Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருடிய நெருஞ்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாதையின் இரண்டு பக்கமும் பல அகண்ட குழிகழும் கருகி மொட்டையான மரங்களும, அன்னியப் படைகள் எமது மண்ணைக் கற்பழித்ததிற்குக் கட்டியம் கூறிக்கொண்டிருந்தன.

உங்கள் தமிழ் நடை அழகு, கோமகன்! தொடருங்கள்!

  • Replies 516
  • Views 65.6k
  • Created
  • Last Reply

எங்களுக்கும் பயணிப்பது போன்ற உணர்வை கொடுகிறது உங்கள் கட்டுரை

  • கருத்துக்கள உறவுகள்

பயனமும் உங்கள் வர்னனையும் நன்றாக உள்ளது.தொருங்கள் ஆவலாக உள்ளது.

என்ன தமிழ்சிறீ அண்ணா, கொக்கு எண்டிட்டு கோளியிண்ட படத்தை கொண்டுவந்து போட்டிருக்கிறீங்க? :rolleyes:

நானும் பூந்து பூந்து பாக்கிறன் கொக்கை கானோம் :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிர‌யாணக் கதை மூலம் கோமகன் மனைவிக்கு அட‌ங்கிய கணவன் எனத் தெரிகிறது :lol::D:lol:

  • தொடங்கியவர்

இந்தப் பிர‌யாணக் கதை மூலம் கோமகன் மனைவிக்கு அட‌ங்கிய கணவன் எனத் தெரிகிறது :lol::D:lol:

எனக்கும் எனது மனைவிக்கும் ஒருவயது தான் வித்தியாசம். தம்பதிகள் என்ற உறவிற்குமேல் சிறந்தநண்பர்களாக இருக்கின்றோம் அதனாலேயே எனதுமனைவியின் பாத்திரமும் அவ்வப்போது இந்த தொடரில் தலைகாட்டுவது. அது போய் உங்கள் கண்ணில் :(:(

  • தொடங்கியவர்

img0635f.th.jpg

சோதனைச்சாவடியில் நான் நேற்று பார்தவர்கள் இருக்கவில்லை. இந்த சோதனைச்சாவடி உண்மையில் புலிகளால் உருவாக்கப்படதாகும். பகல்வேளையில் பார்கும்போது எங்கள் கைவண்ணம் நன்றாகவே தெரிந்தது. இவர்களடைய உண்மையான சோதனைச்சாவடி முகமாலையிலேயே இருந்ததாக மனைவி சொன்னா. முன்பு ஓமந்தைக்கு முன்னே படையினரால் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு மூட்டைமுடிச்சுகளுடன் கால்நடையாக இங்கு வந்து புலிகளின் பரிசோதனை முடித்து, அவர்களது பயணிகள் வண்டியலேயே முகமாலைவரை செல்லவேண்டியிருந்தது. அங்கு படையினரின் கெடுபிடிகளை முடித்து, இ.போ.சா பஸ்சில் மீண்டும் பயணத்தை தொடரவேண்டும். இப்பொழுது எங்கள் இடத்தை பிடித்துக் கொண்டு இருக்குதுகள் இந்த ஒட்டகங்கள். கொண்டக்ரரிடம் விசாரனையை நடந்துகொண்டிருந்தான் ஒரு படைவீரன். கடமையிலிருக்கும் ஒரு அரசாங்க உத்தியோகத்தரை இன்னுமொரு அரசாங்க உத்தியோகத்தன் பாதுகாப்பு என்ற போர்வையில் கெடுபிடி செய்யும் வினோதம் அங்கே நடை பெற்றுக் கொண்டருந்தது. காரணம் அவன் பிறப்பால்த் தமிழன். நான் சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டு நின்றேன். மனைவி தனது கடவச்சீட்டையும் எம் . ஓ .டி ஐயும் குடுத்தா. மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து கொண்டிருந்தள் அந்தப்பெண் சிப்பாய். எனக்கு ஏனோ எரிச்சலாக வந்தது. எங்களுக்கு என்று ஒரு தனியான நாடு இப்பொழுதும் உள்ளது என்பதை மறைமுமாக அங்கீகரிக்கின்றார்களா? பிரான்ஸ் கடவுச்சீட்டில் சூனியம் செய்துவிட்டார்களோ? அந்தச் சோதனைச் சாவடி உண்மையில் மிகவும் திட்டமிட்டு நுணுக்கமாக எங்களால் கட்டப்பட்டிருந்தது. பயணிகளுக்கான சகல வசதிகளும் அதில் இருந்தது. என்னை வருமாறு ஒரு சிப்பாய் அழைத்தான். உள்ளர உதறலுடன் போனேன். எனது கடவுச்சீட்டையும் எம்.ஓ.டி.ஐயும் கொடுத்தேன். சரிபார்த்து பதிந்து விட்டு பவ்வியமாக திருப்பித் தந்ததுடன், ஒரு விசர்க் கேள்வி ஒன்று கேட்டான்.

"எங்கள் சேவை உங்களுக்குத் திருப்தி அளித்ததா என்று"?.

என்னுள் உருவான மாற்றத்தை அடக்கியவாறே ஒரு புன்சிரிப்பை அவனுக்கு வழங்கினேன். நாங்கள் மூவரும் பஸ்சை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

"அண்ணை உங்களிட்டை ஒண்டு கேட்டால் குறைஇனைப்பியளோ"?

" குறை இனைக்காத மாதிரிக் கேளுமென்".

" இல்லை உங்களுக்கு இப்ப வேலை செய்யிறது கஸ்ரமாயில்லையோ"?

"கஸ்ரம்தான் தம்பி, இடத்துக்கேற்ற மாதிரி மாறவேண்டியதா போச்சுது". "

அதுசரி இப்பதான் நீர் வெளிநாட்டிலை இருந்து வாறீரோ"?

" ஏன் கேட்டனியள்"?

"நான் நினைச்சன் வவுனியாவிலை இருந்து வாறிங்களாக்கும் எண்டு".

"இல்லை அண்ணை 25 வருசத்துக்குப் பிறகு இப்ப தான் வாறன்".

" என்ர கடவுளே!!!! அப்ப நீர் இடத்துக்கு தவ்வல், பஸ்சுக்குள்ளை இப்பிடி என்னோட கதச்சுப்போடதையும்".

"சரி அண்ணை".

எனக்கு மனது வலித்தது. ஒருவருடன் கதைக்கக்கூடப் பயப்படுகின்றார்களே என்று. மீண்டும் பஸ் ஏ9 பாதையில் தொடரந்தது தனது பயணத்தை. நேரம் காலை 8 மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது. வெய்யில் மூசியடித்தது. பாதையின் இரண்டு பக்கத்திலும் கந்தகமண்ணை வளமாக்கும் ஓர்மத்துடன் வயலுடன் போராடிக்கொண்டிருந்தார்கள் வன்னியின் மைந்தர்கள். நெல்லுகள் நாற்று நடத்தாயாராகிக் கொண்டிருந்தன. என்னதன் எம்மைப் பாடய்படுத்தினாலும் எங்கள் குணத்தை உங்களால் வெல்லமுடியாது என்பதை செய்கையில் காட்டிக் கொண்டிருந்தார்கள் அந்த வன்னியின் மைந்தர்கள். பஸ் மாங்குளத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. மாங்குளம் படைத்தளம் கண்முன்னே விரிந்து கிடந்தது. இந்த இடத்தில் மட்டும் ஏ9 பாதை அவர்களுக்கு வசதியாக வளவளுப்பாக இருந்தது. ஓமந்தையிலிருந்து பஸ் மெதுவாகவே ஓடவேண்டி இருந்தது. இந்தப் பாதையைப் போல் நான் பார்க்கவே இல்லை. பஸ்சில் ஒரு சிலவும் இல்லாமல் நன்றாக ஜிம் செய்தேன். ஆனால் ஐரோப்பாவில் தவழ்ந்த பஸ்சில் கிடைக்காத திருப்தியும் சந்தோசமும் எனக்கு இந்தக் குலுக்கு பஸ்சில் கிடைத்தது. ஆனாலும் இந்த பஸ்சுக்கும் இந்தப் பாதைக்கும் நான் அன்னியன்தானே என்ற நினைவு என்னை வாட்டியது.அறியாப் பிராயத்தில் என்னை இடம் பெயரச்செய்தது, நான்செய்த முற்ப்பிறப்புப் பாவமோ? பலவிதமான உணர்ச்சிக்கலவைக்கு உள்ளானேன்.சில இடங்களில் எருமைகளை பட்டி கட்டி இருந்தார்கள்.முன்பு இந்த இடங்களை பாலையும் முதிரையும் நிறைத்து பச்சை பசேல் என்று இருக்கும். இப்பொழுது பொட்டல் வெளியாக வெறுமை காட்டி இருந்தன. ஆனாலும் எங்கடை ஆக்கள் வலு விண்ணர், எங்களுக்கே உணவு தந்த இடங்களையும் அந்த மக்களையும் தாங்கள் வகித்த பதவிகள் மூலம் தகிடுதத்ங்கள் செய்து பின்தங்கிய பிரதேசங்கள் ஆக்கி தங்கடை சந்ததியை இந்தமண்ணில் உயர்கல்வியை படிக்க விட்டு பின்தங்கிய பிரதேசக் கோட்டா மூலம் இலகுவாக பல்கலைக்கழக அனுமதி கிடைக்கச் செய்தார்கள். ஆனால் எங்களைப்போன்ற அப்பாவிகளுக்கு தமிழனை சிங்களவன் படிக்கவிர்றான் இல்லை, தரப்படுத்தல் செய்கின்றான் என்று விசம் ஏத்தினாரகள். உண்மையில் எனக்கு ஐரோப்பா வந்ததின் பின்பு தான் தரப்படுத்தலின் தார்ப்பரியம் புரிந்தது. நேரம் 9மணியை நெருங்கிக் கொண்டருந்தது. எனக்குப் பசியும் ஒண்டுக்குபோகவேண்டும் என்ற உணர்வும் வாட்டின.பயணிகள் இறங்கி ஏறிக் கொண்டிருந்தார்கள்.பக்கத்தில் வந்த கொண்டக்ரரிடம்

"அண்ணை பசிக்குது எப்ப நிப்பாட்டுவியள்"?

" எனக்கும் தான் பசிக்குது , கிளிநொச்சி களிய நிப்பாட்டுவம்".

இந்த ஒபீஸ் சனம் கிளிநொச்சியோடை சரி பேந்து நங்கள் தானே" என்றார்.

தொடரும்

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதை மிகவும் நன்றாக போய்க் கொண்டு இருக்கிறது மிக்க நன்றி.அவ்வப்போது இணைக்கும் படங்கள் கூட ஒவ்வொரு நினைவுகளை கொண்டு வருகிறது கோமகன் அண்ணா. :)

இந்தப் பிர‌யாணக் கதை மூலம் கோமகன் மனைவிக்கு அட‌ங்கிய கணவன் எனத் தெரிகிறது :lol::D:lol:

ரதியின் கணிப்பு தப்பு போலத்தெரிகிறது.முதலில் இதை பாருங்கள்

OR

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் எனது மனைவிக்கும் ஒருவயது தான் வித்தியாசம். தம்பதிகள் என்ற உறவிற்குமேல் சிறந்தநண்பர்களாக இருக்கின்றோம் அதனாலேயே எனதுமனைவியின் பாத்திரமும் அவ்வப்போது இந்த தொடரில் தலைகாட்டுவது. அது போய் உங்கள் கண்ணில் :(:(

கோமகன் கணவன்,மனைவி நண்பர்களாய் இருப்பதே குடும்பத்திற்கு நல்லது...நான் சும்மா பகிடிக்குத் தான் சொன்னேன் நீங்கள் கோபித்து விட்டீர்கள் போல :D

  • தொடங்கியவர்

கோமகன் கணவன்,மனைவி நண்பர்களாய் இருப்பதே குடும்பத்திற்கு நல்லது...நான் சும்மா பகிடிக்குத் தான் சொன்னேன் நீங்கள் கோபித்து விட்டீர்கள் போல :D

உங்களுடன் கோபிக்க முடியுமா ரதி நீங்களும் எனது நணபர்தானே :D:D

அடிக்கடி வந்து பார்க்கிறேன் படிக்க ஆவலாக உள்ளது

  • தொடங்கியவர்

img0660um.th.jpg

img0638at.th.jpg

தன்னுடன் அதிகம் கதைக்க வேண்டாம் என்று சொன்னபடியால் நான் அவரைத் தொந்தரவு செய்யவில்லை. வயிறும் மனமும் சண்டை பிடித்து மனமே இறுதியில் வென்றது. பஸ் வன்னிப்பெருநிலத்தினூடாக ஊடறுத்து சென்றது. இந்தப்பாதையால் நான் சுலபமாகப் பயணம் செய்வதாகவே உணர்ந்தேன், எனது மக்கள் பட்ட கஸ்ரத்துடன் ஒப்பிடும்பொழுது. எவ்வளவு தூரம் ஆட்டுமந்தைகள்போல வாட்டி வதைக்கப்பட்டார்கள்?பத்தாயரத்திலிருந்து ஐம்பதினாயரம் வரை காசை வாரிஇறைத்தல்லவா பிளேனிலும் கப்பலிலும் போனார்கள். ஒருபுறம் எங்களை அடக்கி, மறுபுறம் எங்களிடமே பணத்தைப் பறித்த பொடிகாமியும் அப்புகாமியும் எங்கள் அதிமேதாவித்தனத்தால் வெளிவருகின்ற "மோடையர்களாகத்" தெரியவில்லை. இப்பொழுது வருகின்ற "இலங்கைப் பொருட்களைப் புறக்கணி" என்ற கோசத்தை அந்தமக்களும் பிளேனுக்கும் கப்பலுக்கும் கடைப்பிடித்திருந்தால் இந்தப்பொடிகாமிக்கும் அப்புகாமிக்கும் சரியான அடியாக இருந்திருக்கும். யார் பார்த்தார்கள்? எல்லோருக்குமே ஒவ்வொரு அத்தியாவசியங்கள். யார் தான் மக்களைப் பார்த்தார்கள்? அத்தியாவசியங்களே அத்தியாவசியங்களாகின. எதிலுமே கூறுகெட்ட அரசியல் அழுகிநாறும் பொழுது மனிதத்தை எங்கே தேடுவது? பஸ் இடைக்கிடை நின்று இரணுவசிப்பாய்களையும் ஏற்றிக்கொண்டது. எங்கள் மண்டையின் பின்னால் ஒரு மூன்றாவது கண் இருந்து கொண்டே வந்தது. இது எனக்கு எரிச்சலைக் கொடுத்தது. பாதையில் பயணம் கடினமாகவே இருந்தது. திருத்தவேலைகள் மும்மரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. தூரத்தே தெரியும் புகையிரதப்பாதையையும் திருத்திக்கொண்டு இருந்தார்கள். புகையிரதம் ஓடியதற்கான ஒரு மேட்டு நிலத்தையே என்னால் காணக்கூடியதாக இருந்தது. சிலிப்பர் கட்டைகள் தண்டவாளங்கள் எல்லாம் தொலைந்து கனகாலமாகி விட்டிருந்தது. அவை எல்லாமே பங்கர் சென்றிகளுக்குச் சென்றிருந்தன. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வெறுமையாகவே இருந்தது இடையில் காணப்பட்ட கட்டிடங்களும் குண்டுகளால் செதுக்கிக் காணப்பட்டன ஆனாலும் மக்கள் அயராது அவைகளில் தமது பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டிருந்தனர். அந்தக் கட்டிடங்கள் மீளக்கட்டுப்படாமலே இருந்தது மனதிற்கு வலியாக இருந்தது. நாங்கள் கஸ்ரப்பட்டுக் கொடுத்த காசுகளே இதற்குக் காணுமே, அவையெல்லாம் எங்கே போய்விட்டன? நாங்களும் ஒருவகையில் ஏமாற்றப்பட்டுவிட்டோமா? எங்களின் உணர்சிகளைத் தூண்டி விடுதலைப்புலிகளின் பெயரைச்சொல்லி பலர் தங்களை வளப்படுத்தினார்களா? பஸ் கிளிநொச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது. எங்கள் தலைநகரத்தை பார்கின்ற ஆவலால் எனக்குப் பசி மறந்து போயிருந்தது. கிளிநொச்சி எனக்குப் பழக்கப்பட்ட இடம். எனது அப்பா 78களில் கிளிநொச்சியில் பிரதமதபால் அதிபராக இருந்தபடியால் அடிக்கடி வருவோம். எங்களுக்கு 3ம் வாய்காலில் கமம் இருந்ததாலும் நான் அடிக்கடி இங்கு வருவேன். பஸ் டிப்போவை அண்மித்தது. டிப்போ பெயரளவிலேயே இருந்தது.முன்பு எவ்ளவு வடிவாக இருந்தது. நான் பார்த கடை அப்படியே இருந்தது ஆனால் சேதங்களுடன். பொடிகாமி கிளிநொச்சியில் எதையுமே விட்டுவைக்கவில்லை. பொலிஸ் நிலையத்தையும் இராணுவ முகாமையும் அருகருகே நிர்வாகத்துக்குச் சுலபமாக வைத்திருந்தார்கள். தண்ணீர் தாங்கி உருக்குலைந்து போயிருந்தது. அவ்வளவு தூரத்திற்கு மேலிருந்து துளைத்து எடுத்திருந்தார்கள் குண்டுகளால். அதை போரில் வெற்றி கொண்ட சின்னமாகவும், தொல்பொருள் சின்னமாகவும் அறிவத்து தனது புதிய பரம்பரைக்கு விசஊசி அடித்துக் கொண்டிருக்கிறார் மகிந்தர். அவருக்கு விளங்கவில்லை, அவர் கும்புடுகின்ற புத்தர் நாட்டை விட்டு வெளியேறிக் கனகாலமாகி விட்டது என்று.,தபால் நிலையம் இருந்த இடமே தெரியவில்லை. எனக்கு வலி இறுக்கியது.,இந்தக் கந்தோருக்கு முன்னால் எவ்வளவு விளையாட்டுகளை விளையாடியிருப்போம் அப்போது. எனக்கு மிகவும் பிடிச்சது பாலைப்பழம் தான்.,கெடுவில் செங்காயைத் தின்று பால் ஒட்டி கதைக்கமுடியாது அவதிப்படுவோம்.,என்னால் ஒரு பாலைமரத்தையும் காணமுடியவில்லை, வவுனியாவைப்போல பறவைகளையும் காணமுடியவில்லை. அவைகளும் வீரமரணம் அடைஞ்சுட்டுதோ? ஒரு அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதை இங்கு தானே நடத்திக்காட்டினோம். இது மற்றய நடமுறை அழுகிய அரசுகளுக்குப் பிடிக்கவில்லையோ?. எங்களுக்கு தலைவணங்கிய மண்ணல்லவா இது. எங்கள் சொல்லைத் தானே இது கேட்டது. இன்று அதன் விசும்பல் என்னைப் பிழிந்தது. பஸ்டிப்போவில் பலர் இறங்கியதால் பஸ் வெளிப்பாகி நல்ல காத்து வந்து வெக்கைக்கு இதமாக இருந்தது. பஸ் கரடிப்போக்குச் சந்தியை நெருங்கிக் கொண்டிருந்தது. இதில் இறங்கித்தான் எமது கமத்திற்கு செல்ல வேண்டும். இரமநாதபுரம் பஸ் ஏறினால் 2 கட்டை தள்ளி எமது கமம் வரும். சிலவேளைகளில் கரடிப்போக்குச் சந்தியில் இருந்தே நடந்து போவேன் கமத்திற்கு. பழைய கரடிப்போக்குச் சந்தியாக என்னால் பார்க்க முடியவில்லை. செம்மண் பாதை ஒன்று பற்றைகளுடன் இரமநாதபுரம் நோக்கிச் சென்றது தெரிந்தது. பஸ் சிறிது வேகமெடுத்தது. எனக்குப் பக்கத்தில் வந்த கொண்டக்ரர்,

" என்ன தம்பி முகம் செத்துப்போய்கிடக்கது"?

" ஏன் செத்ததெண்டு தெரியேலையோ"?

சரி சரி கொஞ்சம் அடக்கும் பரந்தன் களிய நிப்பாட்டுவம்."

"என்னண்ணை"?

" பத்துநூச ஓட்டந்தானே".

எனக்கு வில்லங்கமாக இருந்தது. சிறிது கண்ணை மூடலாம் என்றாலும் என்னால் முடியவில்லை. மீண்டும் சிப்பாய்கள் பஸ்சில் தொற்றினார்கள், பரந்தன் படைமுகாமில் இறங்குவதற்கு. எனக்கு எரிச்சலாக வந்தது. பஸ் தன்னை வேகப்படுத்தியது. நேரம் காலை 9.30 ஆகி இருந்தது.வெய்யில் உக்கிரமடைந்தது நான் எனது சூரியக் கண்ணாடியை அணிந்து கொண்டேன். சிறிது நேரத்தில் படைமுகாம் அண்மித்ததால் பஸ் தனது வேகத்தைக் குறைத்தது. சிப்பாய்களும் இறங்கிக் கொண்டார்கள். மீண்டும் பஸ்வேகமெடுத்தது. பரந்தனை அண்மித்த பஸ் ஓரமாக தன்னை நிலை நிறுத்தியது.

தொடரும்.

Edited by கோமகன்

அப்பாடா!

ஒரு வயிற்று பசிக்கு ஒரு அவல் பொரியா?சரி சரி உங்கள் கஸ்டங்களையும் புரிந்து கொள்ள வேண்டாமா? நேரம் கிடைக்கும் போது மெதுவாகத்தொடருங்கள்.

கிளி நொச்சி டிப்போவுக்கு முன்னால் கண்டிவீதியில் ஒரு பெட்டிகடை இப்பவும் இருக்குதா?

உங்கள் நிலையில் இதல்லாம் பார்க்க முடியாதுதான் இருந்தாலும் சும்மா கேட்டேன்

  • தொடங்கியவர்

நட்புகளுக்கு, :D:D

போன கிழமை அதிகவேலைப்பளுவினால் என்னால் முழுமையான தொடரைத் தரமுடியாமல் போனதற்கு உங்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன். நேற்று அந்தத் தொடருடன் அதிக இணைப்பைக் கொடுத்துத் திருத்தியுள்ளேன். உங்களை ஏமாற்றவேண்டும் என்பது எனது நோக்கம் இல்லை. தொடரைப் படித்து கருத்துக்களைப் பதியங்கள். நன்றி.

அன்புடன்

கோமகன்

எங்களுக்கு 3ம் வாய்காலில் கமம் இருந்ததாலும் நான் அடிக்கடி இங்கு வருவேன்..............................அப்ப குருகுலம்,சாந்தன்.........

மூன்றாம் வாய்கால் தேதண்ணி கடையை மறக்க முடியாது.இபோச பரிசோதகர் ஒருவர் பலமுறை முயன்றும் ஒரு கண்டக்டரை கைது பண்ண முடியாமல் பஸ்ஸில் ஏறி துவாயால் முகத்தை மூடிகொண்டிருந்தார்.அப்போது யாருமில்லை நான் வந்து ஏறியபோது தனக்கு காச்சல் தம்பி எனக்கு யக்கச்சிக்கு டிக்கற் வேண்டும்படிகூறி பணத்தையும் தந்தார். நானும் அவருக்குரிய டிக்கற்றை வேண்டிவிட்டேன்,பஸ் பரந்தனை விட்டு புறப்பட்டதும் .துவாய்குள்ளால் கையை வெளியே எடுத்து ரிக்கற் புத்தகத்தை பறிக்க கொண்டக்டர் சத்தம்போட இவர் துவாயை விலக்கி முகத்தைகாட்ட கொண்டக்டர் என்னைபார்க்க................அன்றிலிருந்து கிளி நொச்சி டிப்போவில் நான் ஒரு கீரோவாகிவிட்டேன்

  • தொடங்கியவர்

எங்களுக்கு 3ம் வாய்காலில் கமம் இருந்ததாலும் நான் அடிக்கடி இங்கு வருவேன்..............................அப்ப குருகுலம்,சாந்தன்.........

மூன்றாம் வாய்கால் தேதண்ணி கடையை மறக்க முடியாது.இபோச பரிசோதகர் ஒருவர் பலமுறை முயன்றும் ஒரு கண்டக்டரை கைது பண்ண முடியாமல் பஸ்ஸில் ஏறி துவாயால் முகத்தை மூடிகொண்டிருந்தார்.அப்போது யாருமில்லை நான் வந்து ஏறியபோது தனக்கு காச்சல் தம்பி எனக்கு யக்கச்சிக்கு டிக்கற் வேண்டும்படிகூறி பணத்தையும் தந்தார். நானும் அவருக்குரிய டிக்கற்றை வேண்டிவிட்டேன்,பஸ் பரந்தனை விட்டு புறப்பட்டதும் .துவாய்குள்ளால் கையை வெளியே எடுத்து ரிக்கற் புத்தகத்தை பறிக்க கொண்டக்டர் சத்தம்போட இவர் துவாயை விலக்கி முகத்தைகாட்ட கொண்டக்டர் என்னைபார்க்க................அன்றிலிருந்து கிளி நொச்சி டிப்போவில் நான் ஒரு கீரோவாகிவிட்டேன்

நீங்கள் குறிப்பிடுவது ஜெயந்தி நகரில் உள்ள குருகுலத்தை என நினைக்கின்றேன்.அதற்கும் எங்கள் குடும்பத்திற்கும் ஒரு நீண்ட தொடர்பு இருந்தது. முதலில் வடிவேல்சாமியாரால் ஆச்சிரமத்துடன் தொடங்கப்பட்டது. நாங்கள் ஆச்சிரத்தில் ஆருத்திரா தரிசனம் பூசை செய்வது வழக்கம். எனக்கு ஏடு தொடக்கியது வடிவேல்சாமியாரே. அவர் இப்பொழுது உயிருடன் இல்லை, பின்பு அவரது வளர்பு மகன் சிவம் ஆச்சிரமத்தையும் குருகுலத்தையும் பார்த்தார். இப்பொழுதும் இயங்குவதாக கேள்விப்பட்டேன். சிவம் இருக்கின்றாரா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்த ஆச்சிரமத்தை மாதிரி நான் வேறு எங்கேயும் காணவில்லை. நீங்கள் கேட்ட சாந்தனை எனக்கு ஞாபகம் இல்லை. கரடிப்போக்கு சந்திக்கு அருகில் உள்ள சாந்தி தியேட்டர் எனநினைக்கின்றேன் அதற்குப் பக்கத்திலுள்ள பயில்வான் கதிரவேற்பிள்ளையர் எமது குடும்ப நண்பர்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு 3ம் வாய்காலில் கமம் இருந்ததாலும் நான் அடிக்கடி இங்கு வருவேன்..............................அப்ப குருகுலம்,சாந்தன்.........

மூன்றாம் வாய்கால் தேதண்ணி கடையை மறக்க முடியாது. அன்றிலிருந்து கிளிநொச்சி டிப்போவில் நான் ஒரு கீரோவாகிவிட்டேன்

கரடிப்போக்கு சந்தி

பழைய பஸ் நிலையடி

தியேட்டர் என்று நீங்கள் எழுதுவதால்....................

அங்கு ஒரு சேவிஸ் ஸ்ரேசன் (SERVICE STATION) இருந்தது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கட்டிடங்கள் மீளக்கட்டுப்படாமலே இருந்தது மனதிற்கு வலியாக இருந்தது. நாங்கள் கஸ்ரப்பட்டுக் கொடுத்த காசுகளே இதற்குக் காணுமே, அவையெல்லாம் எங்கே போய்விட்டன? நாங்களும் ஒருவகையில் ஏமாற்றப்பட்டுவிட்டோமா? எங்களின் உணர்சிகளைத் தூண்டி விடுதலைப்புலிகளின் பெயரைச்சொல்லி பலர் தங்களை வளப்படுத்தினார்களா? தொடரும்.

உள்குத்து விழுந்துள்ளது போலிருக்கிறது???

தொடருங்கள் :(

  • தொடங்கியவர்

கரடிப்போக்கு சந்தி

பழைய பஸ் நிலையடி

தியேட்டர் என்று நீங்கள் எழுதுவதால்....................

அங்கு ஒரு சேவிஸ் ஸ்ரேசன் (SERVICE STATION) இருந்தது தெரியுமா?

அந்த சேர்விஸ் ஸ்ரேசன் இருந்தது முன்பு ஒரு காலத்தில், இப்போது அதைக்காணவில்லை இராமநாதபுரம் செல்லும் சாலை கண்ணுக்கு எட்டியவரை வெளியாகவே இருந்தது.

  • தொடங்கியவர்

உள்குத்து விழுந்துள்ளது போலிருக்கிறது???

தொடருங்கள் :(

ஏன் எதிர்மறையாகப் பார்கின்றீர்கள் விசுகு? இல்லாத ஒன்றை சொல்லவில்லையே?.உங்களுக்கு நான் சரித்திரங்களை சொல்ல வேண்டிய அவசியமில்லை. தேசியப்போராட்டத்துக்கு எல்லோருடைய பங்குமே இருந்தது. பலர் வங்கிகளில் தனிக்கடன்கள் எடுத்துக் கொடுத்து பின்பு அதைக் கட்டுவதற்கு சிரமப்பட்ட சம்பவங்களும் உண்டு. உதவிகள் போதாத நிலையைத்தான் அங்கு கண்டேன். உங்களை மனம் நோகவைப்பது எனது நோக்கமில்லை. இதில் உள்குத்து இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடன் சேர்த்து என்னையும் கிளிநொச்சியை வலம்வர வைத்துவிட்டிங்கள் :) . பலநூறு நினைவுகள் :( இந்திய படைகாலத்து நிகழ்வுகள் :o என மனதில் தோன்றிக்கொண்டேயிருந்தது தொடருங்கள்.

எங்களுக்கு 3ம் வாய்காலில் கமம் இருந்ததாலும் நான் அடிக்கடி இங்கு வருவேன்..............................அப்ப குருகுலம்,சாந்தன்.........

ஆமாம்! குருகுலம் அதேதான். நான் கேட்டது பாடகர் சாந்தன்,அவர் வாழ்ந்த இடம் உருத்திரபுரம் 7ம் வாய்க்கால்

  • தொடங்கியவர்

உங்களுடன் சேர்த்து என்னையும் கிளிநொச்சியை வலம்வர வைத்துவிட்டிங்கள் :) . பலநூறு நினைவுகள் :( இந்திய படைகாலத்து நிகழ்வுகள் :o என மனதில் தோன்றிக்கொண்டேயிருந்தது தொடருங்கள்.

உங்கள் அனுபவங்களுடன் ஒப்பீட்டளவில் நான் ஒரு தவ்வல் :):) என்றே நினைக்கின்றேன் உங்களையும் அசைத்தேன் என்றால் அது உங்களின் ஆசீர்வாதமாகத்தான் இருக்கும் சாத்திரி.

தொடருங்கள் கோமகன் பயணத்தை அதே பாதையில்.

எல்லோருக்கும் தெரிந்த பல விடயங்கள் சிலருக்கு தெரிய மாட்டுதாம்.ஒன்றும் தெரியாத பாப்பா பகலில போட்டாளாம் தாப்பா"

  • தொடங்கியவர்

eelamidp.th.jpg widowsdisplaced.th.jpg

பஸ்சிலிருந்து எல்லோரும் இறங்கினார்கள். எனக்கு ராங் முட்டிக் கடுத்தது. கொண்டக்ரரை நோக்கி

"அண்ணை எங்கை பம்பிங் ஸ்ரேசன்"?

"வாரும் நானும் அங்கைதான் போறன்".

நான் விரைவாக அவரைப் பின்தொடர்ந்தேன்.மூச்சைநிப்பாட்டிக் கொண்டு காலச்சட்டை சிப்பை அவசரமாக இழுத்தேன். பம்பிங் ஸ்ரேசனில் அவ்வளவு வெடுக்கு. ராங் குறையத் தொடங்கியது ஆனால் நேரம் எடுத்தது, அவ்வளவு கனம். வெளியே வந்து மூச்சை விட்டேன். பக்கத்தில் இருந்த தண்ணித் தொட்டியில் கைகால்களை அலம்பினேன். காலில் இருந்து ஊத்தை கருப்பாகப் போனது. ஆனாலும் எனது புளுதிமண்ணல்லவா, தண்ணீர்படும்பொழுது மணத்தது. கொண்டக்ரரும் தன்னுடைய அலுவலை முடித்து வட்டு வந்தார். அவரது கை சீப்பால் தலைஇழுத்தது. எனக்கு அருவருப்பாக இருந்தது. இவை கைகழுவ மாட்டினமோ?

"தம்பி நீங்கள் எங்கை சாப்பிடப் போறியள்"?

"எனக்கு அக்கா வீட்டை இருந்து சாப்பாடு கட்டித்தந்தவா".

"அப்ப நீர் குடுத்து வைச்சாள் தான்".

"நான் இங்கை கடைல பாக்கிறன் நீர் போய் சாப்பிடும்".

நான் பஸ்சை நோக்கி விரைந்தேன். பஸ் ஆட்கள் இல்லாது வெளிப்பாக இருந்தது. மனைவி இடியப்பப் பாசலை அவிழ்த்தா. வாழை இலையின் மணம் மூக்கைத் துளைத்தது. நான் பலகாலமாக அனுபவிக்காத வாழையிலை மணம். அந்தமணத்துடனே இடியப்பத்துடன் சம்பலை சேர்த்துச் சாப்பிட்டேன். அதில் அக்காவின் அன்பு தெரிந்தது. எனக்குக் கண்ணில் நீர் முட்டியது. எனது மனைவி உறைப்பால் அவதிப்படுகின்றேன் எனநினைத்து தண்ணிப் போத்தலைத் தந்தா. அவாவின் மனதை நோகப்பண்ணக்கூடாது என நினைத்து தண்ணீரைவாங்கிக் குடித்தேன். சாப்பிட்டு முடிந்ததும் சிகரட்டை எடுத்துக்கொண்டு பஸ்சை விட்டு இறங்கினேன் சிகரட்டை பற்றவைத்து புகையை ஆழமாக இழுத்தேன் உறைத்த நாக்கிற்கு இதமாக சிகரட் இருந்தது. சுற்றாடலை நோட்டமிட்டேன் அந்த இடத்தில் 6-7 கடைகளே காணப்பட்டன. அவைகளில் ஒருவிதசோகம் காணப்பட்டது. ஒரு ரீக்கடையில் போய்நின்று எட்டிப் பார்த்தேன். ரீ குடிக்கவேணும் போல் இருந்தது. ரீக்கு சொல்லிவிட்டு கடையை நோட்டம் விட்டேன் சிவர்களில் பல ஓட்டைகள் இருந்தது. கடையை நடத்தியவர் நடுத்தரவயதாக இருந்தார்.

"அண்ணை கனகாலமாய் கடைவைச்சிருக்கிறியளோ"?

"ஓம் தம்பி, ஆனால் நாலஞ்சுவரியமா ஒண்டுஞ் செய்யேலாமல் போச்சுது. செல்அடில கூரை எல்லாம் பிஞ்சுபோச்சு இப்பதான் நிவாரணநிதிலை திறந்தனான்"

"நிவாரணநிதி உடன தந்திட்டாங்களோ"?

என்னை ஆளமாகப்பார்த்தார்,

"அண்ணை குறைநினைக்காதையுங்கோ நான் வெளிநாட்டிலை இருந்து கனகாலத்துக்குப் பிறகு இங்கை வாறன்"

"எவ்வளவுகாலம்"?

"25 வரியம்".

"என்ரடவுளே!!!!! நான் ஆரோடையும் கனக்க கதைக்கிறேல தம்பி நீர் வெளிநாடு எண்டபடியால் உம்மை நம்பிறன்".

ஆ!!! என்ன சொன்னான் எல்லாம் உடன கிடைக்குதே எங்களுக்கு ரெண்டு பக்கமும் இடிதம்பி இப்பதான் ஒருமாரிநிமிர்றம். என்ர ரெண்டு பெடியளும் மாவீரராய் போட்டாங்கள், பெடிச்சியும் இருக்கிறாளோ இல்லையோ தெரியாது மனிசிக்காறிக்கு இதால கொஞ்சம் மண்டகுழம்பிப் போச்சு. இப்ப வைத்தியம் பாக்கிறன், எல்லாம் முறிகண்டியான் பாப்பான் எண்ட துணிவிலை இருக்கிறன்.எனக்கு மனசு வலித்தது.

"எவ்வளவு ஆண்ணை நான் தரவேணும்"?

"ரீ 15 ரூபாய் தாரும்".

பொக்கற்றுக்குள் கையை விட்டேன் நூறு ரூபா வந்தது.

"அண்ணை இதை வைச்சிருங்கோ".

"நில்லும் மிச்சம் தாறன்".

"இல்லை மிச்சத்தையும் வைச்சிருங்கோ".

"இல்லைதம்பி உழைச்சு வாறது தான் நிக்கும். நீர் மிச்சத்தை கொண்டுபோம்".

" சரி மிச்சத்துக்கு ஏதாவது வடை றோல்ஸ் தாங்கோ".

"அப்பிடி எண்டால் தாறன்".

விரைவாக பாசல் கட்டித் தந்தார். பாசலை வாங்கிக் கொண்டு கடை வாசலை விட்டு வெளியேறினேன்.சிறிது தூரம் சென்றிருப்பேன், தம்பி என்று ஒரு குரல் என்னை நிறுத்தியது.அங்கே ஒரு நடுத்தரவயதுள்ள பெண்ணும் ஒரு சிறுவனும் நின்றிருந்தார்கள்.

"தம்பி நாங்கள் கிளிநொச்சில இருந்து இடம்பெயர்ந்தனாங்கள்.இங்கை உமையாள் புரத்திலை இருக்கறம், என்னம் நிவாரண நிதி கிடைக்கேல தம்பி. சொல்ல வெக்கமாய் இருக்கு, நேற்றேல இருந்து நானும் பிள்ளையும் என்னம் சாப்பிடேல. பஸ் வெளிக்கிடுவதற்கு ஆயுத்தமாக கோர்ண் அடித்தது. மனைவி பரபரப்பது தெரிந்தது. கையில இருந்த பாசலை அந்தப்பெண்ணிடம் கொடுத்தேன்.

" இதை சாப்பிடுங்கோ அக்கா எனக்கு பஸ்வெளிக்கிடப்போகுது".

" அப்ப தம்பி உங்களுக்கு நீங்கள் சாப்பிட வாங்கிக் கொண்டு போறியள் போலகிடக்கு, உங்கடை அவாவும் பஸசுக்கை இருந்து உங்களைப் பாக்கிறா எனக்கு வேண்டாம்".

என்று வெள்ளேந்தியாக சொன்னாள். எனக்கு அக்காவின் ஞாபகம் ஏனோ வந்து மறைந்தது. தன்பசியிலும் மற்றவனை உபசரிக்கும் வன்னியின் பண்பு அவள் பொய் சொல்பவளாக எனக்குத் தெரியவில்லை

எனக்குக் கண்கலங்கியது. கடவுளே இவர்கள் என்ன பாவம் செய்தார்கள். ஏன் இவர்களுக்கு இந்த நிலை எல்லோருக்குந் தானே சாப்பாடு போட்டார்கள் இண்டைக்குக் கூசிக்கூசி அல்லவா சாப்பாட்டுக்குக் கைஏந்துகிறார்கள். எனக்கு வியர்வையுடன் கண்ணீரும் வந்து கண் எரிந்தது.சிறிய துவாயால் முகத்தை இறுக்கமாய் துடைத்தபடி பஸ்சை நோக்கி விரைந்தேன். நான் பஸ்சுக்குள் ஏறியதும் கொண்டக்ரர் விசில் அடித்துக் கொண்டே,

"என்னதம்பி இங்கை மனிசிக்காறி இருக்கறா நீர் கேர்ல் பிரண்ட் பிடிச்சிட்டீர் போல கிடக்கு".

"அதல்லாம் யூறொப்பில நோமல் அண்ணை" என்றேன் சிரித்தவாறே,

"பாத்துதம்பி அவா ரிக்கற் எடுத்தது பரித்தித்துறைக்கு இடம் தெரியாம விளையாடாதையும்".

"தெரிஞ்சு தானே அண்ணை விழுந்தனான்"

எல்லோரும் சிரித்தார்கள். பஸ் மீண்டும் ஏ9 பாதையில் வேகமெடுத்தது." உங்களுக்கெல்லே சொன்னான் ஒரத்தரோடையும் கதைக்கவேண்டாம் எண்டு".

எனக்கு தெரிந்தது அவா எதை மனதில் வைச்சுக் கதைக்கிறா என்று.

" பிள்ளை எங்களுக்கு கடவுள் என்ன குறை வைச்சார், ஒரு யூறோவும் வராது அந்த மனிசின்ர ஒருநேரச்சாப்பாடு கிடைச்சுதே பாவம் அந்த மனிசியப்பா".

"இங்கை உங்களுக்கு இங்கத்தையான் நிலமை தெரியாது பாத்து நடங்கோ".

நேரம் 10மணியை நெருங்கியது. தூரத்தே கடல்நீர் ஏரி தெரிந்தது. அது ஆனையிறவு வருவதைக் கட்டியங் கூறியது.

தொடரும்.

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.