Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காதலர் தினம் எப்படி உருவானது?

Featured Replies

காதலர் தினம் எப்படி உருவானது?

ரோஜாவை மட்டுமல்லாமல்

மனங்களைப் பரிமாறி விழிகளால் கதைபேசி...

நாமெல்லோரும் களித்திருக்கும் இந்நாள்...

இது உண்மையிலேயே ஒரு துயரந் தோய்ந்த நாள்.

வலண்டைன் என்ற பாதிரியார் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரைவதை செய்யப்பட்டு

தண்டிக்கப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட நாள் இது. அந்த நாள் கி.பி.270 வது

வருடம் - பெப்ரவரி 14ந் திகதி(14.270). இந்தத் தினம்தான் காதலர்தினம்.

இது ஏன் வந்தது? எப்படித் தொடங்கியது? என்று தெரியுமா?

கொடுரமாகவும் கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி- 2 யின்

முட்டாள் தனமான கட்டளைகளால் அவனை விட்டு விலகிப் போயினர் அவனது இராணுவ

வீரர்கள். புதிய இராணுவ வீரர்களை அவனால் சேர்க்க முடியவில்லை. யாரும் முன்

வந்து இராணுவத்தில் சேர மறுத்து விட்டார்கள். அவனது மந்திரி பரிவாரங்களும்

வீரர்களைச் சேர்ப்பதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகள் எதையும் அவனுக்குக்

கொடுக்கவில்லை. இதனால் எரிச்சல் உற்றான் கிளாடி.

துனது அந்தரங்க நாயகியுடன் சல்லாபமாக இருந்த நள்ளிரவொன்றில் எரிச்சல் உற்ற மறை கழன்ற

ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி-2 இன் மனதில் - திருமணமானவர்கள் தமது அன்பு

மனைவியை விட்டு வர மனமில்லாமலும், திருமணமாகாதவர்கள் தமது காதலியை விட்டு

வர மனமில்லாமலும் இருப்பதாலேயே இராணுவத்தில் சேரத் தயங்குகிறார்கள்.

இவர்களுக்கு எல்லாம் குடும்ப வாழ்க்கை என்ற ஒன்று இல்லாத பட்சத்தில் இவர்கள் மனம்

வெறுத்து இராணுவத்தில் சேருவார்கள். போரிலும் மூர்க்கத் தனமாய்

போரிடுவார்கள். வெற்றி எழுதில் கிட்டும். என்றதொரு முட்டாள் தனமான எண்ணம்

தோன்றியது.

உடனேயே நள்ளிரவு என்றும் பாராமல் தன் அந்தரங்க அமைச்சரை அழைத்து "ரோமாபுரி நாட்டில் இனி யாருமே திருமணம் செய்யக் கூடாது.

ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்துச் செய்யப் படவேண்டும்.

இவ் அரச கட்டளையை மீறுபவர்கள் யாராயினும் கைது செய்யப் பட்டு இருட்டுச்

சிறையில் அடைக்கப் படுவார்கள். பின்னர் அறிவிக்கப் படும் ஒரு நாளில் பொது

இடத்தில் வைத்து கல்லால் அடித்து தலை துண்டிக்கப் பட்டுக் கொல்லப்

படுவார்கள்." என்ற அறிவிப்பை மக்களுக்குச் சொல்லும் படி பணித்தான். அரசனை

மீற வழி தெரியாத அமைச்சர் அதை அறிவித்தார்.

இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் அதிர்ந்தார்கள். இருமனங்கள் இணைவதை அரசன் அறுத்தெறியத்

துணிந்த போது திருமணங்கள் கனவாகிப் போன சோகத்தில் ரோமாபுரி சோகக்

கண்ணீரில் மிதந்தது.

அரசனின் இந்த முடிவு அநியாயம் என்று சொல்லிக்

கொதித்தெழுந்த கிறிஸ்தவ பாதிரியார் வலண்டைன் அரச கட்டளையை மீறி இரகசியத்

திருமணங்களைச் செய்து வைத்தார். இந்தச் செய்தி அரசனுக்கு எட்டி விட

வாலண்டைன் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் பட்டு மரணதண்டனை

விதிக்கப் பட்டார்.

அவர் சிறை வைக்கப் பட்டிருந்த காலத்தில் சிறைக்காவல் தலைவனின்

கண் தெரியாத மகளான அஸ்டோரியசுக்கும் பாதிரியார் வாலண்டைனுக்கும் இடையில் காதல்

என்னும் அன்பு பூத்தது. அஸ்டோரியஸ் பாதிரியாரை சிறையிலிருந்து மீட்க

முயன்றாள். இதையறிந்த அரசன் அஸ்டோரியசை வீட்டுச் சிறையில் வைத்தான்.

கண்கள் கிடைத்து விட்டது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸ்

கனவுகள் சிதைந்ததில் கலங்கினாள்.

ஆனால் வலண்டைனுக்கான மரணதண்டனையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. அஸ்டோரியசுக்கு ஒரு காகித

அட்டையை வரைந்து விட்டு தண்டனையை ஏற்க அவன் தயாரானான்.

வலண்டைன் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட

அந்தநேரத்தில் அந்தனை கட்டுக் காவல்களையும் மீறி வலண்டைனிடமிருந்து வந்த

அந்த அட்டையின் வரிகளை தோழி வாசிக்க அஸ்டோரியசின் கண்களிலிருந்து

கண்ணீர்ப் பூக்கள் சொரிந்தன.

அந்தக் அட்டையிலிருந்த கவிதை வரிகள்

விழி இருந்தும்

வழி இல்லாமல் - மன்னன்

பழி தாங்கிப் போகிறேன்.

விழி இழந்து - பார்க்க

வழி இழந்து, நீ மன

வலி தாங்காது கதறும்

ஒலி கேட்டும், உனை மீட்க

வழி தெரியாமல் மக்களுக்காக

பலியாடாகப் போகிறேன் - நீ

ஒளியாய் வாழு! பிறருக்கு

வழியாய் இரு!! சந்தோஷ

ஒளி உன் கண்களில்

மின்னும்!!

- உன்னுடைய வலண்டைனிடமிருந்து! -

அன்றிலிருந்து இன்று வரை நேசிப்பாளர்களிடையே பரிமாறப் படும் வைரவரிகள் இவை. இதுவே முதல் வலண்டைன் மடல்.

அரச கட்டளையை மீறி மனங்களை இணைய வைத்துத் தன்னையே பலி கொடுத்த பாதிரியார் ரோம்

மக்களின் மனங்களில் அழியாத இடத்தைப் பெற்றிருந்தார். ரோமானிய தேவாலயங்கள்

ஐரோப்பியக் கட்டுப் பாட்டுக்குள் வந்த பிறகு இந்தத் தினம்

பாகான்(மதமற்றவன்) தினம் எனக் கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய 200

வருடங்களுக்குப் பிறகு போப்பாண்டவர் ஒருவரால் வலண்டைன புனிதராக

அறிவிக்கப்பட்டு வலண்டைன் தினம் (ST. Valentins Day) உலகம் முழுவதும்

கொண்டாடத் தலைப்பட்டது.

இதுவே காதலர்தினம்.

ஒருவர் இன்னொருவரால் காதலிக்கப் படும் போது அவர் படிப்பிலோ அல்லது கலையிலோ ஏன்

போராட்டத்திலான தீர்க்கமான ஈடுபாட்டிலோ இன்னும் ஒரு படி மேலே சிறந்து

விளங்குகிறார். என்பது இன்றைய ஆராய்ச்சியாளர்களின் கண்டு பிடிப்பு.

இது அன்றைக்கே தெரிந்திருந்தால் அன்றைய ரோமானியச் சக்கரவர்த்தி வலண்டைனுக்கு இப்படியொரு கொடுமையைச் செய்திருக்க மாட்டார்.

நன்றி: http://www.eegarai.net/t19685-topic

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ் இனி தங்களது இணைப்பிற்கு...

எம்மில் பலர் (உதட்டில்) முத்தம் கொடுக்கத்தான் காதலர் தினம் என நினைத்துக்கொண்டிருக்கின்றோம். :(

ஒருவர் இன்னொருவரால் காதலிக்கப் படும் போது அவர் படிப்பிலோ அல்லது கலையிலோ ஏன்

போராட்டத்திலான தீர்க்கமான ஈடுபாட்டிலோ இன்னும் ஒரு படி மேலே சிறந்து

விளங்குகிறார். என்பது இன்றைய ஆராய்ச்சியாளர்களின் கண்டு பிடிப்பு.

இது உண்மையாக இருக்கலாம் :D .... நன்றி உங்கள் இணைப்பிற்கு தமிழினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உண்மையாக இருக்கலாம் :D .... நன்றி உங்கள் இணைப்பிற்கு தமிழினி

ஓ..அதனாலை தான் சுஜி இப்ப கவிதையிலை கலக்குறிங்களோ???? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் காதலர் தினம் என்பது ஒரு சோக நிகழ்வின் அடையாளம். ஒரு மனிதனின் இறப்பின் அடையாளம். அந்த நாளில.. குடியும் கும்மாளமும் கூத்துமா இருக்கும்.. மனிதப் பிறவிகளை என்னென்பது..???! :unsure::(

இன்று முழு உலகமும் பொருளாதாரத்தை மையம் கொண்டே நடக்கின்றது. அது மேற்கத்தேய கலாச்சாரத்தில் கூடுதலாக உள்ளது. மின்வலை, சமூக வலைகள், உலகமயமாதல் - இவைகள் மூலம் இன்று முழு உலகும் தமது கலாச்சார நிகழ்வுகளை வியாபாரமாக்கி விட்டுள்ளன. நாளை கீழைத்தேய கலாச்சாரமும் இதையே செய்யும்.

எமக்கு முன்னால் இரண்டு தெரிவுகள் உள்ளன. ஒன்று இந்த மாற்றங்களுக்கு எதிராக சமயோசிதமாக போராடுதல். அடுத்த தெரிவு அதை நாமும் அணைத்து அதில் பொருளாதார இலாபம் தேடல்.

-- 1970களில் ஆரம்பித்த பூ வளர்ப்பு வியாபாரம் இன்று 4-5 பில்லியன்களை நெதர்லாந்துக்கு ஈட்டி கொடுக்கின்றது.

-- இனிப்புக்களை செய்யும் நேசிள் (Nestle) 10 பில்லியன்களுக்கு மேலே இலாபம் ஈட்டுகின்றது.

-- வாழ்த்துமடல்கள் உலகில் பல பில்லியன்களை ஈட்டித்தரும் துறை.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

பல நூற்றாண்டுகளாக வருடத்தில்......

மார்கழியில் நத்தார் தினம், தையில் புதுவருடம், சித்திரையில் ஈஸ்டர் பெருநாள் போன்ற தினங்களிலேயே.... சர்வதேச அளவில் வியாபரம் நன்றாக நடக்கும். (தைப்பொங்கல், தீபாவளி, வெசாக் தினம், ரமழான் போன்ற தினங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் நடப்பதால்..... சேர்க்கப் படவில்லை.)

சர்வதேச வியாபரிகள், டல்லடிக்கும் மாதங்களுக்காக மாசி 14ம் திகதி காதலர் தினத்தையும், ஐப்பசி 30 திகதி ஹலோவீன் தினத்தையும் கொண்டுவந்து செருகி பிரபல்யப் படுத்தி விட்டார்கள். நாம் அறிய, ஹலோவீன் தினம் 20 வருடங்களுக்கு ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகளில் என்ன வென்றே... தெரியாது. இன்று அதுகும் பலராலும் கொண்டாடப் படுகின்றது. போற போக்கிலை ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு காரணத்தை கண்டு பிடித்து.... தங்கள் வியாபரம் சோர்ந்து போகாமல் இருக்க... வேறு கொண்டாட்டங்களும் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

.

காதலர் தினம்: களை கட்டிய வியாபாரம்-ரூ.12,000 கோடிக்கு வர்த்தகம்!

டெல்லி: காதலர் தினத்தையொட்டிய ஒரு வாரத்தில் நாடு முழுவதும் ரூ.12,000 கோடி அளவுக்கு சிறப்பு வர்த்தகம் நடந்துள்ளதாக இந்திய வர்த்தக சபை ஆய்வு தெரிவித்துள்ளது.

நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் காதலர் தினம் கலைகட்டியது. அவரவர் வசதிக்குத் தகுந்தார்போல் பரிசுப் பொருட்கள் கொடுத்து மகிழ்ந்தனர்.

காதலர் தினத்தால் வாழ்த்து அட்டை, ரோஜா, பரிசுப் பொருட்கள், இனிப்புகள் வியாபாரம் அமோகமாக நடந்தது.

காதலர் தினத்திற்காக காதலர்கள் தங்கள் மனம் கவர்ந்தவர்களை மகிழ்விக்க எவ்வளவு செலவழிக்கிறார்கள் என்று இந்திய வர்த்தக சபை ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 10 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டது.

காதலர் வாரம் பிப்ரவரி மாதம் 7ம் தேதி துவங்கி 14ம் தேதி முடிவடைகிறது. இதில் ஒவ்வொரு நாளும் கீழ்கண்ட வகையில் கொண்டாடப்படுகிறது.

பிப்ரவரி 7- ரோஜா தினம்

8 - காதல் வெளிப்படுத்தும் தினம்

9 - சாக்கலேட் தினம்

10- டெட்டி தினம்

11- வாக்குறுதி தினம்

12 - முத்த தினம்

13 - தழுவும் தினம்

14 - காதலர் தினம்

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு காதலர் வாரத்தில் காதலர்கள் 120 சதவீதம் அதிகமாக செலவு செய்துள்ளார்கள் என்று இந்திய வர்த்தக சபை செகரடரி ஜெனரல் டி.எஸ்.ராவத் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் சீரடைந்துள்ளதாலும், தனி நபர் செலவு அதிகரித்திருப்பதாலும் இளைஞர்கள் இந்த ஆண்டு அதிகம் செலவு செய்வர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

விற்பனையில் வாழ்த்து அட்டைகள் முதலிடத்தை பிடித்துள்ளன. அடுத்தடுத்த இடங்களை பூக்கள், சாக்கலேட், பொம்மைகள், விலை உயர்ந்த வைர மோதிரம், கைவளை, நெக்லஸ், ரெடிமேட் ஆடைகள், செல்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்கள் பிடித்துள்ளன.

இது குறித்து ஆர்ச்சீஸ் லிட்-ன் கார்பரேட் தொடர்பு தலைவர் யோஹான் ஆரியா ஐஏஎன்எஸ்-க்கு தெரிவித்ததாவது,

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை ஆர்ச்சீஸ் வருமானம் 16 சதவீதம் அதிகரிக்கும். மேலும், விற்பனை வழக்கத்தைவிட 10 மடங்கு அதிகமாகும்.

காதலர் தினத்திற்கென்று பிரத்யேகமாக 171 புதிய வாழ்த்து அட்டைகள் எங்களிடம் உள்ளது. அவை ரூ. 50 முதல் 699 வரை விற்கப்படுகின்றன. இது தவிர நாங்கள் புதிதாக 220 ஸ்பெஷல் பரிசுப்பொருட்கள் அறிமுகப்படுத்திகிறோம். அவை இதய வடிவ மிருதுவான பொம்மைகள், போட்டோ பிரேம், கோப்பைகள், புத்தகங்கள், பைகள், குடுவைகள், வாசனை மெழுதுவர்த்திகள், உலோக மெழுவர்த்தி ஸ்டான்ட்கள், கிரிஸ்டல் ஆகியவை ஆகும்.

இதையெல்லாம் இளைஞர்கள் தவிர 40 முதல் 50 வயது வரை உள்ளவர்களும் வாங்குகின்றனர் என்றார்.

இந்த ஆய்வில் வேலை பார்ப்போர், கல்லூரி மாணவ-மாணவியர் உள்ளிட்ட ஆயரத்து 200 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அவரவர் வருமானத்திற்கு ஏற்ப காதலர் தினக் கொண்டாட்டத்திற்காக ரூ. 5,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது.

நன்றி தற்ஸ் தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ வீரர்கள் கிளாடி 2 போட்டுத் தள்ளியிருந்தால் எனக்கும் சங்கடம் ஏற்பட்டிருக்காது.

நானும் ஐயாயிரத்துக்கு நெக்லஸ் குடுக்க நினைத்து பின் ஐந்துக்கு ஒரு சொக்கிலேட்டுடன் சமாளிச்சாச்சு ! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.