Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரச குடும்ப திருமணம் -குதூகலத்தில் நம்மவர்கள்

Featured Replies

இன்று பிரிட்டனில் எல்லோரும் இந் நாட்டு மன்னர்கள் ஏனெனில் இன்று பொதுவிடுமுறை.பொதுவிடுமுறையின் காரணம் என்னவெனில் இன்று பிரிட்டன் அரச குடும்பத்தின் வாரிசுக்கு திருமணமாம்.இன்று நடைபெறும் இதே தேவாலயத்தில் தான் கொஞ்ச காலங்கள் முன்னதாக இந்த வாரிசு தாயாரின் உடலை வைத்திருத்த போது செய்வதறியமால் கண்ணீர் விட்ட காட்சி என் கண் முன் நிற்கிறது. பிரான்சில் கார் விபத்தில் தாய் இறந்ததாக கூறினாலும் ஏதோ சதியோ என் கேள்வி குறியாக இருந்தமை தான் காரணம்.இந்த அரச குடும்பத்தின் திருமணத்தை தங்கள் திருமணம் போல குதுகாலிக்கும் அரச குடும்ப விசுவாசிகளும் இதற்க்காக கோடிக்கணக்கான பணச் செலவு செய்வது வேறு காரணங்களுக்காகவும் எதிர்க்கும் ஒரு பகுதியினருமாக இத்திருமணத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வாரிசின் தாயார் தகப்பனாரும் திருமணத்துக்கு பின் முட்டி கொண்டு அதன் பின் நடந்த விபீரிதம் யாவரும் அறிந்ததே. இந்த வாரிசுவும் காதலியும் திருமணத்துக்கு முன்பே முட்டி மோதிய கதை கட்டுரைகள் பத்திரிகைகளில் படங்களுடன் வெளியாகி இருந்தன. இப்போழுது ஒருவாறு திருமணத்துடன் முடிந்து விட்டன வாழ்த்துக்கள் .இன்றைய மணமகள் சிறிது காலத்துக்கு முன்பு சாதாரண தரிப்பிட பரிசோதக தொழிலாளியுடன் முட்டி மோதிய கதைகளும் உண்டு.தரிப்பிட பரிசோதகரிடம் இன்றைய மணமகள் தான் இந்த நாட்டு முடி வாரிசின் காதலி நான் என சொன்ன் திமிரும் . நீ யாராய் இருந்தால் எனக்கென்ன என்னுடைய தொழில் இது. இந்தா உனது தண்ட பணத்துக்குரிய பற்றுச்சீட்டு சொன்ன அந்த தொழிலாளியின் தைரியுமும் இந்த சந்தர்பத்தில் ஞாபகத்துக்கு வருகிறது.

மூன்றாம் உலக நாடுகளில் உள்ள மக்கள் மட்டுமல்ல இந்த அறியாமையில் மூழ்கி இருப்பது ஏதோ வகையில் வளர்ந்திருக்கின்ற சொல்லப் படுகின்ற இந்த நாட்டிலும் இருக்கிறது. அரச குடும்ப திருமணத்தை தன் வீட்டு திருமணமாக பூரித்து ஒரு பொய்யான மகிழ்வில் மூழ்வதன் மூலம் தங்களிடமும் நிறைய அறியாமை இருக்கிறது என வெளிச்சம் காட்டி கொள்ளுகிறார்கள்.இவர்களுடன் இணைந்து கொள்ளுகிறார்கள் நம்மவர்களில் உள்ள வைற் கொலர்காரர்களும்..அவர்களின் குதுகாலிப்பே ஒரு தனி ரகம் ...அவர்களின் குதூகலிப்பை இணையத்தில் பார்த்தால் தெரியும் சந்தோசங்கள் மகிழ்ச்சிகள் பூரிப்புக்கள் கொட்டி குவிந்திருக்கிறது.

உலகம் முழுவதும் உலகத்தை ஒரு காலத்தில் ஆண்டு சுரண்டி களவெடுத்து கொழுத்து இன்று பல் விழுந்த கிழவி என்ற அடை மொழியோடு அழைப்படுகிறது இன்றைய பிரிட்டன் .கொழுத்து தினவு எடுத்த இந்த அரச பரம்பரை தனது திமிர் இன்னும் அடங்கவில்லை என அடிக்கடி இப்படியான வைபங்கள் நடக்கும் பொழுது காட்டி ஞாபக படுத்த முயற்சிக்கிறது . இந்த நாட்டில் அறியாமை மூழ்கி நிற்கும் சாதாரண மக்கள் மட்டுமல்ல. ஒரு காலத்தில் இந்த ஆண்டாருக்கு அடிமையாக இருந்து நல்ல சேவகன் என பெயர் எடுத்த நம்மவரும் இந்த குதூகலத்தில் மிகவும் முன் நிற்கிறார்கள் என்பது வருத்ததுக்குரிய செய்தி

இந்த அரச குடும்பத்துக்கு விசுவாசமாக காலம் காலமாக நம்மவர்கள் இருந்துள்ளார்கள். வரலாற்றில் பல கதைகள் உள்ளன.அவற்றில் ஒன்று ...அடங்காதமிழன் சுந்தரலிங்கம் என்ற ஒரு பழைய இலங்கை தமிழ் அரசியல்வாதி ஒருவர் இருந்தவர்.இது என்ன அடங்காதமிழன் என்றதுக்கு பின்னர் சொல்லுகிறேன். இந்த சுந்தரலிங்கம் இன்றைய பிரிட்டிஸ் மகாரணிக்கு கணித பாடம் சொல்லி கொடுத்தவராம் .இதனால் பிரிட்டிஸ் மகாராணி இலங்கைக்கு ஒரு முறை விஜயம் செய்த பொழுது தனது அரச குல திமிருடன் எல்லாருக்கும் தனது கையுறையுடன் கை குலுக்க ..இவருக்கும் மட்டும் தனது கை உறையை கழட்டிய பின்னர் கை கொடுத்தாவாம் ,,,இந்த பெருமையை தங்களுக்கே தந்ததாக பெருமை கொள்ளும் நம்மவர்கள் காலம் காலமாக சொல்லி மகிழ்ந்து தங்களையும் தங்கள் உரிமைகளையும் இழந்தார்கள்.

இந்த சுந்தரலிங்கம் மாவிட்டபுரக் கோவில் ஆலய பிரவேசத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்களில் ஒருவர்.இந்த பிரவேச பிரச்சனையில் தனக்கு எதிரான பாதகமான நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அரச குடும்பத்தின் செல்வாக்கை பாவிக்க முனைந்தவர் என்ற தகவல் உண்டு .

இந்த so call நன்கு படித்த அரசியல்வாதி என்று சொல்லப்படும் இந்த சுந்தரலிங்கத்தை ஏன் அடங்காதமிழன் என்று அழைத்தார்கள் என்பதை இப்போழுது சொல்லி விடுகிறேன் .இலங்கை பாரளுமன்றத்தில் சபாநாயகர் இவரை வெளியேற்றிய பொழது வெளியேற மறுத்து இருந்தார் ,அவரை பாரளுமன்ற காவலர்கள் கதிரையுடன் தூக்கி கொண்டு போய் வெளியில் வைத்தார்களாம்.அத்துடன் அந்த காலம் மனோவசிய கலைகளான ஹிப்னாடிசியம் மெஸ்மரிசம் போன்றவற்றை தெரியாத காலம் ஆனால் இவர் கற்று தேர்ந்து இருக்கிறார் .அதன் உதவியுடன் பாரளுமன்றத்தில் சபாநாயகருடன் நடந்த கருத்து மோதலின் போது தனது கடைசி அஸ்திரமாக தனக்கு தெரிந்த மெஸ்மரிச கலையை பாவித்து இருந்தார் .அதனால் சபாநாயகர் மயங்கி விழுந்திருக்கிறார் ..அதனாலும் இவரின் பெருமை ஓங்கி இருக்கிறது

அன்று தொடங்கிய நம்மவர்களின் பிரிட்டிஸ் அரச விசுவாசம் இன்றும் தொடருகிறது .அந்த விசுவாசம் இருப்பதில் பெருமை கொள்ளுகிறார்கள் ,அந்த பெருமைக்குரிய ஆண்டைக்கு நல்ல பெருமைக்குரிய அடிமையாக இருப்பதில் பெருமை கொள்ளுகிறார்கள் .பக்கிகாங் அரண்மனை யன்னல் கதவடியில் இந்த புதிய அரச வம்ச திருமண ஜோடி வழங்கும் பகிரங்க திருமண முத்தத்தை காண வெளியில் திரண்டு காத்திருக்கும் இந்த முட்டாள் மக்கள் கூட்டத்துடன் இவர்களும் காத்து இருக்கிறார்கள் ,அந்த முத்தத்தை கண்ட தரிசனத்தில் சந்தோசத்த்தில் தாங்கள் கொடுத்த சொந்த முத்தங்களை கூட மறந்தே போயிருப்பார்கள்.

பூரிப்பில் திகழும் இந்த பெருமைக்குரிய அரச குடும்ப விசுவாசிகளை வாழ்த்துவதோடு இந்த புதிய திருமண தம்பதிகளை எனது பங்குக்கு வாழ்த்துகிறேன் ,

http://sinnakuddy.blogspot.com/2011/04/blog-post_29.html

Edited by sinnakuddy

நல்ல அலசல். அடங்கா தமிழன் சுந்தரலிங்கத்தின் கிப்னாட்டிஸ விழையாட்டை இன்றுதான் கேள்விப்படுகின்றேன்.

உலகம் முழுவதும் உலகத்தை ஒரு காலத்தில் ஆண்டு சுரண்டி களவெடுத்து கொழுத்து இன்று பல் விழுந்த கிழவி என்ற அடை மொழியோடு அழைப்படுகிறது இன்றைய பிரிட்டன் .கொழுத்து தினவு எடுத்த இந்த அரச பரம்பரை தனது திமிர் இன்னும் அடங்கவில்லை என அடிக்கடி இப்படியான வைபங்கள் நடக்கும் பொழுது காட்டி ஞாபக படுத்த முயற்சிக்கிறது . இந்த நாட்டில் அறியாமை மூழ்கி நிற்கும் சாதாரண மக்கள் மட்டுமல்ல. ஒரு காலத்தில் இந்த ஆண்டாருக்கு அடிமையாக இருந்து நல்ல சேவகன் என பெயர் எடுத்த நம்மவரும் இந்த குதூகலத்தில் மிகவும் முன் நிற்கிறார்கள் என்பது வருத்ததுக்குரிய செய்தி
  • கருத்துக்கள உறவுகள்

.

எலிசபெத் மகாராணியின்ரை வயசுக்கும்,

அடங்கா தமிழர் சுந்தரலிங்கம் வயசுக்கும்.....

ஒப்பிட்டு பாக்கேக்கை..... மகாராணி கிண்டர் கார்டனிலை தான்.... எழுத்துக் கூட்டி படிச்சிருக்கோணும்.

  • கருத்துக்கள உறவுகள்

.

எலிசபெத் மகாராணியின்ரை வயசுக்கும்,

அடங்கா தமிழர் சுந்தரலிங்கம் வயசுக்கும்.....

ஒப்பிட்டு பாக்கேக்கை..... மகாராணி கிண்டர் கார்டனிலை தான்.... எழுத்துக் கூட்டி படிச்சிருக்கோணும்.

எலிசபெத் மகாராணிக்குக் 'கணிதவியல்' படிபித்தார் என்பது உண்மை தான். நீங்கள் நினைப்பது போல மகாராணியார் இளமை ஆனவர் அல்ல.

இவரிடம் கணிதம் படித்தபடியால் தான், மகாராணியார் கடன், மற்றும் லஞ்சம் ஆகியவற்றில் ஈடுபடாமல் இருக்கும் ஒரு அரச குடும்ப உறுப்பினராக உள்ளார்.

இவரது சொத்துக்களின் பெறுமதி, கணக்கிட முடியாதது! இன்றும் வளர்ந்து கொண்டு இருக்கின்றது!!!

  • கருத்துக்கள உறவுகள்

இங்க சிட்னியில சனம் கண்விழித்திருந்து அந்த முத்தத்தை பார்த்தார்கள்.நாங்களும் முத்தம் கொடுக்கிறோம் கண்டு கொள்கிறாள் இல்லை அந்த முத்தத்தை பார்க்க வேணும் என்று அடம் பிடிச்சு பார்த்தாள் ....

அது மணபெண்ணின் தங்கையைப்பற்றியும் பத்திரிகை காரன் புளுகிறான்....

நன்றிகள் சின்னக்குட்டி

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்படி எழுதுகிறீர்கள் ஆனால் கறுப்பர்களோ அல்லது ஆசியர்களோ இந்த முறை அரச திருமணத்தை பெரிதாக கொண்டாடவுமில்லை,வரவேற்கவில்லை என அவர்கள் குறை பட்டுக் கொண்டார்கள் <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது மணபெண்ணின் தங்கையைப்பற்றியும் பத்திரிகை காரன் புளுகிறான்....

அதுசரி தாய்க்காரியைப்பத்தி ஒரு நியூசையும் காணேல்லை :(mydarling.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் உங்கள் கதைக்கு. அடங்காதமிழன் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அது மணபெண்ணின் தங்கையைப்பற்றியும் பத்திரிகை காரன் புளுகிறான்....

நன்றிகள் சின்னக்குட்டி

pippamiddleton.jpg

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

http://sinnakuddy1.blogspot.com/2011/05/blog-post_13.html இதையும் ஒருக்கால் பாருங்கோ :lol: :lol:

முதலாவது வீடியோ சூப்பர் :lol:

சின்னக்குட்டியார்,

எங்களுக்கு இந்த அரச திருமணம் பிடிக்க இல்லையென்றால், இந்த நாட்டில் இருந்து குப்பை கொட்டத் தேவையில்லை. இப்ப நாட்டிலையும் பிரச்சனைகள் முடிந்து விட்டன. அங்கேயே போய் வாழலாம்தானே? என் இந்தக் குளிருக்குள் பாட்டா, பாட்டி, பேரன், பேத்தி களுடன் இருந்து கஷ்டப்படுவான்? போராட்டத்தை காட்டி அகதியாய், மாணவனாய் வந்து இருங்கள் என்று எலிசபெத் கூப்பிட்டாரா?

சின்னக்குட்டியார்,

எங்களுக்கு இந்த அரச திருமணம் பிடிக்க இல்லையென்றால், இந்த நாட்டில் இருந்து குப்பை கொட்டத் தேவையில்லை. இப்ப நாட்டிலையும் பிரச்சனைகள் முடிந்து விட்டன. அங்கேயே போய் வாழலாம்தானே? என் இந்தக் குளிருக்குள் பாட்டா, பாட்டி, பேரன், பேத்தி களுடன் இருந்து கஷ்டப்படுவான்? போராட்டத்தை காட்டி

அவருடைய அரச பரம்பரையையும் அந்த காலம் இலங்கை இந்தியா பக்கம் வந்து சுருட்டிகொண்டு போக சொல்லி சின்னக்குட்டியர் கேட்டவரே இல்லை தானே...சின்னக்குட்டியருக்கு சிலவேளை யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கொள்கையோ ... தெரியாது சார் :lol:

Edited by matharasi

[q-------------------------------------------------------------------------

Edited by matharasi

அவருடைய அரச பரம்பரையையும் அந்த காலம் இலங்கை இந்தியா பக்கம் வந்து சுருட்டிகொண்டு போக சொல்லி சின்னக்குட்டியர் கேட்டவரே இல்லை தானே...சின்னக்குட்டியருக்கு சிலவேளை யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கொள்கையோ ... தெரியாது சார் :lol:

இதற்கு முன் அங்கு வந்து சுருட்டிய ஒல்லாந்தனிடமும் போர்த்துக்கீசியநிடமும் இருந்து சுருட்டுவதற்கு ஒன்றுமே இல்லை, அதைவிட பிள்ளைகளின் எதிர்காலத்திற்குரிய மொழியுமில்லை......

ஆகட்டும். ஆகட்டும்.

பலே கில்லாடி சார் நீங்கள். :lol:

Edited by thappili

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் சன் தொலைக்காட்சி நாடகங்கள் பார்த்து அழுது கொண்டிருக்கும் பலசுகள், பெண்கள் எல்லாம் அன்று தான் சன் தொலைக்காட்சி பார்க்கவில்லை. சிலர் எனக்கு தொலைபேசியில் எடுத்து கல்யாண வீடு பார்க்கவில்லையா என்ற இம்சைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அன்று தான் பலவீடுகளில் மனிசிமாரின் திட்டுக்கள் வாங்காமல் கணவர்மார் தப்பிப்பிழைத்தும் இருந்தார்கள். ஏனென்றால் மனிசிமார் தொலைக்காட்சியில் கல்யாணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். GTVயில் செய்திகள் பார்க்கும் போது 'வேலை வெட்டி இல்லாமல் தொலைக்காட்சி பார்க்கீற்ர்களே' என்று கத்திய மனைவிமார்கள் அன்று அரசகுடும்பத்து திருமணத்தினைக் கண்டு இரசித்தார்கள்.

சிட்னியில் சன் தொலைக்காட்சி நாடகங்கள் பார்த்து அழுது கொண்டிருக்கும் பலசுகள், பெண்கள் எல்லாம் அன்று தான் சன் தொலைக்காட்சி பார்க்கவில்லை. சிலர் எனக்கு தொலைபேசியில் எடுத்து கல்யாண வீடு பார்க்கவில்லையா என்ற இம்சைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அன்று தான் பலவீடுகளில் மனிசிமாரின் திட்டுக்கள் வாங்காமல் கணவர்மார் தப்பிப்பிழைத்தும் இருந்தார்கள். ஏனென்றால் மனிசிமார் தொலைக்காட்சியில் கல்யாணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். GTVயில் செய்திகள் பார்க்கும் போது 'வேலை வெட்டி இல்லாமல் தொலைக்காட்சி பார்க்கீற்ர்களே' என்று கத்திய மனைவிமார்கள் அன்று அரசகுடும்பத்து திருமணத்தினைக் கண்டு இரசித்தார்கள்.

சண் டிவி பார்த்து அழுவதை விட இது எவ்வளவோ மேல் என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

சண் டிவி பார்த்து அழுவதை விட இது எவ்வளவோ மேல் என்பது என் கருத்து.

நீங்கள் சொன்னது சரி தான். என்று இந்த சன் தொலைக்காட்சி இம்சைகள் சிட்னியை விட்டுப் போகுமோ , அன்று தான் பலருக்கு விமோசனம் கிடைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.