Jump to content

பட்டிமன்றம் தொடர்வோமா???

Recommended Posts

பதியப்பட்டது

யாழ்கள உறவுகளே!!!

முதலில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பட்டிமன்றத்தை மீண்டும் ஆரம்பிப்போமா??

நீங்கள் எல்லோரும் சம்மதம் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்.

உங்கள் ஒவ்வோரினது மனங்களின் ஆரோக்கியமான சிந்தனைகள் இந்த பட்டிமன்றத்தில் இணைந்து கைகுலுக்கட்டும். உங்கள் ஒவ்வோரினது வாழ்வியல் அநுபவங்கள் அநுமானங்கள் விவாதமாக அரங்கேறட்டும். உங்கள் ஒவ்வோரினது மனங்களிற்குள்ளும் எத்தனையோ ஏக்கங்கள் தாபங்கள் இருக்கும். அதற்கு ஒர் வடிகாலாய் இந்த பட்டிமன்றம் அமையட்டும். உங்கள் விவாதங்கள் நகைச்சுவையுடன் நாகரீகமாக அமைந்து சிறப்பிக்கட்டும். யாரும் தயங்கவேண்டிய அவசியம் இல்லை தயங்காமல் தங்கள் கருத்துக்களைப் பதிக்கலாம்

இதற்கு நீதிபதியாக யாரை தெரிவிக்கலாம் எனவும் கூறவும். பங்கு பற்ற விரும்புவோர் உங்கள் பெயர்களை இங்கு பதியவும். உங்களுக்கு விருப்பமான தலைப்பையும் சொல்லவும் இல்லாதவிடத்து தலைப்பை நான் சொல்கிறேன்.

  • Replies 1.5k
  • Created
  • Last Reply
Posted

அண்மைக்காலங்களில் நடந்த நிகழ்ச்சிகளை வைத்துப் பார்க்கும் போது கீழுள்ள தலைப்புக்கள் ஞாபகத்துக்கு வந்தன. இதை யாராவது வந்து தெரிவு செய்யலாம்..இல்லையெனில் எந்த தலைப்பை கூட உறுப்பினர்கள் விரும்புகிறார்கள் அதை வைத்து..தெரிவு செய்யுங்கள்..

* புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?

* வெளிநாட்டில் வாழும் ஆண்கள் தங்கள் துணைவியரிடம் கன்னித்தன்மையை எதிர் பார்ப்பது..சரியா? தவறா?

இந்தத்தலைப்புக்கள் ஏற்கனவே வேறு இடங்களில் விவாதிக்கப்படுவதை கண்டு தான்..இந்த பட்டிமன்றத்துக்கு தலைப்பாக போட நினைத்தேன். அதை விட்டு தவறான கோணத்தில் பார்ப்பதற்காகவோ..இல்லை தவறான கருத்துக்களை சேர்ப்பதற்காகவோ நான் இவற்றை போடவில்லை..என்பதை தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்

Posted

ஒரு வித்தியாசமாக சின்னப்புவை நீதிபதியாக நியமிக்கலாம்.

நான் வளி மொழிகிறேன்... அதோடு சாத்திரியையும் போடவும்.... முகத்தார் இவர்களின் கண்காணிப்பாளர்... சரியா...??? :P :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நல்ல ஜாலியாக இருக்கும் சின்னப்பு மப்பிலையும் சரியான தீர்ப்புத்தான் சொல்லுவார்

முதலாவது தலைப்பை தேர்வு செய்கின்றேன்.

Posted

அண்மைக்காலங்களில் நடந்த நிகழ்ச்சிகளை வைத்துப் பார்க்கும் போது கீழுள்ள தலைப்புக்கள் ஞாபகத்துக்கு வந்தன. இதை யாராவது வந்து தெரிவு செய்யலாம்..இல்லையெனில் எந்த தலைப்பை கூட உறுப்பினர்கள் விரும்புகிறார்கள் அதை வைத்து..தெரிவு செய்யுங்கள்..

* புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?

* வெளிநாட்டில் வாழும் ஆண்கள் தங்கள் துணைவியரிடம் கன்னித்தன்மையை எதிர் பார்ப்பது..சரியா? தவறா?

இந்தத்தலைப்புக்கள் ஏற்கனவே வேறு இடங்களில் விவாதிக்கப்படுவதை கண்டு தான்..இந்த பட்டிமன்றத்துக்கு தலைப்பாக போட நினைத்தேன். அதை விட்டு தவறான கோணத்தில் பார்ப்பதற்காகவோ..இல்லை தவறான கருத்துக்களை சேர்ப்பதற்காகவோ நான் இவற்றை போடவில்லை..என்பதை தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்

நல்ல, ஆக்கபூர்வமான விவாதத்தை தொடரக்கூடிய தலைப்புகள் பிரியசகி.

இரண்டாவது தலைப்பை இன்னும் தெளிவாக வைக்கலாம் என்று எண்ணுகிறேன்.

* (புலம் வாழ்) தமிழ் இளைஞர்கள் தமது வருங்கால வாழ்க்கைத்துணைவியரிடம் கன்னித்தன்மையை எதிர்பார்ப்பது சரியா? தவறா?

* (புலம் வாழ்) தமிழ் இளைஞர்கள் தமது வருங்கால வாழ்க்கைத்துணைவியரிடம் கன்னித்தன்மையை எதிர்பார்க்கிறார்களா? எதிர்பார்க்கவில்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நானும் வாறன் என்னையும் சேத்துக்கொள்ளுங்கோ...

விபரம்

பெயர் சோபனா

பட்டி மன்றத்தில் இணைய ஏதாவது தகைமை வேனுமா?? அப்பிடி என்றா நான் வரல...

Posted

அண்மைக்காலங்களில் நடந்த நிகழ்ச்சிகளை வைத்துப் பார்க்கும் போது கீழுள்ள தலைப்புக்கள் ஞாபகத்துக்கு வந்தன. இதை யாராவது வந்து தெரிவு செய்யலாம்..இல்லையெனில் எந்த தலைப்பை கூட உறுப்பினர்கள் விரும்புகிறார்கள் அதை வைத்து..தெரிவு செய்யுங்கள்..

* புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?

* வெளிநாட்டில் வாழும் ஆண்கள் தங்கள் துணைவியரிடம் கன்னித்தன்மையை எதிர் பார்ப்பது..சரியா? தவறா?

இந்தத்தலைப்புக்கள் ஏற்கனவே வேறு இடங்களில் விவாதிக்கப்படுவதை கண்டு தான்..இந்த பட்டிமன்றத்துக்கு தலைப்பாக போட நினைத்தேன். அதை விட்டு தவறான கோணத்தில் பார்ப்பதற்காகவோ..இல்லை தவறான கருத்துக்களை சேர்ப்பதற்காகவோ நான் இவற்றை போடவில்லை..என்பதை தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்

அக்கா நல்ல தலைப்புகள் உங்கள் அனைவரது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். :lol::D:D:D

என்னால் முடிந்தளவு நானும் பங்கு கொள்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்ட பேரையும் பதியுங்கப்பா.....

பட்டி மன்றங்களில் சிலவேளைகளில் எனது தனிப்பட்ட கருத்துக்கு முரணான கருத்துக்காக வாதிட வேண்டி இருக்கும். அது எனக்கு கொஞ்சம் கஸ்டம். இருந்தாலும் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.

நான் பிரியின் இந்த தலைப்பை தெரிவு செய்கிறேன்.

* புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?

Posted

ரசிகை. நல்ல முயற்சி..

எனக்கு ப்ரியின் இந்த தலைப்பு தான் பிடித்திருக்கு. ஆகவே என்னையும் உங்கள் பதிவில் சேர்த்துக்கொள்ளுங்கள். எதாவது தகைமைகள் பார்ப்பதென்றால் சோபானா போல் நானும் ஸ்கேப்

புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?

Posted

ஆஹா நல்ல தலைப்புகள் தான் ...சரி துவங்குங்க .... நானும் வந்து முயற்சி செய்யுறன் இப்படியான பட்டிமன்ற தலைப்பின் கீழ் விவாதித்ததும் இல்லை வாதடியதும் இல்லை இருந்தாலும் முயற்சி செய்து எனது கருத்துக்களையும் எழுதுகிறேன் ...தொடருங்கள் ரசி அக்கா... :P

Posted

புலம்பெயர் இளையோர் தலைப்பையே எடுக்கலாமென நினைக்கின்றேன்.. அப்படி அதை தெரிவு செய்வதாயின் நன்மை என்ற அணி சார்பாக நானும் பங்கு கொள்கின்றேன்.

Posted

ஒரு வித்தியாசமாக சின்னப்புவை நீதிபதியாக நியமிக்கலாம்.

:mrgreen: ஓய் ளொள்ளா

நமக்கு வெளியில நிண்டு சாணி அடிக்கிறது எண்டா ஓகே இப்ப நானும் மச்சானும் தனிய அடிக்கவேண்டியது இல்லை நம்மட லக்கிலுக்கும் நமக்கு கை தருவார்

:P :P :P :P :P :P :P :P :P :P

ஓய் நான் சொல்லுற ஆளைத்தலைவராப்போடுங்கோ அது ஒரு பெண்ணாக இருக்கட்டும் தமிழினியை நான் முன்மொழியிறன்

:P :P :P :P :P :P

:P :P :P :P

Posted

நல்ல விடயம். வாழ்த்துக்கள்.

ப்ரியசகியின் தலைப்புகள் காலத்தோடு ஒட்டி விவாதிக்கப்பட வேண்டியவையே.

முதலாவது தலைப்பில் விவாதித்தால், தமிழினியை அல்லது இளைஞனை நடுவராக போடலாம்.

ஆனால்.. :P இரண்டாவது தலைப்பில் விவாதித்தால், இளைஞனை போட்டுடாதீங்கப்பா.. ஆள் கண்ணை மூடிக்கொண்டு தீர்ப்பு சொல்லிடுவாரு.. :P :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் வாறன் என்னையும் சேத்துக்கொள்ளுங்கோ...

விபரம்

பெயர் சோபனா  

பட்டி மன்றத்தில் இணைய ஏதாவது தகைமை வேனுமா?? அப்பிடி என்றா நான் வரல...

ஜயோ நீங்க மாறி வந்திட்டிங்க...இது சமையல் பகுதி இல்ல....பட்டிமண்றம்பா... :oops: :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓய் நான் சொல்லுற ஆளைத்தலைவராப்போடுங்கோ அது ஒரு பெண்ணாக  இருக்கட்டும் தமிழினியை நான் முன்மொழியிறன்  

:P  :P  :P  :P  :P  :P  

:P  :P  :P  :P

பெண்ணியம் பற்றி விவாதிப்பது என்றால் தமிழினியக்காவை நடுநிலையாகப் போடுவதை எதிர்கின்றேன். பிறகு தீர்ப்பு எப்படி வரும் என்பதை இப்போதே சொல்லி விடலாம்.

மற்றய விடயங்கள் ஒகே :wink: :D

Posted

நல்ல விடயம். வாழ்த்துக்கள்.

ப்ரியசகியின் தலைப்புகள் காலத்தோடு ஒட்டி விவாதிக்கப்பட வேண்டியவையே.

முதலாவது தலைப்பில் விவாதித்தால், தமிழினியை அல்லது இளைஞனை நடுவராக போடலாம்.

ஆனால்..  :P  இரண்டாவது தலைப்பில் விவாதித்தால், இளைஞனை போட்டுடாதீங்கப்பா.. ஆள் கண்ணை மூடிக்கொண்டு தீர்ப்பு சொல்லிடுவாரு..  :P  :D

நடுவர்களாக்கி விவாதிகளை ஓரம் கட்டாதீங்கோ..! நீங்கள் தான் சரியான ஆள்.. எங்க ஓடுறீங்கள்..! மற்றது நடுவருக்கு மிகவும் அனுபவமும் நிதானமும் விவதாப் பொருள் தொடர்பில் அகலப்பார்வையும் வாதிகளுடன் நட்புறவும் அவசியம்..! உணர்ச்சி வசப்படக் கூடியவர்களுக்கும் நடுவர் தகமைக்கும் வெகுதூரம்..! இவற்றை கருத்தி நடுவர்களைத் தீர்மானிப்பதே சிறந்தது.. சோழியான் அண்ணா..! :wink: :P :lol:

நடுவர்களுக்கு பயிற்சிக்கு என்றால் உங்கள் பிரேரணை ஓக்கே...! :wink: :P

Posted

நல்ல விடயம் சும்மா களத்திலை அலட்டல் இல்லாமல் எதாவது பிரயோசனமாக கருத்தாடுவது நல்லம் அந்த வகையில் சமூகத்துக்கு உதவும் எதாவது கருத்துக்களை வைத்து தொடங்குங்கோ ............. இதில் அணிகளாக பிரிக்கத்தேவையில்லை விவாதிப்பவர்கள் யார் எண்டாலும் வந்து தமது தரப்பு கருத்துக்களை தெரிவிச்சால் நல்லம் என நினைக்கிறன் அப்படியே நடுவருக்கு ஒருவரைப் போடாமல் ஒரு குழு மாதிரி போட்டால் அவர்கள் தங்களுக்குள் அலசி ஆராந்து முடிவைத் தெரிவிக்கலாம் இதனால் பிறகு தலைவராக இருந்தவருக்கு பிரச்சனை வராது........(நான் எல்லாம் அழகி போட்டிகளில் நடுவராக பங்குபற்றிய அனுபவத்தை வைச்சுச் சொல்லுறன் கேளுங்கோ....அங்கு 6 7 பேர்தான் நடுவராக இருக்கிறது.)

Posted

நானும் பங்குபற்ற வருகிறேன், முன்புபோல் அல்லாமல் இதையாவது விரைவாகத் தொடங்குங்கப்பா.

இப்போதைக்கு "* புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?" என்ற தலைப்பில தொடங்க விரும்புகிறேன்.

Posted

நல்ல விடயம் சும்மா களத்திலை அலட்டல் இல்லாமல் எதாவது பிரயோசனமாக கருத்தாடுவது நல்லம் அந்த வகையில் சமூகத்துக்கு உதவும் எதாவது கருத்துக்களை வைத்து தொடங்குங்கோ ............. இதில் அணிகளாக பிரிக்கத்தேவையில்லை விவாதிப்பவர்கள் யார் எண்டாலும் வந்து தமது தரப்பு கருத்துக்களை தெரிவிச்சால் நல்லம் என நினைக்கிறன் அப்படியே நடுவருக்கு ஒருவரைப் போடாமல் ஒரு குழு மாதிரி போட்டால் அவர்கள் தங்களுக்குள் அலசி ஆராந்து முடிவைத் தெரிவிக்கலாம் இதனால் பிறகு தலைவராக இருந்தவருக்கு பிரச்சனை வராது........(நான் எல்லாம் அழகி போட்டிகளில் நடுவராக பங்குபற்றிய அனுபவத்தை வைச்சுச் சொல்லுறன் கேளுங்கோ....அங்கு 6 7 பேர்தான் நடுவராக இருக்கிறது.)

முகத்தார் உங்கள் ஆலோசனை கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றுதான்..! தனித்தலைமை சர்வாதிகாரம் என்ற நிலைக்கு கொண்டு போகவும் வாய்ப்பிருக்கு..குறிப்பா விவாதங்களில்..இது நடப்பது சாதாரணம்..! அணி பிரிக்காட்டி...அடிபாடு வராது.. அடிபாடு வராட்டி ஆக்கபூர்வமா ஒன்றும் வராது.. சோ...அணி பிரிக்கலாம்.. இல்லாட்டி எல்லாரும் ஓர் பக்கமே கருத்து வைக்க நிப்பினம்..! ஏற்கனவே இங்க எதிர்கருத்து நிலைபாடுகள் எடுத்து வாங்கிக்கட்டின அனுபவத்தில சொல்லுறம்..! நடுவர் விடயத்தில் முகத்தார் கூறியது போல.. கூட்டு நடுவர் வைக்கலாம்...(பிறகு நடுவர்களுக்க பிரச்சனை வராட்டிச் சரி..! ). ஆனால் ஒன்று நடுவர்கள் அங்கினை இங்கினை தங்களுக்க டிஸ்கஸ் பண்ணிட்டு தீர்ப்புச் சொல்லக் கூடாது..! விவாதத்தில் வந்ததை வைச்சு சொல்லனும்..! வைச்சுத்தான் பாருங்களேன்..புது அனுபவமா வேற இருக்கும்..! :wink: :P :idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அணி பிரிக்கப்பட்டால் எமக்கு விருப்பமற்ற கருத்துக்களுக்காக விவாதிக்க வேண்டி வரும். எனவே விரும்பிய அணிக்குள் எவராவது இணைந்து கொள்ளலாம். ஆனால் முதலில் தொடங்கியதன் சார்பாகவே செல்லவேண்டும். பிறகு ஆதரவு கூடுது என்று மற்றப்பக்கம் சாயக் கூடாது. :wink: :D

Posted

ஆரம்பத்திலேயே விரும்பின அணில அமர்த்திட்டாப் போச்சு..! அதுக்காக எல்லாரும் ஓர் அணில நிக்கிறதில்லை. சமனா அண்டஸ்ராண்டிங்கோட நில்லுங்கோ..! :wink: :D

கூட்டு நடுவரில...ஆண்களும் பெண்களும் சமனா அங்கம் வகிக்கலாம்..!

சோழியான் அண்ணா..சண்முகி அக்கா.. முகத்தார்..தமிழினி இவர்களை அமர்த்தலாம்..! உங்கள் யோசனைகள் எப்படி..??! விவாதிக்கவும் ஆக்கள் வேணும்.. அதையும் கருத்தில் வைச்சு பிரேரிங்கோ..! :P :idea:

Posted

நடுவர்களாக்கி விவாதிகளை ஓரம் கட்டாதீங்கோ..! நீங்கள் தான் சரியான ஆள்.. எங்க ஓடுறீங்கள்..! மற்றது நடுவருக்கு மிகவும் அனுபவமும் நிதானமும் விவதாப் பொருள் தொடர்பில் அகலப்பார்வையும் வாதிகளுடன் நட்புறவும் அவசியம்..! உணர்ச்சி வசப்படக் கூடியவர்களுக்கும் நடுவர் தகமைக்கும் வெகுதூரம்..! இவற்றை கருத்தி நடுவர்களைத் தீர்மானிப்பதே சிறந்தது.. சோழியான் அண்ணா..! :wink: :P :lol:

நடுவர்களுக்கு பயிற்சிக்கு என்றால் உங்கள் பிரேரணை ஓக்கே...! :wink: :P

இளைஞர்களுக்கேற்ற தலைப்பு வரப்போவது போல தெரிகிறது.. ஆகவே.. நானும் களத்தில குதிக்க கொடுக்குக் கட்டிப்போட்டன்.. :P :lol: இந்தமுறை மோதலோ மோதல் கருத்து மோதல்தான். :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.