Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயணம் .....................

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விமானம் இந்திய நேரம் நள்ளிரவு 12 மணிக்கு தரையிறங்கவேண்டும் விமானம் மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலையத்தில் இறங்கத் தொடங்குகின்றது என்கிற விமானியின் அறிவிப்பை கேட்டதுமே மனைவின் முகம் இறுகிப் போயிருந்தது..மனதிற்குள் ஊரிலுள்ள எல்லா கோயிலிற்கும் நேத்திக்கடன் வைத்திருப்பாள் என எனக்கு தெரியும் .விமனம் தரை தட்டியதும் உங்கடை சினேகிதங்களிற்கொல்லாம் நீங்கள் வாற விபரம் குடுத்திட்டீங்கள்தானே ஒரு பிரச்சனையும் வராதுதானே என்றாள்.ஒரு பிரச்சனையுமில்லை பேசாமல் வா என்று அவளை அதட்டினாலும் எனக்கு ஏ சி குளிரிலும் வியர்ப்பதைப்போல ஒரு உணர்வு இருந்தது. விமானம் நின்றதும்பயணிகள் வெளியேறத் தொடங்கினார்கள். முதல் வகுப்பு பகுதியிலிருந்த எனக்கு தெரிந்த நம்மவர் எனக்காக காத்திருந்தவர் என்னைக் கண்டதும் முதலில் எங்கை இந்தியாவுக்கோ என்று கேட்டு அசடு வழிந்ததை மனதில் வைத்து இந்தத் தடைவை எங்கை மெட்ராசுக்கோ என கேட்காமல் மிக அவதானமாக..அடுத்த மெட்ராஸ் பிளேனுக்கு இன்னும் 6 மணித்தியாலம் காத்திருக்க வேணும் வா ஏதாவது லோஞ்சிலை போய் டீ குடிச்சபடி கதைக்கலாமென்றவரிற்கு. நான் மெட்ராஸ் போகேல்லை இஞ்சை பொம்பேயிலை வெளியாலை போறன் என்றதும். பொம்பேயிலையா??யார் இங்கை இருக்கினம் ஏதும் பிசினஸ்சோ? என்றவர் முடிக்கு முதலேயே ஓமோம் இஞ்சை பால்தக்கரேயை ஒருக்கா சந்திக்கவேணும் திரும்பவும் பிரான்ஸ் வந்ததும் போனடிக்கிறன் சந்திப்போம் என்று விடைபெற்றுக்கொண்டு குடிவரவு குடியகல்வு(இமிக்கிறேசன்) பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

பால்தக்கரேயா? என்று தலையை சொறிந்தவர் நான் உண்மையிலேயே வெளியேதான் போகிறேனா என எட்டியெட்டிப்பார்த்து உறுதி செய்தவர் தனது விமானம் மாறும் பக்கத்தை தேடிப் போய்விட்டார். இமிக்கிறேசனில் எனது முறை வந்தது நான் எனது மற்றும் மனைவியின் கடவுச்சீட்டுக்களை அதிகாரியிடம் நீட்டினேன். எனது கடவுச்சீட்டை பிரித்து விசாவினைப்பார்த்தவர் கடவுச்சீட்டை கணணிஇயந்திரத்தில் ஒரு இழுப்பு இழுத்து பார்த்துவிட்டு வெளியேறும் சீலை எடுத்து ஒரு குத்துக் குத்தினார் அப்பொழுது மனைவியை லேசாய் திரும்பிப் பார்த்தேன் அப்பொழுழுதான் அவள் கண்களில் கொஞ்சம் மகிழ்ச்சி இழையோடியது.அடுத்ததாய் மனைவியின் கடவுச்சீட்டை பிரித்தவர் முன்னும் பின்னுமாய் பிரட்டினார் மனைவியையும் கடவுச்சீட்டையும் மாறிமாறிப்பார்த்தார்.பின்னர் எங்கே பழைய பாஸ்போட் என்றார். பழைய பாஸ்போட் பிரான்சில். கொண்டுவரவில்லை என நான் பதில் சொன்னதுமே மனைவி முந்திக்கொண்டு அது முடிந்ததால்தான் பிரான்ஸ் இந்திய தூதரகத்தில புதிதாய் எடுத்தோம் என்றாள். கடுப்பான அதிகாரி அது எனக்கு தெரியும் அதுதான் பழையதை கேக்கிறேன் என தொடங்கியவர் அதுவரை புழக்கத்தில் இருந்த ஆங்கிலம் இருவரிடமும் கிந்திக்கு தாவியது. எனக்கு பாதி புரிந்ததும் புரியாமலும் போகவே அப்பாடா நம்ம பிரச்சனை முடிஞ்சுது நான் ஒரு ஓரமாய் நிக்கலாமென ஒதுங்கிக்கொண்டாலும் .என்னைத்தான் ஏதாவது நோண்டுவார்கள் என நினைத்துப்போனால் மனைவியை போட்டு நோண்டிக்கொண்டிருந்தது எனக்கு சிரிப்பாகவும் இருந்தது. மனைவிக்கும் அவரிற்குமான சில நிமிட வாக்குவாதத்தின் பின்னர்.மனைவியின் கடவுச்சீட்டிலும் சீலை ஓங்கி ஒரு குத்தி அனுப்பிவிட்டார்.

வெளியே வந்ததும் விமான நிலைய வாசலில் பெரிய மண்மூடைகள் அடுக்கப்பட்ட பாதுகாப்பரண்களில் இந்திய இராணுவத்தினர் காவலில் இருந்தனர். இலங்கையில் இந்தியப்படை காலத்தில் எஸ்.எல். ஆர். மற்றும் எஸ்.எம்.ஜி துப்பாக்கிகளுடன் மட்டுமே பார்த்துப்பழக்கப்பட்ட இந்திய இராணுவத்தின் கைகளில் ஏ.கே m s. T 56 தூக்கியபடி அங்குமிங்குபும் திரிந்தனர். ஆனால் வெளியில் காவல்த்துறையினரின் கைகளில் இன்னமும் மூங்கில் கொட்டான்களுடன்தான் திரிகின்றார்கள். வெளியே வந்ததும் வரவேற்பு பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் நின்றிருந்தார்கள்.பாரிசில் சைபர் பாகை குளிரில் புறப்பட்ட எனக்கு 33 பாகை வெப்பம் முகத்திலறைந்து வரவேற்றது. விமான நிலையத்தில் எங்களை வரவேற்பதற்காக மனைவியின் தம்பியும் எனது நண்பன் டோனியலும்(டானியல்)வந்திருந்தார்கள்.அங்கிருந்த கூட்டத்தில் அவர்களை தேடி கண்டு பிடிப்பதே சிரமமாக இருந்த. அங்குமிங்கும் மிலாந்தியபடி நின்ற என்னை பார்த்து சியாம் என கத்தியபடியே பூங்கொத்துடன் ஒடிவந்த டோனியல் மனைவியின் கையில் பூங்கொத்தினை திணித்துவிட்டு என்னைக்கட்டிப்பிடித்துக்கொண்டான். ஒரு சில செக்கன் மௌனம் மட்டும் பேசியது எங்களை விடுவித்துக்கொண்டு ஒருவரையொருவர் நேராக பார்த்போது எங்கள் இருவரின் கண்களுமே கலங்கியிருந்தது.

டோனியலால் அடக்கமுடியவில்லை அழுதேவிட்டான் அவனை தட்டி தேற்றியபடி மனைவியின் சகோதரரையும் தேடிப்பிடித்தோம். அங்கேயும் சில நிமிட பாசபரிமாற்றங்கள் முடிந்தபின்னர் ஒரு வாடைகைக் காரில் ஏறினோம்.கார் நகரத் தொடங்கியது .ஆசியாவின் மிகப்பெரிய சேரி என்று சொல்லப்படும் தாராவிப் பகுதியில்தான் எனது நண்பன் குடியிருந்தான். எனக்காக அந்தப் பகுதியிலேயே ஒரு விடுதியை பதிவு செய்து வைத்திருந்தான். விடுதி நோக்கி போய்கொண்டிருக்கும் போதே டோனியலின் பேச்சு முழுதுமே நடந்து முடிந்த இறுதி யுத்தம் பற்றியதாகவேயிருந்தது.இடையிடை எல்லமே வீணாய் போச்சுதே என்று சொல்லிக்கொண்டே வந்தான். நானும் வெளியால் நோட்டம் விட்டபடியே அவனிற்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். மும்பை வெகுவாகவே மாறி விட்டிருந்தது அதிவேக வீதிகள் ..அகலப்படுத்தப்பட்ட சாலைகள் கட்டிடங்கள் என முன்னேறியிருந்தாலும் அதிகமான வாகனங்கள் புழுதி என்றும் முன்னேறியிருந்தது. நாங்கள் விடுதியயை வந்தடைந்ததும் மனைவியும் அவளது சகோதரரையும் விடுதியில் தங்கவைத்துவிட்டு நான் டோனியலுடன் அருகேயிருந்த அவனது அறைக்கு சென்றேன். குளவிக்கூடுகள் போல் அமைக்கப்பட்டிருந்த குடியிருப்புக்கள் நாற்றமெடுத்த சாக்கடை வாசனை குறுகலான பாதை தாண்டி அவனது அறைக்குள் நுளையும் போது பார்த்துவா தலையில் அடிபடப்போகுது என்றான்.

குனிந்து உள்ளே நுளைந்தேன். ஒரு பிளாஸ்ரிக் பாயை விரித்துவிட்டு உக்காரு என்றவன் ஒரு துணிப்பையிலிருந்து இரண்டு பியரை எடுத்து வாயால் கடித்து துறந்தபடி கிளாஸ் வேணுமா என்றான்.வேண்டாமென சொல்லி ஒரு போத்தலை வாங்கிய நான் அறையினை ஒருதடைவை மேயந்தேன்.ஒரு 3 மீற்றர் நீளம் இரண்டு மீற்றர் அகலம் மட்டுமே கொண்டதொரு அறை டோனியலும் அவனது நண்பனும் குடியிருந்தனர் ஒரு சிறிய தொலைக்காட்சிப்பெட்டி எந்தத் தளபாடங்களும் கிடையாது சுவரில் ஒரு கலண்டல் அதில் சிரித்தபடி ஜஸ்வர்யாராய். சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி இரண்டு உடுப்புப் பெட்டிகள் இவ்வளவுதான். இந்தப் பகுதிகள் எனக்கு ஏற்கனவே பழகியிருந்தாலும் சுத்தமாக இருந்த ஜரோப்பாவில் நீண்டகாலம் இருந்துவிட்டு சாக்கடை நாத்தமும் அழுக்கான ஒரு இடத்தில் நுளையும் போது கொஞ்சம் சங்கடமாகத்தானிருந்தது.அதனை நண்பனிடம் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அங்கிருந்து வெளியேறவேண்டும் போல இருந்தது.வாயேன் முன்னையை போல கடற்கரையில் போயிருந்து பியரடிக்கலாமென்றேன். கடற்கரை முன்னையை போல இல்லடா. அந்த அட்டாக்கிற்கு பிறகு (மும்பைத்தாக்குதல்)இரவிலை சரியான கெடுபிடி கண்டபாட்டிற்கு போலிஸ்காரன் அடிப்பான் இரவு நேரத்திலை கடற்கரையோரமா ஒதுங்கிற ஜோடிகளை கூட போலிஸ் விட்டுவைக்கிறதில்லை.நீயும் வெளிநாட்டிலையிருந்துவந்து அடிவாங்கப் போறியா என்றான்.

போலிசிடம் அடிவாங்கிறதை விட இந்த நாத்தமே பறவாயில்லை என்று தோன்றியது. பியரை உறிஞ்சினேன். என்னடா இப்பிடியாயிட்டுதே என்கிற டோனியலின் புலம்பலை தவிர்ப்பதற்காக பொம்பே இப்ப எப்பிடி என்று தொடக்கினேன். பொம்பே இப்பொழுது கொலைகள் கொள்ளைகள் குறைந்திருக்கிறது. ஆனாலும் தாதா கும்பல்களின் கள்ள வியாபாரங்கள் தொடர்ந்து நடக்கிறது.அவர்களிற்குள் மோதல்கள் குறைந்துள்ளது.கலவரங்களை தொடர்ந்து பெரும்பாலான முஸ்லிம்கள் பொம்பேயை விட்டு வெளியிடங்களிற்கு சென்றுவிட்டார்கள்.என்று மும்பைபையை பற்றி பேசினாலும் அடிக்கடி முள்ளிவாய்க்காலிற்கும் போய் வந்தோம் நேரம் அதிகாலை 5 மணியாகிவிட்டிருந்தது என்னை விடுதிவரை கொண்டு வந்து விட்டவன் மறுநாள் சந்திப்பாதாக விடைபெற்றான்.

இந்த இந்தியப் பயணத்தில் நான் பல நண்பர்களையும் சந்தித்திருந்தாலும் எமக்கு ஒரு தேசம் தேவை என்பதற்காக தங்கள் வாழ்வு முழுவதையுமே அர்ப்பணித்த மூன்று முக்கியமான நண்பர்களை பற்றி இந்தப் பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அந்த மூன்று பேரில் முதலாவதாக நான் இப்பொழுது சந்தித்திருப்பவன்தான் டோனியல் இவனைப்பற்றி பயணத்தில்...................

DSCF0003.jpg

படம் நான் தங்கியிருந்த விடுதியில் இருந்து எடுத்தது

Edited by sathiri

  • Replies 283
  • Views 41k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரின் கதையின் ஆரம்பமே.... நன்றாக உள்ளது. மிகுதியையும் தொய்வில்லாமல் தொடருங்கள். :)

சாத்திரியாருக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும் என்று நினைத்திருந்தேன் :lol: . ஆட்டோ படத்தை பார்த்த பின் தான்.... விளங்கிச்சுது...... :D

எப்பிடி 70 என்றா :lol:

என்னைத்தான் ஏதாவது நோண்டுவார்கள் என நினைத்துப்போனால் மனைவியை போட்டு நோண்டிக்கொண்டிருந்தது எனக்கு சிரிப்பாகவும் இருந்தது. மனைவிக்கும் அவரிற்குமான சில நிமிட வாக்குவாதத்தின் பின்னர்.மனைவியின் கடவுச்சீட்டிலும் சீலை ஓங்கி ஒரு குத்தி அனுப்பிவிட்டார்.

எனது மனைவியின் பாஸ்போட்டை வைத்து இப்படி ஏதும் செய்தால் அவன் மூச்சைய்ல ஓங்கி குத்து விட்டு இருப்பேன்.

அப்பாடா அடுத்த முரை சாத்திரியை உள்ள அனுப்புறதுக்கு வழி பார்த்தாச்சி. :lol::(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது மனைவியின் பாஸ்போட்டை வைத்து இப்படி ஏதும் செய்தால் அவன் மூச்சைய்ல ஓங்கி குத்து விட்டு இருப்பேன்.

அப்பாடா அடுத்த முரை சாத்திரியை உள்ள அனுப்புறதுக்கு வழி பார்த்தாச்சி. :lol::(

ஓங்கிக் குத்தியிருக்கலாம்தான் உடைனேயே அங்கை கொஞ்சநாள் பிடிச்சு வைச்சு நொக்கு நொக்கெண்டு நொக்கிப்போட்டு பிரான்சிற்கு திருப்பியேத்திருப்பாங்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இபோதுதான் பார்த்தேன் சாத்திரியார்! (திண்ணையில் உங்கள் சம்பாசனையைப் பார்த்தபின்) நன்றாகத் தொடங்கியுள்ளீர்கள்.

எல்லோரும்தான் பயணம் செய்கின்றோம், ஆனால் உங்களைப் போன்ற சிலரால் மட்டுமே பயணங்களையும் பயன்படும்படி பயணக் கட்டுரைகளாக்க முடிகின்றது. தொடரட்டும் வாழ்த்துகள் ! :D

ஓங்கிக் குத்தியிருக்கலாம்தான் உடைனேயே அங்கை கொஞ்சநாள் பிடிச்சு வைச்சு நொக்கு நொக்கெண்டு நொக்கிப்போட்டு பிரான்சிற்கு திருப்பியேத்திருப்பாங்கள். :lol:

அது தானே நமது ஆசையும்? ஹி ஹி.

சும்மா சொன்னேன் :) ஆனால் உங்கள் பயனதொடர் வாசிக்க ஆவலாக இருக்கு அடுத்த பகுதியை எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பயணக்கட்டுரை ஆரம்பித்திருக்கிறீர்கள் நாளாந்தம் இங்கு வந்து வாசிக்கிறேன் எப்படி விடுபட்டது?

இபோதுதான் பார்த்தேன் சாத்திரியார்! (திண்ணையில் உங்கள் சம்பாசனையைப் பார்த்தபின்) நன்றாகத் தொடங்கியுள்ளீர்கள்.

எல்லோரும்தான் பயணம் செய்கின்றோம், ஆனால் உங்களைப் போன்ற சிலரால் மட்டுமே பயணங்களையும் பயன்படும்படி பயணக் கட்டுரைகளாக்க முடிகின்றது. தொடரட்டும் வாழ்த்துகள் ! :D

உண்மை தான் சுவி அண்ணை.. நான் யாழ்களத்தில் இணைந்த காலத்தில் சாத்திரியார் யாழில படு பிஸியான ஆள். அவரின் எழுத்தை வச்சு அவரும் என்னை போல ஒரு இளைஞன் என்றே நினைத்தேன் :lol: கால போக்கில் தான் அவர் மகனுக்கும் எனக்கும்கு கிட்ட தட்ட ஒரே வயது என்று தெரிந்து கொண்டேன் ஆனாலும், யாழில துணிந்து நகைச்சுவையாகபும் கிண்டலாகவும் கருத்து எழுதினால் அதை உள் வாங்கும் நல்ல பக்குவம் உள்ள ஒருவரில் சாத்திரி அண்ணையும் ஒருவர்.

நல்ல பயணக்கட்டுரை ஆரம்பித்திருக்கிறீர்கள் நாளாந்தம் இங்கு வந்து வாசிக்கிறேன் எப்படி விடுபட்டது?

வெள்ளிக் கிழமையில் 4 5 மரக் கறி வைக்கும் போது ஒன்றுக்கு உப்பு போடுவதை மறப்பதில்லையா அது போல தான் இதுவும்.( இல்லைனா மட்டும் ஒழுங்கா சமைப்பீர்களா என்னா?

Edited by வினித்

...

வெளியே வந்ததும் விமான நிலைய வாசலில் பெரிய மண்மூடைகள் அடுக்கப்பட்ட பாதுகாப்பரண்களில் இந்திய இராணுவத்தினர் காவலில் இருந்தனர். இலங்கையில் இந்தியப்படை காலத்தில் எஸ்.எல். ஆர். மற்றும் எஸ்.எம்.ஜி துப்பாக்கிகளுடன் மட்டுமே பார்த்துப்பழக்கப்பட்ட இந்திய இராணுவத்தின் கைகளில் ஏ.கே m s. T 56 தூக்கியபடி அங்குமிங்குபும் திரிந்தனர். ஆனால் வெளியில் காவல்த்துறையினரின் கைகளில் இன்னமும் மூங்கில் கொட்டான்களுடன்தான் திரிகின்றார்கள். வெளியே வந்ததும் வரவேற்பு பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் நின்றிருந்தார்கள்.பாரிசில் சைபர் பாகை குளிரில் புறப்பட்ட எனக்கு 33 பாகை வெப்பம் முகத்திலறைந்து வரவேற்றது. விமான நிலையத்தில் எங்களை வரவேற்பதற்காக மனைவியின் தம்பியும் எனது நண்பன் டோனியலும்(டானியல்)வந்திருந்தார்கள்.அங்கிருந்த கூட்டத்தில் அவர்களை தேடி கண்டு பிடிப்பதே சிரமமாக இருந்த. அங்குமிங்கும் மிலாந்தியபடி நின்ற என்னை பார்த்து சியாம் என கத்தியபடியே பூங்கொத்துடன் ஒடிவந்த டோனியல் மனைவியின் கையில் பூங்கொத்தினை திணித்துவிட்டு என்னைக்கட்டிப்பிடித்துக்கொண்டான்.

.....

நான் ஒரு பகிடிக்கு நடிகர் ஷியாம் என்று சொன்னதை இப்பிடியா உல்ட்டா பண்ணுறது? :D

நான் ஒரு பகிடிக்கு நடிகர் ஷியாம் என்று சொன்னதை இப்பிடியா உல்ட்டா பண்ணுறது? :D

சாந்த்திரின் சொந்த பெயர் தெரியாதோ? ஷியாம் என்பது சாத்திரின் இயக்க பெயரோ தெரியாது ஆனால் சாத்திரியை ஷியாம் என்று கூப்பிடுவார்கள்?

Edited by வினித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு பகிடிக்கு நடிகர் ஷியாம் என்று சொன்னதை இப்பிடியா உல்ட்டா பண்ணுறது? :D

எனக்கு உண்மையிலேயே சியாம் என்கிற ஒரு பெயரும் உண்டு யாழில் முதன் முதல் நான் சியாம் என்கிற பெயரில்தான் கருத்துக்களை பதியத்தொடங்கியிருந்தேன். ^_^

எனக்கு உண்மையிலேயே சியாம் என்கிற ஒரு பெயரும் உண்டு யாழில் முதன் முதல் நான் சியாம் என்கிற பெயரில்தான் கருத்துக்களை பதியத்தொடங்கியிருந்தேன். ^_^

ச்சா!!! இது எனக்கு முதலே தெரியாமல் போச்சுது, தெரிஞ்சு இருந்தால், அரவிந்தசாமி என்று சொல்லி இருப்பனே... :lol: :lol: :D

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி உங்கள் பயண அனுபவத்தை படிக்க ஆவலாய் உள்ளது. தொடருங்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி உங்கள் பயண அனுபவத்தை படிக்க ஆவலாய் உள்ளது. தொடருங்கள்...

மீண்டும் நீண்ட நாட்களின் பின்னர் கண்மணியக்கா :) மற்றும் சகாரா நன்றிகள். :wub: மற்றவர்கள் கோவிக்கப்போறார்கள் அதென்ன பெண்களிற்கு மட்டும் நன்றியென்று :lol: எனவே சுவியண்ணா. மற்றும் அனைவரிற்கும் நன்றிகள் ^_^

மீண்டும் நீண்ட நாட்களின் பின்னர் கண்மணியக்கா :) மற்றும் சகாரா நன்றிகள். :wub: மற்றவர்கள் கோவிக்கப்போறார்கள் அதென்ன பெண்களிற்கு மட்டும் நன்றியென்று :lol: எனவே சுவியண்ணா. மற்றும் அனைவரிற்கும் நன்றிகள் ^_^

சா சா :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ச்சா!!! இது எனக்கு முதலே தெரியாமல் போச்சுது, தெரிஞ்சு இருந்தால், அரவிந்தசாமி என்று சொல்லி இருப்பனே... :lol: :lol: :D

ஆரது அரவிந்தசாமி???????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயணங்கள், பயணக்கதைகள் பயனுள்ளவை, சுவாரியமானவை..அது யார் சொன்னாலும் கூட,.. அந்த காலத்தில் வாசித்த மணியனின் இலங்கை பயணத்தில் எழுதிய..யாழ்பானதவரின் இயல்புகள்..இயல்பானவை..அண்மையில் யாரோ இணைத்த தமிழர் என்பதின் இயல்புகள் என்பதை விட யாதர்தமானவை - அது கூட நான் நினைக்கிறன் 2002 பகுதிகள் வந்த அனந்த விகடனில் வந்த பகுதி ஒன்றின் தழுவலே.

மணியன் சொன்ன..யாழ்ப்பாணத்தவரின் குணங்கள், சைக்கிள் என்றால் raleigh ரலி, மெசின் ஒன்றால் ட்ராக்டர், கார் என்றால் இங்கிலாந்து கார் -A 40 , மொறிஸ் models , அதைத்தவிர, தோசை சுடுவது என்றால் முதல் நாளே சொல்லுவது- அதை அவர் இந்த தமிழர்களுடன் நாங்கள் பண்பாடுட்டு ரீதியில் விலகி உள்ளோம் என காட்ட பாவித்திருந்தார்..

அது போல சாத்திரியின் பதிவுகள் எங்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுகிறேன்..

ஆரது அரவிந்தசாமி???????

என்னண்ணா, அரவிந்தசாமியைத் தெரியாதே?

சரி சொல்லுறன் ஆனால் கதிரையை இறுக்கிப் பிடிச்சு கொள்ளுங்கோ ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பில்லை... :D^_^

(அவர் தான் நடிகர் அரவிந்த்தசாமி தளபதி படத்தில் ரஜனியின் தம்பியாக வருபவர் :lol: )

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் கதை அருமையாகப் போகின்றது!!! மேலும் எதிர்பார்கின்றோம்!!!

நீங்கள் தங்கிய இடத்தில் இருந்து எடுத்த படத்தில் மொட்டை மாடியில் காய்வது என்ன? கருவாடா அல்லது ஏதும் சதுரமான அப்பளமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னண்ணா, அரவிந்தசாமியைத் தெரியாதே?

சரி சொல்லுறன் ஆனால் கதிரையை இறுக்கிப் பிடிச்சு கொள்ளுங்கோ ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பில்லை... :D^_^

(அவர் தான் நடிகர் அரவிந்த்தசாமி தளபதி படத்தில் ரஜனியின் தம்பியாக வருபவர் :lol: )

குட்டியர்! ஆட்டாக் ஒண்டும் வரேல்லை........கதிரையின்ரை முன்கால்தான் கொஞ்சம் நெழிஞ்சு போச்சுது. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டோனியல் பெங்களுரை சேர்ந்தவன் அவன் பொறியியல் படித்ததுக்கொண்டிருந்த 83ம் ஆண்டு காலகட்டத்தில்தான் இலங்கை தமிழர் படுகொலைகள் நடந்தது அதன் பாதிப்பால் 84 ம் ஆண்டளவில் இந்தியாவில் இயங்கிய ஈழ விடுதலை இயக்கங்களுடன் தொடர்புகளை ஓற்படுத்தியவன் பின்னர் புலிகள் அமைப்புடன் நெருக்கமாகிக்கொண்டான்.ஆங்கிலம் கிந்தி கன்னடம் மராட்டி மலையாளம் என சரளமாகப் பேசக்கூடியவன். 91 ம் ஆண்டுகளிலிருந்தே நானும் அவனும் இணைந்து வேலைகள் செய்யத் தொடங்கியிருந்தோம். அதுவும் நானும் அவனும் 92ம் ஆண்டு கம்போடியா நாட்டில் திரிந்த காலங்கள் மறக்க முடியாதவை. எங்கள் இணைந்த வேலைத்திட்டங்கள் 2001 ம் ஆண்டுடன் நிறைவிற்கு வந்திருந்து

2001 ம் ஆண்டு புலிகள் அரசு பேச்சு வார்த்தைகள் தொடங்கியபோதே புலிகள் அமைப்பானது அமைப்பிற்குள்ளும் சர்வதேச ரீதியிலும் பல அதிகார மற்றும் நிருவாக மாற்றங்களை கொண்டுவந்தனர். அதன்போது வெளிநாடுகளில் தனியாகவும் குழுக்களாகவும் இயங்கிவந்த பல தனிநபர் மற்றும் குழு செயற்பாடுகள் அனைத்தையும் புலிகளின் அனைத்துலக செயலகத்தின் நேரடிகட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அவற்றில் முக்கியமாக நிதி.ஆயுதம். இராணுவ மற்றும் சக தொழில்நுட்பம்.பரப்புரை அரசியல். .வழங்கல்.(கப்பற்போககுவரத்துக்கள்)வெளியக புலனாய்வு. இதரவளங்களான மருத்துவம்.உணவு எரிபொருள் என்பன முக்கியமானதாகும்.இவையனைத்துமே அனைத்துலக செயற்பாட்டின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அனைத்து பொறுப்புக்களையும் கட்டுப்படுத்தும் முடிவெடுக்கும் சக்திமிக்கஅதிகாரங்களனைத்தையும் மணிவண்ணன் எனப்படும் கஸ்ரோவின் கைகளில் புலிகளின் தலைமை ஒப்படைத்திருந்தது. அதனையடுத்தே புலிகள் அமைப்பின் மிகப்பெரிய வெளிநாட்டு கட்டமைப்பான ஆயுதம் வழங்கல் நிதி என பொறுப்பிலிருந்த கே.பி கொம்பனி எனப்படும் கே.பத்மநாதனின் நிருவாகம் அனைத்துலக செயலக்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதனையடுத்து தனிதனியாகவும் சிறு குழுக்களாக இயங்கிய வேறு பொறுப்புக்களும் அனைத்துல செயலகத்திடம் ஒப்படைக்கும் உத்தரவு வெளிநாடுகளில் வழ்ந்தவர்களிற்கு அனுப்பப் பட்டது. புலிகள் அமைப்பானது தற்சமயம் ஒரு நாட்டினை நிருவகிக்கும் அரசு என்கிற நிகை;கு வந்து விட்டபடியால் நிருவாக இலகிற்காகவும்.அதே நேரம் சம்பந்தப் பட்ட துறைகளை நிருவகிப்பதற்கு அந்தத் துறை சம்பந்தமான கல்வியறிவு கொண்டவர்களால் நிருவகிக்கப்படவேண்டும் எனவேதான் இந்த மாற்றங்கள். எனவே தங்களால் அனுப்பப்படுவோரிடம் பொறுப்புக்களை ஒப்படைக்குமாறு ஆறு பேரடங்கிய சிறு குழுவாக இயங்கிக் கொண்டிருந்த எமக்கும் அதே உத்தரவு கிடைத்தது.

உத்தரவுக்கமைய அத்துடன் நானும் அதிலிருந்து ஒதுங்கிக்கொண்டு புதிதாக அனுப்பப்பட்டவரிடம் பொறுப்புக்களை ஒப்படைக்கத் தயாரானேன்.கிழக்கு ஜரோப்பிய நாடென்றில் மருத்துவம் படித்து விட்டு வந்த ஒருத்தர் என்னை வந்து சந்தித்தார்.நானும் என்னிடம் இருந்த ஆவணங்களை எடுத்துச்சென்று அவரிடம் கையளித்து விட்டு எனது தெடர்புகளையும் அவரிற்கு அறிமுகம் செய்து விட்டு அவருடன் தைத்துக்கொண்டிருக்கும்போதே அவரின் படித்த ஆணவம் தான் தெரிந்தது.அதே நேரம் அவர் என்னுடைய ஆலோசனைகளையோ வேறு விபரங்களையே கேட்டுத் தெரிந்து கொள்பவராக இருக்கவில்லை. உங்கள் வேலை முடிந்து விட்டது நீங்கள் போகலாமென்றார்.குரங்கின் கையில் பூமாலையை ஒப்படைக்கிறேனே என்கிற ஆதங்கம் எனக்கு அப்பொழுதே எழத்தொடங்கிவிட்டிருந்தது. எனது பிள்ளையை ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு போகின்ற மனநிலையில் அன்று எனது பொறுப்புக்களை அவரிடம் ஒப்படைத்துவிட்டு.எனது தனிப்பட்ட பாதுகாப்பினை கருத்தில் கொண்டும் புதியதொரு வாழ்வினை ஆரம்பிக்கவும்.பிரான்ஸ்நாட்டில் தமிழர்களே இல்லாத ஒரு மானிலத்தினை தேர்ந்தெடுத்து தற்சமயம் நான் வசிக்கும் நகரிற்கு வந்து குடியேறி திருமணமும் செய்துகொண்டு குடியும் குடித்தனமுமாகிவிட்டேன்.என்னைப்போலவே என்னுடன் இயங்கிய மற்றையவர்களும் ஒதுங்கிக்கொண்டு தனிப்பட்ட வாழ்வினுள் நுளைந்தபொழுது டேனியலும் தன்னுடைய வீட்டிற்கு போயிருந்தான்.அவனது தாயார் ஏற்கனவே இறந்து போயிருந்தார். அவன் பலவருடங்கள் தொடர்புகளின்றி நாடுநாடாகத் திரிந்த காலங்களில் அவனது உறவுகளுடன் தொடர்புகளற்று இருந்தான்.

அந்தக் காலகட்டங்களிலேயே தந்தையாரும் இறந்துபோய்விட்டார் அந்தத் தகவல்கள் இவனிற்கு கிடைத்திருந்தாலும் அவனால் போக முடியாத நிலையிருந்தான். டோனியலின் தொடர்புகள் இல்லாததனால் அவனும் இறந்து போயிருக்கலாமென நினைத்த அவனது சகோதர சகோதரிகள் தங்களிற்குள் சொத்தினை பங்கு போட்டிருந்தனர்.டோனியலைக் கண்டதும் அவர்களிற்கு மகிழ்ச்சி அல்ல அதிர்ச்சியடைந்தனர். சொத்தில் பங்கு கேட்கப் போகிறான் என நினைத்து அவனுடன் யாரும் சரியாகவே பேசிக்கொள்ளவில்லை அதனால் மனம் வெறுத்தவன்.தனக்கு பழக்கமான கேரளாவிற்கே திரும்பி அங்கு தோத்தூர் பகுதியில் நண்பர்களின் உதவியுடன் ஒரு பலசரக்கு கடை ஒன்றினை திறந்து தன்வாழ்வை ஓட்டிக்கொண்டிருந்தவன் .சில வருடத்திலேயே கடை ஒன்றினை செந்தமாகவாங்கி முதலாளியாகியுமிருந்தான்.அவ்வப்பொழுது எங்களிற்கான தொலைபேசி நலம் விசாரிப்பக்கள் நடக்கும். அப்பொழுதெல்லாம் என்னடா ஏதாவது ஒரு கேரள பெண்குட்டியை பிடித்துக்கொண்டு செட்டிலாகலாமே எனக் கேட்பேன். போடா தமிழீழம் கிடைக்கட்டும் பிறகு யாராவது ஒரு போராளி பெண்ணைத்திருமணம் செய்துகொண்டு செட்டிலாகலாமென்பான்.இப்படியாகவே காலங்கள் போய்க்கொண்டிருந்தபோதுதான் 2008 ன் நடுப்பகுதிகளில் என்னுடன் கதைக்கும்போது S.Oகொம்பனி(சூசை) தொடர்பெடுத்திருக்கினம் அவையளோடை வேலைசெய்கிறேன் என்றான். பின்னர் 2009 பங்குனி மாதமளவில் தொடர்பு கொண்டவன் அவசரமாக மருந்துகள் அனுப்பசொல்லி கேட்டிருந்தார்கள் அதன் பட்டியல் கிடைக்கவில்லையென்றான்.

பின்னர் பதினைந்து நாட்களின் பின்னர் அவனிற்கு அவசர முதலுதவி மருந்துகள் அடங்கிய பட்டியல் ஒன்று கிடைத்தது .வழமையாக அவனிற்கு கிடைக்கும் பட்டியலின் பொருட்களிற்கான பணம் வெளிநாடொன்றிலிருந்து அவனிற்கு கிடைத்துவிடும். ஆனால் இந்தத் தடைவை அவனிற்கு பணம் கிடைக்கவில்லை கால சூழ்நிலையை மனதில் வைத்து பட்டியல் கையில் கிடைத்ததுமே வேகமாக செயலில் இறங்கியவன்.கையிலிருந்தபணம் கொஞ்சம் கடன் மிகுதி வழைமையான கொள்வனவாளர்களிடமிருந்து கடனடிப்படையில் சுமார் 5 இலட்சம் இந்தியபணத்திற்கான மருந்துகளை கொள்வனவுசெய்துவிட்டு S.O கொம்பனிக்கு செய்தியனுப்பியிருந்தான் விரைவில் வண்டி வரும் என்று செய்தியும் கிடைத்திருந்தது.ஒரு நாள் இரண்டுநாளென நாட்களை எண்ணியவாறு குறிப்பிட்ட இடத்திற்கு ஒவ்வொரு இரவும் சென்று காத்திருக்கத் தொடங்கினான்.ஒவ்வொரு நாள் அதிகாலையும் எனக்கு நோ .......என எஸ் எம் எஸ் வரும்.நாட்கள் 50தை தாண்டியது

அன்று மே 20ந்திகதி அதே எஸ் எம் எஸ் வந்தது அவனுடன் தொடர்புகொண்டேன்.படபடப்பாக என்னடா ஒண்ணரை மாசமாயிட்டுது வாங்கின மருந்துகள் கனக்க தேதி முடியப்போகிறது வண்டி வந்தபாடில்லை என்ன பண்ணிறதெண்ணே தெரியலை சாலை பகுதி பிடிபட்டதா அடிபடுது ஒண்டுமே புரியலை என்றான். முப்பது வருடகால ஆயுதப்போராட்டத்தின் திகதியே முடிந்துவிட்டதென்பதை தெரியாமல் அவன் வாங்கிய மருந்துகளின் திகதிகளிற்காக கவலைப்பட்டுக்கொட்டிருந்தான்.அவனிற்கு என்ன சொல்வதென்று தெரியாமல். இனி வண்டி வருமென்று நான் நினைக்கவில்லை எனவே முடிந்தால் மருந்துகளை திரும்ப கொடுத்துவிட்டு உன்னுடைய வேலையை பார் என்றென். இல்லடா மனசு கேக்கலை இன்னம் கொஞ்சநாள் பாக்கிறேன். என்றான் அன்றிருந்த மனநிலையில் நானும் அவனுடன் அதிகம் பேசவில்லை.

சிலநாட்கள் காத்திருந்தவன் நிலைமைகளை அறிந்துகொண்டு மீண்டும் தொடர்புகொண்டு தழுதழுத்த குரலில் என்னடா இப்பிடியாயிட்டுதே என தொடங்கியவன் அப்படியே தொடர்ந்தபொழுது நீ வையடா நான் உனக்கு போன் அடிக்கிறன் உனக்கு வீணாய் செலவாவும் என்ற என்னிடம்.. அட போடா என்ன பணம் பெரிய பணம் எல்லாமே பேயிட்டுது பணத்தை வைத்து என்ன குண்டி துடைக்கவா என்றவன். இந்தமுறை கொள்வனவு பணம்கூட கிடைக்கவில்லை கடன் வாங்கியவர்கள் நெருக்குகிறார்கள். திரும்பவும் மருந்துகளை கொடுக்க முடியாது பிரச்சனை பெரிசானால் போலிஸ்... கேஸ்.... என்று போய் நான் ஜெயிலுக்கு போகவேணும்.அதுகூட பரவாயில்லை ஒரு வசனம்கூட பேசாலமெண்டால் இது வரை பணம் அனுப்பியவர்களின் தொலைபேசிகள் எதுவும் பதிலில்லை ஒரு வாட்டி நீ போனடித்துப்பார் என்று சில இலக்கங்களை தந்தான்.அதில் பல எனக்கு தெரிந்த இலக்கங்கள்தான் அந்த இலக்களிற்கு நானும் தொடர்புகெண்டு பார்த்தேன் அனைத்தும் செயலிழந்திருந்தது. அதனையும் அவனிடம் தெரிவித்திருந்தேன்.அதன் பின்னர் தன்னுடைய கடையை விற்று கடனை அடைத்தவன் மிகுதி பணத்துடன் மும்பைக்கு இரயிலேறிவிட்டிருந்தான். மும்பைக்கு வந்தவன் ஒரு அமைதியான வழ்வினை வேண்டி தனக்குத் தெரிந்த நட்பின் உடவிகளுடன் தன் வாழ்விற்கான ஒரு ஆதரத்தினை நிலை நிறுத்திக்கொள்ள மும்பையின் பிரபலமான நுற்றாண்டுகளை கடந்து நிற்கும் மலை மாதா தேவாலயத்தின் பாதிரியாரின் உதவியினை நாடியிருந்தான். அவன் உதவி தேடிப்போயிருந்த நேரம். அந்தப் பகுதியில் மெழுகுதிரி கடை வைத்திருந்த ஒரு வயதான பெண்மணி இறந்து போயிருந்ததால் அந்த இடம் காலியாயிருந்தது அந்த இடம் டோனியலிற்கு கிடைத்தது. தேவன் ஒரு வாசலை அடைத்தால் இன்னொரு வாசலை திறப்பார் என்கிற பைபிள் வசனம் யாரிற்கு பொருந்தியதோ இல்லையோ டேனியலிற்கு பொருந்தியது தொடரும்..........................

DSCF0017.jpg

MOUNT MARY CHURCH

Edited by sathiri

வாசிக்க கஷ்டமாக உள்ளது. :. ( டானியல் பெங்களூரைச் செர்ந்தவன்ர் என குறிப்பிட்டுள்ளீர்கள். அப்படியானால் அவர் வேற்று மொழி இந்தியரா?

சாத்திரியார், தேவையில்லாமல் கண்டதிற்குள்ளையும் காலை விடுறியள். பயத்திலதான் கடைசியில் தேவாலயத்தின் படமா? :lol:

Edited by thappili

மனதிற்குள் ஒரு வெறுமை.

டொனியல் போல வாழ்க்கையை தியாகம் செய்த பலர் ஒருபுறம். ஆனால் கருணா, கே.பி என இன்னொரு நீண்ட பட்டியல் மறுபுறம்..................... :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை கொள்வனவு பணம்கூட கிடைக்கவில்லை கடன் வாங்கியவர்கள் நெருக்குகிறார்கள். திரும்பவும் மருந்துகளை கொடுக்க முடியாது பிரச்சனை பெரிசானால் போலிஸ்... கேஸ்.... என்று போய் நான் ஜெயிலுக்கு போகவேணும்.அதுகூட பரவாயில்லை ஒரு வசனம்கூட பேசாலமெண்டால் இது வரை பணம் அனுப்பியவர்களின் தொலைபேசிகள் எதுவும் பதிலில்லை ஒரு வாட்டி நீ போனடித்துப்பார் என்று சில இலக்கங்களை தந்தான்.அதில் பல எனக்கு தெரிந்த இலக்கங்கள்தான் அந்த இலக்களிற்கு நானும் தொடர்புகெண்டு பார்த்தேன் அனைத்தும் செயலிழந்திருந்தது. அதனையும் அவனிடம் தெரிவித்திருந்தேன்.அதன் பின்னர் தன்னுடைய கடையை விற்று கடனை அடைத்தவன் மிகுதி பணத்துடன் மும்பைக்கு இரயிலேறிவிட்டிருந்தான்.

மணியன் எழுதிய 'இதயம் பேசுகின்றது' போலக் கதை சூடு பிடிக்கின்றது என்று தளத்துக்கு வந்த என்னை அழவைத்துவிட்டீர்கள், சாத்திரி அண்ணா.

தொடர்ந்து எழுதுங்கள்.உண்மைகள் கட்டாயம் வெளிக்கொணரப் பட வேண்டும்!

முக மூடிகள் கிழிக்கப் பட வேண்டும்!

சதுப்பு நிலத்தில் வளரும் தாமரைகளாக, சில டானியல்களினால் தான், உலகில் மனித இதயங்கள் இன்னும் துடித்துக்கொண்டிருக்கின்றன!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க கஷ்டமாக உள்ளது. :. ( டானியல் பெங்களூரைச் செர்ந்தவன்ர் என குறிப்பிட்டுள்ளீர்கள். அப்படியானால் அவர் வேற்று மொழி இந்தியரா?

சாத்திரியார், தேவையில்லாமல் கண்டதிற்குள்ளையும் காலை விடுறியள். பயத்திலதான் கடைசியில் தேவாலயத்தின் படமா? :lol:

பெங்களுர் தமிழர்களின் பிரதேசம் இந்தியா சுதந்திரமடைந்து இந்தியாவை மொழிவாரி மானிலங்களாக பிரித்தபொழுது பெங்களுர் கன்னட மானிலத்திற்குள் சேர்க்கப்பட்டு விட்டது.பெங்களுரில் இன்னமும் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள்.டோனியலும் தமிழன்தான். திருப்பதி ஏழுமலையான்கூட தமிழர்தான் இப்பொழுது கன்னடம் பேசுகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.