Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் தொடங்கும் வன்முறைக் கலாச்சாரம் – காடையர்களால் தாக்கப்பட்ட ராஜ்

Featured Replies

"கருத்துக் கூறிய ஒரே காரணத்திற்காக" புலி ஆதரவுக் காடையர்களால் இன்று (22.06.2011) பிற்பகல் ராஜ் என்பவர் தாக்கப்பட்டுள்ளார். முப்பது வருட வன்முறைக் கலாச்சாரத்த்தின் அவமானகரமான குறியீடுகளாகத் திகழும் இந்தக் காடையர்கள் பிரித்தானியச் சட்டவரம்புகளைக் கூட மதிப்பதில்லை.

ஏழாம் திகதி ஜுன் மாதம் தீபம் தொலைக்காட்சியில் புலி இலச்சனை பொறிக்கப்பட்ட கொடியைப எமது போராட்டங்களில் உபயோகப்படுத்துவதன் அரசியல் பின்விளைவுகள் குறித்த விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு தனது கருத்துக்களைத் தெரிவித்த ராஜ் என்பவரே ராம் என்ற புலி ஆதரவளரும் செயற்பாட்டாளருமான ஒருவரால் தாக்கப்படுள்ளார். நியூ மோல்டன் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட ராம் முன்னதாக பிரித்தானிய தமிழ் அமைப்பு ஒன்றுடன் தன்னை அடையாளப்படுத்தி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய நியூ மோல்டன் பகுதியில் காரை நிறுத்திவிட்டு 'வன்னியன் பூட்' என்ற பலசரக்குக் கடையில் கொள்வனவு செய்யச் சென்ற ராஜை அங்கு தெருவில் நின்ற ஒருவர் அழைத்திருக்கிறார்.

முதலில் கடைக்கு முன்னால் ராஜ் ஐத் தாக்கிய ராமின், காடைத்தனத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கடைக்குள் சென்றுள்ளார். அவ்வேளையில் தனது கைத்தொலைபேசியில் வேறு சிலரையும் அங்கு தாக்குதலுக்கு அழைத்த ராம், ராஜைத் தொடர்ந்து மிரட்டியுள்ளார். இரும்புக் கம்பி ஒன்றை எடுத்து கொலை செய்யப் போவதாகப் பயமுறுத்தல் விடுத்துள்ளார். இதற்கிடையில் பிரித்தானியக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

போலீசாரைக் கண்ட ராமும் உம் பின்னதாக அவருடன் இணைந்து கொண்ட ஏனைய காடையர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இலங்கையில் ராஜபக்ச குடும்ப அரசின் காடைத்தனத்திற்கும் பேரினவாத அரச வன்முறைக்கும் எதிரான செயற்பாட்டாளர்களின் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத இலங்கை அரச கோளைகள் வன்முறையை மட்டுமே தமது ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். அரச பயங்கரவாதிகளின் அதே வழிமுறையில், கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத காடையர்கள் தமது கையாலாகத் தனத்தை வன்முறையாக கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான வீரம் செறிந்த விடுதலை போராட்டத்தை அதிகாரங்கள் சில மாதங்களில் இரத்தமும் சதையுமாக சிதைத்து, அப்பாவி மக்களின் இரத்ததை நந்திக்கடலோடு கரைத்த கோரத்தின் அவலக் குரல்கள் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. நியாயமான போராட்டம் இரவோடிரவகச் சாம்பலாக்கப்படதற்கு ஜனநாயக மறுப்பும், கொலைகளும், வன்முறைகளும் அவற்றை நிறைவேற்றும் காடையர்களும் பிரதான காரணங்களுள் சிலவாகும்.

முப்பது வருடப் போராட்டம் வன்முறையும், வக்கிரமும், முட்டாள்தனமும், பழிவாங்கும் உணர்வும், சுயநலமும் கொண்ட மனநோயாளிகளையும் எம்மத்தியில் உருவாக்கியுள்ளது. ராம் என்பவர் அந்த வன்முறைக் கலாச்சாரத்தின் முகப்பு. ஒடுக்கும் இலங்கை அரச பாசிசத்தை வளர்க்கும் சமூகவிரோதச் செயல்களின் ஆரம்பமே ராம் போன்றவர்களின் காடைத்தனம்.

மக்கள் பற்றும், சமூக பிரக்ஞையும் கொண்ட அனைத்து ஊடகங்களும் இந்த வன்முறைக் கலாசாரத்தை அனைத்து வழிகளிலும் எதிர்க்க வேண்டும். ஜனநாயக விழுமியங்களையும், கருத்துரிமையையும், பாதுகாக்கத் தவறுகின்ற ஒவ்வொரு தடவையும் இன்னொரு முள்ளி வாய்க்காலை புலம் பெயர் நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யத் தயாராகிறோம். தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஈழ மக்களின் உணர்வுகளையும் இன்னொரு தடவை சிதைக்க ஆரம்பித்துவிட்டோமா என்ற அச்சம் எழுகிறது.

http://kuralweb.com/201100623thugs.aspx

  • Replies 88
  • Views 6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மக்கள் பற்றும், சமூக பிரக்ஞையும் கொண்ட அனைத்து ஊடகங்களும் இந்த வன்முறைக் கலாசாரத்தை அனைத்து வழிகளிலும் எதிர்க்க வேண்டும். ஜனநாயக விழுமியங்களையும், கருத்துரிமையையும், பாதுகாக்கத் தவறுகின்ற ஒவ்வொரு தடவையும் இன்னொரு முள்ளி வாய்க்காலை புலம் பெயர் நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யத் தயாராகிறோம். தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஈழ மக்களின் உணர்வுகளையும் இன்னொரு தடவை சிதைக்க ஆரம்பித்துவிட்டோமா என்ற அச்சம் எழுகிறது.

இறுதி யுத்தத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கோ அல்லது இலங்கை அரசிடம் சிக்கியுள்ள முன்னாள் போராளிகளுக்கோ இந்தக் காடையர்கள் எந்த உதவியும் செய்வதில்லை. ராம் போன்றவர்களுக்கெதிராக எடுக்கப் படவிருக்கும் சட்ட நடவடிக்கை மீண்டும் தலையெடுக்கும் வன்முறைக் கலாச்சாரத்தை முறியடிக்க ஏதுவாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமாதிரி செய்திகளைப்போட்டு தமிழர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்ப்படுத்தாதீர்கள்,

இவர் குறிப்பிட்டதைப்பாத்தால் இவரும் ஒரு ஒட்டுக்குழு போல் அல்லவா கருத்துகளை வெழிப்படுத்துகின்றார்.

Edited by தமிழ் அரசு

நியாயமான போராட்டம் இரவோடிரவகச் சாம்பலாக்கப்படதற்கு ஜனநாயக மறுப்பும், கொலைகளும், வன்முறைகளும் அவற்றை நிறைவேற்றும் காடையர்களும் பிரதான காரணங்களுள் சிலவாகும்

உண்மை தான்

எமது தாயாக விடுதலைக்கு வக்காலத்து வாங்க இந்த காடையர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது. இவர்கள் யாரும் நேர்மையானவர்கள் அல்ல. தமிழர்களையே சீடிங் செய்து பிழைபவர்கள் . எத்தனை தமிழ் பெண்களின் வாழ்க்கை இவர்களால் நாசமாக்க பட்டுள்ளது. எமது தாயாக விடுதலைக்க தவறான பாதையில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

Edited by aathipan

தயவு செய்து இந்தமாதிரி செய்திகளைப்போட்டு தமிழர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்ப்படுத்தாதீர்கள்.

இவ்வாறான புரிதலே இவர்களை ஓரம் கட்டிவிடும்.

எமக்குள்ளே இருக்கும் வன்முறைக் கலாச்சாரம் ஒழிய வேண்டும்

  • தொடங்கியவர்

இந்தமாதிரி செய்திகளைப்போட்டு தமிழர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்ப்படுத்தாதீர்கள்,

இவர் குறிப்பிட்டதைப்பாத்தால் இவரும் ஒரு ஒட்டுக்குழு போல் அல்லவா கருத்துகளை வெழிப்படுத்துகின்றார்.

தனது கருத்தைச் சொன்னதற்காக ஒரு தமிழர் இன்னொரு காடைத் தமிழ் குழுவினால் பலருக்கும் முன்னிலையில் வைத்து தாக்கப் பட்டிருக்கிறார். அவரைப் பலவந்தமாக தமது வாகனத்தில் ஏற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். இதைச் சொன்னால் தமிழர் மத்தியில் பிளவு வந்திடுமாம்.

இதைத் தான் மகிந்த குடும்பமும் சொல்லுது. நடந்த அநியாயங்களைச் சொன்னால் 'இலங்கை மக்கள்' மத்தியில் பிளவு வந்திடுமாம்.

காடைத்தனம்தான் பிளவை ஏற்படுத்தும் . ஏற்படுத்தி இருக்கிறது

கருத்து சொன்ன நபரின் ஆதரவு இனி இல்லாமல் போகலாம் அல்லவா ?

இவர்களை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா விற்கு எதிராக காடைத்தனத்தை காண்பிக்க சொல்ல வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து இந்தமாதிரி செய்திகளைப்போட்டு தமிழர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்ப்படுத்தாதீர்கள்.

இப்ப ரொம்ப ஒற்றுமையாகத்தான் இருக்கின்றோம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யார் தாக்குதல் நடத்தினாலும் அது புலி ஆதரவாளர் என்பது சிலரின் குருட்டுத் தனமான மாற்றுக் கருத்தியல் என்ற மாயை வளர்க்கும் காட்டிக் கொடுப்பு அரசியல். தமிழீழ தேசியக் கொடியை தாழ்த்திப் பேசுறவனை அடிக்கிறது என்ன ஜெயிலில தூக்கி போட்டால் கூட அது பாவமில்லை. புலி ஆதரவாளர்கள் தான் இதைச் செய்ய வேண்டும் என்றில்லை.. இன உணர்வுள்ள எவனும் இதனைச் செய்யலாம்.

சிறீலங்கா சிங்களக் கொடியைப் பற்றி பேசமாட்டாங்கோ.. அதை தூக்கி போர்த்திக்கிட்டு கூத்தடிப்பாங்கோ.. அப்புறம் மாற்றுக் கருத்து என்று அதற்குள்ளால பூனைக்குட்டி வரப்போகுது என்றும் படங் காட்டுவாங்கோ. உண்மையில் தமிழர்களிடம் மாற்றுக் கருத்து என்ற ஒன்றே இல்லை. புலி காழ்புணர்ச்சி வாதம் மட்டுமே உண்டு. அது எமது இனத்தின் அழிவின் ஒரு காரணி. அதன் வால்கள்.. துணைகள்.. ஏன் எமது இனத்தை இன்னும் பிரதிநிதித்துவம் செய்வதாக கற்பனை செய்கிறார்களோ தெரியவில்லை. உருப்படியான எதிர்க் கட்சி அரசியலை ஜனநாயக வழியில் அங்கீகரிக்கும் தமிழீழ மக்கள்.. காழ்புணர்ச்சிகளை கொட்ட பயன்படும் மாற்றுக் கருத்துக்களை சகிக்க மாட்டார்கள் என்பதே இந்த தாக்குதல் சொல்லும் செய்தி. அந்த மக்களை காடைகள் என்பதிலும் அவர்களின் உணர்வுகளை தீபம் உட்பட அங்கு வந்து உட்காரும் முள்ளிவாய்க்காலின் பின்னால் முகம் காட்டும் மாற்றுக் கருத்து மாயாவிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.எனியாவது தம்மை திருத்திக் கொள்ள வேண்டும்.

இது குறித்து பிரித்தானிய காவல் துறைக்கு விளக்குவதோடு மக்களின் இன உணர்வை இழிவுபடுத்தி அவர்களை ஆத்திரமூட்டச் செய்யும் மாற்றுக் கருத்து மாயாவிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் அவர்களை ஒளித்திரையில் கூட்டி வந்து காட்டி மக்களை ஆத்திர மூட்டி வன்முறைக்கு தூண்டுவதை தடுக்கவும் வேண்டும்.

இந்த மாற்றுக் கருத்து மாயாவிகள் எவரும் மக்களால் நேர்மையான ஜனநாயக வழியில் தேர்வு செய்யப்பட்டவர்களோ..மக்களின் பிரதிநிதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்களோ கிடையாது. மன்யு கால்பந்தாட்ட கழகத்தை குறை சொல்லி அதன் ரசிகர்களிடம் வன்முறையை தூண்டி விடுவது போலவே.. இன உணர்வு சம்பந்தப்பட்ட தேசியக் கொடி விவகாரமும் ஆகும் என்பதை பிரித்தானிய பொலிஸாருக்கும் நீதித்துறைக்கும் சொல்ல வேண்டும். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கருத்தை ஒருவர் சொன்னால் அதைக்கேட்க எந்த தமிழன் மகனுக்கும் உரிமையுண்டு. அந்த கருத்தை சொன்னவர் ஏன் ஒழிந்து ஓடவேண்டும். அப்படியாயின் அவரது கருத்து தப்பு என்றோ அல்லது அவர் சொன்ன கருத்துக்கள் அவரது இல்லை என்றுதான் அர்த்தம். அப்படியாயின் மக்களின் எதிர்ப்பைச்சந்தித்தே ஆகவேண்டும். இது இனி தொடரும் போல்தான் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்குள்ளே இருக்கும் வன்முறைக் கலாச்சாரம் ஒழிய வேண்டும்

பிரித்தானியாவில் தமிழீழ தேசியக் கொடிக்கு அங்கீகாரம் பெற பட்டபாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. தேசியக் கொடி என்பது அந்தந்த நாட்டு மக்களின் தேசத் தாயின் அடையாளம். அதனை எந்த நாட்டு மக்களும் இழிவு படுத்த அனுமதிக்க மாட்டார்கள். சிறீலங்கா தேசியக் கொடியை எரித்தற்காக சிறை சென்று உயிர்விட்ட தமிழர்களும் உண்டு.

அன்றைய தீபம் தொலைக்காட்சி (அது இப்போ இலவசமாக விடப்பட்டுள்ளது பார்க்க.) நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். பேச வரும் விடயத்தை விட்டு ஒரு மாற்றுக் கருத்து மாயாவி.. தேசியக் கொடியை பிடிச்சதால தான்.. முள்ளிவாய்க்கால் அழிவே வந்தது. அது எமக்கு அவசியமா என்று வேறு கேட்குது. எனக்கே அந்த மாயாவியை செருப்பால அடிக்கனும் போல இருந்திச்சு. ஒரு அடிப்படை அரசியல் சர்வதேச ஆராய்தல் இன்றி வெறும் புலி காழ்ப்புணர்ச்சியோடு சிலர் பேசுவது எல்லாம் கருத்தாகாது. அப்படியான ஜென்மங்கள் ஒன்றில் மக்களை தொந்தரவு செய்யாமல் தானும் தன்ர குடும்பமும் என்று வாழனும். இல்ல மக்களின் கோபத்தை தூண்டி.. வேடிக்கை பார்க்க நினைத்தால் விளைவு இதாகத்தான் இருக்கும். குற்றம் செய்யுறவனை விட செய்யத் துண்டுறவைக்கு தான் தண்டனை அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கருத்தை ஒருவர் சொன்னால் அதைக்கேட்க எந்த தமிழன் மகனுக்கும் உரிமையுண்டு. அந்த கருத்தை சொன்னவர் ஏன் ஒழிந்து ஓடவேண்டும். அப்படியாயின் அவரது கருத்து தப்பு என்றோ அல்லது அவர் சொன்ன கருத்துக்கள் அவரது இல்லை என்றுதான் அர்த்தம். அப்படியாயின் மக்களின் எதிர்ப்பைச்சந்தித்தே ஆகவேண்டும். இது இனி தொடரும் போல்தான் உள்ளது.

இது முற்றிலும் உண்மை. இதைக்கூட புரியாதவர்கள் என்னதான் செய்வது ?

Edited by தமிழ் அரசு

இது சிங்கள பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதியாகவும் இருக்கலாம்.

அவனை பேசும்படி காசு கொடுத்து உசுப்பிவிட்டு, அவனுக்கு அடியும் கொடுத்திருக்கிறார்கள். சிங்கள அரச தூதுவரைக் கைது செய்து உரிய முறையில் விசாரித்தால் உண்மை வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தனது கருத்தைச் சொன்னதற்காக ஒரு தமிழர் இன்னொரு காடைத் தமிழ் குழுவினால் பலருக்கும் முன்னிலையில் வைத்து தாக்கப் பட்டிருக்கிறார். அவரைப் பலவந்தமாக தமது வாகனத்தில் ஏற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். இதைச் சொன்னால் தமிழர் மத்தியில் பிளவு வந்திடுமாம்.

இதைத் தான் மகிந்த குடும்பமும் சொல்லுது. நடந்த அநியாயங்களைச் சொன்னால் 'இலங்கை மக்கள்' மத்தியில் பிளவு வந்திடுமாம்.

சிங்களவன் ஒருநாளும் தங்கள் தரப்பு மேற்கொள்ளும் தவறுகளை சுட்டிக்காட்டுவதில்லையே ...!

மாற்றுக் கருத்து என்ற போர்வையில் சிங்கள பயங்கரவாதிகளின் கைக்கூலிகள் களத்தில் இறங்கியுள்ளார்கள்.

பயங்கரவாதிகள் அழிய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனத்தின் தேசியக் கொடியை விமர்சித்து பேச இந்த ராஜ் யார்?

மற்ற இனத்தில், தேசியக் கொடியை விமர்சித்தால் உயிரோடு விட்டு வைப்பார்களா?

இவருக்கு விழுந்த இருப்புக் கம்பி அடியுடன்.... இனி மேல் தொலைக்காட்சியில் போய் குந்திருந்து, அலட்டுவதை நிறுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக் கருத்து என்ற போர்வையில் சிங்கள பயங்கரவாதிகளின் கைக்கூலிகள் களத்தில் இறங்கியுள்ளார்கள்.

பயங்கரவாதிகள் அழிய வேண்டும்.

இவர்கள் சிங்களவனிடம் பணம் பெற்று இப்படியான வேலைகளை செய்கின்றனர்.

ஒரு இனத்தின் தேசியக் கொடியை விமர்சித்து பேச இந்த ராஜ் யார்?

மற்ற இனத்தில், தேசியக் கொடியை விமர்சித்தால் உயிரோடு விட்டு வைப்பார்களா?

இவருக்கு விழுந்த இருப்புக் கம்பி அடியுடன்.... இனி மேல் தொலைக்காட்சியில் போய் குந்திருந்து, அலட்டுவதை நிறுத்த வேண்டும்.

நாங்கள் இந்த தேசியத்துக்காக நிறைய உறவுகளை இழந்துள்ளோம்.

Edited by தமிழ் அரசு

ஆரம்பத்திலேயே களையெடுக்கவேண்டும்.இரண்டு பேருக்கு இப்படி போட்டால் யாரும் வாய் திறக்கமாட்டினம். எங்கட பெடியங்கள் பேய்காய்கள்.

பிரித்தானியாவில் தமிழீழ தேசியக் கொடிக்கு அங்கீகாரம் பெற பட்டபாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. தேசியக் கொடி என்பது அந்தந்த நாட்டு மக்களின் தேசத் தாயின் அடையாளம். அதனை எந்த நாட்டு மக்களும் இழிவு படுத்த அனுமதிக்க மாட்டார்கள். சிறீலங்கா தேசியக் கொடியை எரித்தற்காக சிறை சென்று உயிர்விட்ட தமிழர்களும் உண்டு.

அன்றைய தீபம் தொலைக்காட்சி (அது இப்போ இலவசமாக விடப்பட்டுள்ளது பார்க்க.) நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். பேச வரும் விடயத்தை விட்டு ஒரு மாற்றுக் கருத்து மாயாவி.. தேசியக் கொடியை பிடிச்சதால தான்.. முள்ளிவாய்க்கால் அழிவே வந்தது. அது எமக்கு அவசியமா என்று வேறு கேட்குது. எனக்கே அந்த மாயாவியை செருப்பால அடிக்கனும் போல இருந்திச்சு. ஒரு அடிப்படை அரசியல் சர்வதேச ஆராய்தல் இன்றி வெறும் புலி காழ்ப்புணர்ச்சியோடு சிலர் பேசுவது எல்லாம் கருத்தாகாது. அப்படியான ஜென்மங்கள் ஒன்றில் மக்களை தொந்தரவு செய்யாமல் தானும் தன்ர குடும்பமும் என்று வாழனும். இல்ல மக்களின் கோபத்தை தூண்டி.. வேடிக்கை பார்க்க நினைத்தால் விளைவு இதாகத்தான் இருக்கும். குற்றம் செய்யுறவனை விட செய்யத் துண்டுறவைக்கு தான் தண்டனை அதிகம்.

நீங்கள் விளக்கமாக சொல்லி புரிய வைத்தீர்கள் ...

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகள் அழிய வேண்டும்.

தங்கள் விருப்பம் முழுமையாக நிறைவேற இன்னமும் கொஞ்சப்பேர் போகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்திலேயே களையெடுக்கவேண்டும்.இரண்டு பேருக்கு இப்படி போட்டால் யாரும் வாய் திறக்கமாட்டினம். எங்கட பெடியங்கள் பேய்காய்கள்.

சர்வதேச அரசியல் பேசி யாழ்களத்தில் வேண்டுமானால் குப்பை கொட்டலாம்.............

நிஜஉலகத்தில் ஒரு புல்லை தனிலும் புடுங்குவதென்றால் உடல் வலிமையே முன்நிற்கிறது.

புலி புலி என்று கிலிபிடித்து திரிந்தவர்கள் இப்போது எதையாவது புடுங்கி பார்க்கலாமே? இப்போது புலியும் இல்லை எலியும் இல்லை.

இது ஏலாததுகள் எடுக்கும் வாந்தி என்று எங்களுக்கு எப்போதோ தெரிந்தது நம்பிய சிலருக்கு இப்போது தெரிகிறது அவ்வளவே.

ஆனால் சளைக்காது தொடாந்தும் வாந்தியெடுக்கவும் ஒரு தில் வேண்டுமு; என்பதை மறுக்க முடியாது.

காந்தியம் பற்றி பேசினால்...............

மெய்மறந்து கேட்டுகொண்டிருக்கும்போது ஈழமே பிறப்பதுபோல்தான் இருக்கும். எதிரி சிங்களவன் என்பது நினைவுக்கு வந்தால்? காந்தியம் பேசுபவனை பேசுவதை தவிர வேறு வழியில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்திலேயே களையெடுக்கவேண்டும்.இரண்டு பேருக்கு இப்படி போட்டால் யாரும் வாய் திறக்கமாட்டினம்.

எங்கட பெடியங்கள் பேய்காய்கள்.

நாய்க்கு எங்கு அடிபட்டாலும் காலைத்தூக்குவது போல்

ஸ்ரீலங்காவில், இந்தியாவில் ஏது நடந்தாலும் புலிகள் என்பதற்கு அப்பால் யாழ்களத்திலும் இது போன்ற தூக்குதல்கள்.

தெரியாமல்தான் கேட்கின்றேன்

ஈழத்திலிருந்துதான் ஆயுதத்துக்கு பயந்து ஓடிவந்தீர்கள். இங்காவது அந்த நாலுபேரை தட்டிக்கேட்கலாமே........?

இதைச்செய்தால் உண்மையும் வெளிவரும். உங்கள் வீரமும் மக்களுக்கு தெரியும்?????

அடுத்த கட்டத்துக்கு நல்ல தலைமையையும் தரலாம்

செய்வீர்களா?

இல்லை மீண்டும் மீண்டும் .................???

என்று ஒரு நமட்டுச் சிரிப்போடு பதிந்திருப்பீர்களே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.