Jump to content

பயணம் .....................


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிப்பாருங்கள் ஏதாவது பொருள் வரும் அதுதான் முக்கியபொருள் :lol: :lol:

இந்த முக்கிய பொருளை ஓரக் கண்ணால் மட்டும்தான் பார்க்கலாம். முழுக்கப் பார்த்தால் பேயறைந்தமாதிரிப் போய்விடும். :o

Link to comment
Share on other sites

  • Replies 283
  • Created
  • Last Reply

கணேஸ்பூர் கிராமம் இன்னமும் பஞ்சாயத்து ஆட்சியில் உள்ளதொரு கிராமம். இந்தக் கிராமத்திற்கு வந்த அன்ரனிதாஸ் அங்குள்ள ஏரியில் மீன்பிடிக்கும் உரிமையையும் அதனை சுற்றியிருக்கும் புளியந்தோப்பையும் குத்தகைக்கு எடுத்துவிட்டான்.அத்துடன் தன்னுடர் கிராமத்தில் வேலைவெட்டியில்லாமல் திரிந்த சில இளைஞர்களையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு தொழிலை நடாத்தி வருகிறான்.வருமானத்திற்கு பஞ்சமில்லை. மாதா மாதம் பிள்ளைக்கும் தாயாருக்குமான செலவை அனுப்பிவிட்டு மீதிப்பணம் அத்தனையையுமே செலவுசெய்துவிடுவான்.ஏரியின் அருகே உள்ள பஞ்சாயத்து மண்டபம்தான் அவனது வீடு.திருமணமாகாத அவனது சீடர்களும் அங்கேயே மண்டபத்தில் தான் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.

மூன்றாவது பஸ்சையும் பிடித்து இரவு எட்டுமணியளவில் இறுதி இடமான கர்க்காலை வந்தடைந்தேன்.அதுவரை தான் பஸ் போகும் அங்கு எனது நண்பன் வண்டியுடன் வந்து காத்திருந்தான். நான் பஸ்சை விட்டு இறங்கியதுமே ஒரு இளைஞர்குழு என்னை அலாக்காய் துக்கிக்கொண்டுபோய் சிறிய லொறிபோல இருந்த ஒரு வண்டியில் போட்டார்கள் வண்டிக்குள் காத்திருந்த நண்பன் என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டவன். எத்தினை வருசமாச்சு கொஞ்சம் எடை போட்டிருக்கிறாய் என்றான் கொஞ்சமல்ல கனக்கவே போட்டிருக்கிறேன் என்றேன். வண்டிக்குள் சாக்குகளும் மீன் கூடைகளுமாய் இருந்தது மீன் மணம் மூக்கை துளைத்து சென்றது.வண்டிக்குள் சாக்கினை விரித்து விட்டு எல்லாரும் அமர்ந்துகொண்டோம்

வண்டி நகரத் தொடங்கியது

அங்கு மீன் கூடைக்குள் இருந்த விஸ்கிபோத்தலை எடுத்த நண்பன் பாத்தியா உனக்காவே பாரின் சரக்கா தேடி வாங்கி வைத்திருக்கிறென் என்றபடி ஒரு பிளாஸ்ரிக் கோப்பையில் ஊற்ற இன்னொருவன் தண்ணீர் பக்கற்றை பல்லால் கடித்து துப்பிவிட்டு அதனுள் ஊற்ற அதனை என்னிடம் நீட்டிளான். வேணாண்டா காத்தாலையிருந்து சாப்பிடேல்லை ஏதாவது சாப்பிலாமென்றேன். உடைனேயே தயாராய் இருந்த பிரியாணி பசல் ஒன்றினை எடுத்து பிரித்து என்னிடம் நீட்டினான். பாதை கரடுமுரடாக இருந்ததால் வண்டி குலுங்கத்தில் சரியாக சாப்பிடமுடியாமல் போனது மட்டுமல்லாது ஓரே இருட்டாகவும் இருந்ததால் வண்டியை ஒருஇடத்தில் நிறுத்திவிட்டு வண்டி வெளிச்சத்சத்தில் சாப்பிட்டேன். பின்னர் வண்டி பயணத்தை தொடர்ந்தது நாங்கள் பழைய விடயங்கள் பலதையும்பற்றி பேசினேம் பலரை அவன் என்னிடம் விசாரித்தான். வண்டியில் தமிழ் கன்னடம் கிந்தி என கலந்து மாறி மாறி அனைவரும் பேசிக்கொண்டார்கள்.வண்டியோ வயல் காடுகள் ஊடான சிறிய பாதையில் சுமார் ஒன்றரை மணிநேல பயணத்தின் பின்னல் ஒரு ஏரியின் அருகில் காடு போன்ற மரங்கள் நிறைந்த இடத்தில் நின்றது.

நம்ம அரண்மனை வந்தாச்சு இறங்கு என்றான். அதுதான் அவன் தங்கியிருக்கும் பஞ்சாயத்து மண்டபம். ஒருவன் ஓடிச்சொன்று இரண்டு வாளிலாம்புகளை பற்றவைத்தான். இந்த வாளி லாம்பை பாத்துத்தான் எத்தனை வருடமாகிறது இதனை மீனவர்கள்தான் பாவிப்பார்கள். ஒருகாலத்தில் மாதகல் கடற்கரையிலும் தமிழ்நாட்டு கரையிலும் முல்லைத்தீவு பாளி ஆற்றங்கரைகளிலும் இதே வாளி லாம்புகளுடன் கழிந்த இரவுகளும் இதே லாம்பு வெளிச்சத்தில் மீனவர்களின் கரைவலைச் சொதியும் அவியலும் சாப்பிட்ட நட்களும் ஞாபகத்திற்கு வந்தது. நீண்டநேரம் நாங்கள் கதைதுக்கொண்டிருந்தோம் மற்றையவர்கள் மதுவின் மயக்கம் ஏறிவிட பிரியாணி பாசல்களை அவிழ்த்து சாப்பிட்டுவிட்டு சாக்குகளை எடுத்து நிலத்தில் போட்டபடி படுத்துக்கொண்டார்கள். எனக்கும் கண்ணை சுழற்றியது நண்பனிடம் படுக்கலாண்டா காத்தாலை பேலாம் என்றேன் உடனேயே வண்டியை நோக்கி போனவன் அதனுள் இருந்த ஒரு புதிய பெற்சீற்றை எடுத்துகொண்டுவந்தபடி நீ பாரின்லை இருந்து வந்திருக்கிறாய் இங்கை படுக்க உனக்கு ஆவாது . அதுக்காத்தான் நான் பஞ்சாயத்து பிரெசிடன் வீட்டிலை ஒழுங்கு பண்ணியிருந்தேன் நீதான் வேணாம் எண்டிட்டியே சரி உன்னோடை தலைவிதி இங்கையே கிட. அதுதான் இன்னிக்கு ஒரு பெட்சீட் தேடி வாங்கினேன் நல்ல குவாலிட்டிதான் பஞ்சு மெத்தை மாதிரி இருக்கும் இதிலை படு என்றபடி நிலத்தில் விரித்தான்.

இதெல்லாம் எதுக்கடா சாக்கிலேயே படுத்திருப்பன் சாக்கு கூட இல்லாமல் எத்தினை நாள் படுத்திருப்போம். சாக்கையே போடு என்றேன். அதில்லைடா இங்கை காத்தாலை லைற்றா குளிரும் அதுக்குத்தான் வாங்கினேன் என்றான் நாம ஜரோப்பாவிலை பாக்காத குளிரா சரி கொண்டா என்றபடி அதனை விரித்தேன் இங்கினை சரியான நுளம்பு என்றபடி என்னைச்சுற்றி நாலைந்து நுளம்புத்திரிகளை பற்றவைத்தன்நான் கைவசம் நுளம்பு மருந்து (ஸ்பிரே) கொண்டு போயிருந்தேன் அதனையும் எடுத்து உடம்பில் அடித்துவிட்டு அப்படியே துங்கிப்போனேன். காலை வெய்யில் முகத்தில் சுள்ளென்றடித்தது கண்ணை விழித்து பார்த்தபொழுது நான் மட்டும்தான் தனியாக அங்கு படுத்திருந்தேன்.மற்றையவர்கள் சிலர் ஏரியில் நீச்சலடித்துக்கொண்டிருந்தனர். நான் எழும்பிறதை பார்த்ததும் நல்லா தூங்கினியா என்படி கையில் கொண்டு வந்த வேப்பங்குச்சியை நீட்டினான். என்னிடம் பற்பசை இருந்தது ஆனாலும் நீண்டகாலத்தின் பின்னர் வேப்பங்குச்சியை பார்த்ததும் வாங்கி சப்பிவிட்டு பல்லை தீட்டத் தொடங்கினேன்.குச்சி முரசில் குத்தி இரத்தமும் கசிந்தது . பல்லைத் தீட்டியபடியே கவனித்தேன் எங்கள் குழுவில் இருந்தவர்கள் சிலர் காலைக்கடனை முடித்துவிட்டுவந்து அந்த ஏரியிலேயே கழுவி விட்டு கொஞ்சம் தள்ளி முகமும் கழுவிக்கொண்டிருந்தனர்.

இன்னொருவன் ஆட்டோ ஒன்றை கழுவிக்கொண்டிருந்தனான். டேய் குளிக்கிறியா என்றான் நண்பன். இந்தத் தண்ணிலை குளிக்கிறதா என நினைத்தபடி இல்லைடா மூஞ்சிமட்டும்கழுவிறன் என்றுவிட்டு ஏரிக்கரைக்கு போன எனக்கு முகம் கழுவவே ஒரு மாதிரியாய் இருந்தது. ஆனால் ஒரு காலத்தில் இதைவிட மோசமான தண்ணியை கூட வன்னி காடுகளில் துணியை போட்டு உறுஞ்சியது ஞாபகத்திற்கு வந்தது. எனவே கண்ணை மூடியபடியே மளமளவென்று முகத்தை கழுவி விட்டு வந்தேன். எனக்கு காலையில் பிளேன்ரீ ஒன்று குடித்தால்தான் காலைக்கடனிற்கு போவது பழக்கமாகிவிட்டிருந்தது. எனவே நண்பனிடம் என்னடா ரீ கிடைக்காதா என்றேன். அங்கு அடுப்பு மூட்டி ஒருவன் தேனீர் தயாரித்துக்கொண்டிருந்தான். எனக்கு பால்தேனிர் குடித்து பழக்கமில்லை எனவே எனக்காக பிளேன் ரீ தனியாக செய்து கொடுத்தார்கள் .முதல்நாள் இரவு விஸ்கி குடித்த அதே பிளாஸ்ரிக் கோப்பையில் பிளேன் ரீயை கொண்டுவந்து ஒருத்தன் நீட்டினான் வாங்கி குடித்தேன் கோப்பை சரியாக கழுவாததால் தேயிலை மணத்துடன் விஸ்கியின் மணமும் கலந்தே அடித்தது பிளேன் ரீ உள்ளே போய்கெண்டிருக்கும் போதுதான் நினைத்தேன் இந்த ஏரித்தண்ணியில்தானே பிளேன் ரீ செய்திருப்பார்கள் என நினைத்திருந்தாலும் கொதிக்கவைத்த தண்ணியில் பக்ரீரியாக்கள் அழிந்து விட்டிருக்கும் என மனதை தேற்றியபடியே குடித்து முடித்ததும் எனது அடி வயிறு காலைக்கடனிற்கு தயாராகியதுகாலைக்கடனை கழித்துவிட்டு வந்து ஏரியில் கழுவ எனக்கு விருப்பம் இல்லாதிருந்ததால் முதல்நாளிரவு குடித்து முடித்திருந்த வெறும் விஸ்கி போத்தலை எடுத்து ஏரியில் தண்ணியை நிரப்பிக்கொண்டு ஒரு மரத்தின் பின்னால் ஒதுங்கினேன்.....தொடரும்..................

நான் இரவைக் கழித்த பைவ்ஸ்ரார் பஞ்சாயத்து மண்டபம்.

DSCF0223.jpg

DSCF0219.jpg

Link to comment
Share on other sites

இந்த முக்கிய பொருளை ஓரக் கண்ணால் மட்டும்தான் பார்க்கலாம். முழுக்கப் பார்த்தால் பேயறைந்தமாதிரிப் போய்விடும். :o

அந்த முக்கிய பொருள் என்னவென்று எழுதினால் என்னை யாழ்களத்தில் கட்டித்தொங்கவிட்டு மரணதண்டனை நிறைவேற்றி விடுவார்கள் எதற்கு வம்பு :lol: :lol:

Link to comment
Share on other sites

நீண்ட நாட்களுக்குப்பின் யாழ் களத்துக்கு வந்தவுடன் உங்கள் பயணக்கட்டுரையை ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டு அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்...

இந்த நேரத்தில் தான் வெளிநாட்டு 'வெளிநாட்டு பிரதிநிதிகளால்' கடைசி நேரத்தில் தாயகத்தில் கைவிடப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு தப்பி வந்த இயக்க நண்பர்களது ஞாபகங்களும் வந்து போகிறது......

நன்றிகளுடன்

Link to comment
Share on other sites

நீண்ட நாட்களுக்குப்பின் யாழ் களத்துக்கு வந்தவுடன் உங்கள் பயணக்கட்டுரையை ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டு அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்...

இந்த நேரத்தில் தான் வெளிநாட்டு 'வெளிநாட்டு பிரதிநிதிகளால்' கடைசி நேரத்தில் தாயகத்தில் கைவிடப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு தப்பி வந்த இயக்க நண்பர்களது ஞாபகங்களும் வந்து போகிறது......

நன்றிகளுடன்

நன்றிகள் தர்தமராஜ். உங்கள் தனிமடலில் உங்களிற்கான பதில் இட்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

உடனேயே வண்டியை நோக்கி போனவன் அதனுள் இருந்த ஒரு புதிய பெற்சீற்றை எடுத்துகொண்டுவந்தபடி நீ பாரின்லை இருந்து வந்திருக்கிறாய் இங்கை படுக்க உனக்கு ஆவாது . அதுக்காத்தான் நான் பஞ்சாயத்து பிரெசிடன் வீட்டிலை ஒழுங்கு பண்ணியிருந்தேன் நீதான் வேணாம் எண்டிட்டியே சரி உன்னோடை தலைவிதி இங்கையே கிட. அதுதான் இன்னிக்கு ஒரு பெட்சீட் தேடி வாங்கினேன் நல்ல குவாலிட்டிதான் பஞ்சு மெத்தை மாதிரி இருக்கும் இதிலை படு என்றபடி நிலத்தில் விரித்தான்.

இதெல்லாம் எதுக்கடா சாக்கிலேயே படுத்திருப்பன் சாக்கு கூட இல்லாமல் எத்தினை நாள் படுத்திருப்போம். சாக்கையே போடு என்றேன். அதில்லைடா இங்கை காத்தாலை லைற்றா குளிரும் அதுக்குத்தான் வாங்கினேன் என்றான்

-------

வஞ்சகம் இல்லாத... இனிய நண்பர்கள் சாத்திரியார். இவர்கள் கிடைக்க, நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் பிந்திய பாகம் என்னை பல பசுமையான நினைவுகளுக்கு அழைத்து சென்றது.எனக்கு முதல் நன்பன் இயற்க்கை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் பிந்திய பாகம் என்னை பல பசுமையான நினைவுகளுக்கு அழைத்து சென்றது.எனக்கு முதல் நன்பன் இயற்க்கை. :)

குளத்தில்.... குண்டி கழுவி, பல்லு விளக்கியதையா சொல்கிறீர்கள் சஜீவன்.

Link to comment
Share on other sites

வஞ்சகம் இல்லாத... இனிய நண்பர்கள் சாத்திரியார். இவர்கள் கிடைக்க, நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். :)

உண்மைதான் தமிழ் சிறி எனக்கென்று இருப்பது எல்லாமே நண்பர்கள் மட்டுமே உறவென்று எனது மனைவி மகள்.எனது தாயாரைத்தவிர. எந்தத் தொடர்புகளும் எனக்கில்லை. யாரும் கதைப்பதில்லை. எனக்காக எதையும் செய்யும் நட்புக்கள் சிலர் உள்ளனர்.அவர்களில் ஒருவன்தான் இந்த அன்ரனிதாசும்.ஜரோப்பாவின் பலவருட சுகாதார வாழ்க்கைக்கு பழக்கப்பட்டுவிட்ட ஒருவரிற்கு அந்த சூழ்நிலை அருவருப்பாகவே இருக்கும். சுத்தமில்லாத சூழல் சுத்தமில்லாத உணவு. நீர். மனிதர்கள்.என அடிக்கிக்கொண்டே போகலாம். ஆனால் எனக்கு நட்பு மட்டுமே தெரிந்ததால் மற்றையவை எதுவுமே கண்ணில் தெரியவில்லை. :)

Link to comment
Share on other sites

நன்றிகள் தர்தமராஜ். உங்கள் தனிமடலில் உங்களிற்கான பதில் இட்டிருக்கிறேன்.

மிக்க நன்றி அண்ணா!!

Link to comment
Share on other sites

நன்றி சாத்திரியாரே பல அந்த நாள் ஞாபங்களை நினைவூட்டியதற்கு.

ஒரு வருடத்திற்கு மேலாக நான் அகதிகளுக்கான வேலை செய்யும் போது போன இடங்களில் ஓரிரு நாட்கள் தங்கிவிட்டு வருவதுண்டு.அந்த நேரங்களில் நான் இப்படியான மடங்களில் தான் படுப்பது.காலை எழும்பி அயலில் உள்ள குளத்திலேயே எல்லாம் முடிந்துவிடும். சில இடங்களில் கடற்கரை.பாண்டிச்சேரிக்கு போகும் வழி நெடுக அகதிமுகாம்கள் இருந்தன எல்லாம் கடற்கரையோரமாக.இயக்கத்தில் இருந்த காலத்தில் தண்ணி அடிப்பதில்லை.அவர்களுடன் போய் "அடுத்தாத்து அல்பேட்" என்ற பிரபுவின் படம் பார்த்தேன்.ஒரு புரெஜெக்டரை வைத்து 10 இடைவேளை விட்டு ஓடினார்கள்.

பின்னர் பலவருடங்களுக்கு பின் திரும்ப போக நகரங்கள் மாறிவிட்டது கிராமங்கள் அப்படியே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடனேயே வண்டியை நோக்கி போனவன் அதனுள் இருந்த ஒரு புதிய பெற்சீற்றை எடுத்துகொண்டுவந்தபடி நீ பாரின்லை இருந்து வந்திருக்கிறாய் இங்கை படுக்க உனக்கு ஆவாது . அதுக்காத்தான் நான் பஞ்சாயத்து பிரெசிடன் வீட்டிலை ஒழுங்கு பண்ணியிருந்தேன் நீதான் வேணாம் எண்டிட்டியே சரி உன்னோடை தலைவிதி இங்கையே கிட. அதுதான் இன்னிக்கு ஒரு பெட்சீட் தேடி வாங்கினேன் நல்ல குவாலிட்டிதான் பஞ்சு மெத்தை மாதிரி இருக்கும் இதிலை படு என்றபடி நிலத்தில் விரித்தான்.

இந்தப் பலனை எதிர்பாராத அன்பு தான், வெளி நாட்டு வாழ்க்கையில் கிடைக்காதது சாத்திரியார்!

சொந்தங்களுக்குக் கூட இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் விலை கொடுக்க வேண்டியுள்ளது!

தொடரட்டும் உங்கள் பயணம்!!!

Link to comment
Share on other sites

நன்றி சாத்திரியாரே பல அந்த நாள் ஞாபங்களை நினைவூட்டியதற்கு.

ஒரு வருடத்திற்கு மேலாக நான் அகதிகளுக்கான வேலை செய்யும் போது போன இடங்களில் ஓரிரு நாட்கள் தங்கிவிட்டு வருவதுண்டு.அந்த நேரங்களில் நான் இப்படியான மடங்களில் தான் படுப்பது.காலை எழும்பி அயலில் உள்ள குளத்திலேயே எல்லாம் முடிந்துவிடும். சில இடங்களில் கடற்கரை.பாண்டிச்சேரிக்கு போகும் வழி நெடுக அகதிமுகாம்கள் இருந்தன எல்லாம் கடற்கரையோரமாக.இயக்கத்தில் இருந்த காலத்தில் தண்ணி அடிப்பதில்லை.அவர்களுடன் போய் "அடுத்தாத்து அல்பேட்" என்ற பிரபுவின் படம் பார்த்தேன்.ஒரு புரெஜெக்டரை வைத்து 10 இடைவேளை விட்டு ஓடினார்கள்.

பின்னர் பலவருடங்களுக்கு பின் திரும்ப போக நகரங்கள் மாறிவிட்டது கிராமங்கள் அப்படியே உள்ளது.

இந்தியாவில் உள்ள பல அகதி முகாம்களிற்கு போயிருக்கிறேன்.வேலை செய்வதற்காக அல்ல சிலரை சந்திப்பதற்காக. குறிப்பாக ராமேஸ்வரம் முகாம்கள் மிக மோசமானது. எதற்கு இங்கு வந்து இப்படி கஸ்ரப் படுகிறார்கள் என நினைத்ததும் உண்டு :(

Link to comment
Share on other sites

நெல்லையன் நான் எழுதத் தொடங்கிய தமிழர் பொருளாதாரம் என்பதற்கும் மகிந்த சிந்தனைக்கும் என்ன தொடர்பு என்பது உங்களிற்குதான் வெளிச்சம்.தமிழர் பொருளாதாரம் தமிழர் வங்கி என்பது பத்தாண்டுகளிற்கு முன்னால் ஏற்படுத்தப் பட்டதொரு திட்டம்.அது நடைமுறைப்படுத்தப்படவில்லை அவ்வளவுதான் .அது தனியாக ஈழத்தமிழர்களை மட்டும் மையப்படுத்தித் தொடங்கப்பட்டதல்ல உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைப்பதற்காக தொடங்கப் பட்டது அதற்கு புத்துயிர் கொடுக்கலாமென்பதே எமது நோக்கம் ஆனால் ஆனால் த எக்கனாமிக்சில் 83ம் ஆண்டு வெளியான கட்டுரை போன்றுதான் இன்றைய உலகம் இருக்குமென்று நீங்கள் நம்பினால் சரி நான் எனது திட்டத்தினை கைவிடுகிறேன் அதற்கான இன்னொரு திட்டத்தினை முன்வையுங்கள் நான் அதனுடன் இணைகிறேன்.நீங்களே முன் நின்று நடத்துங்கள்.நன்றி வணக்கம் :)

சாஸ்திரியார் ... கொன்னுட்டீங்க போங்க .. எனக்கு உந்த, நீங்கள் ஏற்படுத்த இருந்த தமிழர் வங்கி திட்டம் தெரியாதூங்கோ!!!! ... அதற்கு மேல் ஓர் திட்டத்தை வரையவோ, அல்லது உங்களின் மகா திட்டத்தை செயற்படுத்தவோ ...

.... எனக்கு உங்களைப் போல் ... அறிவும் இல்லை! படித்தவனும் இல்லை! பின்னணியும் இல்லை! படை பலமும் இல்லை! ... உங்களுக்கு உதை செயற்படுத்த/உதவ ஆயிரம் பேர் இருப்பார்கள்? உத பல அமைப்புகள் இருக்கும்? உதவ ஓர் அரசாங்கமும் இருக்கும்(எந்த அரசாங்கம் என எழுதினால் வழக்கு போடுவேன் என மிரட்டுவீர்கள்) !!!!

... உங்களை விட எம் புலம்பெயர் தமிழுலகில் எவரும் இலர்! ... வாழ்த்துக்கள் ...

டிஸ்கி(இது புரட்சியிடமிருந்து சுட்டது): .... இருவர் தெருவோரத்தில் சத்தம் போடுகிறார்கள் ... காதைக்கொடுத்தால் ... டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்... எங்களுக்கென்ன மொட்டை அடித்து, பூ சுத்தி, சந்தனம் தடவி, கற்பூரம் கொளுத்தப் பார்க்கிறாயா?????????? ... <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வண்டியில் தமிழ் கன்னடம் கிந்தி என கலந்து மாறி மாறி அனைவரும் பேசிக்கொண்டார்கள்
.வண்டியோ

சிங்களமும் அதுக்குள்ள கதைத்திருந்தால் எப்படி ஒரு ஜக்கியமான தெற்காசியா உருவாகியிருக்கும் :D:D

Link to comment
Share on other sites

சாஸ்திரியார் ... கொன்னுட்டீங்க போங்க .. எனக்கு உந்த, நீங்கள் ஏற்படுத்த இருந்த தமிழர் வங்கி திட்டம் தெரியாதூங்கோ!!!! ... அதற்கு மேல் ஓர் திட்டத்தை வரையவோ, அல்லது உங்களின் மகா திட்டத்தை செயற்படுத்தவோ ...

.... எனக்கு உங்களைப் போல் ... அறிவும் இல்லை! படித்தவனும் இல்லை! பின்னணியும் இல்லை! படை பலமும் இல்லை! ... உங்களுக்கு உதை செயற்படுத்த/உதவ ஆயிரம் பேர் இருப்பார்கள்? உத பல அமைப்புகள் இருக்கும்? உதவ ஓர் அரசாங்கமும் இருக்கும்(எந்த அரசாங்கம் என எழுதினால் வழக்கு போடுவேன் என மிரட்டுவீர்கள்) !!!!

... உங்களை விட எம் புலம்பெயர் தமிழுலகில் எவரும் இலர்! ... வாழ்த்துக்கள் ...

டிஸ்கி(இது புரட்சியிடமிருந்து சுட்டது): .... இருவர் தெருவோரத்தில் சத்தம் போடுகிறார்கள் ... காதைக்கொடுத்தால் ... டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்... எங்களுக்கென்ன மொட்டை அடித்து, பூ சுத்தி, சந்தனம் தடவி, கற்பூரம் கொளுத்தப் பார்க்கிறாயா?????????? ... <_<

வெள்ளிக்கிழமை, ஜூலை 19, 2002,

உலகத் தமிழர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியாக உருவாக்க்பபட்டுள்ள உலகத் தமிழர் பேரவை இன்றுசென்னையில் துவக்கி வைக்கப்பட்டது.

தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனின் முயற்சியால் இந்த பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் பேசிய இலங்கை நீர்பாசனத்துறை அமைச்சர் சந்திரசேகர் கூறுகையில்,

இலங்கைத் தமிழர் பிரச்சனையையும் விடுதலைப் புலிகளையும் முடிச்சு போட்டு தமிழகத்தில் உள்ள தமிழர்கள் கைகழுவக்கூடாது. இது இலங்கையில் வாழும் 35 லட்சம் தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்சனை. அவர்களுக்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள்தார்மீக ஆதரவு தர வேண்டும் என்றார்.

இதில் இலங்கை எம்.பியான விநாயகமூர்த்தி, பழ.நெடுமாறன், கனடா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச்சேர்ந்த தமிழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இந்தத் துவக்க நிகழ்ச்சிக்கு நேற்று போலீசார் திடீரென தடை விதித்தனர். ஆனால், இந்தத் தடையை சென்னை உயர் நீதிமன்றம்ரத்து செய்ததால் இன்று இந்தக் கூட்டம் நடந்தது.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு என தனி கீதம், உடை போன்றவையும் இந்த பேரவையால் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும தமிழர்களுக்கு என தனி வங்கி தொடங்கவும் இந்தப் பேரவை திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பேரவையின் தொடக்க நிகழ்ச்சி இன்று சென்னை எழும்பூர் டான்பாஸ்கோ பள்ளி மைதானத்தில் நடந்தது. ஆனால்,விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இந்தக் கூட்டம் நடப்பதாகக் கூறி இதற்கு நேற்று காலை போலீசார் திடீர் தடை விதித்தனர்.இதை எதிர்த்து அந்த அமைப்பின் நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கனகராஜ், இக் கூட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கினார். அதே நேரத்தில் புலிகளுக்குஆதரவாகப் பேசக் கூடாது என தடை விதித்தார். இதையடுத்து உலகத் தமிழக் பேரவை துவக்க நிகழ்ச்சி இன்று நடந்தது.

உலகத் தமிழர் பேரவை உருவானது எப்படி?:

(நமது அலைகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த கட்டுரை இது)

1999ம் ஆண்டு சென்னையில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் வெள்ளி விழா மற்றும் 7-வது மாநாடுநடந்தது. அந்த மாநாட்டின்போது தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஐந்து அம்சத் திட்டம் ஒன்றைவெளியிட்டார்.

உலகளாவிய தமிழர் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பெருங்கூட்டமைப்பு, உலகத்

தமிழர்களுக்கு ஒரு வங்கி, உலகத் தமிழருக்கு தனிக் கொடி, உலகத் தமிழர்களின் புகழ் பாடும் பாடல், உலகத்தமிழருக்கு தேசிய உடை ஆகியவை தான் இந்த 5 அம்சத் திட்டம்.

இந்த ஐந்து அம்சங்கள் குறித்தும் சென்னையில் நடந்த பல நாட்டுத் தமிழர்களின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாட்டுபிரதிநதிகளின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஒன்றுஉருவாக்கப்பட்டது.

குழுவின் அமைப்பாளர்களாக பழ.நெடுமாறன், இர.ந.வீரப்பன் (மலேசியா), செல்லையா (கனடா), அலன்அனந்தன் (பிரான்ஸ்), டாக்டர் கோவிந்தசாமி, காமாட்சி சோதிநாதன் (தென் ஆப்பிரிக்கா), பஞ்சவர்ணம்,மாரிமுத்து (பர்மா), இளம்பிறை ரகுமான் (தமிழ்நாடு), மணி வெள்ளையன் (மலேசியா) ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.

இந்த ஐந்து அம்சத் திட்டத்திற்கு உலகின் பல மூலைகளிலிருந்தும் தமிழர்கள் வரவேற்பு தெரிவிதும், உற்சாகம்தெரிவித்தும் கடிதங்களை அனுப்பினர்.

இதைத் தொடர்ந்து சென்னையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு உலகத்தமிழர் அமைப்புகள் அனுப்பிய கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டன. அதன் பிறகு தமிழர் அமைப்புகளைஒருங்கிணைக்கும் பெருங்கூட்டமைப்புக்கு உலகத் தமிழர் பேரமைப்பு என்று பெயர் சூட்டப்பட்டது.

அமைப்பிற்கான கொடி குறித்து முடிவு செய்ய பச்சையப்பன் தலைமையிலும், தேசிய உடை குறித்து முடிவு செய்யஎம்.ஏ.ரகுமான் தலைமையிலும், உலகத் தமிழர் வங்கி அமைப்பது குறித்து முடிவு செய்ய டாக்டர் எஸ்.என்.தெய்வநாயகம் தலைமையிலும், அமைப்பின் சட்ட திட்டங்கள் குறித்து முடிவு செய்ய சுப.வீரபாண்டியன் தலைமையிலும், உலகத் தமிழர் பாடல் குறித்து முடிவு செய்ய காசி அனந்தன் தலைமையிலும் குழுக்கள்அமைக்கப்பட்டன.

நெடுமாறனுடன் பேட்டி:

இந்த புதிய அமைப்புகள் குறித்து பழ. நெடுமாறனிடம் உரையாடினோம். அவரது பேட்டியிலிருந்து சில துளிகள் ...

உலகத் தமிழர் வங்கி:

உலகத் தமிழர் வங்கி என்பது உலகத் தமிழர்களின் வணிக, தொழில் நலன்களைப் பேணவும், காக்கவும்,வளர்ந்தோங்கச் செய்யவும் அமைக்கப்படுகிறது.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த வங்கி செயல்படும். இந்திய ரிசர்வ் வங்கியின்விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த வங்கி நடக்கும். டாக்டர் எஸ்.என்.தெய்வநாயகம் தலைமையில் இதுதொடர்பானபணிகளை ஆராயகுழு அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் இந்த வங்கியின் துவக்க விழா நடைபெறவுள்ளது. முதலில்சென்னையில் துவக்கப்படும் இந்த வங்கி நாளடைவில் உலக நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

கடன் வழங்குவது உள்ளிட்ட பிற வங்கிகளில் திடைறையில் உள்ள சேவைகளைப் போலவே உலகத் தமிழர்வங்கியும் செயல்படும். இந்த வங்கியில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

உலகத் தமிழர் பேரமைப்பு:

இந்த அமைப்பு ஒரு அம்ப்ரல்லா அமைப்பு. அதாவது பல்வேறு உலகத் தமிழர் அமைப்புகள் அனைத்தையும் ஒரேகுடையின் கீழ் கொண்டு வரும் வகையில் இந்த அமைப்பு அமைக்கப்படவுள்ளது.

இந்த அமைப்பின் கீழ் வரும் அனைத்து உலகத் தமிழ் அமைப்புகளும் தங்களது தனித்தன்மையை இழக்காமல்,அதே நேரத்தில், பொதுவான நோக்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும். உலகத் தமிழர் பேரமைப்பின்ஒருங்கிணைப்பாளராக நான் செயல்படுகிறேன். ஒரு கமிட்டியும் உள்ளது.

இது தற்காலிக நிர்வாகம்தான். உலகத் தமிழர் பேரமைப்பு முறையாகத் துவக்கப்படும் போது முறையானநிர்வாகிகள் நியமிக்கப்படுவர் என்றார் நெடுமாறன்.

பேரமைப்பின் நோக்கங்கள்:

தமிழர் வாழ்வியல் நலன்கலைப் பாதுகாத்தல், தமிழர்களின் மொழி, கலை மற்றும் பண்பாட்டு அடையாளத்தைப்பாதுகாத்தல், தமிழர்களின் குடியியல் உரிமைகள், அரசியல் உரிமைகள், மானுட உரிமைகள் ஆகியவற்றைப்பாதுகாத்தல் ஆகியவை பேரமைப்பின் முக்கிய நோக்கங்கள்.

உலகத் தமிழருக்கு தனிக்கொடி:

உலகத் தமிழர்களுக்கென்று தனிக் கொடி உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கொடி நீல நிறத்தில்இருக்கும். நடுவில் வெள்ளை நிறப் பின்னணியில் கருப்பு நிறத்தில் உலக உருண்டையும் அதன் மீது பனை மரம்,யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற எழுத்துக்கள் மஞ்சள் நிறத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.

தமிழர் தேசிய உடை:

தமிழர்களின் கலை, மொழி, பண்பாட்டு விழாக்களின்போது தங்களது தேசிய உடையை அணிந்து கொண்டு கலந்துகொள்ள வேண்டும் என்று இந்த அமைப்பு விரும்புகிறது. அதற்கென, தமிழர்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும்வகையிலான தேசிய உடையை அமைப்பு உருவாக்கியுள்ளது.

ஆண்களுக்கு ..

ஒரு செ.மீ அகலமுள்ள கரையுடன் கூடிய வெள்ளை நிற வேட்டியும், சந்தன நிறத்தில் சிறிய கழுத்துப் பட்டியோடுகூடிய முழுக்கைச் சட்டை மற்றும் விசிறி மடிப்பு அல்லது நெடுங்கரையுடன் கூடிய துண்டு (ஒரு செமீ அகலமுள்ளஇரு கோடுகள் இருக்கலாம்).

பெண்களுக்கு ..

7 செமீக்கு மேற்படாத அகலமுள்ள அரக்குக் கரை போட்ட சந்தன நிறச் சேலையும் மற்றும் அரக்கு நிற ரவிக்கையும்.

புதன்கிழமை, மே 1, 2002,

உலகத் தமிழர்களுக்குப் பொதுவான ஒரு வங்கி விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று தமிழர் தேசிய கட்சியின்தலைவர் பழ. நெடுமாறன் இன்று (திங்கள்கிழமை) அறிவித்தார்.

சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் நெடுமாறன் கூறியதாவது:

உலகத் தமிழர்களை ஒன்று படுத்துவதற்கும், தமிழர்களின் கலை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றைக்காப்பதற்கும் உலகத் தமிழர் பேரவையை அமைக்கவுள்ளோம்.

இதில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கு கொள்ளும். இந்தப் பேரவை அரசியல் சார்பற்றது. அடுத்த ஏப்ரல் மாதம்சென்னையில் இந்த பேரவையின் தொடக்க விழா நடைபெறவுள்ளது.

இந்தப் பேரவை தொடங்கும் நாளில் 20 நாடுகளில் உள்ள தமிழர் பேரவை பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள்.

மேலும் உலகத் தமிழர்களுக்குப் பொதுவான வணிக வங்கி ஒன்றும் விரைவில் அமைக்கப்படவிருப்பதாகக் கூறியநெடுமாறன், உலகத் தமிழர் பேரவையின் கொடியையும் இன்று அறிமுகப்படுத்தினார்.

டிஸ்கி. இதனை உருவாக்கியவர்களில் நானுமொருவன். இதற்கான ஆரம்ப திட்டங்களை புலிகளின் நிதிப் பொறுப்பானர் ரஞ்சித்(மொட்டை) பின்னைய தமிழேந்திஅவரது கணக்காளர் பாரி(இவர் எனது உறவினர்.) இவர்களது பாரிய பங்களிப்பும் இருந்தது. ரஞ்சித் இறந்துவிட்டார் பாரி இறுதியாக சரணடைந்தார் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாது. ஆனால் மற்றையவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள் கேட்டுப்:பர்த்துவிட்டு அடுத்த டிஸ்கியை போடவும்

Link to comment
Share on other sites

.வண்டியோ

சிங்களமும் அதுக்குள்ள கதைத்திருந்தால் எப்படி ஒரு ஜக்கியமான தெற்காசியா உருவாகியிருக்கும் :D:D

ஆமாம் வண்டியேதான். வண்டி என்பது தமிழ்ச்சொல்தானே?? ^_^

கர்நாடகாலில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் ஒரு வண்டியில் தமிழ் .கிந்தி. கன்னடம் ஆகியவற்றுடன். சிங்களமும் கதைத்தால் ஜக்கியமான (ஜக்கியமாதனது என்பது தமிழ்சொல்லா தெரியவில்லை) :lol: தெற்காசியா உருவாகிவிடும் என்கிற கருத்தினை உங்களிற்கு மானிப்பாய் இந்துவில் பூகோளம் படிப்பித்த வாத்தியார் பார்த்தால் எவ்வளவு கவலைப்படுவார். :(

Link to comment
Share on other sites

அன்று அன்ரனிதாஸ் தனது வேலையாட்கள் எல்லோறிற்கும் லீவு கொடுத்து இன்றைக்கு எல்லாரும் நல்லா என்ஜேய் பண்ணுங்கடா என்று சொல்லியது மட்டுமில்லாமல். ஆட்டுக்கறி மாட்டுக்கறி பியர் வாங்கவென ஒவ்வொருவரை ஒவ்வொரு பக்கமாக அனுப்பினான். வாங்கிய கறிகளை சன்னம்மாவிடம் கொடுத்து சமைத்துவரும்படி சொல்லியிருந்தான். சன்னம்மா என்றொரு பெண் இளம் வயதுக்காரி திருமணமான புதிதிலேயே கணவன் ஒரு வீதி விபத்தில் இறந்துபோக கையில் ஒரு ஆண்குழந்தை மிக ஏழைக்குடும்பம் என்பதால் அவளிற்கு அவளது உறவுகள் உதவவில்லை. கணவன் இறந்து போனதால் அவள் ராசியற்றவள் என்று அவளது கணவனது பக்கத்திலும் எவ்வித உதவியும் இல்லாதிருந்தவள் கூலித் தொழிலாளர்களிற்கு சமைத்துக்கொடுக்கும் வேலையை ஆரம்பித்து தனதும் பிள்ளையினதும் வாழ்வாதரத்தேவைகளை நிறைவேற்றுகிறாள். அன்ரனிதாசிற்கும் அவனது சீடர்களிற்கும் அவளே சாப்பாடு போடுகிறாள் என அறிந்தேன்.இவர்களது வயிற்றுப்பசி மட்டுமல்லாது அவர்களது உடற்பசியையும் அவளிடமே தீர்த்தக்கொள்கிறார்கள் என்பதனையும் அவர்களது பேச்சுக்களில் அறிய முடிந்தது. வெறும் காமத் தேவைகளிற்காக மட்டுமே நாளிற்கொரு ஆளைத்தேடும் ஜரோப்பிய கலாச்சார வாழ்வில் நடுவே வாழ்ந்து பழக்கப்பட்டுப்போயிருந்த எனக்கு ஒரு இளம்வயது பெண் துணை அற்றவள் பொருளாதார வசதியுமற்றவள். ஆணாதிக்கம் மிகுந்து காணப்படும் ஆசிய கலாச்சாரத்தில் தன்னையும் காத்து பொருளாதாரத் தேவைகளையும் நிறைவேற்ற அப்படி நடந்துகொள்வது எனக்கு தப்பாகவே தெரியவில்லை.

மதியச்சாப்பாடு வரும்வரை நண்பனுடன் கதைத்தபடியே அங்கிருந்த தூண்டில் ஒன்றை எடுத்து பொழுது போக்கிற்காக மீன்பிடிக்கத் தொடங்கினேன். வாழ்வாதரத் தேவைகளிற்காக தொழில்ரீதியாக மீன் பிடிப்பவர்களிற்கும் பொழுது போக்காக மீன் பிடிக்கும் எனக்கும் நிறைய வித்தியம் உண்டுதானே.தூண்டிலை போட்டுவிட்டு கம்பை கரையில் நட்டுவிட்டு பியரை உறுஞ்சியபடி இருந்த எனது தூண்டிலில் கன நேரத்திற்கு பின்னர் ஒரு அப்பாவி மீன் ஒன்று மாட்டுப்பட்டது. தூண்டிலில் இருந்து மீனை பிரித்தெடுக்கும் விதம் எனக்கு தெரிந்திருக்கவிலை எனவே நண்பன் மீனை எடுக்க உதவினான் பெருத்த சந்தோசத்தில் பிடித்த மீனை படமெடுத்தேன். பின்னர் நான் பிடித்த மீனுடன் மற்வர்கள் பிடித்தமீன்கள் சிலவற்றையும் சேர்த்து பியரிற்கு ருசியாக சுட்டுசாப்பிட்டோம். மதியம் தாண்டிப்போக நண்பன் தனது செல்போனை எடுத்து சாப்பாடு தயாராகிவிட்டதா என கேட்டவன் சாப்பாடு எடுத்துவர சிலரை வண்டியில் அனுப்பினான். இந்தியாவில் சாலை வசதிகளே இல்லாத கிராமங்களில் கூட செல்போன வசதி இருக்கிறது ஒவ்வொருவரும் குறைந்தது இரண்டு செல்போனுகளுடன் அலைகின்றனர். சாப்பாடு எடுத்துவரப்போனவர்கள் சாப்பாட்டுடன் சன்னம்மாவையும் கூடவே அழைத்துவந்தனர். தாமரை இலையை காயவைத்து செய்த தட்டுக்களில் மண்டபத்தில் அனைவரையும் வரிசையாய் இருக்கவைத்து சன்னம்மா சாப்பாடு பரிமாறினாள்.

தாமரை இலைத் தட்டுக்கள் இந்தியாவில் பிளாஸ்ரிக் கோப்பைகளை விட மலிவாய் கிடைக்கிறது சுற்றுச்சூழலும் மாசடையாது. வரிசையில் அனைவரும் சாப்பாட்டிற்கு தயாராய் இருக்க முதலில் எனக்கு சன்னம்மா சாப்பாடு பரிமாறவந்ததும் புதிசா பாரின்லை இருந்து வந்தவரை கண்டதும் சன்னம்மா எங்களையெல்லாம் கைவிட்டாள் என்று நண்பன் சொன்னதும் மற்றையவர்கள் சிரிக்க..நீங்களெல்லாம் வாடிக்கையாளர்கள் அவர்தானே விருந்தாளி அதான் கவனிக்கிறன் என்றாள் சன்னம்மா. இப்படியான கிண்டல் கேலிப் பேச்சுக்களுடன் மதியம் சாப்பிட்டு முடிந்தது.சாப்பிட்டு முடித்த பாத்திரங்களையும் எடுத்துச்சென்று அதே ஏரியிலேயே கழுவிவிட்டு

வண்டியில் வைத்தவள் என்னிடம் வந்து வெத்திலையை நீட்டினாள்

எனக்கு வெற்றிலை போட்டு பழக்கமில்லை. அதனை மறுத்த என்னிடம் வெளிநாட்லை எல்லாரும் வசதியாய் வாழுறாங்களாமே என்னையும் அங்கை கூப்பிட முடியுமா சுத்தம் செய்யிறதோ சமைக்கிறதோ தன்னால் செய்யமுடியும் என்றாள். அப்பாவியாக ..அவளது கன்னடத்தில் எனக்கு புரிந்த பாதி மீதியை நண்பன் மொழி பெயர்த்தோடு இதோடா சன்னம்மா பிரான்ஸ் போகப்போறாளாம் என்று சொல்லி சிரித்தான். மற்றையவர்களும் அதைக்கேட்டு சிரிக்கவே அவளது முகத்தில் ஏற்பட்ட சோக மாற்றத்தை கவனித்த நான் என்ன சொல்வதென்று தெரியாமல். அவளிடம் பாக்கலாம் முயற்சி பண்ணுறன் என்று பொய் சொல்லிவிட்டு கொஞ்சம் பணத்தினை அவளது கைகளில் திணித்து போய்வா என்றேன். வண்டியில் ஏறியவள் என்னைப்பார்த்து கையசைத்து விட்டு கிழம்பும் பொழுது அவளது கண்களில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு தெரிந்தது. அதே நேரம் எனக்கும் 87ம் ஆண்டு இறுதியில் யாழ் குருநகர் பகுதியில் என்னை இந்தியப்படையிடமிருந்து பதுக்கி பாதுகாத்த ஒரு பெண்ணின் முகத்தோற்றமென்று ஞாபகத்தில் வந்துபோனது..கையசைத்தேன். அன்று பகல் அன்ரனிதசுடனான் கழித்துவிட்டு அன்று மாலை அதே நண்பர் கூட்டம் என்னை கொண்டுவந்து பஸ்நிலையத்தில் பஸ் ஏற்றி விட்டார்கள்.அங்கிருந்து பெல்கம் நோக்கிய பயணத்தை தொடர்ந்தேன். தொடரும்......

DSCF0222.jpg

சத்தியமாய் இது நான் பிடிச்ச மீன்தான்

Link to comment
Share on other sites

கதை நன்றாகப் போகிறது. எனது கணனியில் ஏற்பட்டுள்ள சிறு பிழை காரணமாக, நீங்கள் பிடித்த மீனைப் பார்க்க முடியவில்லை.

சன்னம்மா போன்ற பெண்களின் நிலைதான் பரிதாபமானது. உறவுகளால் கைவிடப்பட்டு நிராதரவானவர்கள், பிள்ளைகளை வளர்பதற்காகவும் வயிற்றுப் பசிக்காகவும் தங்களையே விற்கும் நிலை.

இதே போன்றதொரு அவல நிலைக்குத்தான் தாயகத்தில் உள்ள எங்கள் ஆதரவற்ற உறவுகளும் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

உண்மையாச் சொல்லுறன் இந்தமீன் நீங்கள் தான் பிடிச்சது. :lol::lol: ஒண்டில் கெழுத்தி அல்லது மீசைமீன் எண்டு நினைக்கிறன். எனக்கு மீனைப்பற்றி தெரியாது. நீங்கள் மீன் பிடிக்குகிறதில மாஸ்ரர் டிகிரி எடுத்தவர் எண்டு தெரியும். போரியல் இலக்கியத்தில் உங்கள் பங்கு இன்னும் வேகமெடுத்தால் அதன் மூலம் இளசுகளுக்கு சில செய்திகளைச் சொல்லலாம் எண்டு நினைக்கிறேன், பிழையென்றால் தவ்வல்தானே :D:D என்று விட்டுவிடுங்கள் சாத்திரி.

Link to comment
Share on other sites

உண்மையாச் சொல்லுறன் இந்தமீன் நீங்கள் தான் பிடிச்சது. :lol::lol: ஒண்டில் கெழுத்தி அல்லது மீசைமீன் எண்டு நினைக்கிறன். எனக்கு மீனைப்பற்றி தெரியாது. நீங்கள் மீன் பிடிக்குகிறதில மாஸ்ரர் டிகிரி எடுத்தவர் எண்டு தெரியும். போரியல் இலக்கியத்தில் உங்கள் பங்கு இன்னும் வேகமெடுத்தால் அதன் மூலம் இளசுகளுக்கு சில செய்திகளைச் சொல்லலாம் எண்டு நினைக்கிறேன், பிழையென்றால் தவ்வல்தானே :D:D என்று விட்டுவிடுங்கள் சாத்திரி.

தாராளமாக எழுதுங்கள் கோமகன் அதற்கான உதவி என்றும் உங்களிற்கு உண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே நேரம் எனக்கும் 87ம் ஆண்டு இறுதியில் யாழ் குருநகர் பகுதியில் என்னை இந்தியப்படையிடமிருந்து பதுக்கி பாதுகாத்த ஒரு பெண்ணின் முகத்தோற்றமென்று ஞாபகத்தில் வந்துபோனது..

அந்தச் சம்பவத்தையும் எங்களுடன் பகிர்வீர்களா?.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூண்டிலில் கன நேரத்திற்கு பின்னர் ஒரு அப்பாவி மீன் ஒன்று மாட்டுப்பட்டது.

நீங்கள் சொல்வது சரி போலத்தான் கிடக்குது, சாத்திரியார்!

தொடருங்கள்!

நான் பழைய தலைமுறை போல கிடக்கு!

உடலை விற்பதிலும் பார்க்க, உயிரை விடுவது மேல் என்பது எனது தனிப்பட்ட கருத்து!!!

Link to comment
Share on other sites

உடலை விற்பதிலும் பார்க்க, உயிரை விடுவது மேல் என்பது எனது தனிப்பட்ட கருத்து!!!

உண்மை தான்.

ஆனால் அந்த பெண் விதவையானதால் தான் எல்லாம். பாவம் குழந்தையை என்ன செய்வார்?

ஒரு பெண் அதுவும் அதிகம் படிக்காதவர், ஆண் துணையின்றி இருந்தால் மற்றவர்கள் தொல்லை கொடுக்க மாட்டார்களோ?

Link to comment
Share on other sites

அதே நேரம் எனக்கும் 87ம் ஆண்டு இறுதியில் யாழ் குருநகர் பகுதியில் என்னை இந்தியப்படையிடமிருந்து பதுக்கி பாதுகாத்த ஒரு பெண்ணின் முகத்தோற்றமென்று ஞாபகத்தில் வந்துபோனது..கையசைத்தேன்

பிறிதொரு தலைப்பில் போராளிகள் பட்ட துன்பங்கள்,அவர்களின் வாழ்வு முறைகள் போன்றவற்றை எமது அடுத்த சந்ததிக்கு தெரியப்படுத்துவீர்களா??.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.