Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனிமொழி கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனிமொழியின் கணவர் பெர்யர் அரவிந்தன், இவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளையும் உண்டு

ஒருவரின் தனிப்பட்ட வாழ்வு குறித்த விமர்சனங்களை வைக்காது விடுதல் நல்லது

எம்மவர்கள் கடைசி நேரத்தில் மன்றாடிக்கேட்டும்......மூன்றுமணித்தியால வெற்றி உண்ணாவிரதத்தினை முடித்து போர்நிறுத்தம் முடிந்ததாக அறிக்கை விட்ட செம்மல்செம்மறி எங்கே?

என் இனம் அழிந்து வடுகாயமுன்......வன்னி பூமியில் ஓடிய இரத்த ஆறுகாய முன் மகிந்தவிற்கு வாழ்த்து தெரிவிக்கச்சென்ற நாதாரி மகள் எங்கே?

எமக்கு திமுக கட்சி எதிரியல்ல.

Edited by குமாரசாமி

  • Replies 70
  • Views 8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்தலையில் பொல்லால் சந்தர்ப்பவசத்தால் அடிக்க வருபவனுக்கு அதை அவன் மனப்பூர்வமாகச் செய்வதற்கு வேண்டிய வலியைக் கொடுக்கின்றோம். சரி இத்தகைய வன்மத்தனமான கருத்துக்களால் துளிஅளவிற்காவது பயன்பாடு உண்டு என்றால் ஆவது ஏற்றுக் கொள்ளலாம். அப்படியும் அல்லாமல் நிட்சயமாக எதிர்வினையாற்றும் நடவடிக்கைகளில் ஒன்றே இது!

தமிழ் நாட்டில் பழம் தின்ரு கொட்டை போட்டவர்கள் மத்தியில் இந்த கருனாநிதி குடும்பம் கருங்கல்லை தின்று ஏப்பம் விடும் குடும்பம்,.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இன்றுவரை மனதளவிவில் யாரையும் அழியுமளவிற்கு வேண்டியதில்லை.

இருந்தும்... ஏனோ தெரியவில்லை கண்ணுக்கு முன்னாலே வாயில் மண் அள்ளிப்போட்டவர்களை என்னால் ஜீரணிக்கமுடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எம்தலையில் பொல்லால் சந்தர்ப்பவசத்தால் அடிக்க வருபவனுக்கு அதை அவன் மனப்பூர்வமாகச் செய்வதற்கு வேண்டிய வலியைக் கொடுக்கின்றோம். சரி இத்தகைய வன்மத்தனமான கருத்துக்களால் துளிஅளவிற்காவது பயன்பாடு உண்டு என்றால் ஆவது ஏற்றுக் கொள்ளலாம். அப்படியும் அல்லாமல் நிட்சயமாக எதிர்வினையாற்றும் நடவடிக்கைகளில் ஒன்றே இது!

நாங்கள்.... தமிழினத்தின் தலைவா...

உதவி செய்ய , வா ....

என்று, கேட்ட போது... செய்யாத உதவி.

கருணாநிதியால் மீண்டும் செய்ய முடியாது.

செத்த பிணத்தையும், இழந்த நிலத்தையும் இனி ஒரு ராஜ ராஜ சோழனே வந்து மீட்டுக் கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயா ஆன்டிக்கு சோ ஆலோசகரா இருக்கும் வரைக்கும் ஈழத்தமிழர் விடயத்தில் ஒன்டுமே செய்யபோறதில்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள்.... தமிழினத்தின் தலைவா...

உதவி செய்ய , வா ....

என்று, கேட்ட போது... செய்யாத உதவி.

கருணாநிதியால் மீண்டும் செய்ய முடியாது.

செத்த பிணத்தையும், இழந்த நிலத்தையும் இனி ஒரு ராஜ ராஜ சோழனே வந்து மீட்டுக் கொடுக்க வேண்டும்.

தமிழகத்தின் அரசியல் தலைமை எதுவாயினும் அவர்களுக்கு உயிர் மூச்சாய் இருப்பது பதவிஆசை. அதற்கு எந்தப் பாதை மிக அநுகூலமானது என்பதுதான் அவர்கள் அதை தெரிவு செய்வதற்கு ஒரே காரணமாகும். எமக்கோ அவர்களது பதவிஆசைக்கு பதிலாக வேறெந்த ஒன்றையும் மாற்றுவதற்கு முடியாது, ஆனால் அந்த பதவி ஆசைக்கு அநுகூலமான அந்தப் பாதையை எமக்கு பயன்படத்தக்கதாக மாற்ற முடியும். இப்போது நாம் கலைஞரின் தலையில் ஒட்டுமொட்த பழியையும் போடுகின்றோம், அது குற்றமும் இல்லை. ஆனால், அன்று ஜெயாவிற்கு எமக்கு உண்மையாக உதவி செய்ய விருப்பம் இருந்திருந்தால் திமுகவும் தனது பாதையை நிட்சயம் மாற்றியே இருக்கும். அது ஜெயா செய்யாமைக்கான காரணம் திமுக என்ற கட்சிக்கு நல்ல பேர்வந்துவிடும் என்ற நிலைதான். கட்சித் சுயநலவாதம் தான் முழுக்க முழுக்க காரணம்!

நல்லவன் மேல் பைத்தியமாய் இருக்கலாம் குற்றம் இல்லை ஆனால் ஒருவன்மேல் பைத்தியமாய் இருப்பதன் மூலம் அவனை நல்லவனாய் ஆக்க முடியாது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருப்பினும்...ஈழத்தமிழனின் மாபெரும் இன அழிவு...... பதவிஆசை பிடித்தவனின் கைகளாலேயே நடந்துமுடிந்தது.

பல இனப்படுகொலைகளை இனிதே நடாத்திய சிங்களவன் .....கருணாநிதியின் இந்த செயலுக்கு வெட்கித்தலைகுனியவேண்டும்.

காரணம்............. அமைதிப்போராட்டம் எனும் பெயரில் ஈழ இன அழிப்பிற்கு துணை போன...................தன்னிகரில்லா சிங்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயா ஆன்டிக்கு சோ ஆலோசகரா இருக்கும் வரைக்கும் ஈழத்தமிழர் விடயத்தில் ஒன்டுமே செய்யபோறதில்ல

உண்மைதான்.......ஆனால் ஜெயலலிதா அவர்கள்! ஈழத்தமிழனுக்கு ஒரு நாடு துணைபோக அல்லது அவனுக்கு ஒரு நிரந்தர நாடு கிடைக்க உதவுவாரானால்?????

ஈழத்தில் ஒரு நல்லூர்க்கந்தனோ?செல்வச்சநிதியானோ?நயினைஅம்மனோ?முருகண்டிபிள்ளையாரோ? ஏன் மாமாங்கபிள்ளையாரே இருக்காது!

எல்லா இடங்களிலும் ஈழத்துதமிழன் ஜெயலலிதாவிற்கு விண்ணைமுட்டும் கோபுரத்துடன் கோவில்கட்டி கும்பிடுவான்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.......ஆனால் ஜெயலலிதா அவர்கள்! ஈழத்தமிழனுக்கு ஒரு நாடு துணைபோக அல்லது அவனுக்கு ஒரு நிரந்தர நாடு கிடைக்க உதவுவாரானால்?????

ஈழத்தில் ஒரு நல்லூர்க்கந்தனோ?செல்வச்சநிதியானோ?நயினைஅம்மனோ?முருகண்டிபிள்ளையாரோ? ஏன் மாமாங்கபிள்ளையாரே இருக்காது!

எல்லா இடங்களிலும் ஈழத்துதமிழன் ஜெயலலிதாவிற்கு விண்ணைமுட்டும் கோபுரத்துடன் கோவில்கட்டி கும்பிடுவான்.

உண்மை தான் கு.சா.

ஜெயலலிதாவினுடைய 'லலிதாம்பாள்' கோவிலில் , ஒரு மரியாதைக்காக ' சோவுக்கும்' சண்டேசுவரர் மாதிரி ஒரு சின்னதாக ஒரு கோவிலும் கட்டி வைப்பான்!

கனிமொழி, ராசா நீதிமன்றத்தில் ஆஜர்; ராசாத்தி அம்மாள் கண்ணீர்

புதுதில்லி, மே.21: தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்டோர் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாளும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

நீதிமன்றத்துக்கு வந்த ராசாத்தி அம்மாள், கனிமொழியைப் பார்த்து கண்கலங்கினார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி நேற்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் கைது செய்யப்பட்டார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் 'கூட்டு சதியாளர்' என துணை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட கனிமொழியின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி நேற்று நிராகரித்து உத்தரவிட்டார். அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியும் உத்தரவு பிறப்பித்தார்.

2ஜி அலைக்கற்றை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி வருமான இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ இந்த முறைகேடு குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டது.

விசாரணையை அடுத்து முதல் குற்றப்பத்திரிகையில் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து சமீபத்தில் சிபிஐ தனது துணை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

அதில் 2ஜி அலைக்கற்றையை விதிமுறைகளுக்கு மாறாக ஒதுக்கீடு செய்ததில் பயனடைந்ததாகக் கூறப்படும் ஷாகித் பல்வாவுக்குச் சொந்தமான டிபி ரியாலிட்டி நிறுவனம், குசேகாவ்ன் மற்றும் சினியுக் பிலிம்ஸ் ஆகியவை மூலமாக கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.214 கோடி நிதி அளித்தது தெரியவந்தது.

இதனடிப்படையில் கலைஞர் தொலைக்காட்சியின் 60 சதவீத பங்குதாரரான தயாளு அம்மாள், 20 சதவீத பங்குதாரரான கனிமொழி, 20 சதவீத பங்குதாரரான கலைஞர் டி.வி. மேலாண்மை இயக்குநர் சரத்குமார் ஆகிய மூவரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

ஊழல் குற்றச்சாட்டை கவனத்தில் கொள்ளும்போதும் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் ஜாமீன் அளித்தால், கலைஞர் தொலைக்காட்சியின் ஊழியர்களின் சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இவர்கள் இருவருக்கும் ஜாமீன் அளிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். தொடர்ந்து கனிமொழி, சரத்குமார் ஆகிய இருவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி உத்தரவு பிறப்பித்தார்.

திகார் சிறையில் 150 சதுர அடி (15-க்கு 10) அறையில் கனிமொழி அடைக்கப்பட்டுள்ளார்.

அந்த அறையில் ஏ.சி. உள்ளிட்ட வசதிகள் கிடையாது. தொலைக்காட்சி, மின்விசிறி உள்ளிட்ட வசதி அவருக்கு அளிக்கப்படும். செய்தித்தாள்களும் அவருக்கு வழங்கப்படும் . இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்தில் பணி புரிந்து, பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்ட மாதுரி குப்தா, தில்லியில் விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட சோனு பஞ்சாபன், தில்லியில் கவுன்சிலர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள சாரதா ஜெயின் ஆகியோர் கனிமொழி அடைக்கப்பட்டுள்ள சிறை எண் 6-ல் ஏற்கெனவே உள்ளனர்.

கனிமொழியுடன் கைது செய்யப்பட்ட கலைஞர் டி.வி. மேலாண்மை இயக்குநர் சரத் குமார், சிறை எண் 4-ல் அடைக்கப்பட்டுள்ளார். காமன்வெல்த் விளையாட்டு ஊழலில் சிக்கியுள்ள சுரேஷ் கல்மாடி, நால்கோ முன்னாள் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அபய் குமார் ஆகியோரும் சிறை எண் 4-ல் தான் உள்ளனர்.

இதே வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோரும் திகார் சிறையில்தான் உள்ளனர்.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=420966&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதிக்கு ஏற்பட்ட இந்த அவலத்தை நாம் கொண்டாடுவதில் என்ன தப்பு?இந்த நிலை ஜெயலலிதாவுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்.பதவியில் இருக்கையில் எதுவும் செய்யலாம் என்பதையிட்டு யோசிக்க வைப்பதற்கான எச்சரிக்கை இது.காங்கிரசும் திமுகவும் படுதோல்வி அடைந்ததற்கு இந்த ஊழல் மட்டுமல்ல. இன அழிப்பும் ஒர காரணம் என்பதை உணர்த்தட்டும்.இருக்கின்ற செல்வாக்கைத் தொடர்ந்து தக்க வைத்து அடுத்த பொதுத் தேர்தலில் 40 இடங்களையும் வென்று இந்தியாவின் பிரதமராவதற்கு ஊழல் அற்ற ஆட்சி யுடன் கடந்த பொ|துத் தேர்தலில் ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமை தொடர்பாக பேசி வந்த கருத்துக்கு செயல் வடிவம் கொடுப்பதே நல்லது.புரியுமா?அல்லது வேதாளம் பழையபடி முருங்கை மரம் ஏறுமா?

  • கருத்துக்கள உறவுகள்

களி மொழி!

Edited by புலவர்

ஆடிய ஆட்டம் என்ன? கூடிய கூட்டம் என்ன? தேடிய செல்வம் என்ன?

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி எழுதிய நூல்கள், திரைப்படக்கதை வசனங்கள், குறளோவியங்கள் என அனைத்தும் மனித வாழ்வியலின் உணர்த்தலுக்கு உதவுவன. இவற்றின் பெறுமதியும் அவரின் பேச்சுச் சிறப்பும் சேர்ந்தே கலைஞரின் எழுச்சிக்கு வித்திட்டன எனலாம். இவ்வாறு கதைகளையும் இலக்கிய இரசனை தத்துவங்களையும் தந்த கலைஞர் மு.கருணாநிதியின் வாழ்க்கை இப்போது எல்லோருக்கும் ஒரு பாடமாக அமைந்துவிட்டமை விதியின் விளையாட்டெனலாம்.

ஆம், கலைஞர் மு.கருணாநிதியின் பின்னடி வாழ்க்கை, அவரின் குடும்பத்தில் ஏற்பட்ட சர்ச்சை, தனது மகன் ஸ்ராலினை தமிழகத்தின் முதலமைச்சர் ஆக்குவதற்கு அவர் எடுத்த முயற்சி, அவரின் முயற்சிக்கு அவரின் மற்றைய பிள்ளைகள் காட்டிய எதிர்ப்பு, தனக்கு உதவும் என்று நினைத்த, சன் தொலைக்காட்சி, தென்னிந்தியத் திரைப்படத் துறையில் தனது செல்வாக்கை பிரயோகிக்க முற்பட்டமை,

வாக்களிப்புத் தினமன்று நடிகர் ரஜனிகாந் ‘ஊழலுக்கு எதிராக வாக்களித்தேன்’ எனக் பேட்டி கொடுக்க அதனை எந்த வியூகம் கொண்டும் தடுக்க முடியாமல் கலைஞர் திண்டாடியமை, அதன் விளைவாக எத்தனையோ நாட்களாக செய்துவந்த தி.மு.கவின் தேர்தல் பிரசாரம் தவிடு பொடியாகி போனமை, அதன் காரணமாக 86 வயதில் தமிழகத்தின் முதலமைச்சர் என்ற பதவியைத் துறந்து தள்ளா வயதில் தாங்கொணாத் துன்பத்தில் மூழ்கிப் போனமை என மிகப்பெரியதொரு சூறாவளி மிகக்குறுகிய காலத்தில், கலைஞரின் வாழ்வில் வீசியது.

கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது என்பது போல முதுமையில் கொடிது தாங்கொணாத் துன்பம் என்பது நம்முடிபு. அந்த தாங்கொணாத் துன்பம் பதவியிழப்போடு நின்றுவிடும் என்றால் விதி விடுவதாக இல்லை.இப்போது கலைஞரின் மகள் கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளார். இருந்த இடத்திலிருந்து ஒரு அடி எடுத்து வைப்பதென்றாலும் இன்னொருவரின் உதவி கலைஞர் கருணாநிதிக்குத் தேவை.எனினும் அவர் முதலமைச்சராக இருந்தபடியால் கால் பிடிக்க, கை பிடிக்க, காலைக்கடன் முடிக்க என அவருக்கு உதவுவதற்கு ஏராளமானோர் காத்திருந்தனர்.

அதனால் அவரின் உடல் பலவீனம் எதுவும் உபாதையாகத் தோன்றவில்லை. இதற்கு மேலாக ஒவ்வொரு கூட்டங்களிலும் கலைஞருக்கு அர்ச்சிக்கப்படும் புகழ் மாலைக்கு குறைவே இல்லை. வயோதிப காலத்தில் புகழை விரும்பும் மனித இயல்பில் அந்த புகழ்மாலையும் கலைஞரின் இதயத் திற்கு தென்பைக் கொடுத்தன. ஆனால் இப்போது கனிமொழியின் கைது அவரை மேலும் வாட்டவே செய்யும். ஆடாத ஆட்டம் என்ன? கூடாத கூட்டம் என்ன? தேடாத செல்வம் என்ன?

இந்தப்பாடல் வரிகள்தான் கலைஞரை நினைக்கும் போது ஞாபகத்துக்கு வருகிறது.

நடந்தால் நாடெல்லாம் உறவு

படுத்தால் பாயும் பகை

- தமிழ்ப்பழமொழி

http://valampurii.com/online/viewnews.php?ID=19262

கீழே கொடுக்கப் பட்டுள்ள இந்தப் பட்டியல், சவுக்கு விசாரித்து சேகரித்த பட்டியல். இது முழுமையான பட்டியல் அல்ல. இவை வெறும் அசையா சொத்துக்கள். வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கருப்புப் பணம் இதில் சேர்க்கப் படவில்லை.

1. கருணாநிதியின் கோபாலபுரம் வீடு 6124 சதுர அடி. மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோபாலவுரம் வீடு மதிப்பு 5 கோடி

3. முரசொலி செல்வம் வீடு கோபால புரம் 1200 சதுர அடி. மதிப்பு 2 கோடி

4. சொர்ணம் பெயரில் உள்ள வீடு, கோபாலபுரம் மதிப்பு ரூ.4 கோடி

5. மு.க.முத்து பெயரில் உள்ள வீடு, கோபாலபுரம், மதிப்பு ரூ.2 கோடி

6. அமிர்தத்தின் வீடு, கோபாலபுரம் மதிப்பு ரூ.5 கோடி

7. செல்வி மகள் எழிலரசி பெயரில் கோபாலபுரம் வீடு. மதிப்பு 2 கோடி.

8. சிஐடி காலனி ராசாத்தி அம்மாள் வீடு 9494 சதுர அடி நிலம். 3500 சதுர அடி கட்டிடம் மதிப்பு 5 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் 300 ஏக்கர் நிலம் ராசாத்தி அம்மாள் மற்றும் கனிமொழி பெயரில் மதிப்பு 4.5 கோடி.

10. ராயல் பர்னிச்சர்ஸ் ராசாத்தி அம்மாள் பெயரில் உள்ளது. மதிப்பு 10 கோடி

11. மு.க.ஸ்டாலின் பெயரில் வேளச்சேரியில் உள்ள வீடு. 2687 ச.அடி நிலம். 2917 ச.அடி கட்டிடம். மதிப்பு 2 கோடி.

12. உதயநிதியின் ஸ்னோ பவுலிங், நுங்கம்பாக்கம் மதிப்பு 2 கோடி.

13. கலாநிதி மாறனின் போட் கிளப் வீடு. 16 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.

14. கொட்டிவாக்கம் அருகே பண்ணை வீடு மாறன் சகோதரர்கள் 10 கோடி.

15. ராமச்சந்திரா மருத்துவமனை அருகே எம்எம் இன்டஸ்ட்ரீஸ் மதிப்பு 2 கோடி

16. கோடம்பாக்கம் முரசொலி கட்டிடம் 6 கிரவுண்ட் நிலம் மற்றும், அரசு நிலம் 1472 சதுர அடி ஆக்ரமிப்பு. மதிப்பு 20 கோடி.

17. சன் கேபிள் விஷன், மஹாலிங்கபுரம், கோடம்பாக்கம் 2 கிரவுண்ட் நிலம் மற்றும் உபகரணங்கள். 5 கோடி.

18. சன் டிவியின் எம்ஆர்சி நகர் நிலம் 32 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.

19. கோரமண்டல் சிமின்ட்ஸ் நிறுவனத்தில் 11 சதவிகித பங்குகள். மதிப்பு 50 கோடி.

20. பெங்களுரில் செல்வம் பெயரில் 4 படுக்கையறை கொண்ட ஃப்ளாட். மதிப்பு 4 கோடி.

21. பெங்களுர் மைசூர் சாலையில் செல்விக்கு சொந்தமான 1 ஏக்கர் பண்ணை வீடு. மதிப்பு 80 கோடி.

22. மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான 1.84 ஏக்கர் பண்ணை வீடு. மதிப்பு 120 கோடி.

23. பெங்களுரில் உள்ள உதயா டிவி அலுவலகம். 10 கிரவுண்ட் நிலம். மதிப்பு 108 கோடி.

24. மு.க.தமிழரசுவின் ரெயின்போ பிரின்டர்ஸ், பீட்டர்ஸ் சாலை. மதிப்பு 48 கோடி.

25. மு.க.தமிழரசுவின் அந்தியூர் நிலம் 13 கிரவுண்டுகள். மதிப்பு 30 லட்சம்.

26. சன் டிவியின் டெல்லி அலுவலகம். மதிப்பு 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்சில் பங்கு (மதிப்பு தெரியவில்லை)

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)

30. முரசொலி ட்ரஸ்ட் (மதிப்பு தெரியவில்லை)

31. ஸ்பைஸ் ஜெட் நிறுவன பங்குகள் 37 சதவிகிதம் ஒரு பங்கு 48 ரூபாய் விலைக்கு அமேரிக்க முதலீட்டாளர் வில்பர் ராஸ் மற்றும் ராயல் ஹோல்டிங்ஸ் சர்வீசஸ் என்ற நிறுவனம் மூலமாக, கன்ஸக்ரா என்ற குடும்பத்திடமிருந்து வாங்கப் பட்டது. இதை வாங்கும் போத, தனது மொத்த மதிப்பு என்று கலாநிதி மாறன் குறிப்பிட்டது 13,384 கோடி.

32. தயாளு அம்மாள் ட்ரஸ்ட் பெயரில், மதுரை மாவட்டம், மாடக்குளம் கிராமத்தில் 21 சென்ட் ஏக்கர் நிலம்

33. தஞ்சாவூர் மாவட்டம், அகரத்திருநல்லூர் கிராமத்தில் 21.30 ஏக்கர் நிலம், கருணாநிதி பெயரில்.

34. தயாளு அம்மாள் பெயரில் திருவள்ளுர் மாவட்டத்தில் 3.84 ஏக்கர் நிலம் மதிப்பு 1 கோடி.

35. துர்கா ஸ்டாலின் பெயரில் நந்தியம்பாக்கம், திருவள்ளுர் மாவட்டத்தில் 3680 ச.அடி நிலம். மதிப்பு 60 லட்சம்.

36. மதுரை வடக்கு தாலுகா, ஊத்தங்குடி கிராமத்தில் 2.56 ஏக்கர் அழகிரி பெயரில் மதிப்பு 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுகா, கள்ளந்திரி கிராமத்தில் 7.53 ஏக்கர் நிலம் மதிப்பு 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் 1.54 ஏக்கர், அழகிரி பெயரில் மதிப்பு 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுகா, சின்னப்பட்டி கிராமத்தில் 1.54 ஏக்கர் நிலம் அழகிரி பெயரில் மதிப்பு 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றம் 12 சென்ட் நிலம். அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.

41. மதுரை தெற்கு, மாடக்குளம் கிராமத்தில் 36 சென்ட் நிலம் அழகிரி பெயரில். மதிப்பு 1 கோடி.

42. மதுரை தெற்கு, பொன்மேனி கிராமத்தில் 18,535 சதுர அடி நிலம் அழகிரி பெயரில் மதிப்பு 2 கோடி.

43. மதுரை சத்யசாய் நகரில் 21 சென்ட் நிலத்தில் அழகிரி பெயரில் வீடு. மதிப்பு 2 கோடி.

44. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, தோகரை கிராமத்தில் காந்தி அழகிரி பெயரில் 21.6 சென்ட் நிலம். மதிப்பு 60 லட்சம்.

45. மதுரை மாவட்டம், நாகைமலை புதுக்கோட்டை, கே.புளியகுளம் கிராமத்தில் 5.32 ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில். மதிப்பு 20 லட்சம்.

46. மதுரை மாவட்டம், மேலமாத்தூர் கிராமத்தில் 12.61 ஏக்கர் நிலம், தயாநிதி அழகிரி பெயரில். மதிப்பு 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம், டி.புதுப்பட்டி கிராமத்தில் 21.32 ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலைப் பகுதியில் காந்தி அழகிரி பெயரில் பண்ணை வீட்டோடு கூடிய 82.3 சென்ட் நிலம். மதிப்பு 5 கோடி.

49. தயாநிதி அழகிரி பெயரில் மாடக்குளம் கிராமத்தில் 18.5 சென்ட் நிலம். மதிப்பு 50 லட்சம்.

50. சென்னை, சோழிங்கநல்லூரில், தயாநிதி அழகிரி பெயரில் 4200 சதுர அடி நிலம். மதிப்பு 2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில், தயாநிதி அழகிரி பெயரில் 3912 சதுர அடி நிலம். மதிப்பு 3 கோடி.

52. காந்தி அழகிரி பெயரில் 4378 சதுர அடியில், மதுரை சத்ய சாய் நகரில் திருமண மண்டபம். மதிப்பு 3 கோடி.

53. சென்னை மாதவரம் பால்பண்ணை, ஆர்.சி.மேத்தா ஃப்ளாட்ஸில், காந்தி அழகிரி பெயரில் அடுக்கு மாடி வீடு. மதிப்பு 1 கோடி.

54. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தயாநிதி அழகிரி பெயரில் 50 சென்ட் பண்ணை வீடு மதிப்பு 2 கோடி.

55. மதுரை மாவட்டம், சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி.

56. மதுரை மாட்டுத் தாவணி, அருகே 5 கிரவுண்ட் நிலத்தில் தயா சைபர் பார்க் (8 மாடி கட்டிடம்) மதிப்பு 50 கோடி.

57. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தயா டயாக்னாஸ்டிக்ஸ் மதிப்பு 1 கோடி.

58. சென்னை, அண்ணா சாலை, கதவு எண் 271-A என்ற முகவரியில் 5 கோடி மதிப்பில் கனிமொழி பெயரில் வணிக வளாகம்

59. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் கனிமொழியின் பங்கு ரூ.20 கோடி.

60. கலைஞர் டிவியில் கனிமொழியின் பங்கு, குறைந்த பட்சம் 30 கோடி.

61. ஊட்டியில் 525 ஏக்கர் வின்ட்ஸர் எஸ்டேட். மதிப்பு 50 கோடி.

உறுதி செய்யப் படாத சொத்துக்கள்

62. அந்தமானில் 400 ஏக்கர் நிலம்.

63. கூர்க் பகுதியில் காபித் தோட்டம்.

64. தமிழகம் முழுக்க மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் கட்டத் திட்டம்.

65. எஸ்டி கொரியர் (மாறன் சகோதரர்கள்) இதற்கு சொந்தமாக 2 விமானங்கள்.

66. மாறனின் மகள் அன்புக்கரசிக்காக சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை, மற்றும் தமிழ்நாடு ஹாஸ்பிட்டல்ஸ்.

67. சாய்பாபாவோடு ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அண்ணா அறிவாலயம் அருகே கட்டப்பட்டு வரும் அப்பாட்ஸ்பரி வளாகம், மருத்துவமனையாக மாற்றப் பட்டு, மாறன் சகோதரர்களிடம் ஒப்படைக்கப் படும்.

68. கோயம்பத்தூர், ப்ரூக்பாண்ட் சாலை, ப்ரூக்ஃபீல்ட்ஸில் உள்ள ஆர்எம்கேவி ஜவுளிக் கடை இருக்கும் நிலம், கனிமொழிக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.

savukku.com.

.

Edited by வீணா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாத்தம் பிடிச்ச மொழி

  • கருத்துக்கள உறவுகள்

savukku.com.

இவ்வளவு சொத்தையும் பறிமுதல் செய்து மக்களுக்கு கொடுக்க இந்திய சட்டம் இடமளிக்குமா இல்லை ஜெயலலிதாவுக்கு சட்ட ஓட்டைகள் மூலம் மக்களின் சொத்தை கொள்ளை அடிக்க உதவுமா?

  • கருத்துக்கள உறவுகள்

கனிமொழி கைதுடன் அம்மணமாக்கப்பட்டுள்ள தி.மு.க!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சவப்பெட்டி மீது இன்னொரு ஆணி அடித்தாகி விட்டது..

தேர்தல் முடிவுகளால் உள்ளாடைகளுடன் நின்றிருந்த தி.மு.க கனிமொழி கைதுடன் அம்மணமாக்கப்படுள்ளது.

இந்த தேர்தலில் 3 ஆவது இடத்தைப் பிடித்த தி.மு.க தொடர்ந்து அதே நிரந்தர இடம் தானா என கருணாநிதியே சிந்திக்க வைக்கும் அளவுக்கு சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன..

பழம்பெருமை வாய்ந்த திராவிடக் கட்சி என (தங்களை தாங்களே) கூறிக்கொள்ளும் திமுகவின் எதிர் காலமே சூனியமாக காணப்படுகிறது.

நெருப்பாறுகளைக் கடந்து திமுக முடிசூடும், கனிமொழி கைதால் திமுகவிற்கு பாதிப்பில்லை என வீரமணி போன்ற கைப்பிள்ளைகள் காமடி பண்ணினாலும், இந்த அதிர்ச்சிகளை கடந்து மீண்டு வர குறைந்தது 2 ஆண்டுகள் ஆவது தேவை என்பது எனது அனுமானம்.

சரியாக சொல்வது என்றால் தாங்கள் விதைத்த வினைகளை அறுவடை செய்யும் காலப்பகுதியில் கருணாநிதி அண்ட் கோ இருக்கின்றனர்..

திராவிட முன்னேற்றக்கழகம் என்று இருந்த திமுகவை (திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி) கம்பெனியாக மாற்றியதுக்கான பலாபலன்களை தீவிரமாக அறுவடை செய்து கொண்டு இருக்கிறார் தமிழின காவலர் (???) கருணாநிதி.

மானே மயிலே, உயிரே மயிரே, ஐயகோ, நெஞ்சு பொறுக்கலையே போன்ற பராசக்தி பாணி வசனங்கள் தனது தொண்டனிடத்தில் கூட வொர்க் அவுட் ஆகாததைப் பார்த்து சித்தம் கலங்கி இருப்பார் கருணா.

தேர்தல் முடிவுகளால் திருடர்கள் என முத்திரை குத்தப்பட்ட கருணா அண்ட் கோ நீதிமன்றத்தால் மீண்டும் ஒருமுறை ஊழல் வாதிகளாக முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.

ஒரு குடும்பத்தால் ஒரு ஜனநாயக நாட்டுக்கு 1 .76 இலட்சம் கோடி இழப்பை ஏற்படுத்த முடியும் என்றும் (ஏறத்தாள 5 இலட்சம் கோடி ரூபாய் இலங்கைப் பணம்), இழப்பை ஏற்படுத்தியோர் படை பரிவாரங்கள் புடை சூழ அதிகாரத்துடன் உலா வர முடியும் என்றும் காட்டியது திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியின் ஆட்சிக்காலம்..

இந்த தேர்தலில் தோல்விக்கு பெரும் காரணமாக அமைந்தது ஸ்பெக்ட்ரம்.

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் என பாட்டிமார் கதை சொல்ல ஆரம்பித்தாலே அது ஸ்பெக்ட்ரம் ராஜாவா என பேரப்பிள்ளைகள் கேட்கும் அளவுக்கு திமுகவின் மானம் சந்தி சிரித்தது உலகறியும்...

ஸ்பெக்ட்ரம் என்பதை வெறும் பத்தோடு பதினோராவது ஊழலாகப் பார்ப்பதைத் தவிர்த்து இது ஒரு நாட்டின் ஜனநாயகத்தை ஆட்டம் போட வைத்த காரணியாக பார்க்க வேண்டும்.

1. 76 இலட்சம் கோடி என்பது இந்தியா போன்ற ஏழைகளின் தேசத்திற்கு மிக பெரிய பணம்.

இப்பணம் இலங்கை போன்ற சிறிய தேசத்தின் ஒரு வருட உள்நாட்டு வருமானம், உத்தரப்பிரதேசம் போன்ற பெரிய மாநிலத்தின் ஒருவருட மொத்தத்தேசிய உற்பத்தி வருமானம்.

இந்தப் பணத்தினை வைத்து சகல வசதிகளும் உடைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் கட்டலாம்..

இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பாடசாலைகள் கட்டலாம்..

இலட்சக் கணக்கான மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கலாம்..

எவ்வளவு பெரிய பகல் கொள்ளை இது..

ஆனால் திருடியவர்கள் ஜாலியாக முரசொலியில் கவிதையும் உடன் பிறப்புகளுக்கு கடிதமும் எழுதிக்கொண்டு இருக்கலாம் என்றால் ஒரு சராசரி தேசப்பற்றுள்ள குடிமகனுக்கு ஜனநாயகத்தின் அதன் அஸ்திவாரம் மேலே அவநம்பிக்கை வராதா?

வெறும் ஐந்துஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் அரசாங்க உழியர்களுக்கே சுமார் ஐந்து/ ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்ககூடிய அதிகாரம் படைத்த இந்திய நீதித்துறை இந்த கொடிய கொலைக்கு குறைந்தது ஆயுள் தண்டனை கொடுக்க கூடாதா..?

ஊர் கூடி கிடாய் வெட்டியவனை விட்டு விட்டு இரத்த வறை சாப்பிட்டவனை பிடித்தது போல, கருணாநிதி அண்ட் கோவால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட மாபெரும் ஊழலுக்கு பலிக்கடா ஆக்கப்பட்டார் ராஜா.

நான் இங்கு ராஜாவை குற்றம் அற்றவர் எனக் கூற முற்படவில்லை...

ஆனால் அவ்வளவு பெரிய தொகையை தனி ஒருவரால் அபேஸ் பண்ணி இருக்க முடியாது என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்...

ஆனால் கனிமொழி கைது என்னை பொறுத்தவரை காலம் தாழ்த்திய ஓன்று...

கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட பின்பும் ஒரு அமைச்சர் இரண்டு ஆண்டுகள் அமைச்சராக இருந்துள்ளார் என்பது எந்த ஜனநாயக தேசத்தில் சாத்தியம்? இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட போது கை கொட்டி வாய் பொத்தி கவிதை எழுதிக் கொண்டிருந்த கருணாநிதி, சிபிஐ யின் குற்ற பத்திரிகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்ட போது முதன் முறையாக வெகுண்டு எழுந்தார்...

ஈழ தமிழர்களிற்காக ஒன்று கூடாத திமுக பொதுச்சபையைக் ஒன்று கூட்டினார்...

அங்கே கனிமொழி குற்றம் அற்றவர் என தீர்மானம் நிறைவேற்றினார். (திருடியவர்களே ஒன்று கூடி கூட்டம் போட்டு திருட்டு நடக்கவில்லை என சாதிப்பது உலகில் முதன் முறை என நினைக்கிறேன்).

ஆனால் இதே கருணாநிதி ஈழம் பற்றி எரிந்து கொண்டிருந்த போது மன்மோகன் சிங்கிற்கு கடிதம், சோனியாவிற்கு காதல் கடிதம், மனிதச் சங்கிலிப் போராட்டம் என காமடி பண்ணிக் கொண்டிருந்தார்...

காமடியின் உச்சமாக அவர் நிகழ்த்திய காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையிலான உண்ணாவிரதம் வடிவேலுவின் வின்னர் பட காமடிகளை மிஞ்சியது வரலாறு.

ஆனால் இவருடைய காமடிகளால், கபட நாடகங்களால் நாதியற்றுப் போய் செத்து போன ஈழ தமிழர்கள் எத்தனை பேர்?

ஒரு ஈழத் தமிழனாக கூறுகிறேன் எம் மக்களிற்கு எம்மவர்களை கொன்றொழித்த, கொலை செய்வதை தொழிலாக செய்யும் மஹிந்த ராஜபக்ஸ மீது இல்லாத வெறுப்புணர்வு, வன்மம் கருணாநிதி மீது உண்டு...

துரோகியை விட எதிரி எவளவோ மேல்..

மதுரையில் கருணாநிதியின் மகனும் மத்திய அமைச்சரும் ஆன

அழகிரியும் அவருடைய அடியாட்களும் நடாத்திய அராஜகங்கள் மறக்க கூடியதா?

அண்ணன் ஆனா... (மதுரையில் அழகிரியை "அ" என்று பயம் கலந்த மரியாதையாக அழைப்பார்கள்) அவருடைய அடியாட்கள் ஆன சு......... பு....... வகையறாக்கள் மதுரையில் நடாத்திய அராஜகங்கள் வில்லத்தனங்கள் கில்லி பிரகாஸ்ராஜ் தனமானவை...

அடுத்தடுத்த குத்துகளால் சித்தம் கலங்கி இருக்கும் தமிழின காவலருக்கு அவரின் எதிர் காலம் தொடர்பாக நான் தர விரும்பும் சில டிப்ஸ் :-

1] அரசியலை துறந்து முழு நேர சினிமா பணியாளராகி விடலாம்...

2] திமுகவை தேதிமுகவுடன் இணைத்து விட்டு தனது தலைவன் விஜயகாந் என உடன்பிறப்புக்களுக்கு அறிவித்து விடலாம்...

3] கடிதம் எழுதுவது எப்படி என அறிவாலயத்தில் ரியூசன் கொடுக்கலாம்...

4] கனிமொழி எனக்கு பிறக்கவில்லை என அறிவித்து விடலாம்...

5] தொழில் முறை ஊழல் செய்வது எப்படி என நூல் எழுதலாம்...

6] ஈழ தமிழருக்கு ஈழம் பெற்றுக் கொடுப்பது எப்படி எனும் நசைச்சுவை விவாத மேடைகள் நடத்தலாம்...

7] எவ்வளவு அடிச்சாலும் தாங்குவது எப்படி என (Personality development course) எடுக்கலாம்..

இனி கருணாநிதி அண்ட் கோவை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது..

-அருளினியன்-

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=22255:2011-05-21-20-46-59&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  • கருத்துக்கள உறவுகள்

.

கொசுக்கடி, புழுக்கம், டாய்லெட் பிரச்சினை-திஹார் சிறையில் தவிக்கும் கனிமொழி

டெல்லி: சுதந்திரப் பறவையாக டெல்லிக்கும், சென்னைக்குமாக வந்து போய்க் கொண்டிருந்த கனிமொழி இன்று புழுக்கத்தில், தவிப்பில் திஹார் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்.

சென்னையில் உள்ள தனது வீட்டில் எவ்வளவு வசதியாக இருந்தாரோ அதற்கு அப்படியே தலை கீழாக மாறிப் போயுள்ளது கனிமொழியின் வாழ்க்கை. திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் குட்டியூண்டு அறைக்குள் சுருண்டு போய்க் கிடக்கிறார்.

இரவில் சரிவர தூக்கம் வராமல் தவிக்கிறார். ஒருபக்கம் கொசுக்கடி, மறுபக்கம் புழுக்கம், இன்னொரு பக்கமோ டாய்லெட்டுக்குப் பக்கத்திலேயே படுக்க வேண்டிய நிலை என்று தவித்து வருகிறார் கனிமொழி.

வெள்ளிக்கிழமை இரவு தனது முதல் நாளை திஹார் சிறையில் மிகவும் நெருக்கடியுடன் சமாளித்த கனிமொழிக்கு நேற்றும் நரகமாகவே அது கழிந்துள்ளது.

நேற்று காலை ஐந்தரை மணியளவில் தன்னை எழுப்ப வந்த சிறை வார்டனிடம், தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள். ராத்திரி சரியாக தூங்க முடியாமல் தவித்து இப்போதுதான் தூங்கினேன் என்று கூறினாராம் கனிமொழி. இருப்பினும் சிறை விதிப்படி நீண்ட நேரம் தூங்க முடியாது என்று வார்டன் சற்று கண்டிப்புடன் கனிமொழியிடம் கூறினாராம். இதையடுத்து எழுந்துள்ளார் கனிமொழி.

தனது சிறை அறைக்குள்ளேயே பெரும்பாலான நேரத்தைக் கழிக்கிறார் கனிமொழி. அறைக்குள் மிகவும் புழுக்கமாக இருக்கிறதாம். கொசுத் தொல்லை தாங்க முடியவில்லையாம். கொசுக்களிடமிருந்து தப்பிக்க கொசுவர்த்தி கொடுத்தால் தேவலாம் என்று சிறைக் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்துள்ளாராம் கனிமொழி. ஆனால் அது கிடைத்ததா என்பது தெரியவில்லை.

காலையில் எழுந்ததும் அவர் இரண்டு துண்டு பிரெட், சப்ஜி, காபி குடித்தார். நேற்று காலையில் எழுந்து காலை உணவைச் சாப்பிட்டு முடித்ததும் தான் அடைக்கப்பட்டுள்ள சிறைப் பகுதியை சுற்றிப் பார்த்தாராம் கனிமொழி. அங்கு அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண் கைதிகளிடமும் அவர் பேசினாராம்.

கனிமொழி அடைக்கப்பட்டுள்ள சிறை அறையில் டாய்லெட்வசதி சரியாக இல்லையாம். இதை சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதியிடமே கூறினார் கனிமொழி.

நேற்று மாலை கோர்ட்டிலிருந்து சிறைக்குத் திரும்பியதும் அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சிறப்புகா காவல் படை போலீஸாரிடம் சிறிது நேரம் பேசினார். பின்னர் தனது அறையில் அமர்ந்து சில புத்தகங்களைப் படித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை கோர்ட் விடுமுறை என்பதால் சிறைக்குள்ளேயே இன்றைய பொழுதைக் கழித்து வருகிறார் கனிமொழி. டிவி பார்ப்பதிலும், புத்தகம் படிப்பதிலும் தனது பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார்.

- நன்றி தற்ஸ் தமிழ் -

டெல்லி சிறையில், கலைஞர் தொ.கா. தெரியுமா?

kalainjar.jpgKanimozhi_4dd6414c8d35e.jpg

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

.

கொசுக்கடி, புழுக்கம், டாய்லெட் பிரச்சினை-திஹார் சிறையில் தவிக்கும் கனிமொழி

டெல்லி: சுதந்திரப் பறவையாக டெல்லிக்கும், சென்னைக்குமாக வந்து போய்க் கொண்டிருந்த கனிமொழி இன்று புழுக்கத்தில், தவிப்பில் திஹார் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்.

சென்னையில் உள்ள தனது வீட்டில் எவ்வளவு வசதியாக இருந்தாரோ அதற்கு அப்படியே தலை கீழாக மாறிப் போயுள்ளது கனிமொழியின் வாழ்க்கை. திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் குட்டியூண்டு அறைக்குள் சுருண்டு போய்க் கிடக்கிறார்.

இரவில் சரிவர தூக்கம் வராமல் தவிக்கிறார். ஒருபக்கம் கொசுக்கடி, மறுபக்கம் புழுக்கம், இன்னொரு பக்கமோ டாய்லெட்டுக்குப் பக்கத்திலேயே படுக்க வேண்டிய நிலை என்று தவித்து வருகிறார் கனிமொழி.

வெள்ளிக்கிழமை இரவு தனது முதல் நாளை திஹார் சிறையில் மிகவும் நெருக்கடியுடன் சமாளித்த கனிமொழிக்கு நேற்றும் நரகமாகவே அது கழிந்துள்ளது.

நேற்று காலை ஐந்தரை மணியளவில் தன்னை எழுப்ப வந்த சிறை வார்டனிடம், தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள். ராத்திரி சரியாக தூங்க முடியாமல் தவித்து இப்போதுதான் தூங்கினேன் என்று கூறினாராம் கனிமொழி. இருப்பினும் சிறை விதிப்படி நீண்ட நேரம் தூங்க முடியாது என்று வார்டன் சற்று கண்டிப்புடன் கனிமொழியிடம் கூறினாராம். இதையடுத்து எழுந்துள்ளார் கனிமொழி.

தனது சிறை அறைக்குள்ளேயே பெரும்பாலான நேரத்தைக் கழிக்கிறார் கனிமொழி. அறைக்குள் மிகவும் புழுக்கமாக இருக்கிறதாம். கொசுத் தொல்லை தாங்க முடியவில்லையாம். கொசுக்களிடமிருந்து தப்பிக்க கொசுவர்த்தி கொடுத்தால் தேவலாம் என்று சிறைக் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்துள்ளாராம் கனிமொழி. ஆனால் அது கிடைத்ததா என்பது தெரியவில்லை.

காலையில் எழுந்ததும் அவர் இரண்டு துண்டு பிரெட், சப்ஜி, காபி குடித்தார். நேற்று காலையில் எழுந்து காலை உணவைச் சாப்பிட்டு முடித்ததும் தான் அடைக்கப்பட்டுள்ள சிறைப் பகுதியை சுற்றிப் பார்த்தாராம் கனிமொழி. அங்கு அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண் கைதிகளிடமும் அவர் பேசினாராம்.

கனிமொழி அடைக்கப்பட்டுள்ள சிறை அறையில் டாய்லெட்வசதி சரியாக இல்லையாம். இதை சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதியிடமே கூறினார் கனிமொழி.

நேற்று மாலை கோர்ட்டிலிருந்து சிறைக்குத் திரும்பியதும் அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சிறப்புகா காவல் படை போலீஸாரிடம் சிறிது நேரம் பேசினார். பின்னர் தனது அறையில் அமர்ந்து சில புத்தகங்களைப் படித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை கோர்ட் விடுமுறை என்பதால் சிறைக்குள்ளேயே இன்றைய பொழுதைக் கழித்து வருகிறார் கனிமொழி. டிவி பார்ப்பதிலும், புத்தகம் படிப்பதிலும் தனது பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார்.

- நன்றி தற்ஸ் தமிழ் -

டெல்லி சிறையில், கலைஞர் தொ.கா. தெரியுமா?

kalainjar.jpgKanimozhi_4dd6414c8d35e.jpg

நேரம் கிடைக்கும் போது, இந்த எல்லோருக்கும் இலகுவில் கிடைக்காத அனுபவங்களை உடன்பிறப்புக்களுக்கு ( அதாவது கருணாநிதி குடும்பத்து உடன்பிறப்புகளுக்கு) ஒரு கடிதமாக எழுதலாம்!

கழக உடன்பிறப்புக்கள் அவ்வளவு ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்பது எனது கருத்து!!!

  • கருத்துக்கள உறவுகள்

http://thatstamil.oneindia.in/news/2011/05/22/karunanidhi-supports-kanimozhi-slams-opponents-aid0091.html

கலைஞர் டிவியின் பங்குதாரராக நான் கூறியதைக் கேட்டதுதான் கனிமொழி செய்த தவறு-கருணாநிதி

ஞாயிற்றுக்கிழமை, மே 22, 2011, 12:56 [iST] A A A

சென்னை: கனிமொழி விரும்பாவிட்டாலும் கூட, அப்பா சொல்கிறாரே என்று கலைஞர் டிவியில் ஒரு பங்குதாரராக இருக்க ஒப்புதல் அளித்த ஒரு குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாபமோ, நட்டமோ அந்த இரண்டில் ஒன்றுக்கு பங்குதாரராக ஆகிவிடுவது பொதுவான விஷயம். ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொருநாள் நடவடிக்கைக்கும் அனைத்து பங்குதாரரும் பொறுப்பாக ஆவதில்லை என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இதுதொடர்பாக தனது கட்சி உடன்பிறப்புகளுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதம்:

என்னைப் பற்றியும், என் குடும்ப வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கைப் பற்றியும் நேரம் வரும்போதெல்லாம் பல முறை உனக்கும், உன் வாயிலாக ஊராருக்கும் சொல்லி இருக்கிறேன். இப்பொழுது சொல்லப்போவது அதைப்போன்ற "சுய புராணம்'' அல்ல. சுயபுராணத்தைத்தான் "நெஞ்சுக்கு நீதி'' என்ற தலைப்பில் ஐந்து பாகங்கள் எழுதி முடித்திருக்கிறேனே. இப்பொழுது நான் எழுதப்போவதை அடுத்த பாகத்தின் முன்னுரை என்று கருதிக்கொண்டாலும் சரி, அதற்கிடையே எழுந்துள்ள "மன ஓலம்'' என்று எண்ணிக் கொண்டாலும் சரி, இந்தச் சூழலில் இவற்றை நான் ஞாபகப்படுத்தியே தீர வேண்டும்.

நான் உயிரினும் மேலாக கருதும் நமது கழகம், பெரும் தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்திருக்கும் கால கட்டம் இது. அந்த இழப்புக்கு எது காரணம்? இணைந்த கட்சிகளுக்கு வழங்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையா? அல்லது அவர்கள் வலியுறுத்தி வாங்கிக்கொண்ட தொகுதிகளின் கணக்கா? தமிழ்நாட்டிற்கென்றே தனியான "ஜபர்தஸ்து''களை, ஜனநாயக விரோதச்செயல்களை, சாட்டைகளாக கொண்டு, சர்வாதிகார "பாட்டை'' வகுத்துக்கொண்ட தேர்தல் கமிஷன் எனும் பிரம்ம ராட்சத பூதமா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் நான் போக விரும்பவில்லை.

ஆனால் இந்தியாவிலேயே அல்லது தமிழ்நாட்டிலேயே அதிகார செல்வாக்கைப் பெருக்கி - "ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடி, லட்சம் கோடி சம்பாதித்து மூட்டைகளாகக் கட்டி வைத்திருக்கிற குடும்பம், கருணாநிதியின் குடும்பம்'' என்று தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்தவர்கள், மழை விட்டும் தூறல் விடவில்லை என்பதைப் போல, இப்போதும்கூட அந்த பிரச்சாரத்தை ஏடுகள் வாயிலாக, ஏனைய ஊடகங்களின் வாயிலாக கூறிக்கொண்டிருக்கிறார்களே, அவற்றை பொய்யுரை என்றும், புனைந்துரை என்றும், புளுகு மாயப்புழுதி மாயம் என்றும், என் தமிழ் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக சிலவற்றைத் தொகுத்துச் சொல்ல விரும்புகிறேன்.

நான் செல்வச் செழிப்பான பெரும் தனவந்தர் குடும்பத்தில் நான் பிறந்தவன் அல்லன். தஞ்சை மாவட்டத்தில் (தற்போது நாகை மாவட்டத்தில்) திருவும் வளமும் கொண்ட திருக்குவளை கிராமத்தில் சுற்றிலும் சூழ்ந்திருந்த வயல்களில் கிடைத்த பயிரையும், நெல்லையும், அரிசியையும் பயன்படுத்தி கொண்டு, ஒரு ஓட்டுவில்லை வீட்டில் விவசாயியாகவும் இசைமேதைகளில் ஒருவராகவும் இருந்த - முத்துவேல நாதசுரக்காரருக்கு மூன்றாவது பிள்ளையாக பிறந்தவன் நான்.

நான் உருண்டும் புரண்டும் தவழ்ந்தும் தள்ளாடி நடந்தும் பின்னர் திருவாரூர் பள்ளியில் பயின்றும், அங்கு பெற்ற அறிவால் அந்த இளமையிலேயே அண்ணாவையும், பெரியாரையும் முறையே அரசியல் இயக்கத்திற்கும், அறிவு இயக்கத்திற்கும் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டும், சூடு தணியாத சுயமரியாதை உணர்வோடு பொது வாழ்க்கையைத் தொடங்கியவன் நான்.

பதினான்கு வயதிலேயே "பனகல் அரசரை'' படித்து "படிக்க முடியாது கட்டாய இந்தியை'' என்று மொழிப்போரில் புகுந்து, அதற்கு அடுத்தடுத்த தொடர் களங்கள் பலவற்றைச் சந்தித்து ஐந்து முறை முதல்-அமைச்சராகவும், 12 முறை தமிழகச் சட்டப் பேரவை உறுப்பினராகவும் வெற்றி பெற்று - பொன்விழாக்கள், பவளவிழாக்கள் கொண்டாடியும்கூட, இலக்கியவேந்தர், கலை வேந்தர் என வேந்தர் பட்டங்களை பெற்றாலும்கூட, வேண நிலங்களுக்கு சொந்தக்காரன் என்றோ, வான்தொடும் மாளிகைகளுக்கு உரிமையாளன் என்றோ, அடுக்கி வைத்த பணப்பெட்டிகளுக்கு அதிபர் என்றோ என்னை நான் என்றைக்குமே ஆக்கிக்கொள்ள நினைத்ததும் இல்லை; அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதும் இல்லை. அவற்றைத் தேடிக்கொள்ள திருட்டு வழியை தேடிக் கொண்டவனுமல்ல

அப்படியானால் இத்தனை ஆண்டுக்காலம் கட்சிக்கு பொருளாளராக, 42 ஆண்டு காலம் கட்சிக்குத் தலைவராக, 19 ஆண்டு காலம் ஆட்சிக்கு முதல்வராக இருந்த காலகட்டங்களில் எதுவுமே சம்பாதிக்க வில்லையா என்ற கேள்விக்கு நான் தரும் பதில் ஆம்; சம்பாதித்தேன், "தமிழுக்கு தொண்டு செய்வோன்'', "தமிழ் வாழ தலையும் கொடுக்கத்துணிவோன்'' என்ற பட்டப்பெயர்களை, புகழுரைகளை நிரம்ப சம்பாதித்தேன். என் எளிய வாழ்க்கையை நான் நடத்திட பொருளீட்டியதே இல்லையென்று புளுகிடும் துணிவு எனக்கில்லை, பொருளீட்டியது உண்டு. அந்தப்பொருளில் பெரும் பகுதியை வாழ்வின் இருளில் இருந்தோர்க்கு வழங்கியது உண்டு.

நான் முதலில் எழுதி, நானும் நடித்த "சாந்தா அல்லது பழனியப்பன்'' எனும் நாடகத்தை - 1940-களில் நூறு ரூபாய்க்கு விற்று, அந்தப்பணத்தை என் குடும்பச்செலவிற்கு மட்டுமல்லாமல், அடுத்த நாடகத்திற்கான முன் செலவுகளுக்கும் ஆரூர் நடிகர் கழக அமைப்புக்கும் அளித்தேன். அதைத்தொடர்ந்து, கோவை ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த "ராஜகுமாரி'' படத்திற்கும், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "மந்திரி குமாரி'', "தேவகி'' போன்ற படங்களுக்கும் நான் வாங்கிய பணம் மாதச்சம்பளமாக இருந்ததால் அந்த ஊதியத்தை, வருமானவரி போக மிச்சப்பணத்தை தான் தந்தார்கள்.

பின்னர் "பராசக்தி'', "மனோகரா'', "மலைக்கள்ளன்'', "இருவர் உள்ளம்'', "மருதநாட்டு இளவரசி'' - "திரும்பிப் பார்'', "பணம்'', "நீதிக்குத் தண்டனை'', "இளைஞன்'' என்றெல்லாம் தொடர்ந்து தற்போது "பொன்னர்-சங்கர்'' வரையில் 76 படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறேன். சில படங்களுக்கு பாடல்களும் எழுதியிருக்கிறேன்.

பிரசாத் இயக்கத்தில் உருவான "தாயில்லா பிள்ளை'' மற்றும் "இருவர் உள்ளம்'' படங்கள் நூறு நாள் ஓடினால் மேலும் பத்தாயிரம் ரூபாய் தருவதாக பிரசாத் வாக்களித்து, அவ்வாறே நூறுநாள் அந்தப் படம் ஓடியதற்காக அவர் தந்த பத்தாயிரம் ரூபாயை கொண்டு என்னை பெற்றெடுத்த திருக்குவளையில் - "முத்துவேலர், அஞ்சுகம் தாய் சேய் நல விடுதி'' கட்டி அந்நாள் முதல்-அமைச்சர் பக்தவத்சலத்தைக் கொண்டு திறப்புவிழா நடத்தினேன்.

அப்பொழுது நான் எழுத்தாளர் மட்டுமல்ல சட்டமன்ற உறுப்பினரும் கூட (எதிர்க்கட்சி துணைத்தலைவராகவும் இருந்தவன்). இதே போல நான் எழுதிய படங்கள் அனைத்திலும் பெற்ற ஊதியத்தில் திருவாருக்கு அடுத்த காட்டூரில் சிறிதளவு நஞ்செய் நிலம் வாங்கவும் பயன்படுத்திக் கொண்டது போக மிச்சத்தை நலிந்தோருக்கே வழங்கினேன். காட்டூரில் ஆரம்பப் பள்ளிக்கூட கட்டிடத்திற்கு அப்போதே நிதியளித்து அந்தக் கிராமப்பகுதியில் கல்வி வளர்ச்சிக்கு உதவி புரிந்தேன்.

கட்சிக்குப் பொருளாளராக இருந்தபோது அண்ணாவின் ஆணைப்படி, தமிழகத்தில் ஊர்தோறும், நகர்தோறும், பட்டி தொட்டி, குக்கிராமம் என செல்லாத இடமில்லை என்ற அளவிற்குச் சென்று - கழகக் கொடியேற்ற, கழகத்தினர் இல்லத்தில் உணவருந்த என்பதற்கெல்லாம் கட்டணம் விதித்து - சென்னை விருகம்பாக்கம் கழக மாநாட்டில் அண்ணாவிடத்தில், மூதறிஞர் ராஜாஜி, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பொதுவுடைமை வீரர் பி.ராமமூர்த்தி, பார்வர்ட் பிளாக் இயக்கத்தைச் சேர்ந்த பி.கே.மூக்கையா தேவர் ஆகியோர் முன்னிலையில் 11 லட்சத்தை தேர்தல் நிதியாக அளித்தேன். வெள்ள நிவாரண நிதி, புயல் நிவாரண நிதி, கைத்தறியாளர் கண்ணீர் துடைக்க நெசவாளர் நல்வாழ்வுக்காக நிதி, இப்படி எத்தனையோ நிதிகள் வழங்கியும்-வசூலித்து தந்தும் தொண்டாற்றியவன்தான் நான்.

2004-2005-ம் ஆண்டில் "மண்ணின் மைந்தன்'' திரைப்படத்திற்காக 11 லட்சம் ரூபாயும், "கண்ணம்மா'' திரைப்படத்திற்காக 10 லட்சம் ரூபாயும் கிடைத்ததை சுனாமி நிவாரண தொகையாக -அப்போதிருந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் மு.க.ஸ்டாலின் மூலமாக நேரடியாக கொடுக்க செய்தேன். 9-7-2008-ல் "உளியின் ஓசை'' திரைப்படத்திற்காக எனக்கு தரப்பட்ட 25 லட்சம் ரூபாயில் ஏழு லட்சம் ரூபாய் வருமானவரிபோக மீதத்தொகை 18 லட்ச ரூபாயை அன்று கலையுலகை சேர்ந்த நலிந்த கலைஞர்களுக்கு உதவிநிதியாக - கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் நேரடியாக வழங்கினேன்.

17-9-2009இல் "பெண் சிங்கம்'' திரைப்படத்திற்காக எனக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்தத்தொகையினை அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்குவேன் என்று அறிவித்ததை யொட்டி, அப்படி வழங்கப்பட வேண்டிய தொகை 61 லட்சம் ரூபாய் என்று கூறிய போது என்னுடைய சொந்த கையிருப்பு நிதி 11 லட்சம் ரூபாயையும் சேர்த்து உதவி நிதியாக 29-10-2009 அன்று வழங்கினேன். 27-4-2010 அன்று "இளைஞன்'' திரைப்படத்துக்காக வருமானவரி போக 45 லட்சம் ரூபாய் எனக்கு வழங்கப்பட்டது. அந்த தொகையினை முதலமைச்சர் நிவாரண நிதியிலே சேர்த்து பிறகு மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வுக்காக அந்த தொகை உதவி நிதியாக வழங்கப்பட்டது.

"பொன்னர் -சங்கர்'' திரைப்படத்திற்காக 8-9-2009-ல் 10 லட்சம் ரூபாயும், 6-6-2010-ல் 121/2 லட்சம் ரூபாயும் எனக்கு வழங்கப்பட்டது. இந்த படத்திற்காக தரப்பட வேண்டிய 25 லட்சம் ரூபாயில் வரியாக 21/2 லட்சம் ரூபாய் போக எஞ்சியத்தொகை 221/2 லட்சம் ரூபாயாகும். இந்த தொகையிலிருந்து காவல் துறையிலே விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் பெற்ற வீரர்களுக்கு வழங்கச் செய்தேன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் தொல். திருமாவளவன் வழங்கிய 50 ஆயிரம் ரூபாய் நிதியினை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் சேர்த்துள்ளேன்.

கழகத்தை தோற்றுவித்த தலைவர்கள், தோன்றா துணைவர்களாக இருந்த தலைவர்கள், உயிரினும் மேலான உடன்பிறப்புகளாம் தொண்டர்கள் ஆகியோருக்கு குடும்ப நிதியாக, நல வாழ்வு நிதியாக அள்ளித் தந்தது ஆயிரம் ஆயிரம். அவை இன்றைக்கும் என்னுடைய பெயரால் அமைந்துள்ள அறக் கட்டளைகளின் சார்பில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாள் நிகழ்ச்சிகளிலும், மாலைக்கு பதிலாகவும், பொன்னாடைகளுக்கு பதிலாகவும் வழங்கப்பட்ட நிதியினையும் முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதியிலே சேர்த்திருக்கிறேன்.

ஈழத்தமிழர் நிவாரணத்திற்காக தமிழக அரசின் சார்பில் நிதி திரட்டப்பட்ட போது என்னுடைய சொந்தப் பொறுப்பில் 10 லட்சம் ரூபாயினை நன்கொடையாக வழங்கியிருக்கிறேன் "சன்'' தொலைக்காட்சி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த என் மனைவி தயாளு அம்மையார் அதிலிருந்து பிரிந்து வந்த வகையில் கிடைக்கப்பெற்ற 100 கோடி ரூபாயில் எனக்கு கிடைத்த 10 கோடி ரூபாயில் ஐந்து கோடி ரூபாயினை பங்கீட்டுத் தொகையாக செலுத்தி, தி.மு.கழகத்தின் சார்பில் "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை'' ஒன்றினை கழகத்திலே உள்ள நலிந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக தொடங்கப்பட்டது.

11-1-2007 அன்று நடைபெற்ற 30-வது புத்தக கண்காட்சி விழாவில் நான் பேசும்போது -இந்த 5 கோடி ரூபாயிலிருந்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்படும் என்று அறிவித்து, அவ்வாறே அந்த சங்கத்துக்கு அந்த தொகை வழங்கப்பட்டது. அந்த தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகையை கொண்டு-அந்த சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் நல்ல புத்தகங்களை, சமுதாய சீர்திருத்த கருத்துகள் தாங்கிய புத்தகங்களை எழுதும் சிறந்த எழுத்தாளர்கள், வெளியிடும் பதிப்பாளர்கள் ஐந்து பேரை தேர்வு செய்து, தலா ஒரு லட்சம் பொற்கிழி வழங்கிட கூறியுள்ளேன்.

இந்த ஒரு கோடி ரூபாய் நிதியைக்கொண்டு "கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை'' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நிறுவப்பட்டு இதுவரை 17 அறிஞர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

தி.மு.கழக சார்புடைய "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை''க்கு நான் கொடுத்ததில் எஞ்சிய நான்கு கோடி ரூபாய்க்கு மாதந்தோறும் கிடைக்கின்ற வட்டித்தொகையிலிருந்து-கழகத்திலே உள்ள நலிந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2005 நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு மேமாதம் வரை 2337 பேருக்கு மொத்தம் 2 கோடியே 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளன. இந்த உதவித்தொகை தற்போதும் ஒவ்வொரு மாதமும் தரப்பட்டு வருகிறது.

"சன்'' தொலைக்காட்சியிலிருந்து எனக்கென்று கிடைத்த 10 கோடி ரூபாயில்-"கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை''க்கு அளித்த 5 கோடி ரூபாய் போக எஞ்சிய 5 கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. அந்த வைப்புநிதிக்கு கிடைத்த வட்டித்தொகையிலிருந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக தமிழ்ச்செம்மொழி நிறுவனத்திற்கு 26-7-2008 அன்று வழங்கி அந்த தொகையிலிருந்து கல்வெட்டியல், தொன்மையியல், நாணயவியல் ஆகிய பிரிவுகளில் ஆராய்ச்சி செய்யும் சான்றோர்களுக்கு விருது வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறேன்.

கோவையில் நடைபெற்ற உலக தமிழ்மாநாட்டின்போது முதன் முறையாக இந்த விருது பின்லாந்து நாட்டு தமிழ்அறிஞர் அஸ்கோ பர்போலாவுக்கு பத்து லட்ச ரூபாய் பொற்கிழியாக நன்கொடையுடன் வழங்கப்பட்டது. இதற்கெல்லாம் மேலாக சென்னை கோபாலபுரத்தில் நான் தற்போது வாழ்ந்து வரும் என்னுடைய வீட்டைக்கூட ஏழை-எளியவர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு மருத்துவமனையாக மாற்றி அளிப்பேன் என்றும் அறிவித்து, அதற்கான முறையான பத்திரப்பதிவுகளும் செய்யப்பட்டுள்ளன.

"சன்'' தொலைக்காட்சி நிறுவனத்தில் தயாளு அம்மாள் பங்குதாரராக இருந்து பிரிந்ததையொட்டி - 18-10-2005 அன்று "சன்'' தொலைக்காட்சி நிறுவனத்தால் தரப்பட்ட தொகை 100 கோடி ரூபாயில் - 22.5 கோடி ரூபாய் வருமான வரியாக முறைப்படி செலுத்திய பின் எஞ்சிய தொகையான 77.5 கோடி ரூபாய் பகிர்ந்து கொள்ளப்பட்டபோது என் இளைய மகள் கனிமொழி தனக்குக் கிடைத்த 2 கோடி ரூபாயை பங்குத்தொகையாக செலுத்தி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாராக இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன்.

கனிமொழி அதை விரும்பாவிட்டாலும் கூட, அப்பா சொல்கிறாரே என்று அதற்கு ஒப்புதல் அளித்த ஒரு குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாபமோ, நட்டமோ அந்த இரண்டில் ஒன்றுக்கு பங்குதாரராக ஆகிவிடுவது பொதுவான விஷயம். ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொருநாள் நடவடிக்கைக்கும் அனைத்து பங்குதாரரும் பொறுப்பாக ஆவதில்லை.

டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கனிமொழிக்காக வாதாடிய வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ஒரு நிறுவனத்தில் நடைபெறுகிற வரவு-செலவு, கொடுக்கல்-வாங்கல், இவற்றில் எல்லாம் அந்த நிர்வாகத்தின் பங்குதாரர்கள் பொறுப்பேற்க வேண்டியவர்கள் என்று விதிமுறை இல்லை என்பதை தெளிவாகச் சுட்டிக் காட்டிய பிறகும் கூட; கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகத்தின் நிர்வாகி தம்பி சரத் குமாரையும், என் மகள் கனிமொழியையும் ஜாமீனில் விட மறுத்து சிறைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர்கூடி, வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள போதிலும்கூட, அத்துடன் நிம்மதி அடையாது, நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், நம் இரு வண்ணக் கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி - புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என்று அதுவும் "தர்ப்பைப் புல்'' முளைத்த இடமாகப் போக வேண்டுமென்று குமரி முனையிலிருந்து இமயக் கொடுமுடி வரையிலே உள்ளவர்கள் தவம் கிடக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாமல் இல்லை.

உடன்பிறப்பே, உனக்கும் இந்த உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான், உன் தமையன் நான் "சுயபுராணம்'' இது என்றாலும் சுயமரியாதைப் புதினமாக இதைக் கருதி இந்தக் கடிதத்தின் தொடக்கத்திலிருந்து முடிவு வரையில் ஒவ்வொரு வரியாக நீ படித்து, சிந்தித்து, புரிந்துகொண்டு, செயல்படுத்துவாயானால் தன்மானக் கழகமாம் தமிழர்நலம் தேடும் இந்தப் பாசறை அறப்போர்க் கணைகளை ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் வடிவில், தம்பி தங்கைகள் உருவில் நடமாட விடுவார்கள் என்பது என் எண்ணம். அந்த அறப்போர் இறுதிப் போராகி நாம் வெல்வது திண்ணம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.