Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுவை இரத்தினதுரையை மறந்து விட்டோமா? - சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன்

Featured Replies

'சிறகு முளைத்த தீயாக' என்னும் கவிதை நூல் ..

புதுவை இரத்தினதுரையை மறந்து விட்டோமா? - சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன்

கவிஞர் புதுவை இரத்தினதுரையை மறந்து விட்டோமா? என்று சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (14.05.2011) மட்டுவில் ஞானகுமாரனின் 'சிறகு முளைத்த தீயாக' என்னும் கவிதை நூல் அறிமுக விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டார்.

சங்க காலத்துப் புலவர்கள் தொழில்முறைப் புலவர்கள். இவர்களில் அநேகர் அரசர்களைச் சார்ந்து அவர்களை நாளும் புகழ்பாடிப் பொன்னும் பொருளும் பெற்றுவந்தார்கள். ஆனால், எங்களுடைய இலக்கியப் படைப்பாளிகள் தொழில்முறை எழுத்தாளர்கள் அல்லர்ளூ எல்லோருக்குமே வாழ்க்கைக்கான தொழில் இருக்கிறது. எனவே, காலம் மாறும் போது, காட்சி மாறும்போது தங்களையும் உருமாற்றிக் கொண்டு, ஆட்சி அதிகாரங்களைத் துதி பாடுபவர்களாக எமது படைப்பாளிகள் இருக்கக் கூடாது என்றும் சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.

அறிவோர் கூடல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் ஐங்கரநேசன் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலக்கியத்தின் அடிப்படை மனித நேயம், நல்ல மனிதராக வாழ்வதற்கு முயற்சி செய்யும் ஒருவர்தான் அடுத்த கட்டத்தில் இலக்கியம் படைப்பதற்குத் தகுதி பெற்றவர் ஆகிறார். தன்னுடைய மனைவிக்கு ஒரு நல்ல கணவனாகவும், பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தந்தையாகவும், சுற்றத்தாருக்கு ஒரு நல்ல அயலவனாகவும், நண்பர்களுக்கு இடுக்கண் களையும் நட்பாகவும் இல்லாமல் ஒருவர் படைப்பாளியாக முடியாது. இந்த மானுட நேயம் இல்லாமல் ஒரு படைப்பாளியால் தனது அனுபவங்களை அடுத்தவரிடம் தொற்ற வைக்க முடியாது.

கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிராத கலை இலக்கியவாதிகளை யாழ்ப்பாணத்தில் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஏறத்தாழ எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் ஏதோவொரு தேவைக்காக கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களுடன்; தொடர்பு கொண்டிருந்தவர்கள்தான் கவிஞர் புதுவை இரத்தினத்துரை அவர்கள் ஒரு பத்திரிகை நேர்காணலில் 'காலம் என்னைக் கையில் தூக்கி வைத்திருக்கிறது எப்பொழுது என்னுடைய கவிதையின் வேலை முடிகிறதோ அப்பொழுது காலம் என்னைக் கைவிட்டு விடும்' என்று சொல்லியிருந்தார். இப்போது காலம் மட்டுமல்ல: அவருடன் உறவு கொண்டிருந்த கலை இலக்கியப் படைப்பாளிகளும் அவரைக் கைகழுவி விட்டுள்ளார்கள். முள்ளிவாய்க்கால் பெருந்துயரம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இதுவரையில் எந்தவொரு படைப்பாளியோ இலக்கிய அமைப்போ அவர் எங்கே எப்படி இருக்கிறார் என்று கேட்கத் துணியவில்லை. எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மானுட நேயம் என்னும் தமது அடிப்படைத் தகுதியை படைப்பாளிகள் இழந்துவிடக்கூடாது.

இலக்கியத்தைக் காலத்தின் கண்ணாடி என்பார்கள். சமீபத்தில் எமது மூத்த எழுத்தாளர் ஒருவர் 'தீராநதி' இல் எழுதிய 'நந்திக் கடலில் கரைந்த கனவுகள்' என்ற சிறுகதையைப் படித்தேன். மாவிலாறு அணையில் சிங்கள மக்களுக்கான நீர்ப்பாசனத்தை தடுத்து விடுதலைப் புலிகள் தொடக்கி வைத்த யுத்தமே ஒரு சனியனைப் போல நந்திக் கடல் வரை பின்தொடர்ந்து இத்தனை பேரழிவுகளுக்கும் காரணமாக அமைந்தது என்பதே கதையின் சாராம்சம். இலக்கியவாதிகள் படைப்புகளில் காலத்தைப் பிரதிபலிக்கும்போது கூடவே தங்கள் விமர்சனப் பார்வையையும் பதிந்து செல்வது தவிர்க்க முடியாதது. ஆனால் இந்தக் கதையில் எழுத்தாளர் படைப்பிற்குரிய விமர்சன எல்லையையும் தாண்டி வரிக்கு வரி நஞ்சையே கக்கியிருக்கின்றார். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் ஆயுதப் போராட்டம் கருக் கொண்டதற்கான காரணங்கள் அப்படியேதான் நீடிக்கின்றன. அந்த நியாயங்களைப் படைப்புகளில் மறுதலிக்க முற்படுவது வரலாற்றுப் பிழையாகவே அமையும்.

கவிஞர் மட்டுவில் ஞானகுமாரன் சமூகத்தின் மீதான தனது பார்வையை எந்த சமரசமும் இல்லாமல் ஆணித்தரமாகச் சொந்தப் பெயரிலேயே பதிவு செய்து வருகிறார். கருத்துகளை புனை பெயர்களில் மறைந்து கொண்டு சொல்ல வேண்டிய காலச் சூழலிலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், புனை பெயர் எழுத்துகளுக்கும் ஒரு அறநெறி இருக்கின்றது. ஒவ்வொரு ஊடகத்தினதும் ஆசிரியர் பீடத்திற்கேற்பத் தனது எழுத்தை, கருத்தை, சுயத்தை மாற்றிக் கொண்டு, ஒவ்வொரு ஊடகத்திற்கெனவும் ஒவ்வொரு புனைபெயர் வைத்துக் கொண்டு எழுதும் போக்கு உருவாகி வருகிறது. இந்த எமுத்து விபச்சாரத்தனம் கலை இலக்கியப் படைப்பினுள் ஊடுருவுவது படைப்புகளின் ஆரோக்கியத்துக்கு உகந்தது அல்ல என்றும் தெரிவித்தார்.

குப்பிளான் ஐ.சண்முகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நூல் அறிமுக விழாவில் பேராசிரியர் அ.சண்முகதாஸ், கலை இலக்கிய விமர்சகர் சி.ரமேஷ், சு.குணேஸ்வரன், நூலாசிரியர் மட்டுவில் ஞானகுமாரன் ஆகியோரும் உரையாற்றினர்.

www.globaltamilnews.net/

  • கருத்துக்கள உறவுகள்

காலம் எல்லோரையும் மறக்கடிக்கும் போலத்தான் உள்ளது.

எமது மக்களுக்கு நாம், இந்த தலைமுறையில் ஒரு நியாயமான அரசியல் தீர்வை பெற்றால்தான் எமது இனம் வாழும்.

வாழ்ந்தால் தான் தியாகங்கள் அர்ப்பணிப்புக்கள் நினைவில்கொள்ளப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

14485549.jpg

கண்கள் சிவப்பேறிக் கிடக்கின்றன.

அழுகின்றேனா? அனல்கின்றேனா?

விழியோடையில் உலர்ந்த

திரவத்தின் சாட்சியமாக

இமையோரத்தில் பிசுபிசுப்பு.

பிம்பங்களற்ற எழுதுகோல் நட்பின்

கவிதைப் பேச்சும்,

தோழமைக் கடிகளும்

இருண்ட துயருக்குள்…

எழுதும்போதே எண்ணங்கள் தோற்கின்றன

மீளாத் துயரின் வடுக்களாக

ஒளித்தெறிப்புகள் மங்கிக் கலங்குகின்றன.

எல்லையற்ற கற்பனை வெளிகள்

வெறுமைப்பட்டதாய்

ஆங்காங்கே சுமைதாங்கிகளின்

படிமங்களாய்….

உன்னில், என்னில் ஆழப்படிந்து,

உயிர்ப்பின் மூச்சுவரை உட்கார்ந்து விட்டன.

வானம்பாடிகள் ஊமையான

வரலாறு ஒன்று தோற்றம் கொண்டுள்ளது.

பிராணவாயு இல்லாவிடத்தில்

காகித மலர்கள் அழகு செய்கின்றன.

கைகள் குலுக்கிக் கவிதை பேச,

தோளைத் தட்டித் தோழமை உரைக்க

முயன்றும் முடியவில்லை.

நண்பனே!

  • கருத்துக்கள உறவுகள்

புதுவையின் மனைவியும் பிள்ளைகளும் வெளியேறி திருகொணமலையில் ஓரிடத்தில் தங்கியிருக்கிறார்கள் அவர்களை அங்கு தங்கியிருக்க உதவிய பின்னர் யாராவது உதவி வெளிநாட்டிற்கு அவர்களை எடுத்துவிட முடியுமா என நானும் பலரிடமும் இங்கு யாழ்கள உறவுகளிடமும் கூட தொடர்பு கொண்டு கேட்டிருந்தேன். பதில் அவர்கள் மட்டுமா பாதிக்கப்பட்டார்கள் ..இப்படி பலபேர் :lol: :lol:அப்படி யாராவது மறுத்தால் இங்கு பதிவிடவும் ஆதாரங்களுடன் பதில் அல்லது நேரடி தொ.பே 0033611149470 இரவில் வெருட்டவேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்; :lol: :lol:

Edited by sathiri

[இ]சாத்திரியார், புதுவையின் உறவுகள் இங்கிருக்கிறார்கள்!!! ... முயற்சித்தார்கள் சிங்களம் விடவில்லை!!![/இ]

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் மறந்தது மட்டுமல்ல... அன்பினிகளை மூளைச் சலவை செய்ததற்காக அவரையும் வைச்சு கதை எழுதவும் தயங்கமாட்டோம். அதற்குள் வெளிநாட்டுக்கு எடுத்துவிட முயற்சியும் செய்தோம்.. இது வேற.. இவற்றை எல்லாம் அறிய வேண்டும் என்பது எங்கள் தலை எழுத்து.

புதுவை சிறீலங்கா படைகளிடம் பிடிப்பட்டது தெரிந்த விடயமே. அதன் பின்னர் அவருக்கு என்ன ஆனது என்பது எவருக்கும் தெரியாது. தமது உயிருக்கு அதிக அச்சுறுத்தல் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் நோர்வே போன்ற நாடுகளின் தூதரக மட்டத்தில் அரசியல் புகலிடத்துக்கு விண்ணப்பித்து வெளியேற வாய்ப்பு இருக்கிறது. அப்படி நோர்வே தூதரகத்தினூடு வெளியேறி சில பத்துப் பேர் வந்திருப்பதாக அறிய முடிகிறது.

மற்றைய ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால் அந்த நாடுகள் இப்படி வசதி செய்து தருமோ தெரியவில்லை. ஆனால் நோர்வே போன்ற விடுதலைப்புலிகளை தடை செய்யாத நாடுகளிடம் உயிர் அச்சுறுத்தல் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் தூதரக மட்டத்தோடு தொடர்பு கொண்டு அரசியல் புகலிடத்தை பெற்று நாட்டை விட்டு வெளியேறி தங்கள் உயிர்களை பாதுகாத்துக் கொள்வது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஆறுதல் அளிக்கும் விடயமாக அமையும்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் மறந்தது மட்டுமல்ல... அன்பினிகளை மூளைச் சலவை செய்ததற்காக அவரையும் வைச்சு கதை எழுதவும் தயங்கமாட்டோம். அதற்குள் வெளிநாட்டுக்கு எடுத்துவிட முயற்சியும் செய்தோம்.. என்ற விளக்கமும் வேற..!

புதுவை சிறீலங்கா படைகளிடம் பிடிப்பட்டது தெரிந்த விடயமே. அதன் பின்னர் அவருக்கு என்ன ஆனது என்பது எவருக்கும் தெரியாது. தமது உயிருக்கு அதிக அச்சுறுத்தல் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் நோர்வே போன்ற நாடுகளின் தூதரக மட்டத்தில் அரசியல் புகலிடத்துக்கு விண்ணப்பித்து வெளியேற வாய்ப்பு இருக்கிறது. அப்படி நோர்வே தூதரகத்தினூடு வெளியேறி சில பத்துப் பேர் வந்திருப்பதாக அறிய முடிகிறது.

மற்றைய ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால் அந்த நாடுகள் இப்படி வசதி செய்து தருமோ தெரியவில்லை. ஆனால் நோர்வே போன்ற விடுதலைப்புலிகளை தடை செய்யாத நாடுகளிடம் உயிர் அச்சுறுத்தல் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் தூதரக மட்டத்தோடு தொடர்பு கொண்டு அரசியல் புகலிடத்தை பெற்று நாட்டை விட்டு வெளியேறி தங்கள் உயிர்களை பாதுகாத்துக் கொள்வது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஆறுதல் அளிக்கும் விடயமாக அமையும்..!

இதெல்லாம் தெரியாமல் பலர் ஒட்டுக்குழுக்களுக்குப் பணத்தை வாரியிறைத்ததும், கப்பலிலும், படகுகளிலும் ஆபத்தான பயணங்களை அவுஸ்திரேலியா, கனடா என்று மேற்கொண்டு கடலில் மாண்டதும், இந்தோனிசியா, தாய்லாந்து, ஆபிரிக்க நாடுகளில் அல்லாடுவதும் என்று முட்டாள்தனமான வேலைகளைச் செய்திருக்கின்றார்கள். இருப்பவர்களுக்கு நோர்வே போன்ற நாடுகளின் தூதரகங்களில் இருந்து விண்ணப்பப் படிவங்கள் எடுத்துக் கொடுத்தல், அவற்றை நிரப்ப உதவுதல் என்ற "சைட் பிசினஸ்" களை சில படித்தவர்கள் ஆரம்பித்தால் நல்லது. <_<

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் மறந்தது மட்டுமல்ல... அன்பினிகளை மூளைச் சலவை செய்ததற்காக அவரையும் வைச்சு கதை எழுதவும் தயங்கமாட்டோம். அதற்குள் வெளிநாட்டுக்கு எடுத்துவிட முயற்சியும் செய்தோம்.. இது வேற.. இவற்றை எல்லாம் அறிய வேண்டும் என்பது எங்கள் தலை எழுத்து.

புதுவை சிறீலங்கா படைகளிடம் பிடிப்பட்டது தெரிந்த விடயமே. அதன் பின்னர் அவருக்கு என்ன ஆனது என்பது எவருக்கும் தெரியாது. தமது உயிருக்கு அதிக அச்சுறுத்தல் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் நோர்வே போன்ற நாடுகளின் தூதரக மட்டத்தில் அரசியல் புகலிடத்துக்கு விண்ணப்பித்து வெளியேற வாய்ப்பு இருக்கிறது. அப்படி நோர்வே தூதரகத்தினூடு வெளியேறி சில பத்துப் பேர் வந்திருப்பதாக அறிய முடிகிறது.

மற்றைய ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால் அந்த நாடுகள் இப்படி வசதி செய்து தருமோ தெரியவில்லை. ஆனால் நோர்வே போன்ற விடுதலைப்புலிகளை தடை செய்யாத நாடுகளிடம் உயிர் அச்சுறுத்தல் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் தூதரக மட்டத்தோடு தொடர்பு கொண்டு அரசியல் புகலிடத்தை பெற்று நாட்டை விட்டு வெளியேறி தங்கள் உயிர்களை பாதுகாத்துக் கொள்வது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஆறுதல் அளிக்கும் விடயமாக அமையும்..!

இததான் அவசர குடுக்கைத்தனம் எண்டிறது நான் புதுவைவையின் குடும்பத்திற்கு உதவி கேட்டது இரண்டு வருடத்திற்கு முன்னர் அது நேரடியாக கேட்டவர்களிற்கு புரியும் இப்பொழுது அவர்கள் பகாதுகாப்பாகவே உள்ளனர். உங்கள் அதித ஆர்வத்திற்கு நன்றிகள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிகமாக தடுப்பில் உள்ளவர்கள் வெளியேறுவதற்கான ஆலேசனைகளிற்கும் நன்றிகள் ஏனெனில் நேசக்கரம் அமைப்பு சட்டரீதியாக யெர்மன் எஸ் ஓ எஸ் அமைப்புடன் கடந்த இரண்டு ஆண்டுகாலமாக இயங்கி தடுப்பில் உள்ளவர்கள் பற்றிய விடுதலை பற்றியும் செயற்படுகின்றது என்பதனையும் தெரிவித்து கொள்கிறோம். :)

  • தொடங்கியவர்

நாங்கள் மறந்தது மட்டுமல்ல... அன்பினிகளை மூளைச் சலவை செய்ததற்காக அவரையும் வைச்சு கதை எழுதவும் தயங்கமாட்டோம். அதற்குள் வெளிநாட்டுக்கு எடுத்துவிட முயற்சியும் செய்தோம்.. இது வேற.. இவற்றை எல்லாம் அறிய வேண்டும் என்பது எங்கள் தலை எழுத்து.

சாத்திரி, என்னிடமும் இது பற்றி தொடர்பு கொண்டு இருந்தார். உதவி செய்யக் கூடிய நிலையில் நானிருக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

புதுவையின் மனைவியும் பிள்ளைகளும் வெளியேறி திருகொணமலையில் ஓரிடத்தில் தங்கியிருக்கிறார்கள் அவர்களை அங்கு தங்கியிருக்க உதவிய பின்னர் யாராவது உதவி வெளிநாட்டிற்கு அவர்களை எடுத்துவிட முடியுமா என நானும் பலரிடமும் இங்கு யாழ்கள உறவுகளிடமும் கூட தொடர்பு கொண்டு கேட்டிருந்தேன். பதில் அவர்கள் மட்டுமா பாதிக்கப்பட்டார்கள் ..இப்படி பலபேர் :lol: :lol:அப்படி யாராவது மறுத்தால் இங்கு பதிவிடவும் ஆதாரங்களுடன் பதில் அல்லது நேரடி தொ.பே 0033611149470 இரவில் வெருட்டவேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்; :lol: :lol:

என்ன செய்வது நீங்கள் கூறுவதைக் கேட்கவேண்டியிருக்கிறது. சூட்சுமம் நானறிவேன் சாத்திரியண்ணா வேண்டாம் தம்பட்டம். நான் மௌனவிரதத்தில் இருக்கிறேன். அறிந்தவர் அறிவர்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது நீங்கள் கூறுவதைக் கேட்கவேண்டியிருக்கிறது. சூட்சுமம் நானறிவேன் சாத்திரியண்ணா வேண்டாம் தம்பட்டம். நான் மௌனவிரதத்தில் இருக்கிறேன். அறிந்தவர் அறிவர்

எட்டநின்று எட்டியெட்டிப்பார்த்தால் எல்லாமே சூட்சுமமாகத்தான் தெரியும் கிட்டே வந்து தொட்டுப்பாருங்கள் சூட்சுமமும் இல்லை சூத்திரமும் இல்லை. ^_^ உங்கள் மௌனத்தை மட்டுமல்ல எதயுமே கலைத்துவிடாதீர்கள் அவை அப்படியே இருப்பதுதான் நல்லது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பாக சாத்திரி என்னுடன் தொலைபேசியில் கதைத்தார்

தனியே என்னால் மட்டும் என்றால் அந்தளவுக்கு வசதியில்லை. ஆனால் ஆட்களைச்சேருங்கள். அதில் என்னையும் ஒருவராக சேருங்கள் என்று சொல்லியிருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி, என்னிடமும் இது பற்றி தொடர்பு கொண்டு இருந்தார். உதவி செய்யக் கூடிய நிலையில் நானிருக்கவில்லை

உங்கள் நிலமையை நீங்கள் சாத்திரியிடம் தெரிவித்தீர்கள் வெளிப்படையாக. ஆனால் உணர்வுமயமாக புதுவை பற்றி எழுதிய எழுதும் சிலரை அதீதமாக நம்பினோம். ஆனால் அவர்கள் ஏதோ பெரும் அரசியல் சாணக்கியர்கள் போல நடந்து கொண்டார்கள். அதுதான் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. புதுவை தன்னை மறக்காதது போன்று நடிக்கின்ற நண்பர்களையும் பெற்றதுதான் துர் அதிஸ்ட்டம்.

இது தொடர்பாக சாத்திரி என்னுடன் தொலைபேசியில் கதைத்தார்

தனியே என்னால் மட்டும் என்றால் அந்தளவுக்கு வசதியில்லை. ஆனால் ஆட்களைச்சேருங்கள். அதில் என்னையும் ஒருவராக சேருங்கள் என்று சொல்லியிருந்தேன்.

உங்கள் போன்று எங்கள் உதவியையும் இணைத்து பலரைத் தேடினோம் பேசினோம் ஆனால் யாரும் உதவ வரவில்லை. ஆனால் வாய்களால் கனக்கச் சொன்னார்கள்.

முடிந்த கதை இதையெல்லாம் ஞாபகப்படுத்தக்கூடாது இப்போதைய புதுவையின் நிலமையென்ன என்று நீதி கேட்க வேண்டும் இதைவிட்டிட்டு கடந்த காலத்தையெல்லாம் ஏன் கிண்டுறியள் எனத்திட்ட வரும் புலிகளின் உத்தியோக பூர்வ அரசியில் அறிவியில் ஆர்வல ஆய்வாள அதிவிசுவாசிகள் வர முன்னம் பொத்திக் கொண்டு போய்விடுகிறேன் :o

  • கருத்துக்கள உறவுகள்

எட்டநின்று எட்டியெட்டிப்பார்த்தால் எல்லாமே சூட்சுமமாகத்தான் தெரியும் கிட்டே வந்து தொட்டுப்பாருங்கள் சூட்சுமமும் இல்லை சூத்திரமும் இல்லை. ^_^ உங்கள் மௌனத்தை மட்டுமல்ல எதயுமே கலைத்துவிடாதீர்கள் அவை அப்படியே இருப்பதுதான் நல்லது :lol:

சரியண்ணா உங்களுடைய நேசக்கரந்தான் அவர்களை வெளியே எடுத்து இன்றுவரை பாதுகாப்பு வாழ்வாதாரங்களையும் வழங்கிக் கொண்டிருக்கிறது. நான் வேறு விதமாகக் கேள்விப்பட்டேன் அதான் சூட்சுமம் அறிவேன் என்று எழுதினேன். நீங்களே தொடர்ந்தும் செய்வீர்கள்தானே. என்ன செய்ய அந்தக்கவிஞனுக்குத்தான் சொந்தபந்தம் என்று எவரும் வெளிநாட்டில் இல்லைப்போலும் :(

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி, என்னிடமும் இது பற்றி தொடர்பு கொண்டு இருந்தார். உதவி செய்யக் கூடிய நிலையில் நானிருக்கவில்லை

இது தொடர்பாக சாத்திரி என்னுடன் தொலைபேசியில் கதைத்தார்

தனியே என்னால் மட்டும் என்றால் அந்தளவுக்கு வசதியில்லை. ஆனால் ஆட்களைச்சேருங்கள். அதில் என்னையும் ஒருவராக சேருங்கள் என்று சொல்லியிருந்தேன்.

விளக்கைக் கண்டு ஏமாறும் விட்டில் பூச்சிகள்.

கேட்கப்பட்ட உதவிகளுக்குப்பின்னால் எத்தனை குழப்ப நிலையிருந்தது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் சாத்திரியண்ணாவிற்கு?!

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியண்ணா நீங்கள் கவிஞரின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறீர்கள். பலவிடயங்களை அறிந்திருப்பீர்கள் அந்தவகையில் இப்போது கவிஞர் எங்கே? உங்களுக்குத் தெரியாமல் போக வாய்ப்பிருக்காது.உங்களிடம் இருந்து சில தகவல்களை எதிர்பார்க்கிறேன்.

  • தொடங்கியவர்

விளக்கைக் கண்டு ஏமாறும் விட்டில் பூச்சிகள்.

வெறும் உணர்ச்சிக் குவியலகாக இருப்பதை விட நான் தொடர்ந்து விட்டில் பூச்சியாகவே இருந்து விட்டு போகின்றேன்..

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் உணர்ச்சிக் குவியலகாக இருப்பதை விட நான் தொடர்ந்து விட்டில் பூச்சியாகவே இருந்து விட்டு போகின்றேன்..

வெட்டுக்கிளியை விட்டில்பூச்சியாக மாற்றிவிட்டால் போகிறது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருடம்வரை இலங்கையின் சிறைச்சாலைகள மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக டி யு குணசேகரா இருந்தார் அவருடனான எமது தனிப்பட்ட தொடர்புகளை வைத்து நாம் எமதுமக்களிற்கான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம் அவை செய்திகளாகவும் வெளிவந்திருந்தது. அதுபற்றிய ஒரு செய்தி யாழிலும் இணைத்திருந்தேன்.இணைப்பு இங்கே .அப்படியாக காலகட்டத்தில் புலிகள் அமைப்பிலிருந்து சரணடைந்த கைது செய்யப்பட்டவர்களின் பெயர்பட்டியல் ஒன்றினை குணசேகரா அவர்களிடம் கொடுத்து அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்களா??அப்படி தடுத்து வைக்கப்பட்டிருந்தால் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என விபரம் தரும்படி கேட்டிருந்தோம். அந்தப் பெயர் பட்டியலில் புதுவை இரத்தின துரையின் பெயரும் இருந்தது. எமக்கு அவர்தந்த பதில் உயிருடன் இருப்பவர்கள் பட்டியல்களின் புதுவையின் பெயர் இல்லை அவர்இறந்து விட்டார் அவரது உறவினர்கள் தொடர்புகொண்டால் அவரின் மரணச்சான்றிதழை பெற்றுக்கொடுக்க முடியும் என தெரிவித்திருந்தார்.அதே நேரம் அவர் எப்படி இறந்தார் எங்கு இறந்தார் என்கிற விடயங்கள் பாதுகாப்பு அமைச்சு சம்பத்தப்பட்டது அதற்கு தன்னால் எதனையும் சொல்லமுடியாது என்று விட்டார். அந்தச் செய்தியை புதுவையின் குடும்பத்தினரிற்கும் தெரிவித்திருந்தோம். ஆனாலும் அவர்கள் மீண்டும்ஒரு முயற்சியாக டக்லஸ் தேவானந்தா ஊடாக பாதுகாப்பு அமைச்சிடம் விசரித்திருந்தார்கள். அவர்களிற்கும் மரணச்சான்றிதழ் தரலாம் என்கிற பதிலே கிடைத்தது. அத்துடன் அவர்களும் தேடும் முயற்சிகளை கைவிட்டுவிட்டனர். எனவே புதுவை உயிருடன் இல்லையன்பது உறுதியாகிவிட்டது. அதுக்காக புதுவை இறந்துவிட்டார் என்று நீ எப்படி சொல்லலாம அவர் இறக்கவில்லை எங்கள் மனங்களில் வாழ்கிறார்; என என்னுடன் சண்டைக்கு வரவேண்டாம். அமைச்சர் சொன்ன தகவலை இங்கு எழுதினேன். அடுத்ததாய் சகாராநீங்கள் கேள்விப்பட்ட சூட்சுமத்தையும் இங்கு சொன்னால் நாங்களும் அங்காந்து அண்ணாந்து வாய்திறந்து கேட்போமில்லை...மற்றும் என்னை விளக்கு அளவிற்கு உயர்த்தி எழுதியதற்கு நன்றிகள்.விளக்குமாறு என்று எழுதியிருந்தாலகூட பரவாயில்லை. முடிந்தால் ஒரு அஞ்சலிக்கவிதை எழுதிப் போடுங்கள்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் உணர்ச்சிக் குவியலகாக இருப்பதை விட நான் தொடர்ந்து விட்டில் பூச்சியாகவே இருந்து விட்டு போகின்றேன்..

நிழலிக்கு ஒரு பச்சை.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையரசும் அதன் பாதுகாப்புப் படைகளும் கன கச்சிதமாகப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களை போரின் இறுதியிலும், அதன் பின்னரும் அழித்துவிட்டது. இதைத் தடுத்திருக்கவோ, அல்லது இந்த அழிப்புக்களின் சூத்திரதாரிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கவோ தமிழர்களால் முடியவில்லை/ முடியாது என்பதுதான் யதார்த்தம்.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை கூட எமது அவலங்கள் நடந்து இரண்டு வருடத்துக்குள் வெளிவரும் என்று பலரும் எண்ணியிருக்கவில்லை.

இன்று நாம் வாழ்ந்து நம்பிக்கையின் காலங்களில். தென் சூடான் மக்களுக்கு அடுத்தவருடம் நாடு கிடைக்கின்றது. துனிசியா, எகிப்திய மக்கள் ஒரு உண்மையான மக்களாட்சியை வென்றுள்ளார்கள். யேமன் மக்கள் தமது சர்வாதிகாரியை அகற்றும் முயற்சியில் வெற்றியை அண்மித்துள்ளர்கள். நீண்ட கால பலஸ்தீன மக்களின் நாடு கூட புரட்டாதி மாதம் கிடைக்கும் அறிகுறிகள் உள்ளன.

நம்பிக்கையே வாழ்வு.

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் சபை கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்படும் போது அவர்களைப் பாதுகாக்கத் தவறியிருந்தது. மேற்கு நாடுகள் பாராமுகமாக இருந்தன. இவையே மத்திய-கிழக்கில் அரபு எழுச்சியை ஆதரிக்கின்றன. தங்களின் நலன் சார்ந்த விடயங்களில் உலகம் மனிதயுரிமை விடயங்களிலும் பாகுபாடு காட்டுகின்றது என்பது, நிபுணர் குழு அறிக்கை வந்தபின்னர் நடக்கும் விடயங்கள் தெளிவாகக் காட்டுகின்றது. எனவே இந்த நிபுணர் குழு அறிக்கையை வைத்து இலங்கையரசை அழுத்தத்திற்குள் தள்ளவேண்டுமானால், மேற்கு நாடுகளினதும் இந்தியாவினதும் ஆதரவு வேண்டும் (கிடைக்கும் என்று தெரியவில்லை). இல்லையேல் அறிக்கை நீர்த்துப் போக அதிக காலம் எடுக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.