Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜனியை பற்றிய எனது சில குறிப்புக்கள்

Featured Replies

அன்று ஒரு நாள் அந்த யாழ் கஸ்தூரியார் வீதியூடாக இரவு பகலுமற்ற நேரத்தில் வின்சர் தியேட்டரில் படம் பார்த்து முடித்தவர்களுடன் சனத்துடன் சனமாக திரும்பி கொண்டிருந்தேன். நாங்கள் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கும் படம் மூன்று முடிச்சு.அந்த சனத்தோடு சனத்தோடாக திரும்பும்போது அந்த நடிகனை பற்றிய கேள்விதான் அவர்களின் பேச்சிலும் மூச்சிலும் ஒலித்து கொண்டிருந்தது. யாரப்பா அந்த பொடியன்? நல்லாச்செய்யிறான்? யார் அந்த கதாநாயக வில்லன் ? அவன் நல்லாச் செய்யிறான் நல்லாய் வருவான் .அவன் வித்தியாசமாக செய்யிறான் .இந்த வார்த்தைகள் எல்லாம் அந்த படம் பார்த்து திரும்பும் தெரு கும்பலால் அப்பொழுது பேசப்பட்ட வார்த்தைகள் முப்பது வருடங்களுக்கு முன்பு ..அந்த வார்த்தைகளுக்குள் சிக்கி கொண்டவரின் பெயர் ரஜனிகாந்த்.

இதே கஸ்துரியார் வீதியூடாக முப்பது வருடங்களின் பின் ராஜா தியேட்டரில் எந்திரன் படம் பார்த்து விட்டு அடுத்த அடுத்த தலைமுறைகளுடன் திரும்பி கொண்டிருக்கும் பொழுது அன்றைய சம்பவம் எனக்கு அன்றும் மறக்காமால் ஞாபகத்துக்கு வந்தது .அன்று யார் என்று தெரியாமால் இருந்த நடிகன் இன்று பேச்சிலும் மூச்சிலும் நன்கு பரிச்சியப் பட்ட சூப்பர் ஸ்டாராகி இருந்தார்.இவர் என்று சூப்பர் ஸ்டார் ஆகினாரோ அன்றிலிருந்து நல்ல நடிகன் என்ற ஸ்தானத்தில் இருந்து இறங்கி கடவுள் என்ற ஸ்தானத்தில் உயர்த்தப் பட்டு சிலுவையில் அறையப் பட்டு இருக்கிறார்.

ரஜனி ஸ்டைல் நடிகர் என்ற அடைமொழிக்குள் அகப்பட்டாலும் கமல் போல நல்லதொரு நடிகன் அவர் .அவருடைய ஆறிலிருந்து அறுபதுவரை அவள் அப்படித்தான் முள்ளும் மலரும் போன்ற படங்களில் தனது நடிப்பாற்றல் மூலம் நிரூபித்தும் இருக்கிறார் .ஆரம்ப காலங்களில் படங்களில் நடித்திருக்கும் பொழுது அவரது லட்சிய கனவு ஒரு வெஸ்பா ஸ்கூட்டரும் பிளாட் வீடுமாகவே இருந்தது .இதை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்,பின் அவரே எதிர்பார்க்காத உயரத்துக்கு லட்சங்கள் கோடிகளுடன் சென்று விட்டார்.

70 களில் காலம் காலமாக இருந்து வந்த தமிழ் சினிமாவில் ஒரு மாறுதல் வந்தது .வெறும் கதாநாயக வழிப்பாட்டுடன் வெளி வந்த படங்களிலிருந்து சிறிது மாற்றம் வந்து டைரக்சன் மற்றும் சினிமா தொழிநுட்பங்கள் கூடிய பொறிமுறையுடன் கூடிய படங்கள் வெளிவர தொடங்கின. பல நாடகங்களை அரங்கேற்றிய பாலசந்தர் தனது நாடகப்பாணியலையே திரைபடங்களை உருவாக்கினார் .70 களில் அரங்கேற்றம் என்ற படத்தின் மூலம் சினிமாத்தனமான முயற்சிகளை காட்டி தமிழ் திரை உலகுக்கு வித்தியாசமான பக்கத்தை அறிமுகபடுத்தினார். அந்த காலம் பாலசந்தரை சத்தியத்ரேயை பற்றி தெரியாத எங்களுக்கு தென்னிந்திய சத்தியத்ரே என்று ஊடகங்கள் அப்பொழுது பூச்சாண்டி காட்டியது.உண்மையில் சில காட்சிகள் அப்பட்டமாகவே சத்தியத்ரேயின் படங்களில் திருடி தனது படங்களில் தனக்கேற்ற மாதிரி அமைத்து இருந்தார் பின்னர்தான் காலம் தெரியவைத்தது.

வெறும் மசாலா படங்கள் பார்த்த எங்களை போன்ற இளைஞர்களுக்கு சினிமா என்றது வித்தியாசமான தொடர்பு சாதனம் என்பதை அறிமுகபடுத்தியதில் பாலசந்தர் பங்குள்ளது என்பதை மறுக்கமுடியாது. பாலசந்தர் அறிமுகபடுத்திய ரஜனி என்பதால் அவர் பால் அப்போதைய இளைஞர்களுக்கு ஒரு கவர்ச்சி இருந்தது . ரஜனியின் மானரிசம் என்பது பலராலும் சிலாகித்து கூறும் வார்த்தை அப்பொழுதும் அல்ல இப்பவும் பேசப்படுகிறது .இந்த ஒரு வகை ஸ்டைல் மூலம் நடிப்பை காட்டும் இம்முறையை ஆங்கில படங்களில் மசாலா பட நாயகன் சார்ள்ஸ் பிறவுன்சன் போன்ற நடிகர்கள் செய்வதை பலர் பார்த்திருப்பார்கள் . நம்ம சிவாஜி கணேசன் கூட இந்த ஸ்டைல் நடிப்பு மூலம் பல படங்களில் நடித்திருக்கிறார் .ஆனால் அவருடைய மிகைபடுத்தல் நடிப்பு காரணமாக அது விமர்சனத்துகு உட்படுத்தபட்டது ,ரஜனியின் ஸ்டைல் நடிப்பு காட்சிக்கு ஏற்றவாறு டைரக்சனுக்கு அடங்கி வெளிப்பட்டதால் ஓரளவு யதார்த்தமாக தெரிந்தது ..அதனால் பலரால் அப்பொழுது சிலாகிக்கப்பட்டது.

ரஜனி உடல் நலம் இல்லாமால் இருக்கிறார்.அத்துடன் அவர் பற்றிய வித்தியாசமான வதந்திகள்,தமிழ் தொடர்புசாதனங்களை இப்ப ஆட்டி படைத்து கொண்டிருக்கின்றன் ...ரஜனிக்கு உண்மையில் நடந்தது என்ன ?என்ற மில்லியன் டொலர் கேள்வியாக ஒலித்து கொண்டிருக்கு.சிங்கப்பூருக்கு மருத்துவத்துக்கு செல்ல முன்பு ஒலிநாடவில் எனக்கு பணம் கொடுங்கிறாங்கள் நடிக்கிறன் ,இதை விட என்னத்தை நான் உங்களுக்கு திருப்பி செய்யப்போறன்.என்று.சொல்லியிருக்கிறார் ..இது தான் உண்மை ..செய்ய நினைத்தாலும் அவர்களின் விடிவுக்கு ஒன்று செய்ய முடியாது என்பது தான்

ரஜனி சாதரண கண்டக்டர் என்று கூறிக்கொண்டாலும் ஒரு பட்டதாரி . பட்டதாரி பட்டத்துக்கு அப்பாற்றப்பட்டு அவர் பல விசய ஞான விடயங்களை தேடி அறிந்திருக்கிறார் .ஜி. கிருஸ்ணமூர்த்தியை பற்றி விவாதிப்பார் ,,தமிழில் புதுமைபித்தன் ஜானகிராமன் ஜெயகாந்தன் போன்றோரை கூட விரும்பி வாசித்திருக்கிறார் ..புலம் பெயர் எழுத்தாள்ர் ஷோபாசக்தியின் கொரில்லா நாவலை கூட வாசித்து சிலாகித்து இருக்கிறார் என்று பத்திரிகையில் வந்த கொசுறு செய்தி பார்த்த ஞாபகம்.யோகா தியானம் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடித்து வருபவருக்கு வருத்தங்கள் வரக்கூடாது என்று இல்லை .ஆனால் யோகா மூலம் மற்ற நடிகர்களுக்கு இல்லாத உடல் வாகுடன் இருப்பதால் எந்த அசைவு செய்தாலும் கவர்ச்சியாக மாறுகிறது. இந்த வயது வந்து கூட இவரது இப்பவும் உடம்பை பார்த்தால் கல்லு மாதிரி இருக்கிறது. மற்றும் எந்த உடை அணிந்தால் கூட அழகாகவும் இருக்கிறது.

.இந்த யோகா தியானம் போன்றவற்றை நான் ஒரு கலையாக நினைப்பதால் எனக்கும் சிறு வயதிலிருந்து ஈடுபாடு கூட.. ரஜனியை பொறுத்தவரையில் எனக்கு ஒரு ஆச்சரியம் சந்தேகம் இவ்வளவு காலமும் இருந்து வந்ததது? .இந்த சிகரெட் அபிரிதமான குடியுடன் யோகா தியானம் எப்படி செய்கிறார்? ,,,எப்படி அவருக்கு பலன் தந்து இருக்கு என்று ?... அண்மையில் எங்கையோ கூறியிருந்தார் தனது வெற்றிக்கு தியானம் தான் முழு காரணமும் என்று..பாபா விசயம், மற்றும் யாரும் கடவுள் என்று சொல்லி கொண்டு திரிந்தால் சாதரண பித்தலாட்டம் செய்பவனாக இருந்தாலும் கூட அவரிடம் போய் ஆசி ஆலோசனை கேட்க போகிறது போன்ற இப்படியான விசயங்களினால் அவர் கோமாளியாக போவதுமுண்டு .அவரை மென்டல் என்று பழிப்பவர்களின் கருத்துகளுக்கு இது வலுவூட்டியதாகவும் விட்டு விடுவதுமுண்டு.

யோகா தியானம் போன்றவை செய்து குடி சிகரெட் அதீத மாமிச பாவிப்புடன் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கட்டுக்குள் அடங்காமால் இவ்வளவு காலமும் தள்ளி ஒரு வெற்றியடைந்து விட்டார் என்று உண்மை தான் . என்றாலும் அண்மையில் அவரது உடல்நிலை பற்றி வரும் செய்திகள் அல்லது வதந்திகள் எல்லாம் இவர் தோற்று விட்டார் என்பதை உணர்த்துகின்றன..

அவருடைய நோயுக்கு ஊடகங்கள் புது புது காரணங்களை சொல்லுகின்றன். அவர் மேற்கத்தைய மருத்துவத்தை நம்பமால் ஆயுர்வேத மருந்துகளை அதிகம் உட்கொண்டமையாலேயே அவரது கிட்னி பாதித்தது என்பது. எம்ஜியாரும் திடகாத்திரமான உடற்பயிற்சி செய்து உடம்பை வயதான காலங்களிலும் கூட கட்டாக வைத்திருந்தவர் ,வேறு தேவைகளுக்காக தங்க பஸ்பம் சாப்பிட்டதாலையே நோய் வந்தது என்பதுக்கு இது ஒப்பாகும். வேறு ஒரு வட நாட்டு ஊடகம் ஹீந்தி நடிக நண்பர்களுடன் மது அருந்தும் பொழுது ஒரு அமர்வில் 9 அல்லது பத்து பெக் மது அபிரிதமாக அருந்துவார் என்று ஆச்சரிய செய்தியை வெளியிட்டுள்ளது. எது எப்படியோ ரஜனியின் மருமகன் தனுஸ் விரைவில் சுகமாகி திரைபடத்தில் நடிப்பார் என்று கூறுகிறார் ..திரைபட செல்வந்த தயாரிப்பாளர்களுக்கு அவர் ஒரு பொன் முட்டை இடும் வாத்து ....அவர்களும் காத்திருக்கிறார்கள்..சாதாரண முட்டைக்கு கூட வழியில்லாத அப்பாவி ரசிகனும் காத்திருக்கிறான்...

http://sinnakuddy1.blogspot.com/2011/06/blog-post.html

ரஜனி சுகமாகி வந்து நடிப்பார் என்று..வாழ்த்துவோம் அவர்களைப்போல

Edited by sinnakuddy

  • கருத்துக்கள உறவுகள்

சின்னக்குட்டியார் தற்போது உங்களுக்கு வயசு 50 வயதிற்கு மேலே இருக்கும் போல :unsure:

  • தொடங்கியவர்

சின்னக்குட்டியார் தற்போது உங்களுக்கு வயசு 50 வயதிற்கு மேலே இருக்கும் போல :unsure:

அக்கா ...பதிவை பற்றி ஏதாவது கூறாமால் ..என்ரை வயசிலையே கண்ணாய் இருக்கிறியள்... வயதை சொன்னப்பாலே என்ன.. கெதியிலை 50 முடிந்து 51 ஆக போகுது... .... ஆனால் மனசு மட்டும் இப்பவும் 20 வது தான் :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் உங்கள் ரஜனி பற்றிய கதை நன்றாக உள்ளது...எனது சார்பாக ஓர் பச்சை

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனி பற்றிய தங்கள் எண்ணப் பகிர்வுக்கு நன்றி .

அவர் நலம்பெற்று மீண்டு வரவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்

ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்

ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்

குமாரசாமி வாத்தியார் ரசிகர் போல :-)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி வாத்தியார் ரசிகர் போல :-)

பெரிசாய் சொல்லுற அளவுக்கு இல்லை.........

அதொண்டுமில்லை ....

பாட்டிலையும் படங்களிலையும் ஊரையும் நாட்டையும் பெரிசாய் காட்டி ஊர்சனத்தை பேக்காட்டிப்போட்டு தங்களுக்கெண்டு ஒரு பிரச்சனை வரேக்கை வெளிநாட்டுக்கு ஓடிப்போறாங்கள்:::

கண்ணதாசன்...எம்ஜிஆர் எண்டு இடையிலை எக்கச்சக்கம்...

இப்ப ரஜனி............

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்

ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் :lol: :lol: :lol:

ரஜினி ஒரு வழிகாட்டி

நல்ல தோற்றம் , நடனம் , சண்டை கலை, தெளிவான உச்சரிப்பு, ஜாதி அல்லது ஒரு குழுவின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என இருந்த சினிமா உலகில் தன்னம்பிக்கையும் பிறரிடமிருந்து வேறுபடுத்தும் தனித்துவமும் இருந்தாலும் வெற்றி கொள்ளலாம் என நிருபித்தவர் .

இக்கால இளைஞர்களுக்கு இவரின் வாழ்க்கை அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும் . தன்னம்பிக்கை உள்ளவன் தான் ஜெயிப்பான் என்பதற்கு ஒரு முன்னுதாரணம் இவர்

கல்வி முற்றும் அனுபவ வெற்றிக்கு எடுத்துக்காட்டு ரஜினி

எவருக்கு முன் அல்லது பின் எவருமே அறுபது வயதில் ஆர்ப்பாட்டமான வெற்றி படங்களை பெரும்பாலும் தந்ததில்லை . இவர் தருகிறார் . ஏன்? இவர் திரையுலகில் நுழையும் முன்பே அதற்காக படித்து நுழைந்தவர் . மேலும் எந்த கால கட்டத்தில் எப்படி படம் எடுக்க வேண்டும் என நன்றாக ஆராய்ந்து அளிப்பவர் . பெரும் பாலும் இவர் செய்யும் சோதனை முயற்சிகள் எல்லாமே சொந்த காசிலோ அல்லது பணம் வாங்காமல் நடிப்பதிலோ இருக்குமே தவிர அடுத்தவரின் படங்களில் சோதனை முயற்சிகள் செய்ததில்லை .அதனால் தான் இவர் இன்னும் ஜொலிக்கிறார்

தோல்வியிலும் எப்படி வெல்வது ??? கற்றுகொடுத்தார் ரஜினி

இவர் படம் நன்றாக ஓடும் என தெரிந்து தான் முதலீடு செய்கின்றனர் . எப்போதுமே இவர் படங்களுக்கு கிராக்கி மவுசு அதிகம் . இவரின் பாபா மற்றும் குசேலன் ஓடாத போது பணத்தை திருப்பி கொடுத்து தன்னை ஒரு பெரிய வியாபார வித்தகன் என நிருபித்து விட்டார். முன்பு ரஜினி படம் ஓடினால் மட்டும் லாபம் என்ற நிலையை மாற்றி ஓடாவிட்டாலும் நட்டமில்லை எனும் புதிய பரிணாமத்திற்கு திரை துறையை கொண்டு சென்றதன் மூலம் இவருக்கு இருக்கும் மவுசை அதிகபடுத்தி கொண்டு விட்டார்.

இந்த நிகழ்வுகள் மூலம் தோல்வியில் எப்படி சிந்திப்பது என பிறருக்கு ஒரு படிப்பினை கற்று கொடுத்துள்ளார்

நல்ல குடும்பஸ்தனுக்கு எடுத்துகாட்டு ரஜினி

வாழ்வின் தர்மங்களில் உயரிய தர்மம் தன் குடும்பத்தை நன்றாக கவனித்து கொள்வது . ரஜினிக்கு உள்ள குடும்ப பற்றை கூற எடுத்து காட்டு வேண்டாம் என நினைக்கிறேன். ஆனால் அவரது ரசிகர்கள் தங்கள் குடும்பங்களை கவனியாது இவர் பின் அலைவதற்கு கட்டுரை எழுதும் நானோ அல்லது ரஜினியோ பொறுப்பல்ல . ( ரஜினியே பல முறை அவரவர் குடும்பங்களுக்காக உழையுங்கள் என பல முறை கூறிவிட்டார் )

குரு பக்திக்கு எடுத்து காட்டு ரஜினி

அவர் பாலசந்தர் மீது வைத்திருக்கும் மரியாதை வெகு அரிதாகவே பிறரிடம் பார்க்க முடியும் . எவ்வளவு உயரே போனாலும் கற்று கொடுத்த குருவை மறவாது மதிப்பதனால் தான் இவர் உயர்ந்து கொண்டே போகிறார் .

நமக்கு கல்வி மற்றும் பிற அறிவு கொடுத்த ஆசான்களை மதிப்பவன் என்றுமே உயரத்தில் இருப்பான் என்பதற்கு இவர் ஒரு எடுத்து காட்டு

  • கருத்துக்கள உறவுகள்

நான் மூன்று முடிச்சிலிருந்து ரஜனியின் தீவிரரசிகன்

அது என்னவோ பலரது விமர்சனங்களையும் தாண்டி நான் பார்ப்பது அவரது நகைச்சுவை மிக்க துடிதுடிப்பான நடிப்பு என்ற சொல்லுக்குள் வராத அவரது இயற்கையான பாவனைகள். ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒன்றை வைத்திருப்பார் மக்களையும் சிறுவர்களையும் கவர. அத்துடன் பெரியோரை மதித்தல் தன்னை தூக்கிவிட்டோரை மறவாமை புகழின் உச்சிக்கு போனபோதும் தன்னை மறவாமை அவரிடமிருந்து கற்கவேண்டியவை. ஒரு நடிகராக என்று சொல்லாவிட்டாலும் இன்றும் ஒரு மனிதராக

எனக்கு ரஜியைப்பிடிக்கும். முக்கியமாக தாயக மக்களைக்காப்பாற்ற திரையுலகத்தால் செய்யப்பட்ட அத்தனை முக்கிய நிகழ்வுகளிலும் ரஜனியின் பங்கு மிகமுக்கிய காரணியாக இருந்தது. அதில் அமிதாப்பச்சனின் பதவி விலகலிலும் இவரது பங்கே அவசியமாக இருந்தது. இந்த வகையில் அவர் குணமடையணும். அவர் தொழும் கடவுளும் அவர் செய்த நல்ல காரியங்களும் அவரைக்காப்பாற்றுவார்கள் என்று நம்புவோமாக.

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனியைப் பற்றி ஒரு தமிழறிஞர் என்னிடம் சொன்னது:

இலங்கையைச் சேர்ந்த அந்தத் அறிஞர் மலேசியா சென்ற போது, சென்ற விமானத்தில் ரஜனிக்கு அருகில் இருக்கை கிடைத்திருக்கிறது. அறிஞருக்கோ ரஜனியை யாரென்று தெரியாது. அவர் சினிமா பார்ப்பதில்லை.

கொஞ்ச நேரம் ரஜனியுடன் அறிமுகத்திற்கு அளவளாவிய பிறகு ரஜனியே அவரிடம் தன்னை யாரென்று தெரியுமாவென்று கேட்டிருக்கிறார். அறிஞரோ எனக்குத் தெரியவில்லையே என்று தலையைச்சொறிந்தபோது, ரஜனி, ரஜனிகாந்த் என்னும் நடிகரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களாவென்று கேட்டாராம். அறிஞர் ஆம் நான்கேள்விப்பட்டிருக்கிறேனென்று சொல்ல அது நான்தானென்று ரஜனி தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

இருவரும் மலேசியாவில் இறங்கியபோது அறிஞரிடம் ஐயா எங்கு போகிறீர்களென்று கேட்ட ரஜனி அவர்கொடுத்த விலாசம் வரை அறிஞரைத் தனது காரில் கூட்டிக்கொண்டுபோய் விட்டுவிட'டுத்தான் போனாராம். அந்த அறிஞர் மறைந்து விட்டார், ஆனால் சினிமா பார்க்காத அவரது வாயாலேயே ரஜனி மிகவும் நல்ல மனிதர் என்று புகழ்ந்து என்னிடம் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனிக்கு ஆலோசனை வழங்குபவர்களில் சோவும் ஒருவர். நல்ல காலம் நடிகராக மட்டும் ரஜனி இருந்திருக்கிறார். அரசியல்வாதியாக தேர்தலில் நிற்கவில்லை. நின்றிருந்தால்?

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனி பெருந்தன்மை இல்லாதவர்,சாதாரணமானவர்.தன்னை திரைப்பட துறைக்கு அறிமுகப்படுத்திய பாலசந்தரை எந்த சந்தர்ப்பத்திலும் ஞாபகப்படுத்திக்கொள்வார்.இன்று வரை அரசியலில் சேராமல் இருப்பவர். நடிப்பில் நகைச்சுவையில் இருந்து வில்லன் வரை அத்தனையும் அசத்தல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.