Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் தங்கியிருந்த சில நாட்கள்

Featured Replies

ஊருக்கு சென்று திரும்பி வரும்போது கொழும்பில் சில நாட்கள் தான் தங்கியிருந்தேன் .அந்த சில நாட்களில் உறவினர்களின் அழைப்பை ஏற்றுகொள்ளுவதில் அதிகமாக கழிந்தது. அதை மீறி இருக்கும் நேரங்களில் இவர் இவரை சந்திக்க வேணும் என்று நினைத்து கொண்டாலும். ,அதற்கு இடம் கொடுக்காமால் என்னை விரைவில் புகலிடத்துக்கு துரத்துவதில் தான் நேரமும் கண்ணாயிருந்தது. கொழும்பு எனக்கு புதிதான ஊரில்லை .கோழி மேய்த்தாலும் கொர்ணமேந்து உத்தியாகம் பார்க்கவேணும் என்று அந்த காலத்து நியதியின் காரணமாக எனது தகப்பானர் நான் பிறக்கும் முன்பிருந்தே பல காலமாக அங்கு ஜீவனம் நடத்தியிருந்தார்.அதனால் நான் பிறந்த பின்னும் சிறுவயது காலங்கள் அங்கு வசிக்க நேர்ந்து இருக்கிறது

73724153038066715814639.jpg

மேலை உள்ள புகைப்படம் எனது இரண்டு வயதில் கொழும்பு முகத்துவார பகுதியில் எடுக்கப்பட்டது

கொழும்பு என்ற ஊருடன் பிறந்த காலத்திலிருந்தே என்னுடன் ஒரு தொடர்பு இருக்கு என்று நினைத்து கொண்டாலும் அம்மாவின் வயிற்றிலிருந்த காலத்திலிருந்தே ஒரு பயப்பீதியுடன் தான் தொடர்பு தொடங்கி இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது,எங்கள் வீட்டின் சுவரில் பல காலமாக ஒரு புகைப்படம் தொங்கி கொண்டிருந்தது .அந்த புகைப்படத்தில் தூரத்தில் நடுக்கடலில் ஒரு பெரிய கப்பல் போய்க்கொண்டிருக்கும்

அந்த புகைப்பட கப்பலை பற்றி கதை கதையாக சொல்லுவதால் சிறு வயதில் பள்ளிகூடத்தில் இலங்கையின் தலை நகரம் கொழும்பு என்று சொல்லி தரும்போதெல்லாம் கூட ஒரு பயபீதி என்னை வந்து கவ்வும். அம்மா அந்த புகைப்படத்தின் கதையை ஒரு முறை அல்ல. பல முறை எனது வயதின் பல படி முறை கால காட்டத்தில் ஏனோ தெரியாது எனக்கு அடிக்கடி சொல்லி கொண்டிருந்திருக்கிறா.அந்த அளவுக்கு அந்த சம்பவம் அவவை அவ்வளவுத்துக்கு பாதித்து இருக்கவேணும் .அந்த சம்பவம் தான் இலங்கையின் நடந்த 1958இல் நடந்த இனக்கலவரம் . அந்த இனக்கலவரம் காரணமாக அடி உதையுடன் மற்றும் மரண பயத்துடன் இருந்த தமிழர்களை கொழும்பிலிருந்து பருத்தித்துறை வரையும் ஏற்றி வந்த கப்பலாம் அது.

.அந்த புகைப்படத்தை பப்பாவுடன் கொழும்பில் அவருடன் வேலையும் செய்யும் சக சிங்கள நண்பர்கள் எடுத்து கொடுத்திருந்தார்கள் .அதில் எனது பெற்றோர் மட்டும் பிரயாண செய்யவில்லை நானும் பிரயாண்ம் செய்து இருந்தேன் அம்மாவின் வயிற்றில் இரண்டு மாத கரு உருவில்.

சரஸ்வதி மண்டபத்தில் சாப்பாட்டுக்கு கை ஏந்தி நின்றது ,கப்பலுக்கு கூட்டி செல்லும் முன்பு ஒரு பிக்கு வேடத்தில் வந்தவர் தங்கள் மீது கைகுண்டு எறிய முயற்சி செய்ய முற்ப்பட்ட போது பிடிப்பட்டது, களுத்துறையில் கோயில் ஜயரை சிவலிங்கத்துடன் கட்டிப்போட்டு எரித்தது

போன்ற கதைகளை அம்மா சொல்லி இருந்தா ..அதனால் வவுனியா தாண்டி ரயில் செல்லும் பொழுது என்னை அறியாமால் இனம் தெரியாத உணர்வு கவ்வி கொள்ளும் .எனக்கு மட்டுமல்ல மற்றும் பல தமிழர்களை அப்பொழுது அவதானித்து இருக்கிறேன் வவுனியா வரை அட்டாகாசம் பண்ணி கதைத்து தங்களுக்குள் குதர்க்கம் செய்து வருபவர்கள் வவுனியா தாண்ட தாங்களாகவே பெட்டி பாம்பாக அடங்கிவிடுவதை.

எனக்கு 8, 9,வயது காலகட்டத்தில் அம்மா தனது முயற்சி மூலம் தனியார் ஆசிரியர் மூலம் சிங்களம் படிப்பத்திருந்தா ..அதனால் இன்றும் எழுதுவேன் வாசிப்பேன் ஆனால் அதன் கருத்து விளங்காது கதைக்க மாட்டேன்.இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் எனது பப்பா தனது 17 வயதிலிருந்து சிங்கள பிரதேசங்களில் வாழ்ந்து வந்தவர் அதிகமாக கொழும்பில் ..சிங்களவர் மாதிரியே அட்ச சுத்தத்துடன் சிங்களம் பேசுவார் .

77 இனக்கலவரத்தில் புத்தம் சரணம் கச்சாமி என்று ஏதோ அவர்களின் மத சம்பந்தமான சுலோகம் சொல்லத் தெரியாமால் தமிழராக அடையாளம் காணப்பட்டு தாக்கப்பட்டதன் காரணமாக யாழ்ப்பாணம் மாற்றாலாகி வர நேரிட்டது .இவ்வளவு சிங்களவர் மாதிரி சிங்களம் கதைக்கும் பப்பா சிங்களம் வாசிக்க மாட்டார் ..கொழும்பில் சில வேளை அரச பஸ்களுக்கும் வருத்தம் ஏற்படுவதுண்டு தனி சிங்களத்தில் போர்ட் போட்டுகொண்டு வரும் வருத்தம். அப்பொழுது பப்பா என்னைத்தான் வாசித்து என்ன எழுதி இருக்கு என்று வாசித்து சொல்லு என்று கேட்பார் அந்த நேரத்தில் ஒரு பச்சை தமிழனாக மாறி முழிப்பதை கண்டு என்னில் ஒரு பெருமிதம் முகத்தில் தோன்றி மறையும்.

இப்படி பிறந்த கால கட்டத்தில் இருந்து கொழும்போடு ஒரு தொடர்பு இருந்தாலும் இப்ப எனக்கு கொழும்பில் வலது இடது தெரியாமால் எனது நிலமை. இடம் எல்லாம் ஒரு புதிய இடமாக இப்ப தெரிந்தது .. என்னுடன் படித்தவர்கள் அநேகமானவர் புலம் பெயர்ந்து விட்டார்கள் அப்படி ஒரிருவர் தான் கொழும்பில் இப்பவும் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருந்தேன் . இன்றும் டே என்றும் மச்சான் என்றும் போட்டு கதைக்கூடிய ஒருவன் கொழும்பில் இருக்கிறான் என்று அறிந்து அவனது டெலிபோன் நம்பர் முன்பே எடுத்து வைத்திருந்தேன் .அவனுடைய கந்தோருக்கு போன் பண்ணினேன்.

30 வருடம் காலத்தை என்ன என்னவெல்லோம் செய்திருக்கும் என்ற அச்சத்தில் நீங்கள் என்று தொடங்கி பவ்வியமாக அவனுடன் பேச்சை ஆரம்பித்தேன் ..எனது பவ்வியமான பேச்சை கண்டு வேறு ஆரோ என அடையாளம் கண்டு குழம்பி . நீ தானா நீ தானா நீ என்று பலமுறை கேட்டுதான் நான் என்று பின்பு உறுதி செய்தான் கொழும்பில் எங்கை இருக்கிறாய்? எங்கை சந்திக்காலம்? என்று ..வினவும் போது...ஆச்சரியம் காத்திருந்தது. அவனது வீட்டுக்கு அடுத்த வீட்டில் தான் தங்கியிருந்தேன் .அவன் சொன்னான் தான் எழுதும் கதைகளில் வரும் சம்பவமாக மாதிரி சர்ப்பரைஸ் ஆக இருக்கிறதே என்று . அவன் படிக்கும் காலங்களிலே 16 வயதிலேயே தனது சிறுகதையை இலங்கை பத்திரிகைகளில் எழுத தொடங்கியவன்.இப்பொழுது இலங்கையில் தமிழ் சிறுகதை உலகில் மிகவும் அறியப்பட்ட ஒரு எழுத்தாளனாக இருக்கிறான் .அவனுடன் கதைக்க நீண்ட நேரம் ஆசை இருந்தது .ஆனால் அவனுக்கும் நேரம் இடம் கொடுக்கவில்லை எனக்கும் நேரம் இடம் கொடுக்கவில்லை

பத்திரிகையை புரட்டிபார்க்கும் போது ஒரு செய்தி பார்க்க கிடைத்தது .அந்த செய்தி கூறியது வளரி பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழா இன்று கொழும்பு தமிழ்சங்க மண்டபத்தில் இன்ன நேரம் நடை பெற இருக்கிறது என்று .அதில் பேச்சளார்களாக குறிப்பிட்ட பெயர்கள் வலை பதிவுலகத்தில் பரிச்சயமான பெயர்களாக இருப்பது மட்டுமல்ல எனக்கும் பரிச்சயமான பெயர்களாக இருந்தது தான். அவர்கள் எனது வலை பதிவுகளுக்கு எப்போதாவது ஓர் இருமுறை பின்னூட்டம் போட்ட பந்த தொடர்பும் இருந்தது.வலைபதிவு சந்திப்பு அது இது என்று இப்பொழுது அமர்களம் போடும் இந்த கால கட்டத்தில். இப்படியொரு நிகழ்ச்சி நான் கொழும்பில் நிற்கும் நாட்களில் நடப்பது சந்தோசத்தை தந்தது. தப்பவிடகூடாது என்று நினைத்து தீர்மானித்து கொண்டிருக்கும் பொழுது .மனைவியின் உறவினரின் முக்கியமான வைபவ நிகழ்ச்சியும் அதே நேரம் நடைபெற இருந்தது .செய்வது அறியாமால் தவித்தேன் .பின் எனது முடிவே எனது எண்ணமே நிறைவேறியது ..மனைவியையும் மகளையும் அவர்களின் வைபவத்துக்கு அனுப்பி விட்டு கொழும்பு தமிழ்சங்கம் நோக்கி புறப்பட்டேன்.

மண்டபத்தை அணுகியதும் மண்டபத்தில் ஓரிருவர் இருந்தனர் .குறித்த நேரத்தில் ஆரம்பமாகுமா என சந்தேகமாக இருந்தது ,ஏனெனில் ஒரு நிபந்தனையில் தான் என்னை அழைத்து வந்தார் எனது உறவினர் குறித்த நேரத்தில் திரும்பும்படி .அவருக்கோ இப்படியான நிகழ்வுகள் கற்பூரவாசனை மாதிரி.அப்படி நினைத்து கொண்டு இருக்கும் பொழுது முன் வரிசையில் ஜந்து ஆறுபேர் இருந்து பேசி கொண்டு இருந்தார்கள் .அதிலிருந்த ஒரு பச்சை சட்டைக்காரரை நான் அடையாளம் கண்டு கொண்டேன் .

அவரது வலைபதிவில் புரைபைல் பக்கத்தில் போட்டு வைத்த புகைப்படம் மூலமாக. நான் இவ்வளவு காலமும் பரந்த நல்ல தெருவில் இலகுவாக எந்த தொந்தரவு இல்லாமால் சொகுசுகாக பயணம் செய்யும் மயிலை காளை வண்டி மாதிரி எனது முகமூடியை வைத்து கொண்டு இலகுவாக இந்த வலைபதிவு உலகில் உலாவி வந்தேன் .இந்த முகமூடி இருப்பதால் 17 வயது இளைஞனாகவும் 70 வயது முதியவராகவும் சில வேளை என்னால் அவதாரம் எடுக்க முடிகிறது என்னால். .இந்த சுதந்திரத்தை இழந்து போகக் கூடாது என்று எனது மனதில் உறுதி எடுத்து கொண்டேன். கடைசிவரையும் எனது முகமூடியை கழட்டாமால் நான் யார் என்று அடையாளம் காட்டாமால் நடப்பதை மூலையில் பார்த்துவிட்டு திரும்பி விடுவது என்று.

எனக்கே தெரியாது என்ன நடந்தது என்று தெரியாது .எனது உறுதி எல்லாம் சுக்கு நூறாக அந்த கணத்தில் சிதறியது.போய் முன் வரிசையில் இருந்த அந்த பச்சை சட்டை வலை பதிவரிடம் நீங்களா அந்த பெயர் உடையவர் என்று கேட்டு எனது பேச்சை தொடங்கினேன். அவரும் என்னருகே வந்து நீங்கள் என்று விழிப்புடன் என்னுடன் சம்பாசனைக்கு தயாரானார்.என்னை எப்படி அறிமுகபடுத்துவது என்ற தயக்கம் என்னுள் எழுந்தது .நான் ஒரு வலபதிவர் என்று ஆரம்பிக்கலாமா என்று யோசித்தேன் .கூகிள் ஈ-மெயில் வைத்திருப்பர்க்ள எல்லாம் வலை பதிவர் ஆகலாம் .அதை ஒரு அடையாளமாக வைத்து என்னை அறிமுகபடுத்தலாமா என்று நினைத்தாலும் ஒருவாறு சுதாகரித்து கொண்டு சொன்னேன்,

. நானும் ஒரு வலைபதிவர் எனது பெயர் சின்னக்குட்டி தெரியுமா என்று? கொஞ்ச நேரம் மெளனம் காத்த அந்த பச்சை சட்டை கார்ர் அந்த வீடியோ பதிவு போடுவரா ?...ஓம் என்று கூறினேன் பிறகு சிறிது நேரம் பேசினோம். இங்கு இருப்பீங்கள் தானே பிறகு சந்திப்பம் என்று கூறி விட்டு முன் வரிசையில் இருந்த பேராசிரியர்கள் மற்றும் பெரும் தலைகளுடன் ஜக்கியமாகி விட்டார்

நானும் மூன்றாவது நாலாவது மூலையில் தனித்து இருந்தேன். இப்ப மண்டபத்தில் அரைவாசி நிரம்பி விட்டது , அந்த பச்சை சட்டைக்காரர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை என்னருகில் அமர்ந்து மீண்டும் பேச்சை தொடங்கினார் என்ன இப்ப அதிகம் எழுதிறதில்லை முன்பு அதிகம் எழுதனீங்கள் தானே என்று. .அப்படி கதைத்து கொண்டு இருக்கும் பொழுது ஒரு சிவப்பு சட்டைக்கார்ர் வந்து அந்த பச்சை சட்டைக்கார்ருடன் வந்து ஜ்க்கியமானார்.அந்த சிவப்பு சட்டைக்காரரரையும் எனக்கு வலை பதிவு மூலம் அறிமுகம். அத்துடன் அவர் உண்மையிலேயே அவர் ஒரு சிவப்பு சட்டைக்காரர். அவர் வலைபதிவுகளை நான் வாசிப்பது வழக்கம்.இவர் தான் சின்னக்குட்டி என்று பச்சை சட்டைக்கார்ர் சிவப்பு சட்டைக்காரரிடம் அறிமுக படுத்த . சிறிது நேரம் யோசித்த சிவப்பு சட்டைக்கார்ர் அந்த வீடியோ போடுறவரா? என்று கேள்வி குறியுடன் என்னை கூர்ந்து பார்த்தார் . உங்களுடைய புரைபைல் படத்துக்கு முழு எதிர் மாறாக இருக்கிறீர்கள் என்று,தொடர்ந்து கூறினார். எனக்கு என்னவோ இந்த சிவப்பு சட்டைக்காரரும் என்னை வீடியோ பதிவராக என்னை குறுக்கி கொண்டது எனக்கு என்னமோ போல் இருந்தது .

வீடியோவை போடும் பதிவராக வலை பதிவு உலகத்தில் என்னை பலராலும் அறியப்பட்டாலும் . நானும் எழுதுவேன் எழுதி இருக்கிறேன் என்று என்னுள் நான் நினைப்பதால் நானே எனக்கு பின்னால் நானும் ஒரு எழுத்தாளன் என்ற சின்ன ஒளிவட்டத்தை எனக்குள் இவ்வளவு காலமும் உருவாக்கி இருந்தேன் .அது எல்லாம் தவிடு பொடியாக போகும் பொழுது எனக்கே ஒரு மாதிரி இருந்தது <a href="http://mithuvin.blogspot.com">எனது சிறுகதைகள் அடங்கிய வலைபதிவை பார்க்க இங்கே அழுத்தவும்</a>

முன் வரிசையில் பேராசிரியர்களுடன் பேசி கொண்டு இருந்த இன்னொருவரும் அந்நேரத்தில் நான் சின்னக்குட்டி என்று அறிந்து என்னுடன் அளவிளாவினார் .தானும் எனது வலை பதிவுகளை பார்ப்பாதாக கூறினார் எனக்கு சந்தோசமாக இருந்தது .ஏனெனில் அவரும் இன்றைய விழாவின் முன்னனி பேச்சாளரில் ஒருவர் .

http://www.youtube.com/watch?v=6xn9Lyucg5c?fs=1&amp;hl=en_GB"

பச்சை சட்டைக்கார்ரும் சிவப்பு சட்டைக்காரும் கூட இன்றைய விழாவின் முன்னனி பேச்சாளர்கள் தான் என்பதால் மேடைக்கு சென்று விட்டார்கள் ..அவர்களது நிகழ்ச்சியை முழுமையாக வீடியாவாக கொண்டு வர எனது கமராவின் கொள்ளளவு இடம் கொடுக்கவில்லை முடிந்தவரை சில வீடியோ காட்சிகளை கமராவில் எடுத்தேன் .எனது உறவினரின் தொல்லை காரணமாக விழா முடிய முன்பே பாதியில் கிளம்பி விட்டேன்

எனது முகநூலில் உள்ள சில நண்பர்களை கொழும்பில் தங்கி இருக்கும் போது சந்திக்கும் ஆவல் இருந்தது.ஆனால் நேரம் இடம் கொடுக்கவில்லை ..அப்போது தான் எனது தவறை உணர்ந்தேன் ஊரில் நின்ற நாட்களில் சில நாட்களை கொழும்புக்கு ஒதுக்கி இருக்காலம் என்று. http://sinnakuddy.blogspot.com/2011/02/blog-post.html

Edited by sinnakuddy

தகவல் பகிர்வுக்கும் அழகான தமிழ் நடையோட்டத்திற்கும் நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதன் மூலம் தாங்கள் சொல்ல வந்த சேதி????!!!!

புரியவில்லை.

  • தொடங்கியவர்

வணக்கம் akootha பதிவு வாசித்து கருத்து சொன்னதுக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்

இதன் மூலம் தாங்கள் சொல்ல வந்த சேதி????!!!!

புரியவில்லை.

வணக்கம் யாழிவன் ..இதிலை சொல்ல சேதி இருக்கோ இல்லையோ அதை பற்றி நான் யோசிக்கவில்லை ....மற்றது நான் சேதி சொல்ற செய்தியாளனுமில்லை :lol: ..எனது புளக்கில் பலதும் பத்துமாப்போல எழுதும் ஒரு நாட்க்குறிப்பு போல ஒரு பிரயாணக்குறிப்பு தான் இது :) .. ..வாசிப்பவருக்கு அவர் அவருக்கேற்ற மாதிரிதான் இதில் புரிதல் ஏற்படாலாம் இல்லாது விடலாம் ...நன்றி உங்கள் கருத்துக்கு

இதன் மூலம் தாங்கள் சொல்ல வந்த சேதி????!!!!

புரியவில்லை.

நாட்டில் பஞ்சம் என்று அர்த்தம்.

  • தொடங்கியவர்

வணக்கம் யாழிவன் ..இதிலை சொல்ல சேதி இருக்கோ இல்லையோ அதை பற்றி நான் யோசிக்கவில்லை ....மற்றது நான் சேதி சொல்ற செய்தியாளனுமில்லை :lol: ..எனது புளக்கில் பலதும் பத்துமாப்போல எழுதும் ஒரு நாட்க்குறிப்பு போல ஒரு பிரயாணக்குறிப்பு தான் இது :) .. ..வாசிப்பவருக்கு

மேலே பாருங்கோ ஒரு அன்பரின் புரிதலை .. :lol:

நான் சொன்னது சரியாய் போச்சு எல்லே :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தாயகம் விட்டு சென்று இருபது, முப்பது வருடங்களுக்கு பின் போகையில் ஒப்பீட்டளவில் நிறைந்த

மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும். பிரமிப்பாக் இருக்கும்.அந்த நினைவலைகள் அனுபவித்தவர்களுக்கு தான் விளங்கும்.

அழகான் எழுத்து நடை . ஞாபகப் பகிர்வுக்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ சின்னக்குட்டியை எனக்குத் தெரியாது. அவ்வப்போது எழுதிய சிறுகதைகள் தான் எனக்கு சின்னக்குட்டியென்ற வலப்பதிவரைத் ஞாபகத்தில் இருக்கிறது. எப்போதுமல்ல இடையிடை புளொக்கைச் சுற்றும் போது உங்கள் வலைப்பூவையும் பார்ப்பேன். ஏதாவது புதிதாக எழுதியிருக்கிறீங்களா என்று. இதுவொரு பிரயாணக்குறிப்பென்று சாதாரணமாய் நீங்கள் சொன்னாலும் குறிப்புக்குள் எழுதப்பட்டுள்ள கதைகள் வெறும் பயணம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வயதில் எடுத்த படம் அழகு. அதைவிட பொட்டும் அழகு.

உங்கள் நினைவுகளை எம்முடன் பகிர்ந்ததில் எமக்கும் மகிழ்ச்சி.

  • தொடங்கியவர்

தாயகம் விட்டு சென்று இருபது, முப்பது வருடங்களுக்கு பின் போகையில் ஒப்பீட்டளவில் நிறைந்த

மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும். பிரமிப்பாக் இருக்கும்.அந்த நினைவலைகள் அனுபவித்தவர்களுக்கு தான் விளங்கும்.

அழகான் எழுத்து நடை . ஞாபகப் பகிர்வுக்கு நன்றி .

நன்றி நிலாமதி ..கருத்து கூறியதுக்கு நன்றி

வீடியோ சின்னக்குட்டியை எனக்குத் தெரியாது. அவ்வப்போது எழுதிய சிறுகதைகள் தான் எனக்கு சின்னக்குட்டியென்ற வலப்பதிவரைத் ஞாபகத்தில் இருக்கிறது. எப்போதுமல்ல இடையிடை புளொக்கைச் சுற்றும் போது உங்கள் வலைப்பூவையும் பார்ப்பேன். ஏதாவது புதிதாக எழுதியிருக்கிறீங்களா என்று.

சாந்தி ..எனது எழுத்து பற்றி சிலாகித்து கூறியதுக்கு நன்றி ..எழுத்து விசயத்தில் என்னை விட சீனியரான உங்களின் அங்கீகாரத்தை நன்றியுடன் ஏற்று கொள்ளுகிறேன்
  • தொடங்கியவர்

இரண்டு வயதில் எடுத்த படம் அழகு. அதைவிட பொட்டும் அழகு.

உங்கள் நினைவுகளை எம்முடன் பகிர்ந்ததில் எமக்கும் மகிழ்ச்சி.

கறுப்பி கருத்து கூறியதுக்கு நன்றிகள் ,,எல்லாமே குட்டியிலே அழகாகத்தான் இருக்கும் ..இந்த வசனம் என்னுடையதில்லை ,,இது இரவல்..இது ஜெயகாந்தன் ஏதோ ஒரு சிறுகதையில் கூறியது ..நாய் பூனை எல்லாம் குட்டியிலை வடிவாகத்தான் இருக்கும் :lol: :lol: :lol:

நல்ல பதிவு. முன்பும் உங்கள் ஆக்கங்களை யாழில் வாசித்திருக்கிறேன்.

'வீடியோ சின்னக்குட்டி' என்றவுடன் நானும் ஏதோ பதறி ஒடி உங்கட வலைப்பூவை பார்வையிட்டேன். :lol:

அப்படி ஒன்றையும் காணல்ல. :o

பிறகுதான் தெரிந்தது நீங்கள் யாழில் எழுதும் சின்னக்குட்டி என்று.

நன்றி thappli கருத்து கூறியதுக்கு இந்த வீடியோ வலைதளம் போய் பாருங்கள் http://sinnakuddy1.blogspot.com அதனால் வீடியோ சின்னக்குட்டி என்று சொல்லுகிறார்களோ என்னவோ :lol:

Edited by sinnakuddy

  • கருத்துக்கள உறவுகள்

சின்னக்குட்டியார், அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள். ஊரை விடக் கொழும்பில் நின்றிருக்கலாம் என்பதில் இருந்து ஊரில் நண்பர்கள் அருகிவிட்டார்கள் என்று தெரிகின்றது. கொழும்பு நண்பர்களுக்கு இன்ரலெக்ஸுவல் மாதிரி நாலு கதைகளை அவிட்டுவிட்டால் சுருண்டுவிட்டிருப்பார்கள் :D

  • தொடங்கியவர்

சின்னக்குட்டியார், அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

நன்றி கிருபன் ..கருத்து கூறியமைக்கு .. நண்பர்கள் தெரிந்தவர்கள் அருமையாகி விட்டார்கள் என்பது உண்மை தான் ....நீங்கள் இறுதி சொன்ன ஆலோசனையை செய்திருக்கிலாம் ..தவற விட்டுட்டேன் ...இனியொரு சந்தர்ப்பம் கிடைத்தால் பார்ப்பம் :D :D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலே பாருங்கோ ஒரு அன்பரின் புரிதலை .. :lol:

நான் சொன்னது சரியாய் போச்சு எல்லே :lol: :lol:

தங்களை நோகடிக்கும் எண்ணம் எனக்கு அறவே இல்லை.

மேலும் நான் எதிர் பார்த்தது ஏதோ?

வேறென்ன எழுத.

நன்றி

யாழிவன்.

  • கருத்துக்கள உறவுகள்

சின்னக்குட்டியர் லங்காராணி கப்பலின் படத்தை பார்த்து கதை கேட்டிருக்கிறீங்கள் போலை அதை கதையாக எழுதிய அருளரும் கொழும்பிலைதான் நிண்டவர் சந்தித்திருந்திந்தீர்களோ தெரியாது . மற்றும்படி உங்கள் எழுத்துக்களை இப்பொழு காண முடிவதில்லை . வலைப்பக்கம் எழுதுகிறீர்களோ தெரியாது நான் வலைப்பக்கம் இப்பொழுது போவது குறைவு. ஊருக்கு போய்வந்ததால் இங்கு பலர் உங்களிடம் ஏதோ எதிர்பார்க்கிறார்கள் அதை கொண்டு வந்தனீங்களா?? :lol: :lol:

  • தொடங்கியவர்

[சின்னக்குட்டியர் லங்காராணி கப்பலின் படத்தை பார்த்து கதை கேட்டிருக்கிறீங்கள் போலை அதை கதையாக எழுதிய அருளரும் கொழும்பிலைதான் நிண்டவர் சந்தித்திருந்திந்தீர்களோ தெரியாது .

சாத்திரி லங்காராணி கப்பலின் கதை களம் 1983 கலவரம் ..நான் சொன்ன கப்பலின் கதை 1958 கலவரம்.... :) மற்றது அருளரை பற்றி தெரியாது ..அருளற்றை மகளின் பாடல்களை யூரூப்பிலை பார்க்கிறானான் சிலவேளை :lol: நன்றி உங்கள கருத்துகளுக்கு

தங்களை நோகடிக்கும் எண்ணம் எனக்கு அறவே இல்லை.

மேலும் நான் எதிர் பார்த்தது ஏதோ?

வேறென்ன எழுத.

நன்றி

யாழிவன்.

யாழிவன் புரிதலுக்கு நன்றி :)

Edited by sinnakuddy

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க விட்டுவிடுவோமா என்ன?

வாங்க வாங்க எழுத்தாளர் சின்னக்குட்டி அவர்களே.

யாழ் பயணத்தையும் கொஞ்சம் சொல்லுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கொழும்பு பதிவு தந்தமைக்கு நன்றிகள்....

எனக்கு மட்டுமல்ல மற்றும் பல தமிழர்களை அப்பொழுது அவதானித்து இருக்கிறேன் வவுனியா வரை அட்டாகாசம் பண்ணி கதைத்து தங்களுக்குள் குதர்க்கம் செய்து வருபவர்கள் வவுனியா தாண்ட தாங்களாகவே பெட்டி பாம்பாக அடங்கிவிடுவதை.

உதை இப்ப சொல்லுறதை நான் ஏற்கமாட்டேன்..உப்படியான கதைகளை 80ஆம் ஆண்டுகளுக்கு முதல் சில கொழும்புதமிழர் சொல்லி நக்கல் அடிக்கிறவை, எனது உறவுக்காரரும் உங்களுக்கு வவுனியா மட்டும் தான் சண்டித்தனம் என்று சொல்லி நக்கல் அடிப்பார்...

80இன் பிற்பாடு காலிவரை எமது சண்டிதனம் போனபொழுது பயங்கரவாதம் என்று சிங்களவர்களும் சில கொழும்புத்தமிழரும்....இந்தியாவிடமும் உலகத்திடமும் உதவி கேட்டு ஒடினவையள்.

நாங்க விட்டுவிடுவோமா என்ன?

வாங்க வாங்க எழுத்தாளர் சின்னக்குட்டி அவர்களே.

யாழ் பயணத்தையும் கொஞ்சம் சொல்லுங்க.

ஈழப்பிரியன், யாழ்ப்பாண பதிவை சின்னக்குட்டி ஏற்கனவே தந்துள்ளார்http://www.yarl.com/forum3/index.php?showtopic=77163

.

  • கருத்துக்கள உறவுகள்

சின்னக்குட்டியர் 58 ம் இல்லை 83ம் இல்லை லங்கா ராணி 1977ம் ஆண்டு கலவரத்தை பின்னணியாக கொண்டு எழுதப்பட்டது கீழே இணைப்பில் பாருங்கள் நன்றிMy link

  • தொடங்கியவர்

ஈழப்பிரியன் புத்தன் ...கருத்து கூறியதுக்கு நன்றி . சாத்திரியார் 77 கலவரம் தான் சரி...தவறுதலாக 83 என்று கூறி விட்டன் .

சின்ன குட்டி ஐயா உங்கள் முகத்தை பார்க்க எங்களுக்கு ஒரு சந்தர்பம் கிடைக்குமா

  • தொடங்கியவர்

சின்ன குட்டி ஐயா உங்கள் முகத்தை பார்க்க எங்களுக்கு ஒரு சந்தர்பம் கிடைக்குமா

aathipan நீங்கள் பேய் கதை சொல்ற ஆளல்லோ? நாகேஸ் பாலையாவுக்கு காதலிக்க நேரமில்லை என்ற படத்திலை சொல்லுறமாதிரி ஒரு பேய் கதை ஒன்று சொல்லுங்கோ . கேட்பம்...இங்கை கனக்க பெண் கள உறுப்பினர்கள் இருக்கினம் அதுவும் ஆண்களின்ரை பெயரிலை கூட இருக்கினம் என்று கூட வதந்தி ,,,அந்த பெண் கள நண்பர்களின் முகத்தை காட்ட சொல்லி கேட்டு அதை பார்த்தாலாவது எதோ வகையிலை உங்களுக்கு பிரயோசமாக இருக்கும் :lol: ..இந்த கிழவன்ரை முகத்தை பார்த்து என்ன செய்ய போறியள் ..? :lol: :lol:

Edited by sinnakuddy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.