Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்..?

Featured Replies

புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்..?

- புதுமாத்தளனும், முள்ளிவாய்க்காலும் தவிர்க்கப்பட்டிருக்குமா..?

-சிங்களவரின் படுகொலைகளுக்கு நினைவு தினங்கள் தீர்வு தருமா..?

புலிகள் என்றொரு இயக்கம் தோன்றாமலும், போராட்டம் என்ற வடிவம் உருவாகாமலும் இருந்திருந்தால் ஈழத்தில் தமிழர்கள் நின்மதியாக வாழ்ந்திருக்க முடியுமா..?

புதுமாத்தளன் சோகங்களின் இரண்டாவது ஆண்டு நிகழ்வில் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். 1956, 1958, 1978, 1983 என்று சிங்களவர்கள் நடத்திய கலவரங்கள் புலிகள் போராடாமல் இருந்தபோது வந்தவைதான். இதில் கலவரம் என்ற சொல் முக்கியமானது.

நிதானமாக இருக்க முடியாத ஓர் இனம் அடிக்கடி கலவரத்தில் ஈடுபடும்.. எனவேதான் புலிகள் என்ற அமைப்பு வந்தாலும் வராவிட்டாலும் புதுமாத்தளனில் கொல்லப்பட்ட மரணங்கள் கலவரம் என்ற வடிவில் வந்து சேர்ந்திருக்கும். கலவரம் பண்ணாமல் சிங்கள இனத்தால் வாழ முடியாது என்பதே வரலாறு. புலிகள் போராடினாலும், போராடாவிட்டாலும் சிங்கள சமுதாயத்தின் கலவர மனோநிலை அடங்கிப் போகாது.

சரி.. புலிகள் போராடியதால் என்ன நடந்தது..?

போராட்டக்களத்தில் நின்றவர்கள், அவர்களை நம்பி வன்னியில் இருந்தவர்கள், தளபதிகள், முக்கிய உறுப்பினர் உட்பட அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர்..

இதற்கு யார் பொறுப்பு…?

இந்தியா என்று கோபப்படுகிறோம்…! உலக சமுதாயம் காரணம் என்று விரக்தியடைகிறோம்..!

நமது கோபத்திலும் விரக்தியிலும் நியாயம் உண்டு…

ஆனால்..இதற்கு நாமும் பொறுப்பு என்று நமது மனச்சாட்சியை தொட்டு வெளிப்படையாகக் கூற மறுக்கிறோம்…

இதற்கு ஓர் உதாரணம் :

இரண்டாவது உலக மகாயுத்தம் முடிந்ததும் நூரம்பேர்க் ஜட்ஜ்மன்ற் என்ற பிரபலமான வழக்கு நடைபெற்றது… அதில் போர்க் குற்றவாளிகள் தண்டனை பெற்றார்கள்..

போர் நடக்கும்போது சரணடையும், கைது செய்யப்படும் மனிதர்களை நடாத்துவதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது. நோயுற்ற போர்க் கைதிகளைக்கூட இறக்கவிடக்கூடாது என்ற விதி அதில் இருக்கிறது.

எதிரிகள் நமது கையில்… கேட்கப்பார்க்க நாதியில்லை என்று ஜேர்மனிய நாஜிகள் நடாத்திய போர்க்குற்றத்திற்காக பலரை தூக்குமரத்தில் ஏற்றியது இந்த வழக்கு. இம்மாதம் வெளியான வரலாறு டேனிஸ் சஞ்சிகையில் இந்த வழக்கு வெளியாகியுள்ளது. காயப்பட்டவர்களை பராமரிக்க மறுத்தவர்களில் தூக்குத் தண்டனை பெற்ற தளபதிகளின் பெயர்களும் பட்டியலாக வந்துள்ளது.

மகிந்தராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ, டக்களஸ் தேவானந்தா போன்றவர்கள் இந்த நூரம்பேர்க் ஜட்ஜ்மன்ரை வாசித்துப் பார்க்க வேண்டும்.

அந்த நூரம்போர் ஜட்ஜ்மன்ற் ஒரு மகத்தான கவலையை வெளிப்படுத்துகிறது.. ஏன் இந்த மரணங்கள்.. இதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது…

உலகம்…

அத்தனை மதங்களும்…

அத்தனை சமுதாய தாபனங்களும்…

அத்தனை கல்விமான்களும்..

அத்தனை ஊடகங்களும்..

அத்தனை நாடுகளும் பொறுப்பு… என்று அந்த வாதாட்டம் முடிகிறது..

இதில் பொறுப்பு என்ற சொல் மிக முக்கியம்..

பாப்பரசர், அமெரிக்க அதிபர்கள், சாமியார்கள், இஸ்லாமிய காமய்னிகள், புத்தமத குருக்கள், மார்க்சிஸ்டுக்கள், ஆஸ்திகர், நாஸ்திகர், பொதுமக்கள் என்று அனைவருமே பொறுப்பற்று நடந்ததால்தான் இந்த உலக யுத்த அழிவு வந்ததென நூறம்பேர்க் வழக்கு சுட்டிக்காட்டுகிறது.

இதில் நமக்கு தொடர்பில்லை என்று வேடம்போடுவோர் ஏமாற்றுப் பேர்வழிகளே..

புதுமாத்தளனும், முள்ளிவாய்க்காலும் 140.000 பேரைக் கொன்றொழித்த போர். இந்தத் தவறும் யூதப் படுகொலை போன்றதே.. இதற்கும் மேலே சொன்ன அத்தனைபேருமே பொறுப்பு..

இதனால் தமிழர் மட்டுமல்ல..

புத்த, இந்து, கிறீத்தவ, இஸ்லாம் மதங்கள் தோல்வியடைந்திருக்கின்றன..

இந்தியா, சீனா, ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ரஸ்யா அனைவரும் தோல்வியடைந்திருக்கிறார்கள்…

இப்போது ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை வெளியாகியிருக்கிறது…

புலிகள் மீது ஆறு பெரும் குற்றங்களும்…சிங்கள இனவாத அரசின் மீது ஐந்து பெரும் குற்றங்களும் சுமத்தப்பட்டுள்ளன..

இனி என்ன செய்யலாம்…

படுகொலைகளின் இரண்டாவது ஆண்டு நினைவு வந்துவிட்டது தீபம் ஏற்றலாமா..?

யூலைக்கலவரத்திற்கு தீபம் ஏற்றி.. ஏற்றி.. மறந்து போனதுபோல இதுவும் ஒரு தொடர் கதையா..?

ஏற்றும் தீபங்களை மனச்சாட்சியோடு உற்றுப் பாருங்கள்..!

அந்த நெருப்பு உங்களிடம் ஒரு கேள்வி கேட்கும்..!

நீங்கள் இதற்கு பொறுப்பில்லையா என்று…?

பொறுப்பில்லை என்று சொல்ல எவராலும் முடியாது… எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பொறுப்பாளிகளே..

இனியாவது நாம் பொறுப்புடன் நடக்க வேண்டும்…!

ஐ.நா அறிக்கை சிங்கள இனவாத அரசை புதுமாத்தளனைவிட ஆபத்தான பொறிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது…

இலங்கைத் தமிழ் மக்களுக்கு தமிழீழத்தை எழுதிக் கொடுத்தால்கூட, தப்ப முடியாத வரலாற்று சேற்றை தன் முகத்தில் அது அப்பியிருக்கிறது..

ஐ.நா அறிக்கையில் இருந்து சிறீலங்காவை காப்பாற்ற இந்தியா, சீனா, ரஸ்யா போன்ற நாடுகளாலும் முடியாது என்பதே நிதர்சனம்..

இது ஈழத் தமிழினத்திற்கு ஓர் அரிய வாய்ப்பு..

இதை வென்றெடுக்க வேண்டும்…

அதை விளங்கியவர்கள், முன்னெடுக்க தகுதியானவர் எவரும் இப்போது உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் ஆடுகளத்தில் இல்லை..

ஆகவே..

மக்களே.. தூய ஜனநாயக போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.. எகிப்து, ரூனிசியா போல..

இதுவரை அரசியல் சாயம் பூசாத புதிய முகங்கள் ஜனநாயக போராட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டும்.

மத்திய கிழக்கு, வடக்கு ஆபிரிக்காவில் நடைபெறும் ஜனநாயகப் போராட்டம்போல மக்கள் போராட்டம் மலர வேண்டிய காலம் இது..

ஐ.நா அறிக்கையை துணையாக வைத்து, இந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினால் ஈழத் தமிழ் மக்கள் சில முக்கிய இலக்குகளை குறுங்காலத்தில் தொட்டுவிட முடியும்.

பாலஸ்தீன பிரச்சனை முடிக்கப்பட்டு, பாலஸ்தீன ஸ்ரேற் வரப்போகிறது.. அதோடு இணைந்த போராட்டமான ஈழத் தமிழர் போராட்டமும் ஒரு நல்ல இலக்கை எட்ட வாய்ப்புள்ளது.

இறந்த பொதுமக்கள், மாவீரர் அனைவருடைய இறப்புகளுக்கும் நாமும் பொறுப்பேற்று அவர்கள் கனவுகளை நிறைவேற்றி வைக்க இதுதான் தருணம்..

ஒரு காலமும் சமுதாயம் பின்னடைவதில்லை.. அது ஒவ்வொரு காலத்திலும் வளர்ச்சியடைந்து செல்கிறது என்பது உலகப்புகழ் பெற்ற பழமொழி..

ஈழத் தமிழினமும் பின்னடைந்துவிடாது, அது வரலாற்றின் நியதி..

தீபத்திற்கு ஓர் அர்த்தமிருக்கிறது…

எண்ணெய் அறிவு..

திரி நெறி..

நெருப்பு உணர்ச்சி..

அறிவாகிய எண்ணெய் வற்றினால் உணர்ச்சியாகிய நெருப்பு நெறியாகிய திரியை எரித்து எல்லாவற்றையும் நாசமாக்கிவிடும்..

இறந்தவர்களை அஞ்சலிக்க தீபம் ஏற்றுவது இந்த மூன்று நிலையிலும் நாம் சமமாக இருக்கிறோம் என்று விளக்கத்தான். இந்த மூன்று நிலையையும் நாம் சமமாக வைத்திருந்தால் நமது விடுதலைத் தீபமும் ஊடுபற்றியிருக்காது..

புதுமாத்தளன் சோகங்களுக்கு தீபமேற்றுவோர் அந்தத் தீபங்களை ஒரு தடவை உற்று நோக்குங்கள்..

சிந்தனையை மாற்றிப் போடுங்கள்..

இந்த இரண்டாண்டு நினைவில் உங்களுக்காக இரண்டு நம்பிக்கைகள்..

ஒன்று..

புலிகள் போராடியிருக்காவிட்டால் ஒட்டுமொத்தத் தமிழினமுமே அழிக்கப்பட்டிருக்கும்..

இரண்டு..

புலம் பெயர் தமிழன் என்ற பலமிக்க சக்தி உலகில் பிறந்திருக்காது..

இந்த இரண்டு விடயங்களையும் மனதில் ஏந்தி நடவுங்கள்..

மூன்றாவதாக ஈழத் தமிழினத்திற்கான விடிவு வரும்..

ஏனென்றால் புதுமாத்தளன் இழப்புக்களுக்கு மூன்றாவது ஆண்டு விளக்கேற்றும்போது ஒரு விடிவு வந்திருக்க வேண்டும்..

இரண்டாவது விளக்கின் தொடர்கதையாக மூன்றாவது விளக்கை ஏற்றினால் அது அஞ்சலியல்ல சடங்கு.. இதை இன்றாவது புலம் பெயர் ஊடகங்களை நடாத்துவோர் புரிந்து மக்களுக்குப் புது வழி காட்டவேண்டும்.

- அலைகள் புதுமாத்தளன் இரண்டாவது ஆண்டு பார்வை. 17.05.2011

http://www.alaikal.com/news/?p=70402

போர் உச்சம் பெற்ற போது ஊடவியலாலர்களை அனுமதிக்காத போதும் அரச சார்பற்ற நிறுவனங்களை வெளியேற்றிய போதும் அதை கண்டும் காணாமல் இருந்தது சர்வதேசத்தின் முதல் தவறு....

மக்கள் கொத்து கொத்தாக செத்து விழுந்த போதும் ஆதாரபூர்வமாக படங்களிலும் காணொளிகளிலும் வெளிவந்த பொழுது அதை புலிகளின் பரப்புரை என்று நெட்டி தள்ளி மக்களை பாதுகாக்க தவறியது ஜான் ஹோல்ம்ஸ், பான்கிமூன் போன்ற ஐ நா அதிகாரிகளின் இரண்டாவது தவறு....

போர்நிறுத்தம் கொண்டுவர உலக நாடுகள் குரல் கொடுத்த போதும் கண்டனம் தெரிவித்த போதும் இந்தியா போர்நிறுத்தம் வேண்டி நிர்பந்திக்கவும் இல்லை.... அதற்க்கான முயற்சிகளை மேற்கொள்வதாக போராட்டங்களில் ஈடுபட்டிருந்த மக்களை திசைதிருப்பி ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்ச்சிகளை மழுங்கடித்து துரோகம் இழைத்து இருந்தது.....மாறாக போரை விரைவாக முடிவுக்கு கொண்டுவர இலங்கை அரசுக்கும் ராணுவத்துக்கும் வியூகங்களை வகுத்துக் கொடுக்கவே இந்திய அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி மக்களுக்கு உண்மையை மறைத்திருந்தது....

மேற்குலகு இலங்கைக்கு ஆயுதங்களை அரசியல் வியாபார நோக்கில் வழங்கியிருந்தாலும் ஒரு கட்டத்தில் தன் தவறை திருத்திக் கொண்டு மக்கள் இழப்பை கவனத்தில் எடுத்து போர்நிறுத்தம் ஒன்றை பலமுறை வலியுறுத்தி இருந்தது.... அவர்களின் முனைப்பை தடுத்து நிறுத்தியவர்கள் யார்ர்??... அதற்க்கு துணைபோனவர் யார்??...

போர்நிறுத்தம் ஒன்று ஏட்பட்டிருந்தால் இவ்வளவு தொகையான அப்பாவி மக்களும் போராளிகளும் பலியாகி இருக்க மாட்டார்கள்...

போர்நிறுத்தம் வேண்டியவர்கள் யார்....? அத்தனைக்கும் முட்டுக்கட்டையாக இருந்து போர்நிறுத்தம் இன்று ஏற்ப்படாதவாறு திசை திருப்பல் மற்றும் கால தாமதம் மூலம் இந்த உலகத்தையே ஏமாற்றியவர்களே முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு முழு முதற் பொறுப்பு உடையவர்கள்...அவர்களே பொறுப்பு கூற வேண்டும்...

வீட்டை பற்ற வைத்தவனை விட பற்றி எரியும் வீட்டை அணைக்க விடாமல் தடுப்பவனே முதல் குற்றவாளி........

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆக்கம்

நானே இப்படி ஒரு கருத்துப்பதிவை எழுதி விவாதிக்கவேண்டும் என்றிருந்தேன். காரணம் எமது சந்ததி போராடிவேண்டி வந்தது எதற்காக என்ற பதிவு அடுத்த சந்ததிக்குத்தேவை. எனவே நேரம் கிடைக்கும்போது வரலாற்றை பதிவு செய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் போரடவிட்டல் தமிழ் இனமே அழிந்து இருக்கும்!

கடந்த இரண்டு வருடங்களில் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்தாலே உங்களுக்கு புரியும்,இப்போது அனேகர் எண்பதுகளில் அதன் பின்பும் பிறந்தவர்களிற்கு ஏன் புலிகள் போரடபுரப்பட்டர்கலேனதேரியது,அவர்கள் நினைப்பார்கள் சிலவேளை இந்தபோராட்டம் இல்லையெனில் இன்நிலை ஏற்பட்டிரதென நினைத்து இருப்பார் ஆனால் போராட துண்டியதே முன்பு ஏற்பட்ட நிலைதான் கரணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாட்டில் இரு நினைவுக் கொண்டாட்டங்கள். இதுவே இலு இனங்களும் ஒன்றுபடவாய்ப்பில்லை என்பதை ஆணித்தரமாகச் செபல்லுகின்றது. அரசாங்கம் வெற்றிக்களிப்பைக் கொண்டாடுவதை விட்டு தமிழர்கள் பனர்வாழ்வில் கவனம் டிசலுத்தினால் அங்கே ஒலு {க்கியத்திற்கான வழி இருக்கின்றது. என்று சொல்லலாம்.

புலிகள் இருக்கும் போது இறந்த தமிழர்களையும் இப்போது இறக்கும் தமிழர்களின் எண்ணிக்கையும் ஒப்பிட்டுப்பார்த்தால் வித்தியாசம் விளங்கும்தானே?

புலிகள் இல்லாவிட்டாவிட்டால் ஒட்டுமொத்த இலங்கைதமிழனென்ன,இந்தியதமிழன்,புலம் பெயர் தமிழன் அனைவருமே அழிந்திருப்பார்கள்.எழுதுறதுதான் எழுதுகிறீர்கள் இவைகளையும் சேர்த்து எழுதுங்கோவன்.

புலிகள் இருக்கும் போது இறந்த தமிழர்களையும் இப்போது இறக்கும் தமிழர்களின் எண்ணிக்கையும் ஒப்பிட்டுப்பார்த்தால் வித்தியாசம் விளங்கும்தானே?

புலிகள் இல்லாவிட்டாவிட்டால் ஒட்டுமொத்த இலங்கைதமிழனென்ன,இந்தியதமிழன்,புலம் பெயர் தமிழன் அனைவருமே அழிந்திருப்பார்கள்.எழுதுறதுதான் எழுதுகிறீர்கள் இவைகளையும் சேர்த்து எழுதுங்கோவன்.

தமிழர்கள் அழிந்திருப்பார்களோ இல்லையோ, அடிமைகளாகி இருப்பார்கள்.

கேள்வியின் தலைப்பு தவறு

தமிழர்கள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்து இருக்கும் என்று கேட்பதே சரியானது. . புலிகள் வேறு தமிழர்கள் வேறு என்ற அர்த்தத்தினை இந்த தலைப்பு தருகின்றது

தமிழர்களுக்கு போராட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது சிங்கள இனத்தின் அட்டூளியங்களும் அடக்குமுறைகளும் இன ரீதியான ஒடுக்குமுறைகளும் தான். அவற்றை புலிகள் எனும் எமக்குள் இருந்தே உருவான ஒரு அமைப்பின் தலைமையில் எதிர்கொண்டு தன்னால் முடிந்த வரைக்கும் போராடி இறுதியில் மிக மோசமான இனவழிப்பின் மூலம் தோற்றுப் போயிருக்கின்றது.

ஆனால், எதற்காக போராட முற்பட்டதோ அதை விட மிக மோசமான சூல்நிலைக்குள் தான் இன்றும் ஈழத்து தமிழினம் வாழ்கின்றது. போராட்ட வடிவம் மீண்டும் ஆயுத ரீதியான வடிவமாக இனி மாறுவதற்கான சூல்நிலை இல்லாது விடினும் மீண்டும் இன்னொரு வடிவிலாயினும் போராட வேண்டிய தேவையிலேயே இருக்கின்றது. ஆகவே புலிகள் இன்று இல்லாவிடினும் இன்னொரு போராட்டம் உள்ளிருந்து எழுவதற்கான சாத்தியங்களே அதிகம்

எனவே மீண்டும் தமிழ் மக்கள் போராடுவர். அது புலிகள் என்ற பெயரில் இல்லாது போயினும்

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வியின் தலைப்பு தவறு

தமிழர்கள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்து இருக்கும் என்று கேட்பதே சரியானது. . புலிகள் வேறு தமிழர்கள் வேறு என்ற அர்த்தத்தினை இந்த தலைப்பு தருகின்றது

கேள்வியின் தலைப்பு சரியென்றுதான் நினைக்கிறேன்..! :unsure:

தமிழர் வேறு புலிகள் வேறு. ஆனால் தமிழரும் புளட்டும் ஒன்று..! :rolleyes:

புலித்தளபதிகளான கருணாவைவிட,பிள்ளையானைவிட,இனியபாரதியைவிட,கே.பீஐ விடவா?

இவர்களும் உங்கட ஆட்கள் தான்.புலியில் இவர்களும் இருந்தார்கள் புளொட்டில் நாங்களும் இருந்தோம்.

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் போராடி இருக்காவிட்டால் வில்லுக்கத்தியால் கையில் கீறி கூட்டணியின் வாரிசுகளாக வந்திருப்பவர்களுக்கு இரத்தத் திலகம் இட்டு வீராவேசம் செய்திருப்போம். இப்ப ஒரு இடைவெளி வந்திட்டுது. மகிந்தவுக்கும் அவருக்கு வேலை செய்யும், மாற்று இயக்கத்தார், புலி இயக்கத்தார் எல்லோருக்கும் தலையையும் வாலையும் காட்டி வாழப்பழகிவிட்டார்கள். யாரும் அடித்தால், அடிவாங்கினது புண்ணியம் என்று நினைக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். இதெல்லாம் போதாதா?

  • கருத்துக்கள உறவுகள்

புலித்தளபதிகளான கருணாவைவிட,பிள்ளையானைவிட,இனியபாரதியைவிட,கே.பீஐ விடவா?

இவர்களும் உங்கட ஆட்கள் தான்.புலியில் இவர்களும் இருந்தார்கள் புளொட்டில் நாங்களும் இருந்தோம்.

உங்களின் வாயிலே அள்ளி சக்ர்கரையை போடவேணும்போல் உள்ளது.................

உண்மையை இன்றாவது எழுதினீர்களே????

இருந்தீர்கள்????

அவர்களைபோலவே...........................

நாங்கள் எழுதியிருந்தால் வெட்டு. நீங்களாகவே எழுதியதால் நன்று!

புலிகள் இருக்கும் போது இறந்த தமிழர்களையும் இப்போது இறக்கும் தமிழர்களின் எண்ணிக்கையும் ஒப்பிட்டுப்பார்த்தால் வித்தியாசம் விளங்கும்தானே?

புலிகள் இல்லாவிட்டாவிட்டால் ஒட்டுமொத்த இலங்கைதமிழனென்ன,இந்தியதமிழன்,புலம் பெயர் தமிழன் அனைவருமே அழிந்திருப்பார்கள்.எழுதுறதுதான் எழுதுகிறீர்கள் இவைகளையும் சேர்த்து எழுதுங்கோவன்.

தமிழர்கள் இருந்தால்தானே அழிவதற்கு???

சிங்களவனின் அடிமைகளே இப்போது இருக்கிறார்கள்................ தமது அடிமைகளை அழிக்கவேண்டிய எண்ணம் யாருக்கும் வந்ததில்லை.

புலிகள் வாழந்தபோது தமிழர்கள் ஊரெல்லாம் வாழ்ந்தார்கள். இப்போது எத்தனை தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற கணக்கை நீங்கள் பார்த்தால்................

இறந்த கணக்கை நாங்கள் பார்க்க வேண்டிய தேவையில்லை!

கேள்வியின் தலைப்பு சரியென்றுதான் நினைக்கிறேன்..! :unsure:

தமிழர் வேறு புலிகள் வேறு. ஆனால் தமிழரும் புளட்டும் ஒன்று..! :rolleyes:

:unsure::mellow::o^_^:D:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை.எல்லா அழிவுகளும் பலிகளால்தான் என்று கூறிக்கொண்டு இருப்போர் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை.புலிகளின் போராட்டத்தால் தமிழனின் அழிவு கொஞ்சக் காலம் பின்போடப்பட்டது என்பதே உண்மை.தமிழனின் அழிவு என்பது உயிரழிவுமட்டும் என்பதல்ல.உயிர் கலாச்சார பொருளாதார வாழிடம் என்று எல்லாம் சேர்த்துத்தான்.தமிழன் என்ற இனமே ஈழத்தில்வாழ்ந்தார்கள் என்ற அடையாளம் இல்லாதொழிக்கும் வேலை அங்கு மும்முரமாக நடை பெற்றக் கொண்டு இருக்கிறது.அங்குள்ள மக்களின் வாய்கள் ஆயுதங்கள் கொண்டு பூட்டப்பட்டிருக்கிறது.புலிகளின் போராட்டத்தின் விளைவுகளில் ஒன்றே சுதந்திரமாகப் பேசவும் செயற்படவும் கூடிய புலம்பெயர் தமிழ்ச் சமூகம் அதுவே இன்று தாயகத்தமிழரின் குரலாக இன்று உலக அரங்கில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.இதைப் போராட்டத்தின் தொடர்ச்சியாகப் பார்க்க வேண்டுமே ஒழிய போராட்டத்தின் வீழ்;ச்சியாகப் பார்க்க முடியாhது.இந்தச் சமூகத்தை ராஜபக்சேவால் ஒட்டு மொத்தமாக விலைக்கு வாங்க முடியாது.(ஒரு சிலரை வாங்கினாலும்) அழிக்கவும் முடியாது.சர்வதேசத்தாலும் தடை போட முடியாது ஏனெனில் அவர்கள் எடுத்துக் கொண்ட ஆயுதம் ஜனநாயகம். அந்தச் சக்திதான் ராஜபக்சேவை ஊடோ ஓட விரட்டியது.புலம் பெயர் தமிழ்ச் சமுகம் தனது சக்தியை முழுமையாகப் பயன் படுத்தினால் வெற்றி நிச்சயம்இஅன்றைய ஐநாவின் அறிக்கையே புலம் பெயர் மக்களின் பேரட்ட அழுத்தத்தினால் பெறப்பட்ட வெற்றியே ஒழிய ஐநா தன்னிச்சையாகச் செயற்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் பிரச்சினை என்பது ஒரு விண்கலம். அது போக்கிடமில்லாமல் யார் கண்ணுக்கும் படாமல் தரையில் கிடந்தது. புலிகள் எனும் ரொக்கற் பூஸ்டர் தானாக முன்வந்து அதனை விண்வெளிநோக்கி ஏந்திச் சென்றது. :unsure:

இதற்காக அது தன்னையே படிப்படியாக அழித்துக்கொண்டது. ரொக்கட்டின் வெப்பம் சுடுகிறது என்றார்கள் சிலர். சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்றார்கள் வேறு சிலர். எங்களை விட்டிருந்தால் நோகாமால் நொங்கு எடுத்துத் தந்திருப்போம் என்றவர்கள் வேறு சிலர். :rolleyes:

எல்லாம் போக, இறுதியில் புவியீர்ப்பைத் தாண்டுகிறது என்று தெரிந்தவுடனே பூஸ்டர் விண்கலத்திலிருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொண்டு கடலில் விழுந்து கரைந்துவிட்டது. :(

விண்கலம் இப்போது விண்வெளியில் நிறுத்தப்பட்டுள்ளது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் பிரச்சினை என்பது ஒரு விண்கலம். அது போக்கிடமில்லாமல் யார் கண்ணுக்கும் படாமல் தரையில் கிடந்தது. புலிகள் எனும் ரொக்கற் பூஸ்டர் தானாக முன்வந்து அதனை விண்வெளிநோக்கி ஏந்திச் சென்றது. :unsure:

இதற்காக அது தன்னையே படிப்படியாக அழித்துக்கொண்டது. ரொக்கட்டின் வெப்பம் சுடுகிறது என்றார்கள் சிலர். சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்றார்கள் வேறு சிலர். எங்களை விட்டிருந்தால் நோகாமால் நொங்கு எடுத்துத் தந்திருப்போம் என்றவர்கள் வேறு சிலர். :rolleyes:

எல்லாம் போக, இறுதியில் புவியீர்ப்பைத் தாண்டுகிறது என்று தெரிந்தவுடனே பூஸ்டர் விண்கலத்திலிருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொண்டு கடலில் விழுந்து கரைந்துவிட்டது. :(

விண்கலம் இப்போது விண்வெளியில் நிறுத்தப்பட்டுள்ளது. :rolleyes:

[/ quote]

நல்லதொரு முயற்சி இசை

ஜந்து வயதுப்பிள்ளைக்கும் விளங்கக்கூடியதாக எழுதியுள்ளீர்கள்.

பார்க்கலாம். எவராவது உள் வாங்குகின்றார்களா என்று?

புலித்தளபதிகளான கருணாவைவிட,பிள்ளையானைவிட,இனியபாரதியைவிட,கே.பீஐ விடவா?

இவர்களும் உங்கட ஆட்கள் தான்.புலியில் இவர்களும் இருந்தார்கள் புளொட்டில் நாங்களும் இருந்தோம்.

உங்களை இனியபாரதி போன்றவர்களுடன் ஒப்பிட்டீர்கள்.

அவ்வப்போது உண்மையை மறைக்க முடியவில்லை. வருடத்துக்கு ஒரு உண்மையையாவது கூறியதற்கு நன்றிகள்.

நல்லதொரு முயற்சி இசை

ஜந்து வயதுப்பிள்ளைக்கும் விளங்கக்கூடியதாக எழுதியுள்ளீர்கள்.

பார்க்கலாம். எவராவது உள் வாங்குகின்றார்களா என்று?

விசுகு அண்ணா சிலருக்கு விளங்கும் ஆனால் விளங்காது

Edited by தமிழ்நேசன்

  • தொடங்கியவர்

நல்லதொரு கட்டுரை.எல்லா அழிவுகளும் பலிகளால்தான் என்று கூறிக்கொண்டு இருப்போர் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை.புலிகளின் போராட்டத்தால் தமிழனின் அழிவு கொஞ்சக் காலம் பின்போடப்பட்டது என்பதே உண்மை.

அத்துடன், இன்று உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் உயிர்தப்பி வாழ வகுத்து தந்தவர்களும் அவர்களே.

தமிழனின் அழிவு என்பது உயிரழிவுமட்டும் என்பதல்ல.உயிர் கலாச்சார பொருளாதார வாழிடம் என்று எல்லாம் சேர்த்துத்தான்.தமிழன் என்ற இனமே ஈழத்தில்வாழ்ந்தார்கள் என்ற அடையாளம் இல்லாதொழிக்கும் வேலை அங்கு மும்முரமாக நடை பெற்றக் கொண்டு இருக்கிறது.

அதை உஅலகத்திற்கு சொல்லவும், அங்குள்ள மக்களுக்காக போராடவும்நீதி கேட்கவும் உள்ளவன் புலம்பெயர் தமிழனே!

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் போராடியிருக்காவிட்டால்????????????

1983 இறுதிப்பகுதி

கிளிநொச்சியில் சில மாதங்கள் நிற்கவேண்டிவந்தது

இயக்கம் பெரிதாக வெளியில் வரமுடியாத காலம். பல இயக்கங்கள் சிறு சிறு ஆயுத்தங்களை செய்து கொண்டிருந்த காலம்.

கிளிநொச்சிப்பகுதியில் பல பகுதிகள் சிங்களவன் குடிவந்திருந்தான். இயக்கங்களின் தாக்குதல் தொடங்கியதுமே அவன் மெதுவாக பின் நகர்ந்து மதவாச்சிவரை சென்றான். புலிகள் போராடியிருக்காவிட்டால்????????????

80 களிலேயே தமிழன் அங்கு சிறுபான்மையாக்கப்பட்டிருப்பான் இன்றைய சூழ்நிலையைவிட அது மோசமாக இருந்திருக்கும்.

சிலர் இங்கு எழுதும்போது கோவணத்துடனாவது எழுதுவார்கள்.ஆனால் சிலர் கோவணம் இல்லாமல் தானாம் வாழ்வார்களாம்.
  • தொடங்கியவர்

நேற்று நடந்த டொராண்டோ நிகழ்வில் கேட்ட சில கருத்துக்கள்:

- எமது தமிழின போராட்டம் தொடங்கியது விடுதலைபுலிகளுக்கு முன்னதாகவே

- அதை தொடங்கியதும் சாத்வீக வழியிலேயே

- அது தொடங்கியதும் இலங்கை பாராளுமன்றத்திலே

- ஆனால், விடுதலைப்புலிகள் மட்டுமே "தமிழீழம்" என்ற உணர்வையும் தீர்வையும் எல்லா தமிழர்கள் மனங்களில் பதிந்தவர்கள் அதை இறுதிவரை முன்னெடுத்தவர்கள்

- வேறு எந்த தீர்வும் தொடரும் தமிழின அழிப்புக்கு ஆதரவு தருவதாகவே அமையும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் பிரச்சினை என்பது ஒரு விண்கலம். அது போக்கிடமில்லாமல் யார் கண்ணுக்கும் படாமல் தரையில் கிடந்தது. புலிகள் எனும் ரொக்கற் பூஸ்டர் தானாக முன்வந்து அதனை விண்வெளிநோக்கி ஏந்திச் சென்றது.

இதற்காக அது தன்னையே படிப்படியாக அழித்துக்கொண்டது. ரொக்கட்டின் வெப்பம் சுடுகிறது என்றார்கள் சிலர். சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்றார்கள் வேறு சிலர். எங்களை விட்டிருந்தால் நோகாமால் நொங்கு எடுத்துத் தந்திருப்போம் என்றவர்கள் வேறு சிலர்.

எல்லாம் போக, இறுதியில் புவியீர்ப்பைத் தாண்டுகிறது என்று தெரிந்தவுடனே பூஸ்டர் விண்கலத்திலிருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொண்டு கடலில் விழுந்து கரைந்துவிட்டது.

விண்கலம் இப்போது விண்வெளியில் நிறுத்தப்பட்டுள்ளது.

கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

இசையின் விளக்கம் அருமை!புவியீர்ப்பு மண்டலததைத் தாண்டி விட்டது.ஆம் சிறிலங்கா அரசையோ அதன் பிராந்திய அரசையோ தாண்டி சர்வதேசத்திற்குள் எமது பிரச்சனை சென்று விட்டது. அதற்கக் காரணம் புலிகளின் போராட்டமே ஒழிய குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிய அமிர்தலிங்கத்தின் போராட்டமல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் போராடியிருக்காவிட்டால் ... கேள்வியே அர்த்தமற்றது ஏனெனில்

கரைகள் தூங்க விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை

மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை

ஓடி ஓடி ஒளிந்தபோதும் வாழ்க்கை விடுவதில்லை

இதே போல் தான் 80 களின் ஆரம்பத்தில் இருந்த சூழ்நிலையும் ... தமிழன் அமைதியாய் வாழ நினைத்திருந்தாலும் சிங்களமும் இந்தியாவும் விட்டிருக்காது.

Edited by காட்டாறு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.