Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் தமிழர்கள் தாய்நாட்டுக்கு எதிராக செயற்படக் கூடாது

Featured Replies

புலம்பெயர் தமிழர்கள் தாய்நாட்டுக்கு எதிராக செயற்படக் கூடாது

புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கைக்கு எதிராக வெளிநாடுகளில் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். இவ்வாறானவர்கள் இங்கு வந்து நாட்டின் உண்மையான சமாதான நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமென கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் 60 ஆம் ஆண்டு அகவை நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழில் உரையாற்றுகையில் தெரிவித்தார். உங்கள் தாய்நாட்டை மறக்க வேண்டாம். நாம் தாய்நாட்டிற்கு என்ன செய்ய வேண்டுமென சிந்தியுங்கள் என்றும் ஜனாதிபதி தமிழில் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து தமிழில் உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியதாவது, நான் தமிழில் பேச விரும்புகிறேன். நீங்கள் சிரிக்காவிட்டால் தொடர்ந்து நான் பேசுவேன்.

இந்நாட்டிலுள்ள முக்கிய தமிழ் பாடசாலையொன்றின் வைர விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது. இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் பாக்கியவான்கள். வடக்கு கிழக்கிற்கு பின்னர் முதலாவது தமிழ் இந்து பாடசாலை இதுவாகும்.

அன்று பிள்ளையார் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு இன்று பிள்ளையார் துணையோடு இந்துப் பாடசாலையாக மாறியிருக்கின்றது. இதற்காக பாடுபட்டவர்களை நாம் நினைவு கூர வேண்டும். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், சேர் பொன். இராமநாதன், சேர் பொன் அருணாச்சலம் ஆகியோர் இந்நாட்டுக்கு செய்த சேவைகள் அளப்பரியனவாகும்.

எனவே நீங்கள் ஒரு நாளும் நன்றி மறக்க வேண்டாம். உலகில் களவாட முடியாத ஒன்று உள்ளது. அதுதான் கல்வி. படித்தால் மட்டும் போதாது, ஒழுக்கமும் பண்பும் இருக்க வேண்டும். இது போன்று நாட்டிலும் சர்வதேசத்திலும் எமது பிள்ளைகள் நற்பெயர் எடுக்க வேண்டும்.

மாதா, பிதா, குரு தெய்வம் இவர்களை மறக்க வேண்டாம். உங்கள் தாய்நாட்டை மறக்க வேண்டாம். நாம் தாய் நாட்டுக்கு என்ன செய்ய வேண்டுமென்று சிந்தியுங்கள்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையை பற்றி பொய்யான பிழையான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். இவர்கள் இந்நாட்டுக்கு வந்து உண்மையான சமாதான நிலைமையை கண்டு கொள்ள வேண்டும். அதற்காக அழைப்பு விடுக்கின்றேன்.

அத்தோடு இங்கு பிறக்காதவர்களும் இங்கு ஒருபோதும் வராதவர்களும் பிழையான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். இங்கிருப்பது ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே நீதி, இப்பாடசாலை மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள் என தமிழில் உரையாற்றி முடித்தார் ஜனாதிபதி.

இங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கள மொழியில் தனது உரையை நிகழ்த்துகையில்,

நாட்டில் பயங்கரவாதம் இருந்தபோதும் கோயில்களில், பள்ளிவாசல்களில் தேவாலங்களில், மத அனுஷ்டானங்களை நடத்த முடியாத காலம் காணப்பட்டது. இன்று பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அனைத்து மத நடவடிக்கைகளும் அச்சம் இன்றி முன்னெடுக்கப்படுகின்றன.

வேல் திருவிழா உட்பட அனைத்தும் விமர்சையாக நடைபெறுகின்றன. வரலாற்றில் நிகழ்ந்த பிழைகளை மீண்டும் மீண்டும் நினைவு கூராத எமது பிள்ளைகளின் மனதில் குரோதத்தையும் வைராக்கியத்தையும் ஏற்படுத்த முனையக் கூடாது. பெற்றோர்கள் பெரியவர்கள் இதனை உணர வேண்டும்.

எதிர்கால சந்ததியினரான எமது பிள்ளைகளின் மனதில் குரோதத்தை வளர்க்கக் கூடாது.

அன்பு, அஹிம்சை, கருணை உள்ளம் கொண்ட எதிர்காலச் சந்ததியினரை உருவாக்க நாம் திடசங்கற்பம் கொள்வோம்.

தமிழ் மக்களுக்கு பிள்ளையார் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று நாமும்பரீட்சையின்போது பிள்ளையாரின் உதவியையே நாடுவோம். எனவே இந்துக்களுக்கும் எமக்கும் இடையே ஒற்றுமை உண்டு. அதனை பேணுவோம்.

நாட்டில் இன, மத, பேதமற்ற ஒற்றுமையுள்ள சமூகத்தை உருவாக்குவோம் என்றார். ஜனாதிபதி பாடசாலை புதிய கட்டிடத்துக்கான நுழைவாயிலையும் திறந்து வைத்தார்.

இங்கு உரையாற்றுகையில் இந்துக் கல்லூரி அதிபர் ரி. முத்துக்குமாரசுவாமி,

இப்பாடசாலையில் படித்த மாணவர்கள் உள்நாட்டு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்று உயர் நிலையில் இருக்கின்றனர். இதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று இப்பாடசாலையல் 4000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 152 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர்.

க.பொ.த. (சா/தரம்) மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் எம் மாணவர்கள் பல சாதனைகளை படைத்துள்ளனர் என்றார்.

இந்நிகழ்வில் அமைச்சர் பௌசி நல்லை ஆதீனம், சம்மாங்கோட்டு பிள்ளையார் ஆலய பிரதம குரு ராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் மற்றும் அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் கந்தையா நீலகண்டன், பாராளுமன்ற உறுப்பினர்களான அப்பாத்துரை விநாயகமூர்த்தி, பிரபõஷ் கணேஷன், விஜயகலா மகேஸ்வரன், சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31607

ஈழத்தமிழர்கள் நாட்டுபற்றுள்ளவர்கள் அவர்கள் எப்போதுமே தாய் நாட்டிற்கு எதிராக இயங்கவே மாட்டார்கள்.எமது இலக்கு சிங்கள தேசமே! ஆகவே சிங்கள தேசத்திற்கும் பல இலட்சகணக்கில் வயது வேறுபாடின்றி உயிருடன் கொடூர இனப்படுகொலை செய்த பாஸிஸ அரசுக்கும் எதிரானது தான். சிங்கள பாஸிச அரசே! தமிழர்கள் மீது வீண்பழி போடாதே!இதிலும் ஒரு நியாயம் உண்டு.சில வேளைகளில் இலங்கை அரச அதிகாரிகளும் ஒட்டு குழுக்களும் நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் எதிராகவியங்குகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

blue bird உங்கள் கருத்துடன் நான் ஒத்துபோகின்றேன்,தமிழன் நாட்டு பற்றில் மிகவும் உறுதியுள்ளவன் அதனால்தான் பல ஆயிரம் பெயரை அதற்காகவே இழந்தவன், அனால் சிங்கள நாட்டிற்கு தமிழர் ஏன் விசுவாசம் காட்ட வேண்டும்.

Edited by tamil arasu

ஒரு பிரிவினருக்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள அந்த நாட்டை தாய்நாடு என எவ்வாறு அழைப்பது. அதற்கு அங்கு பிறந்திருந்தால் மட்டும் போதாது. உரிமைகளும் சமநிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் அது தாய் நாடு. அதுவரை அத எதிரிகளின் ஆக்கிரமிப்புத் தேசமே.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா எனது தாய் நாடு என்பதை மறந்து நீண்ட நாட்களாகி விட்டது!

லண்டனில் உள்ள இலங்கைத்தூதரகம் தொடக்கம், இலங்கை விமான நிலையம் வரை என்னை ஒரு உள்நாட்டுப் பிரஜையாக என்றைக்குமே பார்த்தது கிடையாது!

உண்மையில் ஒரு வெளி நாட்டுப் பிரஜையிலும் கேவலமாகவே நடத்தப் பட்டேன்!

சொந்த அனுபவங்களின் படி எனக்குத் தாய் நாடு இனித் தான் உருவாக வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு பிள்ளையார் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று நாமும்பரீட்சையின்போது பிள்ளையாரின் உதவியையே நாடுவோம். எனவே இந்துக்களுக்கும் எமக்கும் இடையே ஒற்றுமை உண்டு. அதனை பேணுவோம்.

இப்படி கூறிக்கொண்டே மறு புறம் புத்த கோவில்களை நிறுவிக்கொண்டு போவதன் அர்த்தம் என்ன? தமிழர்கள் பிள்ளையார் கோவில்களை சிங்கள மண்ணில் நிறுவிக்கொண்டே போக முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களே தான் பரீட்சைக்குக் கும்பிடும் பிள்ளையாரைத் தூக்கி திருகோணமலைக் கடலுள் போட்டுவிட்டுக் கேட்டவர்களுக்குக் 'கண தெய்யோ நான்ட கியா' என்று கூறியவர்கள்!

ஏன் புத்தர் கொஞ்சம் படிப்பறிவு குறஞ்சவரோ?

ஏன் பிள்ளையாரைத் தேடுறாங்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழில் உரையாற்றுகையில் தெரிவித்தார். உங்கள் தாய்நாட்டை மறக்க வேண்டாம். நாம் தாய்நாட்டிற்கு என்ன செய்ய வேண்டுமென சிந்தியுங்கள் என்றும் ஜனாதிபதி தமிழில் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31607

அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறம். :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் நாட்டுபற்றுள்ளவர்கள் அவர்கள் எப்போதுமே தாய் நாட்டிற்கு எதிராக இயங்கவே மாட்டார்கள்.எமது இலக்கு சிங்கள தேசமே! ஆகவே சிங்கள தேசத்திற்கும் பல இலட்சகணக்கில் வயது வேறுபாடின்றி உயிருடன் கொடூர இனப்படுகொலை செய்த பாஸிஸ அரசுக்கும் எதிரானது தான். சிங்கள பாஸிச அரசே! தமிழர்கள் மீது வீண்பழி போடாதே!இதிலும் ஒரு நியாயம் உண்டு.சில வேளைகளில் இலங்கை அரச அதிகாரிகளும் ஒட்டு குழுக்களும் நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் எதிராகவியங்குகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனப்படுகொலையாளனை அழைத்து பள்ளிக்கூடக் கட்டிடத்தை திறக்க வேண்டிய அவசியம் என்ன..??! இவர்களை அரசியல்வாதிகளை பள்ளிக் கூட நிகழ்வுகளுக்கு அழைப்பதை விடுத்து கல்விமான்களையும்.. மேற்படி பள்ளிகளில் படித்து நல்ல நிலைக்கு உயர்ந்துள்ள பழைய மாணவர்களையும் அழைத்து இப்படியான நிகழ்ச்சிகளை நடத்த நம்மவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்..! அதுதான் கல்விக்கும்.. பழைய மாணவர்களுக்கும் அளிக்கும் சிறப்பாக இருக்கும்..!

முத்துக்குமாரசாமி போன்ற குடும்பிடு சாமிகள் சிந்திக்க வேண்டியது அவசியம்..!

ஒரு இனப்படுகொலையாளனைக் கொண்டு பள்ளியின் கட்டிடத்தை திறந்ததை தமிழ் மக்கள் சார்ப்பில் கண்டிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

மகிந்தருக்கு தன்னை ஐ.நா. அறிக்கையில் இருந்து காப்பற்றிக்கொள்ள தமிழ் நண்பர்கள் தேவையாக உள்ளது. தானே பிரதம விருந்தினராக வரவேண்டும் எனக்கேட்டு வந்திருக்ககூடும்.

Principal Name: Mr.T.Muthukumarasamy

Tel: +94112586169

E-Mail: chinducollege@yahoo.com

Address:

No 77,Lorenz Road,

Colombo 00400

Sri Lanka

http://www.colombohindu.com/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாடசாலையின் பழைய மாணவன் என்ற அடிப்படையில் வெட்கப்படுகின்றேன் நெடுக்ஸ்

இது முதல் தரமல்ல

எமது பாடசாலை இது போன்றவற்றை செய்வது............நாங்கள் இருக்கும்போது 1980 இல் முதன்முதலாக அமிர்தலிங்கத்தையும் யோகேஸ்வரனையும் அழைத்தோம்.

அதற்கு வந்த எதிர்ப்புக்கள் கொஞ்சநஞ்சமல்ல. அதேநேரம் அன்றிலிருந்தே எம்மீதான கண் காணிப்பு தொடங்கிவிட்டது. இந்த பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் ஒரு சிலர் முக்கால் சிங்களவர்கள்............................. :(:(

இந்த பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் ஒரு சிலர் முக்கால் சிங்களவர்கள்............................. :(:(

புலம் பெயரும்போது ஒருவருசத்துக்கு மேல் கொழும்பில் நிற்கவேண்டி இருந்தது.. நான் சந்தோஷமாக இருப்பது பிடிக்காமல், அம்மா, இந்த பள்ளிக்கூடத்தி சேர்த்துவிட்டா..

அங்கு படித்த சில மாதங்களில்.. (1990) உணர்ந்த விடயம் தமிழ்பற்று... பலர் தமிழ் வெறியர்களாக இருந்தார்கள்.. . வடக்கை சேர்ந்த மாணவர் தலைவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.. சிங்கள வார்த்தைகளை உபயோகித்த கொழும்பு சேரி மாணவர்களுக்கு சகட்டுமேனிக்கு தண்டனை கிடைக்கும்... ஒரு சிங்கள வர்த்தையான ''சிறா'' என்பதை உபயோகித்தபடியால் ஒரு மனித்தியாலம் முழங்காலில் நிண்டிருக்கிறேன்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.