Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திசை மாறிய பறவைகள்

Featured Replies

ஊருக்கு போக வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் வருவது போல் எனக்கும் வந்தது .அதுவும் இருப்பதைந்து வருசங்களுக்கு பிறகு பிறந்த நாட்டுக்கு செல்ல முடிவெடுத்த நாளிருந்து மனம் தன்னுள்ளே துள்ளி குதித்து சந்தோசம் கொண்டாடியது. நான் செல்லும் விமானம் முக்கி முனகி ஏறும் முன்பே நாட்டுக்கு சென்று விட்டேன் மனத்தளவில்.ஊரிலிருக்கும் வரை ஊரின் அருமை தெரியாமால் தான் இருந்தது .அதன் அருமை புலத்தில் நினைவு மீட்டல்களாக அங்கென்றுமாக இங்கொன்றுமாக வந்து ரீங்காரம் இடத்தான் அதை இழந்த வலி தெரிந்தது.நான் இப்போழுது அந்த நானாக இல்லை அது போல் ஊரும் அதே ஊராக இருக்காது மனத்தின் ஒரு பகுதி வந்து அலாரம் அடித்தாலும்.மனதின் மறு பகுதி அவற்றுக்கெல்லாம் மறுத்தான் போட்டு கொண்டு காலத்தால் அழிந்த அவைகளை நினைவுகளால் அலங்கரித்து போகும் முன்னே உயிர்ப்பித்து கொண்டு இருந்தது.

அந்நிய நாட்டு குடிமகனின் அந்தஸ்த்துடன் பிறந்த நாட்டுக்கு வரும் என்னை ப்போல உள்ள சிலரையும் வேறு பல்லின பல நாட்டு குடிமக்களையும் காவி வந்த விமானம். அதீத மெளனத்துடன் தரை இறங்க முடியாமால் தவித்து பின்ஒரு விதமாக தரையை தொட்டது .இந்த இருப்பதைந்து வருடங்களுக்குள் இந்த நாட்டில் என்னவல்லாம் நடந்து முடிந்து விட்டது. அப்படி ஒரு அசுமாத்தமில்லாத மாதிரி சனங்கள் இயங்கி கொண்டிருந்தனர் .உடுக்கடித்து ஊதி பெருப்பித்து புலம் பெயர் ஊடகங்கள் சில உருவாடுவது மாதிரி இல்லாமால் இலங்கை எங்களை வரவேற்றது.

விமான நிலையத்துக்கு வெளியில் எங்களை ஏற்றிச்செல்ல யாழ்ப்பாணத்திலிருந்து நேரடியாகவே அங்கு வந்த வான் ஒன்று காத்து கொண்டிருந்தது,.கொழும்பு செல்லாமாலே யாழ் செல்ல போகிறோம் என்று வாகன சாரதி சொன்ன போது இந்த இருப்பதைதந்து வருட காலத்தில் எத்தனை தடைகள் தாண்டி ஊர் சென்று வந்தவர்கள் சொன்ன கதைகள் ஞாபகம் வந்தது.ஒரு பத்து மணித்தியாலத்தில் விமானத்தில் கொழும்பு அடைந்தவர்கள் நாட்கள் கிழமைகள ஏன் சிலவேளை மாதம் கடந்து தான் ஊர் சென்று இருக்கிறார்கள். வான் .புத்தளமூடாக அனுராதபுரம் வ்வுனியா என்று சென்று ஓமந்தையை அடைந்தது .

அங்கு ஒரு இராணுவச்சாவடியில் எங்களை பரிசோதித்தார்கள்.வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர் இலங்கையராக இருந்தாலும் வடக்குக்கு செல்வதாய் இருந்தால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும் நடைமுறை இருக்கிறது, அதனால் அங்கு பரிசோதிக்கும் அதிகாரிகளும் வெளிநாட்டிலிருந்து செல்பவர்களும் இதனால் குழம்புவது வழக்கமாக இருந்தது . வெளிநாட்டு பாஸ்போட்டுடன் வருபவர்கள் இலங்கையில் பிறந்து இருந்தால் அந்த பாஸ்போட்டில் பிறந்த இடம் போட்டிருந்தால் அந்த அனுமதி பத்திரம் எடுக்க தேவையில்லை என்பது தான் நடைமுறை உண்மை .இதை விளங்கி கொள்ளாத அந்த அதிகாரி என்னிடம் கேட்க நான் விளங்கபடுத்தினேன். பின் அந்த பிறந்த ஊர் எங்கே யாழ்ப்பாண்த்தில் என அவன் குழம்பி கொண்டிருக்க .அவனுக்கு புவியியல் பாட்ம் எடுத்து விளங்கபடுத்திய பிறகு தான் எங்களை அனுப்பினான்.

ஊரை அடைந்த போது நள்ளிரவை தாண்டிவிட்டது. அந்த ஊரின் அழகான விடியலுக்கான ஆயத்தங்களை அந்த நேரம் அந்த இரவு செய்து கொண்டிருந்தது.வீட்டு பின் மாமரத்தில் இருந்த சேவல் ஒன்று விடிந்து விட்டுது என்ற தவறாக அடையாளம் கண்டு என்னவோ சோம்பல் முறித்து கூவியது.வீட்டில் நுளம்புடன் தற்காப்பு யுத்தம் செய்வதற்க்கான துணை கருவிகள் படுக்கும் அறையில் தாரளமாக கிடந்தன.இவ்வளவு நுளம்பை எதிர்க்கும் தற்காப்பு கருவிகளோடு அந்த காலம் தூக்கத்தை தழுவினதாக ஞாபகம் இல்லை .அதனோடு சமரசம் செய்து கொண்டு அழகான நித்திரை கொண்டதாக தான் ஞாபகம் . அன்று இரவு அவ்வளவு பிரயாண களைப்பு. தூக்கம் தானே தாலாட்டி தானே தூங்கி கொண்டது ..

.விடிய எழும்பி பார்க்கும் போது தற்காப்பு கருவிகளுடன் படுத்தவர்களுக்கு கூட அங்கும் இங்கும் நுளம்பு முத்தம் கொடுத்த தடங்கள் இருந்தன. என்னை ஏனோ தீண்டவில்லை ...சில இரத்த குறூப் உள்ளவர்களை தான் நுளம்பு தீண்டுமாம் என்று அந்த விடியல் பொழுதில் ஒரு பெரிசு ஒன்று மருத்துவ குறிப்பு சொல்லி கொண்டிரிந்துச்சு...அந்த வகையில் நான் ஒரு தீண்டதகாதவன் ..அதுவும் ஒரு சந்தோசமே.

நான் அந்த காலத்தில் வழமையாக ராஜ நடை போட்டு செல்லும் சந்திக்கு சென்று பழகியவர்கள் தெரிந்தவர்களை சந்திக்கலாம் என்று கிளம்பினேன் .செல்வதற்க்கு மூலையில் இருந்த பழங்கால சைக்கிள் தான் கண்ணில் பட்டது அதை எடுத்து கொண்டு செல்ல .. இங்கை ஒவ்வோரு வீட்டிலும் ஒன்றுக்கு இரண்டு மோட்டர் சைக்கிள் நிற்கிது ,,உந்த ஓட்டை சைக்கிளிலே போக போறீயே என்று ஒரு கெளவரவ பிரச்சனையை வீட்டிலிருந்த பெருசு ஒன்று எழுப்பியது. இது போன்ற கெளவரவ பிரச்சனைகள் அப்பவும் இருந்தது இப்பவும் இருக்கிறது எப்பவும் இருக்கும் என்று மனதில் சொல்லி கொண்டு எனது பாதையில் அந்த சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன்.

அந்த காலத்தில் அந்த சந்திக்கும் வீட்டுக்கும் ராஜநடைபோடும் கொஞ்சம் நேரத்தில் எத்தனை பேருக்கு அறிமுக சிரிப்பு சிரித்து எத்தனை பேரின் கேள்விக்கு பதில் சொல்லி இருப்பேன் .அப்படி ஒரு நட்பு வட்டம் தெரிந்த கூட்டம் இருந்தது

இப்பவும் அது போல அந்த சந்தி செல்லும் போது தெரிந்த முகங்கள் தெரியாத முகங்களாக போகிவிட்ட நிலமை ...அவர்களும் பரக்க பரக்க வெறித்து பார்த்து அடையாளம் காணும் முயற்சி செய்து பின் தோல்வி அடைந்து தன் பாட்டில் என்னை கடந்து செல்லுகிறார்கள் ..எனது இளம் நரையையும் முன் பின் வழுக்கையையும் மறைப்பதற்க்கு நான் எடுத்து கொண்ட முழு மொட்டை வேடம் தான் .அவர்கள் என்னை அடையாளம் காண முடியாமால் நிற்கிறார்கள் என்று நான் நினைத்து கொண்டாலும் உண்மை அது அல்ல.நானும் அவர்களின் நரைத்த மீசையூனூடாக உற்று பார்த்தாலும் அவர்களை அடையாளம் காணமுடியாத சந்தர்ப்பமும் நடந்து கொண்டிருந்தது.

அப்படிச்செல்லும் போது என்னை அடையாளம் கண்ட மெலிந்த களைத்த உருவம் ஒன்று எப்படா மச்சான் வந்தனீ என்ற குரலுடன் வழி மறித்தது. அவனை கண்டதும் எனக்கு ஆச்சரியம் ஏன் ஏன்றால் எனக்கு இந்த இருபத்தைந்து வருட காலத்தில் கேள்வி பட்ட காது வழி வந்த கதைகளில் ஒன்று அவன் இறந்து விட்டான் என்று ..அவன் என்னுடன் படித்த வகுப்பு தோழன் ..மார்கண்டேய தமிழ் நடிகரின் பெயர் கொண்ட அவன் ..படிக்கும் காலத்தில் கெட்டிகாரன் படிப்புக்கு பிறகு தான் உலகத்தில் எல்லாம் என்ற எண்ணம் கொண்டவன் . படிப்பில் தோல்வி அடைந்தவர்களை பரீட்சையில் தோல்வி அடைந்தவர்களை அவனது நக்கல் நளினம் படாது படுத்தும் .அந்த நக்கல் நளினத்துக்கு ஓடி ஒழிந்தவர்கள் இன்று உலகம் முழுதும் பேராசிரியர்கள் டாகடர் பொறியலாளர்கள் பல வல்லுனர்கள் என பரந்து இருக்கிறார்கள்...

ஆனால் அவனது பிச்சைக்கார கோலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் .அது மட்டுமன்றி சாப்பிட்டுக்கு வழி இல்லை மச்சான் எனக்கு .ஏதாவது உதவி செய் என்று பிச்சைக்காரத்தனமாக இரந்தது எனக்கு ஏதோ செய்தது.நானும் வெளிநாட்டில் வாழும் ஒரு பிச்சைக்காரன் தான் என்று ஒப்பிக்காமால் எனது சக்திக்கு மீறிய தொகையை அவனது கைகளில் கொடுத்துவிட்டு மாறி விட்டேன்.

அன்று இரவு நுளம்பால் பிரச்சனை இருக்கவில்லை இவனை நினைத்து அன்று தூக்கம் இன்றி தவித்தேன், .யாழ் பல்கலைகழகத்தின் மருத்துவ பீடத்தில் அனுமதி கிடைத்து இரண்டு வருடங்கள் முடிய முன்பே. அவ்வூர் சந்தி படியாத வர்த்தகர்களால் டாக்டர் என்று செல்ல பெயர் கொண்டு அழைக்க பட்டான்.அவனின் திறமையான டைம்மிங்கில் விடும் பகிடிக்காகவே .அவனை திரும்பி பார்க்க மனமில்லா பெட்டைகள் கூட திரும்பி பார்த்து சிரித்து செல்லுவார்கள் .அவனுக்கு தனது படிப்பின் மீது இருந்த அதீத பெருமையால் படிப்பை தவறவிட்டவர்களை கேலி செய்வதை வழமையாக கொண்டிருந்தான்.

எங்களில் சில பேர் இந்த மனப்பாடம் செய்து கிரகித்ததை திரும்ப ஒப்புவித்து அதனூடாக பரீட்சையில் வெற்றி அடையும் அளவு கோலை அறிவாக கொள்ளுவதில்லை .என அவனுக்கும் தெரியும் .அதனால் .எங்களுடன் அந்த நக்கல் நளினத்தை அவன் வைத்து கொள்ளுவதில்லை .என்றாலும் அவன் என்னை பார்த்து ஒரு முறை சொன்னது ஞாபகம்..உப்படி படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமால் உப்படியே தேவை இல்லாத்தை கதைத்து கொண்டிருந்தால் இப்ப வைத்திருக்கின்ற உந்த மரக்கட்டை பெடல் போட்ட சைக்கிளோடை தான் 30 வருசம் சென்றாலும் திரிவாய் என்று.

அவனது அதீத தன்னம்பிக்கை மற்றும் இயற்க்கையாகவே இருந்த பைத்தியகாரத்தன்மை காரணமாக படு மோசமான முறையில் ராக்கிங் காலத்தில் ஈடுபட்டான் . பின் ஒர் இரு முறை பல்கலைகழக நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்டு கடைசியாக மருத்துவ பீடத்திலிருந்து முற்று முழுதாக நீக்க பட்டான் ..

பல்கலைகழக வரலாற்றிலையே ஒரு..மருத்தபீட மாணவன் தனது படிப்பு காலம் முடியும் முன்னர் நீக்கப்பட்டவன் இவனாக தான் இருக்கும் என்று நினைக்கிறன். பின் இவனது பெற்றோரின் பணம் வளம் மூலம் இந்தியாவில் தனது மருத்துவ படிப்பை படிக்க சென்றானாம் அங்கும் படிப்பை தொடராமால் ஏதோ முறையில் பெரும் பணத்தை உருவாக்கி கொண்டான் என்று கேள்வி பட்டு கொண்டேன் . இவன் ஒரு அதீத எம்ஜீஆர் ரசிகன் ..கிட்டத்தட்ட ஒரு சினிமா பைத்தியம் கூட ..அந்த சந்தியில் ஒரு தியேட்டரில்ஒரு முறை எம்ஜீஆர் படம் ஓடிய போது ஹவுஸ் புல் ஆகோனும் என்றதுக்காகவே சிலருக்கு படம் பார்க்க காசு கொடுத்த அனுப்பிய படித்த முட்டாள்.

அவனது இந்த சினிமா பைத்தியத்தை தெரிந்து கொண்ட சிலர் .ஏதோ முறையில் அவன் உழைத்த பணத்தை கொண்டு சினிமா தயாரிக்கும் வருத்தம் தரக்கூடிய ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள்.படமும் தோல்வி அடைய . பெற்றோர்களும் இறக்க ..உறவினர்களும் கைவிட்ட நிலையில் இப்போது அவன் இப்ப அந்த சந்தியில் பிச்சைக்காரனாக சுற்றி கொண்டிருக்கிறான்.

அவனோடு படித்த ஒரு வகுப்பு தோழன் தான் அப்பிரதேசத்தில் உள்ள இலங்கையிலே பிரபலமான கல்லூரி ஒன்றின் அதிபராக ஆக இப்ப இருக்கிறார். இவனுக்கு அவ்வூர் வர்த்தகர்களுடன் கதைத்து ஏதாவது வேலை எடுத்து கொடுக்கலாம் என்று நினைத்து கொண்டு அதே மரக்கட்டை பெடல் போட்ட சைக்கிளில் திரும்பி வரும் போது ..என்னை வேகமாக கடந்த சென்ற மோட்ட சைக்கிளிலிருந்து எனது பெயரை இருப்பதைந்து வருடங்களுக்கு முன்னால் அழைத்த அதே தொனியுடன் ஒலித்தது.

ஹெல்மட் மறைவில் இருந்து வெளியில் வந்த ஒருவன் . தன்னை அடையாளம் கொள்ளுகிறாயா என்று ஆங்கிலத்தில் கேட்டான் ..நான் பதில் சொல்லும் முன்பே தனது பதவிகளை பந்தங்களையும் விவரிக்க தொடங்கி விட்டான் ....முடிவில் வெளிக்கிடும் போது கூறினான் ..வெளியில் இருந்து வந்தனீங்கள் மச்சான் ஏன் இந்த ஓட்டை சைக்கிளிலை திரியிறாய் என்று ....அவனுக்கே ஒரு மாதிரியாக இருந்திருக்க வேண்டும் எனது பரதேசி கோலம் ..இப்படி பலதும் பத்தையும் நினைத்து கொண்டு வந்ததால் ..எனது பாதையை விட்டு எங்கையோ திசை மாறி விட்டேன்

வீடு திரும்ப இருண்டு விட்டது....அந்த அந்தி மாலை பொழுது இருப்பதைந்து வருடங்களுக்கு முன் இருந்த அழகை தந்து கொண்டிந்தது ..

அதை ரசித்து மனதை லேசாகி கொண்டிருந்தேன்

http://sinnakuddy.blogspot.com/2010/11/blog-post.html

உங்கள் நண்பனின் வாழ்வைபற்றி அறியும்போது மிகுந்த கவலையாக உள்ளது. ஒருவன் கல்வியில் மிளிர்வதும், குண்டு அடிப்பதும் அவனது திறமையில் மாத்திரம் தங்கி இல்லை. காலம், சூழ்நிலை, இதர பல நிபந்தனைகளும் சரியாக அமைந்து அவை பூர்த்தி செய்யப்பட்டாலே கல்வியிலும், தொழிலிலும் பிரகாசிக்கமுடியும். சிலர் மற்றவர்களை அவர்களது தகுதியை குத்திக்காட்டி கிண்டல் செய்வது என்னமோ வழமைதான். ஆத்திரத்தில் அவ்வாறு சிலர் செய்யலாம், சிலர் வெறும் நகைச்சுவைக்காக செய்யலாம், சிலர் குத்திக்காட்டவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்யலாம். உங்கள் நண்பன் திறமைசாலியாக காணப்பட்டும் முட்டாள்தனமான செய்கைகள் காரணமாக மருத்துவபீடத்தில் இருந்து நீக்கப்பட்டு இறுதியில் வாழ்க்கையில் பல துன்பங்களையும் அடைந்தது கவலைக்குரிய விடயம். அவர்பற்றி வேறு என்ன கூறுவது என்று தெரியவில்லை. :lol:

உங்கள் நண்பனைப்போல ஆரம்ப வாழ்க்கையில் நன்றாக பிரகாசித்து பின் வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்களை கண்டிருக்கிறேன்.

மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் பகட்டாக இருக்க வேண்டுமென அங்குள்ளவர்கள் நினைப்பது கொடுமை.

உங்கள் நண்பரை போல பலர் பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளனர். இதற்கு எமது சமுதாயத்தில் உள்ள பல காரணிகளை சொல்லலாம்:

1.சமுதாய, குடும்ப எதிபார்ப்பும் தனிநபர் விருப்பமும்

2.குறைவான உயர்கல்வி, வேலை வாய்ப்புகள் ; தராதரப்படுதல்.

3. மன அழுத்தம் ஏற்படுவர்களுக்கு சரியான உதவி கிடைக்காமை

4. பண முகாமைத்துவம் (money management) பற்றிய சரியான வழிநடத்தல் இல்லாமை

  • கருத்துக்கள உறவுகள்

தாயகக் கதை அருமை. நாடு விட்டு வந்து நாடு திரும்பும் பொது "எதையோ" எதிர்பார்கிறார்கள் தோற்றத்தில் . உள்ளம் இன்னும் கிராமத்தவனாக இருப்பதை புரிந்து கொள்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

திறமை என்பது ஒருவனுக்கு இயற்கை அளித்த வரம்.

அந்தத் திறமையை வைத்துத் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் வளப்படுத்துபவன் தான் திறமைசாலி. இவர் தன்மீது வைத்திருந்த அதீத நம்பிக்கையால் தன் திறமையை பயன்படுத்தத் தவறிவிட்டார். பாவம்..எல்லாம் அவர் கெட்ட நேரம்.

உங்கள் கதைக்கு நன்றி சின்னக்குட்டி அண்ணா

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

அளவுக்கு மீறிய திறமையால் ஒருவர் தன் வாழ்க்கையை இழந்து இருக்கிறார்...பரிதாபதிற்குரியவர்...உங்கள் ஊர் அனுபவங்களை கதையாக எழுதிய உங்களுக்கு எனது பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக இருந்தது சின்னக்குட்டி..! நன்றிகள்..!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அண்ணா ஊருக்குப் போயிருக்கிறியல் போல எங்கட கல்லூரிப் பக்கமும் போனநீங்களோ? கதை நன்று, வாழ்த்துக்கள். என் சார்பாக ஒரு பச்சை. வெளி நாட்டிலிருந்து போற ஆக்கள் சுளை சுளையாய் எல்லாத்துக்கும் காசு வெட்டோணும் எண்டு அங்கயிருக்கிரசனம் எதிர்பாக்கிறது உண்மை. சில புலத்து ஆக்கள் தான் அதை ஒரு பழக்கமாக்கி விட்டார்கள் என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு நன்றி.திறமை உள்ளவர்கள் எப்படியும் முன்னுக்கு வருவார்கள் என்கிறார்கள். உங்களின் நண்பனின் சூழ்நிலை அவரை முன்நிலைக்கு கொண்டு வரவில்லை என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தத்தை அப்படியே சொல்லியிருக்கின்றீர்கள், நினைவுகளை மீட்டதற்கு ஒரு பச்சை சின்னக்குட்டி! இது கதையா அல்லது நிஜமா ! :lol:

  • தொடங்கியவர்

உங்கள் நண்பனின் வாழ்வைபற்றி அறியும்போது மிகுந்த கவலையாக உள்ளது. ஒருவன் கல்வியில் மிளிர்வதும், குண்டு அடிப்பதும் அவனது திறமையில் மாத்திரம் தங்கி இல்லை. காலம், சூழ்நிலை, இதர பல நிபந்தனைகளும் சரியாக அமைந்து அவை பூர்த்தி செய்யப்பட்டாலே கல்வியிலும், தொழிலிலும் பிரகாசிக்கமுடியும். சிலர் மற்றவர்களை அவர்களது தகுதியை குத்திக்காட்டி கிண்டல் செய்வது என்னமோ வழமைதான். ஆத்திரத்தில் அவ்வாறு சிலர் செய்யலாம், சிலர் வெறும் நகைச்சுவைக்காக செய்யலாம், சிலர் குத்திக்காட்டவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்யலாம். உங்கள் நண்பன் திறமைசாலியாக காணப்பட்டும் முட்டாள்தனமான செய்கைகள் காரணமாக மருத்துவபீடத்தில் இருந்து நீக்கப்பட்டு இறுதியில் வாழ்க்கையில் பல துன்பங்களையும் அடைந்தது கவலைக்குரிய விடயம். அவர்பற்றி வேறு என்ன கூறுவது என்று தெரியவில்லை. :lol:

காலம், சூழ்நிலை, இதர பல நிபந்தனைகளும் சரியாக அமைந்து அவை பூர்த்தி செய்யப்பட்டாலே கல்வியிலும், தொழிலிலும் பிரகாசிக்கமுடியும்.
அது தான் உண்மை கலைஞன் பதிவை பார்த்து கருத்து கூறியதுக்கு நன்றிகள்

உங்கள் நண்பனைப்போல ஆரம்ப வாழ்க்கையில் நன்றாக பிரகாசித்து பின் வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்களை கண்டிருக்கிறேன்.

மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் பகட்டாக இருக்க வேண்டுமென அங்குள்ளவர்கள் நினைப்பது கொடுமை.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் பகட்டாக இருக்க வேண்டுமென அங்குள்ளவர்கள் நினைப்பது கொடுமை
.

அவங்க பெருமை என்று நினைக்கிறாங்கள் ..என்னங்க செய்யிறது..பதிவை பார்த்து கருத்து கூறியதுக்கு நன்றிகள்

உங்கள் நண்பரை போல பலர் பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளனர். இதற்கு எமது சமுதாயத்தில் உள்ள பல காரணிகளை சொல்லலாம்:

1.சமுதாய, குடும்ப எதிபார்ப்பும் தனிநபர் விருப்பமும்

2.குறைவான உயர்கல்வி, வேலை வாய்ப்புகள் ; தராதரப்படுதல்.

3. மன அழுத்தம் ஏற்படுவர்களுக்கு சரியான உதவி கிடைக்காமை

4. பண முகாமைத்துவம் (money management) பற்றிய சரியான வழிநடத்தல் இல்லாமை

உளவியில் ரீதியான காரணங்களை இந்த பதிவை மெருகூட்டியதுக்கும் பதிவை பார்த்து கருத்து கூறியதுக்கும் நன்றிகள்
  • கருத்துக்கள உறவுகள்

நண்பன் படிக்காமல் இருந்திருந்தால் வெளிநாட்டுக்கு வந்தாவது பணம் சம்பாதித்திருப்பான்.

மீண்டும் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு போய்விட்டு கதையோடு வந்திருக்கிறீங்கள். துரோகி என்று யாரும் சொல்லாதவரைக்கும் சந்தோசம். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

உதே இப்ப உந்த வெளிநாட்டுக்கு ஓடி வந்தவைட பிழைப்பா போச்சு. இதுக்காகத்தான் அன்று ஓடி வந்தவை..! எப்படா ஊருக்கு விலாசம் காட்டப் போகலாம் என்று போறது.. போயிட்டு வந்து அங்க நொந்து போய் உள்ளதுகளை வைச்சு கதை வடிக்கிறது.

உண்மையா அக்கறையுள்ளவை ஏதாவது உருப்படியா செய்ய முனையலாம்.. இல்ல சொல்ல முனையலாம்.

பிரபாகரன் தான் வாழாட்டிலும் பல பேருக்கு வெளிநாட்டில வாழ்க்கையும் பிரஜா உரிமைகளும் தேடிக் கொடுத்தவர் என்பதற்கு இது ஒரு நல்ல சாட்சியம்..! அதற்காக 30,000 இளைஞர் யுவதிகளும் 1,60,000 மக்களும் பல கோடி உடமைகளும் தியாகம் செய்யப்பட்டு சொந்த மண் சிங்களத்திடம் தாரை வார்க்கப்பட்டுள்ளதையும் இதோட பெருமையா சொல்லிக் கோங்கோ..!

இந்த தமிழ் கூடாரங்கள் திருந்தவே போறதில்ல. வெட்டி பந்தாவுக்கு குறைச்சலில்ல. அதில தந்திரமா சொல்லுறம் பாணியில்.. தாங்கள் வெளிநாட்டு கூலிகள் என்ற அவையடக்கம் வேற...! முடியல்ல...! எத்தனை மேடைகள்.. எத்தனை நாடகங்கள்..??!

பலியானோர் பாவிகள்.. பலியிட்டோர்.. அப்பாவிகள்.. பயன்படுத்தியோர் சுழியன்கள்... சந்தர்ப்பதை கோட்டை விட்டோர்.. கதாபாத்திரங்கள்..!

நல்ல ஒரு மனித சமூகம். வாழ்க ஈழத்தமிழினம். வளர்க்க.. வெல்க அவர் நரித்தனம். :lol::D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பலியானோர் பாவிகள்.. பலியிட்டோர்.. அப்பாவிகள்.. பயன்படுத்தியோர் சுழியன்கள்... சந்தர்ப்பதை கோட்டை விட்டோர்.. கதாபாத்திரங்கள்..!

நல்ல ஒரு மனித சமூகம். வாழ்க ஈழத்தமிழினம். வளர்க்க.. வெல்க அவர் நரித்தனம். :lol::D:lol:

ஒரு பச்சை நெடுக்ஸ் :D

  • தொடங்கியவர்

ஒரு பச்சை நெடுக்ஸ் :lol:

நிலாமதி ,வாத்தியார் , ரதி ,இசைகலைஞன் ,தும்பளையான்,நுணாவிலான் suvy ,,சாத்திரி புத்தன் மற்றும் நெடுக்காலபோவான்,வந்து பதிவை பார்த்து கருத்து கூறியதுக்கு நன்றிகள்

உதே இப்ப உந்த வெளிநாட்டுக்கு ஓடி வந்தவைட பிழைப்பா போச்சு. இதுக்காகத்தான் அன்று ஓடி வந்தவை..! எப்படா ஊருக்கு விலாசம் காட்டப் போகலாம் என்று போறது.. போயிட்டு வந்து அங்க நொந்து போய் உள்ளதுகளை வைச்சு கதை வடிக்கிறது.

உண்மையா அக்கறையுள்ளவை ஏதாவது உருப்படியா செய்ய முனையலாம்.. இல்ல சொல்ல முனையலாம்.

பிரபாகரன் தான் வாழாட்டிலும் பல பேருக்கு வெளிநாட்டில வாழ்க்கையும் பிரஜா உரிமைகளும் தேடிக் கொடுத்தவர் என்பதற்கு இது ஒரு நல்ல சாட்சியம்..! அதற்காக 30,000 இளைஞர் யுவதிகளும் 1,60,000 மக்களும் பல கோடி உடமைகளும் தியாகம் செய்யப்பட்டு சொந்த மண் சிங்களத்திடம் தாரை வார்க்கப்பட்டுள்ளதையும் இதோட பெருமையா சொல்லிக் கோங்கோ..!

இந்த தமிழ் கூடாரங்கள் திருந்தவே போறதில்ல. வெட்டி பந்தாவுக்கு குறைச்சலில்ல. அதில தந்திரமா சொல்லுறம் பாணியில்.. தாங்கள் வெளிநாட்டு கூலிகள் என்ற அவையடக்கம் வேற...! முடியல்ல...! எத்தனை மேடைகள்.. எத்தனை நாடகங்கள்..??!

பலியானோர் பாவிகள்.. பலியிட்டோர்.. அப்பாவிகள்.. பயன்படுத்தியோர் சுழியன்கள்... சந்தர்ப்பதை கோட்டை விட்டோர்.. கதாபாத்திரங்கள்..!

நல்ல ஒரு மனித சமூகம். வாழ்க ஈழத்தமிழினம். வளர்க்க.. வெல்க அவர் நரித்தனம். :D :D :lol:

;நெடுக்கலாபோவான் உங்களுடைய கருத்துக்கு பதில கூற விரும்பவில்லை பதில் கூறுவதற்க்கு கள நண்பர்களிடம் விட்டு விடுகிறேன் ....தெரியாத விசயங்களை ..புரியாத விசயங்களை பற்றி விவாதம் நான் செய்வதில்லை ...நன்றி....

Edited by sinnakuddy

  • கருத்துக்கள உறவுகள்

கதையை முழுதும் படித்தேன் சின்னக்குட்டி. ஆனால் இதற்குப் பச்சை குத்த மனம் வரவில்லை (நெடுக்கால போவானுக்குக் குத்தியிருக்கிறேன்!). அறியாத தெரியாத விஷயங்களைப் பற்றி நான் விவாதிப்பதில்லை என்று நெடுக்கால போவானுக்கு பதில் சொன்ன பிறகு தான் இந்தத் துலங்கலை எழுதலாம் என்று நினைத்தேன். புலம் பெயர் ஊடகங்கள் பொய்ப் பிராந்தி காட்டுவது மாதிரி எழுதியிருக்கிறீர்கள். உங்களை நன்றாக வரவேற்றார்களாம், பாதுகாப்பாக நீங்கள் வந்தும் விட்டீர்களாம். ஆனால் பாதுகாப்பாக விமானநிலையத்தைத் தாண்டிச் செல்லாத அல்லது காசு கொடுத்துத் தப்பி வந்த தமிழ் உல்லாசப் பயணிகளைப் பற்றி உங்களுக்கு எதுவும் "அறியாமல் தெரியாமல்" போனதால் உங்கள் அனுபவத்தை எழுதியிருக்கிறீர்கள் என்று கொள்ளலாமா? அப்படியானால் துரதிர்ஷ்டம் பிடித்த அந்த தமிழ்ப் பயணிகளுக்கு நடந்த சோதனைகளும் கெடுபிடிகளும் வெறும் "பொய்பிராந்தியா" அல்லது "உங்களுக்கு நேராததால்" முக்கியமில்லாத விடயங்களா? "என் வாசலுக்கு நெருப்பு வராவிட்டால் எல்லாம் நலமே உள்ளன" என்று அறிக்கையிடுவது மாதிரி இருக்கிறது உங்கள் கதையின் ஆரம்பப் பகுதி.

ஒருவர் தனது அனுபவத்தை எழுதியுள்ளார்; ஒவ்வொருவருக்கும் அனுபவங்கள் வேறுபட்டு காணப்படலாம். தமக்கு கிடைத்த அல்லது தாம் அறிந்தோரிற்கு கிடைத்த அதே மாதிரியான அனுபவங்களை ஒருவர் தனது பதிவில் பகிர்ந்துகொள்ளவில்லை என்று குறைப்பட்டுக்கொள்வது வேடிக்கையாக உள்ளது. மற்றவர்களிற்கு வேறுபாடான அனுபவங்கள் கிடைத்தால் அவற்றை எழுதலாமே. இதை ஏன் தனிப்பட்ட ஒருவரின் பதிவில் எதிர்பார்க்க வேண்டும்?

நாம் நினைத்தபடியான, அல்லது விரும்பும்படியான, அல்லது எதிர்பார்க்கும்படியான அனுபவங்களையே மற்றவர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்? கதை கதையாம் பகுதியில் சின்னக்குட்டி அவர்கள் தனது அனுபவத்தை பகிர்ந்து உள்ளார். இங்கு குறைப்பட்டுக்கொள்வதற்கு என்ன உள்ளது என்று தெரியவில்லை. எல்லாம் காதும் காதும் வைத்தமாதிரி அலுவல்கள் முடிப்பவர்கள் மத்தியில் வெளிப்படையாக தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முன்வரும் ஒருசிலரை எப்படி குறைப்பட்டுக்கொள்ள முடியும்?

வேறுபாடான அனுபவங்களை உள்ளவர்கள் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். அதை உங்களுக்காக மற்றவன் கூறவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தங்களது கதையை வாசித்தேன் சின்னக்குட்டி

ஆரம்பிக்கும்போது தங்களது அனுபவங்களை தொடர்ந்து எழுதப்போகின்றீர்கள் என்று நினைத்தேன். ஆனால் இடையில் கதை தங்களது நண்பர் பற்றி மாறியது எனக்கு ஏமாற்றம் தந்தது. தொடருங்கள் தங்கள் அனுபவத்தை.....

நெடுக்கின் கோபம் எமது மனச்சாட்சி சம்பந்தப்பட்டது. அதை தாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லை.

ஆனால் அவரது தேசத்தை பற்றி தாங்கள் எழுதும்போது அவரது கருத்தை பதிய அவருக்கும் கடப்பாடு உண்டு.

நீங்கள் அறியாதவிடயங்களைப்பற்றி விவாதிக்கவிரும்பாதவராக இருக்கலாம். ஆனால் அவருக்கு தெரிந்ததை இங்கு பதியாது இருப்பதும் வரவேற்கத்தக்கதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை மீண்டும் யாழ்களத்தில் கண்டது மிக மகிழ்ச்சியை தருகிறது.

ஊருக்கு போகும்போது ஏற்பட்ட அனுபவங்களை அழகாக எழுதிஇருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

ஆனாலும் மனசில் ஒரு வருத்தம்.

புலம்பெயர்ந்த ஈழத்தவர்களால் தான் அங்கு வருவாய் பெருகிக் கொண்டிருக்கிற நிலையில்.......... அந்த பட்டியில் நீங்களும் இடம் பெற்றுவிட்டிங்களே என்பதுதான்.

"புலம்பெயர்ந்த ஈழத்தவர்களால் தான் அங்கு வருவாய் பெருகிக் கொண்டிருக்கிற நிலையில்.......... அந்த பட்டியில் நீங்களும் இடம் பெற்றுவிட்டிங்களே என்பதுதான்."

புலம் பெயர் தமிழர் பகிஸ்கரிக்க வேண்டியது சிங்களத்தை, தமிழர்களையோ இல்லை தமிழீழதையோ அல்ல.

இதை கெட்டித்தனமாக நாம் செய்யவேண்டும். உதாரணத்துக்கு:

-- பணம் அனுப்பும் பொழுது உண்டியலை பாவிக்கவேண்டும்.

-- அனுப்பும் பணத்தை வைத்து படிக்க, சிறு தொழில் ஆரம்பிக்க உதவவேண்டும்.

-- சிறிலங்கா எயர்லைன்சை தவிர்க்க வேண்டும்.

-- சிறிலங்காவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும்போது "கூகிள் மூலம்" அழைக்கவேண்டும் ....

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் தனது அனுபவத்தை எழுதியுள்ளார்; ஒவ்வொருவருக்கும் அனுபவங்கள் வேறுபட்டு காணப்படலாம். தமக்கு கிடைத்த அல்லது தாம் அறிந்தோரிற்கு கிடைத்த அதே மாதிரியான அனுபவங்களை ஒருவர் தனது பதிவில் பகிர்ந்துகொள்ளவில்லை என்று குறைப்பட்டுக்கொள்வது வேடிக்கையாக உள்ளது. மற்றவர்களிற்கு வேறுபாடான அனுபவங்கள் கிடைத்தால் அவற்றை எழுதலாமே. இதை ஏன் தனிப்பட்ட ஒருவரின் பதிவில் எதிர்பார்க்க வேண்டும்?

நாம் நினைத்தபடியான, அல்லது விரும்பும்படியான, அல்லது எதிர்பார்க்கும்படியான அனுபவங்களையே மற்றவர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்? கதை கதையாம் பகுதியில் சின்னக்குட்டி அவர்கள் தனது அனுபவத்தை பகிர்ந்து உள்ளார். இங்கு குறைப்பட்டுக்கொள்வதற்கு என்ன உள்ளது என்று தெரியவில்லை. எல்லாம் காதும் காதும் வைத்தமாதிரி அலுவல்கள் முடிப்பவர்கள் மத்தியில் வெளிப்படையாக தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முன்வரும் ஒருசிலரை எப்படி குறைப்பட்டுக்கொள்ள முடியும்?

வேறுபாடான அனுபவங்களை உள்ளவர்கள் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். அதை உங்களுக்காக மற்றவன் கூறவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

கரும்பு, மற்றவனுடைய அனுபவத்தை அல்லது நாங்கள் விரும்பும் அனுபவத்தை எழுதும் படி யார் கேட்டது? சொந்த அனுபவத்தை எழுதும் போது மற்றவனுடைய அனுபவம் (அது ஊடகங்களில் வந்திருந்தாலும் சரி, சின்னக் குட்டியினது மாதிரி கதை வடிவில் வந்திருந்தாலும் சரி)"ஊதிப் பெருக்கி உடுக்கடிக்கப் பட்ட விடயம்" என்ற வியாக்கியானம் வேண்டாம் என்று தான் சொல்லப் படுகிறது. "எனக்கு இது நடக்கவில்லை" என்பதோடு நிறுத்திக் கொள்வது வேறு. மற்றவர்களுக்கும் எதுவும் நடக்கவில்லை, எல்லாம் ஊடகப் பரப்புரை என்ற தொனியில் எழுதுவது பாதிக்கப் பட்டவர்களை மேலும் புண்படுத்துவது மாதிரியல்லவா இருக்கிறது? அது தான் எழுதினேன்: எங்கள் வாசலில் நெருப்பு இல்லையென்றால் நாம் எல்லாம் ஓ.கே தான் எண்டு போட்டுப் போய்க் கொண்டே இருப்போம். பக்கத்து வீட்டில எரியுது எண்டாலும் நம்ப மாட்டம்!

நீங்கள் கரும்பு அவர்கள் சொல்ல வருவதை புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது.

அவர் நடுநிலை எடுத்துள்ளார். அதன்படி தான் எழுதுவார். பார்ப்பார்.

அது மட்டுமல்ல முள்ளியவளையில் பல தமிழர்கள் சாகடிக்கப்பட்டார்கள் என்று எழுதினால் அது கடவுளுக்கு கூட ஏற்காது என்பார்.

இதுக்குப்பெயர் உண்மையை உரைப்பதாம். நாங்கள் எல்லாவற்றையும் ஊதிப்பெருப்பித்தே வாழ்க்கையை ஓட்டுகிறோமாம்.

விசுகு, நீங்கள் ஊதிப்பெருப்பித்து வாழ்க்கையை ஓட்டவில்லை, வால்பிடித்து வாழ்க்கையை ஓட்டுகிறீர்கள். வால்பிடிப்பவர்களிற்கு நடுவுநிலையாளர்களை கண்டால் வயிற்றில் புளியைக்கரைத்து ஊற்றுவதுபோல்த்தான் காணப்படும். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.