Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று விபூதிப்புதன்

Featured Replies

இன்று விபூதிப்புதன் (சாம்பல் புதன்)

உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களால் இன்று விபூதிப்புதன் (09.03.2011) அனுஷ்டிக்கப்படுகின்றது. இன்று முதல் 40 நாட்கள் வரையான உயிர்ப்பு ஞாயிறு வரையான தினம் தவக்காலமாக கணிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

தவக்காலம்

கத்தோலிக்கர்களுக்கு தவக்காலம் மிகவும் முக்கியமான ஒரு காலம். விபூதிப் புதன் தொடங்கி கிறீஸ்துவின் உயிர்ப்பு பெருநாள் வரை இந்த தவக்காலம் அமைகிறது.

கத்தோலிக்கர்கள் தாங்கள் வாழும் வாழ்க்கையை அலசி ஆராய்ந்துப் பார்த்து, அவ்வாழ்வில் உள்ள குறைகளை, தீமைகளை, பாவங்களை எல்லாம் எண்ணி, மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு வேண்டும் ஒரு புனிதமான காலம். இவ்வாறாக வாழ்வை அலசி ஆராய்ந்து பார்க்க செபமும், தவமும் உதவி புரிகின்றன.

தவம்

இது எல்லா மதத்தினருக்கும் பொதுவானது. இந்து சமயத்தில் விரதம் இருப்பார்கள். இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு இருப்பார்கள். புத்தர்களும் 'போயாஷ' என்றழைக்கப்படும் பௌர்ணமி நாட்களில் உண்ணாநோன்பு இருந்து செபிப்பார்கள்.

உணவைக் குறைத்து உடலை வருத்தும்போதுதான் ஒருவன் தன்னிலை உணர்வு பெறுகிறான். அதுபோலவே இத்தவக்காலத்தில் கத்தோலிக்கர்கள் தான் வாழும் வாழ்க்கையை உணர்ந்து அறிந்திட உண்ணாநோன்பு இருக்கிறார்கள். மத சட்டங்களின்படி குழந்தைப்பருவம் தாண்டியவர்கள், முதுமை மற்றும் நோயினால் வருந்தாதவர்கள் வருடத்திற்;கு இரண்டு நாட்கள், அதாவது விபூதிப் புதன் மற்றும் பெரிய வெள்ளிக்கிழமை அன்று கட்டாயம் உண்ணாநோன்பு இருக்க வேண்டும். ஆனாலும் பெரும்பாலான கத்தோலிக்கர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், இன்னும் சிலர் இத்தவக்காலத்தின் நாற்;பது நாட்களும் உண்ணாநோன்பு இருப்பார்கள்.

செபம்

கடவுளோடு மனிதனை இணைப்பது செபம். கடவுளை மட்டுமே நினைத்து, கடவுளே கதி என்ற நிலையில் நமது துன்பம், நோய், மனக்கவலைகள்; யாவற்றையும் அழுகையோடு கடவுள் முன் முறையிடுவது ஒருவகையான செபம்.

துன்பம் சூழ்ந்த நிலையில் எல்லா மனிதருக்கும் இயல்பாக எழக்கூடிய ஒரு நிலைதான் இவ்வகையான செபம். இன்பமோ, துன்பமோ, மகிழ்ச்சியோ அழுகையோ எல்லா மனநிலையிலும், எல்லா சூழ்நிலைகளிலும் கடவுளை நினைத்து தியானிப்பது வேறு வகையான செபம்.

செபம் செய்கிறபோது வாழ்வின் ஓட்டத்தில் அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி, தனது வாழ்வை நினைத்து, அதையே கடவுள் முன் பலியாக, படையலாக படைத்து அருள்வரம் பெறுகிறோம். அந்த அருள்வரம் மனிதனை மனிதனாக வாழச்செய்யும். ஏன் மனிதரை தெய்வமாகவே மாற்றும். அதைதான் முக்திநிலை என்பர். மனித வாழ்வில் எதிர்கொள்ளும் துன்பங்களை, பிரச்சனைகளை எதிர்கொள்ள அந்த அருள்வரம் உதவுகிறது. பிரச்சனை, துன்பங்களிலிருந்து விடுபட்டு மகிழவும், நிறைவுதரும் வாழ்வை வாழவே எல்லா சமயத்தவரும் விரும்புகின்றனர். அத்தகைய வாழ்வை எதிர் நோக்கியே கடவுளை நினைக்கின்றனர். புனித தலங்களுக்கு பாதயாத்திரை செல்கின்றனர்.

இந்த அருள்வரத்தை செபம் மற்றும் தவத்தின் மூலமாக மட்டுமல்ல, நிறைவும் நமக்கு கிடைக்கிறது. நாம் பகிர்வது பணமோ, உணவோ, வேறெதும் பொருளோ என்றாலும், உண்மையில் பகிரப்படுவது மகிழ்வும், நிறைவும்தான். 'பெறுவதில் அல்ல கொடுப்பதில்தான் உண்மையான மகிழ்வு உள்ளது' என்று இயேசு சொல்லியுள்ளார்.

மனித வாழ்வுக்கு தேவையான அருள்வரங்களை கடவுளிடமிருந்து நிறைவாக பெற செபம், தவம், கடவுள் தன்மையோடு விளங்கிய இயேசு கிறிஸ்து, மனிதராக அவதரித்து, மனிதர்களால் தவறாக தீர்ப்பிடப்பட்டு, கொடூரமான சிலுவைச்சாவின் மூலம்தான் இயேசு தீமையின் மீதும், பாவத்தின் மீதும் மரணத்தின் மீதும் வெற்றிக் கொண்டார். ஆகவே மூன்றாம்நாள் உயிர்பெற்று எழுந்தார்

அந்த பாடுகளைப்பற்றி தியானித்து செபம், தவம் மற்றும்

இந்த தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் செபத்தில் தியானிக்கும் இயேசுவின் பாடுகள், மரணம் இவற்றை அடையாளப்படுத்துவது சிலுவை. கத்தோலிக்கர்களுக்கு ஒரு முக்கியமான சின்னம். பாவ வாழ்வில் மீட்பின் சின்னம் அது. ஆகவே தான் எல்லா கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இச்சிலுவை முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

இந்தத் தவக்காலத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் நாங்கள் நமது மண்ணிலே அன்றாடம் வாழ்க்கையை நடத்திச் செல்ல துயரப்படும் நம் உறவுகளை நினைத்து நாம் புண்ணியகாரியங்களில் ஈடுபடலாம். அவர்களின் வாழ்வு ஈடேற்றத்திற்காக விசேடமான வகையில் செபிக்கலாம்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் இளவயதினர் தம்நிலை மறந்து மனம் போன போக்கில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலைகளில் அவர்களுக்கு தேவையான அறிவையும் ஆன்மபலத்தையும் இறைவணக்கத்தையும் நாம் அவர்களுக்கு கற்றுக் கொடுத்து அவர்களை வழிநடத்திச் செல்ல நமது செப தவ முயற்சிகளின் மூலம் வேண்டி நிற்கலாம். இந்தத் தவக்காலத்தை நாம் சரியான முறையில் அனுஷ்டிக்க நமக்கு வல்லதேவன் பக்கபலமாக இருப்பார். அவர் வழிநடத்தலுடனும் துணையுடனும் தவக்காலத்தை எதிர்கொள்வோம்.

இந்த ஆண்டின் தவக்காலச் செய்தியாக திருத்தந்தை வெளியிட்ட செய்தி இணைக்கப்பட்டுள்ளது

மனிதன் தன்னலச் சோதனையை வெல்வதற்கு

நோன்பு அனுபவம் உதவுகின்றது

மனிதன் அன்பின் கூறுகளில் வளருவதற்குத் தடையாய் இருக்கும் தன்னலத்தை வெற்றி கொள்வதற்கு நோன்பு அனுபவம் வழியாக அவன் கற்றுக் கொள்ள முடியும் என்று பாப்பரசர் 16ம் பெனடிக்ட் தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமாகும் விப+திப் புதனோடு ஆரம்பமாகும் இந்த 2011ம் ஆண்டின் தபக்காலத்திற்கெனத் திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நோக்கங்களைக் கொண்டிருக்கும் நோன்பானது, கிறிஸ்தவர்களுக்கு ஓர் ஆழமான மத முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றது என்றுரைக்கும் திருத்தந்தை, நமது உணவு மேசையில் வறியவர்களுக்கு இடம் கொடுப்பதன் மூலம் தன்னலத்தை மேற்கொள்ளக் கற்றுக் கொள்கிறோம் என்றார்.

அத்துடன், சுயநலத்தைப் புறந்தள்ளி, நமக்கு நெருக்கமாக இருக்கும் கடவுளைக் கண்டு கொள்ளவும், பல சகோதர சகோதரிகளின் முகத்தில் கடவுளைக் காணவும் நோன்பு உதவுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

மனமாற்றத்திற்கான நமது அர்ப்பணத்தின் வெளிப்பாடுகளாக பாரம்பரியமாக நாம் கடைபிடிக்கும் நோன்பு, ஈகை, செபம் ஆகியவற்றின் வழியாக கிறிஸ்துவின் அன்பை இன்னும் அதித்தீவிரமாக வாழ்வதற்கு இத்தபக்காலம் போதிக்கின்றது என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.

நமது வாழ்வை நேர்மையுடன் ஆழமாகப் பரிசீலனை செய்து நமது பலவீனங்களை ஏற்று ஒப்புரவு அருட்சாதனத் திருவருளைப் பெற்று கிறிஸ்துவை நோக்கி ஒரு தீர்மானமானப் பயணத்தைத் தொடருவதற்கு இத்தபக்காலம் சாதகமான காலம் என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது.

கடவுளுக்கு முதன்மைத்துவம் கொடுப்பதற்குத் தடையாய் இருக்கும் பண ஆசையால் இந்த நம் பயணத்தில் அடிக்கடி நாம் சோதிக்கப்படுகிறோம், இந்தப் பேராசை வன்முறைக்கும் சுரண்டலுக்கும் மரணத்திற்கும் இட்டுச் செல்லும், இதனாலே திருச்சபை இத்தபக்காலத்தில் தானதர்மத்தை ஊக்குவிக்கின்றது என்றார் அவர்.

பொருட்களை வணங்குதல், நம்மைப் பிறரிடமிருந்து பிரிப்பது மட்டுமல்லாமல், மனிதனைக் கடவுளிடமிருந்து திசை திருப்பி அவனை ஏமாற்றி மகிழ்ச்சியின்றி வைக்கின்றது என்று சொல்லி தானதர்மத்தின் சிறப்பை விளக்கியுள்ளார் திருத்தந்தை.

இத்தபக்காலத்தில் தினமும் இறைவார்த்தையைத் தியானித்து அதனை உள்வாங்குவதன் மூலம் செபம் எவ்வளவு நேர்த்தியானது என்றும் அதற்கு இணையாக வேறு எதுவும் இல்லை என்றும் கற்றுக் கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.

சாத்தான் பணியில் இருக்கிறான், அவன் ஒருபொழுதும் சோர்வடைவதில்லை, இக்காலத்திலும் இறைவனுக்கு நெருக்கமாகச் செல்ல விரும்பும் மக்களை அவன் சோதித்துக் கொண்டிருக்கிறான் என்ற திருத்தந்தை, இவ்வுலகில் ஆட்சி செய்யும் சக்திகளாகிய இருளின் தலைவர்களுக்கு எதிராகச் செயல்பட கிறிஸ்தவ விசுவாசம் துணைசெய்கின்றது என்றார்.

நம் மீட்பரோடு ஆள்-ஆள் உறவு கொள்வதன் மூலம், நோன்பு, தானதர்மம், செபம் ஆகியவை மூலம், கிறிஸ்துவின் உயிர்ப்பை நோக்கிய நமது மனமாற்றப் பயணம் நமது திருமுழுக்கு திருவருட்சாதனத்தை மீண்டும் கண்டுணரச் செய்கின்றது என்றும் திருத்தந்தை அதில் கூறியுள்ளார்.

“நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள்” (கொலோ. 2: 12) என்பது திருத்தந்தையின் இவ்வாண்டு தவக்காலச் செய்தியின் கருப்பொருளாகும்.

நன்றி: http://www.karampon.com/

முன்பு சாம்பல் புதன் என அழைத்ததாக ஞாபகம். விபூதி இந்து சமயத்துடன் சம்பந்தப்பட்டது. அதன் பெயரை ஏன் இதற்கு வைத்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

*

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

முன்பு சாம்பல் புதன் என அழைத்ததாக ஞாபகம். விபூதி இந்து சமயத்துடன் சம்பந்தப்பட்டது. அதன் பெயரை ஏன் இதற்கு வைத்தார்கள்?

தப்பிலி அண்ணா விபூதி என்றால் சாம்பல் என்றும் அர்த்தம். மனிதன் இவ்வுலகில் எத்தகைய வாழ்க்கை வாழ்த்தாலும் விருப்பப்பட்டதெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் இறுதியில் மண்ணுக்கே உரிமையாகின்றான். முடிசூடும் மன்னனும் இறுதியில் பிடிசாம்பலாவான் என்பதை உணர்த்துவதாகவே விபூதிப்புதன் அமைகிறது.

இந்த நாளில் குருவானர் "மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே” என்று கூறி சாம்பலினால் சிலுவை அடையாளம் வரைகிறார். சாம்பலை விபூதி என்றும் சொல்லுவதால் தான் இந்த பெயர் வந்திருக்கவேண்டும்.

நல்ல தத்துவகரமான விளக்கம் தமிழினி.

"மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே”

இப்பத்தான் வாழ்கையில் சில பல இலட்சியங்களை அடைய வேண்டுமென கனவு கண்டுகொண்டிருந்தேன். கனவில் கல்லைத் தூக்கிப் போடுறீங்கள். :(:lol:

Edited by thappili

போதாக்குறைக்கு.... மத்தியானம் வேலை இடத்திலை பாதிக் கோழியும் சாப்பிட்ட பயம் இருந்தது.

பாதி கோழியா? ஏன் உடம்பை கட்டுமஸ்தாக வைத்திருப்பதர்காகவா? :unsure:

  • தொடங்கியவர்

நல்ல தத்துவகரமான விளக்கம் தமிழினி.

இப்பத்தான் வாழ்கையில் சில பல இலட்சியங்களை அடைய வேண்டுமென கனவு கண்டுகொண்டிருந்தேன். கனவில் கல்லைத் தூக்கிப் போடுறீங்கள். :(

உங்கள் இலட்சியங்கள் அனைத்தும் நனவாகவேண்டும் தப்பிலி அண்ணா. இந்த நாள் எமக்கு உணர்த்துவது நாம் எவ்வளவு உச்சிக்கு போனாலும் எம் முடிவை மறந்து தலை கால் தெரியாமல் வாழக்கூடாது என்பதையே.

நாம் எப்பவோ ஒரு நாள் மண்ணுக்குத்தான் சொந்தம் என்பதை மறக்காமல் எம் இலட்சியங்களை அடைந்து வாழவேண்டும். உங்கள் இலட்சியக் கனவுகளில் எந்தக்கல்லும் விழாமல் முன்னேற வாழ்த்துக்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலையில் பிரெஞ்சு ரேடியோவில் ஒரு கத்தோலிக்கர் வந்து சண்டை பிடித்தார். முஸ்லீம்களின் நோன்புப்பெருநாளுக்கு கொடுக்கும் நேரத்தை அல்லது முக்கியத்துவத்தை இன்று எந்த வானொலியும் தொலைக்காட்சியும் (கத்தோலிக்க நாடாக இருந்தும்) இந்த புனித புதனுக்கு கொடுக்கவில்லை என்று கடிந்து கொண்டார். ஆனாலும் அவரது வாதம் பெரிதாக எடுபடவில்லை.

நன்றி இணைப்புக்கும் விளக்கத்துக்கும் தமிழ் இனி.

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை பார்த்திட்டு..... சைவ சமயத்துடன் தொடர்புள்ள பதிவாக்கும் என்று வந்திட்டன்.

போதாக்குறைக்கு.... மத்தியானம் வேலை இடத்திலை பாதிக் கோழியும் சாப்பிட்ட பயம் இருந்தது.

நல்ல காலம் கிறிந்தவர்களின் விபூதிப் புதன் என்ற படியால்.... சாப்பிட்ட கோழியும் வடிவாய் செமிச்சிட்டுது.

இணைப்புக்கு நன்றி தமிழினி.

பாதிக் கோழியா?

என்ன வயிறா வண்ணாங்குளமா?

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் முக்கியமான் நாள் பயனுள்ள் ,

தகவல் பதியும் தமிழினிக்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

really sorry i delete my coments.... :(:(

Edited by யாயினி

உலகமெங்கும் பரந்து வாழும் பலகோடிக் கணக்கான மக்களுக்கு ஒரு நேர உணவோ அல்லது சுத்தமான குடிநீரோ இல்லாமல் அன்றாடம் அவதிப் படுகின்றனர். இன்றிலிருந்து 40 நாட்களுக்கு ஆடம்பர வாழ்கையில் ஈடுபடாமல் எம்மை ஒறுத்து அதில் சேமிக்கும் பணத்தை அந்த மக்களை பராமரிக்கும் நிறுவனக்களுக்குக் கொடுப்பதன் மூலம் ஓரளவு மனத்திருப்ப்தி அடையலாம் :) (எம்முறவுளை நினைத்தால் எம் அனைவராலும் முடியும்! )

  • கருத்துக்கள உறவுகள்

really sorry i delete my coments

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி சகோதரி. :)

கிறிஸ்தவர்கள் இந்த நாளிலிருந்து உபவாசம் செய்து எளிய உணவுகளை உற்கொண்டு ஆடம்பரமின்றி வாழ்ந்து சேமிக்கும் பணத்தை கஷ்டப்படுவோர்களுக்கு உதவி செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதிருந்து மகளே இந்த காட்டிக்கொடுக்கும் வேலை :(

நான் அந்த நபரின் பெயரைக் குறிப்பிட்டேனா...????? :rolleyes::blink: என் எழுத்தால் அந்த நபரின் மனம் புண் பட்டு இருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.. :(:(

பின் குறிப்பு..மற்றவர்கள் விடும் தவறுகளை தாரளமாக சுட்டிக் காட்டுங்கள்.அதை பிரதி பண்ணி கொண்டு வந்து வச்சுட்டு கேள்வி கேட்டால் எங்களால் விட்ட பிளைகளை திருத்திக் கொள்வது கடினம்.நான் குறிப்பிடுவது விட்ட தப்பை இடத்தை விட்டு நீக்க முடியாது என்பதே.நன்றி.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

*

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

[quote name='தமிழ் சிறி'

நீங்க வேறை.... சில சனம் இரண்டு கோழியை சாப்பிட்டுப் போட்டு.... பசிக்குது என்று வயிறை தடவிக் கொண்டு திரியுங்கள். 685345_T.JPG

  • கருத்துக்கள உறவுகள்

*

Edited by தமிழ் சிறி

இது ஒரு சமையம் சார்ந்த பதிவு, இங்கே ஏன் இந்த கொலைவெறி? :unsure::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு சமையம் சார்ந்த பதிவு, இங்கே ஏன் இந்த கொலைவெறி? :unsure::rolleyes:

குட்டியின் வேண்டுகோளுக்கு இணங்க எனது அனைத்துப் பதிவுகளும் நீக்கப் படுகின்றது.

யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால், மன்னித்துக் கொள்ளவும். :)

குட்டியின் வேண்டுகோளுக்கு இணங்க எனது அனைத்துப் பதிவுகளும் நீக்கப் படுகின்றது.

யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால், மன்னித்துக் கொள்ளவும். :)

மன்னிப்புக் கேட்கும் அளவுக்கு பெரிய விஷயம் இல்லை அண்ண... :)

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்புக் கேட்கும் அளவுக்கு பெரிய விஷயம் இல்லை அண்ண... :)

குட்டி, மற்றைய மதத்தவர்களின் திரியில் நான் மூக்கை நுளைத்தது தவறு தான். :)

குட்டி, மற்றைய மதத்தவர்களின் திரியில் நான் மூக்கை நுளைத்தது தவறு தான். :)

சிறி அண்ண மற்றைய மதங்கள் என்று ஏன் பிரித்து சொல்லுகிறீர்கள்? இது ஒரு கருத்துக் களம் அண்ண, யார் வேணும் என்றாலும் கருத்து எழுதலாம்... நான் பொதுவாகத் தான் குறிப்பிடு இருந்தேன்.

தயவு செய்து குறை நினைக்க வேண்டாம். :)

  • 6 years later...
  • தொடங்கியவர்

 

 

மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்
மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும்
மறவாதே மறவாதே மனிதனே

பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கின்றோம் - 2
பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும்

மரணம் வருவதை மனிதன் அறிவானோ -2
தருணம் இதுவென இறைவன் அழைப்பாரோ

இறைவன் இயேசுவோ இறப்பைக் காடந்தவர் -2
அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கின்றான்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.