Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடும்பங்களில் ஆண்கள் பெண்களால் புறக்கணிக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பங்களில் ஆண்கள் பெண்களால் புறக்கணிக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் ஏன்?

பல குடும்பங்களை சந்தித்து உரையாடிய சந்தர்ப்பங்களில் ஆண்கள் பெண்களால் துன்புறுத்தப்படுவதும், புறக்கணிக்கப்படுவதையும் கண்கூடாக காணக்கூடியதாக இருக்கின்றது.

ஆசிய இன மக்களிடையே இந்த நிலைப்பாடு சற்று அதிகமாகவே காணப்படுகிறது?

இதற்கு என்ன காரணம்?

பாதிக்கப்பட்ட ஆண்களும் முன்மொழியலாம்.

பெண்களும் தங்கள் தரப்பில் கருத்துகளை முன்வைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை அதற்கு காரணம் ஆண்கள் தான்...ஒரு ஆண் தான் காதலித்த பெண்னை திருமணம் செய்யும் போதோ அல்லது பெற்றோர் பேசி ஊரில் இருக்கும் பெண்னை திருமணம் செய்யும் போதோ 1)தன்னை தகுதிக்கு மீறி உயர்த்தி சொல்லுதல்[சில உண்மையான,விதி விலக்கான ஆண்களும் உண்டு அவர்களை விடுவோம்.] உதாரணமாக தான் ஒரு பெரிய கம்பனியில் வேலை செய்கிறேன்,எனக்கு இவ்வளவு சம்பளம்,எனக்கு வீடு,பெரிய கார் இருக்குது என்பது போன்ற பல பொய்களை சொல்வார்கள் பெண்களும் அவர்களை நம்பி திருமணம் செய்த பிறகு தான் தங்கள் கணவரது உண்மையான முகம் தெரிய வந்தவுடன் ஏமாற்றம் சண்டையாக வெடிக்கும்.ஆண்கள் ஏன் தங்கள் தகுதிக்கு ஏற்ற மாதிரி தங்களை உண்மையாக நேசிக்கும் பெண்களை திருமணம் செய்வதில்லை? பெண் அழகாக,படித்த, நிறைய சீதனத்தோடு பெண் வேண்டும் என்டால் இப்படித் தான் பிரச்சனை வரும் சுருக்கமாக சொன்னால் ஆணோ அல்லது பெண்ணோ அளவிற்கு மீறி ஆசைப் பட்டால் இப்படித் தான் நடக்கும்...2)காதலிக்கும் போதோ அல்லது திருமணம் பேசி பெண்ணூடன் கதைக்க தொடங்கும் போதோ அவர்கள்[பெண்கள்] என்ன சொன்னாலும் ஆண்கள் உடனே தலையாட்டுவார்கள்,அவர்கள் சொன்னதை உடனே செய்வார்கள் ஆனால் திருமணத்தின் பின்னோ நேர் எதிராக நடந்து கொள்வார்கள் ஏன் முதலே தாங்கள் இப்படித் தான்,என்னால் இப்படித் தான் நடந்து கொள்ள முடியும் என்டு சொல்லி விட்டால் பிறகேன் குடும்பத்தில் பிரச்சனை வருகிறது?...3)பொதுவாக புலம் பெயர் நாட்டில் ஆண்,பெண் இருவரும் வேலைக்குப் போவார்கள் அதை விட பெண்களுக்கு எக்ஸ்ராவா பல வேலைகள் உண்டு பிள்ளைகளை கவனித்தல்,அவர்களது படிப்பு,குடும்பத்தின் பொருளாதார நிலை போன்றன.ஆண்கள் சம்பளத்தில் தங்கள் தேவைக்குப் போக மிச்சத்தை கொண்டு வந்து கொடுத்துப் போட்டு குடும்ப பாரத்தை முழுக்க பெண்களது தலையில் ஏற்றினால் அவர்கள் பாவம் என்ன தான் செய்வார்கள் அதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி பிரச்சனை வெடிக்கின்றன.

ஆகவே ஆண்களே திருமணம் செய்கிறது என்டு முடிவு செய்திட்டால் முதலே பெண்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள்,உண்மையாய் இருங்கள்,குடும்ப பொறுப்பை சேர்ந்து சுமவுங்கள்.

பெண்களே திருமணம் முடிக்கும் முன் ஆண் நல்லவனா,பொறுப்பானவனா,குடும்ப பாரத்தை சுமக்க கூடியவரா,உழைப்பாளியா எனப் பார்த்து திருமணம் செய்யுங்கள் வெறும் அழகிலும்,பணத்திலும் ஏமாந்து போகாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமை ..உணர்வுகள் மதிக்க் படாமை ....சுயநலம் ....மது .... புகை போனவற்றுக்கு அடிமையாதல் .பொறுமையின்மை ...வேலைப்பளு... அளவுக்கு மிஞ்சிய ஆசை ..பொதுவாக அன்பு இல்லாத தன்மை

இருபாலரும் துன்ப படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் உலகம் - ஆஸ்திரேலியா

மரபு விக்கி தளத்திலிருந்து

எழுதியவர் - திருமதி சீதாலட்சுமி அவர்கள்

________________________________________________________________________________________________________

ஆஸ்திரேலியா பெண்கள் உலகம் -–ஒரு பார்வை

ஆஸ்திரேலியாவில் ஓர் ஆண்டு இருந்தேன். எங்கு சென்றாலும் அங்குள்ள சமுதாயத்தினைப் பார்ப்பேன். முதலில் நூலகம் சென்று அந்நாட்டு வரலாறுகளைப் படிப்பேன். பின்னர் சிலருடன் பழகுவதும், அவர்கள் வீடுகளுக்கும் செல்வேன். அந்நாடு பத்திரிகைகளையும் விட்டு வைக்க மாட்டேன். ஓர் ஆய்வாளருக்கு இவை உதவும் கரங்கள்.

என் பேரன் ஒரு செய்தி கொண்டு வந்தான். அந்த செய்தி, எனக்கு வியப்பும் வேதனையும் கொடுத்தது. அவனு டன் படிக்கும் சில மாணவர்களுக்கு தங்கள் தந்தையின் பெயர் தெரியாது. யாராவது கேட்டு விட்டால் தயங் காமல் அவர்கள் சொல்லும் பதில் - “உங்களுக்கு அவர் பெயர் எதற்கு ? நான் மாணவன் என்னையறிய என் பெயர் மட்டும் போதும் “ அவன் தாயார் திருமணம் ஆகாமல் பெற்றிருக்கலாம். அவன் ஒரு விலை மாதின் மகனாகவும் இருக்கலாம்.

’ஆஸ்திரேலியாவின் முதல் வெள்ளை மனிதன் ஒரு விலைமாதின் மகன்’ என்று எழுதப்பட்ட புத்தகம் அங்கு நூலகத்தில் இருக்கின்றது. இது ஒரு சோகக் கதை. அமெரிக்காவிற்கும் பின்னால் உதயமான நாடு. அண்டை வீட்டுத் துயர் தெரிந்திருக்க வேண்டும். மனிதன் ஒவ்வொரு நாட்டிலும் மிருகமாக நடமாடி இருக்கின்றான்; இன்னும் நடமாடிக் கொண்டிருக்கின்றான்.

இன்று சிட்னி என்று பேசப்படும் இடம் ஒரு திறந்த வெளிச் சிறைச் சாலையாக இருந்தது. பிரிட்டிஷ் காலனியின் ஆதிக்கத்தில் நடந்தது. அவர்கள் நாட்டுக் குற்றவாளிகளை இங்கே இறக்குமதி செய்தனர். பூர்வீகக் குடிகளின் குழந்தைகளைப் பிரித்து அவர்களை விரட்டியது மட்டுமன்று; அவர்கள் செய்த இன்னொரு கொடுமை அழியாக் கறையைக் கொண்டி ருக்கின்றது. இப்பொழுது சிலர் மாற்றிப் பேசுகின் றார்கள். பிரச்சனைகளைப் பார்க்கலாம் . 1788 -1852 இதற்கிடையில் 24000 பெண் கைதிகள் அனுப்பப் பட்டிருக்கின்றார்கள். இது இப்பொழுது அவர்கள் சொல்லும் எண்ணிக்கை. முன்னால் ஏறத்தாழ 70,000 பெண்கள் வந்திருக்கலாம் என்றும் பேசப்பட்டது.

ஆரம்பத்தில் விபச்சாரக் குற்றத்தில் கைதி செய்த வர்களை அங்கு வேலை பார்ப்பவர்களுக்கும் கைதிக ளுக்கும் எல்லா பணிகளையும் செய்ய அதாவது அவர்கள் உடல் இச்சையை முதற்கொண்டு தீர்த்து வைக்க அனுப்பட்டார்கள் என்று கூறப்பட்டது. வெளி நாட்டுப் பத்திரிகையாளர்கள் விமர்சனம் செய்ய ஆரம்பிக்கவும் அனுப்பட்ட பெண்கள் குற்றம் புரிந்தவர் என்று மறுத்தனர். அதுமட்டு மன்று; இப்படிப் பத்திரிகையில் எழுதவும் கூடாதும் என்று அறிவித் தனர். எந்தக் காரணம் பற்றி வந்தால் எனன? எத்தனை பேர்களாயிருந்தாலென்ன? வந்தவர்களின் வேலை அதுதான். வீட்டு வேலை செய்யப் போனால் அந்த ஆடவனைத் திருப்தி செய்ய வேண்டும். அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்குத் தகப்பன் பெயர் கிடையாது. அந்நாட்டில் எந்த உரிமையும் கிடையாது. அது மட்டு மன்று, அவர்களையோ, அவர்கள் பிள்ளைகளையோ என்ன செய்தாலும், கொன்றால் கூடக் குற்றமில்லை. எத்தனை சம்பவங்கள், எத்தனை கதைகள். எல்லாம் புத்தகங்களில் கொட்டிக் கிடக்கின்றன.

அந்தப் பெண்களுக்கு , அவர்கள் வாரிசுகளுக்குக் கிடைத்த அவமானம் கொஞ்சமல்ல. முறையான வாழ்வு கிடையாது. பின்னர் திருமணம் செய்த பொழுதும் நிலையாக இல்லை. இதயக் கனல் தகிக்க அவர் முன் னுக்கு வர கடுமையாக உழைத்தனர்; படித்தனர். தொழில் செய்தனர். இன்று அந்தப் பெண்கள் ஆண்களைப் பற்றி கவலைப் படவில்லை.

அவர்களைத் தவிர, சுரங்க வேலைக்காக வந்தவர்கள், போரினால் வந்த அகதிகள் தான் குடிமக்கள். திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் எண்ணிக்கை எல்லாத் தரப்பினர்களிடையேயும் அதிகமாயிற்று. பெண்ணுக்கு வாழ்க்கையில் உத்திரவாதம் இல்லை. ஆணின் சபலத்திற்கும், வன்முறை குணத்திற்கும் பணியவேண்டியதில்லை என்ற உணர்வு வளர ஆரம்பித்தது. இக்குணம் எல்லாத் தரப்பினர்களி்லும் பெரும்பான்மையினரிடம் வளர ஆரம்பித்துவிட்டது. அடிக்கடி விவாகரத்துத் தேடும் ஆணாயிருந்தால் பெண் ஒதுக்க ஆரம்பித்துவிட்டாள். உலகிலே ஆஸ்திரேலியப் பெண்கள் தனித்து வாழக் கற்றுக் கொண்டு விட்டார்கள். உடலுறவுக்கு ஆணைப் போல் தற்காலிகமாக இச்சையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் பெண்களின் எண்ணிக்கையும் வளர ஆரம்பித்துவிட்டது. ஒருவன் காதல் என்று சொன்னால் போதும். அவன் முன்னாள் சரித்திரம் பார்ப்பார்கள். வேண்டும், வேண்டாம் என்று முடிவெடுப்பது இப்பொழுது பெண்ணாகிவிட்டாள். இந்த விகிதாசாரமும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கின்றது. கல்வியாலும் உழைப்பாலும் தன்னை உயர்த்திக் கொண்ட பெண் அடி வாங்க, கொடுமைகளைத் தாங்கத் தயாரியில்லை. இந்த எழுச்சி ஆணால் பொறுக்க முடிய வில்லை. இது வரை அவன் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் சுதந்திரம் அவனுக்கு இருந்தது. இப்பொழுது ஆணின்றிப் பெண் வாழ முடியும் என்று நிரூபித்துக் காட்டவும். அவன் மேலும் மிருகமாகி அடித்தவன், இப்பொழுது கொலை செய்ய ஆரம்பித்து விட்டான். சில ஆய்வுகளில் இந்த வன் முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிகின்றது .

ஆண் வாழ்ந்த வாழ்க்கையைப் பெண் தேர்ந்தெடுக்க ஆரம்பித்து விட்டாள். குழந்தை பெறுவதும் பெறா ததும் அவள் கையில். அரசியலில் ஆஸ்திரேலியப் பெண்கள் மிகவும் முன்னேறி இருக்கின்றார்கள். பெண்களின் துணிவும், உழைப்பும், கல்வி,தொழில், அரசியல் இவைகளில் அவர்களின் முன்னேற்றம் அமெரிக்காவில் கிடையாது .

ஜப்பானில் கணவன் பணியிலிருந்து ஓய்வு பெறும் பொழுது மனைவி பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு சட்டம் வாங்கிவிட்டார்கள். இதன் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்தி ருக்கின்றது . இந்தியாவிலும் மணமின்றிச் சேர்ந்து வாழும் பழக்கம் தொடங்கிவிட்டது. திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது பாபமில்லை என்று கூறுவோரின் எண்ணிக்கையும் கூட ஆரம்பித்துவிட்டது.

திருமணத்திற்கு முன் பெண் எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் ஆண்களின் விகிதாசரமும் கூட ஆரம்பித்துவிட்டது. ஆடம்பர வாழ்க்கைக்காகப் பிள்ளைகள் எப்படி இருந்தாலும் கண்டு கொள்ளாத பெற்றவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூட ஆரம்பித்திருக்கின்றது.

இன்னும் மாயையில் மனிதர்கள் உட்கார்ந்தி ருக்கின்றார்கள். விலங்காய்த் திரிந்த மனிதன் கண்டு பிடித்த குடும்பம் சிதைய ஆரம்பித்திருக்கின்றது. கூட்டுக் குடும்பம் போயிற்று. சிறிதளவு ஓட்டுறவு இருந்ததும் இப்பொழுது போய்க் கொண்டிருக்கின்றது. இங்கும் பெண், கணவனை வேண்டாம் என்று ஒதுக்க ஆரம்பித்து விட்டாள். கணவனைவிட அதிகச் சம்பளம் பெண் வாங்கினால் அவள் ஒன்று அவனை அலட்சியப் படுத்துகின்றாள், அல்லது விலகி விடுகின்றாள். அய்யா, இது எங்கோ ஒன்று, இரண்டல்ல, பார்த்தினீயச் செடிபோல் பரவிக்கச்கொண்டிருக்கும் மாற்றம். விலங்கு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக் கின்றோம். இந்தம்மா இதை மிகைப் படுத்தி பேசுகின்றாள் என்று கூறிவிடுவீர்கள்.

நெருப்புப் பொசுங்கும் வாடையை நீங்கள் உணர வில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

_52028589_pair.464.jpg

பிரித்தானிய நாடாளுமன்றம் கூடுகிறது... ஒருவர் எழும்பிப் பேசுகிறார்.. பெண்களின் தலையெடுப்புக்களால் உயர் தொழில்களில் ஆண்களின் பங்களிப்பு வீழ்ச்சி கண்டு கொண்டு வருகிறது. குறிப்பாக உயர்கல்விக்குள்ளும்.. பிரதமை தொழில்களுக்குள்ளும் பெண்களின் ஆதிக்கம் கூடி இருக்கிறது. இதனால் ஆண்களிற்கான சம வாய்ப்பு இழக்கப்படுகிறது அல்லது அதற்கு தடை ஏற்படுகிறது. இதனை நான் சொல்வதால் நான் பெண்களை அவர்களின் முன்னேற்றத்தை எதிர்க்கிறேன் என்பதல்ல பொருள். ஆண்கள் சம வாய்ப்பை இழக்கிறார்கள் என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று கூறி அமர்ந்தார். அவர் வேறு யாருமல்ல பிரித்தானிய ஆளுங்கட்சி அமைச்சர். இது சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவம்.

எனி நாங்கள்.. பெண்களை ஆண்களை மதிக்காததற்கு உள்ள காரணங்கள் சிலவற்றை பார்ப்போம்..

1. பெண்களை இந்த சமூகம் ஆண்களுக்கு சரியாக இனங்காட்டுவதில்லை. பதுமைகள்.. மென்மைகள்.. கிலுகிலுப்பூட்டிகள்.. எல்லாம் நல்லதாகச் செய்யக் கூடிய திறமைசாலிகள்.. பொறுமைசாலிகள்.. குடும்பப் பொறுப்புள்ளவர்கள்.. என்று சொல்லி அதற்கேற்பத்தான் இந்த வியாபார உலகத்தில் அவர்கள் இனங்காட்டப்படுகின்றனர். பெண்கள் சக மனிதர்கள் என்ற வகையில் அவர்களின் இயல்பான குணங்கள் அம்சங்கள் தொடர்பில் ஆண்கள் சரியாக அறிந்து கொள்ளாமை அல்லது அறியச் செய்யபடாமை பெண்கள் ஆண்கள் மீது அதிகம் செல்வாக்குச் செய்ய கூடிய ஏது நிலையை உருவாக்குகிறது.

உதாரணத்திற்கு: இன்றைய நிலையில் ஒரு பெண் ஒரு ஆணை அடிக்கிறாள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அதன் விளைவுகள் இப்படித்தான் இருக்கும்.. அவன் எங்க கையை வைச்சானோ.. என்ன துணிச்சலான பெண்.. பெண் விடுதலைக்கு இவள் ஒரு எடுத்துக்காட்டு.. பெண் ஆணிற்கு சமன்... பெண்கள் இன்று எதையும் செய்ய துணிந்துவிட்டார்கள் இப்படித்தான் அதிகம் பேசப்படும். ஆனால் உண்மையில் அவள் ஒரு குடிகாரியாக.. போதைக்கு அடிமைப்பட்டவாளாக இருப்பாள். கணவனின் காசைத் திருடப் போய் அவன் அதை தடுக்கப் போய் அங்கு நடந்த கைகலப்பாக கூட அது இருக்கலாம்.

2. பெண்களின் குடும்பப் பங்களிப்பு குழந்தை கணவன் வீடு பராமரிப்பு என்ற நிலைக்கு அப்பால் பொருண்மியத்திலும் அமைத்துவிட்டுள்ளதோடு அநேக நாடுகளில் குழந்தைகளின் பாராமரிப்பில் கல்வியில் பெண்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

புலம்பெயர்ந்த நாடுகளில் குறிப்பாக எம்மவர் மத்தியில் ஆண்கள் பலருக்கு தங்கள் குழந்தைகளின் நாளாந்த கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் எதுவும் தெரியாத நிலை. இது ஒரு மோசமான நிலை. அந்தத் தந்தை கல்வியியல் பராமரிப்பியல் ரீதியில் குடும்பத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சூழல். அவருக்கு வேலைக்குப் போறது மட்டும் தான் வேலை. இது மனைவிகள் இலகுவாக பிள்ளைகளிடம் தந்தை தொடர்பான தவறான எண்ணத்தை ஏற்படுத்த அநேக இடங்களில் பாவிக்கப்படுகிறது. இது ஒரு நாள் அந்த குழந்தைகளோடு அவளும் கணவனை வெறுக்க தண்டிக்க வகை செய்யும். அண்மையில் தாயை தந்தை பேசிட்டார் என்று மகன் தந்தைக்கு அடித்து.. பொலிஸ் வந்த சம்பவங்கள் கூட புலம்பெயர் நாடுகளில் நம்மவர்களால் பதிவிடப்பட்டுள்ளது.

உ+ம்: உங்கப்பாக்கு எதுவும் தெரியாது. நான் தான் பேரண்ஸ் மீற்றிங்குக்கு வரணும்.

3. ஆண்களுக்கு பெண்கள் தொடர்பில் வழங்கப்படும் அறிவியல் ரீதியில் ஆராயப்படாத பெண்கள் பற்றிய "கொசிப்" செய்திகள். இந்த யாழ் களத்திலையே பாருங்கள்.. ஏன் இன்றைய தமிழ் இணைய ஊடகங்களைப் பாருங்கள்.. அவற்றில் எல்லாம்.. பெண்களை தாஜா பண்ண இத்தனை வழிமுறைகள்... பெண்களுக்கு கூஜா தூக்க இத்தனை வழிமுறைகள்.. பெண்களை கட்டிலில்.. சுகப்படுத்த இத்தனை வழிமுறைகள்.. இப்படி பெண்களை நீ ஏதாவது செய்து சந்தோசப்படுத்தினால் தான் நீ அந்த சில அற்ப சந்தோசங்களை வாழ்க்கையில் பெண்களிடத்தில் அனுபவிக்க முடியும்.. என்பதான சமூகப் பாடம் எடுத்தல்கள்.

இது ஆண்கள் பெண்களின் முன் கோமாளிகளாக போய் நிற்க வழிவகுக்கிறது. வீணாக வழியும் நிலைக்கு கொண்டு போய் விடுகிறது. இதனை பெண்கள் தங்கள் பலமாக ஆண்களின் பலவீனமாக இனங்கண்டு ஆண்களை மிக மோசமாக நடத்த தூண்டப்படுகின்றனர்.

4. சமூகச் சட்டங்கள்.. சமூக நடைமுறைகள் பெண்களுக்கு அளிக்கும் அநியாய முன்னுரிமைகள்.

ஒரு கணவன் ஒரு மனைவியை அடிக்கிறான் என்றால் அதை காட்டி அந்தப் பெண் இந்த உலகையே உலுப்ப முடியும். ஒரு ஆணை பெண் வன்முறைக்கு உள்ளாக்கினா கேட்க நாதியில்ல என்ற நிலை. ஏன் ஒரு பெண் ஒரு ஆணோடு கட்டிலைப் பகிர்ந்துவிட்டு அவனை ஆட்டிப்படைக்க முடியும். (உ+ம்: கிலிங்கடனும் மோனிக்காவும்.. டக்கிளசும் - மகேஸ்வரியும்) ஆனால் ஒரு ஆண் ஒரு பெண்ணோடு கட்டிலை பகிர்ந்துவிட்டு சட்டத்தூடு எதனையும் செய்ய முடியாது. உடனே நீ தான் அவள் கணவன்... அவள் பிள்ளைக்கு அப்பா என்று கட்டுப்போட்டு விடுவார்கள்.

5. எதற்கும் ஆண்கள் மீது குற்றத்தை சுமத்தும்.. சமூக நடைமுறைகள். ஒரு பெண் மற்றவர்கள் அறியாமல் பல ஆண்களோடும் தொடர்வு வைச்சிட்டு.. மற்றவர்கள் அறிய ஒரு ஆணோடு வாழ்க்கை நடத்தினால்.. அவள் உத்தமி...! அங்கு அவளை சந்தேகிக்க மாட்டாது இந்த உலகம். ஆனால் ஒரு ஆண் ஒரு இரண்டு வருசம் வெளிநாட்டில இருந்திட்டு வாறான் என்று வையுங்களேன்.. உடன.. தம்பி எப்படியாம்.. பழக்க வழக்கங்கள் எப்படியாம்.. என்ற சந்தேகப் பார்வை தான் கேள்விகளாக முளைக்கும். அவை சாதாரணமாகவும் எடுத்துக் கொள்ளப்படும். இது பெண்கள் களவாக பிற ஆண்களோடும் வாழ்க்கை நடத்த உதவுவதால்.. கணவன்.. காதலன் என்று ஒருவர் மீது அன்பு செய்ய வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தை இல்லாமல் செய்கிறது. தாலிக்கு ஒருத்தன்.. வேலிக்க இன்னொருத்தன்.. இப்படித்தான் இன்றைய பெண்களின் வாழ்க்கை நிலை. இவர்கள் எப்படி கணவனை மனிசனா மதிப்பினம்.

6. பெண்கள் தொடர்பான சரியான அறிவியல் அறிவை ஆண்கள் பெறாமை. இது முக்கியமான விடயம். பெண்கள் தொடர்பான உடற்கூற்றியல்... நடத்தையியல்.. உளவியல் பற்றிய சரியான அறிதல் ஆண்களிடம் இல்லை. அவளை இவனால அடக்க முடியல்ல. அவள் ஊரெல்லாம் மேஞ்சு கொண்டு திரியுறாள்.. இப்படி ஊரில் பெரிசுகள் கதைக்குங்கள். அதென்ன அடக்க முடியவில்லை.. என்றால்... அவளின் உடல் தேவைகளை அடக்க முடியவில்லையாம். அதுமட்டுமல்ல.. அவளின் உடுப்புத் தேவைகளையும் நகைத் தேவைகளையும் தானாம். இது அக்கால பெண்களுக்கு என்றால் இக்கால பெண்களுக்கோ.. தேவைகள் பல. வேலை இடத்தில் இருந்து நைட் அவுட்.. கிளப்பிங்.. பப்பிங்.. அது போக.. கொலிடே மேக்கிங்.. அப்படி இப்படின்னு.. காசை கொட்டி உடலை வருத்தி பெண்களுக்கு சதா சேவகம் செய்து கொண்டிருக்கனும். அப்பதான் அவை அவரோட இருப்பினம். இல்ல இன்னொருத்தரட்ட போயிடுவா. உண்மையில்.. இங்கு அறியாமைகளும்.. சமூக அழுத்தங்களுமே அந்த ஆணை அவனின் சுதந்திரத்திற்கு அப்பால் அவளோடு கட்டிப் போடுகிறது. பெண்கள் பற்றிய சரியான அறிவியல் அறிவிருந்தால்.. அதனை அவர்களிடத்தில் சரியாக பாவிக்கும் திறனிருந்தால்.. இப்படியான ஏய்ப்புகளை இட்டு ஆண்கள் கலங்கத் தேவை இல்லை.

7. அவள் பொம்பிளை என்ற ஒரு இரக்கப் பார்வையை உலகம் ஊட்டி உள்ளமை. (காதல்.. அது இதென்றும் கூட). இவை ஆண்களை பெண்களோடு கட்டிப்போடுகின்றன். பெண்கள் மீது அளவு கடந்த அன்பை கொட்ட வைக்கின்றன. அவையே பெண்கள் ஆண்களை அடிமைப்படுத்தும் முதன்மைக் காரணியுமாகின்றன. எதுவும் அளவோடு இருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று நம்ம பெரியவங்க சொன்னது பெண்கள் விடயத்தில் ஆண்களுக்கு நன்கு பொருந்தும்.

8. அந்தஸ்து.. தகுதி.. கல்வி நிலை. இன்று அநேக பெண்களின் கல்வி மற்றும் தொழில் அந்தஸ்து.. அரசியல் அந்தஸ்து அவர்களின் கணவர்களை விட உயர்வாக உள்ளனர். குறிப்பாக புலம்பெயர் நாடுகளுக்கு வெளி நாட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு அவர்களை கலியாணம் செய்துள்ள பெண்களில் பலர் கல்வியில் தொழிலில் கணவனை விட உயர்வான நிலையில் இருக்கின்றனர். விசாவுக்காக அமையும் இந்த வாழ்கைகள்.. விசா அமைந்த பின்.. செளகரிகத்துக்காக பிற தகுதியான ஆண்களை தேடும். இதை நம் கண் முன்னால் பல இடங்களில் காண முடிகிறது. திருமணம் ஆன பெண்கள் மட்டுமல்ல.. பெற்றோரோடு கூடி ஊரில் இருந்து வரும் பெண்கள் கூட.. முதல் ஓரிரண்டு ஆண்டுகள்.. ஆங்கிலமும் பேச வராம.. இருக்குங்கள். அப்புறம் பள்ளியில் சேர்ந்து கோட் சூட் போட்ட உடன.. அவர்களின் நினைப்பு.. அளவு கடந்து போவதோடு.. தகுதிக்கு மிஞ்சிய எதிர்பார்ப்புக்கள்.. பெரிய இடத்து தொடர்புகள்.. என்று எங்கையோ போயிடினம். இவையை தப்பித் தவறி பெற்றோர் ஒரு சாதாரண ஆணுக்கு திருமணம் செய்து வைத்திருந்தால் என்னாகும்..????! (இந்த நிலை குறிப்பாக ஊரில் இருந்து வரும் ஏழை நடுத்தர வர்க்கப் பெண்களிடம் அதிகம் உள்ளது.)

9. குடும்ப அறிவற்ற ஆண்கள். பல ஆண்களுக்கு திருமணம் செய்வது ஏன் என்ற சரியான விளக்கம் இல்லை. சிலர் அதை விளங்க முடியாத வயதில் கூட திருமணம் செய்கின்றனர். திருமணம் மட்டுமல்ல.. காதலித்தலும் கூட. வெறுமனவே இரண்டு ஆண்டுக்கு ஒருக்கா குட்டி போடவல்ல.. திருமணம் என்பது.

குடும்பம் என்பது ஒரு நிறுவனம் போன்றது. அங்கு அன்பை முதலீட்டாக்கி.. இலாபத்தில் அதனை பன்மடங்கு பெருக்க வேண்டும். இடையில் அந்த நிறுவனம்.. சமூகத்திற்கும்.. தமக்கும் சேவையும் செய்தாக வேண்டும். கணவன்.. தலைமை நிர்வாகி என்றால் மனைவி தலைமை முகாமையாளர். இல்ல மாறியும் இருக்கலாம். பிரச்சனை பதவியல்ல. றோல். யார் எதை எப்ப எங்க செய்யனும் என்ற முடிவும்.. அதை செய்யும் நிலையும்.. சாத்தியப்பாடும். நிறுவனத்தில் ஒரு முதன்மை அதிகாரி தவறிழைத்தால்.. சரியான காரணங்கள் இருப்பின் அவரை தூக்கி எறியலாம். குடும்பத்தில் அது நல்லதா என்றால்.. நிச்சயமா.. ஆணோ பெண்ணோ.. குடும்ப நிறுவனத்தின் பொதுவான சட்டதிட்டத்திற்கு அமைய வில்லையோ தூக்கி வெளில போட்டிட வேண்டியதுதான். அதன் பின் நிறுவனத்தை மறுவடிவமைத்து அதன் பணியை.. அதாவது எங்கள் வாழ்க்கையை சமூகத்துக்கும் எமக்கும் மகிழ்ச்சி தரவல்லதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஒருவரின் தவறுக்காக வாழ்க்கை என்ற அந்த நிறுவன அடித்தளத்தை தகர்க்கக் கூடாது.

எனவே ஆண்களே,, பெண்களுக்கு அஞ்சி வாழும் நிலை களைந்து கெஞ்சி வாழும் நிலை போக்கி.. மிஞ்சி போகும் நிலை தவிர்த்து வஞ்சி இசைந்தால் இசைந்து.. இசையவில்லை என்றால் தனிச்சோ.. எப்படியோ.. ஒழுக்கம் பேணி.. மகிழ்ச்சியோட.. நோய் நொடியற்ற வாழ்க்கையை வாழ பழகிக் கொள்ளுங்கள். இந்த வாழ்க்கை இந்தப் பூமிப்பந்தில் அமைவது அபூர்வம். அதை பெண்களுக்காக என்று வீணடிக்காதீர்கள். நீங்கள் சுயமாகவும் நல்ல குடும்பமாவும் சமூகமாவும் சாதிக்க பல இருக்குது.

நன்றி. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஒரு மனிதனை ஆண் பெண் அரவாணி என்று பாலியல் பாகு பாடுகள் செய்து கொண்டு அவர்களுக்கு வரும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதை நிறுத்துங்கள். ஒரு மனிதனாக என்ன பிரச்சினைகள் வருகின்றன என்று மட்டும் பாருங்கள். இதுவே இந்த பெண்ணிலைவாதம் ஆண் நிலைவாதம் அரவாணி வாதம் போன்ற உப்புச் சப்பில்லாத "வாத" நோய்களுக்கெல்லாம் மருந்து. புலத்தில இருக்கிறீங்கள், வெள்ளைக்காரங்களிட்ட இருந்து நிறையப் பார்த்துக் கொப்பி அடிக்கிறீங்கள் (உடுப்பு முதற்கொண்டு குடி வகை சாப்பாடு வரை)-இது போன்ற நல்ல விசயங்களை அவங்களிட்ட இருந்து ஏன் தான் பழக மாட்டன் என்கிறீங்கள்?

யுஸ்டின் உங்கள் ஆதங்கம் புரிகிறது நாங்கள் எப்போதும் எங்களிற்கு எது சாதமாக பயன் தரக் கூடியதாக இருக்கிறதோ அதைத் தானே

நாம் பின் பற்றுவோம்................அப்படி வேற்று இனத்தவரின் நல்ல விடயங்களை எமதாக்கி கொண்டால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும் அது மட்டுமல்லாமல்

எத்தனையோ பாவப்பட்ட ஆண்கள் 8 மணித்தியாலங்கள் மட்டும் வேலை பார்த்து விட்டு தன் குடும்பம் பிள்ளைகள் மனைவி என்று சந்தோசமாகவும்

உடல் நலத்தோடும் இருப்பார்கள் அல்லவா....................

இது எல்லாம் சாத்தியமாகும் விடயங்களா????

ஆண்களாகிய நாங்கள் வஞ்சிக்கப்படுவதற்கு எங்களின் பொல்லாத கலாச்சாரமும் ஒரு முக்கிய காரணமாக

இருக்கிறது..............பெண்களின் அளவுக்கு அதிகமான அழுத்தம் காரணமாகவும் என்றும் வைத்துக் கொள்ளலாம்

எந்த பெண் சொல்லுகிறாள் நீங்கள் அளவுக்கு அதிகமாக வேலை செய்ய வேண்டாம்...........எங்களுடன்

அன்பாக குடும்பமாக எளிமையான இல்லற வாழ்க்கையை வாழ்ந்தாலே போதும் என்று!!!!!!

கணவன் என்பவன் தினம் தினம் நெருப்பில் வெந்து பணம் சம்பாதிக்க அதை மனம் போன போக்கில்

கையாளும் பெண் வர்க்கம் தான் அதிகம் அப்படி அந்த வசதியை செய்து கொடுக்காவிட்டால் கணவன்

என்பவன் கையாலாகாதவன் என்ற பட்டப் பெயருக்கு ஆளாகின்றான்....................இது தான் உண்மை

நீங்கள் குறிப்பிடும் பிரச்சினை புரிகிறது. தமிழர்கள் அதிகமாக புலம் பெயர்ந்து வாழும் கனடா அல்லது ஐரோப்பிய நாடுகளில், சில குடும்பத்தினர் தங்களிடையே ஒப்பீடு செய்து பெரிய வீடு, பெரிய கார் அதிக நகைகள் எனச் சேர்ப்பதற்காக அதிக உழைப்பில் ஈடுபடுவது பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். நான் இருக்கும் இடத்தில் இந்த ஒப்பிட்டுப் பார்த்து ஏங்கும் பிரச்சினை இல்லாததால் எனக்கு இது பற்றிய அனுபவம் இல்லை. எங்கள் குடும்பக் கவலையெல்லாம் எங்கள் குழந்தைகள் எங்களைப் போல ஏழைகளாக வளரக் கூடாது என்பது மட்டும் தான். இதற்காக அதிக நேரம் உழைக்க நாங்கள் தயார், ஆனால் சட்டம் அதற்கு இடம் கொடுக்குதில்லை இந்த நாட்டில்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை அதற்கு காரணம் ஆண்கள் தான்...ஒரு ஆண் தான் காதலித்த பெண்னை திருமணம் செய்யும் போதோ அல்லது பெற்றோர் பேசி ஊரில் இருக்கும் பெண்னை திருமணம் செய்யும் போதோ 1)தன்னை தகுதிக்கு மீறி உயர்த்தி சொல்லுதல்[சில உண்மையான,விதி விலக்கான ஆண்களும் உண்டு அவர்களை விடுவோம்.] உதாரணமாக தான் ஒரு பெரிய கம்பனியில் வேலை செய்கிறேன்,எனக்கு இவ்வளவு சம்பளம்,எனக்கு வீடு,பெரிய கார் இருக்குது என்பது போன்ற பல பொய்களை சொல்வார்கள் பெண்களும் அவர்களை நம்பி திருமணம் செய்த பிறகு தான் தங்கள் கணவரது உண்மையான முகம் தெரிய வந்தவுடன் ஏமாற்றம் சண்டையாக வெடிக்கும்.ஆண்கள் ஏன் தங்கள் தகுதிக்கு ஏற்ற மாதிரி தங்களை உண்மையாக நேசிக்கும் பெண்களை திருமணம் செய்வதில்லை? பெண் அழகாக,படித்த, நிறைய சீதனத்தோடு பெண் வேண்டும் என்டால் இப்படித் தான் பிரச்சனை வரும் சுருக்கமாக சொன்னால் ஆணோ அல்லது பெண்ணோ அளவிற்கு மீறி ஆசைப் பட்டால் இப்படித் தான் நடக்கும்...2)காதலிக்கும் போதோ அல்லது திருமணம் பேசி பெண்ணூடன் கதைக்க தொடங்கும் போதோ அவர்கள்[பெண்கள்] என்ன சொன்னாலும் ஆண்கள் உடனே தலையாட்டுவார்கள்,அவர்கள் சொன்னதை உடனே செய்வார்கள் ஆனால் திருமணத்தின் பின்னோ நேர் எதிராக நடந்து கொள்வார்கள் ஏன் முதலே தாங்கள் இப்படித் தான்,என்னால் இப்படித் தான் நடந்து கொள்ள முடியும் என்டு சொல்லி விட்டால் பிறகேன் குடும்பத்தில் பிரச்சனை வருகிறது?...3)பொதுவாக புலம் பெயர் நாட்டில் ஆண்,பெண் இருவரும் வேலைக்குப் போவார்கள் அதை விட பெண்களுக்கு எக்ஸ்ராவா பல வேலைகள் உண்டு பிள்ளைகளை கவனித்தல்,அவர்களது படிப்பு,குடும்பத்தின் பொருளாதார நிலை போன்றன.ஆண்கள் சம்பளத்தில் தங்கள் தேவைக்குப் போக மிச்சத்தை கொண்டு வந்து கொடுத்துப் போட்டு குடும்ப பாரத்தை முழுக்க பெண்களது தலையில் ஏற்றினால் அவர்கள் பாவம் என்ன தான் செய்வார்கள் அதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி பிரச்சனை வெடிக்கின்றன.

ஆகவே ஆண்களே திருமணம் செய்கிறது என்டு முடிவு செய்திட்டால் முதலே பெண்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள்,உண்மையாய் இருங்கள்,குடும்ப பொறுப்பை சேர்ந்து சுமவுங்கள்.

பெண்களே திருமணம் முடிக்கும் முன் ஆண் நல்லவனா,பொறுப்பானவனா,குடும்ப பாரத்தை சுமக்க கூடியவரா,உழைப்பாளியா எனப் பார்த்து திருமணம் செய்யுங்கள் வெறும் அழகிலும்,பணத்திலும் ஏமாந்து போகாதீர்கள்.

திருமணம் செய்யும் முன் ஆண் பற்றி அறிந்து, தெரிந்து செய்வதே நல்லது....... என்பதாக உங்கள் கருத்து அமைந்திருந்தது. இவற்றுக்கு ஆண்கள் தான் காரணம் என்று வேறு குற்றம் சுமத்தி இருக்கிறீா்கள்.

எனது பார்வையில் திருமணமாகி பல வருடங்களின் பின்னர் தான் இந்த நிலைமை ஆண்களுக்கு ஏற்படுகிறது.

உங்கள கருத்து பகிர்வுக்கு நன்றி ரதி.

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமை ..உணர்வுகள் மதிக்க் படாமை ....சுயநலம் ....மது .... புகை போனவற்றுக்கு அடிமையாதல் .பொறுமையின்மை ...வேலைப்பளு... அளவுக்கு மிஞ்சிய ஆசை ..பொதுவாக அன்பு இல்லாத தன்மை

இருபாலரும் துன்ப படுகிறார்கள்.

புரிந்துணர்வு இல்லாமை, அன்பு இல்லாத் தன்மை என்பவற்றால் இருவரும் துன்பப்படுகிறார்கள்……என்பதாய் அமைந்திருந்தது

உங்கள் கருத்துப்பகிர்வுக்கு நன்றி நிலாமதி.

பெண்கள் உலகம் - ஆஸ்திரேலியா

மரபு விக்கி தளத்திலிருந்து

எழுதியவர் - திருமதி சீதாலட்சுமி அவர்கள்

________________________________________________________________________________________________________

ஆஸ்திரேலியா பெண்கள் உலகம் -–ஒரு பார்வை

ஆஸ்திரேலியாவில் ஓர் ஆண்டு இருந்தேன். எங்கு சென்றாலும் அங்குள்ள சமுதாயத்தினைப் பார்ப்பேன். முதலில் நூலகம் சென்று அந்நாட்டு வரலாறுகளைப் படிப்பேன். பின்னர் சிலருடன் பழகுவதும், அவர்கள் வீடுகளுக்கும் செல்வேன். அந்நாடு பத்திரிகைகளையும் விட்டு வைக்க மாட்டேன். ஓர் ஆய்வாளருக்கு இவை உதவும் கரங்கள்.

என் பேரன் ஒரு செய்தி கொண்டு வந்தான். அந்த செய்தி, எனக்கு வியப்பும் வேதனையும் கொடுத்தது. அவனு டன் படிக்கும் சில மாணவர்களுக்கு தங்கள் தந்தையின் பெயர் தெரியாது. யாராவது கேட்டு விட்டால் தயங் காமல் அவர்கள் சொல்லும் பதில் - “உங்களுக்கு அவர் பெயர் எதற்கு ? நான் மாணவன் என்னையறிய என் பெயர் மட்டும் போதும் “ அவன் தாயார் திருமணம் ஆகாமல் பெற்றிருக்கலாம். அவன் ஒரு விலை மாதின் மகனாகவும் இருக்கலாம்.

’ஆஸ்திரேலியாவின் முதல் வெள்ளை மனிதன் ஒரு விலைமாதின் மகன்’ என்று எழுதப்பட்ட புத்தகம் அங்கு நூலகத்தில் இருக்கின்றது. இது ஒரு சோகக் கதை. அமெரிக்காவிற்கும் பின்னால் உதயமான நாடு. அண்டை வீட்டுத் துயர் தெரிந்திருக்க வேண்டும். மனிதன் ஒவ்வொரு நாட்டிலும் மிருகமாக நடமாடி இருக்கின்றான்; இன்னும் நடமாடிக் கொண்டிருக்கின்றான்.

இன்று சிட்னி என்று பேசப்படும் இடம் ஒரு திறந்த வெளிச் சிறைச் சாலையாக இருந்தது. பிரிட்டிஷ் காலனியின் ஆதிக்கத்தில் நடந்தது. அவர்கள் நாட்டுக் குற்றவாளிகளை இங்கே இறக்குமதி செய்தனர். பூர்வீகக் குடிகளின் குழந்தைகளைப் பிரித்து அவர்களை விரட்டியது மட்டுமன்று; அவர்கள் செய்த இன்னொரு கொடுமை அழியாக் கறையைக் கொண்டி ருக்கின்றது. இப்பொழுது சிலர் மாற்றிப் பேசுகின் றார்கள். பிரச்சனைகளைப் பார்க்கலாம் . 1788 -1852 இதற்கிடையில் 24000 பெண் கைதிகள் அனுப்பப் பட்டிருக்கின்றார்கள். இது இப்பொழுது அவர்கள் சொல்லும் எண்ணிக்கை. முன்னால் ஏறத்தாழ 70,000 பெண்கள் வந்திருக்கலாம் என்றும் பேசப்பட்டது.

ஆரம்பத்தில் விபச்சாரக் குற்றத்தில் கைதி செய்த வர்களை அங்கு வேலை பார்ப்பவர்களுக்கும் கைதிக ளுக்கும் எல்லா பணிகளையும் செய்ய அதாவது அவர்கள் உடல் இச்சையை முதற்கொண்டு தீர்த்து வைக்க அனுப்பட்டார்கள் என்று கூறப்பட்டது. வெளி நாட்டுப் பத்திரிகையாளர்கள் விமர்சனம் செய்ய ஆரம்பிக்கவும் அனுப்பட்ட பெண்கள் குற்றம் புரிந்தவர் என்று மறுத்தனர். அதுமட்டு மன்று; இப்படிப் பத்திரிகையில் எழுதவும் கூடாதும் என்று அறிவித் தனர். எந்தக் காரணம் பற்றி வந்தால் எனன? எத்தனை பேர்களாயிருந்தாலென்ன? வந்தவர்களின் வேலை அதுதான். வீட்டு வேலை செய்யப் போனால் அந்த ஆடவனைத் திருப்தி செய்ய வேண்டும். அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்குத் தகப்பன் பெயர் கிடையாது. அந்நாட்டில் எந்த உரிமையும் கிடையாது. அது மட்டு மன்று, அவர்களையோ, அவர்கள் பிள்ளைகளையோ என்ன செய்தாலும், கொன்றால் கூடக் குற்றமில்லை. எத்தனை சம்பவங்கள், எத்தனை கதைகள். எல்லாம் புத்தகங்களில் கொட்டிக் கிடக்கின்றன.

அந்தப் பெண்களுக்கு , அவர்கள் வாரிசுகளுக்குக் கிடைத்த அவமானம் கொஞ்சமல்ல. முறையான வாழ்வு கிடையாது. பின்னர் திருமணம் செய்த பொழுதும் நிலையாக இல்லை. இதயக் கனல் தகிக்க அவர் முன் னுக்கு வர கடுமையாக உழைத்தனர்; படித்தனர். தொழில் செய்தனர். இன்று அந்தப் பெண்கள் ஆண்களைப் பற்றி கவலைப் படவில்லை.

அவர்களைத் தவிர, சுரங்க வேலைக்காக வந்தவர்கள், போரினால் வந்த அகதிகள் தான் குடிமக்கள். திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் எண்ணிக்கை எல்லாத் தரப்பினர்களிடையேயும் அதிகமாயிற்று. பெண்ணுக்கு வாழ்க்கையில் உத்திரவாதம் இல்லை. ஆணின் சபலத்திற்கும், வன்முறை குணத்திற்கும் பணியவேண்டியதில்லை என்ற உணர்வு வளர ஆரம்பித்தது. இக்குணம் எல்லாத் தரப்பினர்களி்லும் பெரும்பான்மையினரிடம் வளர ஆரம்பித்துவிட்டது. அடிக்கடி விவாகரத்துத் தேடும் ஆணாயிருந்தால் பெண் ஒதுக்க ஆரம்பித்துவிட்டாள். உலகிலே ஆஸ்திரேலியப் பெண்கள் தனித்து வாழக் கற்றுக் கொண்டு விட்டார்கள். உடலுறவுக்கு ஆணைப் போல் தற்காலிகமாக இச்சையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் பெண்களின் எண்ணிக்கையும் வளர ஆரம்பித்துவிட்டது. ஒருவன் காதல் என்று சொன்னால் போதும். அவன் முன்னாள் சரித்திரம் பார்ப்பார்கள். வேண்டும், வேண்டாம் என்று முடிவெடுப்பது இப்பொழுது பெண்ணாகிவிட்டாள். இந்த விகிதாசாரமும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கின்றது. கல்வியாலும் உழைப்பாலும் தன்னை உயர்த்திக் கொண்ட பெண் அடி வாங்க, கொடுமைகளைத் தாங்கத் தயாரியில்லை. இந்த எழுச்சி ஆணால் பொறுக்க முடிய வில்லை. இது வரை அவன் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் சுதந்திரம் அவனுக்கு இருந்தது. இப்பொழுது ஆணின்றிப் பெண் வாழ முடியும் என்று நிரூபித்துக் காட்டவும். அவன் மேலும் மிருகமாகி அடித்தவன், இப்பொழுது கொலை செய்ய ஆரம்பித்து விட்டான். சில ஆய்வுகளில் இந்த வன் முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிகின்றது .

ஆண் வாழ்ந்த வாழ்க்கையைப் பெண் தேர்ந்தெடுக்க ஆரம்பித்து விட்டாள். குழந்தை பெறுவதும் பெறா ததும் அவள் கையில். அரசியலில் ஆஸ்திரேலியப் பெண்கள் மிகவும் முன்னேறி இருக்கின்றார்கள். பெண்களின் துணிவும், உழைப்பும், கல்வி,தொழில், அரசியல் இவைகளில் அவர்களின் முன்னேற்றம் அமெரிக்காவில் கிடையாது .

ஜப்பானில் கணவன் பணியிலிருந்து ஓய்வு பெறும் பொழுது மனைவி பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு சட்டம் வாங்கிவிட்டார்கள். இதன் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்தி ருக்கின்றது . இந்தியாவிலும் மணமின்றிச் சேர்ந்து வாழும் பழக்கம் தொடங்கிவிட்டது. திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது பாபமில்லை என்று கூறுவோரின் எண்ணிக்கையும் கூட ஆரம்பித்துவிட்டது.

திருமணத்திற்கு முன் பெண் எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் ஆண்களின் விகிதாசரமும் கூட ஆரம்பித்துவிட்டது. ஆடம்பர வாழ்க்கைக்காகப் பிள்ளைகள் எப்படி இருந்தாலும் கண்டு கொள்ளாத பெற்றவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூட ஆரம்பித்திருக்கின்றது.

இன்னும் மாயையில் மனிதர்கள் உட்கார்ந்தி ருக்கின்றார்கள். விலங்காய்த் திரிந்த மனிதன் கண்டு பிடித்த குடும்பம் சிதைய ஆரம்பித்திருக்கின்றது. கூட்டுக் குடும்பம் போயிற்று. சிறிதளவு ஓட்டுறவு இருந்ததும் இப்பொழுது போய்க் கொண்டிருக்கின்றது. இங்கும் பெண், கணவனை வேண்டாம் என்று ஒதுக்க ஆரம்பித்து விட்டாள். கணவனைவிட அதிகச் சம்பளம் பெண் வாங்கினால் அவள் ஒன்று அவனை அலட்சியப் படுத்துகின்றாள், அல்லது விலகி விடுகின்றாள். அய்யா, இது எங்கோ ஒன்று, இரண்டல்ல, பார்த்தினீயச் செடிபோல் பரவிக்கச்கொண்டிருக்கும் மாற்றம். விலங்கு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக் கின்றோம். இந்தம்மா இதை மிகைப் படுத்தி பேசுகின்றாள் என்று கூறிவிடுவீர்கள்.

நெருப்புப் பொசுங்கும் வாடையை நீங்கள் உணர வில்லையா?

தேடி இணைத்த பதிவிற்கு நன்றி நுனாவிலான்.

இங்கும் பெண், கணவனை வேண்டாம் என்று ஒதுக்க ஆரம்பித்து விட்டாள். கணவனைவிட அதிகச் சம்பளம் பெண் வாங்கினால் அவள் ஒன்று அவனை அலட்சியப் படுத்துகின்றாள், அல்லது விலகி விடுகின்றாள். அய்யா, இது எங்கோ ஒன்று, இரண்டல்ல, பார்த்தினீயச் செடிபோல் பரவிக்கச்கொண்டிருக்கும் மாற்றம்.

மாற்றங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நீண்ட கருத்துப்பகிர்வுக்கும் நன்றி நெடுக்கு.

புலம்பெயர்ந்த நாடுகளில் குறிப்பாக எம்மவர் மத்தியில் ஆண்கள் பலருக்கு தங்கள் குழந்தைகளின் நாளாந்த கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் எதுவும் தெரியாத நிலை. இது ஒரு மோசமான நிலை. அந்தத் தந்தை கல்வியியல் பராமரிப்பியல் ரீதியில் குடும்பத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சூழல். அவருக்கு வேலைக்குப் போறது மட்டும் தான் வேலை. இது மனைவிகள் இலகுவாக பிள்ளைகளிடம் தந்தை தொடர்பான தவறான எண்ணத்தை ஏற்படுத்த அநேக இடங்களில் பாவிக்கப்படுகிறது.

எம்மவரிடையே இந்நிலை தொடர்வதற்கு மேற்கூறிய காரணமும் ஒன்றாக அமைந்திருக்கும் என்றே எண்ணுகிறேன். பிள்ளை வளா்ப்பில் ஆண்களின் பங்கு குறைவாகவே இருப்பதை கண்கூடாக பல இடங்களில் கண்டிருக்கிறேன்.

உங்கள் நிலைப்பாட்டை அறியத்தந்ததுக்கு நன்றிகள் ஜஸ்டின்.

ஒரு மனிதனாக என்ன பிரச்சினைகள் வருகின்றன என்று மட்டும் பாருங்கள்.

நடைமுறையில் கண்ட நிகழ்வுகள் என் சிந்தனையை துாண்டியது.

தமிழ்மாறன் உங்கள் கருத்துப்பகிர்வுக்கும் நன்றிகள்.

முதலில் ஒரு மனிதனை ஆண் பெண் அரவாணி என்று பாலியல் பாகு பாடுகள் செய்து கொண்டு அவர்களுக்கு வரும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதை நிறுத்துங்கள். ஒரு மனிதனாக என்ன பிரச்சினைகள் வருகின்றன என்று மட்டும் பாருங்கள். இதுவே இந்த பெண்ணிலைவாதம் ஆண் நிலைவாதம் அரவாணி வாதம் போன்ற உப்புச் சப்பில்லாத "வாத" நோய்களுக்கெல்லாம் மருந்து. புலத்தில இருக்கிறீங்கள், வெள்ளைக்காரங்களிட்ட இருந்து நிறையப் பார்த்துக் கொப்பி அடிக்கிறீங்கள் (உடுப்பு முதற்கொண்டு குடி வகை சாப்பாடு வரை)-இது போன்ற நல்ல விசயங்களை அவங்களிட்ட இருந்து ஏன் தான் பழக மாட்டன் என்கிறீங்கள்?

Edited by thappili

  • 2 months later...

_52028589_pair.464.jpg

பிரித்தானிய நாடாளுமன்றம் கூடுகிறது... ஒருவர் எழும்பிப் பேசுகிறார்.. பெண்களின் தலையெடுப்புக்களால் உயர் தொழில்களில் ஆண்களின் பங்களிப்பு வீழ்ச்சி கண்டு கொண்டு வருகிறது. குறிப்பாக உயர்கல்விக்குள்ளும்.. பிரதமை தொழில்களுக்குள்ளும் பெண்களின் ஆதிக்கம் கூடி இருக்கிறது. இதனால் ஆண்களிற்கான சம வாய்ப்பு இழக்கப்படுகிறது அல்லது அதற்கு தடை ஏற்படுகிறது. இதனை நான் சொல்வதால் நான் பெண்களை அவர்களின் முன்னேற்றத்தை எதிர்க்கிறேன் என்பதல்ல பொருள். ஆண்கள் சம வாய்ப்பை இழக்கிறார்கள் என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று கூறி அமர்ந்தார். அவர் வேறு யாருமல்ல பிரித்தானிய ஆளுங்கட்சி அமைச்சர். இது சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவம்.

எனி நாங்கள்.. பெண்களை ஆண்களை மதிக்காததற்கு உள்ள காரணங்கள் சிலவற்றை பார்ப்போம்..

1. பெண்களை இந்த சமூகம் ஆண்களுக்கு சரியாக இனங்காட்டுவதில்லை. பதுமைகள்.. மென்மைகள்.. கிலுகிலுப்பூட்டிகள்.. எல்லாம் நல்லதாகச் செய்யக் கூடிய திறமைசாலிகள்.. பொறுமைசாலிகள்.. குடும்பப் பொறுப்புள்ளவர்கள்.. என்று சொல்லி அதற்கேற்பத்தான் இந்த வியாபார உலகத்தில் அவர்கள் இனங்காட்டப்படுகின்றனர். பெண்கள் சக மனிதர்கள் என்ற வகையில் அவர்களின் இயல்பான குணங்கள் அம்சங்கள் தொடர்பில் ஆண்கள் சரியாக அறிந்து கொள்ளாமை அல்லது அறியச் செய்யபடாமை பெண்கள் ஆண்கள் மீது அதிகம் செல்வாக்குச் செய்ய கூடிய ஏது நிலையை உருவாக்குகிறது.

உதாரணத்திற்கு: இன்றைய நிலையில் ஒரு பெண் ஒரு ஆணை அடிக்கிறாள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அதன் விளைவுகள் இப்படித்தான் இருக்கும்.. அவன் எங்க கையை வைச்சானோ.. என்ன துணிச்சலான பெண்.. பெண் விடுதலைக்கு இவள் ஒரு எடுத்துக்காட்டு.. பெண் ஆணிற்கு சமன்... பெண்கள் இன்று எதையும் செய்ய துணிந்துவிட்டார்கள் இப்படித்தான் அதிகம் பேசப்படும். ஆனால் உண்மையில் அவள் ஒரு குடிகாரியாக.. போதைக்கு அடிமைப்பட்டவாளாக இருப்பாள். கணவனின் காசைத் திருடப் போய் அவன் அதை தடுக்கப் போய் அங்கு நடந்த கைகலப்பாக கூட அது இருக்கலாம்.

2. பெண்களின் குடும்பப் பங்களிப்பு குழந்தை கணவன் வீடு பராமரிப்பு என்ற நிலைக்கு அப்பால் பொருண்மியத்திலும் அமைத்துவிட்டுள்ளதோடு அநேக நாடுகளில் குழந்தைகளின் பாராமரிப்பில் கல்வியில் பெண்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

புலம்பெயர்ந்த நாடுகளில் குறிப்பாக எம்மவர் மத்தியில் ஆண்கள் பலருக்கு தங்கள் குழந்தைகளின் நாளாந்த கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் எதுவும் தெரியாத நிலை. இது ஒரு மோசமான நிலை. அந்தத் தந்தை கல்வியியல் பராமரிப்பியல் ரீதியில் குடும்பத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சூழல். அவருக்கு வேலைக்குப் போறது மட்டும் தான் வேலை. இது மனைவிகள் இலகுவாக பிள்ளைகளிடம் தந்தை தொடர்பான தவறான எண்ணத்தை ஏற்படுத்த அநேக இடங்களில் பாவிக்கப்படுகிறது. இது ஒரு நாள் அந்த குழந்தைகளோடு அவளும் கணவனை வெறுக்க தண்டிக்க வகை செய்யும். அண்மையில் தாயை தந்தை பேசிட்டார் என்று மகன் தந்தைக்கு அடித்து.. பொலிஸ் வந்த சம்பவங்கள் கூட புலம்பெயர் நாடுகளில் நம்மவர்களால் பதிவிடப்பட்டுள்ளது.

உ+ம்: உங்கப்பாக்கு எதுவும் தெரியாது. நான் தான் பேரண்ஸ் மீற்றிங்குக்கு வரணும்.

3. ஆண்களுக்கு பெண்கள் தொடர்பில் வழங்கப்படும் அறிவியல் ரீதியில் ஆராயப்படாத பெண்கள் பற்றிய "கொசிப்" செய்திகள். இந்த யாழ் களத்திலையே பாருங்கள்.. ஏன் இன்றைய தமிழ் இணைய ஊடகங்களைப் பாருங்கள்.. அவற்றில் எல்லாம்.. பெண்களை தாஜா பண்ண இத்தனை வழிமுறைகள்... பெண்களுக்கு கூஜா தூக்க இத்தனை வழிமுறைகள்.. பெண்களை கட்டிலில்.. சுகப்படுத்த இத்தனை வழிமுறைகள்.. இப்படி பெண்களை நீ ஏதாவது செய்து சந்தோசப்படுத்தினால் தான் நீ அந்த சில அற்ப சந்தோசங்களை வாழ்க்கையில் பெண்களிடத்தில் அனுபவிக்க முடியும்.. என்பதான சமூகப் பாடம் எடுத்தல்கள்.

இது ஆண்கள் பெண்களின் முன் கோமாளிகளாக போய் நிற்க வழிவகுக்கிறது. வீணாக வழியும் நிலைக்கு கொண்டு போய் விடுகிறது. இதனை பெண்கள் தங்கள் பலமாக ஆண்களின் பலவீனமாக இனங்கண்டு ஆண்களை மிக மோசமாக நடத்த தூண்டப்படுகின்றனர்.

4. சமூகச் சட்டங்கள்.. சமூக நடைமுறைகள் பெண்களுக்கு அளிக்கும் அநியாய முன்னுரிமைகள்.

ஒரு கணவன் ஒரு மனைவியை அடிக்கிறான் என்றால் அதை காட்டி அந்தப் பெண் இந்த உலகையே உலுப்ப முடியும். ஒரு ஆணை பெண் வன்முறைக்கு உள்ளாக்கினா கேட்க நாதியில்ல என்ற நிலை. ஏன் ஒரு பெண் ஒரு ஆணோடு கட்டிலைப் பகிர்ந்துவிட்டு அவனை ஆட்டிப்படைக்க முடியும். (உ+ம்: கிலிங்கடனும் மோனிக்காவும்.. டக்கிளசும் - மகேஸ்வரியும்) ஆனால் ஒரு ஆண் ஒரு பெண்ணோடு கட்டிலை பகிர்ந்துவிட்டு சட்டத்தூடு எதனையும் செய்ய முடியாது. உடனே நீ தான் அவள் கணவன்... அவள் பிள்ளைக்கு அப்பா என்று கட்டுப்போட்டு விடுவார்கள்.

5. எதற்கும் ஆண்கள் மீது குற்றத்தை சுமத்தும்.. சமூக நடைமுறைகள். ஒரு பெண் மற்றவர்கள் அறியாமல் பல ஆண்களோடும் தொடர்வு வைச்சிட்டு.. மற்றவர்கள் அறிய ஒரு ஆணோடு வாழ்க்கை நடத்தினால்.. அவள் உத்தமி...! அங்கு அவளை சந்தேகிக்க மாட்டாது இந்த உலகம். ஆனால் ஒரு ஆண் ஒரு இரண்டு வருசம் வெளிநாட்டில இருந்திட்டு வாறான் என்று வையுங்களேன்.. உடன.. தம்பி எப்படியாம்.. பழக்க வழக்கங்கள் எப்படியாம்.. என்ற சந்தேகப் பார்வை தான் கேள்விகளாக முளைக்கும். அவை சாதாரணமாகவும் எடுத்துக் கொள்ளப்படும். இது பெண்கள் களவாக பிற ஆண்களோடும் வாழ்க்கை நடத்த உதவுவதால்.. கணவன்.. காதலன் என்று ஒருவர் மீது அன்பு செய்ய வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தை இல்லாமல் செய்கிறது. தாலிக்கு ஒருத்தன்.. வேலிக்க இன்னொருத்தன்.. இப்படித்தான் இன்றைய பெண்களின் வாழ்க்கை நிலை. இவர்கள் எப்படி கணவனை மனிசனா மதிப்பினம்.

6. பெண்கள் தொடர்பான சரியான அறிவியல் அறிவை ஆண்கள் பெறாமை. இது முக்கியமான விடயம். பெண்கள் தொடர்பான உடற்கூற்றியல்... நடத்தையியல்.. உளவியல் பற்றிய சரியான அறிதல் ஆண்களிடம் இல்லை. அவளை இவனால அடக்க முடியல்ல. அவள் ஊரெல்லாம் மேஞ்சு கொண்டு திரியுறாள்.. இப்படி ஊரில் பெரிசுகள் கதைக்குங்கள். அதென்ன அடக்க முடியவில்லை.. என்றால்... அவளின் உடல் தேவைகளை அடக்க முடியவில்லையாம். அதுமட்டுமல்ல.. அவளின் உடுப்புத் தேவைகளையும் நகைத் தேவைகளையும் தானாம். இது அக்கால பெண்களுக்கு என்றால் இக்கால பெண்களுக்கோ.. தேவைகள் பல. வேலை இடத்தில் இருந்து நைட் அவுட்.. கிளப்பிங்.. பப்பிங்.. அது போக.. கொலிடே மேக்கிங்.. அப்படி இப்படின்னு.. காசை கொட்டி உடலை வருத்தி பெண்களுக்கு சதா சேவகம் செய்து கொண்டிருக்கனும். அப்பதான் அவை அவரோட இருப்பினம். இல்ல இன்னொருத்தரட்ட போயிடுவா. உண்மையில்.. இங்கு அறியாமைகளும்.. சமூக அழுத்தங்களுமே அந்த ஆணை அவனின் சுதந்திரத்திற்கு அப்பால் அவளோடு கட்டிப் போடுகிறது. பெண்கள் பற்றிய சரியான அறிவியல் அறிவிருந்தால்.. அதனை அவர்களிடத்தில் சரியாக பாவிக்கும் திறனிருந்தால்.. இப்படியான ஏய்ப்புகளை இட்டு ஆண்கள் கலங்கத் தேவை இல்லை.

7. அவள் பொம்பிளை என்ற ஒரு இரக்கப் பார்வையை உலகம் ஊட்டி உள்ளமை. (காதல்.. அது இதென்றும் கூட). இவை ஆண்களை பெண்களோடு கட்டிப்போடுகின்றன். பெண்கள் மீது அளவு கடந்த அன்பை கொட்ட வைக்கின்றன. அவையே பெண்கள் ஆண்களை அடிமைப்படுத்தும் முதன்மைக் காரணியுமாகின்றன. எதுவும் அளவோடு இருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று நம்ம பெரியவங்க சொன்னது பெண்கள் விடயத்தில் ஆண்களுக்கு நன்கு பொருந்தும்.

8. அந்தஸ்து.. தகுதி.. கல்வி நிலை. இன்று அநேக பெண்களின் கல்வி மற்றும் தொழில் அந்தஸ்து.. அரசியல் அந்தஸ்து அவர்களின் கணவர்களை விட உயர்வாக உள்ளனர். குறிப்பாக புலம்பெயர் நாடுகளுக்கு வெளி நாட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு அவர்களை கலியாணம் செய்துள்ள பெண்களில் பலர் கல்வியில் தொழிலில் கணவனை விட உயர்வான நிலையில் இருக்கின்றனர். விசாவுக்காக அமையும் இந்த வாழ்கைகள்.. விசா அமைந்த பின்.. செளகரிகத்துக்காக பிற தகுதியான ஆண்களை தேடும். இதை நம் கண் முன்னால் பல இடங்களில் காண முடிகிறது. திருமணம் ஆன பெண்கள் மட்டுமல்ல.. பெற்றோரோடு கூடி ஊரில் இருந்து வரும் பெண்கள் கூட.. முதல் ஓரிரண்டு ஆண்டுகள்.. ஆங்கிலமும் பேச வராம.. இருக்குங்கள். அப்புறம் பள்ளியில் சேர்ந்து கோட் சூட் போட்ட உடன.. அவர்களின் நினைப்பு.. அளவு கடந்து போவதோடு.. தகுதிக்கு மிஞ்சிய எதிர்பார்ப்புக்கள்.. பெரிய இடத்து தொடர்புகள்.. என்று எங்கையோ போயிடினம். இவையை தப்பித் தவறி பெற்றோர் ஒரு சாதாரண ஆணுக்கு திருமணம் செய்து வைத்திருந்தால் என்னாகும்..????! (இந்த நிலை குறிப்பாக ஊரில் இருந்து வரும் ஏழை நடுத்தர வர்க்கப் பெண்களிடம் அதிகம் உள்ளது.)

9. குடும்ப அறிவற்ற ஆண்கள். பல ஆண்களுக்கு திருமணம் செய்வது ஏன் என்ற சரியான விளக்கம் இல்லை. சிலர் அதை விளங்க முடியாத வயதில் கூட திருமணம் செய்கின்றனர். திருமணம் மட்டுமல்ல.. காதலித்தலும் கூட. வெறுமனவே இரண்டு ஆண்டுக்கு ஒருக்கா குட்டி போடவல்ல.. திருமணம் என்பது.

குடும்பம் என்பது ஒரு நிறுவனம் போன்றது. அங்கு அன்பை முதலீட்டாக்கி.. இலாபத்தில் அதனை பன்மடங்கு பெருக்க வேண்டும். இடையில் அந்த நிறுவனம்.. சமூகத்திற்கும்.. தமக்கும் சேவையும் செய்தாக வேண்டும். கணவன்.. தலைமை நிர்வாகி என்றால் மனைவி தலைமை முகாமையாளர். இல்ல மாறியும் இருக்கலாம். பிரச்சனை பதவியல்ல. றோல். யார் எதை எப்ப எங்க செய்யனும் என்ற முடிவும்.. அதை செய்யும் நிலையும்.. சாத்தியப்பாடும். நிறுவனத்தில் ஒரு முதன்மை அதிகாரி தவறிழைத்தால்.. சரியான காரணங்கள் இருப்பின் அவரை தூக்கி எறியலாம். குடும்பத்தில் அது நல்லதா என்றால்.. நிச்சயமா.. ஆணோ பெண்ணோ.. குடும்ப நிறுவனத்தின் பொதுவான சட்டதிட்டத்திற்கு அமைய வில்லையோ தூக்கி வெளில போட்டிட வேண்டியதுதான். அதன் பின் நிறுவனத்தை மறுவடிவமைத்து அதன் பணியை.. அதாவது எங்கள் வாழ்க்கையை சமூகத்துக்கும் எமக்கும் மகிழ்ச்சி தரவல்லதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஒருவரின் தவறுக்காக வாழ்க்கை என்ற அந்த நிறுவன அடித்தளத்தை தகர்க்கக் கூடாது.

எனவே ஆண்களே,, பெண்களுக்கு அஞ்சி வாழும் நிலை களைந்து கெஞ்சி வாழும் நிலை போக்கி.. மிஞ்சி போகும் நிலை தவிர்த்து வஞ்சி இசைந்தால் இசைந்து.. இசையவில்லை என்றால் தனிச்சோ.. எப்படியோ.. ஒழுக்கம் பேணி.. மகிழ்ச்சியோட.. நோய் நொடியற்ற வாழ்க்கையை வாழ பழகிக் கொள்ளுங்கள். இந்த வாழ்க்கை இந்தப் பூமிப்பந்தில் அமைவது அபூர்வம். அதை பெண்களுக்காக என்று வீணடிக்காதீர்கள். நீங்கள் சுயமாகவும் நல்ல குடும்பமாவும் சமூகமாவும் சாதிக்க பல இருக்குது.

நன்றி. :)

வித்தியாசமான பார்வை. வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.