Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விதியை மதியால் வெல்லலாமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"விதியை மதியால் வெல்லலாம்" என சொல்கிறார்கள் இதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? நீங்கள் யாராவது விதியை மதியால் வென்றிருக்கிறீர்களா?

  • Replies 56
  • Views 6.7k
  • Created
  • Last Reply

விதி - சும்மா இருந்து கொண்டு இதுதான் எனக்கு அமைத்தது என்று இருத்தல்.

விதியை மதியால் வெல்வது என்பது - முயற்சி, மனம் தளராத கடின உழைப்பு, காலத்தை எதிர்வு கூர்ந்து அதற்கேற்ப முன்னாடியே செயல்படுதல். இவை இருந்தாலே வெல்லலாம்.

இயற்கை அழிவுகளோ அல்லது பொது விபத்துக்களோ (விமான, புகையிரத ........) எங்கள் கையில் இல்லை.

என்னைப் பொறுத்தவரை விதி என்றெல்லாம் ஒன்றும் இல்லை. அப்படி ஒன்று இருந்தால், நாங்கள் பேசாமல் படுத்து இருந்தாலே எல்லாம் விதிப்படி நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

விதி..

தோல்விகள் நிகழும்போது அவற்றுக்கான காரணங்களை ஆராயாமல் வெறும் சப்பைக்கட்டு கட்டுவதற்கென்றே உருவாக்கப்பட்ட ஒரு சொல்..! :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விதி என்பதே உங்களைப் பொறுத்த வரை பொய் என்டால் ரதிக்கு இன்ன நாள்,இத்தனை மணிக்கு மரணம் வரும் என இருந்தால் அதை வராமல் புத்தியால் தடுக்கலாமோ? இங்கு மரணம் என்பது ஒரு உதாரணம் மாத்திரமே.

இப்படி நீங்கள் எதாவதை புத்தியால் வென்று இருக்கிறீர்களா?

அப்படி இல்லை ஒருவர் பிறக்கும் போதே இப்படித் தான் நடக்கும் என கடவுள் எழுதி வைத்தால் அதன் படி தான் நடக்கும் என்டால் பிறகு எதற்கு கடவுளை கும்பிடுவான்?

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன வயசில் சாத்திரம் பார்க்கேக்குள்ள எனக்கு கன பொம்பிளையள் எண்டு பெரிசுகள் சொல்லிச்சிதுகள்..! :( இண்டைவரைக்கும் என்ர கற்பை கவனமா காப்பாத்திக்கொண்டு வாறன்..! :unsure: இது விதியை மதியால் வெண்டது இல்லையா? :wub:

டிஸ்கி: ஒன்லைனில் சள்ளடிக்கிறதை வச்சு தப்புக்கணக்குப் போடக்கூடாது.. சொல்லிட்டன்..!

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

விதி என்று ஏதும் இல்லை வேதங்கள் வாழ்க்கை இல்லை

சின்ன வயசில் சாத்திரம் பார்க்கேக்குள்ள எனக்கு கன பொம்பிளையள் எண்டு பெரிசுகள் சொல்லிச்சிதுகள்..! :( இண்டைவரைக்கும் என்ர கற்பை கவனமா காப்பாத்திக்கொண்டு வாறன்..! :unsure: இது விதியை மதியால் வெண்டது இல்லையா? :wub:

நீங்கள் வேற கொதியை கிளப்பிட்டு. :(

எனக்கும் சின்ன வயதில் சாத்திரம் பார்க்கும் பொழுது, எனது சாத்திரப்படி 'நான் பெண்டுகள் முருகன்' (அதாவது நிறையப் பெண்கள் எனக்குப் பின்னால் அலைவார்கள் அதைவிட நிறைய பெண் துணை வைத்திருப்பார்கள்) என்று கூறினார். சாத்திரியாரின் எதிர்வுகூறலை அம்மாவின் மடியில் இருந்து கேட்ட இந்த சிறு வயது தப்பிலி சற்று கிளர்ச்சியடைந்து, எதிர்கால கனவுகளில் மூழ்கிப் போனது இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது. :rolleyes:

உண்மையில் நடந்தது என்னவென்றால், பருவ வயதில் ஒருத்தியும் என்னை திரும்பிப் பார்த்ததேயில்லை. பார்த்தவர்களும் ஏதோ தெருவில் மரக்கறி விற்கும் வியாபாரியப் பார்ப்பது போலவே என்னை லுக் விட்டார்கள். :(

Edited by thappili

எனக்கும் இதே நிலைதான். இன்னும் அகப்படவில்லை. :wub::wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இதே நிலைதான். இன்னும் அகப்படவில்லை. :wub::wub::wub:

தப்பிலி.. :unsure:

^_^:lol:

  • கருத்துக்கள உறவுகள்

எமது வாழ்வில் பலவற்றை புத்தியால் தானே வெல்கிறோம்.இது மனிதர்களுக்கு மனிதர் வேறுபடும்.ஐன்ஸ்ரைன் பலவற்றைக் கண்டு பிடித்தார் என்றால் அவரது அறிவை(மூளையை) பாவித்துள்ளார் என்று அர்த்தம்.

சிலர் தமது அடம்பிடிப்பாலும்(stubborn), முயற்சிக்காமல்(lazyness) இருப்பதாலும் அடையவேண்டிய இலக்கை அடையமுடியாமல் விதி என்று நொந்து கொள்கிறார்கள்.

நோயால் வாடிய எத்தனை பேரை வைத்தியர்கள் அவர்கள் குறிப்பிட்ட நாளில் இறந்து விடுவார் என்று கூறி நடந்தும் உள்ளது.ஒருவரின் இறக்கும் நாளை அறியும் நாளும் விரைவில் வரும்.

"விதியை மதியால் வெல்லலாம்" என சொல்கிறார்கள் இதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? நீங்கள் யாராவது விதியை மதியால் வென்றிருக்கிறீர்களா?

'தெய்வத்தால் ஆகாதது எனினும் முயற்சி தன்

மெய் வருத்தக் கூலி தரும்'

ஒரு குழந்தை தான் எழும்பி முதலடியை வைக்கும் போது பாதங்களில் பலம் இல்லாமல்/ பயிற்ச்சி இல்லாமல் தவறி விழுவதைப் பார்த்திருப்போம், அதற்காக அந்தக் குழந்தை திரும்ப எழும்ப முயற்சிக்காமலா இருக்குது? இல்லையே தானே பல தடவைகள் விழுந்தாலும் எதையாவது தனக்கு பக்க பலமாக பிடித்துக் கொண்டு எழும்பத்தானே பார்க்குது... அப்படித்தான் நாமும். நாம் குழந்தைகளாக இருக்கும் போது எமக்கு அவை ஞாபகம் இருப்பதில்லை. வளர்ந்த பின்பு வரும் தடங்கல்களுக்குரிய காரணங்களை அறிய முன்பு 'அது விதி அப்படி' என்று புலம்புவது எங்கட சமூகத்தில நிறைஞ்சு இருக்கு...

வாழ்கையில் எல்லா வழிகளும் எல்லாருக்கும் வெளிப்படையாகத் தெரிய சாத்தியம் இல்லை. ஒரு வழியால் போய் பார்க்கத் தொடங்கினால் தான் அந்த வழியில் எல்லையை நாம் அடைய முடியும், எல்லையை நாம் அடையும் முன்பு பல தடங்கல்கள் வரலாம், அதை எப்படி எமக்கு சாதகமாக பயன் படுத்த வேண்டும் என்று யோசித்து செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

இந்த நாட்டிற்கு பாசை தெரியாமல்/ ஓரளவு தெரிந்ததோடு வந்து பலர் தமக்கிருக்கும் ஏதோ ஒரு திறமையை வைத்து வாழ்கையில் முன்னேற இல்லையா? (குறுக்கு வழிகளை நான் இங்கே கூறவில்லை)

'எல்லாம் விதி' என்று நினைச்சு பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த இடத்திலையே நீங்கள் இருந்திருந்தால், இப்ப இருக்கும் இடத்திற்கு வந்திருக்க முடியுமா? ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.

பிறக்கும் ஒவ்வொருத்தருக்கும் இறப்பு என்று ஒன்று இருப்பது நிச்சயம், அதை தடுக்க முடியாது, எம் உறவு ஒன்று மரணப் படுக்கையில் இருந்தால் அதைக் காப்பாற்ற கடவுளிடம் மன்றாடுகிறோமே, அதுவும் ஒரு முயற்சி தான்!

தன்மைபிக்கை, விடா முயற்சி, உறவினர், நண்பர்களின் ஆதரவு இருப்பின் வாழ்க்கை வெற்றி பெறும்!! :)

Edited by குட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இரு திருமணம் என முந்திப் பல சாஸ்திரிமார் சொன்னவை :wub:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இரு திருமணம் என முந்திப் பல சாஸ்திரிமார் சொன்னவை :wub:

ஓ அதுவே விதி.அதனை மதியால் வென்று விட்டீர்கள் போல!!! :):)

விதியை மதியால் வெல்லலாமா?, அறிவுதான் கடவுள்.

கடவுள்,

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே எதை எதை எல்லாம் பார்த்து பயந்தானோ அவற்றை எல்லாம் வணங்கி வந்தான் இந்த வணக்கமுறை பல மாற்றங்களுக்கு பின்பு மதங்கள் என உருவாகியது அன்றில் இருந்து இன்றுவரை கடவுள் இருக்கு என்று சொல்லுபவர்களும் சரி இல்லை என்று சொல்பவர்களும் சரி இத்தனை நூற்றாண்டாக எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை காரணம் பல அழிவுகளையும், பல பிரச்சனைகளையும் மனிதன் சந்திக்கும் பொது மதங்கள் சொல்வது போல கடவுள் அவதாரம் எடுப்பார் எடுப்பார் என்று சொல்லி சொல்லியே காலம் போனதுதான் கடவுள் அவதாரம் வரவில்லை அவர்கள் பெயரை சொல்லி பிரேமானந்தா, நித்தியானந்தா அதேநேரம் இந்த பிறப்பு ,இறப்பு மனிதனால் தடுக்கவும் முடியவில்லை இப்படியான பல விடயங்களுக்கு இன்னும் அறிவியலால் விளக்கம் சொல்லமுடியாத பட்சத்தில் கடவுள் இல்லை என்று சொல்பவர்களும்,இருக்கு என்று சொல்பவர்களும் பலவினமானவர்களாகவே இருக்கிறார்கள் ......நிற்க

இந்த உலக வாழ்கையில் கடவுளின் ஆதிக்கம் இருக்க இல்லையா என்று கேட்டால் இல்லை(நேரடியாக இத்தனை நூற்றாண்டை எந்த உதவியாவது யாருக்காகவும் கடவுள் செய்தார் என்பதுக்கு எந்த சம்பவமும் இல்லை ) ......... ஆனால் இந்த விதி என்றால் என்ன? மனித வாழ்வில் என்ன என்ன சம்பவங்கள் நடக்கவேண்டும் என்று எல்லா விடயங்களும் ஏற்கனேவே எழுதி வைக்கப்பட்டு விட்டது என்பதா? கண்டிப்பாக இருக்க முடியாது , எல்லாவற்றையும் எங்களை கடவுள் என்ற ஒருவன் செய்ய வேண்டும் என்று விதி வடிவில் எழுதி வைத்துவிட்டு பாவ புண்ணிய கணக்கு எப்படி போடா முடியும்??? இல்லை போனஜென்ம பலனின் படி என்று நீங்கள் விளக்கம் சொல்லலாம் அப்படியானால் முதல் பிறவி என்றால் அவர்களுக்கு விதி என்று ஒன்று இல்லையா? அவர்களுக்கு முதல் ஜென்மம் இல்லையே? அப்படியானால் அவர்களுக்கு விதி எது?

அப்படியானால் இந்த விதியை மதியால் வெல்வது என்பது என்ன?

என்னை பொறுத்தவரையில் இந்த விதி என்பது கோட்பாடுகள் அதாவது சூரியனை பூமி சுற்றுகிறது (சூரியனின் ஈர்ப்பு) ,பூமியை சந்திரன் சுற்றுகிறது(புவி ஈர்ப்பு) இவை இயற்கை கோட்பாடுகள் இதில் இந்த புவி ஈர்ப்பு என்பதை எடுத்துகொள்வோம், ஒரு கல்லை மேலே போட்டால் அது கிழே விழும் இது விதி அதாவது அந்த கல்லு விழும் இடத்தில் எங்கள் தலை இருந்தால் அது தலையில்தான் விழும் இந்த விதியை மேலே போன கல்லு கிழேதான் வரும் அதுவும் சரியாக தலைக்கு மேலே போடுவதால் அது தலையில்தான் விழும் என்று மதிகொண்டு(அறிவு) விலகி நின்றாள் அந்த கல்லு தலையில் விழுவதை தவிர்க்கலாம். இப்படி வாழ்வில் எல்லா விடயங்களுக்கும் ஒவொரு உண்மைத்தன்மை உண்டு அதில் சில எங்களுக்கு தெரிந்ததால் விலகி நிக்கிறோம் தெரியாதவற்றை தலையில் வாங்கிக்கொள்கிறோம் அதன் பின் எங்கள் அறியாமையை நேரப்பிழை, காலப்பிழை ,ராசி சரியில்லை அப்படி இப்படி என்று உங்கள் வாழ்கையை கேள்விக்குறி ஆக்காதிர்கள் .............இங்கு அறிவுதான்

எனக்கும் இதே நிலைதான். இன்னும் அகப்படவில்லை. :wub::wub::wub:

முயற்சி, மனம் தளராத கடின உழைப்பு, காலத்தை எதிர்வு கூர்ந்து அதற்கேற்ப முன்னாடியே செயல்படுதல். இவை இருந்தாலே வெல்லலாம்.

:)

இதுதான் சமன்பாடு.

வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளுக்கும் பொருந்தும்.

என்ன இலக்கின் தேவைக்கேற்ப கொஞ்சம் கூட்டி குறைத்து செயற்பட வேண்டியிருக்கும். :D

Edited by thappili

தப்பிலி.. :unsure:

^_^:lol:

இசை, தப்பிலி ஏற்கனவே மாட்டுப்பட்டுவிட்டார் என்று நினைக்கிறேன்.

எனக்கு இரு திருமணம் என முந்திப் பல சாஸ்திரிமார் சொன்னவை

எனக்கும் இதைத்தான் சொன்னவர்கள். சின்ன வயதில் செய்தால், மண்டையைப் போட்டுவிடுவார் என்று வேறு சொல்லித் தொலைத்துவிட்டார்கள்.

தன்மைபிக்கை, விடா முயற்சி, உறவினர், நண்பர்களின் ஆதரவு இருப்பின் வாழ்க்கை வெற்றி பெறும்!!

முதல் இரண்டும் என்னிடம் நிறையவே இருக்கிறது. கடைசி இரண்டும்தான் அறவே இல்லை. இவை இரண்டை மட்டும் வைத்து வெற்றி பெற்றுவிட முடியாது என்பது எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மை.

சின்ன வயசில் சாத்திரம் பார்க்கேக்குள்ள எனக்கு கன பொம்பிளையள் எண்டு பெரிசுகள் சொல்லிச்சிதுகள்..! :( இண்டைவரைக்கும் என்ர கற்பை கவனமா காப்பாத்திக்கொண்டு வாறன்..! :unsure: இது விதியை மதியால் வெண்டது இல்லையா? :wub:

டிஸ்கி: ஒன்லைனில் சள்ளடிக்கிறதை வச்சு தப்புக்கணக்குப் போடக்கூடாது.. சொல்லிட்டன்..!

:lol:

விதி..

தோல்விகள் நிகழும்போது அவற்றுக்கான காரணங்களை ஆராயாமல் வெறும் சப்பைக்கட்டு கட்டுவதற்கென்றே உருவாக்கப்பட்ட ஒரு சொல்..! :wub:

இரண்டும் நீங்க சொன்னதுதான் இசை ஒண்டும் கிடைக்கல்லயெண்டதால சப்பைகட்டா? :D:D

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டும் நீங்க சொன்னதுதான் இசை ஒண்டும் கிடைக்கல்லயெண்டதால சப்பைகட்டா? :D:D

நான் விதியை நொந்து அதை எழுதவில்லையே..! :D

பலநேரங்களில் நான் நழுவியதற்குக் காரணம் என்னால் யாரும் மனம் புண்படக்கூடாது என்கிற காரணம் தான்..! :unsure: இல்லாவிட்டால் பூந்து விளையாடியிருப்பனே..! :lol:

பலநேரங்களில் நான் நழுவியதற்குக் காரணம் என்னால் யாரும் மனம் புண்படக்கூடாது என்கிற காரணம் தான்

தெய்வமே! :(

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வமே! :(

சரி.. சரி.. :D ரென்சனைக் குறையுங்கோ தப்பிலி..! :lol:

...

முதல் இரண்டும் என்னிடம் நிறையவே இருக்கிறது. கடைசி இரண்டும்தான் அறவே இல்லை. இவை இரண்டை மட்டும் வைத்து வெற்றி பெற்றுவிட முடியாது என்பது எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மை.

அதுவும் எனது வாழ்கையின் மூலம் நான் அனுபவிக்கும் உண்மை தான்.

தாய்க்குத் தலைச்சன் பிள்ளை என்று சொல்லுவார்கள் அதை எனது தாயார் தெய்வ வாக்காக எடுத்து செயல்படுபவர். (நான் தலைச்சன் பிள்ளை இல்லை) நான் எது செய்தாலும் அவரின் ஆதரவு எனக்கு மிகக் குறைவு என்றே சொல்லலாம். எனக்கு என்னைச்சார்ந்தவர்கள் நான் அன்பு செய்பவர்கள் ஓரளவேனும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பேன்.

ஒரு செயலைத் தொடங்கும் போது ஆதரவாக நாலு வார்த்தை சொன்னால் மனம் சந்தோசப்படும், அதே நேரம் ஆதரவாக சொல்லாவிட்டால் கூடப் பறவாய் இல்லை அபசகுனமாக ஒரு வார்த்தை சொன்னாலே நொந்து போகும் மனம் எனக்கு (ஊரில் நிற்கும் போது ஒருதடவை காசி விக்கிரம் மாதிரி கண்களை வைத்ததுக் கொண்டு 'நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும்...' என்று முணு முணுத்தேன். கதைச்சுக் கொண்டிருந்த இருந்த அம்மா எழும்பி ஓடிட்டா... ^_^:D ) மற்ற உறவுகள் எது சொன்னாலும் காதில் போட்டுக் கொள்ளவது இல்லை. இப்போதெல்லாம் எனது மனதிற்கு சரி என்று படுவதை எனது தந்தையை நினைத்துக் கொண்டு செய்யத்தொடங்கி விடுவேன். முன்பு இருந்ததை விட இப்போது வாழ்கையில் முன்னேறியுள்ளேன் என்றே சொல்லுவேன். ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு அவனின் குடும்பத்தினரின்/ நண்பர்களின் ஆதரவும் அவசியம் தேவையானது.

எல்லாருக்கும் ஒரேமாதிரிப் பிரச்சினைதான் போலை..! :rolleyes:

எல்லாருக்கும் ஒரேமாதிரிப் பிரச்சினைதான் போலை..! :rolleyes:

அவர்களில் முழு குறைகளையும் சொல்வதற்கு இல்லை, புலம்பெயர் வாழ்கை முறையை ஊரில் இருப்பவர்கள் அறிய விருப்பப்படுவதில்லை/ சொன்னாலும் புரிந்தது கொள்ளும் நிதானமோ, மனப் பக்குவமோ அந்த சூழ் நிலையில் வாழ்பவர்களிடம் நாம் எதிர் பார்ப்பதும் எமது அறியாமை என்றே காலப் போக்கில் நான் உணர்ந்து கொண்டது. :rolleyes:

அதுவும் எனது வாழ்கையின் மூலம் நான் அனுபவிக்கும் உண்மை தான்.

தாய்க்குத் தலைச்சன் பிள்ளை என்று சொல்லுவார்கள் அதை எனது தாயார் தெய்வ வாக்காக எடுத்து செயல்படுபவர். (நான் தலைச்சன் பிள்ளை இல்லை) நான் எது செய்தாலும் அவரின் ஆதரவு எனக்கு மிகக் குறைவு என்றே சொல்லலாம். எனக்கு என்னைச்சார்ந்தவர்கள் நான் அன்பு செய்பவர்கள் ஓரளவேனும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பேன்.

ஒரு செயலைத் தொடங்கும் போது ஆதரவாக நாலு வார்த்தை சொன்னால் மனம் சந்தோசப்படும், அதே நேரம் ஆதரவாக சொல்லாவிட்டால் கூடப் பறவாய் இல்லை அபசகுனமாக ஒரு வார்த்தை சொன்னாலே நொந்து போகும் மனம் எனக்கு (ஊரில் நிற்கும் போது ஒருதடவை காசி விக்கிரம் மாதிரி கண்களை வைத்ததுக் கொண்டு 'நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும்...' என்று முணு முணுத்தேன். கதைச்சுக் கொண்டிருந்த இருந்த அம்மா எழும்பி ஓடிட்டா... ^_^:D ) மற்ற உறவுகள் எது சொன்னாலும் காதில் போட்டுக் கொள்ளவது இல்லை. இப்போதெல்லாம் எனது மனதிற்கு சரி என்று படுவதை எனது தந்தையை நினைத்துக் கொண்டு செய்யத்தொடங்கி விடுவேன். முன்பு இருந்ததை விட இப்போது வாழ்கையில் முன்னேறியுள்ளேன் என்றே சொல்லுவேன். ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு அவனின் குடும்பத்தினரின்/ நண்பர்களின் ஆதரவும் அவசியம் தேவையானது.

குட்டி, உங்களுக்குக் கொஞ்சம் பரவாயில்லை. ஆனால், நான் கடைசிப் பெண்பிள்ளை என்பதால் எல்லோருடைய விருப்பு வெறுப்புகளுக்கும் அடங்கி நடக்கவேண்டியிருந்தது. நாங்கள் கனடாவுக்கு வந்து 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்னும் மாறவில்லை. இப்போது உறவுகளே இன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் கூறியதுபோல, இப்போது எனக்குச் சரியென்று படுவதைச் செய்வதால் முன்னேற்றம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், போவதற்கு இன்னும் நீண்ட தூரம் இருக்கிறது. அதை இடையில் விடவும் மனம் வரவில்லை. வாழ்க்கை இவ்வளவு கடினமாக இருக்கும் என நான் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இரு திருமணம் என முந்திப் பல சாஸ்திரிமார் சொன்னவை :wub:

எந்தப்பன்னாடை சாத்திரியள் சொன்னவங்கள்???? அவங்களை நேரை கண்டனெண்டால்........அவங்கடை குரல்வளையளை கடிச்சு குதற வேணும் போலை கிடக்கு.

இஞ்சை என்ரை தங்கச்சிக்கு ஒரு கலியாணத்துக்கே வழியை காணேல்லை....இதுக்கை வேறை.... இரண்டு கலியாணம்......க்........வவ்வ்வ்வ்....எனக்கு வாற இறுளுக்கு...........................................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.