Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராடியாவது அரசியல் தீர்வைப் பெறத் தயார் - சம்பந்தன் சபையில் முழக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர்களுக்கு உரிய அரசியல் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் தவறுமானால் அத்தீர்வினைப் பெற்றுக் கொள்ள போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் என தமிழத் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாராளுமன்றில் இன்று உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க இதுவே சிறந்த தருணம் என சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தீர்வு திட்டமொன்றை முன்வைப்பதன் நோக்கமாக அரசாங்க தரப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ச்சியாக எட்டு தடவைகள் கூடி பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் சமஷ்டி முறையிலான தீர்வை வழங்க அரசாங்கம் இணங்கவில்லையாயின் இறுதித் தீர்வைப் பெற தேவைப்படின் அரசியல் யாப்பில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

http://www.eeladhesam.com/index.php?option=com

போராட்டத்தை நாளைக்கே தொடங்கலாம்.

அவர்கள் பகிரங்கமாகவே சொல்லிவிட்டார்கள் 'அதிகாரப்பகிர்வு இல்லை' என்று, கடைசியாக மேற்கொண்ட ஒன்பதாவதன் பின்னரும்

Lanka govt opposed to federalism for devolving political power

The government would not offer a federal solution to the country's ethnic problem, senior minister Nimal Siripala de Silva told parliament today.De Silva, who is a member of the government's panel which is currently engaged in talks with the main Tamil party Tamil National Alliance (TNA), said the government stands opposed to federalism as a form of devolving political power to Tamil minority."

http://ibnlive.in.com/generalnewsfeed/news/lanka-govt-opposed-to-federalism-for-devolving-political-power/751059.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் ஒன்றும் தரப்போவதில்லை ஏன் தாமதம் உடனே தொடங்கலாம்

தமிழர் உண்மையில் கேட்க வேண்டியது " அதிகாரப் பகிர்வு" அல்ல "அரசாங்கத்திலே பங்கு ". அரசாங்கத்திலே பங்கு இல்லை என்றால் நாங்கள் தனி அரசாகப் போக வேண்டியது தான் .

இதே மாதிரித்தான் , சிங்களவன் முழுத் தீவையும் ஸ்ரீலங்கா என்று உரிமை கோரியபோது , நாங்கள் வடக்கையும் கிழக்கையும் மட்டும் கேட்டோம் . உண்மையில் நாங்களும் முழுத் தீவையும் தமிழீழம் என்று

கேட்டிருந்தால் ( அவனது கோரிக்கைக்கு சமமான கோரிக்கை ) இன்றைக்கு இந்த பிரச்சினை தீர்ந்திருக்கும் .

எனவே , இஸ்ரேலியர்கள் போல அதிகமாகக் கேளுங்கள் அப்போது தான் உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியது

கிடைக்கும் . முழு இலங்கையையும் தமிழீழம் என்று உரிமை கோருங்கள், ஸ்ரீலங்கா சட்டவிரோதமான நாடு என்று கூறுங்கள் , உலகம் இந்த பிரச்சினையை திரும்பி பார்க்கும் , தீர்த்து வைக்கும் , ஆகக்குறைந்தது உங்களுக்கு வடக்கு கிழக்கவது தனி நாடாகக் கிடைக்கும்.

ஓகோ!!!

நமக்கும் மேலே ஒருவனடா – அவன்

நாலும் தெரிந்த தலைவனடா – தினம்

நாடகமாடும் கலைஞடா

போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா

ஏன் இந்த சூரிய நம்ஸ்காரம் சம்பந்தர் ஐயா?. யாருக்கும் கண்கள் மறைக்கப்படவில்லை.

இவர்களுக்கு செய்ய மட்டும் ஒன்றும் இல்லையல்ல. சொல்லவும் ஒன்றும் இல்லை. சில தெரிவுகள்:

1.பா.ஊ ராஜினாமமா

2.பேச்சு வார்த்தை பகிஸ்கரிப்பு

3.போர் குற்ற விசாரணக்கு பகிரங்க அழைப்பு

4.Channel-4, ஐ நா அறிக்கை சம்மந்தமாக வெளி நாடுகளுக்கு பேட்டி.

5.TGTEஐ பகிரங்கமாக ஏற்று அறிக்கை

6.ஐ.நா, அமெரிக்க, இந்திய உயர்ஸ்தானிகங்கள் முன் மறியல் போராட்டம்.

7.பள்ளிகள், கடைகள் கதவடைப்பு போராட்டம்.

8.முன்னுக்கு பின் முரணான மந்திரிகளின் அறிக்களை மறுதலித்தல்.

9.இரகசியம் காக்கபட வேண்டும் என்று ஏமாற்ற பட்ட பேச்சு வார்த்தைளின் கபடத்தை வெளியே சொல்லல்.

10.வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழர்களின் ஏகமனதான தீர்ப்பு என்று அறிகைவிட்டு அதை பாராளுமன்றத்தில் வாசித்தல்.

Edited by மல்லையூரான்

அண்மையில் சிங்கள அரசில் அங்கம் வகிக்கும் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, லண்டன் வந்து இங்கு சிங்கள கடும்போக்காளர்கள்/ஒட்டுக்குழுக்களை சந்தித்திருந்தார்.

http://www.srilankaguardian.org/2011/07/rajivas-mission-see-no-good-hear-no.html

அங்கு அவரிடம் பேட்டி கண்ட இன்னொரு ஊடகமொன்றானது ..

பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க உடனான நேர்காணலிலும் அவருடைய தூதரகத்தில் இடம்பெற்ற உரையிலும் கேள்விகளுக்கான பதிலிலும் இலங்கை அரசாங்கம் உடனடியான அரசியல் தீர்வுக்கு இன்னமும் தயாரில்லை என்பதும் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவும் தயாராகவில்லை என்பதும் வெளிப்பட்டது. இலங்கை அரசாங்கம் வடக்கு கிழக்கில் பொருளாதாரம், கல்வி போன்ற அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வெளியே செல்ல விரும்பாத நிலையை பேராசிரியர் ரஜீவ விஜயசிங்கவின் கருத்துக்கள் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தி உள்ளன.

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணியோ ஒட்டுக்குழுக்களோ தமிழ் மக்களுக்கு எந்த வித உரிமைகளையும் பெற்றுத்தரப்போவதில்லை.ஏனெனில் அவர்கள் சுயமாக இயங்கவில்லை.

கூட்டணியோ ஒட்டுக்குழுக்களோ தமிழ் மக்களுக்கு எந்த வித உரிமைகளையும் பெற்றுத்தரப்போவதில்லை.ஏனெனில் அவர்கள் சுயமாக இயங்கவில்லை.

இதுதான் எனது கருத்தும் பெரும்பாலான ஈழத் தமிழ் மக்களின் கருத்தும்.

சிலவேளைகளில் சம்மந்தன் ஐயா மறுப்பு அறிக்கை கூட விடலாம் நாளை!

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றிலிருந்து பாடம் படிக்க மீண்டும், மீண்டும் தவறுகின்றோம்!

நெற்கதிர்களை அடையாளம் காண முடியாது, களைகள் மேவி வளர்கின்றன!

மீண்டுமொரு முறை களை எடுத்தல் தேவையாகின்றது!!!

கூட்டமைப்பு - அரசு பேச்சுவார்த்தை - கவனிக்கப்படவேண்டிய விடயங்கள் - சி.அ.யோதிலிங்கம்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒரு வலிந்து மேற்கொள்ளப்படுகின்ற சடங்கு போல தொடர்ந்துகொண்டிருக்கின்றது. சடங்குகளில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மேற்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் மக்களுக்கு இருக்கின்றது போலத்தான் இதுவும் தொடர்கின்றது.

அரசாங்கத்திற்கு சர்வதேச அழுத்தத்தையும், பிராந்திய அழுத்தத்தையும் சமாளிக்கவேண்டிய கட்டாயம். அதனால் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகின்றது என்ற தோற்றத்தை கொடுக்க முயற்சிக்கின்றது. கூட்டமைப்புக்கு அதற்கென இருக்கின்ற ஒரேயொரு வேலைத்திட்டம் பேச்சுவார்த்தைதான். அதனால் அது வெற்றியளிக்கின்றதோ, இல்லையோ அதனைத் தொடர விரும்புகின்றது.

அரசாங்கம் இதய சுத்தியுடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை என்பது எல்லோரும் அறிந்த விடயம்தான். இதனால்தான் பேச்சுவார்த்தைக்கென திட்டமிட்ட நிகழ்ச்சிநிரல் எதனையும் உருவாக்காமல் அவ்வப்போது எது கைவசம் வருகின்றதோ அதனைப் பேசுவதற்கு முயற்சிக்கின்றது.

சர்வதேச சமூகம் தீர்வு வருகுதோ, இல்லையோ இரு தரப்பும் பேசிக்கொண்டிருந்தால் சரி என நினைக்கப் பார்க்கின்றது. பிரச்சனையின் கனதியை தொடர் பேச்சுவார்த்தை குறைக்கும் என்பது அதன் கருத்தாக இருக்கக்கூடும். புவிசார் அரசியல் காரணமாக அரசியல் தீர்வு தொடர்பாக அதிக அழுத்தம் கொடுக்கும் நிலைக்கு சர்வதேச சக்திகளோ பிராந்திய சக்திகளோ இன்னமும் வரவில்லை. மனித உரிமை நிறுவனங்களின் அழுத்தங்களும், ஜெயலலிதாவின் எழுச்சியும்தான் மென் அழுத்தத்தையாவது கொடுக்கவேண்டிய நிலைக்கு அவர்களை தள்ளியுள்ளது.

பேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்ட தரப்பு வலிமையாக இருக்கும்போதே பேச்சுவார்த்தை வினைத்திறனுடன் செயற்படுத்துவதற்கு வாய்ப்புக்கள் உருவாகும். இதனால் தமிழ்த் தரப்பு தன்னளவில் வலிமையாக இருப்பதற்கு முயற்சிக்க வேண்டும். போர் முடிவுற்ற ஆரம்ப காலத்தில் தமிழ்த்தரப்பு வலிமை நிலையில் இருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், தற்போதைய நிலை அவ்வாறனதல்ல. தேர்தலில் கிடைத்த அடுத்தடுத்த வெற்றிகள், உள்ளூர் மட்டத்தில் இருந்து ஒரு வலிமை நிலையினைக் கொடுத்திருக்கின்றது. அதேவேளை ஐ.நா நிபுணர்குழு அறிக்கை, சனல் - 4 ஒளிப்படத் தொகுப்பு, ஜெயலலிதாவின் தீர்மானங்கள் என்பன வெளிமட்டத்திலிருந்து வலிமை நிலையினை கொடுத்திருக்கின்றன.

முழுமையாக வாசிக்க : http://ponguthamil.com/paarvai/paarvaicontent.asp?sectionid=2&contentid={9B37BC8B-255E-4CF0-AE31-928A0AEFF6FF}

  • கருத்துக்கள உறவுகள்

சிக்கல்க்ளை பேசி தீர்க்கறம் என்று சொறி லங்காவின் கூத்துக்கு ஏற்ப கூடி கூடி கும்மியடிப்பது அல்ல தீர்வு.....

ராஜதந்திரம் ...ராஜதந்திரம்.. மூன்றாம் தரப்பின் அனுசரணையுடனே நடைபெறவேணும் சொறிலங்காவின் மீது நம்பிக்கையில்லை என்று 4 தரப்பை பேச்சுவார்த்தைக்குள் அழைத்து வந்து (அதாவது பேச்சுவார்த்தை ஜனநாயகம் என கூவிவருபர்களை) சிங்களத்தின் முகமூடியை கிழித்தலாகும்..

டிஸ்கி:

இப்பதான் போரும் இல்லை எதுவும் இல்லை எவனும் எஸ்கேப் ஆகமுடியாது .. முதலில் அந்த நோர்வே காரனை இழுத்தி விடணும் அவன் சைடில் எஸ்கேப்பு ஆவான் ஆனாலும் விடப்படாது :) :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராடியாவது அரசியல் தீர்வைப் பெறத் தயார் - சம்பந்தன் சபையில் முழக்கம்

அன்றொரு நாள் போராடி அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்தில்????

இன்றோ........போராடியாவது அரசியல் தீர்வு..........வெள்ளவத்தை கடற்கரையில் :D :D :D :D :D

இரா.சம்பந்தன் அவர்களின் எச்சரிக்கையும் எமது கோரிக்கையும்!

வடக்கு,கிழக்கில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசு நிறுத்தா விட்டால், தமிழ் மக்களை ஒன்று திரட்டி அரச எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எச்சரித்துள்ளார்.

வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்காவிட்டாலும், போர்க்குற்ற விசாரணைகளுக்கு உரிய ஒத்துழைப்புகளை வழங்காவிட்டாலும் மக்களை திரட்டி போராட்டம் நடத்தவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிக்க வேண்டும். போராட்டங்களின் போது கூட்டமைப்பினர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை உலகத்தின் முன்னால் கொண்டு சொல்வோம்.

எதையும் தைரியமாக எதிர்க்கொள்ளும் தைரியம் இல்லாவிட்டால் தமிழர்களின் பிரதிநிதிகள் ஆக முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேர்மையுடனும் தைரியத்துடனும் நீதி வேண்டியும் போர்க்குற்ற விசாரணைகளை வேண்டியும் மக்களை திரட்டி கிளர்ச்சியை மேற்கொள்ள வேண்டும் அதற்குத் துணையாக போராட்டங்களை புலம்பெயர் நாடெங்கும் வெடிக்க வைப்போம் என உறுதியளிக்கின்றோம்

நாங்கள்

தமிழீழ புரட்சிகர மாணவர்கள்

http://rste.org/2011/07/08/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் காலங்களில் இது போன்ற செயற்பாடுகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட சில தீய சக்திகள் ஈடுபடுவது வழக்கம். எனவே இது அரசியல் இலாபத்தை கருதியே செய்யப்படுகின்றது

உண்மையா ?

இது முற்றிலும் பொய்யானதா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் நினைத்தால்.. இந்திய ஆதரவோடு.. தமிழீழத்தை இராணுவ ரீதியில் அடைவது அவ்வளவு கடினமான செயலாக இருக்காது. எப்படி எமது போராட்டத்தை இந்தியாவை கொண்டு அழித்தார்களோ.. அதே இந்தியாவினை கருவியாக்கி தமிழகம் நினைத்தால்... குறிப்பாக புரட்சிகர எண்ணம் மிக்க தமிழக இளைஞர்கள்.. ஈழத்தமிழ் மக்களோடு இணைந்து செயற்பட்டால்.. சிங்களத்தை இராணுவ ரீதியில் வெல்வது அவ்வளவு சிரமமான காரியம் அல்ல.

சிங்களத்தை இராணுவ ரீதியில்.. பொருண்மிய ரீதியில் சிதைக்காமல்.. அதன் பேரினவாத திமிரில் இருந்து அதனை வெளிக்கொணரவும் முடியாது.. சம்பந்தன் தலைகீழா நடந்து போராட்டம் நடத்தினாலும் எதனையும் வெல்லவும் முடியாது. இது தான் யதார்த்தம். :)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.