Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்ச போர் குற்றம் - வாய் திறந்தார் ஜெயலலிதா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்பதைத் தான் அண்மையில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட கோரச் சம்பவம் நினைவூட்டுகிறது. இன்னும் சொல்லப் போனால், இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடூர மனப்பான்மைக்கு உண்மையிலேயே ஆதாரம் தேவை என்றால், இலங்கை அதிகாரிகளின் சித்ரவதையால் அழுகிய நிலையில் சிதைந்து கிடந்த மீனவர்களின் சடலங்களே சாட்சி.

இந்தியாவைச் சேர்ந்த தமிழர்கள் மீதே இதுபோன்ற கொடூரத் தாக்குதலை இலங்கை அரசு நடத்தியிருக்கும் நிலையில், யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அனைத்து விதமான மனித உரிமை மீறல் குற்றங்களுக்கும் ஆளாகி, இலங்கை அரசின் அடக்குமுறைக்கு அடிபணிந்து இலங்கைத் தீவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்களின் நிலைமை என்ன என்பதை கற்பனை செய்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

ஓர் தமிழ் இளைஞரை துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பு, அவரை நிர்வாணமாக்கி, கண்களை மூடி, கை, கால்களைக் கட்டி, காலால் எட்டி உதைத்து இலங்கை ராணுவத்தினர் பேரானந்தம் அடைந்த காட்சியை 25.8.2009 அன்று 40 வினாடிகளுக்கு பிரிட்டிஷ் டி.வி. ஒளிபரப்பி உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த இளைஞரின் பிணம், இதேபோன்று ஒன்பது சடலங்கள் இருந்த இடத்திற்கு உருட்டி விடப்பட்டது. இந்த கொடுஞ்செயலுக்கு எதிராக சர்வதேச அளவில் கூக்குரல் எழுப்பப்பட்டதோடு மட்டுமல்லாமல், இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சே சர்வதேச நீதி மன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, போர்க் குற்றத்திற்காக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், இந்திய அரசோ, தமிழக அரசோ இது குறித்து எதிர்ப்பையோ அல்லது வருத்தத்தையோ கூட தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, இலங்கை அதிபருடன் விருந்துண்டு மகிழ்வதற்காக, 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கனிமொழி உள்பட தி.மு.க., காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி.

பரிசுப் பொருட்களுடன் திரும்பிய நாடாளுமன்றக் குழுவினர் இலங்கையில் எல்லாமே நன்றாக இருக்கிறது என்றும், அங்குள்ள தமிழர்கள் குறைபட்டுக் கொள்ளும் அளவுக்கு புகார் ஒன்றுமில்லை என்றும் தெரிவித்தனர். என்னதான் நற்சான்றிதழ் கொடுத்தாலும், அங்குள்ள தமிழர்களின் நெஞ்சை உருக்கும் நிலையைக் கண்டு மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு நாடுகளைச் சேர்ந்த அரசுகள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை பொங்கி எழுந்தன.

தற்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் அனுப்பிய குழுவின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இருந்து ஒரு சில பகுதிகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஐ.நா. குழுவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படின், சர்வ தேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டம் ஆகியவற்றிற்கு எதிரான ஆபத்து விளைவிக்கக் கூடிய அத்து மீறல்களை இலங்கை அரசாங்கம் நிகழ்த்தியுள்ளது வெட்ட வெளிச்சமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் சில குற்றங்கள் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகும். 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதிக்கும் இடையே, வன்னி பகுதிக்கு முன்னேறிய இலங்கை ராணுவம், மிகப் பெரிய அளவில் பரவலாக குண்டு மழை பொழிந்து அப்பாவி தமிழர்கள் மாண்டு போவதற்கு காரணமாக இருந்தது.

இதன் மூலம் வன்னி பகுதி மக்களுக்கு பலவிதமான தொந்தரவுகளை இலங்கை ராணுவம் கொடுத்தது. கிட்டத்தட்ட 3 லட்சத்து 30 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் குண்டு மழை பொழிவிலிருந்து தப்பிக்க முடியாத அளவுக்கு மிகக் குறுகிய பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர்.

ஊடகங்கள் மற்றும் போர் விமர்சகர்களை பயமுறுத்தும் வகையிலும், அவர்களுக்கு வாய்ப்பூட்டு போடும் வகையிலும், வெள்ளை வாகனங்களில் மக்களை கடத்துவது, மறைத்து வைப்பது உள்பட பல்வேறு அச்சுறுத்தும் நடவடிக்கைகளை இலங்கை அரசு கையாண்டது.

குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பொதுமக்கள் வாழும் தொடர்ச்சியான மூன்று இடங்களில் இலங்கை அரசு மிகப்பெரிய அளவில் குண்டு மழை பொழிந்திருக்கிறது. மருத்துவ மனைகள் குறிவைத்து தொடர்ந்து தாக்கப்பட்டு இருக்கின்றன. வன்னிப் பகுதியில் உள்ள மருத்துவ மனைகள் அனைத்தும் பீரங்கிகளால் தாக்கப்பட்டு இருக்கின்றன.

மருத்துவமனைகள் இருக்கும் பகுதிகள் என்று இலங்கை அரசாங்கத்திற்கு நன்கு தெரிந்திருந்தும் சில மருத்துவமனைகள் மீண்டும், மீண்டும் தாக்கப்பட்டிருக்கின்றன. போர் பகுதியில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் செய்யக் கூடிய உதவிகளான மருத்துவ உதவி, உணவு ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் தடுத்து அவர்களை மேலும் துன்பத் திற்கு ஆளாக்கி இருக்கிறது.

இதன் மூலம் போர் பகுதியில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையை இலங்கை அரசு வேண்டுமென்றே குறைத்து மதிப்பீடு செய்தது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே வரை, மனித வர்க்கத்தின் படுகொலை நடந்த இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அனாமதேயமாக செத்து மடிந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை குழுவின் அறிக்கை மிகத் தெளிவாக உள்ளது. இலங்கை அரசாங்கத்தின் போர்க் குற்றங்களை பட்டியலிட்ட தோடு மட்டுமல்லாமல், இலங்கை போர் முடிவிற்கு வந்து விட்டது என்று கூறி 27.4.2009 அன்று தனது மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகத்தை கருணாநிதி முடித்துக் கொண்டதற்குப் பிறகும், 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி வரை இனப்படுகொலைகள் நடந்துள்ளன என்று தெளிவாக இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட, மனித குல வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான இனப்படு கொலைக்கு ஆதரவாகவும், உடந்தையாகவும், தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்த கருணாநிதி பகிரங்கமாக பொது மன்னிப்பு கோர வேண்டும் என்று தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்க்ள.

ராஜபக்சே மற்றும் அவருடைய சகாக்களின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் வகையில், அவர்களை சர்வ தேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த உடனடி நடவடிக்கைகளை தனது பங்கிற்கு இந்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையெனில், அண்மையில் தமிழக வாக்காளர்கள் முன்பு இலங்12கை குறித்து சோனியாகாந்தி தெரிவித்த கருத்துக்கள் வாய்மையற்றவை என்றாகி விடும்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலையை நடத்தியது இந்திய அரசு தான் என்று அடிக்கடி கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டு உண்மை என்று நம்புவதாக வழி வகுக்கும். இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறி உள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=52264

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சே மற்றும் அவருடைய சகாக்களின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் வகையில், அவர்களை சர்வ தேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த உடனடி நடவடிக்கைகளை தனது பங்கிற்கு இந்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையெனில், அண்மையில் தமிழக வாக்காளர்கள் முன்பு இலங்12கை குறித்து சோனியாகாந்தி தெரிவித்த கருத்துக்கள் வாய்மையற்றவை என்றாகி விடும்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலையை நடத்தியது இந்திய அரசு தான் என்று அடிக்கடி கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டு உண்மை என்று நம்புவதாக வழி வகுக்கும். இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறி உள்ளார்.

மின்மினிப் பூச்சிகளாய்

மின்னும் நட்சத்திரங்களில்

விடி வெள்ளியின் வெளிச்சம்

வித்தியாசமானது!!!

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்காக... ஜெயலலிதா வாயோ..., பாயோ திறக்கத் தேவை இல்லை.

தமிழக அரசிசியல் வாதிகள் முன் கதவால் வந்து, மகிந்த ராஜபக்சவுக்கு பொன்னாடை போர்த்தி அறிக்கை விடுவதும், பின் கதவால் வந்து கிரிக்கெட்டும், வேறை இழவை செய்வதும் ஊரறிந்த ரகசியம். முள்ளிவாய்க்காலின் போது... கூப்பிட்ட குரலுக்கு, வராத நீங்கள்.....உதவி செய்யாவிட்டாலும்... உபத்திரவம் தராமால் இருந்தாலே.. பெரு நன்றி உடையவானாக இருப்பேன்.

-இது எனது தனிப்பட்ட கருத்து-

:):D

Edited by புயல்

... வரும் சிறு ஆதரவானாலும் பயன் படுத்த வேண்டும், அதை விடுத்து கடந்த கால சகதிகளை கிளறி ... காணப்போவது ... ஒன்றுமில்லை!

http://www.dailymirror.lk/news/11006-jayalalithaa-demands-war-probe.html

எங்களுக்காக... ஜெயலலிதா வாயோ..., பாயோ திறக்கத் தேவை இல்லை.

தமிழக அரசிசியல் வாதிகள் முன் கதவால் வந்து, மகிந்த ராஜபக்சவுக்கு பொன்னாடை போர்த்தி அறிக்கை விடுவதும், பின் கதவால் வந்து கிரிக்கெட்டும், வேறை இழவை செய்வதும் ஊரறிந்த ரகசியம். முள்ளிவாய்க்காலின் போது... கூப்பிட்ட குரலுக்கு, வராத நீங்கள்.....உதவி செய்யாவிட்டாலும்... உபத்திரவம் தராமால் இருந்தாலே.. பெரு நன்றி உடையவானாக இருப்பேன்.

-இது எனது தனிப்பட்ட கருத்து-

<_<:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் குற்ற விடயம் உலகம் முழுது பரவலாக பேசப்படவேண்டிய ஒண்று, யார் பேசினாலும் சிறிலங்காவிற்கு எதிராக பேசினால், உலகம் முழுது பரப்பபடவேண்டிய தேள்வை இருக்கிறது, இதனல் பேசபடுபவர் பிரமபல்யல் அடையமுடியாது பேசப்படும் விடயம்தான் பிரபல்யம் அடையும், ஒருகட்டத்தில் ஜநாவில் இதில் இருந்து வெலியேறமுடியாத நிலை வரும், அப்போது தமிழருக்கு ஒரு தீர்வை வைத்துதான் ஆக வேண்டும்.

ஒரு முறை எமது பிரச்சினையை உலகத்திடம் நாம் கொண்டு சேர்பது,

இரண்டாவது முறை உலகத்தை எமது பிரச்சினையை நோக்கி நகர்த்துவது.

இரண்டாவது முறையில் உலகம் கைவைத்தால் அதை இலகுவில் விட்டு விட முடியாது.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

பல தடவை பலர் இலக்கை மறந்துவிடுகின்றார்கள். எங்களுடைய தேவை ஜெயலலிதா கூட விமர்சனம் செய்வதோ, அல்லது வீரம ;கதைப்பதோ அன்று!!

  • கருத்துக்கள உறவுகள்

நான், எனது தனிப்பட்ட கருத்து என்று அடிக்கோடிட்டுள்ளேன்.

எனது தனிப்பட்ட கருத்து, தமிழீழ ம்க்களின் கருத்தாக முடியாது.

முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையை பார்க்க தெரியும்.

ராஜபக்சேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா

ஓர் தமிழ் இளைஞரை துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பு, அவரை நிர்வாணமாக்கி, கண்களை மூடி, கை, கால்களைக் கட்டி, காலால் எட்டி உதைத்து இலங்கை ராணுவத்தினர் பேரானந்தம் அடைந்த காட்சியை 25.8.2009 அன்று 40 வினாடிகளுக்கு பிரிட்டிஷ் டி.வி. ஒளிபரப்பி உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

தமிழரை நிர்வாணமாக்கி கொலை செய்வது சிங்களத்தின் ஒரு கலாச்சாரம். ஆம் கலவரத்தில் கூட இப்படியான நிகழ்வுகள் நடந்துள்ளன. இதைக்கூட நாம் எமது பரப்புரைகளில் பாவிக்கவேண்டும்.

2002 பார்த்த அம்மா இல்லை இவா..!!

இப்ப எவளவோ வேட்டர்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அரசியல் நோக்கத்துக்காக விட்ட அறிக்கையோ தெரியாது ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் வரவேற்கப்பட வேண்டிய சிறந்த அறிக்கை. ஐயாவிற்கு மேல்.

இவரது தொடர்பு மின்னஞ்சல் தெரிந்தால் இணைத்துவிடவும். நன்றி !

http://www.aiadmkallindia.org/ ( இதில் தேடினேன் கிடைக்கவில்லை )

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கில் மட்டுமே நமது குறி இருக்க வேண்டும்.தேவையற்ற விமர்சனங்களால் பயனில்லை.

இலக்கில் மட்டுமே நமது குறி இருக்க வேண்டும்.தேவையற்ற விமர்சனங்களால் பயனில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான், எனது தனிப்பட்ட கருத்து என்று அடிக்கோடிட்டுள்ளேன்.

எனது தனிப்பட்ட கருத்து, தமிழீழ ம்க்களின் கருத்தாக முடியாது.

முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையை பார்க்க தெரியும்.

றாயதந்திரம் என்பது, அடிமனதுக்குள் விடவேண்டியதை அங்கேயும் வெளியால் விடவேண்டியதை வெளியாலும் விடவேண்டும்.

யாழ் களத்தில் தனிப்பட்ட ஒரு கருத்து எழுதியவருக்கே இவ்வளவு எதிர்வினை என்றால், ..........

இங்கு மாத்திரமல்ல மற்றைய தளங்களிலும் கருத்து எழுதுபவர்கள் இராஜதந்திரமாக எழுத வேண்டும்.

நாங்கள் வாந்தி எடுத்தால், அவர்களும் வாந்தி எடுப்பார்கள். நாங்கள் மலம் கழித்தால் அவர்களும் மலம் கழிப்பார்கள். இது, நான் உட்பட எல்லோருக்கும் பொருந்தும்.

..... தமிழ்நாட்டு சட்டசபை தேர்தல்கள் முடிந்தாலும், வெகுவிரைவில் லோக்சபா தேர்தல்கள் வர இருக்கும் தருணத்தில் ... அங்கு ஊழல், அது இது என்று பல பிரட்சனைகளில் காங்கரஸ் அரசு ... நல்ல தருணத்தில் தேவையான அறிக்கை .... வரவேற்போம்! ...

  • கருத்துக்கள உறவுகள்

... வரும் சிறு ஆதரவானாலும் பயன் படுத்த வேண்டும், அதை விடுத்து கடந்த கால சகதிகளை கிளறி ... காணப்போவது ... ஒன்றுமில்லை!

http://www.dailymirror.lk/news/11006-jayalalithaa-demands-war-probe.html

வருவது சிறு ஆதரவு என்றால் யார்தான் தட்டபோகிறார்கள்?

ஆதரவு என்ற முலாம்பூசி உயிரை எடுக்கும் கத்தியை வீசினால் கொஞ்சம் கவனமாகத்தானே இருக்க வேண்டும்! வீசுகிறவர்கள் அப்படியானவர்கள்................ இவர்களுக்கு மனிதம் இருந்தால் எங்களுக்காக பெரிதாக கிழிக்காவிட்டாலும்............... இவர்களுக்கு வாக்குபோட்ட தமிழக மக்களுக்காவது கொஞசம் நேர்மையான ஆட்சியையும் ஒரு அரசமைப்பையும் கொடுத்தாலே கோடி புண்ணியம்.

அங்கேயே பகல்கொள்ளை.............. இந்த இலட்சணத்தில் பக்கத்து வீட்டுகாரன் எனக்கு பணம் தருகிறேன் என்றால் எங்களுடைய ஆறாவது அறிவு தானகவே எதையாவது சிந்திக்கும்தானே???

ஜெயலலிதா கொலைகள் நடக்கும் போது, கண் மூடிக்கொண்டிருன்தவர் - இப்ப கத்துவது ஏன்?

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், காட்டுமிராண்டிகள், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், போர்க் குற்றவாளிகள், ஏமாற்றிகள், ………….., சிங்களவர் வந்தேறு குடிகள், போலி வரலாறுகளை தயாரித்து மகா பொய்வம்சத்தை உருவாக்கி வருபவர்கள், ......, ……

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள், பொய்யர், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், போர்க் குற்றவாளிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ……, ஹிந்தி வெறியர்கள் - வந்தேறு குடிகள், ஊழல் பேர்வழிகள், ....., ......

தமிழர்கள் முழுமையான தனாட்சித் தீர்வு கிடைக்கும் வரை மேலுள்ளவற்றை மறத்தலாகாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்து இனப்போரினை இழித்தும், பழித்தும் பேசியது யார்? ஜெயலலிதாவுக்கு கலைஞர் கேள்வி

ஈழத்து இனப்போரினை இழித்தும், பழித்தும் பேசியது யார்? என்று முதல் அமைச்சர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, முதல் அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேள்வி: இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற போரின் போது சிங்களப் படையினர் இழைத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் மார்சுகி தருஸ்மேன் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கி மூன் அமைத்தார். அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் எல்லாம் ஏடுகளில் வெளிவந்துள்ளனவே, அதைப்பற்றி தங்கள் கருத்து என்ன?.

பதில்: கடந்த ஒன்பது மாதங்களாக நடைபெற்ற விசாரணையின் அறிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக முழுமையும் வெளியிடப்படவில்லை என்ற போதிலும், அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் சில ஏடுகளில் எல்லாம் வெளிவந்துள்ளன. அந்த அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று பலரும் அறிக்கைகளை விட்டுக்கொண்டுள்ளார்கள்.

இந்த விசாரணை ஆணையத்தை அமைத்த ஐ.நா. மன்றம் என்ன செய்யப்போகிறது என்றும் தெரியவில்லை. நமது மத்திய அரசு இந்த அறிக்கை மீது எப்படிப்பட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறது என்ற விவரமும் வரவில்லை. ஆனால் இதிலே அறிக்கை விட்டுள்ள ஜெயலலிதா வழக்கம் போல தேவையில்லாமல் 2009ம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் உச்ச கட்டத்தில் நடைபெற்ற போது நான் உண்ணாவிரதம் இருந்ததை "கபட நாடகம்'' என்றும், மத்திய அரசின் மூலமாக தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு இலங்கை சென்று வந்ததை குறை கூறியும் ஒரு அநாகரிகமான, அவருக்கே உரிய நடையில் வெளிவந்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள் அடுக்கடுக்காக கொல்லப்பட்டபோது, போர் என்றால் பொதுமக்களும் கொல்லப்படுவது சகஜம்தான்'' என்று ஈழத்து இனப் போரினை இழித்தும் பழித்தும் ஜெயலலிதா கூறியதை தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்பது ஜெயலலிதாவின் நினைப்பு! எது எப்படியோ? வருகிற 25ம் தேதியன்று எந்தவிதமான திருத்தமும் இன்றி இலங்கை போர்க்குற்ற அறிக்கை முழுமையாக வெளியிடப்படும் என்று ஐ.நா. சபை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமாக அந்த அறிக்கை வெளியான பிறகு மத்திய அரசு கால தாமதம் இல்லாமல் அதைப்பற்றி முறையான நடவடிக்கையினை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன். மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=52292

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.