Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மார்ச் 19 – பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் 19 – பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு!

110110310144215594.jpg

பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவரும் நிலவு, வரும் 19ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது.

பூமியில் இருந்து நிலவு சுற்றிவரும் சுழற்சிப் பாதையில் அதன் சராசரி தூரம் 2,38,857 மைல்களாகும், அதாவது 3,84,403 கி.மீ. அது ஒரு நீள் வட்டப் பாதையில் பூமியை சுற்றி வருவதால் பூமிக்கு குறைந்த தூரத்திலும், பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்கும் சென்று சுற்றி வருகிறது. அதன் சுழற்சிப் பாதையில் பூமியில் இருந்து வெகு தூரத்திற்கும் செல்லும்போது (அபோஜி) பூமியில் இருந்து 4,06,395 கி.மீ. தூரம் வரை செல்கிறது.

அது தனது சுழற்சிப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது (பெரிஜி) அதன் தூரம் 3,57,643 கி.மீ. ஆக சுருங்குகிறது. இப்படிப்பட்ட நிலைதான் வரும் 19ஆம் தேதி, சனிக்கிழமை ஏற்படுகிறது. அன்றைக்கு நிலவு பூமிக்கு மிக அருகில் வருகிறது. அன்று பூமியில் இருந்த அதனை நாம் காணும் தூரம் 2,21,567 மைல்களாக, அதாவது 3,54,507.2 கி.மீ. தூரத்திற்கு வருகிறது. இதனால் நிலவு மிகப் பெரியதாக தெரியும்.

இப்படிப்பட்ட குறைந்த தூரத்திற்கு நிலவு வருவது ஒவ்வொரு ஆண்டும் நிகழவில்லை என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பு 1955, 1974, 1992, 2005 ஆகிய ஆண்டுகளில் நெருக்கமாக நிலவு வந்தது. அதன் பிறகு ஆறே ஆண்டுகளில் பூமிக்கு நெருக்கமாக வருகிறது.

அன்று வானத்தில் மேக மூட்டம் ஏதுமில்லாமல் இருந்தால் நீங்கள் அழகிய நிலவை மிக அருகில் நின்று பார்ப்பது போன்ற உணர்வுடன் பார்க்கலாம்.

மேட்டர் இத்துடன் முடிந்துவிடவில்லை! நிலவு இப்படி பூமியை நெருங்கி வருவதால் கடல் பொங்கும் (எல்லா பெளர்ணமி, அமாவாசை தினங்களிலும்தான் பொங்குகிறது), நில நடுக்கம் ஏற்படும், எரிமலைகள் வெடித்துச் சீரும் என்றெல்லாம் எக்கச்சக்க புரளிகளும் பரவி வருகின்றன. ஆனால் இதையெல்லாம் அறிவியலாளர்கள் மறுத்துள்ளனர். அன்றைக்கு கடலில் எழும் அலைகள் அதிகமாக இருக்கும் என்று மட்டும் கூறியுள்ளனர்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1103/10/1110310031_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு மேல்மாடி சமநிலை கூட குழம்பிவிடுமே..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு மேல்மாடி சமநிலை கூட குழம்பிவிடுமே..! :D

உள்குத்து தெளிவாக தெரியுது தோழர்... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் 19 – பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு!

110110310144215594.jpg

பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவரும் நிலவு, வரும் 19ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது.

பூமியில் இருந்து நிலவு சுற்றிவரும் சுழற்சிப் பாதையில் அதன் சராசரி தூரம் 2,38,857 மைல்களாகும், அதாவது 3,84,403 கி.மீ. அது ஒரு நீள் வட்டப் பாதையில் பூமியை சுற்றி வருவதால் பூமிக்கு குறைந்த தூரத்திலும், பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்கும் சென்று சுற்றி வருகிறது. அதன் சுழற்சிப் பாதையில் பூமியில் இருந்து வெகு தூரத்திற்கும் செல்லும்போது (அபோஜி) பூமியில் இருந்து 4,06,395 கி.மீ. தூரம் வரை செல்கிறது.

அது தனது சுழற்சிப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது (பெரிஜி) அதன் தூரம் 3,57,643 கி.மீ. ஆக சுருங்குகிறது. இப்படிப்பட்ட நிலைதான் வரும் 19ஆம் தேதி, சனிக்கிழமை ஏற்படுகிறது. அன்றைக்கு நிலவு பூமிக்கு மிக அருகில் வருகிறது. அன்று பூமியில் இருந்த அதனை நாம் காணும் தூரம் 2,21,567 மைல்களாக, அதாவது 3,54,507.2 கி.மீ. தூரத்திற்கு வருகிறது. இதனால் நிலவு மிகப் பெரியதாக தெரியும்.

இப்படிப்பட்ட குறைந்த தூரத்திற்கு நிலவு வருவது ஒவ்வொரு ஆண்டும் நிகழவில்லை என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பு 1955, 1974, 1992, 2005 ஆகிய ஆண்டுகளில் நெருக்கமாக நிலவு வந்தது. அதன் பிறகு ஆறே ஆண்டுகளில் பூமிக்கு நெருக்கமாக வருகிறது.

அன்று வானத்தில் மேக மூட்டம் ஏதுமில்லாமல் இருந்தால் நீங்கள் அழகிய நிலவை மிக அருகில் நின்று பார்ப்பது போன்ற உணர்வுடன் பார்க்கலாம்.

மேட்டர் இத்துடன் முடிந்துவிடவில்லை! நிலவு இப்படி பூமியை நெருங்கி வருவதால் கடல் பொங்கும் (எல்லா பெளர்ணமி, அமாவாசை தினங்களிலும்தான் பொங்குகிறது), நில நடுக்கம் ஏற்படும், எரிமலைகள் வெடித்துச் சீரும் என்றெல்லாம் எக்கச்சக்க புரளிகளும் பரவி வருகின்றன. ஆனால் இதையெல்லாம் அறிவியலாளர்கள் மறுத்துள்ளனர். அன்றைக்கு கடலில் எழும் அலைகள் அதிகமாக இருக்கும் என்று மட்டும் கூறியுள்ளனர்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1103/10/1110310031_1.htm

பார்த்தீர்களா எதிர்வு கூறபட்டு இருக்கிறது

என் மனிசி எனக்கு பக்கத்தில் வார நேரம் எல்லாம் நிலவு பக்கத்தில் வார மாதிரிதான் (அப்பாடா.. இந்த வார இறுதிக்கு இதைக் காட்டியே ஒரு வழி பண்ணிவிடலாம்)

  • கருத்துக்கள உறவுகள்

என் மனிசி எனக்கு பக்கத்தில் வார நேரம் எல்லாம் நிலவு பக்கத்தில் வார மாதிரிதான் (அப்பாடா.. இந்த வார இறுதிக்கு இதைக் காட்டியே ஒரு வழி பண்ணிவிடலாம்)

கட்டில் ஆடுவதைத்தான் பூமி நடுக்கம் என்கிறார்களோ....? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

19ல் வரும் சூப்பர்மூன் நிகழ்வால் பேரழிவுகள் ஏற்படலாம்-நிபுணர்கள் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, மார்ச் 11, 2011, 15:55[iST]

லண்டன்: ஜப்பானை இன்று மிகப் பெரிய நிலநடுக்கமும், சுனாமியும் தாக்கியுள்ள நிலையில் மார்ச் 19ம் தேதி பூமிக்கு மிக அருகே சந்திரன் நெருங்கி வருவதால், மிகப் பெரிய அளவில் பேரழிவுகள் ஏற்படும் என வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வரும் 19-ம் தேதி சந்திரன், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமிக்கு மிக அருகில் வருகிறது. அன்றைய தினம், பூமிக்கு 2 லட்சத்து 21 ஆயிரத்து 556 மைல் தூரத்தில் சந்திரன் நெருங்கி வரும். இதை சூப்பர் மூன் நிகழ்வு என்கிறார்கள் வி்ஞ்ஞானிகள். இதனால் அடுத்த வாரம் பேரழிவுகள் நடக்கலாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சூப்பர் மூன் நிகழ்வால்,

உலகில் நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் உள்ளிட்ட பேரழிவுகளைத் தூண்டும் என்பது நிபுணர்கள் கருத்து.

இதற்கு முன் 1955, 1974, 1992 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் இந்த சூப்பர்மூன் நிகழ்வு நடந்துள்ளது. அந்த 4 ஆண்டுகளிலுமே மோசமான வானிலை நிகழ்வுகள் நடந்துள்ளன.

சந்திரனால், பூகம்பத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால் கடல் அலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் வானிலையோடு சேர்ந்தால் கடலோரப் பகுதிகளில் பேரழிவுகள் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர் ஜான் கெட்லி தெரிவித்துள்ளார்.

thatstamil

ஜப்பானை நேற்று தாக்கிய பாரிய பூமியதிர்ச்சி, ஆழிப்பேரலையினால் பெரும் எண்ணிக்கையான சொத்துக்களும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை மார்ச் 19 திகதி சந்திரன் பூமியை நெருங்கி வரவுள்ளது எனவும் இதனால் பாரிய பூமியதிர்வுகள், சுனாமி போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் என ஆய்வாளர்கள் எதிர்வு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பூமியின் துணைக்கோளான சந்திரன் 2 இலட்சத்து 38 ஆயிரத்து 857 மைல்கள் தூரத்தில் அமைந்துள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி ஏறத்தாழ 2 இலட்சத்து 21 ஆயிரத்து 567 மைல்கள் வரை பூமியை நெருங்கி வரவுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளியில் நிகழும் இந்நிகழ்வு “சுப்பர் மூன்” என அழைக்கப்படும். .

இந்த மூன் கள் எல்லமே பிரச்சனையானவைதான் போல கிடக்குது...:(

பான்கி மூனும் அப்படித்தான் ...

சூப்பர் மூனும் அப்படித்தன்...:(

  • கருத்துக்கள உறவுகள்

பூமிக்கு அருகே சந்திரன் வருவதா அழிவுக்கு காரணம்

கடந்த 19 ஆண்டுகளுக்குப் பின், வரும் 19ம் தேதி 2,21,567 கி.மீ., தூரத்தில் சந்திரன் வருகிறது.

எப்போதெல்லாம் சூரியனுக்கு அருகே சந்திரன் வருகிறதோ, அப்போதெல்லாம் சுனாமி, எரிமலை வெடிப்பு, பயங்கர அழிவுகள் ஏற்படுகின்றன என்று, விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.பூமிக்கு அருகில் சூரியன் இம்முறை வருவதற்கு, "சூப்பர் மூன்' என்று பெயரிட்டுள்ளனர்.

இதனால், பூமியில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி அதிகரிக்கும்; பகல் அதிகமாக இருக்கும். சந்திரன் உருவத்தில் பெரிதாக காணப்படும்.விஞ்ஞானிகள் கணித்ததை போல், ஜப்பானில் சுனாமி கோரம் அரங்கேறியுள்ளது. கடந்த 1947, 1974, 1992, 1995, 2004 ஆகிய ஆண்டுகளில் பூமிக்கு அருகே சந்திரன் வந்த போதும் இதுபோன்ற கோர சம்பவங்கள் நடந்துள்ளன. 1974 ல் பூமிக்கு அருகே சந்திரன் வந்த போது ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரை புரட்டிப் போட்டது. 1995ம் ஆண்டு ஜப்பான் சுனாமியால் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.yarlmuslim.blogspot.com/

சூப்பர் மூனால் ஆபத்தா? உண்மையில் என்ன நடக்கும்? அறிவியல் விளக்கம்

இதெல்லாம் உண்மையா ? ஜெப்பானில் ஏற்ப்பட்ட சுனாமிக்கும் பூமிக்கு மிக அருகில் வரவிருக்கும் சந்திரனும் தொடர்புண்டா ? வரலாற்றில் இப்படி நிகழ்ந்த போது ஏதாவது இதற்க்கு முதல் நடந்திருக்கிறதா? இந்த சூப்பர் மூன் என்றால் என்ன ? என்பவை பற்றி ஆராய்வோம் .

சந்திரன் வழமையாக பூமியை சுற்றி எப்படி இயங்குகிறது ?

சந்திரன் பூமியை சரியான வட்ட பாதையில் சுற்றுவதில்லை .நீள்வட்ட பாதையில் தான் சுற்றுகிறது .

சந்திரனின் நீள்வட்ட பாதையில் மற்றைய பக்கத்தை விட ஒருபக்கம் 31 ,000 மைல்கள் குறைவாகும் .பூமியிலிருந்து மிக தூரத்தில் இருக்கும் போது Apogee நிலையிலும் மிக நெருங்கிய தூரத்தில் இருக்கும் போது Perigee நிலையிலும் இருக்கிறது . மார்ச் 19 ஆம் திகதி மட்டும் இந்த Perigee அதாவது நெருங்கிய நிலையில் சந்திரன் இருக்கப்போவதில்லை .ஒவ்வொரு மாதமும் தான் இது நிகழ்ந்துகொண்டு வருகிறது .

ஆனால் எல்லா முறையும் நீள் வட்ட பாதையும் ஒரே அளவில் இருப்பதில்லை .19 வருடங்களின் பின்னர் இந்த முறை தான் இது மிக மிக அருகில் வரும் . வழமையாக 2 % பூமியை நெருங்கி வரும் இந்த முறை 8 % நெருங்கி வருகிறது .

சூப்பர் மூன் டே(Super moon day ) என்பது என்ன ?

"சூப்பர்" மூன் டே என்பது சந்திரன் எமது பூமிக்கு மிக மிக அருகில் வரும் போது முழுதாக தெரியும் நாள் .அதாவது பூமிக்கு மிக அருகில் ஏற்ப்படும் பௌர்ணமி எனலாம் .

சாதாரணமாக பூமியிலிருந்து 400 ,000 கிலோ மீட்டர்கள் தொலைவில் தான் சந்திரன் இருக்கும் .ஆனால் மார்ச் 19 ஆம் திகதி சந்திரன் சாதாரண தூரம் 400 ,௦௦௦ கிலோமீட்டர்களில் இருந்து 43 ,423 கிலோ மீட்டர்கள் குறைந்து பூமியிலிருந்து 356 ,577 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் .

இந்த தினத்தன்று பூமியதிர்ச்சி ,பெரிய அலைகள் ,சூறாவளி போன்றன உலகம் முழுதும் ஏற்ப்படலாம் என சில வானவியலாளர்கள்/ ஜோதிடர்களின் கருதுகிறார்கள் .

எக்ஸ்ட்ரீம் சூப்பர் முன் டே(Extreme Supermoon day)

மேற்கத்தைய பிரபல வானவியலாளர் ரிச்சர்ட் (Richard Nolle ) தான் சூப்பர் மூன் தினத்தன்று பூமியில் மிகப்பெரிய அழிவுகள் ஏற்ப்படும் என்று தெரிவித்துள்ளார் .இதனால் இதனை எக்ஸ்ட்ரீம் சூப்பர் மூன் டே என கூறியுள்ளார் .

ஆனால் இதை பெரும்பாலான விஞ்ஞானிகள் ஏற்க்கவில்லை என்பது தான் கொஞ்சம் ஆறுதலான விடயம் . காரணம் இதற்க்கு எந்தவித விஞ்ஞான காரணங்களும் இல்லை என்பது அவர்களுடைய கருத்து .

ஜப்பானில் ஏற்ப்பட்ட பூமியதிர்ச்சியும் ,சுனாமியும் இந்த சூப்பர் மூனால் ஏட்ப்பட்டதா என்ற கேள்வி தான் இப்போது பலரிடையே தோன்றியுள்ளது .

இல்லை என்பதே விஞ்ஞானிகளின் திட்டவட்டமான பதில் .காரணம் சுனாமி ஏற்பட்ட தினத்தன்று சந்திரன் சாதாரண தூரத்தை விட பூமியில் இருந்து விலகி இருந்தது .

இதுவரை ஏதாவது பாதிப்புகளை ஏற்ப்படுத்தி இருக்கிறதா என்று பார்த்தால்...

1955 ,1974 ,1992 மற்றும் 2005 களில் சூப்பர் முன் ஏற்பட்ட போது இதே போல இயற்க்கை அழிவுகள் ஏற்பட்டுள்ளன .1955 இல் அவுஸ்திரேலியாவில் ஏற்ப்பட்ட பாரிய வெள்ள(Hunter Valley floods ) அனர்த்தம் .2005 இல் சூப்பர் முன் ஏற்ட்படுவதட்க்கு ஒரு கிழமைக்கு முதல் தான் இந்தோனேசியாவில் சுனாமி ஏற்பட்டது .காற்றினா புயலும் அதனால் தான் ஏற்பட்டது என்கின்றனர் .ஆனால் இவை தற்செயலாக ஏற்ப்பட்டவை என்பது தான் விஞ்ஞானிகளின் கருத்து .

வழமையாக சந்திரனின் ஈர்ப்பால் அலைகளின் உயரம் அதிகரிக்கும் ஆனால் பூமியதிர்ச்சியை ஏட்ப்பட்டுத்தும் அளவுக்கு தட்டுகளை நகர செய்யும் அளவுக்கு மாற்றத்தை இதனால் ஏற்படுத்த முடியாது என விஞ்ஞானிகள் இப்போது திட்டவட்டமாக அறிவுத்துள்ளார்கள்.seismologists and volcanologists கருத்துப்படி பூமியின் உள் சக்திக்கோ (internal energy ) அதன் சமநிளைக்கோ மாற்றம் ஏற்படாது என்று கூறிகின்றனர் .

ஆனால் இந்த முறை சந்திரனை மிக பெரிதாக அனைவரும் அருகில் பார்க்கலாம் .

http://www.4tamilmedia.com/ww5/index.php/knowledge/information/3457-2011-03-19-06-31-59

பங்குனி 19ம் பௌர்ணமியும் சந்திரனின் "பெரிய அளவும்" (super size)

A larger-than-average moon will highlight the sky as a result of a point in the moon’s orbit that brings it within 221,567 miles from Earth, the closest the moon has been to the planet since 1992.

Dr. Alice Hawthorne Allen, a professor of astronomy at Concord University, said what will be experienced is called a “lunar perigee,” a phenomenon which makes the moon appear larger than it normally does.

“The moon has a nearly circular, elliptical orbit around earth,” Allen said. “On March 19 (tonight), it will be in the part of its orbit that is closest to the earth. This position is called the perigee of its orbit. This month, the moon happens to be at the full moon phase at the same time it is at perigee. Full moons rise at sunset and set at sunrise, so they are out all night. The full moon at perigee appears to be a 14 percent bigger circle in the sky.”

http://bdtonline.com/local/x814641457/Full-moon-brightest-in-19-years

19 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் சூப்பர் மூன் நிகழ்வு: இன்று காணுங்கள்

குறைந்த பட்சம் 19 வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறுவதாகக் கூறப்படும் சந்திரன் பூமியை மிகவும் நெருங்கி வரும் விண்வெளி அதிசயம் இன்று இடம்பெறவுள்ளது.

சுப்பர்மூன் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வை தெட்டத் தெளிவாகக் காணக்கூடியவாறு இன்று வானம் மிகத் தெளிவாக இருக்கும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஒரு முழு நிலவு அல்லது புது நிலவு பூமியை 90 வீதம் அருகே நெருங்கி வரக்கூடியதாக இன்றைய நிகழ்வுஅமைந்திருக்கும்.

கடைசியாக இந்த நிகழ்வு 1992 ஜனவரியில் இடம்பெற்றுள்ளது. இந்த சுப்பர்மூன் நிகழ்வு இடம்பெறுகின்ற போது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் சுமார் 250000 மைல்களாக இருக்கும். இன்று மாலை 6.10க்கு பிரிட்டனில் இருந்து சந்திரனின் தூரம் சரியாக 220625 மைல்களாக இருக்கும்.

சுமார் ஒரு மாதகாலத்துக்கு முன் இருந்த தூரத்தை விட இது 625 மைல்கள் கிட்டிய தூரமாகும். அதுமட்டுமன்றி வழமையாக சந்திரன் தென்படுவதிலும் பார்க்க 14 வீதம் பெரிதாகவும், 30 வீதம் பிரகாசமானதாகவும் இருக்கும்.

கிட்டத்தட்ட தொடுவானத்துக்கும், மலை முகடுகளுக்கும் மிக நெருக்கமாக இன்று சந்திரன் காட்சியளிக்கும். இன்று தென்படவுள்ள சந்திரனின் அளவு வித்தியாசத்தை மனிதக் கண்களால் ஒப்பீடு செய்ய முடியாமல் இருக்கும் என்றும் வானியல் வஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இன்றைய நிகழ்வு பூமியில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதையும்,அன்மையில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமிக்கும் இன்றைய நிகழ்வுக்கும் சம்பந்தம் உள்ளது என்பதையும் திட்டவட்டமாக விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர்.

இது பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். அதைப் பார்த்து ரசியுங்கள் அவ்வளவுதான் வேறு ஒன்றும் இதில் இல்லை என்று அவர்கள் மக்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

http://www.lankasritechnology.com/view.php?22cQ09Tc202znBZb4e2cSOl7acb3eCAA0dde4UMCC0bcedlOA3e4dnBnB4302dr90U42

  • கருத்துக்கள உறவுகள்

இதை சாட்டாய் வைத்து... மனுசியை கட்டிப் பிடிச்சுக்கொண்டு நிலவை பாப்பம் எண்டால்... :wub:

இங்கை, முகில் மூட்டத்தோடை மழை பெய்யுது. :o

மா... விக்கப் போனா காத்தடிக்குது.

உப்பு... விக்கப் போனா மழை பெய்யுது

ஹ்ம்ம்..... கொடுத்து வைச்சது அவ்வளவு தான்...... :(

நேற்று மாலை 7 மணியளவில் சந்திரன் ஓரளவு பெரிதாகவே காணப்பட்டது, அத்துடன் நள்ளிரவு 12 மணியளவில் சந்திரன் கொஞ்சம் சிறிதாக இருந்தாலும் மிகவும் பிரகாசமாகவே இருந்தது.

(எனக்குத்தெரியாமல் யாரோ என் பின் தோட்டத்தில் லைட் பூட்டி விட்டார்களோ என்று ஒரு கணம் யோசித்து, ஜன்னலில் இருந்த திரையை விலக்கிப் பார்த்த போது தான் நிம்மதி வந்தது :D )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இருக்கிற இடத்திலை ஒரே நீலவானமாய் இருக்கு.....இரவைக்கு பெரிய கூத்து இருக்குmuuththaval.gifkuddiyan.gif

கு.சா. அண்ண இப்பிடி ஒரு படத்தை மினக்கட்டுத் தேடி எடுத்துப் போட்டு இருக்கிறார் என்றால் அதில் ஏதோ விஷயம் இருக்கு... ^_^

இதைத் தான் சொல்லுறதோ சுப்பர் மூன் நிகழ்வு என்று :lol::D

நான் இருக்கிற இடத்திலை ஒரே நீலவானமாய் இருக்கு.....இரவைக்கு பெரிய கூத்து இருக்குmuuththaval.gifkuddiyan.gif

அப்ப வீட்டில் பெரிய நிலநடுக்கம் இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப வீட்டில் பெரிய நிலநடுக்கம் இருக்கு

எங்கை விட்டாத்தானே நாய்க்கூடங்கள்....இண்டைக்கெண்டு பாத்து சிவராத்திரிமாதிரி அங்கையும் இஞ்சையுமெண்டு குறுக்காலையும் நெடுக்காலையும் திரியுதுகள்....வாறவிசருக்கு.... :huh:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பார்த்தேன் நண்பரின் வீட்டு ஆறாவது மாடியிலிருந்து. (பக்கத்தில் அதுதான் கொஞ்சம் உயரம்). ஒரே கரு முகில் கூட்டமாய் இருந்ததால் இடைக்கிடை நிலவும் கண்ணடிச்சுக் கொண்டே போச்சுது. :lol:

எங்கை விட்டாத்தானே நாய்க்கூடங்கள்....இண்டைக்கெண்டு பாத்து சிவராத்திரிமாதிரி அங்கையும் இஞ்சையுமெண்டு குறுக்காலையும் நெடுக்காலையும் திரியுதுகள்....வாறவிசருக்கு.... :huh:

இரவு 11 மணிக்கு,

சாளரத்துக்கு சரி நேரே நிலவு பொழிந்தது

அறை முழுக்க பாலின் நிறத்தில் ஒளி

பிள்ளைகள் நல்ல நித்திரை

மனிசியும் நானும் மட்டும் தான் முழிப்பு

பிறகு.....

சொல்லவா வேண்டும்....!!

நிலவுக்கு கோடி நன்றிகள் :D

  • கருத்துக்கள உறவுகள்

நிலவுக்கு கோடி நன்றிகள் :D

ஊரிலும் ஏன் இங்கும் பார்த்திருக்கின்றேன்

தண்ணி அடிப்பவர்கள்

துக்கத்துக்கும் அடிப்பார்கள்

சந்தோசத்துக்கும் அடிப்பார்கள். தேவை ஒரு சாட்டு

அதேபோல் தம்பி நிழிலியும்...........

ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு நிலவையும்............??? :wub::D:D

இரவு 11 மணிக்கு,

சாளரத்துக்கு சரி நேரே நிலவு பொழிந்தது

அறை முழுக்க பாலின் நிறத்தில் ஒளி

பிள்ளைகள் நல்ல நித்திரை

மனிசியும் நானும் மட்டும் தான் முழிப்பு

பிறகு.....

சொல்லவா வேண்டும்....!!

நிலவுக்கு கோடி நன்றிகள் :D

:wub: :wub: :wub: இன்னும் 7 மாசம் போக மீண்டும் வருமா? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரவு 11 மணிக்கு,

சாளரத்துக்கு சரி நேரே நிலவு பொழிந்தது

அறை முழுக்க பாலின் நிறத்தில் ஒளி

பிள்ளைகள் நல்ல நித்திரை

மனிசியும் நானும் மட்டும் தான் முழிப்பு

பிறகு.....

சொல்லவா வேண்டும்....!!

நிலவுக்கு கோடி நன்றிகள் :D

அடுத்த சுப்பர்மூன் வராமலே விடப்போகுது :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.