Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீ சத்ய சாயி பாபா சற்று முன்னர் காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவருடைய சாயி கீதங்கள் செவிக்கும் மனசுக்கும் இதமானவை!

  • கருத்துக்கள உறவுகள்

.

  • கருத்துக்கள உறவுகள்

பதற வைத்த சாய்பாபா -கேள்விக்குறியான பலகோடி சொத்து

எனக்கு இறப்பும் கிடையாது... பிறப்பும் கிடையாது...’

எத்தனை உண்மையாகிப் போயிருக்கிறது சாய்பாபாவின் இந்த வார்த்தைகள். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்கள் எடுத்த பிறந்தநாள் விழாவில் தன்னைப்பற்றிக் கூறிய வார்த்தைகள்தான் இது.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் புட்டபர்த்தி கிராமத்தில் கடந்த 1926ம் ஆண்டு பிறந்தார் சாய்பாபா. இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜு. இவருக்கு 14 வயது இருக்கும் போது, இவரது கையில் தேள் கொட்டியது. அப்போது அவரிடம் திடீர் மாற்றம் காண ஆரம்பித்தது.

கையில் கற்கண்டு வரவழைத்து குடும்பத்தாரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஒரு முறை கோபமடைந்த அவரது தந்தை. ‘நீ யார்?’ என்று ஆவேசமாகக் கேட்க, ‘‘நான் ஷிர்டி சாய்பாபாவின் அவதாரம்’’ என்று அமைதியாக பதில் கூறினார் சாய்பாபா.

அதன்பிறகு, புட்டபர்த்தியில் ஆசிரமம் அமைத்து பக்தர்களுக்கு அருள் வழங்கத் தொடங்கினார். லிங்கம், மோதிரம், வாட்ச் ஆகியவற்றை வரவழைத்து பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் பாபா. ஒரு கட்டத்தில் பாபாவின் இத்தகைய செயல் கடும் விமர்சனத்துக்குள்ளாகியது. இதனையடுத்து, இதுபோன்ற மாய, மந்திர வேலைகளைச் செய்வதை பாபா நிறுத்திக் கொண்டார்.

பாபாவுக்கு உலகம் முழுவதும் 132 நாடுகளில் பக்தர்கள் இருக்கிறார்கள். அங்கு பாபாவின் ஆசிரமங்களும் செயல்பட்டு வருகின்றன. கடந்த 1993ம் ஆண்டு பாபாவைக் கொலை செய்ய நடந்த முயற்சியில் அவர் அருகில் இருந்த எட்டுப் பேர் பரிதாபமாக இறந்தனர். இந்தச் சம்பவம் உலக அளவில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

ஒரு காலகட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பாபாவின் வழியைப் பின்பற்றத் தொடங்கினார்கள். அறிஞர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் தங்கள் குழப்பங்களுக்கு பாபாவிடம் தீர்வு இருப்பதாக வெளிப்படையாகக் கூறத் தொடங்கினார்கள்.

படித்தவர்களைத் தன்வயப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமா? என்ற ரீதியில் பலர் இது குறித்து ஆய்வில் இறங்கினர். பாபாவின் அருள் குறித்த ‘பயோ சைக்காலஜி’ ஆய்வுகளும் நடத்தப்பட்டன.

‘‘தூய்மையான மனநிலையில் இருக்கும் ஒருவரது மூளையில் இருந்து சுரக்கும் ‘பிட்யூட்டரி சுரப்பி’ எனப்படும் ஒரு வகை திரவம் பெரும் ஆற்றலை உடையது என்று கண்டறியப்பட்டது. இந்த சுரப்பி பாபாவுக்கு எதிரே உள்ளவரின் செல்களில் சென்றடைந்து அவர்கள் நினைத்தது நிறைவேறுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது’’ என்பதை ஆதாரத்துடன் வெளியிட்டனர்.

இதன்பிறகு சத்யசாய்பாபாவின் புகழ் உலகெங்கும் விரைவாகப் பரவத்தொடங்கியது. தனது 96வது வயதில் மரணம் ஏற்படும் என்று சாய்பாபா உறுதியாகச் சொல்லி வந்தார். இந்நிலையில், அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணம் அடைந்தது அவரது பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திவிட்டது.

‘‘பாபா 96 வயது வரை வாழ்வேன் என்று கூறியது பொய் இல்லை. உண்மைதான்... அவர் கூறியபடியே மறைந்து விட்டார்’’ என்று புதிய தகவலைக் கூறியிருக்கிறார்கள் அவரது பக்தர்கள்.

‘‘நாம் ஆங்கில முறைப்படி 30 மற்றும் 31 நாட்களைத்தான் ஒரு மாதமாகக் கணக்கிடுகிறோம். இந்து முறைப்படி பூமியை சந்திரன் ஒரு முறை சுற்றிவருவதையே ஒரு மாதமாகக் கணக்கிடவேண்டும். அதன்படி சந்திரன் பூமியை ஒரு முறை சுற்றிவர 27.3 நாட்கள் ஆகிறது. இதுதான் இந்து முறைப்படி ஒரு மாதமாகக் கணக்கிட வேண்டும். இந்த கணக்கின்படி பார்த்தால் பாபாவுக்கு இப்போது 96 வயதாகிறது. தான் 96 வயதில் மறைவேன் என்று பாபா சொன்னது நிறைவேறியிருக்கிறது’’ என்றனர்.

ஸ்ரீ சாய் அறக்கட்டளை மூலம் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை ஆகியவற்றை பாபா நிர்வகித்து வந்தார். இதனால் லட்சக்கணக்கான ஏழை மக்கள் பயன் அடைந்தனர். பாபாவின் அறக்கட்டளைக்கு ஒன்றரை லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

பாபாவின் மறைவு சோகத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க... இந்த அறக்கட்டளையை யார் நிர்வகிப்பது என்ற கேள்வி மறுபுறம் எழுந்துள்ளது. சாய் அறக்கட்டளை பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே பக்தர்களின் ஆசையாக இருக்கிறது. இந்த அறக்கட்டளை பாபா வழிகாட்டுதலின் படி நடந்து கொண்டிருந்தது. அதனால் இதுவரை எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை.

ஆனால், பாபாவின் மறைவுக்குப் பிறகு இந்த அறக்கட்டளைக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அறக்கட்டளையின் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கே.எம்.பகவதி பொறுப்பேற்கக் கூடும் என்ற பேச்சும் அடிபடுகிறது. நேர்மையாளர் என்று பெயர் எடுத்த பகவதி, பாபாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். இவர் தற்போது அறக்கட்டளையின் உறுப்பினராக இருக்கிறார்.

ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பின் முன்னாள் தலைவர் எஸ்.வி.கிரியும் தலைவர் பதவிக்கான போட்டியில் இருக்கிறார். இவரும் நேர்மையானவர் என்று பெயர் எடுத்தவர்.

இதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த டி.வி.எஸ். நிறுவனத்தின் வேணு சீனிவாசனின் பெயரும் தலைவர் பட்டியலில் லேட்டஸ்ட்டாக இடம் பெற்றுள்ளது. ஆன்மிக ரீதியாக செய்ய வேண்டியதை பாபா நினைத்ததை இவர் குறிப்பால் உணர்ந்து செயல்படுத்தியவர். இவரும் அறக்கட்டளையின் உறுப்பினராக இருக்கிறார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.சக்ரவர்த்தியும் தலைவராகலாம் என்கிறார்கள். கடந்த 1983ம் ஆண்டு அனந்தபூர் மாவட்ட கலெக்டராக சக்ரவர்த்தி இருந்தபோது, அவரது நிர்வாகத் திறமையைக் கண்டு சாய்பாபா வியந்து போனாராம். பாபாவின் வேண்டுகோளை ஏற்று, அரசு பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாபாவுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார் சக்ரவர்த்தி.

இவரை அறக்கட்டளையின் உறுப்பினராக்கிய பாபா, கடந்த 1994ம் ஆண்டு அறக்கட்டளையின் செயலாளராக்கினார்.

பாபாவின் நம்பிக்கையைப் பெற்ற சக்ரவர்த்தியும் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுவதாகக் கூறுகிறார்கள். இருந்தாலும், சக்ரவர்த்தி தலைவர் ஆவதை பெரும்பாலான பக்தர்கள் விரும்பவில்லை. இவரால்தான் பாபாவுக்கும் பக்தர்களுக்கும் இடையே இடைவெளி அதிகரித்ததாக குற்றச்சாட்டு நிலவுகிறது.

அறக்கட்டளைக்குத் தலைவராகும் தகுதி தனக்கே இருப்பதாக முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார் பாபாவின் தம்பி மகன் ஆர்.ஜே. ரத்னாகர். எம்.பி.ஏ. பட்டதாரியான இவரை சில ஆண்டுகளுக்கு முன்தான் அறக்கட்டளை உறுப்பினராக்கினார் பாபா. மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகியாகவும் இவர் இருப்பதால் அரசியல் பக்கபலமும் இவருக்கு இருப்பதாகக் கூறுகிறார்கள்.

அறக்கட்டளைக்கு தலைவராகும் தகுதி சத்யஜித் ஒருவருக்கு மட்டுமே இருப்பதாகக் கூறுகிறார்கள் பக்தர்கள். ஐந்து வயதில் பாபாவிடம் வந்து அடைக்கலமான சத்யஜித், சாயி உயர் கல்வி நிலையத்திலேயே எம்.பி.ஏ. படித்தார். பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். பாபாவின் நம்பிக்கையைப் பெற்றவர். இவர் அனுமதி இல்லாமல் பாபாவை யாராலும் பார்க்க முடியாது. இவருக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

பாபாவின் உடல், வரும் புதன்கிழமை சமாதிக்குள் அடக்கம் செய்யப்படவிருக்கிறது. அவரது உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடக்கிறது. ஆனால், அறக்கட்டளையின் தலைவர் பிரச்னை இன்னும் நீடித்துக் கொண்டே போகிறது.

இதே நிலை நீடித்தால் இந்து சமய அறநிலையத்துறை இந்த அறக்கட்டளையை தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளும் என்ற தகவலால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ‘தலைவர் பதவிக்கு யார் வருவது என்பது குறித்து ஒருமித்த கருத்து ஏற்படும் வரை, இதில் குறுக்கிட மாட்டோம்’ என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

இருந்தாலும், குழப்பம் நீடித்துக் கொண்டிருப்பதால் சாய் அறக்கட்டளையை அரசே எடுத்து நிர்வகிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஏழை மக்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்து வந்த சாய் அறக்கட்டளையின் பணிகள் தொடரவேண்டும் என்பதே பலரது ஆசையாக இருக்கிறது.

அனந்தபூர் மாவட்டத்துக்கும், சென்னைக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க இந்த அறக்கட்டளையையே சாய்பாபா பயன்படுத்தினார். இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றால் மட்டுமே, பாபா இன்னும் தங்களுடன் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும் என்று பக்தர்கள் கண்ணீர் மல்க கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

பாபா 96 வயது வரை தான் உயிர் வாழ்வேன் என்று கூறியதால்தான் அறக்கட்டளை விவகாரம் குறித்து ஆலோசிக்க முடியவில்லை என்று தற்போது உறுப்பினர்களாக இருக்கும் பலர் தெரிவிக்கின்றனர். இது தவிர, அறக்கட்டளையின் அடுத்த தலைவர் யார் என்று பாபா உயில் ஏதும் எழுதி வைக்காததும் குழப்பத்துக்குக் காரணமாக அமைந்து விட்டது என்கிறார்கள்.

ஊருக்கு வழி காட்டிக்கொண்டிருந்த சாய் அறக்கட்டளை... தனக்கு ஒரு வழி தெரியாமல் விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறது!

- குமுதம் ரிப்போட்டர்

  • கருத்துக்கள உறவுகள்

‘‘தூய்மையான மனநிலையில் இருக்கும் ஒருவரது மூளையில் இருந்து சுரக்கும் ‘பிட்யூட்டரி சுரப்பி’ எனப்படும் ஒரு வகை திரவம் பெரும் ஆற்றலை உடையது என்று கண்டறியப்பட்டது. இந்த சுரப்பி பாபாவுக்கு எதிரே உள்ளவரின் செல்களில் சென்றடைந்து அவர்கள் நினைத்தது நிறைவேறுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது’’ என்பதை ஆதாரத்துடன் வெளியிட்டனர்.

ஒரு முறை எனக்குத் தெரிந்த உறவு ஒன்று, பாபாவுக்கு மிகவும் நெருக்கமானது, பாபாவிடம் துணிவை வரவழைத்துக் கொண்டு கேட்டது,

" பாபா, இலங்கையில் எமது இனத்திற்கு எப்போது விமரிசனம் கிடைக்குமென்று?"

அதற்கு பாபா சொன்ன பதில் இது தான்.

நீங்களெல்லாம் திராவிடர்கள், உங்களுக்கு விமோசனமே கிடையாது என்று!இப்படிப் பட்டவரது மனது தூய்மையானது என்று எவ்வாறு கூற முடியும் என்று எனக்கு விளங்கவில்லை!!!

இணைப்புக்கு நன்றிகள் கந்தப்பு!!! .

Edited by Punkayooran

இந்தியாவில் அரசியல் தலைவர்களின் கொள்ளை ஊழல் லஞ்சம் போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் பாபா பரவாயில்லை. நாத்திகவாதி கருணாநிதியோடு ஒப்பிடுகையில் பாபா எவ்வளவோ மேலானவர். கருணாநிதி மக்கள் பணத்தை சுருட்டி குடும்பச்சொத்தாக்கினார் பாபா மக்களிடம் இருந்து பெற்ற நன்கொடைகளில் மக்களுக்காக பல சேவைகள் செய்துள்ளார். பாபாவின் வித்தைகளுக்கு மக்கள் மயங்கினார்கள் என்றால் பாபா பலமானவர் கடவுள் என்பதை விட மக்கள் பலவீனமாக இருக்கின்றார்கள் என்றே சொல்ல முடியும். பாபாக்கள் சாமியார்களின் தேவை இந்தச் சமூகத்துக்கு இருந்துகொண்டே இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை எனக்குத் தெரிந்த உறவு ஒன்று, பாபாவுக்கு மிகவும் நெருக்கமானது, பாபாவிடம் துணிவை வரவழைத்துக் கொண்டு கேட்டது,

" பாபா, இலங்கையில் எமது இனத்திற்கு எப்போது விமரிசனம் கிடைக்குமென்று?"

அதற்கு பாபா சொன்ன பதில் இது தான்.

நீங்களெல்லாம் திராவிடர்கள், உங்களுக்கு விமோசனமே கிடையாது என்று!இப்படிப் பட்டவரது மனது தூய்மையானது என்று எவ்வாறு கூற முடியும் என்று எனக்கு விளங்கவில்லை!!!

இணைப்புக்கு நன்றிகள் கந்தப்பு!!! .

புங்கையூரானுக்கு தெரிந்த உறவு, சரியான றீல் விட்டிருக்குது.

அதை.... புங்கையூரான் நம்பி.... உண்மைக் கதை என்று இங்கே பதிந்துள்ளார்.

பொய் சொன்னால்.... சாமி வந்து கண்ணை குத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பாபாவாக இருந்திருந்தால் டிக்கட் வரப்போகுது எண்டு தெரிஞ்ச உடனே உலக அமைதிக்காக சமாதியாவதை எண்ணிப்பார்க்கிறேன் என்று ஒரு அறிக்கை விட்டிருப்பேன்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சாய்பாபா மரணம் இயற்கை தான்: ஆந்திர அரசு

வியாழக்கிழமை, ஏப்ரல் 28, 2011, 12:57[iST]

ஹைதராபாத்: சாய்பாபாவின் மரணம் இயற்கையானது தான் என்று ஆந்திர அரசு விளக்கம் அளித்துள்ளது.

கடந்த மாதம் 28-ம் தேதி சாய்பாபா உடல் நலக்குறைவால் சத்யசாய் மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டார். அன்று முதல் அந்த மருத்துவமனையின் இயக்குனர் சபாயா தினமும் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் சாய்பாபாவின் உறுப்புகள் சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறது. ஆனால் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றே கூறினார்.

இதனால் சாய்பாபாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் சந்தேகம் அடைந்த தலித் ஜனசபை அமைப்பு தலைவர் கரம் சந்த் கடந்த 18-ம் தேதி ஆந்திர மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்தார். இந்த விஷயத்தில் மனித உரிமை ஆணையம் தலையிட்டு சாய்பாபாவுக்கு உரிய சிகிச்சை அளிக்க வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதை மனித உரிமை ஆணையத்தின் தற்காலிக தலைவர் பெத்தபெரிரெட்டி விசாரித்தார். அவர் இது குறித்து விளக்கம் கேட்டு மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதற்கு ஆந்திர அரசு சாய்பாபாவுக்குக நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக விளக்கம் அளித்தது. இந்நிலையில் சாய்பாபா கடந்த 24-ம் தேதி மரணம் அடைந்தார்.

இதையடுத்து மாநில மனித உரிமை ஆணையத்துக்கு சாய்பாபா மரணம் பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது பற்றி ஏராளமான புகார்கள் வருகின்றன அதனால் மாநில அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அது கேடடுக் கொண்டது.

இதற்கு ஆந்திர மாநில தலைமை செயலாளர் ரமேஷ் மனித உரிமை ஆணையத்தில் விளக்கம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

சாய்பாபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை மாநில அரசு அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். சாய்பாபாவின் மருத்துவ அறிக்கை முழுவதையும் நாங்கள் பார்த்து விசாரணை நடத்தினோம். அவரது சாவில் மர்மம் எதுவும் இல்லை. அவரது மரணம் இயற்கையானது தான். சில பக்தர்கள் சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்கள் மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளையே கூறி வருகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரானுக்கு தெரிந்த உறவு, சரியான றீல் விட்டிருக்குது.

அதை.... புங்கையூரான் நம்பி.... உண்மைக் கதை என்று இங்கே பதிந்துள்ளார்.

பொய் சொன்னால்.... சாமி வந்து கண்ணை குத்தும்.

தமிழ் சிறி, யாரையும் புண் படுத்தும் நோக்கத்தில் நான் இதை எழுதவில்லை.இது எனது நண்பரொருவரால் சில வருடங்களின் முன்பு சொல்லப் பட்டது.அதையே அப்படியே இங்கே பதிந்தேன்.

சாமி கண்ணைக் குத்துற விளையாட்டெல்லாம் செய்யாது. பழி வாங்காது! பலி தான் வாங்கும்!!

Edited by Punkayooran

  • கருத்துக்கள உறவுகள்

வியாழக்கிழமை, 28, ஏப்ரல் 2011 (18:3 IST)

பாபா இறப்பதற்கு முன்பே சவப்பெட்டிக்கு ஆர்டர் செய்யப்பட்டதா?

கோவையைச் சேர்ந்த குமார் அண்ட் கோ நிறுவனம், பெங்களூரில் உள்ள அந்நிறுவனத்தின் கிளையில் ராஜேந்திர ரெட்டி என்பவரால் ஏப்ரல் 4-ம் தேதி அந்த சவப்பெட்டி ஆர்டர் செய்து வாங்கப்பட்டது எனத் தெரிவித்திருந்தது.

ரூ 1 லட்சத்து 7 ஆயிரம் கொடுத்து அந்த சவப்பெட்டி வாங்கப்பட்டது என அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. மேலும் மறுநாள் அது புட்டபர்த்திக்கு கொண்டுசெல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து சாய்பாபா மறைவு தொடர்பாக சர்ச்சை எழுந்தது.

புட்டபர்த்தி சத்ய சாய்பாபா ஏப்ரல் 24-ம் தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டாலும், ஏப்ரல் 4-ம் தேதியே சவப்பெட்டிக்கு ஆர்டர் செய்யப்பட்டதாக வெளியான செய்திகளை அறக்கட்டளை நிர்வாகம் மறுத்துள்ளது.

பாபாவின் பக்தர் ஒருவர்தான் சவப்பெட்டிக்கு ஏற்பாடு செய்தார். அது பாபா மறைவுக்குப் பின்னரே பிரசாந்தி நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது என சாய் அறக்கட்டளை உறுப்பினர் வேணு சீனுவாசன் தெரிவித்தார்.

நாங்கள் எந்த சவப்பெட்டிக்கும் ஆர்டர் கொடுக்கவில்லை. பக்தர் ஒருவரால் அந்த சவப்பெட்டி அனுப்பப்பட்டது. பாபாவின் மறைவுக்குப் பின்னரே அது வந்தது என அவர் கூறினார்.

nakkheeran

  • கருத்துக்கள உறவுகள்

சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து தங்கம், பணம் லாரிகளில் கொண்டு போகப்பட்டதா?

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, 2011, 9:17

புட்டபர்த்தி: மருத்துமனையில் சாய்பாபா சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது ஆசிரமத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கமும், வெள்ளிக்கட்டிகளும், பணமும் லாரிகள் மூலம் கடத்தப்பட்டதாக கூறப்படுவதை சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்கள் மறுத்தனர்.

சத்ய சாய்பாபா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது ஆசிரமத்தில் இருந்து லாரிகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கமும், பணமும் கடத்தப்பட்டதாக பேசப்பட்டது.

இதுபற்றி சாய்பாபாவின் 'ஸ்ரீசத்ய சாய் சென்டிரஸ் டிரஸ்ட்' அறக்கட்டளையின் உறுப்பினர்கள் வேணு சீனிவாசன், பகவதி, நாகானந்த், சக்கரவர்த்தி, எஸ்.வி.கிரி, இந்துலால்ஷா மற்றும் சாய்பாபாவின் சகோதரர் மகன் ரத்னாகர் ஆகியோர் புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய் உள்விளையாட்டு அரங்கத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

அறக்கட்டளை சொத்துகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன. ஆசிரமத்தில் இருந்து தங்கமும், வெள்ளிக்கட்டிகளும், பணமும் கடத்தப்பட்டதாகவோ, ஆவணங்கள் மாயமானதாகவோ கூறப்படுவதில் உண்மை இல்லை. சிலர் வேண்டுமென்றே அறக்கட்டளை மீது திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாபாவுக்கு வங்கிக் கணக்கு கூட இல்லை

சொத்துகள் எதுவும் சாய்பாபா பெயரில் இல்லை. அறக்கட்டளை பெயரில்தான் உள்ளது. எனவே, பாபாவுக்கு உயில் எழுத வேண்டிய அவசியம் இல்லை. பாபா பெயரில் ஒரு வங்கிக்கணக்கு கூட இல்லை. அறக்கட்டளை சொத்துகளை விற்கவோ அல்லது வேறு யார் பெயருக்கும் மாற்றவோ யாருக்கும் அதிகாரம் இல்லை.

அறக்கட்டளை சேவைகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதிகளை கொண்டு நிர்வகிக்கப்படுகிறது. அறக்கட்டளை கணக்கு வழக்குகளெல்லாம் மிகச்சரியாக வருமானவரித்துறை நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் உள்ளன. டெல்லியில் உள்ள ஒரு பிரபல ஆடிட்டிங் நிறுவனம் அறக்கட்டளை கணக்கு வழக்குகளை சரிபார்க்கிறது.

ரூ 130 கோடி நன்கொடை:

கடந்த 4 ஆண்டுகளில் சத்யசாய் மெடிக்கல் டிரஸ்டுக்கு ரூ.130 கோடிவரை நன்கொடை பெறப்பட்டது. நன்கொடை தரும்படி அரசிடம் நாங்கள் கேட்டதில்லை. அறக்கட்டளை சொத்துகளை எல்லோரும் மிகைப்படுத்தி கூறுகிறார்கள். அந்த சொத்துகளை கொண்டு வியாபாரம் எதுவும் செய்வதில்லை. எனவே, அதன் சொத்துகளை மார்க்கெட் மதிப்பீடு செய்வது சரியில்லை. சொத்து எவ்வளவு என்று எங்களால் ïகிக்க முடியவில்லை.

சவப்பெட்டி ஆர்டர் செய்தது யார்?

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, பாபாவுக்கு எந்த மாதிரி மருத்துவம் அளிக்கப்பட்டது என்பது குறித்து அறக்கட்டளைக்கு எதுவும் தெரியாது. ஏனென்றால் அப்போது பாபா நலமுடன் இருந்தார். அவருக்கு தேவையான மருத்துவரை அவரே அழைத்துக் கொள்வார். அவர்களின் ஆலோசனைப்படி அவரே மருந்துகளை உபயோகித்து வந்தார். சிகிச்சை குறித்து அவர் யாரிடமும் தெரிவித்ததில்லை.

பாபா சிகிச்சை பெற்ற அறைக்குள் அவரது குடும்பத்தினர் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுவது தவறு. அவரது சகோதரர் மகன் ரத்னாகர், 27 நாட்களும் கூடவே இருந்தார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒருதடவை பாபாவை பார்த்தனர்.

சாய்பாபா இறப்பதற்கு முன்பே, அறக்கட்டளை சார்பில் யாரும் அவருக்கான சவப்பெட்டிக்கு 'ஆர்டர்' கொடுக்கவில்லை. பாபா மரணம் அடைந்த பிறகு, ஒரு பக்தர் 'பிரீசர் பாக்ஸ்' எனப்படும் சவப்பெட்டியை நன்கொடையாகக் கொடுத்தார்.

சத்யஜித் காரணம் அல்ல

செயற்கை சுவாச கருவியை அகற்றியதால்தான் பாபா மரணமடைந்தார் என்பது உண்மை அல்ல.

சத்யஜித் என்பவர், பாபாவுக்கு கஞ்சியில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து, அவரது ஆரோக்கியத்தை சீரழித்ததாக கூறப்படுவதிலும் உண்மை இல்லை. சத்யஜித், கர்நாடக மாநிலம் மங்களூரில் 1974-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் உமேஷ்-மோகினி ஆகியோர் பாபா மீது பக்தி கொண்டவர்கள்.

சத்யஜித்தின் இயற்பெயர் யதீஷ். அவர் மும்பையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். 1991-ம் ஆண்டு, புட்டபர்த்திக்கு வந்து, சாய்பாபா அறக்கட்டளை கல்லூரியில் பி.எஸ்சி., எம்.எஸ்சி., எம்.பி.ஏ. படிப்புகளை முடித்தார். எம்.பி.ஏ. பட்டமளிப்பு விழாவில் சாய்பாபா கையால் தங்கப்பதக்கம் பெற்றார்.

அப்போது, பாபா பற்றி 10 நிமிடங்கள் உரையாற்றினார். அதில் கவரப்பட்ட பாபா, அவரை அழைத்து, தனது ஆன்மிக பயணத்தில் இணையுமாறு கேட்டுக்கொண்டார். அதை யதீசும் ஏற்றுக்கொண்டு, பாபாவின் தனி உதவியாளர் ஆனார். அதன்பிறகு, அவரது பெயர் சத்யஜித் ஆக மாறியது.

காசோலை அதிகாரம்

முக்கிய பிரச்சினைகளில் சத்யஜித்தின் ஆலோசனையை பாபா கேட்பது வழக்கம். பாபாவுக்கு உடல்நிலை சரியில்லாவிட்டால், அவரை சத்யஜித்தான் கவனித்துக் கொள்வார். அவர் நன்றாக கவனிக்கவில்லை என்றால், அப்பணியில் இருந்து பாபாவே அவரை நீக்கி இருப்பார்.

பாபாவை தவிர, வேறு யாருக்கும் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் அளிக்கப்படவில்லை. கடந்த பிப்ரவரி மாத செலவுகளுக்கு கூட பாபா கைப்பட காசோலை வழங்கப்பட்டது. இனிமேல், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம், அறக்கட்டளை உறுப்பினர்கள் இரண்டு பேருக்கு அளிக்கப்படும்.

புதிய தலைவர் யார்?

அறக்கட்டளை மற்றும் நிர்வாக கவுன்சில் கூட்டம் அடுத்த வாரம் நடக்கிறது. அதில், அறக்கட்டளையின் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார். தனது வாரிசு என்று யாரையும் பாபா தனது மனதில் வைத்திருக்கவில்லை. அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒருவர்தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். வெளியாட்களை தேர்ந்தெடுக்க மாட்டோம். சத்யஜித், அறக்கட்டளையின் ஊழியர் மட்டுமே. அவரை அறக்கட்டளை உறுப்பினராக ஆக்கும் திட்டமும் இல்லை. பாபாவும் அப்படி சொல்லவில்லை.

மறுபிறவி எப்போது?

பாபா, அடுத்த பிறவியில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் 'பிரேம சாய்' ஆக பிறப்பேன் என்று ஏற்கனவே கூறி இருந்தார். ஆனால், எந்த தேதியில் மறுபிறவி நிகழும் என்று அவர் கூறவில்லை," என்றனர்.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

பாபா, அடுத்த பிறவியில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் 'பிரேம சாய்' ஆக பிறப்பேன் என்று ஏற்கனவே கூறி இருந்தார். ஆனால், எந்த தேதியில் மறுபிறவி நிகழும் என்று அவர் கூறவில்லை," என்றனர்.

"யாழ் சாய்" ஆக யாழ்ப்பாணத்தில் பிறப்பேன் என்று சொன்னவர் நான் அவரை புட்டபத்தியில் சந்தித்தபொழுது :D:wub:

  • கருத்துக்கள உறவுகள்

நான் பாபாவாக இருந்திருந்தால் டிக்கட் வரப்போகுது எண்டு தெரிஞ்ச உடனே உலக அமைதிக்காக சமாதியாவதை எண்ணிப்பார்க்கிறேன் என்று ஒரு அறிக்கை விட்டிருப்பேன்..! :rolleyes:

பாபா கடைசி வரைக்கும் தான் இறந்து போவேன் என நம்பி இருக்க மாட்டார்...இறப்பை வரவேற்க துணிந்தவர் என்டால் நான் சமாதியாகப் போறேன் என போய் இறந்திருப்பார் இப்படி வைத்தியசாலையில் படுத்து உயிரை விட்டு இருக்க மாட்டார் :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பாபா கடைசி வரைக்கும் தான் இறந்து போவேன் என நம்பி இருக்க மாட்டார்...இறப்பை வரவேற்க துணிந்தவர் என்டால் நான் சமாதியாகப் போறேன் என போய் இறந்திருப்பார் இப்படி வைத்தியசாலையில் படுத்து உயிரை விட்டு இருக்க மாட்டார் :lol: :lol:

[/quote

வினொபா என்ற ஒருத்தர் அப்படி சமாதி அடைந்தவர்,இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்தில் எனநினைக்கிறன் 1983 ஆம் ஆன்டளவில்

  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை, 2, மே 2011 (7:50 IST)

சாய்பாபாவுக்கு தங்க சிலை

சத்ய சாய்பாபாவின் உடல் புட்டபர்த்தி பிரசாந்தி ஆசிரமத்தில் உள்ள சாய் குல்வந்த் மண்டபத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது சமாதியில் சாய்பாபாவின் தங்க சிலையை நிறுவ வேண்டும் என்று அவரது பக்தரும் பிரபல கிரிக்கெட் வீரருமான சச்சின் தெண்டுல்கர் யோசனை தெரிவித்து இருந்தார்.

புட்டபர்த்தியில் நேற்று நடைபெற்ற சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் கூட்டத்தில் அவரது இந்த யோசனை கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நேற்றைய கூட்டத்தில் அறக்கட்டளைக்கான தலைவர், செயலாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்ட போதிலும் வேறு எந்த முக்கிய முடிவும் எடுக்கப்படவில்லை.

nakkheeran:

  • கருத்துக்கள உறவுகள்

சாய்பாபாவிற்கு எனது அஞ்சலிகள்..!

25-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சாய்பாபா என்றொரு மனிதர் இறந்துவிட்டார் என்று சொல்லத்தான் மனம் விரும்புகிறது..! ஆனால் பொது அறிவு "அப்படியானால் இத்தனை பேர் அவரை விரும்பியிருக்கிறார்களே..? எப்படி..? எதற்கு..? ஏன் அந்தப் பெருமையை நீ அவருக்குக் கொடுக்கக் கூடாது..?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறது..!

உலகத்தில் இருக்கும் மதங்களில் மிகச் சிக்கலானது இந்து மதம்தான்.. சாதி அடுக்குகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைத்து அதன் மேல் கட்டி வைக்கப்பட்ட மேடைதான் இந்து மதம் என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்..! எல்லாவிதமான உலகப் பார்வைகளுக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இந்து மதம்தான். அதனால்தான் அதனுள் இத்தனை வலிந்து திணிக்கப்பட்ட கதைகள் உள்ளன என்கிறார்கள் ஆதரவாளர்கள்..!

இந்த இரண்டையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலை சாதாரண பொது ஜனங்களுக்கு இல்லை..! தங்களுக்குத் தோல்வி என்றவுடன் கடவுளைத் தேடி ஓடுவதும், தோல்வியைத் தோற்கடித்தவுடன் மீண்டும் பழையபடி கடவுளை மறந்து தொலைத்துவிட்டு ஆடிப் பாடுவதும் இவர்களது வாடிக்கையாகிவிட்டது..!

சாய்பாபா என்னும் இந்த மனிதர் இத்தனை அற்புதங்கள் செய்தார் என்று வருடக்கணக்காகக் கேட்டு கேட்டு சலித்துப் போயிருந்த நிலையில், புதிய தொழில் நுட்பங்களின் கண்களுக்கு அவரது ஏமாற்று வேலைகள் கண்கூடாகத் தெரிந்து பரபரப்பாகிவிட்டது. இன்றளவும் இதைப் பற்றி மகான் சாய்பாபா எந்தவிதக் கருத்தையும் கூறாமலேயே போய்ச் சேர்ந்துவிட்டார்..!

உதவியாளர் கொடுக்கும் செயினை வாங்கி "ஜீ பூம் பா.. எல்லாரும் பார்த்துக்குங்க.. செயின் வர வைக்கிறேன் பாருங்க.." என்று சொல்லாமல் சொல்லி செயினை வரவழைத்து மோடி மஸ்தான் வேலையைக் காட்டிய சாய்பாபா எப்போது கடவுளின் அவதாரமானார் என்று தோண்டித் துருவித்தான் படிக்க வேண்டியுள்ளது..

இதேபோல் விரல் இடுக்கில் மாத்திரை வடிவத்தில் விபூதியை வைத்துக் கொண்டு கணப்பொழுதில் அதனை நசுக்கு தூளாக்கி கைகளை பரப்பி கீழேயும், மேலேயுமாக அசைத்து விபூதியை கொடுத்துதான் இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவையும் இவர் ஏமாற்றியிருக்கிறார் என்பதை இன்றைக்கு நினைக்கும்போது வருத்தமாகத்தான் உள்ளது. நல்லவேளை எம்.எஸ். அம்மா.. இதையெல்லாம் பார்ப்பதற்கு முன்பாகவே போய்ச் சேர்ந்துவிட்டார்..!

வாயில் இருந்து லிங்கம் எடுப்பது என்பது மனித வடிவில் இருப்பவரால் முடியாத விஷயம் என்று ஐ.ஏ.எஸ்., மருத்துவம், பொறியியல் படித்த மாமனிதர்களுக்குத் தெரியாததல்ல.. புரியாததல்ல.. ஆனாலும் எப்படி இதனை நம்பினார்கள்..? ஆச்சரியமாக இருக்கிறது..!

வாய்க்குள் லிங்கத்தை வைத்துக் கொண்டு ஏதோ திடீரென்று வயிற்றின் உள்ளேயிருந்து லிங்கம் வெளி வருவதைப் போல் ஆக்ஷன் காட்டி எடுத்துக் காட்டி புளகாங்கிதமடையும் மகான் சாய்பாபாவின் அந்த ஆக்ஷனை பார்த்தபோது சிரிப்புதான் வந்தது..!

கூடவே இன்னொரு முறை, கையில் வைத்திருந்த துண்டில் மறைத்து வைத்திருந்த லிங்கத்தை தன் வாயில் இருந்து விழுந்ததைப் போல பாவ்லா காட்டி கூட்டத்தினரை வசியப்படுத்துகிறார்.. கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள் பக்தர்கள்..!

இந்த லீலைகளை எல்லாம் கடந்த சில வருடங்களாகவே பாபா நிறுத்திக் கொண்டார் என்று அவருடைய பக்தர்கள் சொல்கிறார்கள். அதாவது இந்த பிராடுத்தனத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டிய பின்பு..!

ஆனாலும் ஏன் அவரைத் தேடி இவ்வளவு கூட்டம்..? என்ன காரணம்..? கும்பகோணத்தில் ஏதுமறியாத அப்பாவி குழந்தைகளை சாவுக்குக் கொடுத்துவிட்டபோதும் அந்த மக்கள் ஒன்றுமறியாமல் அதே ஊரில் குத்துக்கல்லாட்டம் அமர்ந்திருக்கும் பல சாமிகளைத் தேடி இப்போதும் சென்று வருகிறார்களே.. அதுவேதான் இதற்கும் காரணம்..!

நம்பிக்கை.. இந்த அசாத்திய நம்பிக்கையை நன்றியுணர்வு என்கிற ஒரு வார்த்தையையும் சேர்த்தே சொல்லலாம்..!

சாய்பாபாவை சந்தித்தவுடன், தான் அங்கு போய் வந்தவுடன் தனது பிரச்சினை தீர்ந்ததாக ஒருவர் சொன்னாலே போதாதா..? ஒரு தெருவே கிளம்பிவிட்டது.. இப்படி ஒருவருக்கொருவர் தங்களது சுய துக்கங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டபடியேதான் சாய்பாபாவை தரிசிக்கச் சென்றார்கள். பலருக்கும் பிரச்சினைகள் ஏதோ ஒரு வழியில் முடிந்திருக்கிறது.. சிலருக்கு முடியவில்லை..! முடிந்தவர்கள் தங்களது நன்றியை கரன்சியாக்கிக் கொட்டியிருக்கிறார்கள். முடியாதவர்கள் சாமி தங்களிடம் இன்னமும் நிறைய எதிர்பார்க்கிறதோ என்று நினைத்து வந்து கொட்டியிருக்கிறார்கள்..!

ஒரு நிழல் அரசாங்கத்தையே புட்டபர்த்தியில் நடத்தி வந்திருக்கிறார் சாய்பாபா. கி்ட்டத்தட்ட வாடிகனை போல..! ஆனாலும் அந்த ஊர் மக்களுக்கு வேண்டியதைச் செய்திருக்கிறார். அவர்களிடமிருந்து அவர் எதையும் பறிக்கவில்லை. தன்னிடம் சேர்ந்ததை பிரித்துக் கொடுத்திருக்கிறார்..!

அவரை நாடி வந்து கொடுத்தவர்களெல்லாம் திருடர்களோ, கொள்ளைக்காரர்களோ இல்லை.. அப்பாவிகள்தான்.. பணமிருந்தும் வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாத மனிதர்கள்தான்.. அவர்களுக்கு நல் வழி காட்டுகிறேன் என்று சொல்லித்தான் இந்த மோடி மஸ்தான் வேலையை சாய்பாபா செய்து வந்திருக்கிறார்..!

ஆக.. வந்திருக்கும், சேர்ந்திருக்கும் பணமெல்லாம் சட்டப்பூர்வமான பணம்தான்.. கொள்ளையடித்த பணமல்ல.. கொட்டு வந்து கொட்டியவர்களின் சாபம் பாபாவையோ, அவரால் அந்தப் பணத்தின் மூலம் பலன் பெற்றவர்களையோ சாராது..!

ஓஷோவை போல தனது ஆசிரமத்தை களியாட்டத்திற்கு உட்படுத்தாமல் இருந்தவகையிலும், நித்யானந்தா மற்றும் ஜெயேந்திரர், பிரேமானந்தா அளவுக்கு தரம் தாழ்ந்து போகாமலும் தனது எல்லைகளைச் சுருக்கிக் கொண்டு ஆன்மிகம் என்னும் ஒரு ஆயுதத்தை மக்களிடத்தில் ஆழமாக விதைத்துவிட்டுச் சென்ற ஒரு காரணத்திற்காக இவரை பாராட்டத்தான வேண்டும்..!

மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி.. பிரதமர்களோ, ஜனாதிபதிகளோ, துணை ஜனாதிபதிகளோ இங்கு வராதவர்களே இல்லை..! இவரை வணங்காதவர்களே இல்லை என்கிற அளவுக்கு அரசியல் பின்புலமும் அபரிமிதமாக இவரை வளர்த்து வைத்திருக்கிறது..!

தீவிரமான ஆத்திகக் கொள்கைகளை கொள்கையாக கொண்டிருக்கும் வீடுகளின் இல்லத்தரசிகள்கூட பாபாவின் அடிபணிந்த பக்தைகளாக மாறியதற்கு என்ன காரணம் என்று எதைத்தான் சொல்வீர்கள்..? இவர்களிடத்தில் இல்லாத பணமா? அதிகாரமா..? இவை இரண்டும் இருந்தாலே போதும்.. இதையும் தாண்டி இவர்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள். புரியவில்லை..!

இவரை நாடிச் சென்றவர்கள் சொல்லும் குறைகள் உடனுக்குடன் தீர்ந்தன என்றுதான் முதலில் சொன்னார்கள். எனக்குத் தெரிந்து அப்படி சொன்னவர்களில் பி.சுசீலாவும் ஒருவர். கடைசியாகச் சொன்னவரும் பாடகிதான். அவர் சித்ரா..!

ஒரு சமயத்தில் சுசீலாம்மாவின் குரலில் ஏற்பட்ட தடுமாற்றத்தை பாபாதான் தீர்த்து வைத்ததாக சுசீலாம்மா பேட்டியளித்திருந்தார். பாபாவின் முன்னிலையில் ஒரு கச்சேரியில் தான் பாடத் துவங்கியபோதே தனது பழைய குரல் மீண்டும் கிடைத்துவிட்டதாக புளகாங்கிதப்பட்டிருந்தார்..!

நிறுவனமயமாக்கப்பட்ட ஆன்மிகத் தலங்களில் புட்டபர்த்தி பிரகாசமானதற்கு ஒருவகையில் சுசீலாம்மா, எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றவர்களும் காரணம்..!

புட்டபர்த்தியில் சாய்பாபா முன்பு பாடாத கர்நாடக இசைப் பாடகிகளும், பாடகர்களும், வாத்தியக் கருவியை இசைக்கும் இசைக் கலைஞர்களும் யாருமில்லை என்று சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அனைவரையும் முறை வைத்து அழைத்துச் சென்று பாட வைத்தார்கள் ஆசிரமத்தினர்.

தாங்கள் விரும்பியவர்களே தெய்வமாக வணங்குகிறார்களே என்ற ஆர்வத்தில் மேலும், மேலும் சாய்பாபா தெய்வமாகிக் கொண்டே போனது இதனால்தான்..! அத்தனை பேருக்கும் சாய்பாபாவின் கருணை கிடைத்துவிடவில்லை..! ஆனால் நேரில் பார்க்க வேண்டிய கட்டாயத்தை ஊடகங்களும், அதில் தெரிந்த பி.ஆர்.ஓ. பிரபலங்களும் உண்டாக்கினார்கள்..!

வருடாவருடம் கொடைக்கானலுக்கு பாபா வரும்போது அங்கு செல்லும் கூட்டத்தை பார்க்க வேண்டுமே..! 4 நாட்கள் தொடர்ந்து நான் அங்கே இருந்தபோது பார்த்தேன்.. ஒரு சப்தம்.. ஒரு கூச்சல்.. இல்லை. அனைவரும் அமைதி காக்கிறார்கள். அவர் வருகிறார். பார்க்கிறார். நடக்கிறார். திரும்புகிறார். அனைவரும் கை கூப்புகிறார்கள். சிலரின் தலையில் கை வைக்கிறார். மீண்டும் வந்த வழியே திரும்புகிறார். மேடையில் இருக்கும் அரியாசனத்தில் அமர்கிறார். லேசாக திரும்பிப் பார்த்தவுடன் பஜனை கோஷ்டி தனது கோஷ்டி கானத்தை ஆரம்பித்தது.. அவ்வளவுதான்.. அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பாபா புராணம்தான்..!

இரண்டாவது நாளே எனக்கு போரடித்துவிட்டது..! என்னதான் செய்கிறார் இந்த சாமி என்கிற ஆர்வத்தில் உள்ளூர்காரர்களும் ஒட்டிக் கொண்டு எட்டி எட்டிப் பார்க்கிறார்கள். சுற்றுலா பயணிகளாக வந்தவர்களும் விழுந்தடித்துக் கொண்டு வந்து பார்க்கிறார்கள்.. அனைவரையும் முகத்தில் எந்த ரியாக்ஷனும் காட்டாத நிலையிலேயே பார்க்கிறார்..! அட.. சிறு குழந்தைகள் டாட்டா காட்டியும், அவரை நோக்கி பிஞ்சு கைகளைக் குவித்து வணக்கம் சொல்வதைக்கூட சாதாரணமாக எடுத்துக் கொண்டதை நினைத்து ரொம்பவே ஆச்சரியப்பட்டேன்..! மனுஷன் என்னமா இறுக்கமா இருக்காருய்யா என்று..!

மனிதன் தெய்வமாகலாம் என்பதை அவனுடைய குணத்தை வைத்துச் சொல்கிறார்கள். ஈகை, மன்னிப்பு, இரக்கம், அன்பு, பாசம், வருமுன் உரைப்பது... இவற்றையெல்லாம் செய்யும் மனிதர்களே தெய்வங்கள் என்கிறார்கள். ஏனெனில் இவைகளையெல்லாம் மனிதர்களிடத்தில் நீங்கள் காண முடியாது. ஆகவே இவர்கள் தெய்வங்கள் என்பார்கள்..!

இப்படித்தான் மனிதர்களை தெய்வங்களாக்கிய கதையில் ஷீரடி சாய்பாபா, காஞ்சி பெரியவர், பங்காரு அடிகளார், பகவான் ரமணர், அரவிந்தர், அன்னை, வள்ளலார் என்று நீண்ட பட்டியலில் பல கோடி மக்கள் பின்னிப் பிணைந்திருக்கிறார்கள்..!

இவர்களது நம்பிக்கையை நாம் குலைப்பதென்பது சாமான்யமானதல்ல..! அது முடியவும் முடியாது..! இவ்வளவு நடந்த பின்பும் நித்யானந்தாவைத் தேடியும் ஒரு கூட்டம் போகின்றது என்றால் மனிதர்களின் குணத்தை எத்தனை, எத்தனை விதமாக படைத்திருக்கிறார் இறைவன் என்று யோசிக்கத்தான் வேண்டியுள்ளது..!

1912-ல் சித்தியடைந்த ஷீரடி சாய்பாபாவின் வாரிசு நான்தான் என்று கூறித்தான் இந்த சாய்பாபா தனது ஆன்மிகத்தை துவக்கினார்.. இப்போது தனக்குப் பின்பு கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பிரேம்சாய் என்ற பெயரில் நானே அவதாரமெடுப்பேன் என்றும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் இந்த இரண்டாவது சாய்பாபா..! மூன்றாவது சாய்பாபாவின் வருகைக்காக நாமும் காத்திருப்போம்..

இவருடைய மரணத்தினால் அவரது பக்த கோடிகள் தங்களது ஒரேயொரு நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள்..! அவரது அறக்கட்டளையின் உதவியினால் வாழ்க்கை நலம் பெற்ற மக்கள் இப்போது கண்ணீர் விடுகிறார்கள்..! அவருடைய ஆசியினால் நல்வாழ்வு பெற்றவர்கள் இப்போது கதறுகிறார்கள்..! அனைத்துமே நம்பிக்கை மற்றும் அனுபவத்தினால் விளைந்தது..!

மனிதனாக பிறந்த அனைவருக்கும் மரணமுண்டு என்பதை உணர்ந்தால் இதுவும் புட்டபர்த்தியில் நேற்று நடந்த ஒரு மரணத்தில் ஒன்று என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்..! இதுவரையில் கடவுளாகவே கருதப்பட்டவர் இந்த நிமிடத்தில் இருந்து மனிதனாக்கப்பட்டு ப்ரீஸருக்குள் அடக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது சட்டென்று பல பக்தர்களால் ஏற்க முடியாமல்தான் உள்ளது..!

இது அத்தனையையும் ஒரே வார்த்தையில்.. முட்டாள்தனம் என்று சொல்லிவிட்டுப் போய்விட முடியாது. இவர்கள் யாரும் நம்மூர் முனியாண்டியையும், அய்யனாரையும் கும்பிடும் சாமான்யர்கள் இல்லை.. மெத்தப் படித்த மேதாவிகள்தான்..! சிந்தை கலங்கும் அளவுக்கு ஆன்மிகத்தை தமது மனதில் நிறுத்தி வைத்திருக்கும் இவர்களுக்கு, இவர்கள் விரும்பிய சாய்பாபாவின் அருள் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்..!

சாய்பாபா விட்டுச் சென்ற ஆன்மிக, சமூகப் பணிகளை அவரது அறக்கட்டளையினர் தொடர்ந்து செய்து வந்தார்களேயானால் அதுவே அவருக்கு பெருமை..!

சாய்பாபாவின் கோடிக்கணக்கான பக்த கோடிகளின் துக்கத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்..!

அவருடைய ஆன்மா சாந்தியாகட்டும்..!

http://truetamilans.blogspot.com/2011/04/blog-post_26.html

சாய் பாபாவின் சமாதி அருகே அவருடைய பளிங்கு கல் சிலை வைக்க முடிவு செய்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்..... :rolleyes::blink::rolleyes::rolleyes::wub::blink::blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.