத்தால்.. உங்களின் வரையரை அப்படி.. எங்களுக்கு அப்படி அன்றியும் இருக்கலாம் அல்லவா. :D:)

எனக்கொன்னவோ காதல் என்ற பெயரில் மனித மிருகங்கள் தங்கள் தேவைகளை இச்சைகளை தீர்த்துக்கொள்ள அலைகின்றன என்று தான் தெரியுதே தவிர.. வேற ஒன்றும் தெரியல்ல..! :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

காதல் இல்லாது வாழ்வதும் ஒரு வாழ்வா?

காதல் சுகமானது தான், ஆதவது காதலித்து பிரிந்தால் காதல் சுகமாக புனிதமாகவும் சுகமாகவும் இருக்கும் அதுவே காதலித்து கலியானம் செய்து அவரவர்களின் மருபக்கம் அல்லது பிரச்சனைகள் வரும் போது நகரமாக இருக்கும்.

உதாரணத்துக்கு இதே யாழ்களத்தில் வாசித்த ஒரு சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது:

ஜேர்மனியில் இருப்பவர்கள் 8 வருசமாக ஊரில் காதலித்து 16வருசமாக கலியானம் செய்து குடும்பம் நடத்தி தற்போது ஒத்துவரவில்லை என்று பிரிந்துவிட்டார்களாம்!!!!!!!!!!!! :D

  • கருத்துக்கள உறவுகள்

காதல் தேவையா? தேவை ........உண்மையான ..காதல் அழிவதில்லை காதல்ர்கள்பிரியலாம். எல்லோருக்கும் காதல் வரும் . காதல்வராதவர் மனிதரே ( சாதாரண ) அல்ல .ஒரு தலைக் காதல் என்றாலும் வரும். நிறை வருவது அவரவர் முயற்சி துணிவை பொறுத்தது. இக்கால காதல் பணம் பொருள் பதவி பார்த்துவருவது உண்மைக் காதல் மிகச்சில. இக்காலத்திலும் வருகிறது அந்தக் காலத்திலும் வந்தது..........காதல் மனித னின் கண்ணியமான் உணர்வு . விஞ்ஞான வளர்ச்சியை போல் அது திசைமாறி போகிறது, தற்காலத்தில் ........

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் கண்ணதாசனிடம் எது சுகம் என்று கேட்கப்பட்டபோது

' பழகிய காதல் எண்ணி பஞ்சணையில் படுத்திருந்து அழுவதே சுகம் என்பேன் அறிந்தவர் அறிவர்" என்று கவிதை படித்தாராம்.

காதலர் தினம் வருகிறது எல்லோரும் காதலைப்பற்றி கலகலப்பாக எழுதி இந்தத் திரியை உண்டு இல்லை என்று பண்ண வாழ்த்துக்கள்.

நன்றாகப் பழகிய பின் காதலித்தால் அவர்களுக்குள் புரிந்துணர்வு ஏற்படும்.அவனது பலம்,பலவீனம் அவளுக்கும்,அவளது பலம்,பலவீனம் அவனுக்கும் தெரிய வரும் போது இருவரும் இல் வாழ்க்கையில் இணையும் போது பிரச்சனைகள் ஏற்படாது என நினைக்கிறேன்

இப்படி பழகி கட்டினவையும் கலியாணத்திற்கு பிறகு பிரிந்து போயிட்டினம் அதுவும் புலத்தில்தான்

காதலிச்சு ஜாலியாக இருக்க மட்டும் சுகமாக இருக்கும்

கலியாணம் கட்டி பிரச்சனை என்று வரும் பொழுது ஏன்டா காதலிச்சம் என்று இருக்கும்

காதல் இல்லாமல் உலகம் இயங்கும்

காமம் இல்லாமல் உலகம் இயங்காது :D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

காதல் இல்லாமல் உலகம் இயங்கும்

காமம் இல்லாமல் உலகம் இயங்காது :D:D:D

இவை இரண்டும் இன்றி உலகம் இயங்கும்.. மனிதர்கள் தான் இயங்க முடியாது.

பூமியும்.. சூரியனும் என்ன கட்டிப்பிடிச்சு கொஞ்சிக்கிட்டா இருக்குதுகள். காதலிலும் காமத்திலும் உலகத்தை இயக்க..!

மனிதனுக்குத்தான் பொழுதுபோக்க.. இனத்தை குட்டி போட்டு பெருக்க உதுகள் தேவை..! :lol::D:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பழகி கட்டினவையும் கலியாணத்திற்கு பிறகு பிரிந்து போயிட்டினம் அதுவும் புலத்தில்தான்

காதலிச்சு ஜாலியாக இருக்க மட்டும் சுகமாக இருக்கும்

கலியாணம் கட்டி பிரச்சனை என்று வரும் பொழுது ஏன்டா காதலிச்சம் என்று இருக்கும்

காதல் இல்லாமல் உலகம் இயங்கும்

காமம் இல்லாமல் உலகம் இயங்காது :D:D:D

நீங்கள் சொல்வது சரி தான் ஜில் காதலிக்கும் போது இருவரிடம் இருக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை,புரிந்துணர்வு,அன்பு போன்றவை அவர்கள் திருமணம் செய்ததும் அவர்களிடம் அது காணப்படுவதில்லை...அது ஏன் எனத் தான் புரியவில்லை?....காதலிக்கும் போது நீ இல்லாமல் நான் இருக்க மாட்டேன் என சொல்வார்கள் இதுவே கல்யாணத்தின் பின் எப்படா கொஞ்சம் நேரம் இருக்கும் தனிமையைக் கழிக்க என்பார்கள்...தப்பு செய்துட்டமோ என யோசிப்பார்கள்...ஒரு வைராக்கியத்தில் அந்த வயதில் வரும் ஈர்ப்பில் காதலித்து கல்யாணம் செய்துட்டோம் ஆனால் இப்ப கஸ்டப்படுறோம் என சொல்வார்கள்...ஆனால் இதே நேரத்தில் இருவருமே மற்றவர்களிடத்து சம அளவாய் விட்டுக் கொடுத்தால்,புரிந்து கொண்டு இருந்தால்,அன்பு செலுத்தி இருந்தால் அந்த காதல் திருமணத்தின் பின்பும் வெற்றி பெறும் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.