Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர் அதிஸ்டசாலியா? அல்லது துரதிஸ்டசாலியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இளவரசர் வில்லியமுக்கும் கேட் மில்டனுக்கும் இன்று திருமணம் என அனைவருக்கும் தெரியும்...எனது கேள்வி என்ன என்டால் கேட் மில்டன் அதிஸ்டசாலியா? அல்லது துரதிஸ்டசாலியா? என்பது தான்

இளவரசரை மணம் முடிக்க போகிறார் பணம்,வசதி,செல்வாக்கு,புகழ் என்பன் அவருக்கு கிடைக்க போகிறது...மறுபக்கத்தை பார்த்தால் சுதந்திரம் பறி போகப் போகிறது[சாதரணமாய் திருமணம் முடித்தாலே சுதந்திரம் பறி போய் விடும் அது வேற விசயம்.]...இவர் இனி மேல் அரண்மனையில் அடைக்கப் பட்ட கூண்டுக்கிளி...எல்லோருடனும் பழக,பேச முடியாது...நினைத்த மாதிரி உடுத்த முடியாது.

இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?...உங்கள் கருத்தை பகிருங்கள்...நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் அரண்மனை வாயிற்காவலன், உதவியாளன் எனப் பலதும் இருக்கே..! :wub: நல்ல விசயங்களையும் கொஞ்சம் சீர்தூக்கிப் பாருங்கோ..!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் அரண்மனை வாயிற்காவலன், உதவியாளன் எனப் பலதும் இருக்கே..! :wub: நல்ல விசயங்களையும் கொஞ்சம் சீர்தூக்கிப் பாருங்கோ..!! :lol:

அதுதானே :D

இதில் எல்லாம் அவர் சுதந்திரத்தை இளக்க போவது இல்லை மாறாக ஊடகவியாளர்களின் இம்சை தான் இவருக்கு தலையிடியாக இருக்கும்.

முக்கியமாக இசைக்கலைஞன் போல ஒரு சிலராவது அரன்மனையில் வேலைசெய்வார்கள் என்பது நிச்சையம்.

நல்ல விசயங்களையும் கொஞ்சம் சீர்தூக்கிப் பாருங்கோ..!! :lol:

இப்படியெல்லாம் எல்லோரும் சீர்தூக்கிப் பார்த்துத்தானையா டயானாவும் அழிந்தார். :(

Edited by thappili

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்திலை இல்லாதபொல்லாத அந்தரங்ககூத்துக்களை செய்யிறதிலையே பெரிய கூட்டம் உதுகள்தான்.

உவையள் செய்யிற கூத்துக்களை ஆரும் கண்டால் துரதிஸ்டம்.ஒருத்தரும் காணாட்டில் அதிஸ்டம் :lol:

29 ஆம் திகதியில் தான் வில்லியமின் பெற்றோரான சார்ல்ஸ் & டயானா திருமணம் நடந்தது. தனது தாயின் மேல் உள்ள அன்பால்/ நினைவால் இந்தத் திகதியை தெரிவு செய்திருக்கக் கூடும். அத்துடன் சில சந்தர்ப்பங்களில் வில்லியமின் காலமான தாயாரின் பாதையை கேட் பின்பற்றுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

திருமண சத்தியப் பிரமாணத்தில் முதல் முதலில் டயானா தான் மாற்றங்கள் செய்தார். [கீழ்படிதல் என்ற சொல்லை அன்பு, மரியாதை, கெளரவமாக வைத்திருப்பேன் என்று மாற்றியமைத்திருந்தார்]அதே போலவே கேட்டும் தனது திருமண சத்தியபிரமாணத்தில் மாற்றங்களை செய்திருந்தார் என்பதும் அறிந்ததே.

[Kate 'will not obey': Bride will follow Diana's lead and ditch ancient vow as she pledges to 'love, comfort, honour and keep'

Read more: http://www.dailymail.co.uk/femail/article-1379453/Kate-Middleton-vows-Bride-obey-following-Princess-Dianas-lead.html#ixzz1Tn04t3b5]

கேட் பல்கலைக்கழகம் சென்று பட்டப்படிப்பை முடித்த அரச குடும்பத்து முதல் மணப் பெண் என்றும் கூறப் படுகிறது. அதனால் அரச குடும்பத்து நிலைமைகளை அறிந்து செயல்ப்பட வாய்ப்புகள் உள்ளது அதோடு, அவரின் திருமண ஆடையின் அமைப்பு முறையில் இருந்து அவர் அதிகம் ஆடம்பரத்தை விரும்பாதவர் என்றும் சிலர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

சார்ல்ஸ் & டயானா திருமணம்

http://www.youtube.com/watch?v=5lfGMoVMCLs

168.jpg

அதிஷ்டம் துரதிஷ்டம் என்று கூறுவதை விட பொறுத்திருந்து பார்த்தல் தெரியும்.

http://www.youtube.com/theroyalchannel

இளவரசர் வில்லியமுக்கும் கேட் மில்டனுக்கும் இன்று திருமணம் என அனைவருக்கும் தெரியும்...எனது கேள்வி என்ன என்டால் கேட் மில்டன் அதிஸ்டசாலியா? அல்லது துரதிஸ்டசாலியா? என்பது தான்

இளவரசரை மணம் முடிக்க போகிறார் பணம்,வசதி,செல்வாக்கு,புகழ் என்பன் அவருக்கு கிடைக்க போகிறது...மறுபக்கத்தை பார்த்தால் சுதந்திரம் பறி போகப் போகிறது[சாதரணமாய் திருமணம் முடித்தாலே சுதந்திரம் பறி போய் விடும் அது வேற விசயம்.]...இவர் இனி மேல் அரண்மனையில் அடைக்கப் பட்ட கூண்டுக்கிளி...எல்லோருடனும் பழக,பேச முடியாது...நினைத்த மாதிரி உடுத்த முடியாது.

இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?...உங்கள் கருத்தை பகிருங்கள்...நன்றி

என்ன ஒரு தலைப்பு ரதி. எம்மைப் பொறுத்தவரையில் இது ஒரு சம்பவம் தான். லண்டன் தமிழ் அன்ரிமாருக்கும் அங்கள்மாருக்கும் உது ஒரு சந்தோசமான இனிப்பான செய்தியாக இருக்கலாம்.சின்னக்குட்டியரும் தன்ர பங்கிற்கு உந்த நிகள்சியை வாங்கு வாங்கென்று வாங்கியிருக்கிறார்.

உண்மையில் இந்தப் படங்களை மீண்டும் பார்த்து நித்திரையை துலைச்சுப் போட்டு நிக்கிறம் ரதி. இந்தக் கலியாணம் எங்களை திரும்பி பாக்க வைக்கேல. பிழையா எழுதியிருந்தால் மன்னியுங்கோ ரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் அரண்மனை வாயிற்காவலன், உதவியாளன் எனப் பலதும் இருக்கே..! :wub: நல்ல விசயங்களையும் கொஞ்சம் சீர்தூக்கிப் பாருங்கோ..!! :lol:

எனக்கு விளங்குது என்னத்தை சொல்ல வாறீங்கள் என்டு :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அதிஸ்டசாலியா? அல்லது துரதிஸ்டசாலியா?

என்னைப்பொருத்தமட்டில் அது அதிர்ஸ்ட வாழ்க்கைதான்.

பிரச்சினைகள் அதிஸ்டங்கள் இவை ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் பார்ப்பதில்லை

அதனால் கேய்ட் அவர்களுக்கும் சாதாரண மனிதர்கள் போல் பிரச்சினைகள் வரலாம் அதை அவர்

தன்னிடம் இருக்கும் அந்த எளிமையான வாழ்க்கை முறையினால் வென்று கொண்டு போவார்

அவர்களின் கல்யாண பரிசுகளை கஸ்டப்படும் மனிதர்களுக்கு கொடுக்க முடிவு எடுத்திருக்கிறார்கள்

அது மட்டுமல்லாமல் அவர் தன் திருமண வைபவத்தின் போது வெறும் சம்பிருதாயத்திற்காக

கைகளை அசைக்கவில்லை...........அந்த மக்களை உள்ளாந்தமாக தன் மனதில் நிறுத்தி

அவர்களுக்கு தன் அன்பை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார்!! மிகவும் எளிமையான

பெண் அது மட்டுமல்லாமல் அனுபவம் நிறைந்த சாதாரண குடும்ப பெண் எனவே நாம் எல்லோரும் நல்லதையே

நினைத்து நன்றாக இருக்க வாழ்த்துவோம்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இவாக்கு அதிஸ்டமோ இல்லையோ.. பாவம்.. வரி செலுத்தும் மக்கள். இந்த வெட்டி பந்தாவை பிரிட்டன் மக்கள் நிராகரிக்க முன் வர வேண்டும்.

பழைய அரசாட்சி முறைகள் உலகெங்கும் முடிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் பிரிட்டனில் மட்டும் அதன் எச்சங்களை காவிக் கொண்டிருப்பதும்.. மக்கள் வரிப்பணத்தில் அவர்கள் சொகுசு காண்பதும்.. அநாவசியமான அறிவுபூர்வமற்ற ஒன்றாகவே விளங்குகிறது.

ஜனநாயக.. அறிவியல் உலகில் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வு இது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசைக்கலைஞன், on 29 April 2011 - 01:07 PM, said:

இனிமேல் அரண்மனை வாயிற்காவலன், உதவியாளன் எனப் பலதும் இருக்கே..! நல்ல விசயங்களையும் கொஞ்சம் சீர்தூக்கிப் பாருங்கோ..!!

எனக்கு விளங்குது என்னத்தை சொல்ல வாறீங்கள் என்டு :lol: :lol: :lol:

படுக்கிற விசயத்தைத்தானே............இதுகள் பக்கெண்டு விளங்கிடும் :lol: :lol: :lol:

என்னைப் பொறுத்தவரை வில்லியம்ஸ்தான் அதிர்ஸ்டசாலி என்று கூறுவேன். டயானாவுக்கு இருந்த பிரச்சனைகள் கேற்றுக்கு இருக்காது. காரணம், கேற் 29 வயதில் திருமணம் செய்கிறார். வில்லியம்சுக்கும் அதே வயதுதான். அதோடு, கேற் மேற்படிப்பு படித்தவர். தொழிலதிபராக இருக்கிறார். ஆகவே, அவருக்கு நிறைய அனுபவங்கள் உண்டு. பல வருடங்கள், இருவரும் நண்பர்களாகவும், காதலர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால், டயானா சார்ள்ஸைத் திருமணம் செய்தபோது, அவருக்கு 18 வயதுதான். இருவருக்கும் 13 வயது வித்தியாசம். அவர்கள் இருவரும் சந்தித்தபின்னர், குறுகிய காலத்திற்குள்ளேயே திருமணம் செய்து விட்டனர். டயானாவிற்கு மேற்படிப்போ வெளிஅனுபவங்களோ இருக்கவில்லை. அதுமட்டுமின்றி, சார்ள்ஸ் அதற்குப் பல வருடங்களுக்கு முன்பே கமீலாவுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர் உண்மையிலேயே மணக்க விரும்பியது கமீலாவைத்தான். ஆனால், அரச விதிகளின்படி அவர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மட்டுமே மணக்கமுடியும். அவர் கமீலாவை மணப்பதற்குத் தடை இருந்தது. அதனால்தான், அவர் டயானாவை மணந்தார். அரச கட்டுப்பாடுகள் பலவற்றை உடைத்தது டயானாதான். டயானாவின் மறைவுக்குப் பின்னர், பல அரச கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன்பின்னர்தான், சார்ள்ஸ் கமீலாவைத் திருமணம் செய்தார். டயானாவின் வாழ்க்கை அரச குடும்பத்திற்கு ஒரு பாடமாகவே அமைந்திருக்கிறது. அந்தப் பாடத்திலிருந்து அவர்கள் நிறையவே கற்று விட்டார்கள். முக்கியமாக, வில்லியம்ஸ், கேற் மற்றும் ஹாரி.

நெடுக்கால போனவரே!!! கொஞ்சம் ஓடுறதை நிப்பாட்டி போட்டு இதை கேளும்

அரச குடும்பம் மற்ரவனின்ட வரி சாசில உல்லாசமாய் எல்லாம் செய்யினம் எண்டுறீர்!!!

எங்கட ஆக்கள் என்னவாம் குறைஞ்சவையே கள்ள காட் அடிச்சும் அறா வட்டி வேண்டியும்

ஏமாத்தின சீட்டு காசிலும் 20 30 ஆயிரம் எண்டு செலவழிச்சு பொம்பிழை கழுத்தை

நிமித்த முடியாத அளவுக்கு நகை அலங்காரம் செய்து 25 விஸ்கி போத்லோட

கல்லாண வீடு செய்யினம்.....................எல்லே

கூட்டி கழிச்சுப் பாத்தால் எல்லாம் ஒண்டுதான்

அரச கல்லாணம் பிரமாண்டமாக இருந்தாலும் கல்லாண பெண் மிகவும் எளிமையாகவே இருந்தார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை வில்லியம்ஸ்தான் அதிர்ஸ்டசாலி என்று கூறுவேன். டயானாவுக்கு இருந்த பிரச்சனைகள் கேற்றுக்கு இருக்காது. காரணம், கேற் 29 வயதில் திருமணம் செய்கிறார். வில்லியம்சுக்கும் அதே வயதுதான். அதோடு, கேற் மேற்படிப்பு படித்தவர். தொழிலதிபராக இருக்கிறார். ஆகவே, அவருக்கு நிறைய அனுபவங்கள் உண்டு. பல வருடங்கள், இருவரும் நண்பர்களாகவும், காதலர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால், டயானா சார்ள்ஸைத் திருமணம் செய்தபோது, அவருக்கு 18 வயதுதான். இருவருக்கும் 13 வயது வித்தியாசம். அவர்கள் இருவரும் சந்தித்தபின்னர், குறுகிய காலத்திற்குள்ளேயே திருமணம் செய்து விட்டனர். டயானாவிற்கு மேற்படிப்போ வெளிஅனுபவங்களோ இருக்கவில்லை. அதுமட்டுமின்றி, சார்ள்ஸ் அதற்குப் பல வருடங்களுக்கு முன்பே கமீலாவுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர் உண்மையிலேயே மணக்க விரும்பியது கமீலாவைத்தான். ஆனால், அரச விதிகளின்படி அவர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மட்டுமே மணக்கமுடியும். அவர் கமீலாவை மணப்பதற்குத் தடை இருந்தது. அதனால்தான், அவர் டயானாவை மணந்தார். அரச கட்டுப்பாடுகள் பலவற்றை உடைத்தது டயானாதான். டயானாவின் மறைவுக்குப் பின்னர், பல அரச கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன்பின்னர்தான், சார்ள்ஸ் கமீலாவைத் திருமணம் செய்தார். டயானாவின் வாழ்க்கை அரச குடும்பத்திற்கு ஒரு பாடமாகவே அமைந்திருக்கிறது. அந்தப் பாடத்திலிருந்து அவர்கள் நிறையவே கற்று விட்டார்கள். முக்கியமாக, வில்லியம்ஸ், கேற் மற்றும் ஹாரி.

அநேகம் பேர் இதைத் தான் சொல்கிறார்கள்...பொறுத்திருந்து பார்ப்போம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.