Jump to content

"பாவம்" .... தயவு செய்து செய்யாதீர்கள்!

Recommended Posts

  • Replies 72
  • Created
  • Last Reply
Posted

பாதிக்கப்பட்ட மக்கள், முன்னாள் போராளிகள் ... புலத்திலிருந்து உதவுகுறோம் எனும் பெயரில் பல அமைப்புகள்!!! இந்த அமைப்புகளிடையே எந்த ஒரு தொடர்பாடகளும் இல்லை ... யாருக்கு உதவுகிறோம், யார் யார் உதவி எதிர் பார்க்கிறார்கள், உதவி கேட்பவர்கள் வேறு அமைப்புகளுடனும் உதவிகள் எதிர் பார்க்கின்றார்களா? உதவிகள் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைகின்றதா? ... போன்ற கேள்விகளுக்கு விடையில்லாமல் செயற்படுகின்றன.

யாழ்களம் இத்திரியினை தொடர அனுமதி அளிக்குமென நம்புகிறேன் ... சில கேள்விப்பட்ட சம்பங்களை இங்கு பதிவதற்கு ... எவ்வாறு எம்மவர்களின் விரிந்த கரங்கள் ... அங்கும், இங்கும் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றன என்று .... வழக்கு போடுபவர்கள் போடட்டும் .... உண்மைகள் வெளிகொணரப்பட வேண்டும்!!

நிச்சயமாக எழுதுங்கள்.. உண்மைகளாக இருந்தால் அவை உறங்கக்கூடாது...வெளிவரவேண்டும்...

Posted

உதவிகள் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைகின்றதா?

சில கேள்விப்பட்ட சம்பங்களை இங்கு பதிவதற்கு ..

ஆதாரங்களுடன் தெரிவியுங்கள்.கேள்விப்பட்டவைகள் பொய்யாக கூட இருக்கலாம்.பொய்யான தகவல்கள் சச்சரவுகளை உருவாக்க வழி செய்வதோடு அல்லும் பகலும் உழைப்பவர்களுக்கு மன உழைச்சலை ஏற்படுத்தும்.

Posted

ஆதாரங்களுடன் தெரிவியுங்கள்.கேள்விப்பட்டவைகள் பொய்யாக கூட இருக்கலாம்.பொய்யான தகவல்கள் சச்சரவுகளை உருவாக்க வழி செய்வதோடு அல்லும் பகலும் உழைப்பவர்களுக்கு மன உழைச்சலை ஏற்படுத்தும்.

... நுணா ... ஆயிரக்கணக்கில் உதவிகளை எதிர் பார்க்கிறார்கள் .. பல அமைப்புகள் இங்கு உதவிகளை எதிர்பார்த்து!!! ஆனால் உதவிகளை பெற்று அங்கு கொடுக்கிறோம் என்பவர்களில் எத்தனை பேர் முழுமையாக கொடுக்கிறார்கள்? ... பாதிக்கப்படும் என்பதற்காக விட்டால் ... மோசடிகளுக்கு உதவுபவர்களாக போய் விடுவோம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த திரி தமிழ் மக்கள்மேல் உண்மையான அக்கறைக்காக இருந்தால் வரவேற்கலாம்.

ஆனால் தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இருந்தால்...................???

அதுவும் இன்றைய எமது மக்களது நிலையில் எமது மக்களுக்கு செய்யும் துரோகமே. :(:(:(

Posted

நேசக்கரம் தவிர வேறு யாரும் கணக்குக் காட்டி உதவி செய்ததாக அறிந்ததில்லை. போராட்டம் முடிந்த பிறகு வன்னி மக்கள் வெளிநாட்டவரால் ஏறத்தாள கைவிடப்பட்டுள்ளனர். செய்யும் உதவியில் துளிகூட சிங்கள அரசுக்கு சென்றடையக் கூடாதென்று நினைப்பவர்கள் வேறு வழியில் சிங்கள அரசுக்கு ஆயிரக் கணக்கில் வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். உங்களுக்குத் தெரியுமா சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்குக் கொடுக்கும் பண உதவியில் 30 வீதம்கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகக் கிடைப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களுக்குத் தெரியுமா சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்குக் கொடுக்கும் பண உதவியில் 30 வீதம்கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகக் கிடைப்பதில்லை.

உண்மை. சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் இதை ஒரு தொழிலாகவே செய்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சர்வதேச தொண்டு நிறுவனங்கள்...... "சுண்டங்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம்" என்னும் அளவில் தான் செயல் படுகின்றது.

சுனாமி அனர்த்தத்தின் போது.... சனம் எல்லாம் இழந்திருக்க, உதவி செய்ய வந்த நிறுவனங்கள் கொழும்பில் வாடை கூடிய அலுவலகங்களையும், பல லட்சக்கணக்கான பெறுமதி உள்ள பஜீரோ ஜீப்புகளையும் இறக்குமதி செய்து ஒட்டுவதில் தான்.... பெரும்பாலான நேரத்தை செலவிட்டார்கள்.

Posted

உண்மை. சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் இதை ஒரு தொழிலாகவே செய்கின்றன.

இந்த சர்வதேச தொண்டர்கள் வாடகைக்கு இருந்தே கொழும்பில், வீட்டின் விலையை கூட்டினார்கள். இது அவர்களுக்கு ஒரு தொழில்.

சுயமாகவே பணத்தை அனுப்பி உங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் அங்குள்ளவர்களை வாழவைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த திரி தமிழ் மக்கள்மேல் உண்மையான அக்கறைக்காக இருந்தால் வரவேற்கலாம்.

ஆனால் தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இருந்தால்...................???

அதுவும் இன்றைய எமது மக்களது நிலையில் எமது மக்களுக்கு செய்யும் துரோகமே. :(:(:(

விசுகு அண்ணா தனிப்பட்ட தாக்குதலுக்காக இந்த திரியை நெல்லையன் ஆரம்பித்திருத்தால் அதில் சாந்தி அக்காவின் பங்கும் உள்ளது...சாந்தி அக்கா தான் முதலில் நேற்று தனிப்பட்ட தாக்குதலை நெல்லையனுக்கு எதிராக ஆரம்பித்திருந்தார்...ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்துபவர் பொறுப்பாக இருக்க வேண்டும்...அவர்களுக்குள் என்ன பிரச்சனை இருந்தாலும் அதைப் பேசித் தீர்க்காமல் யாழில் வந்து அவர்களது ரகசியங்களை எழுதியது தப்பு[நெல்லையனைப் பற்றி எழுதியது தப்பு] இப்படித் தானே நாளைக்கு வந்து [அவர்களோடு பிரச்சனைப் பட்டால்]உதவி செய்யும் மற்றவர்களை பற்றியும் எழுதுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தற்கால நிகழ்வுக்கு ஏற்ற படம்.

உதவி செய்ய வேண்டிய நேரமிது. உதவிகள் உரியவர்களுக்கு போய்ச்சேர வேண்டிய விடயத்தில் அவதானம் தேவை.

Posted

நேற்றைய அடிபிடிக்குப் பிறகு பலரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க வேண்டியிருக்கு..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்றைய அடிபிடிக்குப் பிறகு பலரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க வேண்டியிருக்கு..! :unsure:

:(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்றைய அடிபிடிக்குப் பிறகு பலரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க வேண்டியிருக்கு..! :unsure:

சங்கதி தெரியாமல் போச்சே!

Posted

நேசக்கரம் அமைப்பினை பொறுத்தவரை ஒவ்வொருவரும் கொடுத்த ஒவ்வொரு சதத்திற்குமான கணக்குகளும் சரியாக எம்மால் கணக்கறிக்கையில் ஆதாரங்களுடன் சேர்க்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் பொரும்பாலான உதவிகள் உதவுபவர்கள் நேரடியாகவே உதவிகளை பாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்குகிறார்கள். எனவே விமர்சனங்கள் என்பது பொதுவானவை. யாரும் யார் மீதும் வைக்கலாம். ஆனால் ஒரு அமைப்பின் மீது வைக்கப்படும்பொழுது அதனை சரியான ஆதாரங்களுடன் மட்டுமே வைக்கலாம். அது கருத்துக்களங்களிற்கும் பொருந்தும். அண்மையில் பிரான்சில் அல்கற்ரெல் நிறுவன ஊளியர்கள் இருவர் தங்கள் நிறுவனம் பற்றி தகாத விமர்சனங்களை முகப்புத்தகத்தில் பதிந்ததால் அந் நிறுவனம் அவர்கள் மீது நடவடிக்கையெடுத்திருந்தது. அதற்கு அந்த நபர்கள் சொன்னது பொது கருத்துக்களத்தில் நாங்கள் கருத்தாடினோம் கருத்து சுதந்திரம் இல்லையா என்பது அவர்களது வாதம். ஆனால் ஒரு நிறுவனம் மீதும் அரசு இயந்திரங்கள் மீதும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களை கருத்துக் களத்திலும் எழுதமுடியாதென்பதே நீதிபதியின் தீர்ப்பாக அமைந்தது. எனவே நெசக்கரம் அமைப்பின் மீதும் யார் வேண்டுமானாலும் குற்றச்சாட்டுக்களை வைக்கலாம் தகுந்த ஆதாரங்களுடன் அவை வைக்கப்படவேண்டும் என்பதே எனது கோரிக்கை . இதனை நான் ஏன் எழுதிகிறேன் என்றால் சக கருத்தாளர் நெல்லையன் நேற்று இங்கு யாழில் நேசக்கரம் அமைப்பு இலங்கை புலனாய்வு பிரிவால் இயக்கப் படுகின்றதென்று எழுதியிருந்தார். அவர் அதற்கான ஆதாரங்களை நிருபிப்பதற்காக நேசக்கரம் சட்ட வரைபுகளிற்கு ஏற்ப 40 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

Posted

... இன்று ஏற்கனவே இரண்டை உடைத்து விட்டேன் ... மூன்றாவதும் காத்திருக்கிறது ... நாற்பது நாளால் அல்ல நாளை வருகிறேன்!

... அதற்கு முன் ...

... நேற்று இங்கு நடைபெற்றவைகளை பார்த்தவள் கூறினாள் ... உனக்கு, இங்கு பக்கத்தில் இருக்கும் கோயில் மூலம், ஏற்கனவே அவர்கள் மூலம் தத்தெடுத்த ஒரு பிள்ளை போல் நாலை எடாதேயன? என்னத்துக்கு உதுகளோடு போய், உன் பெயர் விலசாம் எல்லாம் கொடுத்து, இன்று நாத்துகிறார்கள் இனியாவது உணரு!!! ... பதில் சொல்ல முடியவில்லை!! ...

... தயவு செய்து உங்கள் முகவரி, தொலைபேசி இலக்கம், கொடுப்பது மட்டுமல்ல, நீங்கள் உரையாடினால் ஒலிப்பதிவும் செய்யப்பட்டு ... அனுப்பப்பட வேண்டிய இடத்துக்கு போய்ச்சேரும்!!! ... நாலு முறை யோசியுங்கள்!!!! :blink:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்றைய அடிபிடிக்குப் பிறகு பலரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க வேண்டியிருக்கு..! :unsure:

ஆம் இசைக்கலைஞன். ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகக் கவலையாக இருந்தது. :(

Posted

... இன்று ஏற்கனவே இரண்டை உடைத்து விட்டேன் ... மூன்றாவதும் காத்திருக்கிறது ... நாற்பது நாளால் அல்ல நாளை வருகிறேன்!

... அதற்கு முன் ...

... நேற்று இங்கு நடைபெற்றவைகளை பார்த்தவள் கூறினாள் ... உனக்கு, இங்கு பக்கத்தில் இருக்கும் கோயில் மூலம், ஏற்கனவே அவர்கள் மூலம் தத்தெடுத்த ஒரு பிள்ளை போல் நாலை எடாதேயன? என்னத்துக்கு உதுகளோடு போய், உன் பெயர் விலசாம் எல்லாம் கொடுத்து, இன்று நாத்துகிறார்கள் இனியாவது உணரு!!! ... பதில் சொல்ல முடியவில்லை!! ...

... தயவு செய்து உங்கள் முகவரி, தொலைபேசி இலக்கம், கொடுப்பது மட்டுமல்ல, நீங்கள் உரையாடினால் ஒலிப்பதிவும் செய்யப்பட்டு ... அனுப்பப்பட வேண்டிய இடத்துக்கு போய்ச்சேரும்!!! ... நாலு முறை யோசியுங்கள்!!!! :blink:

தாராளமாக இன்று போய் நாளை வாருங்கள் மீண்டும் நாளை மறு தினமும் வாருங்கள் உங்ளிற்கான நாட்களை மனதில் வைத்தபடி. இரண்டு உடைத்தது பார்த்து உடையுங்கள் நண்பரே. :lol: :lol:

Posted

நேற்றைய அடிபிடிக்குப் பிறகு பலரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க வேண்டியிருக்கு..! :unsure:

என்னங்கோ அது? :blink:

Posted

மோகனின் கவனத்துக்கு .... இங்கு இரு பதிவுகள் இட்டேன் ... காணாமல் போய் விட்டது !!!!!!

1) இங்கிருந்து ஓர் முன்னால் பெண் போராளிக்கு உதவென ...தையல் இயந்திரங்கள், தையற்கடை போட ... அனுப்பட்ட பணம், விரயமாக்கப்பட்டது ... மடிக்கணனி, இன்ரநெற் இணைப்பு பெற்று ... தொடர்பாகவும் ...

2) யாழ் கள தம்பி அனுப்பிய காசு, பெற்றவர் காணமல் போயிருப்பதாக ... அவருக்கு என்ன நேர்ந்தது? காசு அவருக்கு கிடைத்ததா? ... தொடர்பாக கேள்வி எழுப்பி ..

.... திடீரென எவ்வித காரணமும் இன்றி தூக்கப்பட்டுள்ளது! ... எழுதியதற்கான ஆதாரங்கள் யாரும் விரும்பின் ...1) தையல் இயந்திரத்துக்காக அனுப்பியவர்கள் லண்டனில் இருக்கிறார்கள் .. 2) யாழ்கள ஜீவா ... பெறலாம்!!

... இங்கு இத்திரியை எழுத தொடங்குமுன் .. இதனை தொடர அனுமதி கேட்டுத்தானே தொடங்கினேன்? பின்பு ஏன் கருத்துக்களை அகற்றுவான்??? ... இங்கு தனை மனித தாக்குதல்கள் இடம்பெற்றதா>? அல்லது இங்கு என்னால் பதியப்பட்டவைகள் பொய்யானவையா?

Posted

மோகனின் கவனத்துக்கு .... இங்கு இரு பதிவுகள் இட்டேன் ... காணாமல் போய் விட்டது !!!!!!

நான் விடிய வெள்ளனவே வாசிச்சிட்டனே... :D

Posted

நான் விடிய வெள்ளனவே வாசிச்சிட்டனே... :D

... இரண்டும் நடந்த சம்பவங்கள்!! ... அதில் ஒன்று யாழே சாட்சி! ... புனையப்படவில்லை ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மோகனின் கவனத்துக்கு .... இங்கு இரு பதிவுகள் இட்டேன் ... காணாமல் போய் விட்டது !!!!!!

1) இங்கிருந்து ஓர் முன்னால் பெண் போராளிக்கு உதவென ...தையல் இயந்திரங்கள், தையற்கடை போட ... அனுப்பட்ட பணம், விரயமாக்கப்பட்டது ... மடிக்கணனி, இன்ரநெற் இணைப்பு பெற்று ... தொடர்பாகவும் ...

2) யாழ் கள தம்பி அனுப்பிய காசு, பெற்றவர் காணமல் போயிருப்பதாக ... அவருக்கு என்ன நேர்ந்தது? காசு அவருக்கு கிடைத்ததா? ... தொடர்பாக கேள்வி எழுப்பி ..

.... திடீரென எவ்வித காரணமும் இன்றி தூக்கப்பட்டுள்ளது! ... எழுதியதற்கான ஆதாரங்கள் யாரும் விரும்பின் ...1) தையல் இயந்திரத்துக்காக அனுப்பியவர்கள் லண்டனில் இருக்கிறார்கள் .. 2) யாழ்கள ஜீவா ... பெறலாம்!!

... இங்கு இத்திரியை எழுத தொடங்குமுன் .. இதனை தொடர அனுமதி கேட்டுத்தானே தொடங்கினேன்? பின்பு ஏன் கருத்துக்களை அகற்றுவான்??? ... இங்கு தனை மனித தாக்குதல்கள் இடம்பெற்றதா>? அல்லது இங்கு என்னால் பதியப்பட்டவைகள் பொய்யானவையா?

பொது நிறுவனங்களில் வேலை செய்யும்போது அதுவும் இன்றைய தாயக சூழ்நிலையில் வேலை செய்யும்போது

இது போன்ற சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.

அவற்றை பெரிதாக்குவது சரியல்ல. அத்துடன் ஜீவாவின் பிரச்சினை ஏற்கனவே இங்கு பரிமாறப்பட்டுவிட்டது.நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விசுகு அண்ணா தனிப்பட்ட தாக்குதலுக்காக இந்த திரியை நெல்லையன் ஆரம்பித்திருத்தால் அதில் சாந்தி அக்காவின் பங்கும் உள்ளது...சாந்தி அக்கா தான் முதலில் நேற்று தனிப்பட்ட தாக்குதலை நெல்லையனுக்கு எதிராக ஆரம்பித்திருந்தார்...ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்துபவர் பொறுப்பாக இருக்க வேண்டும்...அவர்களுக்குள் என்ன பிரச்சனை இருந்தாலும் அதைப் பேசித் தீர்க்காமல் யாழில் வந்து அவர்களது ரகசியங்களை எழுதியது தப்பு[நெல்லையனைப் பற்றி எழுதியது தப்பு]

இப்படித் தானே நாளைக்கு வந்து [அவர்களோடு பிரச்சனைப் பட்டால்]உதவி செய்யும் மற்றவர்களை பற்றியும் எழுதுவார்.

ரதி ஏதோ தப்பு நடந்திருக்கிறது என்று உங்களது பதிலுக்கு விழுந்திருக்கும் பச்சைகள் சொல்கின்றன. அதை நான் பார்க்கவில்லை.

இருந்தாலும் யார் குத்தியாவது அரிசியாகணும் என்பதுதான் இன்றைய தாயகமக்களைப்பொறுத்தவரை என் நிலை.

எனவே பொதுத்தொண்டிலுள்ள ஒருவரது ஒருசில வார்த்தைகளையோ வரிகளையோ எடுத்துக்கொண்டு எல்லாமே பிழை என்பது எம்மைத்தான் முடமாக்கும். :(:(:(:(

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.