Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண்களும் அரசியலும் ...... கனிமொழி எனும் ஆளுமையை முன்வைத்து ஒரு உரையாடல்;

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

27.05.2011 வெள்ளிக்கிழமை

பிரித்தானிய நேரம் மாலை 06.00 முதல் 08.30 வரை

இந்திய-இலங்கை நேரம் இரவு 10.30 முதல் 01.00 மணிவரை

பெண்களும் அரசியலும் :

கனிமொழி எனும் ஆளுமையை முன்வைத்து ஒரு உரையாடல்;

கனிமொழி எனும் ஆளுமையின் இன்றைய நிலையை நிலவி வரும் ஆண்மைய அரசியல் நிலைபாட்டில் இருந்து விளக்க முடியாது. கனிமொழி இயல்பில் கவிஞர். மனித உரிமை அரசியலிலும் பன்முகக் கருத்து வெளிப்பாட்டிலும் ஈடுபாடு காட்டியவர். கடந்த பத்தாண்டுகளில் அவரை அறிந்திராத தமிழக இலக்கியவாதிகள் என எவருமில்லை. நிலவும் தமிழக திராவிட அரசியல் ஊழலை நிறுவனமயமாக்கிய ஒரு நச்சுச் சுழல். இது குறித்த விமர்சன உணர்வுடன் கனிமொழி இருக்கவில்லை என்பதற்கான சான்றாகவே அவரது இந்த வீழ்ச்சி அமைகிறது. இது குறித்து தமிழகத்தின் பெண்ணியலாளர்கள் உரையாடுகிறார்கள்.

உரையாடுவோர்

மாலதி மைத்ரி தமிழகத்தின் முக்கியமான கவிஞர். தமிழ் பெண் கவிமொழியை உருவாக்கிய பெண்ணிய எழுத்தாளர். அணங்கு எனும் பெண்ணிய சஞ்சிகையின் ஆசிரியர். புதுச்சேரியில் வாழும் இவருடைய மூன்று கவிதைத் தொகுதிகள் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. சமகால அரசியல் குறித்த விமர்சனக் கட்டுரைளையும் எழுதி வருகிறார்.

குட்டி ரேவதி தமிழகத்தின் முக்கியமான பெண்கவிஞர். பனிக்குடம் பெண்ணிய சஞ்சிகையின் ஆசிரியர். இது வரையிலும் நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கும் இவருடைய முழு கவிதைகளும் அடையாளம் பதிப்பகத்திலிருந்து வெளியாகவிருக்கிறது. சமகால அரசியல் விமர்சனக் கட்டுரைகளும் எழுதி வருகிறார்.

ப்ரியா தம்பி ஊடகவியலாளர் மற்றும் பெண்ணியலாளர். கூர்மையான அரசியல் விமர்சனங்களையும், விவாதக் கட்டுரைளையும் எழுதி வருகிறார். கனிமொழி பிரச்சினை குறித்து இவர் குமுதத்தில் எழுதிய கட்டுரை இப்பிரச்சினையின் பல்வேறு பரிமாணங்களையும் பேசுகிற முக்கியமான கட்டுரை.

நிகழ்ச்சித் தயாரிப்பு

குருபரன்-யமுனா ராஜேந்திரன்

http://www.gtntv.net/?p=4998

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்ச்சி முடிந்து விட்டது போல இருக்குது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.gtntv.net/?p=4998

இந்த இணைப்பில் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.

கனிமொழி ஒரு ஆளுமை அல்ல. தகப்பனின் செல்வாக்கை வைத்து முன்னுக்கு வந்தவர். பாதிக்கப்பட்ட பெண் கவிஞர் என்று இவரிடம் நிறைய எதிர்பார்த்தேன்.

கடைசியாக பணம், பதவி, கொள்ளை.

இந்த அசிங்கங்களை தூக்கிப் பிடிக்க இத்தனை பெண்ணியலாளர்களா?

கேவலம்.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

எந்த இடத்திலும் பெண்களிடம் ஆட்சி அதிகாரங்களை முழுமையாக கையளிப்பது ஆபத்தானது. அப்படி கையளித்தாலும் அவர்கள் மீது முழுமையான உளவுக் கண்காணிப்பு இருக்க வேண்டும்..!

உலகின் முதல் பெண் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா.. சொந்த இனத்தின் மீது பாரிய மனித இனப்படுகொலைக்கு உத்தரவிட்ட ஒரு கொடிய பெண். இவர் சுமார் 25,000 சிங்கள ஜே வி பி உறுப்பினர்களை இந்திய படைகளின் உதவியோடு கொன்றொழித்த கொடியவர்.

(முடிவு: ஒரு முறை தாக்குதல் இலக்காகி அதில் இருந்து தப்பி இயற்கை மரணம் அடைந்தார்.)

அதன் பின் இந்திரா காந்தி அம்மையார்.. அவர் அநாவசிய ஒரு யுத்தம் செய்து கிழக்குப் பாகிஸ்தானைப் பிரித்துப் போட்டார். இன்று அந்த நாடு ஏழ்மையாலும் பட்டினியாலும் வாடிக் கொண்டிருக்கிறது..! இந்தியாவை அணு ஆயுத நாடாக்கியவர். சீக்கியர்களின் காலிஸ்தான் விடுதலைப் போராட்டத்தை கொடுமையான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு அடக்கியவர். தெற்காசியாவில் தேச விடுதலைக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டுக்கு வித்திட்டவர். பொற்கோவில் படுகொலைகளின் சூத்திரதாரி.)

(முடிவு: சுட்டுக் கொல்லப்பட்டார்.)

சந்திரிக்கா அம்மையார் - யுத்தத்தின் மூலம் மனித அழிவுகள் மூலம் சமாதானத்தைக் கொண்டு வர போர் செய்த வீரி. இவரின் கட்டளையின் கீழ் யாழ்ப்பாணக் குடாநாட்டில் செம்மணி என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் இனப்படுகொலைக்கு உள்ளாகி புதைக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியையே மகிந்த ராஜபக்ச முள்ளிவாய்க்காலில் மேற்கொண்டார்.

(தாக்குதல் முயற்சி ஒன்றில் காயப்பட்டு ஒரு கண்ணை இழந்தவர்.)

சோனியா காந்தி - தனது சொந்தக் குடும்ப நலனுக்கா முழு நாட்டையும் ஒரு இனத்தையும் அழிக்க தயங்காத கொடூரமான பெண்.

(முடிவுக்காக காத்திருப்பவர்.)

மார்கிரேட் தாட்சர் - இன்றும் பிரித்தானியாவின் இரும்பு பெண்ணாக கருதப்படுபவர். அநாவசியமாக எங்கையோ இருக்கும் ஒரு குட்டித்தீவுக்காக.. அதனை அண்டி உள்ள கடலடி எண்ணைக்காக சண்டை இட்டு மனித உயிர்களைக் காவு கொண்டவர்.

(இயற்கையான மரணத்திற்காக காத்திருக்கிறார்.)

அக்கீனோ - மார்கோசின் வீழ்ச்சியின் பின்னர் பிலீப்பைன்ஸ் நாட்டை ஆள வந்த இரத்தமில்லாத புரட்சி செய்த பெண்மணி. இறுதில் அந்த நாட்டையே சுருட்டிக் கொண்டு போய்விட்டார். இன்று அந்த நாடு பெரும் பொருளாதார பின்னடைவோடு கிடக்கிறது.

(கொலை முயற்சியில் இருந்து தப்பியவர்.)

சேக் கசீனா.. காலிதா சியா - வங்காள தேசத்தை ஏழ்மைக்குள் தள்ளி அதில் தாங்கள் சுகம் காணும் ஊழலுக்கு பெயர் போன பெண்கள்.

(கொலை முயற்சிகளில் இருந்து தப்பியவர்கள்.)

பெனாசிர் பூட்டோ - குடும்ப அரசியலின் முதன்மை நாயகி. ஊழலால் தேசத்தை ஆண்டவர். இந்தியா மீதான அச்சுறுத்தலுக்கு அணுகுண்டை தயார் செய்தவர்.

(முடிவு. சுட்டுக்கொல்லப்பட்டார்.)

ஜெயலலிதா - 1991 அப்பாவி ஈழத்தமிழ் இளைஞர்களை தனது சுய அரசியல் இலாபத்துக்காக சயனைட் அடித்துக் கொள்ளத் தூண்டியவர். ஈழத்தமிழர்களின் அடையாளத்தை அழித்து அவர்களை சிங்கள இலங்கைக்குள் அடக்க நினைக்கும் ஒரு கொடுமையான கொள்கை கொண்ட பெண்..! ஊழல் ராணி.

(முடிவுக்காக காத்திருப்பவர்.)

கனிமொழி - சொந்த இன பெண்களை பாலியல் வல்லுறவு கொண்டு கொன்று போட உத்தரவிட்டவனுக்கு பொன்னாடை போர்த்திய பெருமகள். 40,000 தமிழர்களைக் கொன்றவனுக்கு பொன்னாடை அங்கீகாரம் அளித்த ஒரே பெண்..! ஊழல் மகாராணி. 1.6 இலட்சம் கோடிக்கு ஊழல் செய்தவர். ராஜாவை அதற்காகப் பயன்படுத்தியவர்.

(சிறையில் கிடக்கிறார்.)

இதுதான் இந்த உலகை ஆண்ட அல்லது ஆட்சி அதிகாரத்தில் இருந்த பெண்கள் நேரிடையாக இந்த உலகில் மனித இனத்திற்கு ஆற்றிய காரியங்கள். உலகில் தோன்றிய ஏறக்குறைய அனைத்து பெண் அரசியல் தலைவர்களும் ஒரு கொடூர பக்கத்தை கொண்டவர்களாக இருக்கின்றனர். இது உலகை ஆண்ட ஆண் தலைவர்களின் சதவீதத்தோடு ஒப்பிடும் போது மிகப் பெரிய தொகையாகும்..!

நாட்டையே இப்படி ஆளும் பெண்கள் வீட்டில் எவ்வளவு அதிகார.. நம்பிக்கை மோசடிகளை.. செய்வார்கள்.. எண்ணிப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் விசயத்தில் உசாராக இருக்கவேண்டும் என்று உணர்த்திய நெடுக்ஸ்க்கு நன்றிகள்..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேவலம் கெட்டதை வைச்சு ஒரு உரையாடல்.....

  • கருத்துக்கள உறவுகள்

tamilmakkalkural_blogspot_kanimozhi_rajapaksa.jpg

இதுதான் கனிமொழியின் ஆளுமை...!

சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் குற்றச்சாட்டுக்களையும் மீறி.. ஈழத்து உறவுகளின் கதறலையும் மீறி.. ஐநா மன்ற விசாரணைகளையும் மீறி.. ஒரு போர்க்குற்றவாளிக்கு.. தமிழினப் படுகொலையை செய்தவனுக்கு அதுவும் தமிழ் பெண்களை பாலியல் ரீதியில் உயிரோடும் பிணமாகவும் சித்திரவதை செய்து கொன்றவனுக்கு சீரழித்தவனுக்கு அன்பளிப்பும் பொன்னாடையும் தந்தவரே இந்தக் கனிமொழி..!

இதன் பின்னால் இருக்கும்.. ஆளுமையை.. மனித உரிமையை.. இந்த 3 குரங்குகளும்.. விளக்கினால் நல்லா இருக்கும்..!

பெண்களின் பேச்சுக்களும் வசனங்களும்.. பெண்ணியம் என்ற கூக்குரலும் கேலிக்கூத்தாக இதுவும் ஒரு காரணம். மனித உணர்வுகளை மதிக்கத் தெரியாத எந்த முன்னெடுப்புகளும் பெண்களுக்கு எந்த விமோசனத்தையும் பெற்றுத் தராது. அவை விழலுக்கு இறைத்த நீராகவே இருக்கும்..!

  • கருத்துக்கள உறவுகள்

எந்த இடத்திலும் பெண்களிடம் ஆட்சி அதிகாரங்களை முழுமையாக கையளிப்பது ஆபத்தானது. அப்படி கையளித்தாலும் அவர்கள் மீது முழுமையான உளவுக் கண்காணிப்பு இருக்க வேண்டும்..!

நாட்டையே இப்படி ஆளும் பெண்கள் வீட்டில் எவ்வளவு அதிகார.. நம்பிக்கை மோசடிகளை.. செய்வார்கள்.. எண்ணிப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.

நெடுக்கு, கோல்டா மேயரை விட்டு விட்டீர்கள்! இஸ்ரவேலின் பிரதமராக இருந்த இவர், பாலஸ்தீனத்தில் குடி ஏறுவதையே தனது திருமணத்திற்கான முன் நிபந்தனையாக விதித்தவர்!

பாலஸ்தீனர்களின் அழிவுக்கு அத்திவாரம் இட்டவர்!!!

'மல வாளிக்கு மணிமகுடம் சூட்டும் பெண்ணியலாளர்கள்' எனும் தலைப்புத்தான் இதற்குப் பொருத்தம்.

திமுகவிற்காக நீண்டகாலம் உழைத்த எத்தனையோ அடிமட்ட பெண் தொண்டர்களை புறந்தள்ளி பதவியை பறித்துக் கொண்ட கள்ளி.

வாசிக்க, வாயில தூசணம்தான் வருகிறது.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

நீங்கள் சொல்வதெல்லாம் இங்கு உண்மையாக இருந்தாலும் ஒரு பக்கத்தை மட்டும் சுட்டிக்காட்டுவதால் தங்களது வாதம் நிறைவு பெறாதல்லவா?

தள்ளாடும் வயதிலும் எமக்காக தன்னுயுரைத்தந்தாரே பூபதி அம்மா

உலகெல்லாம் வணங்க உழைத்தாவே அன்னை தெரேசா

கணவன்இடமே தன்னிடமென்று கடைசிவரை தன் அத்தனை பிள்ளைகளுடன் முள்ளிவாய்க்காலுக்குள் நின்றாரே மதிவதனி...................

...........................

..............................

விசுகு அண்ணை.. நெடுக்ஸ் எல்லாப் பெண்களையும் சொல்லவில்லை என நினைக்கிறேன்..! அரசியல் அதிகாரம் வழங்கப்பட்ட பெண்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளார்..! :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த இடத்திலும் பெண்களிடம் ஆட்சி அதிகாரங்களை முழுமையாக கையளிப்பது ஆபத்தானது. அப்படி கையளித்தாலும் அவர்கள் மீது முழுமையான உளவுக் கண்காணிப்பு இருக்க வேண்டும்..!

உலகின் முதல் பெண் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா.. சொந்த இனத்தின் மீது பாரிய மனித இனப்படுகொலைக்கு உத்தரவிட்ட ஒரு கொடிய பெண். இவர் சுமார் 25,000 சிங்கள ஜே வி பி உறுப்பினர்களை இந்திய படைகளின் உதவியோடு கொன்றொழித்த கொடியவர்.

(முடிவு: ஒரு முறை தாக்குதல் இலக்காகி அதில் இருந்து தப்பி இயற்கை மரணம் அடைந்தார்.)

அதன் பின் இந்திரா காந்தி அம்மையார்.. அவர் அநாவசிய ஒரு யுத்தம் செய்து கிழக்குப் பாகிஸ்தானைப் பிரித்துப் போட்டார். இன்று அந்த நாடு ஏழ்மையாலும் பட்டினியாலும் வாடிக் கொண்டிருக்கிறது..! இந்தியாவை அணு ஆயுத நாடாக்கியவர். சீக்கியர்களின் காலிஸ்தான் விடுதலைப் போராட்டத்தை கொடுமையான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு அடக்கியவர். தெற்காசியாவில் தேச விடுதலைக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டுக்கு வித்திட்டவர். பொற்கோவில் படுகொலைகளின் சூத்திரதாரி.)

(முடிவு: சுட்டுக் கொல்லப்பட்டார்.)

சந்திரிக்கா அம்மையார் - யுத்தத்தின் மூலம் மனித அழிவுகள் மூலம் சமாதானத்தைக் கொண்டு வர போர் செய்த வீரி. இவரின் கட்டளையின் கீழ் யாழ்ப்பாணக் குடாநாட்டில் செம்மணி என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் இனப்படுகொலைக்கு உள்ளாகி புதைக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியையே மகிந்த ராஜபக்ச முள்ளிவாய்க்காலில் மேற்கொண்டார்.

(தாக்குதல் முயற்சி ஒன்றில் காயப்பட்டு ஒரு கண்ணை இழந்தவர்.)

சோனியா காந்தி - தனது சொந்தக் குடும்ப நலனுக்கா முழு நாட்டையும் ஒரு இனத்தையும் அழிக்க தயங்காத கொடூரமான பெண்.

(முடிவுக்காக காத்திருப்பவர்.)

மார்கிரேட் தாட்சர் - இன்றும் பிரித்தானியாவின் இரும்பு பெண்ணாக கருதப்படுபவர். அநாவசியமாக எங்கையோ இருக்கும் ஒரு குட்டித்தீவுக்காக.. அதனை அண்டி உள்ள கடலடி எண்ணைக்காக சண்டை இட்டு மனித உயிர்களைக் காவு கொண்டவர்.

(இயற்கையான மரணத்திற்காக காத்திருக்கிறார்.)

அக்கீனோ - மார்கோசின் வீழ்ச்சியின் பின்னர் பிலீப்பைன்ஸ் நாட்டை ஆள வந்த இரத்தமில்லாத புரட்சி செய்த பெண்மணி. இறுதில் அந்த நாட்டையே சுருட்டிக் கொண்டு போய்விட்டார். இன்று அந்த நாடு பெரும் பொருளாதார பின்னடைவோடு கிடக்கிறது.

(கொலை முயற்சியில் இருந்து தப்பியவர்.)

சேக் கசீனா.. காலிதா சியா - வங்காள தேசத்தை ஏழ்மைக்குள் தள்ளி அதில் தாங்கள் சுகம் காணும் ஊழலுக்கு பெயர் போன பெண்கள்.

(கொலை முயற்சிகளில் இருந்து தப்பியவர்கள்.)

பெனாசிர் பூட்டோ - குடும்ப அரசியலின் முதன்மை நாயகி. ஊழலால் தேசத்தை ஆண்டவர். இந்தியா மீதான அச்சுறுத்தலுக்கு அணுகுண்டை தயார் செய்தவர்.

(முடிவு. சுட்டுக்கொல்லப்பட்டார்.)

ஜெயலலிதா - 1991 அப்பாவி ஈழத்தமிழ் இளைஞர்களை தனது சுய அரசியல் இலாபத்துக்காக சயனைட் அடித்துக் கொள்ளத் தூண்டியவர். ஈழத்தமிழர்களின் அடையாளத்தை அழித்து அவர்களை சிங்கள இலங்கைக்குள் அடக்க நினைக்கும் ஒரு கொடுமையான கொள்கை கொண்ட பெண்..! ஊழல் ராணி.

(முடிவுக்காக காத்திருப்பவர்.)

கனிமொழி - சொந்த இன பெண்களை பாலியல் வல்லுறவு கொண்டு கொன்று போட உத்தரவிட்டவனுக்கு பொன்னாடை போர்த்திய பெருமகள். 40,000 தமிழர்களைக் கொன்றவனுக்கு பொன்னாடை அங்கீகாரம் அளித்த ஒரே பெண்..! ஊழல் மகாராணி. 1.6 இலட்சம் கோடிக்கு ஊழல் செய்தவர். ராஜாவை அதற்காகப் பயன்படுத்தியவர்.

(சிறையில் கிடக்கிறார்.)

இதுதான் இந்த உலகை ஆண்ட அல்லது ஆட்சி அதிகாரத்தில் இருந்த பெண்கள் நேரிடையாக இந்த உலகில் மனித இனத்திற்கு ஆற்றிய காரியங்கள். உலகில் தோன்றிய ஏறக்குறைய அனைத்து பெண் அரசியல் தலைவர்களும் ஒரு கொடூர பக்கத்தை கொண்டவர்களாக இருக்கின்றனர். இது உலகை ஆண்ட ஆண் தலைவர்களின் சதவீதத்தோடு ஒப்பிடும் போது மிகப் பெரிய தொகையாகும்..!

நாட்டையே இப்படி ஆளும் பெண்கள் வீட்டில் எவ்வளவு அதிகார.. நம்பிக்கை மோசடிகளை.. செய்வார்கள்.. எண்ணிப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.

ஊகூம் இந்த அட்டவணையைப் பார்க்கும்போது நம்மை அரசியலில் ஈடுபடவே விடமாட்டாங்க போலிருக்கே! :o:blink::unsure:

பகுத்தறிவை பாவித்து அப்பன் கொள்ளை.

பெண்ணியத்தைப் பாவித்து மகள் கொள்ளை.

இராமன் இருக்கும் இடமே சாரி ஐ மீன் ராசா இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என்று தீகார் சென்ற கனிமொழி பெண்ணியவாதியா?

இதற்கு சாமரம் வீசும் இந்த பெண்ணியவாதிகள் எல்லாம் 2g ஊழலால் பாதிக்கப்பட்ட இந்திய ஒடுக்கப்பட்ட ஏழைப் பெண்களைப் பற்றி சிந்தித்திருக்கமாட்டார்கள். இதனால் எத்தனை ஏழைப்பெண்களின் வாழ்வு பாதித்திருக்கும்.

அவர்களைப் பற்றி ஒரு உரையாடல் உண்டா?

கவிதை, இலக்கியம், பெண்ணடிமை எனும் பெயரில் மற்றவர்களை உசுப்பேத்தி தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளும் போக்கிரிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப பார்த்தாலும்,எந்த பதிவைப் பார்த்தாலும் பெண்களை குறை சொல்லிக் கொண்டு திரிகிறது தான் கொஞ்சப் பேரது வேலை...அரசியல்வாதிகளோ/பெரிய பதவியில் இருப்பவர்களோ அவர்கள் ஆணோ/பெண்ணோ தங்கள் பதவியை தக்க வைத்துக் கொள்ள,தாங்கள் பிரபல்யமாவதற்கு,பதவியில் நிலைத்து நிற்பதற்கு செய்யாத அட்டுழியம் எல்லாம் செய்வார்கள் இதில் பெண்கள் மட்டும் விதி விலக்கா என்ன?...ஒப்பிட்டளவில் பெண்கள் அரசியலில் குறைந்த அளவு உள்ளதால் பலருக்கு அது பெரிதாகத் தெரிகிறது <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு, கோல்டா மேயரை விட்டு விட்டீர்கள்! இஸ்ரவேலின் பிரதமராக இருந்த இவர், பாலஸ்தீனத்தில் குடி ஏறுவதையே தனது திருமணத்திற்கான முன் நிபந்தனையாக விதித்தவர்!

பாலஸ்தீனர்களின் அழிவுக்கு அத்திவாரம் இட்டவர்!!!

கோல்டன் மேஜர் சிதறிக்கிடந்த யூத இனத்தை ஒன்றிணைத்தவர்களில் ஒருவர். இன்று யூத இனத்தின் பலத்தைப்பற்றிப் பேசும்போது அந்தப்பலப்பான ஒரு நிலையைத் தோற்றுவித்தவர்களில் அவரும் ஒருவர் என்பதை மறந்துவிட முடியாது. எனக்கு என்னவோ நெடுக்குத் தம்பி குறிப்பிட்ட இவர்களின் ஒரு பக்கத்தை மட்டுந்தான் அதீதப்படுத்துவதுபோல் இருக்கிறது. சிறீமாவோ பண்டார நாயக்கா காலத்தில்தான் வெளிநாட்டு பொருட்களைத் தவிர்த்து உள்நாட்டு உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட்டதாகவும் எங்கட சனங்கள் பாணுக்கு கியூவில் நின்றதாகவும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றுவரை இந்திரா காந்தியின் இடத்தை எவராலும் அடையமுடியவில்லை அவரின் ஆளுமையை வைத்துக்கொண்டே

இன்றைய காங்கிரஸ் தன்னை பாதுகாக்கிறது.

மேலும் மற்றவர்களைப்பற்றி அதிகம் தெரியவில்லை

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவை பாவித்து அப்பன் கொள்ளை.

பெண்ணியத்தைப் பாவித்து மகள் கொள்ளை.

இராமன் இருக்கும் இடமே சாரி ஐ மீன் ராசா இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என்று தீகார் சென்ற கனிமொழி பெண்ணியவாதியா?

இதற்கு சாமரம் வீசும் இந்த பெண்ணியவாதிகள் எல்லாம் 2g ஊழலால் பாதிக்கப்பட்ட இந்திய ஒடுக்கப்பட்ட ஏழைப் பெண்களைப் பற்றி சிந்தித்திருக்கமாட்டார்கள். இதனால் எத்தனை ஏழைப்பெண்களின் வாழ்வு பாதித்திருக்கும்.

அவர்களைப் பற்றி ஒரு உரையாடல் உண்டா?

கவிதை, இலக்கியம், பெண்ணடிமை எனும் பெயரில் மற்றவர்களை உசுப்பேத்தி தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளும் போக்கிரிகள்.

அருமையான கருத்துக்கள் தப்பிலி.

ராசவுடன் சேர்ந்து கொள்ளையடித்து விட்டு, முதலில் கைது செய்யப்பட்டு திகார் சிறையிலடைக்கப் பட்ட ராசாவை சந்திக்க கருணாநிதி குடும்பத்திலிருந்து டெல்லிக்கு யாரும் போகவில்லை. இப்போ... அதே... சிறையில் கனிமொழியும் அடைக்கப்பட்டார் என்னும் போது.... குடும்பம், குடும்பமாக டெல்லிக்கு பறந்து கனிமொழியை எட்டிப் பார்த்துவிட்டு, ராசாவையும் பார்த்து வருகிறார்கள். அவ்வளவுக்கு குடும்பச் சுயநலம் கொடிகட்டிப் பறக்குது.

எப்ப பார்த்தாலும்,எந்த பதிவைப் பார்த்தாலும் பெண்களை குறை சொல்லிக் கொண்டு திரிகிறது தான் கொஞ்சப் பேரது வேலை...அரசியல்வாதிகளோ/பெரிய பதவியில் இருப்பவர்களோ அவர்கள் ஆணோ/பெண்ணோ தங்கள் பதவியை தக்க வைத்துக் கொள்ள,தாங்கள் பிரபல்யமாவதற்கு,பதவியில் நிலைத்து நிற்பதற்கு செய்யாத அட்டுழியம் எல்லாம் செய்வார்கள் இதில் பெண்கள் மட்டும் விதி விலக்கா என்ன?...ஒப்பிட்டளவில் பெண்கள் அரசியலில் குறைந்த அளவு உள்ளதால் பலருக்கு அது பெரிதாகத் தெரிகிறது <_<

இங்கு பெண்களை குறை சொல்லவில்லை. பெண்ணியம் எனும் முகமூடியைப் போட்டுக்கொண்டு நாட்டையே கொள்ளையடித்த ஒரு கபடதாரியை பற்றியே குறை சொல்லப்பட்டுள்ளது. இந்த நபரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர். இது பகுத்தறிவு முகமூடியை அணிந்து தமிழகத்தையே கொள்ளையடித்த ஆண்மகனான தமிழினத் தலைவருக்கும் பொருந்தும். இந்தக் கபடதாரியை பெண்ணீயம் எனும் போர்வையின் கீழ் காப்பாற்ற முயல்வது வெறுப்படைய வைக்கிறது.

ஆன்மிகம், பகுத்தறிவு, இனம், வர்க்கப் புரட்சி, பெண்ணியம்...... எனும் முகமூடி அணிந்து ஊரையே ஏமாற்றும் கும்பலின் மீதே வெறுப்பே ஒழிய பெண்களின் மீதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பெண்களை குறை சொல்லவில்லை. பெண்ணியம் எனும் முகமூடியைப் போட்டுக்கொண்டு நாட்டையே கொள்ளையடித்த ஒரு கபடதாரியை பற்றியே குறை சொல்லப்பட்டுள்ளது.

ஆன்மிகம், பகுத்தறிவு, இனம், வர்க்கப் புரட்சி, பெண்ணியம்...... எனும் முகமூடி அணிந்து ஊரையே ஏமாற்றும் கும்பலின் மீதே வெறுப்பே ஒழிய பெண்களின் மீதல்ல.

இந்த தெளிவு

அவர் மகிந்தவை சந்தித்து பொன்னாடை போர்த்தபின்பே எமக்கு வந்தது என்பது மிகப்பெரிய உண்மையும் கூட. :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பெண்களை குறை சொல்லவில்லை. பெண்ணியம் எனும் முகமூடியைப் போட்டுக்கொண்டு நாட்டையே கொள்ளையடித்த ஒரு கபடதாரியை பற்றியே குறை சொல்லப்பட்டுள்ளது. இந்த நபரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர். இது பகுத்தறிவு முகமூடியை அணிந்து தமிழகத்தையே கொள்ளையடித்த ஆண்மகனான தமிழினத் தலைவருக்கும் பொருந்தும். இந்தக் கபடதாரியை பெண்ணீயம் எனும் போர்வையின் கீழ் காப்பாற்ற முயல்வது வெறுப்படைய வைக்கிறது.

ஆன்மிகம், பகுத்தறிவு, இனம், வர்க்கப் புரட்சி, பெண்ணியம்...... எனும் முகமூடி அணிந்து ஊரையே ஏமாற்றும் கும்பலின் மீதே வெறுப்பே ஒழிய பெண்களின் மீதல்ல.

தப்பிலி நான் கனிமொழிக்கு வக்காலத்து வாங்கவில்லை...கனிமொழி மாத்திரம் இல்லை இந்திய அரசியல்வாதிகள் ஒருத்தரையும் நான் நம்பவில்லை,நம்பப் போவதில்லை...கனிமொழி செய்தது பச்சை துரோகம் என்டு சின்னக் குழந்தைக்கும் தெரியும்...பொதுவாக எதற்குடுத்தாலும்,எப்ப பார்த்தாலும் பெண்களை மட்டும் குற்றம் சாட்டுபர்களுக்குத் தான் நான் பதில் கொடுத்திருந்தேன்.

இந்த தெளிவு

அவர் மகிந்தவை சந்தித்து பொன்னாடை போர்த்தபின்பே எமக்கு வந்தது என்பது மிகப்பெரிய உண்மையும் கூட. :(:(:(

என்ன செய்வது? நம்பிக்கைதான் வாழக்கை என்று முட்டாள்தனமாய் இருந்து விட்டோம். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதே தமிழனின் வாழ்க்கை போலும். இனி வரும் சந்ததியாவது சுயபுத்தியைப் பாவிக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கோல்டன் மேஜர் சிதறிக்கிடந்த யூத இனத்தை ஒன்றிணைத்தவர்களில் ஒருவர். இன்று யூத இனத்தின் பலத்தைப்பற்றிப் பேசும்போது அந்தப்பலப்பான ஒரு நிலையைத் தோற்றுவித்தவர்களில் அவரும் ஒருவர் என்பதை மறந்துவிட முடியாது. எனக்கு என்னவோ நெடுக்குத் தம்பி குறிப்பிட்ட இவர்களின் ஒரு பக்கத்தை மட்டுந்தான் அதீதப்படுத்துவதுபோல் இருக்கிறது. சிறீமாவோ பண்டார நாயக்கா காலத்தில்தான் வெளிநாட்டு பொருட்களைத் தவிர்த்து உள்நாட்டு உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட்டதாகவும் எங்கட சனங்கள் பாணுக்கு கியூவில் நின்றதாகவும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றுவரை இந்திரா காந்தியின் இடத்தை எவராலும் அடையமுடியவில்லை அவரின் ஆளுமையை வைத்துக்கொண்டே

இன்றைய காங்கிரஸ் தன்னை பாதுகாக்கிறது.

மேலும் மற்றவர்களைப்பற்றி அதிகம் தெரியவில்லை

எனக்கும் பெண்களைக் குறை கூறுவதில் உடன்பாடில்லை! இந்து மதத்தின் தத்துவங்களில் எனக்குப் பிடித்ததே அதன் 'அர்த்த நாரீஸ்வர' கோட்பாடு தான்!

மார்கரெட் தட்ச்சரின் ஆட்சிக்காலத்தின் போது, நான் இங்கிலாந்தில் வசித்துக் கொண்டிருந்தேன்! அழிவின் நிலையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது அந்தத் தேசம் என்பது பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. மார்கரெட் தட்ச்சரின் தலைமையும் ஆளுமையுமே அந்த தேசத்தை மீட்டெடுத்தது.'The lady is not for Turning' என்ற அவரது பாராளுமன்றப் பேச்சு மிகவும் பிரபல்யம் வாய்ந்தது!

பெண்ணினத்தை ஒதுக்கி வைப்பது, மனித குலத்தின் அரைவாசியையே ஒதுக்கி வைப்பது மாதிரி.

நெடுக்கண்ணாவின் கருத்துக்கள் ஒரு விவாததிற்காகவே!

இலட்சியத்திற்காக உயிர் விட்ட பெண்களை உதாரணமாகச் சுட்டிக் காட்டுங்கள்! உதாரணத்திற்கு எங்கள் 'இசைப் பிரியா'

வாயே திறக்கமாட்டார்!!! அவரை உருவாக்கியதும் ஒரு அன்னை தானே!!!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பெண்களை குறை சொல்லவில்லை. பெண்ணியம் எனும் முகமூடியைப் போட்டுக்கொண்டு நாட்டையே கொள்ளையடித்த ஒரு கபடதாரியை பற்றியே குறை சொல்லப்பட்டுள்ளது. இந்த நபரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர். இது பகுத்தறிவு முகமூடியை அணிந்து தமிழகத்தையே கொள்ளையடித்த ஆண்மகனான தமிழினத் தலைவருக்கும் பொருந்தும். இந்தக் கபடதாரியை பெண்ணீயம் எனும் போர்வையின் கீழ் காப்பாற்ற முயல்வது வெறுப்படைய வைக்கிறது.

ஆன்மிகம், பகுத்தறிவு, இனம், வர்க்கப் புரட்சி, பெண்ணியம்...... எனும் முகமூடி அணிந்து ஊரையே ஏமாற்றும் கும்பலின் மீதே வெறுப்பே ஒழிய பெண்களின் மீதல்ல.

தப்பிலியின் நிலைப்பாடு தான் எங்களதும்.

இதனை புரிந்து கொள்ளாது எடுத்ததற்கு எல்லாம் பெண்களை எதிர்க்கினம் குறை சொல்லினம் என்ற கண்ணோட்டம் தவறானது. அப்படியான ஆராய்வற்ற ஒப்புவமையற்ற கண்ணோட்டங்கள் பெண்களிடத்தில் மலிந்திருப்பது வருத்ததிற்குரியது..! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.