Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமிர்தலிங்கத்திற்கு நிகழ்வு நடத்தியது தமிழரசுக்கட்சி! பிரதம விருந்தினராக வரதராஜப்பெருமாள்!

Featured Replies

ஆகா.. இதை.. இதை.. இதைத்தான் எதிர்ப்பார்த்தன்..! :lol:

ஆக, புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.. அவ்வளவே.. :wub: இதை எந்த நீதிமன்றத்தில் நிருபித்தார்கள்..! கண்டிப்பாக இலங்கை, இந்திய நீதிமன்றங்களில் மட்டுமே நிருபிக்கப்பட்டிருக்கிறது. :unsure:

ஆனால் இவை நிருபிக்கப்பட்ட முறை அனைத்துமே சூழ்நிலைச் சான்றுகளைக் (circumstantial evidences) கொண்டே தவிர, பௌதீகப் புலனாய்வின் அடிப்படையில் (Hard Forensic Evidence) அடிப்படையில் நிருபிக்கப்படவில்லை..! :rolleyes:

வளர்ச்சியடைந்த நாடுகளில் சூழ்நிலைச் சான்றுகளை வைத்து குற்றத்தை நிரூபிப்பது இமயத்தைக் கயிறுகொண்டு இழுப்பது போன்றது..! இலங்கை, இந்திய கங்கரு நீதிமன்றங்களிலேயே இவை சாத்தியம்..! மேலை நாடுகளில் வாழும் நாம் அவற்றை ஏற்க வேண்டியதில்லை..! :wub:

ஆகையால், புலிகள்மீதான் குற்றம் இன்னும் நிருபிக்கப்படவில்லை..! இதை அடிப்படையாகக் கொண்டு மேலைநாடுகளில் புலிகளுக்கெதிரான தடைகளுக்கு எவ்விதமான பௌதிகச் சான்றுகளை இந்த நாடுகள் கொண்டிருக்கின்றன என்பதை அறியவும், தடையை விலக்கவும் வழக்குத் தொடுக்க வேண்டும்..! :rolleyes:

இப்படி எழுதி அதை பத்து தரம் வாசித்து நீங்களே சந்தோசப் பட வேண்டியது தான். இன்று தடைய நீக்குவதற்கான வழக்கை நீங்கள் சொல்லும் சமயோசித முறையில் செய்து வெல்ல முடியாது/ புலிகள் அரசியல் படுகொலைகளை செய்யவில்லை, அவர்கள் அச்சாப் பிள்ளைகள் நிரூபிக்க முனைந்தால் நிச்சயம் தோல்விதான் கிடைக்கும். இது தான் யதார்த்தம். விசிலடிச்சான் குஞ்சுகள் அல்ல சர்வதேசம். சர்வதேசம் தன் நலன்களை பேண போராட்ட இயக்கங்களை பயங்கரவாதமா காட்ட முனையும் போது அதே வலையில் மிக இலகுவாக தமிழர் போராட்ட சக்தி சிக்கி உலகில் வேறு எந்த இயக்கத்தினை விடவும் மிக மோசமாக முற்றாக கொடூரமான முறையில் சர்வதேசத்தின் அனுசரணையுடன் ழித்தொழிக்கப் பட்டது.

இன்று புலிகள் இல்லை. அவர்களின் தலைமையில் ஒருவர் கூட மிச்சம் இல்லை. ஆனால் தமிழ் மக்களின் அரசியல் ரீதியான போராட்டத்துக்கான தேவை மித மிஞ்சி இருக்கின்றது. இந்த நிலையில் இன்று சர்வதேசத்தின் ஒரு சாரார் மத்தியில் இலங்கை அரசின் போர்க் குற்றம் தொடர்பில் ஏற்பட்டு வரும் எதிர்புணர்வினை அரசியல் ரீதியான அறுவடை செய்ய முனைந்தால் மட்டுமே தமிழர் போராட்டம் பயங்கரவாதப் போராட்டம் அல்ல என்பதை நிரூபிக்க முடியும்.

  • Replies 142
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் இதை வேறு வகையில் பார்த்தேன் நெடுக்ஸ்

எதையெடுத்தாலும் புலிகள் மேல்போட்டுவிட்டு இங்கு சிலர் புலிகளுக்கு கறைகளை ஏற்படுத்த முயற்சித்தனர். அதை முடிந்தளவு களையணும் என்றே அவர் எப்படி தமிழர்களால் நிராகரிக்கப்பட்டார். எவ்வாறு மீண்டும் எமது பிரதிநிதியாக சென்று பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றார் என்பதை அடுத்த சந்ததி அறியணும். சும்மா அவரைப்போட்டார்கள் இவரைப்போட்டார்கள் என்பதற்கு புலிகள் பதில் சொல்வதில்லை.

ஆனால் அதையே தமக்கு சாதகமாக பயன்படுத்தித்தான் எம்மை அழித்தார்கள்.

எனது பங்கிற்கு என்னால் முடிந்தவரை இதை சுத்தப்படுத்தலாம் என்பதே எனது விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு வால்பிடிப்பதால் மட்டுமட்டான ஆதரவும் உண்டு என்கிற தைரியத்தில் எப்பவுமே மலையைக் குடைகொண்டு மறைக்க முடியும் என்ற தனது எண்ணத்தை மற்றவர்கள் மேல் சுமத்தி தொடர்ந்து மகிழும் சிலரை அதுபாட்டுக்கு ஓரமாக நின்று ...... விட்டு போகட்டும் என்று விட்டுவிடவேண்டியது தான்.

ஓரமாகவே நின்றுகொள்வதுதான் எனக்கு நல்லது என்பது உங்களைப் போன்ற அதிபுத்திசாலிகளின் கருத்துக்களில் இருந்து தெரிகின்றது. உங்களுடைய பல கருத்துக்களைப் பார்த்திருந்தால் புலிகளின் தலைமை சரணடைந்ததற்குப் பதிலாக தமிழீழமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று குப்பியைக் கடித்திருப்பார்கள்! ^_^

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எழுதி அதை பத்து தரம் வாசித்து நீங்களே சந்தோசப் பட வேண்டியது தான். இன்று தடைய நீக்குவதற்கான வழக்கை நீங்கள் சொல்லும் சமயோசித முறையில் செய்து வெல்ல முடியாது/ புலிகள் அரசியல் படுகொலைகளை செய்யவில்லை,

அவர்கள் அச்சாப் பிள்ளைகள் நிரூபிக்க முனைந்தால் நிச்சயம் தோல்விதான் கிடைக்கும். இது தான் யதார்த்தம். விசிலடிச்சான் குஞ்சுகள் அல்ல சர்வதேசம். சர்வதேசம் தன் நலன்களை பேண போராட்ட இயக்கங்களை பயங்கரவாதமா காட்ட முனையும் போது அதே வலையில் மிக இலகுவாக தமிழர் போராட்ட சக்தி சிக்கி உலகில் வேறு எந்த இயக்கத்தினை விடவும் மிக மோசமாக முற்றாக கொடூரமான முறையில் சர்வதேசத்தின் அனுசரணையுடன் ழித்தொழிக்கப் பட்டது.

இன்று புலிகள் இல்லை. அவர்களின் தலைமையில் ஒருவர் கூட மிச்சம் இல்லை. ஆனால் தமிழ் மக்களின் அரசியல் ரீதியான போராட்டத்துக்கான தேவை மித மிஞ்சி இருக்கின்றது. இந்த நிலையில் இன்று சர்வதேசத்தின் ஒரு சாரார் மத்தியில் இலங்கை அரசின் போர்க் குற்றம் தொடர்பில் ஏற்பட்டு வரும் எதிர்புணர்வினை அரசியல் ரீதியான அறுவடை செய்ய முனைந்தால் மட்டுமே தமிழர் போராட்டம் பயங்கரவாதப் போராட்டம் அல்ல என்பதை நிரூபிக்க முடியும்.

இசை சொல்வது

இந்த தீர்ப்புகளும் அவர்களுக்கு ஏற்றவகையில் நடைபெற்றதாகவே.

அந்தவகையில் உதாரணமாக

ராஜீவ் காந்தி கொலைவழக்கை சர்வதேச விசாரணைக்கு விட்டால் எத்தனையோ அப்பாவிகள் நலம் பெறுவர்.

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கம், யோகேச்வரன், நீலன்,கதிர்காமர்....இவர்களால் எமதினத்திற்கு நன்மையேதும் வந்ததா என்று பார்த்தால் பூச்சியம் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் இவர்கள் கொல்லப்பட்டதால் எமக்கு கிடைத்ததெல்லாம் அவப்பெயரும், பயங்கரவாதிகள் என்கிற குறியீடும்தான்.

பொதுமக்கள் கொலைகள், அரசியல் கொலைகள் என்று பிரித்துப் பார்ப்பதால் மட்டும் என்ன நன்மை வந்துவிடப்போகிறது. எல்லோரும் சிவிலியன்கல்தானே?? ஆயுதம் தரித்தவனைக் கொல்லும்போது எவருமே அதைக் கண்டிப்பதில்லை. ஆனால் ஆயுதம் ஏந்தாத மக்களைக் கொல்லும்போது கண்டிக்கிறார்கள். பிரேமதாசவும், ராஜீவும், கதிர்காமரும் கொல்லப்பட்டபோதும், சந்திரிக்காவுக்கு கண்போனபோது யாராவது "இது அரசியல் கொலைகள்தானே, இதைக் கண்டுகொள்ளத் தேவையில்லை" என்றா இருந்தார்கள்?? இல்லையே. ஒரு நாட்டின் பதவியில் உள்ள தலைவர் ஒருவர் முதல் முறையாக தற்கொலைத்தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார் என்கிற பதிவு எமக்கெதிராகச் சரித்திரத்தில் பதியப்பட்டிருக்கிறது. அதுபோலவே ஒரு விடுதலை இயக்கம் தனது நாட்டிற்கு வெளியே நடத்திய ஒரு அரசியல் கொலையாக ராஜீவின் மரணம் பதியப்பட்டிருக்கிறது. இவை எல்லாம் எமக்கு நற்பெயரையா தேடித்தந்தன??

அநுராதபுரம், அரந்தலாவை, பள்ளியகொடல்லை, மொறவெவ, கென்ட் டொலர் பாம் என்று நாம் செய்தவை எல்லாம் எமக்கு எதைப் பெற்றுத் தந்தன??

சிங்களவர்களும், முஸ்லீம்களுமாக நாம் இதுவரை 5,000 பேரைக் கொன்றிருக்கிறோம், ஆனால் சிங்களவன் குறைந்தது 225,000 இலிருந்து 250,000 வரையான தமிழர்களைப் படுகொலை செய்திருக்கிறான். சிங்களவனின் சர்வதேச அங்கீகாரத்தின் முன்னாலும், அவனது பிரச்சாரத்தின்முன்னாலும் எமது எதிர்பிரச்சாரம் எடுபடவில்லை. அவன் செய்த ப்ன்மடாங்கு கொலைகள் மறைக்கப்பட நாம் செய்த சிறியளவிலான கொலைகள் கூட சர்வதேசத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது.

சோசலிசத்தையும், கம்மியூனிசத்தையும் எதிரியாகப் பார்த்த சர்வதேசத்துக்கு புலிகளின் போராட்டமும் சோசலிசமாகத் தெரிந்தது. அதன் விளைவு சிங்கலம் அமெரிக்க முதலான நாடுகளின் ஆதரவையும் ஆரம்பத்திலிருந்தே பெற்றுக்கொண்டது. இதற்கு இன்னும் வலுச்சேர்த்தது 2001 செப்டெம்பெர் தாக்குதல்கள். ஜார்ஜ் புஷ்ஷின் பயங்கரவாதத்திற்கெதிரான போரில் அனைத்து போராளி இயக்கங்களும் பயங்கரவாதிகாளாக்கப்பட்டு அந்தந்த நாடு அடக்குமுறை அரசுகளுக்கு பணமும் ஆயுத உதவியும் கொடுக்கப்பட்டது. அந்த அலையில் அள்ளுப்பட்டுப் போன ஒரு இனம்தான் நாம். இந்த நிலமைக்கி நமது செயல்களும் காரணமாக இருந்திருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கம் தன் வாயால் செத்தவர்.

அவருக்கு பக்கத்திலை நின்ற யோகேஸ்வரனும் சேர்ந்து...... செத்தது தான் கொஞ்சம் கவலை.

  • கருத்துக்கள உறவுகள்

பண்டியோடை.... சேர்ந்த.. பசுவும் பீ தின்னும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எழுதி அதை பத்து தரம் வாசித்து நீங்களே சந்தோசப் பட வேண்டியது தான். இன்று தடைய நீக்குவதற்கான வழக்கை நீங்கள் சொல்லும் சமயோசித முறையில் செய்து வெல்ல முடியாது/ புலிகள் அரசியல் படுகொலைகளை செய்யவில்லை, அவர்கள் அச்சாப் பிள்ளைகள் நிரூபிக்க முனைந்தால் நிச்சயம் தோல்விதான் கிடைக்கும். இது தான் யதார்த்தம். விசிலடிச்சான் குஞ்சுகள் அல்ல சர்வதேசம். சர்வதேசம் தன் நலன்களை பேண போராட்ட இயக்கங்களை பயங்கரவாதமா காட்ட முனையும் போது அதே வலையில் மிக இலகுவாக தமிழர் போராட்ட சக்தி சிக்கி உலகில் வேறு எந்த இயக்கத்தினை விடவும் மிக மோசமாக முற்றாக கொடூரமான முறையில் சர்வதேசத்தின் அனுசரணையுடன் ழித்தொழிக்கப் பட்டது.

இன்று புலிகள் இல்லை. அவர்களின் தலைமையில் ஒருவர் கூட மிச்சம் இல்லை. ஆனால் தமிழ் மக்களின் அரசியல் ரீதியான போராட்டத்துக்கான தேவை மித மிஞ்சி இருக்கின்றது. இந்த நிலையில் இன்று சர்வதேசத்தின் ஒரு சாரார் மத்தியில் இலங்கை அரசின் போர்க் குற்றம் தொடர்பில் ஏற்பட்டு வரும் எதிர்புணர்வினை அரசியல் ரீதியான அறுவடை செய்ய முனைந்தால் மட்டுமே தமிழர் போராட்டம் பயங்கரவாதப் போராட்டம் அல்ல என்பதை நிரூபிக்க முடியும்.

முடியாது என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? இங்கே ஐம்பதுக்கும் மேற்பட்ட விபச்சாரிகளைக் கொன்று பன்றிக்கு உணவாய்ப் போட்ட ஒருத்தனை அவன் கொலை செய்கிறான் என்று தெரிந்து பொலிசால் கைவைக்க முடியவில்லை..! காரணம் ஆதாரமே இல்லாமல் பன்றி உடல்களை விழுங்கியதுதான்..! :o

நான் சொன்னதுபோல் மேலைநாட்டு நீதிமன்றங்கள் கங்கரு நீதிமன்றங்கள் அல்ல..! அந்தந்த நாட்டு அரசுகள் முயன்றாலும் ஒன்றும் செய்ய முடியாது..! :rolleyes:

அண்மைய உதாரணம்..! விவாகரத்து வாங்கிய தம்பதிகளுக்கு சரிசமமான பங்கீடு என்பது இங்கு நடைமுறையில் உள்ள சட்ட நடைமுறை..! ஆனால் விவாகரத்து கிடைத்தவுடன் கணவன் முதல் வேலையாக தான் வங்குரோத்து நிலையடைந்துவிட்டதாக செய்துகொண்டுவிட்டான்..! இதனால் மனைவிக்குப் பாதிச்சொத்து போகாத நிலை..! இதை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம் சட்டப்படி கணவன் தனது சொத்துக்களை முடக்கிக்கொண்டு விட்டாரென்றும், இது இனிமேலும் நடக்காதவண்ணம் அரசுதான் சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும் எனவும் தீர்ப்பளீத்துள்ளது..! :rolleyes:

அதாவது நீதிமன்றமே சொல்கிறது கணவன் ஏமாற்றுகிறான் என்று.. ஆனால் ஒன்றும் செய்ய முடியாதென்று..! :D இங்கே சட்டத்துக்கு அவ்வளவு மதிப்பு..!

நினைத்தால் முடியும்..! :wub:

அநேகமாக நாங்களே புலிகளைப் பயங்கரவாதிகளாக்கிவிட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தி யோசி அப்பு.

அமிர்தலிங்கம் நல்லவரா? அவரைக்கொன்றவர் பயங்கரவாதியா என தெரியாது. ஏனென்றால் 'பயங்கரவாதி' என்றால் யார் என்று தெரியாது. எனவே தெரியாதை விவாதிக்க முடியாது.

தெரிந்ததெல்லாம் தமிழன் பயங்கரவாதியாக முத்திரைகுத்தப்பட்டான் என்பதே.

Edited by akootha

இசை,

சிவில் வழக்குகளும் அரசியல் வழக்குகளும் ஒன்றல்ல. இரண்டும் முற்றிலும் அடிப்படை வேறுபாடு கொண்டவை. சிவில் வழக்கில் தன் நாட்டில் உள்ள மக்களின் நலனே முன் நிற்கும். அரசியல் வழக்குகளில் தம் நாடு சார்ந்த அரசியலே முன் நிற்கும். இது தான் அடிப்படை. ஒரு நாட்டின் நீதிமன்றம் தன் நாட்டின் சர்வதேச அரசியல் நலனுக்கு எதிரான தீர்ப்பினை தர மாட்டாது.

இன்று புலிகளின் தடையை எவராவது நீக்க வேண்டும் என்று வழக்காடினால், அவர்கள் அச்சாப் பிள்ளை என்று காட்டி வெல்ல முடியாது. மாறாக அவர்கள் முற்றாக தலைமைப் பீடத்தில் இருந்து அடிவரை முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்கள்; எனவே இல்லாத ஒரு இயக்கத்துக்கு தடையினை நீடிக்க முடியாது என்ற ரீதியான வழக்கே சரி வரும்

நீங்கள் உட்பட பெரும்பாலான தமிழர்கள் நினைப்பது எம் விடுதலைப் போராட்டம் விட்ட இடத்தில் இருந்து தொடர வேண்டும் என. ஆனால் புதிய முயற்சிகள் புதிய பார்வைகள் கொண்ட ஒரு போராட்டமே இனி முளைக்க சாத்தியம். அது எம் போராட்டம் விட்ட பிழைகளை மீண்டும் விடக் கூடாது என்பதில் தாம் என் முழு கரிசனமும் இருக்க வேண்டும், மாறாக எம்மை தோற்கடித்த பாதைய மீண்டும் மீண்டும் நியாயபடுத்துவது அல்ல

தெரிந்ததெல்லாம் தமிழன் பயங்கரவாதியாக முத்திரைகுத்தப்பட்டான் என்பதே.

...இல்லை தமிழரின் போராட்டம் பயங்கரவாதமாக மற்ற அனைத்து சக்திகளாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டமையே; இதுக்கு எம் போராட்டத்தின் நியாயத்தினை புரிந்த சக்திகளை கூட எமக்காதரவாக மற்ற முடியாமல் போன வங்குரோத்து நிலையே காரணம்

Edited by நிழலி

அமிர்தலிங்கம், யோகேச்வரன், நீலன்,கதிர்காமர்....இவர்களால் எமதினத்திற்கு நன்மையேதும் வந்ததா என்று பார்த்தால் பூச்சியம் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் இவர்கள் கொல்லப்பட்டதால் எமக்கு கிடைத்ததெல்லாம் அவப்பெயரும், பயங்கரவாதிகள் என்கிற குறியீடும்தான்.

பொதுமக்கள் கொலைகள், அரசியல் கொலைகள் என்று பிரித்துப் பார்ப்பதால் மட்டும் என்ன நன்மை வந்துவிடப்போகிறது. எல்லோரும் சிவிலியன்கல்தானே?? ஆயுதம் தரித்தவனைக் கொல்லும்போது எவருமே அதைக் கண்டிப்பதில்லை. ஆனால் ஆயுதம் ஏந்தாத மக்களைக் கொல்லும்போது கண்டிக்கிறார்கள். பிரேமதாசவும், ராஜீவும், கதிர்காமரும் கொல்லப்பட்டபோதும், சந்திரிக்காவுக்கு கண்போனபோது யாராவது "இது அரசியல் கொலைகள்தானே, இதைக் கண்டுகொள்ளத் தேவையில்லை" என்றா இருந்தார்கள்?? இல்லையே. ஒரு நாட்டின் பதவியில் உள்ள தலைவர் ஒருவர் முதல் முறையாக தற்கொலைத்தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார் என்கிற பதிவு எமக்கெதிராகச் சரித்திரத்தில் பதியப்பட்டிருக்கிறது. அதுபோலவே ஒரு விடுதலை இயக்கம் தனது நாட்டிற்கு வெளியே நடத்திய ஒரு அரசியல் கொலையாக ராஜீவின் மரணம் பதியப்பட்டிருக்கிறது. இவை எல்லாம் எமக்கு நற்பெயரையா தேடித்தந்தன??

அநுராதபுரம், அரந்தலாவை, பள்ளியகொடல்லை, மொறவெவ, கென்ட் டொலர் பாம் என்று நாம் செய்தவை எல்லாம் எமக்கு எதைப் பெற்றுத் தந்தன??

சிங்களவர்களும், முஸ்லீம்களுமாக நாம் இதுவரை 5,000 பேரைக் கொன்றிருக்கிறோம், ஆனால் சிங்களவன் குறைந்தது 225,000 இலிருந்து 250,000 வரையான தமிழர்களைப் படுகொலை செய்திருக்கிறான். சிங்களவனின் சர்வதேச அங்கீகாரத்தின் முன்னாலும், அவனது பிரச்சாரத்தின்முன்னாலும் எமது எதிர்பிரச்சாரம் எடுபடவில்லை. அவன் செய்த ப்ன்மடாங்கு கொலைகள் மறைக்கப்பட நாம் செய்த சிறியளவிலான கொலைகள் கூட சர்வதேசத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது.

சோசலிசத்தையும், கம்மியூனிசத்தையும் எதிரியாகப் பார்த்த சர்வதேசத்துக்கு புலிகளின் போராட்டமும் சோசலிசமாகத் தெரிந்தது. அதன் விளைவு சிங்கலம் அமெரிக்க முதலான நாடுகளின் ஆதரவையும் ஆரம்பத்திலிருந்தே பெற்றுக்கொண்டது. இதற்கு இன்னும் வலுச்சேர்த்தது 2001 செப்டெம்பெர் தாக்குதல்கள். ஜார்ஜ் புஷ்ஷின் பயங்கரவாதத்திற்கெதிரான போரில் அனைத்து போராளி இயக்கங்களும் பயங்கரவாதிகாளாக்கப்பட்டு அந்தந்த நாடு அடக்குமுறை அரசுகளுக்கு பணமும் ஆயுத உதவியும் கொடுக்கப்பட்டது. அந்த அலையில் அள்ளுப்பட்டுப் போன ஒரு இனம்தான் நாம். இந்த நிலமைக்கி நமது செயல்களும் காரணமாக இருந்திருக்கின்றன.

தெளிவான பார்வை

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

சிவில் வழக்குகளும் அரசியல் வழக்குகளும் ஒன்றல்ல. இரண்டும் முற்றிலும் அடிப்படை வேறுபாடு கொண்டவை. சிவில் வழக்கில் தன் நாட்டில் உள்ள மக்களின் நலனே முன் நிற்கும். அரசியல் வழக்குகளில் தம் நாடு சார்ந்த அரசியலே முன் நிற்கும். இது தான் அடிப்படை. ஒரு நாட்டின் நீதிமன்றம் தன் நாட்டின் சர்வதேச அரசியல் நலனுக்கு எதிரான தீர்ப்பினை தர மாட்டாது.

இன்று புலிகளின் தடையை எவராவது நீக்க வேண்டும் என்று வழக்காடினால், அவர்கள் அச்சாப் பிள்ளை என்று காட்டி வெல்ல முடியாது. மாறாக அவர்கள் முற்றாக தலைமைப் பீடத்தில் இருந்து அடிவரை முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்கள்; எனவே இல்லாத ஒரு இயக்கத்துக்கு தடையினை நீடிக்க முடியாது என்ற ரீதியான வழக்கே சரி வரும்

நீங்கள் உட்பட பெரும்பாலான தமிழர்கள் நினைப்பது எம் விடுதலைப் போராட்டம் விட்ட இடத்தில் இருந்து தொடர வேண்டும் என. ஆனால் புதிய முயற்சிகள் புதிய பார்வைகள் கொண்ட ஒரு போராட்டமே இனி முளைக்க சாத்தியம். அது எம் போராட்டம் விட்ட பிழைகளை மீண்டும் விடக் கூடாது என்பதில் தாம் என் முழு கரிசனமும் இருக்க வேண்டும், மாறாக எம்மை தோற்கடித்த பாதைய மீண்டும் மீண்டும் நியாயபடுத்துவது அல்ல

முதலில்..

சிவில் வழக்கு, அரசியல் வழக்கு என்கிற பிரிவுகள் எல்லாம் இல்லை.. இருப்பது சிவில் வழக்கு மற்றும் கிரிமினல் வழக்கு முறைகள்..! இதில் கிரிமினல் வழக்குகளே அதி உச்ச தண்டனைமுறைகளைக் கொண்டவை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே..! அவ்வாறான கிரிமினல் வழக்குகளிலேயே பௌதீக ஆதாரமற்ற வழக்குகளில் கொலையாளிகளே தப்புகின்றார்கள்..! :unsure: எமது பிரச்சினை எம்மாத்திரம்? :wub:

சிலர் ஆதாரமில்லை என்று தெரிந்தால் first degree murder என்றாலும் manslaughter க்கு உடன்பட்டு குறைந்த தண்டனைகளுடன் கூட தப்பியிருக்கிறார்கள்..! :rolleyes:

புலிகள் மீதான தடையை எதிர்த்து வழக்குப் போட்டால், தற்போதுள்ள நிலையில் இல்லாத புலிகளை விசாரணைக்கு வரவழைக்க முடியாது.. இதுவே ஒரு சாதகமான அம்சம்..! மற்றது இங்கே இருந்துகொண்டு கிரிமினல் வழக்கு அடிப்படையில் இதை வாதாட முடியாது.. ஏனெனில் கனேடியப் பிரஜைகளுக்கு அவர்களால் ஆபத்து எதுவும் நேரவில்லை.. மிஞ்சி மிஞ்சிப் போனால் பணம் பறித்தார்கள் எனக் குற்றஞ்சாட்டுவார்கள்..! அப்படியான பணமுகவர்கள் புலிகள் உறுப்பினர்கள் என நிருபிக்க முடியாது..! :rolleyes:

இரண்டாவதாக,

புலிகள் மீண்டும் வந்து ஆயுதப்போரைத் தொடங்கவேண்டும் என நான் கூறவரவில்லை..! ஆனால் புலிகளை வைத்து அரசியல் பண்ணும் சிங்களவனின் அரசியலை உடைக்கவேண்டுமானால் தடையை முதலில் உடைக்க வேண்டும்..! :unsure:

அமிர்தலிங்கம் நல்லவரா? அவரைக்கொன்றவர் பயங்கரவாதியா என தெரியாது. ஏனென்றால் 'பயங்கரவாதி' என்றால் யார் என்று தெரியாது. எனவே தெரியாதை விவாதிக்க முடியாது.

தெரிந்ததெல்லாம் தமிழன் பயங்கரவாதியாக முத்திரைகுத்தப்பட்டான் என்பதே.

...இல்லை தமிழரின் போராட்டம் பயங்கரவாதமாக மற்ற அனைத்து சக்திகளாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டமையே; இதுக்கு எம் போராட்டத்தின் நியாயத்தினை புரிந்த சக்திகளை கூட எமக்காதரவாக மற்ற முடியாமல் போன வங்குரோத்து நிலையே காரணம்

உண்மை. அந்த வங்குரோத்து நிலைமை இன்றும் உள்ளது, ஆனால் அதை மாற்றக்கூடிய வழிகள், வலுக்கள் இன்று உள்ளன. அதிலேயே கூடுதல் கவன செலுத்தவேண்டும். இல்லையெனில் அடுத்த தலைமுறைகளுக்கு நாம் எல்லோரும் ஏட்டுச்சுரைக்காய்களே!

  • கருத்துக்கள உறவுகள்

தலாய் லாமா ஒரு புழுவைக்கூட கொன்றதில்லை..! இந்தியா போன்ற நான்காம் வல்லரசு, அணுகுண்டு பலம்மிக்க அரசின் செல்லப்பிள்ளையாக இருக்கிறார். முட்டாள்தனமான புலிகளைப்போல் அரசியல் தலைவர்களைக் கொன்றதாக அவர்தம் மக்களாலேயே குற்றஞ்சாட்டப்படாதவர் தலாய் லாமா..! :huh:

ஆக, நண்பர்களும் அதிகம்.. அகிம்சாவாதி வேறை..! சுதந்திர திபெத்தைத்தான் இன்னும் காணம்..! :(

டிஸ்கி: மியான்மரின் ஆன் சாங் சுகியை வெளிய விட்டிட்டாங்களாமா? :unsure: இந்தியா, பிரித்தானியா அம்பேரிக்கா அன்று பல நண்பர்கள் அவவுக்கு..! அகிம்சை வேறை..! மியான்மர் ஜனநாயகத்தைத்தொடும் காலம் வெகு தொலைவில் இல்லை..! :unsure:

அவர் அஹிம்சை வாதிதான், அவர் அரசியல் தலைவர்களை கொல்லவில்லை தான்; எனவே அவர் மக்கள் அவரை தாமே குற்றம் சொல்லவில்லை. அத்துடன் மிக முக்கியமாக மக்களில் பெருந்தொகையினர் கொல்லப்பட்டோ மிச்சம் உள்ளவர்கள் ஊனமாகவோ இல்லை. இதுதான் முக்கிய விடயம். இன்னும் சீனா போன்ற அமெரிக்காவுக்கு சவால் விடக் கூடிய பலமிக்க அரசுக்கு எதிராக போராடும் வலுவுடன் தான் இருக்கின்றனர். இந்த வலு முற்றாக அழிக்கப்பட்டு ஈற்றில் சீனாவின் காலடியில் எம்மைப் போல பிச்சைக் காரராக திபெத்த்தியர் தள்ளப் பட்டால் தலாய்லாமாவின் இந்த அஹிம்சை போக்கு அவரது மக்களால் மீள் பார்வைக்குட்படும்;

டிஸ்கி: மியான்மரின் ஆன் சாங் சுகியை வெளிய விட்டிட்டாங்களாமா? :unsure: இந்தியா, பிரித்தானியா அம்பேரிக்கா அன்று பல நண்பர்கள் அவவுக்கு..! அகிம்சை வேறை..! மியான்மர் ஜனநாயகத்தைத்தொடும் காலம் வெகு தொலைவில் இல்லை..! :unsure:

ஆன் சாங் சுகி, ஒரு இனத்தின் விடிவுக்காக போராடுபவர் அல்ல. மியான்மாரின் சனநாயகத்துக்காக, அந்த நாட்டின் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடுபவர். அவரது விடுதலையே ஒரு பெரும் மைல் கல்; அடக்குமுறையாளர்களால் மிக இலகுவாக வாழ்நாள் பூரா சிறையில் வைத்திருக்க கூடிய ஒருவர் விடுதலை ஆவது பெரிய விடயம். நிச்சயம் மியான்மார் சனநாயக ஆட்சிக்குட்படும் நாடாக மாறும்

உங்களின் விவாதம் என்னவென்றால் சர்வதேச ஆதரவு ஒன்றையும் கொண்டு வரப்போவது இல்லை, சர்வதேச ஆதரவு எமக்கு தேவை இல்லை. ஏனெனில் தலாய்லாமாவுக்கும் ஆங் சாங் சுகியும் சர்வதேச ஆதரவு இருந்தும் இன்னும் வெற்றி பெறவில்லை. ஆகவே அவர்களை போல இல்லாமல் ;எவரின் ஆதரவும் இல்லாமல் சொந்த காலில் எம்மால் நின்று முன்னர் மாதிரி இலட்சக்கணக்கானோரை பலி கொடுத்து மீண்டும் தோற்க வேண்டும் என்று சொல்கின்றீர்கள் !!

  • கருத்துக்கள உறவுகள்

அதென்னவோ தெரியல்ல.. நம்மவர்களுக்கு புலிகளை மீள்பார்வை செய்வதென்றால் அவ்வளவு பிரியம். அமிர்தலிங்கத்திற்கு மீள்பார்வை கிடையாது.. யோகேஸ்வரனுக்கு மீள்பார்வை கிடையாது.. வரதராஜப்பெருமாளுக்கு அறிவுரை சொல்ல மீள்பார்வை கிடையாது.. டக்கிளஸ் தேவானந்தாவிற்கு அறிவுரை சொல்ல வழிகாட்ட மீள்பார்வை கிடையாது.. சித்தார்த்தனுக்கு கிடையாது.. ஆனந்த சங்கரிக்கு கிடையாது.. ஏன் கருணா.. பிள்ளையானுக்கு கிடையாது.. மொத்தத்தில் யாருக்குமே கிடையாது. ஆனால் புலிகளுக்கு மட்டும்.. மீள்பார்வை.. அறிவுரைகள்.. மாற்றுக் கருத்துக்கள்.. குறைச்சலில்லாமல்.

இது குறித்து நிழலி அண்ணர் கொஞ்சம் விளக்கினால் நல்லா இருக்குமே. ஏன்னா.. எங்களில் யாரும் சுத்தமான அரசியல்வாதியா தெரியல்லையே..!

அந்த வகையில் பார்க்கப் போனால் விடுதலைப்புலிகள் கூடிய ஜனநாயகத் தன்மையை பிரதிபலித்திருப்பதாகவே தெரிகிறது.

Edited by nedukkalapoovan

அதென்னவோ தெரியல்ல.. நம்மவர்களுக்கு புலிகளை மீள்பார்வை செய்வதென்றால் அவ்வளவு பிரியம். அமிர்தலிங்கத்திற்கு மீள்பார்வை கிடையாது.. யோகேஸ்வரனுக்கு மீள்பார்வை கிடையாது.. வரதராஜப்பெருமாளுக்கு அறிவுரை சொல்ல மீள்பார்வை கிடையாது.. டக்கிளஸ் தேவானந்தாவிற்கு அறிவுரை சொல்ல வழிகாட்ட மீள்பார்வை கிடையாது.. சித்தார்த்தனுக்கு கிடையாது.. ஆனந்த சங்கரிக்கு கிடையாது.. ஏன் கருணா.. பிள்ளையானுக்கு கிடையாது.. மொத்தத்தில் யாருக்குமே கிடையாது. ஆனால் புலிகளுக்கு மட்டும்.. மீள்பார்வை.. அறிவுரைகள்.. மாற்றுக் கருத்துக்கள்.. குறைச்சலில்லாமல்.

....ஏனெனில் இந்த அரசியல் கழிசடைகளை தம் ஆத்மார்த்த தலைவர்களாக கொண்டு யாரும் இன்னொரு போராட்டத்தினையோ அல்லது தமிழ் மக்களுக்கு விமோசனம் தரக் கூடிய ஒரு வழி முறையையோ முன்னெடுக்கப் போவதில்லை. ஒரு நியாயமான தேர்தல் ஒன்றில் மக்களால் முற்றாக ஒதுக்கப் படப் போகக் கூடிய/ ஒதுக்கப்பட்ட இந்த மக்கள் விரோதிகளின் செயல்பாடுகளை வெறும் கள்ளன் போலிஸ் விளையாட்டு விளையாடும் சிறுவர்களே சந்தேகமின்றி புரிந்து கொள்வர்.

ஆனால் புலிகள் அப்படி அல்ல. மக்கள் விடிவுக்காக உளத் தூய்மையுடன் நினைத்தும் பார்க்காத தியாகங்களுடன் போராடிய ஒரு அமைப்பு. தொடர்ந்து போராடுவதற்கான அனைத்து தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கும் ஒரு இனத்தில், மக்களுக்காக போராடி ஈற்றில் படு தோல்வி அடைந்த அமைப்பின் தோல்விக்கான காரணங்கள் நிச்சயம் மீள் பார்வைக்குட்படல் வேண்டும். அதுவே இன்னொரு தோல்வியை தவிர்க்க முன் முயலும்

விடுதலைப்புலிகள் படுதோல்வி அடைந்த அமைப்பு என்று எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்..

விடுதலைப்புலிகள் அமைப்பு இராணுவ இலக்கோடு உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல. அரசியல் இலக்கோடு அரசியல் - இராணுவ வழிமுறைகளை பயன்படுத்தி தமிழீழ விடுதலைக்காக போராடப் புறப்பட்ட அமைப்பு. அதன் இராணுவ வலிமை இன்று இழக்கப்பட்டிருந்தாலும்.. அதன் அரசியல் இலக்கும்.. வழிமுறைகளும் இன்னும் பலமாகத் தானே இருந்து கொண்டிருக்கின்றன. தமிழீழம் என்பதை.. தமிழ் தேசியம் என்பதை உச்சரிக்கப் பயந்த காலத்தில் இருந்து ஏன் போராளிகள் விற்கும் ஊதுபத்திகளைக் கூட வாங்க மறுத்த மக்களைக் கூட இன்று தமிழீழத்தை உச்சரிக்கவும் தமிழ் தேசியத்தை நேசிக்கவும் கற்றுக் கொடுத்துள்ளனரே அது.. புலிகள் சாதித்த வெற்றி கிடையாதா..????!

சர்வதேசம் அல்ல போராடுவது. மக்கள் தான் போராடுவது. சர்வதேசம் பலியிடல்களின் அளவை வைத்துத் தான் நீதி வழங்கும் என்ற நிலை எம் விடயத்திலும். தென் சூடானில் 25 இலட்சம் மக்களை பலியிட்டு தான் ஒரு சுதந்திரம் பெற சர்வதேசம் அனுமதித்திருக்கிறது. இது இந்த உலகில் நடைபெறும் மிகக் கொடுமையான.. மனித நாகரிகத்துக்குப் புறம்பான செயல். இருந்தும் சர்வதேச அதிகார வர்க்கங்கள் தாங்கள் நினைப்பதையே இன்றும் செய்து கொண்டிருக்கின்றன. அவர்கள் நினைப்பதெல்லாம் நியாயம் என்றும் கிடையாது. எமக்கென்றான ஒரு தெளிவான பாதை தெரிகின்ற போது அதில் பயணிக்க வேண்டுமே தவிர.. சர்வதேசம் எமக்கு வழி சமைத்துத் தரும் என்று காத்திருந்தால்.. அது பேரழிவாகவே முடியும்.

விடுதலைப்புலிகளின் இராணுவ வழிமுறை சர்வதேசத்தின் இராணுவ வலிமையின் முன் தோற்றிருக்கலாம். ஆனால் அவர்களின் அரசியல் வழிமுறையும்.. அடைய வேண்டிய அரசியல் இலக்கும் என்றுமில்லாத வகைக்கு பலம் பெற்றிருக்கிறது. அதுவே அந்த அமைப்பின் மாபெரும் வெற்றியும் கூட. அதை மக்கள் தான் எனி தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இன்னும் இன்னும் கிடைக்கப்பெற்றுள்ள அந்த வெற்றிகளை பலப்படுத்துவதன் மூலம்.

நாளை தமிழீழம் ஈட்டப்படலாம்... புலிகளின் இலட்சியம் வெல்லப்பட்டாலும்.. அதற்குரிய பலமான வெற்றியை புலிகள் இன்று பெற்றுள்ளனர்.. அதுதான் மக்களை தமிழீழத்தின் பால் சிந்திக்கவும் போராடவும் தூண்டி உள்ளமை. அந்தச் சிந்தனை போராட்டம் இன்றி தமிழீழம் எப்போதும் சாத்தியப்படாது. அதுவே புலிகளின் மிகப் பெரிய வெற்றி.

அப்படி இருக்க.. புலிகள் படுதோல்வி கண்டுவிட்டனர் என்பது.. இராணுவ ரீதியில் சரியாக இருக்கலாம்.. அங்கும் படுதோல்வி கிடையாது. விடுதலைப்புலிகள்.. இராணுவ வழிமுறையில் தமிழீழத்தை அடையலாம் என்று நம்பி இருக்கவில்லை. அது சாத்தியமில்லை என்றும் அவர்களுக்குத் தெரியும். இராணுவ வழிமுறை என்பது.. ஆக்கிரமிப்பாளனுக்கு எதிரான ஒரு அச்சுறுத்தலுக்கும்.. பேரம் பேசலுக்கும் என்று பாவிக்கப்பட்டதே அன்றி.. அந்த வழிமுறையில் தான் தமிழீழம் என்ற அரசியல் இலட்சியம் எட்டப்படும் என்று புலிகள் எப்போதும் நம்பி இருக்கவில்லை. அந்த வகையில் புலிகளின் இராணுவ வழிமுறைத் தோல்வி என்பது தமிழீழத்தின் முடிவும் அல்ல.. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஓய்வும் அல்ல.. அரசியல் வழிமுறைப் போராட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஓய்வும் அல்ல. ஆயுதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓய்வு மட்டுமே ஆகும்.

Edited by nedukkalapoovan

அநேகமாக நாங்களே புலிகளைப் பயங்கரவாதிகளாக்கிவிட்டோம்.

இறைவன் கூறிய மாபெரும் உண்மைக்கு ஒரு பச்சைப்புள்ளி.

தமிழினத்துக்காக அர்ப்பணிப்புடன் போராடிய புலிகள் எந்தவொரு தவறும் செய்யவில்லை என்று எங்கும் எப்போதும் நான் கூறியதில்லை. மனிதர்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்கள் தான். ஆனால் அதை எந்த இடத்தில், யாரிடம் சுட்டிக்காட்டுவது என்ற விவஸ்தையில்லாமல், மாற்றுக்கருத்து மாணிக்கங்கள், நடுநிலைக் கருத்தாளர்கள், பத்திரிகை - இலக்கியவாதிகள், மனிதாபிமானிகள், முன்னாள் போராளிகள் என்று தம்மைக் காட்ட முனையும் - காட்டிப் பெருமை கொள்ளும் எம்மவர்கள் சிலர் புலம் பெயர்ந்து அரைகுறையாக் கேள்விப்பட்ட விடயங்களை வைத்துக்கொண்டு, சிங்களவனின் போலிப் பரப்புரைகளை வைத்துக்கொண்டு புலிகள் செய்யாத கொலைகளையும் கூட அவர்கள் செய்ததாக அடித்துக் கூற முற்படுவது தான் தமிழர் தரப்பு பயங்கரவாதிகளாகக் காட்டப்பட முக்கிய காரணமாகியது. தமிழினத்தின் பின்னடைவுக்கு இவர்கள் தான் முக்கிய காரணம்.

நாம் வெளிநாட்டவரிடம் பேசும் போது, அவர்களை வெறுப்பெற்றாது சுருக்கமாக ஆனால் அவர்கள் மனதில் ஆழப்பதியும் படி, நாசுக்காக, விவேகத்துடன் சிங்கள பயங்கரவாத அரசின் திட்டமிட்ட இனவழிப்பை தொடர்ச்சியாக பட்டியல் போட்டு காட்டத் தவறிவிட்டோம்.

சில சந்தர்ப்பங்களில் அவ்வாறு வெளிநாட்டவரிடம் சொல்லும் போது, அவர்கள் சிலவேளைகளில் புலிகளின் கொலைகளாக சிலவற்றை சுட்டிக் காட்டும் போது, அதை மறுத்து / அதற்கு காரணமான சிங்கள இனப்படுகொலைகளைக் கூறி நியாயப்படுத்தி / இது சிங்கள இனப்படுகொலை அரசின் போலிப் பரப்புரை / இது ஆதாரமற்ற செய்தி என்பதைக் கூறாமல், உடனடியாக "Yes, Yes, I do not agree with those acts / Yes, yes that is bad / Yes, yes that has to condemned" என்று கேனையன் மாதிரி அவர்கள் சொல்வதை உண்மையாக்கி, தன்னை நடுநிலைவாதியாக உயர்த்திக் காடுவதில் தடுமாறி அப்படியே பேச்சை வேறு திசையில் மாற்றும் எம்மவர்கள் சிலரை நேரடியாக எனது சில வெளிநாட்டு பயணங்களில் பார்த்துள்ளேன். அக்காலத்தில் எமது ஆங்கில பேச்சுத் திறமைக் குறைவு காரணமாக பேச்சற்று கலங்கியுள்ளேன். இதைச் சிவசிதம்பரமும், சம்பந்தனும் செய்வதை நேரில் காணும் சந்தர்ப்பமும் கிடைத்தது.

இவ்வாறு தன்னைக் காப்பாற்றுவதாகக், தன்னை நல்லவனகாகக் காட்டுவதாகக் கருதி, சிங்களவனின் போலிப் பரப்புரைகளை தம்மையறியாமலே உண்மையாக்கும் முதுகெலும்பில்லாத எம்மவர்கள் தான் புலிகள் பயங்கரவாதிகள் ஆக்கப்படக் காரணமாகும்.

இன்னும் காலம் தாழ்ந்துவிடவில்லை, இன்றிலிருந்தாவது நாம் சந்திக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரிடமும், சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் மிகத் தெளிவாக 60 வருட சிங்கள அரச பயங்கரவாதத்தை ஆதாரங்களுடன் சுருக்கமாக, மனதில் பதியும்படி கூறிவந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். தற்போதைய போர்க்குற்றச் சாடுச் சூழ்நிலை வேலையை சுலபமாக்கும். புலம் பெயர் இனப்பற்றாளர்கள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அரசியல் ரீதியாக அமைக்கப்பட்ட அமைப்பு என்பதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் செய்யும் நோக்குடன் பிரபாகரன் வரவில்லை. அரசியல்ரீதியான பாதைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலேயே ராணுவரீதியான ஆக்கிரமிப்பையும், அடக்குமுறையையும் அதன் வழியில் எதிர்கொள்வதற்காக உருவானதே புலிகள் என்கிற இயக்கம். தமிழரின் அரசியல் ரீதியான உரிமைகளையும், அபிலாஷைகளையும் ராணுவ ரீதியில் அடைவதற்கு உருவானதே புலிகள் என்கிற இயக்கம்.

தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பிர்த்துப் பார்க்கமுடியாத ஒரு அங்கம் விடுதலைப் புலிகள். அவர்களுக்கு முன்னரும் சரி, அவர்கள் 2009 ஆயுதங்களை மவுனித்தபின்னரும் சரி அவர்கள்போல இதுவரை யாரும் இருந்ததில்லை, இனியும் இருக்கப்போவதில்லை. அவர்கள் வகித்த பாத்திரமும் விட்டுச்சென்ற சுவடுகளும் காலத்தால் அழியாதவை, அழிக்கப்பட முடியாதவை. எமதினத்திற்கு அவர்களின் செயற்பாடு இன்னொருமுறை வேண்டுமா இல்லையா என்பதை நாம் சொல்வதைவிட எதிரியானவன் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கிறான். காலத்தின் அவசியம் என்னவோ அது நடந்தே தீரும்.

ஆனால் நாம் முன்னர் விட்ட சில தவறுகளை மீண்டும் விடாது பார்த்துக்கொள்ளுதல் தவறில்லை. உலகோடு ஒத்தியங்கும் தன்மை இன்றைக்கு நிச்சயம் வேண்டும். அதற்காக எமது உரிமைகளையும், இலட்சியக் கனவையும் விட்டுக் கொடுங்கள் என்று கேட்கவில்லை. அதே கனவுகளையும் ஒரே இலட்சியத்தையும் உலகு விரும்பும் பாதையில் அடையலாம் என்கிறேன், அவ்வளவுதான்.

பாலஸ்த்தீனர்கள், தலிபான்கல் போன்ற காட்டுமிராண்டி அமைப்புகளோடு ஒப்பிடக்கூடியதல்ல எமது விடுதலை இயக்கம். ஆனால் நாம் விட்ட சில சந்தர்ப்பவசத் தவறுகளால் உலகு எம்மையும் அவர்களுடான் சேர்த்துப் பார்க்க விரும்புகிறது. இதை நாங்கள் தவிர்த்திருக்கலாம் என்கிறேன், அவ்வளவுதான்.

புலிகள், எங்களின் ஒரே நம்பிக்கை, மற்றவைகள்.....பத்தோடு பதினொன்றாக.....

அமிர்தலிங்கத்தை யார் சுட்டிருந்தாலும் அது தவறான செயல் அல்ல. அவர் ஒரு நாடு செய்து கொண்டிருந்த போர்க்குற்றத்தை மறைக்க அந்த நாட்டின் பேச்சாளராகச் செயற்பட்ட ஒருவர். உண்மையில் அவர் ஒரு போர்க்குற்றவாளி. இந்தியப் படைகள் தமிழீழத்தில் செய்த படுகொலைகள் தொடர்பில் நீதியான போர்க்குற்ற விசாரணை ஒன்று ஐநா மன்றில் வருமானால் நிச்சயம் அமிர்தலிங்கத்தின் பெயரும் அதில் வரும்.

தேசிய தலைவரின் எல்லா மாவீரர் தின உரைகளையும் கேளுங்கள். அப்புறம் வந்து எழுதுங்கள்.. "புலிகள் அரசியல் இலக்கற்று வெறும் இராணுவ அமைப்பாகவே தோன்றினர்" என்ற உங்களின் கருத்து மெய்யா.. பொய்யா என்பதைச் சொல்ல.

தேசிய தலைவர் தமது அரசியல் இலக்கை திம்பு தொடங்கி 2004 இடைக்கால நிர்வாக சபை தொடர்பான விடுதலைப்புலிகள் சர்வதேசத்துடன் இணைந்து வரைந்த வரைபு வரை சொல்லி இருக்கிறார். அரசியல் இலக்கற்ற ஒரு இயக்கத்திற்கு இவை எதற்கு..??! அதுமட்டுமன்றி புலிகளே ஏக பிரதிநிதிகள் என்ற இயக்கம்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி அதனை புலிகளின் ஏக பிரதிநிதித்துவத்த ஏற்கச் செய்து.. சிறீலங்கா தேசிய அரசியல் களத்தில் விட்டதன் நோக்கம் என்ன..??! இவை.. தேசிய தலைவர்.. சும்மா பொழுதுபோக்கிற்கு செய்யவில்லை. அதுவும் புலிகள் ஜெயசிக்குறு வெற்றி ஓயாத அலைகள் வெற்றியின் பின்னரே தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க பாடுபட்டனர். அவர்களுக்கு அப்போதே தெரிந்துவிட்டது. இராணுவ ரீதியில் இலக்கை அடைவது என்பது சாத்தியமில்லை. அதற்கு பிராந்திய.. சர்வதேச ஒத்துழைப்பு இருக்காது என்று.

விடுதலைப்புலிகள்.. வலிந்து தாக்குதலை நிறுத்தி தற்காப்புச் சமர் செய்யவும் இந்த நிலையே காரணமானது. புலிகள் சர்வதேசத்தின் ஆதரவை தமது அரசியல் இலக்கை நோக்கி நகர்த்தவே இராணுவ வழிமுறையில் மாற்றத்தைக் கொண்டு வந்தனர். அது அவர்களை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்த சில சர்வதேச சக்திகளாலும் இந்தியா சீனா போன்ற பிராந்திய போட்டியாளர்களாலும் பாவிக்கப்பட்டமை துரதிஸ்டவசமான ஒன்று. ஆனால் புலிகள் அதனையும் எதிர்பார்த்துத் தான் இருந்தார்கள். அதற்கு சாட்சி 2008ம் ஆண்டு மாவீரர் தின உரையில்... தேசிய தலைவர் தமிழர்களின் அரசியல் இலக்கை அடைய நாம் முன்னெடுத்ததுச் சென்ற நடவடிக்கைகள் போல.... எனி புலம்பெயர் மக்கள் தான் அதனை முன்னெடுத்துச் சென்று இலக்கை வெல்ல வேண்டும் என்று கூறினார். அதில் தலைவர் தெளிவாக தமது அரசியல் வழிமுறைகளை மக்களுக்கு சுட்டிக்காட்டி விட்டுச் சென்றார்.

அப்படி எல்லாம் இருக்க.. புலிகள் அரசியல் இலக்கற்ற அமைப்பினர் என்பது மாற்றுக் கருத்து மாணிக்கங்கள் புலம்பித் திரியும் கருத்துக்களின் உள்வாங்கலோ என்று எண்ணத் தூண்டுகிறது. அப்படியான ஒரு எண்ண ஊட்டலே தவறானது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளிடம் அரசியல் நோக்கு இல்லையென்று யார் சொன்னது ? மற்றையை அரசியல்வாதிகள்போல அவர்கள் அரசியல் செய்யவில்லை என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. அரசியல்க் கட்சி அமைத்து தேர்தலில் ஈடுபட்டு சிங்களப் பாராளுமன்றில் அமருவதற்காக தலைவர் போராட வரவில்லை. இந்தச் சிங்கள நாடு எமக்கு அரசியல் ரீதியான சமத்துவத்தைத் தரப்போவதில்லை என்று அறிந்தபின்னர் இனி இவர்களுடன் அரசியல் பேசுவதில் பயனில்லை, எம்மை ராணுவரீதியாக எதிரி அழிக்க நினைத்தால் அவன் வழியிலேயே நாமும் அவனுக்குப் பதிலளிப்போம் எனும் நோகில் ஆரம்பிக்கப்பட்டது. ராணுவரீதியான வெற்றியொன்றின் மூலம் தமிழரின் தேசிய அபிலாஷைகளை அடையலாம் என்கிற முனைப்பில் செய்யப்பட்டது.

மாத்தையா தலமையில் அமைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்ப் பிரிவாகட்டும், பின்னர் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாகட்டும், இவை ரெண்டுமே புலிகல் தாம் முற்றான ராணுவ ரீதியிலான அமைப்பு அல்ல என்று உலகிற்குக் காட்ட எடுத்த நடவடிக்கைகளேயன்றி, உண்மையில் அந்த அரசியல் அமைப்புகள் பலமான முறையில் செயற்படவில்லை.

இந்திய ராணுவத்தினுடனான போரின் பின்னர் பிரேமதாசாவின் அரசுடன் நடந்த பேச்சுக்களின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அதேபோன்று ரணிலுடனான பேச்சுக்களின்போது தேசியக்கூட்டமைப்பு உள்வாங்கப்பட்டது. இந்த ரெண்டு சந்தர்ப்பங்களையும் விட பெரும்பான்மையான 35 வருடகால ஆயுதப் போராட்டம் என்பது முற்றான ராணுவ ரீதியில் நடைபெற்ற போராட்டம் என்றால் அது மிகையாகாது.

ஆயுதபோராட்டம் என்பது புலிகளால் தொடக்கபட்ட ஒன்றல்ல..............

புலிகளால் செய்யபட்ட ஆயுதபோரானது தற்காப்பு போரே தவிர அதனுடு தமிழ்ஈழத்தை அடைய முடியாது என்பதை பல முறை மேடைபோட்டு புலிகள் பேசியபோதெல்லாம் உங்களுக்கு கேட்கவில்லை. 30 வருடம் புலிகள் சொன்னதை இப்போது நீங்கள் புலிகளுக்கு சொல்கின்றீர்கள்.

அரசியல் ரீதியானது என்பது................. தேர்தல் ஒன்றில் இருந்தே ஜனநாயக ரீதியா பிறப்பபெடுக்க கூடிய ஒன்று. அதை விருப்பம் இல்லாவிட்டாலும் செய்யலாம் என எதிரிகள் முன்னவந்தார்கள் புலிகள் அதன் செயற்பாடுகளில் இறங்குமுன்பு புலிகளின் வெற்றிகளை தெளிவாக தெரிந்தவுடன் அதை குழப்பிவிடுவார்கள். புலிகளின் வெற்றி உறுதியானது என்றாகிய பின்பு தேர்தலை நடாத்தி ஒரு முடிவுக்கு வர வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை.

எதையாவது கொடுக்கலாமா விடலாமா என்ற கேள்வியில். கொடுக்க தேவையில்லை என்ற விடையையே சிங்களவன் திரும்ப திரும்ப சொல்கிறான் தெரிவு செய்கிறான். ஆக தேர்தல் என்பது தட்டிகழிக்க படவேண்டிய ஒன்று. பேச்சுவார்த்தைகளை குழப்புவதற்கே அமிர்தலிங்கத்தை இந்தியா பாதுகாத்து வைத்திருந்தது அது சிங்களவனுக்கும் சாதகம் ஆனாதால் தனது சொந்த பொலிஸ் காவல் கொடுத்து பாதுகாத்து வந்தது. அதை புலிகள் தமது உயிர் கொடையின் மூலம் முடிவுக்கு கொண்டுவர.................... அதே இடத்தை முஸ்லீம் தரப்பை கொண்டு சாதித்தார்கள் பின்னாளில் நடந்த பேச்சுக்களுக்கு முஸ்லீம் தரப்பு அமிர்தலிங்கத்தின் இடத்தை நிரவுவதற்கு பயன்பட்டார்கள்.

பேசியவர்கள் இதய சுத்தியுடன் பேசாத போது புலிகள் அரசியலை செய்யவில்லை என்ற உங்கள் குற்றசாட்டை எந்த ஆதாரத்தை காட்டி நிறுவுகறீர்கள்? சும்மா வெறுமனே வெட்டி பேச்சாக பேச முடியுமே தவிர ஒரு தர்க்க ரீதியான விவாவத்தில் அதை நியாயபடுத்து அங்கே உண்மை என்று எதும் இல்லை.

இலங்கை இந்திய உடன் படிக்கையில் தேர்தல்தான் முக்கிய பங்காக இருந்தது. அது றோவினுடைய நிகழ்சிநிரலாக இருந்தது இந்தியாவில் இருந்த ஈப்பி சாப்பிகளை அழைத்துவர அதுதான் சரியானது என்றே தேர்தலை முதன்மைபடுத்தி உடன்படிக்கை செய்தார்கள். பின்னாளில் புலிகளின் வெற்றி உறுதியானது என்று தெரிந்தபின்பு அவர்கள் அப்படியொரு திட்த்தையே கைவிட்டார்கள். இங்கே புலிகள் எப்படி அரசியல் கட்சி நடத்தயிருக்க வேண்டும் என்று நீங்கள் எழுதினால்தான் உங்களுடைய வாதத்தை ஒரு வாதமாக கொள்ளலாம். அல்லது வெறும் வாந்தியாகவே இருக்கும்.......................... ஏனெனில் இதை வாந்தியெடுக்கும் கூட்டம் அடிக்கடி எடுக்கும் கூட்டம் ஒவ்வொருநாளும் காலையில் எழுந்து எதாவது ஒரு இணையதளத்தில் எடுக்கும் சாதாரண வாந்தி.

அது உண்மையென நீங்கள் நம்பினால் நிருபிக்கபடவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.