Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமிர்தலிங்கத்திற்கு நிகழ்வு நடத்தியது தமிழரசுக்கட்சி! பிரதம விருந்தினராக வரதராஜப்பெருமாள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கம் நல்லவரா? அவரைக்கொன்றவர் பயங்கரவாதியா என தெரியாது. ஏனென்றால் 'பயங்கரவாதி' என்றால் யார் என்று தெரியாது. எனவே தெரியாதை விவாதிக்க முடியாது.

தெரிந்ததெல்லாம் தமிழன் பயங்கரவாதியாக முத்திரைகுத்தப்பட்டான் என்பதே.

:D

மேற்கு நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராகப் பல சட்டங்களை இயற்றியுள்ளன. பயங்கரவாதம் என்னவென்று வரைவிலக்கணம் இல்லாமல் சட்டங்களை இயற்றமுடியாது. எனினும் இத்தகைய வரைவிலக்கணங்கள் மிகவும் சர்ச்சைக்குரியதே. அப்படியிருந்தும் ஒவ்வொரு நாடுகளும் தத்தமது தேவைகளுக்கு ஏற்ப பயங்கரவாதத்திற்கு வரைவிலக்கணம் கொடுத்துள்ளார்கள். எனவே தமிழர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்துப்படும்போது அது குத்தியவர்களைப் பொறுத்து வெவ்வேறு அர்த்தப்படும். ஆகவே அர்த்தங்களைப் பற்றி விவாதிப்பதை விட்டுவிட்டு தொடர்ந்தும் முத்திரை குத்தாமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கவேண்டும்.

Terrorism

There is no universally agreed, legally binding, criminal law definition of terrorism.[1][2] Common definitions of terrorism refer only to those violent acts which are intended to create fear (terror), are perpetrated for a religious, political or ideological goal, deliberately target or disregard the safety of non-combatants (civilians), and are committed by non-government agencies.[citation needed]

Some definitions also include acts of unlawful violence and war. The use of similar tactics by criminal organizations for protection rackets or to enforce a code of silence is usually not labeled terrorism though these same actions may be labeled terrorism when done by a politically motivated group.

The word "terrorism" is politically and emotionally charged,[3] and this greatly compounds the difficulty of providing a precise definition. Studies have found over 100 definitions of “terrorism”.[4][5] The concept of terrorism may itself be controversial as it is often used by state authorities (and individuals with access to state support) to delegitimize political or other opponents,[6] and potentially legitimize the state's own use of armed force against opponents (such use of force may itself be described as "terror" by opponents of the state).[6][7]

Terrorism has been practiced by a broad array of political organizations for furthering their objectives. It has been practiced by both right-wing and left-wing political parties, nationalistic groups, religious groups, revolutionaries, and ruling governments.[8] An abiding characteristic is the indiscriminate use of violence against noncombatants for the purpose of gaining publicity for a group, cause, or individual.[9]

http://en.wikipedia.org/wiki/Terrorism

  • Replies 142
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி,

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்பதால் என்ன விளங்கிக்கொள்கிறீர்கள்?? தற்காப்புப்போரை மட்டுமே நடத்திய புலிகளுக்கு சிங்களத்துக்குச் சமனான ஒரு நிழல் அரசை நடத்தவேண்டிய தேவை என்ன?? ஆகத் தற்காப்புக்காகத்தான் இத்தனை ஆயிரம் மாவீரர்கள் ஆகுதியாகினார்கள் என்கிறீர்கள்??மற்றவர் கருத்துக்களில் குறை கண்டுபிடிக்கிறேன் பேர்வழியென்றுகொன்டு புலிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது நீங்கள்தான்.

புலிகள் அரசியல் செயற்பாடுகளுக்கு ஆரம்பத்தில் முக்கியத்துவம் அதிகம் கொடுக்கவில்லை. ஆனால் அவர்கள் கூட்டமைப்பினர் மூலம் அரசியலில் ஈடுபட்டது 2000 இற்குப்பின்னர்தான், அதுவும் 2001 ரெட்டைக் கோபுரத் தாக்குதலால் ஏற்பட்ட "பயங்கரவாதத்திற்கெதிரான போர்" எனும் அலையிலி அள்ளுப்பட்டுப் போவதைத் தடுப்பதற்கு.

மீண்டும் மீண்டும் அதே இடத்தில் வந்து நிற்கிறீர்கள். அமிர்தலிங்கம் செய்தது சரியா பிழையா என்று நான் வாதாட வரவில்லை. அது எனக்குத் தேவையற்றதும்கூட. ஆனால் நான் சொல்லவந்தது அவரைக் கொன்றதால் எமக்கு ஏற்பட்டதெல்லாம் தீமைகளேயன்றி நண்மைகள் இல்லையென்பதைத்தான். ஆனால் நீங்களோ திரும்பத் திரும்ப அவர் கெட்டவர், ஆகவேதான் அவரைப் புலிகள் போட்டுத் தள்ளினர் என்கிறீர்கள். எனக்கு அது தேவையற்ற விடயம்.

புலிகள் பேச்சுவார்த்தைக்குப் போனதையோ அல்லது போகாததையோ நான் இங்கு பேசவில்லை, அது எனது நோக்கமும் அல்ல. நெடுக்கர் கூறிய கருத்துக்குத்தான் நான் பதில் எழுதினேன். அவர்கள் அரசியல் ரீதியான செயற்பாடுகளில் அதிகம் நாட்டம் காட்டவில்லை என்றுதான் எழுதியிருக்கிறேன்.அவர்கள் பேச்சுவார்த்தைக்குப் போனார்களா அல்லது ஏமாற்றப்பட்டார்களா என்பது பற்றி நான் எதுவுமே எழுதவில்லை.

புலிகள் எப்படி அரசியல் கட்சி நடத்தினார்கள் என்றோ அல்லது அவர்கள் எப்படி நடத்தியிருக்க வேண்டுமென்றோ நான் பாடமெடுக்க வரவில்லை. அது எனக்கு தேவையற்றதும்கூட. அது நெடுக்கர் எழுதிய கருத்துக்கான பதில். புலிகள் அரசியல் ரீதியாக செயற்பட்டசந்தர்ப்பங்களைத்தான் நான் குறிப்பிட்டேனேயன்றி அவர்கள் அதைச் செய்திருக்கலாம், இதைச் செய்திருக்கலாம் என்று சொல்ல் வரவில்லை.

நீங்கள் எனது வாதத்தை வாதமாக எடுக்கிறீர்களோ, அல்லது வாந்தியாக எடுக்கிறீர்களோ எனக்குத் தெரியாது, அது உங்களைப் பொறுத்தது. நீங்கள் வாந்தியாக இருக்கும் என்று கருதுவதற்காக நான் எழுதாமலும் இருக்கமுடியாது.

இறுதியாக, அமீர் கொலை, சரியா பிழையா...எனக்குத் தேவையற்றது. ஆனால் அவர் கொல்லப்பட்டதால் எமக்கு நண்மையா தீமையா?? - நிச்சயம் தீமைதான். அவர் இருந்திருந்தால் நண்மை ஏதும் செய்திருப்பார் என்பதற்காக அல்ல, அவரது கொலை எம்மைக் கொலைகாரர்களாக உலகுக்குக் காட்டிவிட்டது என்பதற்காக. புரிந்துகொண்டால் சரி, முடியவில்லை என்றால், நான் பேசியதெல்லாம் வாந்தியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், மருதங்கேணி, விசுகு....மற்றும் அனைவருக்கும்,

உங்களிடம் சில கேள்விகள்:.

1) ஆயுதம் தரிக்காத தனிமனிதர் கொலைகளால் நான் அடைந்த பயன் என்ன?

2) இவ்வாறான கொலைகளால் எமது தேசிய விடுதலைப் போராட்டம் முந்தள்ளப்பட்டதா அல்லது பின்னோக்கி இழுத்துவிடப்பட்டதா??

3) தனிமனிதக் கொலைகளால் நாம் பெற்ற உடனடி, நீண்டகால நண்மைகளை சொல்ல முடியுமா?

4) 2009 இல் எம்மினத்தின்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கூட்டுப் படுகொலைகளுக்கும், எம்மால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் முன்னால் தனிமனித படுகொலைகளுக்கும் சம்பந்தம் ஏதுமிருக்கின்றதா?

5) சர்வதேசத்தில் நாம் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்படுவதன் காரணம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இவற்றிற்கான தெளிவான பதிலை நீங்கள் யாராவது தந்தால் நான் எழுதியதைத் தவறென்று ஒத்துக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அமீர் கொலை, சரியா பிழையா...எனக்குத் தேவையற்றது. ஆனால் அவர் கொல்லப்பட்டதால் எமக்கு நண்மையா தீமையா?? - நிச்சயம் தீமைதான். அவர் இருந்திருந்தால் நண்மை ஏதும் செய்திருப்பார் என்பதற்காக அல்ல, அவரது கொலை எம்மைக் கொலைகாரர்களாக உலகுக்குக் காட்டிவிட்டது என்பதற்காக.

அமிர் கொல்லப்பட்டது நிச்சயம் தீமைதான் என்றால், அந்தக் கொலை சரியாக இருக்கமுடியாது. பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் ஒரு அரசியல்படுகொலையை யாரும் முடிவெடுப்பதில்லை. புலிகளும் அப்படித்தான். அந்தத் தருணத்தில் கொலையால் வரும் பின்விளைவுகளைவிட "தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்" என்பதற்கு இருந்த தடைக்கல் நீங்கவேண்டும் என்பது புலிகளுக்கு முக்கியமாகப் பட்டிருக்கும். அத்தோடு போராட்டம் வெற்றி பெற்று தமிழீழம் கிடைத்திருந்தால் இத்தகைய அரசியல் படுகொலைகள் விடுதலைக்கான விலைகள் என்று சொல்லப்பட்டிருக்கலாம்.

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்றதால்தான் இப்படிப்பபட்ட கொலைகள் நன்மை செய்யவில்லை என்று உணர்கின்றோம். புலிகளின் ஆயுதப் போராட்டம் தற்போதும் தொடர்ந்து இருந்தால் அமிரைப் பற்றி யார்தான் (த.தே.கூ உட்பட) கதைக்கப்போகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

பின்விளைவுகள் பற்றிச் சிந்திக்காமல் எடுக்கப்பட்ட முடிவுகள் என்பதில் உடன்படவேண்டும். ஏனென்றால் பின்விளைவுகள் பற்றிச் சிந்தித்து நடத்தப்பட்டிருந்தால் எமக்கு அனைத்தும் நண்மையாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை என்பது வெளிப்படை. ஆகவே....

பின்விளைவுகள் பற்றிச் சிந்திக்காமல் எடுக்கப்பட்ட முடிவுகள் என்பதில் உடன்படவேண்டும். ஏனென்றால் பின்விளைவுகள் பற்றிச் சிந்தித்து நடத்தப்பட்டிருந்தால் எமக்கு அனைத்தும் நண்மையாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை என்பது வெளிப்படை. ஆகவே....

எந்த ஒரு செயலுக்கும் பின் விளைவுகள் இருக்கும். சாதரணமாக எல்லாருக்கும் தெரியும்.

அமிர்தலிங்கம் கொலை தேவை ஒன்றாக அந்த நேரம் இருந்திருக்கும். அவனால் போராளிகள் கண்ட பின்னடைவு நிறைய, அந்த இடத்தை வெற்றிடமாக்க வேண்டி இருந்தது.

ஏன் அமிர்தலிங்கம் விட்டு விட்டு போய் மகனுடன் இருந்திருக்கலாம் தானே. ஆயுதம் தூக்க முதல் அவர் செய்தது எல்லாம் தமிழர் அறிவர்.

இனி நான் ஒதுங்கி இளைஞரை விடுவோம் என்றில்லாமல் மீண்டும் ,மீண்டும் தமிழன் உயிர் மேல் சவாரி செய்ய முற்பட்டவர்கள்.

அவரை அகற்ற வேண்டிய தேவை இருந்தது.

அந்த நேரத்தில் செய்ய பட்டது சரியே. திம்பு பேச்சு வார்த்தையிலே அவர்களுக்கு எச்சரிக்கை இளைஞர்களால் கொடுக்க பட்டது.

விலகுங்கள், சிங்களவனுக்க்கு முண்டு கொடுக்காதீர்கள்.

அமிர்தலிங்கம் கொலை புலிகளின் வளர்சியை கட்டு படுத்தவில்லை இன்னும் மக்கள் போராட்டமாக பலமாக வளர்ந்த்தது.

விமானம் ஓடும் வரை வளர்ந்தார்கள்.

சும்மா விவாதிக்கலாம், ஏன் பயங்கர வாதிகள் ஆக்கினார்கள் என்று.

ஆயுதம் ஏந்தின எல்லாரும் முதலாளித்துவ நாடுகளை பொறுத்த வரை பயங்கரவாதிகள் தான்.

மாறான ஒரு வரைவிலக்கினமும் கிடையாது.

சகோதர ஆயுத முரண்பாட்டால் கொல்லபட்ட உமாமகேஸ்வரன், சிறி சபாரத்தினம், பத்ம்நாபா மற்றும் இன்னும் பல போராளிகள் தமிழரின் மதிப்புக்கு உரியவர்கள்

அவர்கள் புலிகளுடன் மோதி இறந்தாலும் தமிழரின் வாழ்வுக்காக ஆயுதம் தூக்கி இறந்தவர்கள்.

அவர்களுடன் அரசியல் சாக்கடை அமிர்தலிங்கத்தை ஒப்பீட்டளவில் கூட ஏற்க கூடாது. அவரது மரனத்தை விவாதிப்பதே தேவை அற்றது.

தமிழரால் துக்கி எறியப்பட்டவர்கள்.

அவர்களுக்கெல்லாம் ஏன் விழா

எங்கேயோ வாசித்தது

அமிர்தலிங்கம் ஆயுதம் தாங்காத பிரபாகரன்

பிரபாகரன் ஆயுதம் தாங்கிய அமிர்தலிங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், மருதங்கேணி, விசுகு....மற்றும் அனைவருக்கும்,

உங்களிடம் சில கேள்விகள்:.

1) ஆயுதம் தரிக்காத தனிமனிதர் கொலைகளால் நான் அடைந்த பயன் என்ன?

2) இவ்வாறான கொலைகளால் எமது தேசிய விடுதலைப் போராட்டம் முந்தள்ளப்பட்டதா அல்லது பின்னோக்கி இழுத்துவிடப்பட்டதா??

3) தனிமனிதக் கொலைகளால் நாம் பெற்ற உடனடி, நீண்டகால நண்மைகளை சொல்ல முடியுமா?

4) 2009 இல் எம்மினத்தின்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கூட்டுப் படுகொலைகளுக்கும், எம்மால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் முன்னால் தனிமனித படுகொலைகளுக்கும் சம்பந்தம் ஏதுமிருக்கின்றதா?

5) சர்வதேசத்தில் நாம் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்படுவதன் காரணம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இவற்றிற்கான தெளிவான பதிலை நீங்கள் யாராவது தந்தால் நான் எழுதியதைத் தவறென்று ஒத்துக்கொள்கிறேன்.

அமிர் கொல்லப்பட்டது நிச்சயம் தீமைதான் என்றால், அந்தக் கொலை சரியாக இருக்கமுடியாது.

பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் ஒரு அரசியல்படுகொலையை யாரும் முடிவெடுப்பதில்லை. புலிகளும் அப்படித்தான். அந்தத் தருணத்தில் கொலையால் வரும் பின்விளைவுகளைவிட "தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்" என்பதற்கு இருந்த தடைக்கல் நீங்கவேண்டும் என்பது புலிகளுக்கு முக்கியமாகப் பட்டிருக்கும். அத்தோடு போராட்டம் வெற்றி பெற்று தமிழீழம் கிடைத்திருந்தால் இத்தகைய அரசியல் படுகொலைகள் விடுதலைக்கான விலைகள் என்று சொல்லப்பட்டிருக்கலாம்.

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்றதால்தான் இப்படிப்பபட்ட கொலைகள் நன்மை செய்யவில்லை என்று உணர்கின்றோம். புலிகளின் ஆயுதப் போராட்டம் தற்போதும் தொடர்ந்து இருந்தால் அமிரைப் பற்றி யார்தான் (த.தே.கூ உட்பட) கதைக்கப்போகின்றார்கள்?

நன்றி கிருபன்

ரகு ஐயாவுக்கு

போராட்டத்தோடு பயணித்தவர்கள் கேட்கம் கேள்விபோல் தெரியவில்லை.

புலிகளைக்கேட்கமுன் எம்மை நாம் கேட்கவேண்டிய கேள்வியிது. என்னைக்கேட்டால் கிருபன் சொன்னதுபோல் தடைகளை அகற்ற வேண்டிய தேவையிருந்தது அத்தருணத்தில். நான் இங்கு முன்பே எழுதினேன் அமிருக்கு தலைமை தாங்கும் தகுதியை தேர்தல்கள் மூலம் தமிழ் மக்கள் மறுத்திருந்தனர். எனவே தமிழ் மக்களுக்காக பேசும் தகுதியை அவர் நீங்கள் குறிப்பிடும் ஜனநாயக வழி மூலமே மக்கள் நிராகரித்திருந்தனர்.

இவர் எமக்காக பேசக்கூடாது இவரைத்தடுத்தாக வேண்டும் அதையும் மீறிச்செல்கின்றார் இவரைத்தண்டித்தாக வேண்டும் என்று நான் உட்பட தமிழ்மக்கள் அங்கலாய்த்தபோதே அவர் கொல்லப்பட்டார். எமக்கான ஒரு தடை நீங்கியதாகவே நாம் நினைத்தோம்.

ஏனெனில் கிருபன் சொன்னதுபோல் தமிழ் ஈழமே எமது இலட்சியமாக இருந்தது. இன்றும் இருக்கிறது.

அந்தவகையில் இப்படிப்போன்றவர்களை அழிக்க தலைவர் கரும்புலிகளையும் பயன்படுத்தியிருந்தார். அதை வைத்துப்பார்க்கும்போதாவது தங்களுக்கு புரியும் என்று நினைக்கின்றேன் எவ்வளவு பெரிய தடையாக அவர்கள் இருந்தால் தலைவர் கரும்புலிகளை வைத்து அத்தடைகளை அகற்ற நினைத்திருப்பார் என்று.

அத்துடன் முள்ளிவாய்க்காலுடன் எல்லாம் முடிந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. முள்ளிவாய்காலிலிருந்து எம்மிடம் கொடுக்கப்பட்ட போராட்டத்தை நாம் இன்னும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தாமல் அதுவரை ஒடிவந்து தடி கொடுத்தவனை ஆராய்ச்சி செய்து கொண்டு காலத்தை வீணடிக்கின்றோம். அதற்குள் எம்மோடு போட்டிக்கு ஓடியவன் பல நூறு கிலோமீற்றர் ஓடியதையும் கவனிக்காது வாழாவிருக்கின்:றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

...முள்ளிவாய்காலிலிருந்து எம்மிடம் கொடுக்கப்பட்ட போராட்டத்தை நாம் இன்னும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தாமல் அதுவரை ஒடிவந்து தடி கொடுத்தவனை ஆராய்ச்சி செய்து கொண்டு காலத்தை வீணடிக்கின்றோம். அதற்குள் எம்மோடு போட்டிக்கு ஓடியவன் பல நூறு கிலோமீற்றர் ஓடியதையும் கவனிக்காது வாழாவிருக்கின்றோம்.

thumbsup.gif

போராட்டப் பந்தயத்தில் பின்னோக்கிப் பார்க்கலாம் தமக்கு முன்னே யாரும் இல்லாத பட்சத்தில்..

ஆனால் இரண்டு வருடங்கள் கழித்தும் ஒருத்தருக்கொருத்தர் காயங்களை குத்திக்கொண்டு குந்தியிருந்தால் காலம் கனியும் சந்தர்ப்பம் தவறலாம். :(

.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அஹிம்சை வாதிதான், அவர் அரசியல் தலைவர்களை கொல்லவில்லை தான்; எனவே அவர் மக்கள் அவரை தாமே குற்றம் சொல்லவில்லை. அத்துடன் மிக முக்கியமாக மக்களில் பெருந்தொகையினர் கொல்லப்பட்டோ மிச்சம் உள்ளவர்கள் ஊனமாகவோ இல்லை. இதுதான் முக்கிய விடயம். இன்னும் சீனா போன்ற அமெரிக்காவுக்கு சவால் விடக் கூடிய பலமிக்க அரசுக்கு எதிராக போராடும் வலுவுடன் தான் இருக்கின்றனர். இந்த வலு முற்றாக அழிக்கப்பட்டு ஈற்றில் சீனாவின் காலடியில் எம்மைப் போல பிச்சைக் காரராக திபெத்த்தியர் தள்ளப் பட்டால் தலாய்லாமாவின் இந்த அஹிம்சை போக்கு அவரது மக்களால் மீள் பார்வைக்குட்படும்;

தலாய் லாமா சீனாவுக்கு எதிராகப் போராடுகிறாரா இல்லை வெறும் சவுண்ட் விடுகிறாரா என்பதுதன் இங்கே கேள்வி? :D

இந்தியாவை நம்பி அரசியலில் இறங்கிய தலாய் லாமாவின் திபெத் விவகாரம் இன்று இந்தியா சீனா அளவில்தான்.. அதுவும் அதிகாரிகள் மட்டத்தில்தான் நிற்கிறது..! ஆனால் எமது விவகாரம் சகோதரப் படுகொலை அமீர் படுகொலைகளையெல்லாம் தாண்டி ஐநா வாசலில் நிற்கிறது..! இதுதான் வித்தியாசம்..! :rolleyes:

மக்கள் இறப்பு, ஊனம் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள்..! இருபதினாயிரம் போராளிகள் உயிரிழந்து, மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்துவிட்ட நிலையில், நான்காம் ஈழப்போரை சிங்களவன் ஆரம்பித்த நிலையில் ஏன் புலிகளை போர் வேண்டாம் என்று நாங்கள் யாரும் நிறுத்தவில்லை?? முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் இறந்தவர்கள் யாரும் மனிதர்கள் இல்லையா? இப்போதுமட்டும் என்ன புதிய கரிசனை? :rolleyes:

ஆக, மீள்பார்வை என்று இங்கு ஒன்றும் இல்லை..! போராட்டம் முடிவுற்றதாகக் கருதினால்மட்டுமே மீள்பார்வை தேவை. ஆயுதப் போராட்டம் முடிவுற்றதை வைத்து மீள்பார்வை எனத் தொடங்குவோமானால் அது அரை அவியலாகத்தான் முடியும்..! ஒன்றில் தமிழ் மக்கள் விரும்பும் தீர்வு வரவேண்டும்..! இல்லை சிங்களவனுடன் இணக்க அரசியலுக்கு எல்லோரும் உடன்பட வேண்டும்..! இவையிரண்டும் நடக்காத பட்சத்தில் மீள்பார்வை இப்போது அவசியமற்றது..! :unsure:

ஆன் சாங் சுகி, ஒரு இனத்தின் விடிவுக்காக போராடுபவர் அல்ல. மியான்மாரின் சனநாயகத்துக்காக, அந்த நாட்டின் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடுபவர். அவரது விடுதலையே ஒரு பெரும் மைல் கல்; அடக்குமுறையாளர்களால் மிக இலகுவாக வாழ்நாள் பூரா சிறையில் வைத்திருக்க கூடிய ஒருவர் விடுதலை ஆவது பெரிய விடயம். நிச்சயம் மியான்மார் சனநாயக ஆட்சிக்குட்படும் நாடாக மாறும்

உங்களின் விவாதம் என்னவென்றால் சர்வதேச ஆதரவு ஒன்றையும் கொண்டு வரப்போவது இல்லை, சர்வதேச ஆதரவு எமக்கு தேவை இல்லை. ஏனெனில் தலாய்லாமாவுக்கும் ஆங் சாங் சுகியும் சர்வதேச ஆதரவு இருந்தும் இன்னும் வெற்றி பெறவில்லை. ஆகவே அவர்களை போல இல்லாமல் ;எவரின் ஆதரவும் இல்லாமல் சொந்த காலில் எம்மால் நின்று முன்னர் மாதிரி இலட்சக்கணக்கானோரை பலி கொடுத்து மீண்டும் தோற்க வேண்டும் என்று சொல்கின்றீர்கள் !!

ஆன் சாங் சுகி விடயம் இன்னும் கேவலம்..! ஜனநாயகப் பண்புகளைக் கொண்டிருந்தால் மேற்குலகம் தீர்வுகளை வாரி வழங்கிவிடும் என்கிற வாதத்தை உடைப்பதாக இருக்கிறது..! :unsure: பல ஆண்டுகளாக வெறும் ஜனநாயகம் வேண்டிப் போராடுகிறார். நாட்டைப் பிளவுபடுத்தக் கேட்கவில்லை..! ஆனால் என்ன நடக்கிறது? எண்ணை இல்லை.. அதனால் உதவியும் இல்லை..! :D

அதே நேரத்தில் மத்தியகிழக்குப் பகுதி முழுவதும் ஜனநாயகம் காக்க நேட்டோப் படைகள் அதிரடி..! :wub:

இப்போது நினைத்துப் பாருங்கள்..! ஜனநாயக வழியில் எண்ணையில்லாத நாங்கள் போராடியிருந்தால் தென் சூடான் மாதிரிப் பிரிந்திருப்போமா? அல்லது திபெத் மாதிரி ஒப்புக்குச் சப்பாணி ஆகியிருப்போமா? :rolleyes:

அப்படியானால் எண்ணையில்லாத நாங்கள் எவ்வாறு சுதந்திரம் அடைவது என்று கேள்வி எழுகிறது..! எண்ணையில்லாமல் சுதந்திரம் அடைந்தவர்களுக்கு உதாரணங்கள் கிழக்கு திமோர், கொசொவொ, பொஸ்னியா இத்தியாதி.. அங்கெல்லாம் ஐநா தலையிடவேண்டி வந்தது.. போர்க்குற்றம் முக்கிய காரணி..! :rolleyes:

இப்போதுள்ள கேள்வி.. இந்தியப்படைகளுடன் போராடியபோது முள்ளிவாய்க்கால் போல் ஒதுங்காது காட்டுக்குள் போனார்கள்..! நான்காம் ஈழப்போரில் முள்ளிவாய்க்காலுக்குள் ஒதுங்கியது ஏன்? :rolleyes: அவ்வளவு தெளிவற்றவர்களா? யாருடன் மோதினார்கள்.. எங்கே போராட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்தால் விடை கிடைக்கும்..!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், மருதங்கேணி, விசுகு....மற்றும் அனைவருக்கும்,

உங்களிடம் சில கேள்விகள்:.

1) ஆயுதம் தரிக்காத தனிமனிதர் கொலைகளால் நான் அடைந்த பயன் என்ன?

2) இவ்வாறான கொலைகளால் எமது தேசிய விடுதலைப் போராட்டம் முந்தள்ளப்பட்டதா அல்லது பின்னோக்கி இழுத்துவிடப்பட்டதா??

3) தனிமனிதக் கொலைகளால் நாம் பெற்ற உடனடி, நீண்டகால நண்மைகளை சொல்ல முடியுமா?

4) 2009 இல் எம்மினத்தின்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கூட்டுப் படுகொலைகளுக்கும், எம்மால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் முன்னால் தனிமனித படுகொலைகளுக்கும் சம்பந்தம் ஏதுமிருக்கின்றதா?

5) சர்வதேசத்தில் நாம் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்படுவதன் காரணம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இவற்றிற்கான தெளிவான பதிலை நீங்கள் யாராவது தந்தால் நான் எழுதியதைத் தவறென்று ஒத்துக்கொள்கிறேன்.

1. ஆயுதம் தரிக்காதவர் என்பதற்காக அவர் நியாயமானவர் என்பதற்குரிய காரணங்களை நீங்கள் முன் வைக்க முடியுமா....??! ஆயுதம் தாங்கியவர்களை விட ஆயுதம் தாங்காத தலைவர்களும்.. கொள்கை வகுப்பாளர்களுமே.. மிகக் கொடிய மனிதப் படுகொலைகளை இந்தப் பூமிப் பந்தில் நிகழ்த்தி இருக்கின்றனர். அதில் ராஜீவ் காந்தி.. மகிந்த ராஜபக்ச.. சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரரனதுங்க.. அமிர்தலிங்கம்.. யோகேஸ்வரன்.. ஆனந்த சங்கரி என்று பலரும் அடங்குவர்.

ஆயுதம் தரிக்காத அரசியல்வாதிகளின் சுயநலமிக்க.. தவறான வழிகாட்டலினாலும்.. தவறான கொள்கைகளாலும் தான் எமது இனம் 1948 இலேயே சுதந்திரத்தை பெற முடியாது போனது. ஒருவேளை அவர்களை அன்று அகற்றி இருந்தால்.. நாமும் பிரித்தானியர்களிடம் பேரம் பேசி.. ஜின்னா பாகிஸ்தானை உருவாக்கியது போல... தமிழர் தேசத்தை உருவாக்கி இருக்கலாம். அதற்கான வாய்ப்புக்கள் கணிசமாக இருந்துள்ளன. ஆனாலும் அந்தச் சந்தர்ப்பங்கள் இல்லாமல் செய்யப்பட்டு வெறும் தற்புகழ்ச்சிக்காக ஒரு இனம் காட்டிக் கொடுக்கப்பட்டு அதன் தனித்துவம் அரசியல் உரிமை அனைத்தையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பின் தான் ஆயுதப் போராட்டம் முளை விட்டது என்பதை மறக்க வேண்டாம்.

2. இவை கொலைகள் அல்ல. தடை நீக்கிகள். மக்களை தேசத்தை தவறான பாதையில் கொண்டு செல்ல முயன்று கொண்டிருக்கிறீர்கள் என்று அமிர்தலிங்கம் குழுவினருக்கு பல தடவைகள் பல தரப்பினராலும் எச்சரிக்கை தரப்பட்டும்.. அவர்கள் ஒரு தூர நோக்கற்று செயற்பட்டு மீண்டும் மீண்டும் இனத்தின் விருப்புக்கு மாறான முடிவுகளை முன்னிறுத்தி.. தங்களின் அரசியல் அதிகார ஆசைக்கு தீனி போடும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதற்காக சொந்த இனம் அழிவைச் சந்தித்துக் கொண்டிருந்த போதும்.. அதை மறைத்து அழிவைத் தந்தவர்களுக்கே புகழ்மாலையும் சூடிக் கொண்டிருந்ததோடு.. போர்க் குற்றங்களை வெகு சாமர்த்தியமாக மறைக்கவும் செய்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையானது.. மக்களின் விருப்பை அறிந்து தலைவர்கள் செயற்பட வேண்டும் என்ற செய்தியை திடமாகக் கொண்டு சென்றது. மக்களின் விருப்புக்குப் புறம்பாக தலைவர்கள் செயற்பட்டால் அவர்களை மக்கள் தேர்தலில் மட்டுமல்ல.. பிற வழிகளிலும் தண்டிக்க தயங்கமாட்டார்கள் என்ற செய்தியை அது கொண்டு சென்றது.

3. உடனடி நன்மைகள்.. எதிரிக்கு துதிபாடி அவனுடைய பேரினவாத.. பிராந்திய நலன்களை செயற்படுத்தும் முகவர்களாக இருந்து இனத்தின் உரிமைகளை விலை பேசிக் கொண்டிருந்த தலைமைகள் நீக்கப்பட்டு.. இனப்பற்றுள்ள தலைவர்கள் அவர்களைப் பிரதியீடு செய்ய சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.

நீண்ட கால நன்மை. இன்று எம் மக்களில் பலர் தமிழீழத்தை உணரவும்.. அதன் சாத்தியப்பாட்டை தரிசிக்கவும் ஒரு சந்தர்ப்பம் உருவாக்கப்பட வாய்ப்பானது. அமிர்தலிங்கங்கள் தேர்தல் மேடையில் பேச்சில் கண்ட தமிழீழத்தை பிரபாகரன் நடைமுறையில் செய்து காட்டியவர். அமிர்தலிங்கம் இருந்திருந்தால் நிச்சயம்.. அதையும் விலை பேசி.. தடுத்தே இருப்பார். இன்று தமிழ் தேசிய கொள்கையும்.. தமிழீழ உணர்வும் விடுதலையின் தேவையும் மக்களிடம் உணரப்படவும் வலுப்பெறவும்.. இந்தத் தடை நீக்கிகள் அகற்றப்பட்டமையும் ஒரு காரணமாகும். இது நீண்ட கால நோக்கில் எமது விடிவுக்கான பாதையை விரைவு படுத்தக் கூடும். அதனை சரியாக மக்கள் பாவிக்க வேண்டும்.

4. இருக்கிறது. அமிர்தலிங்கத்தின் கூட்டாளிகள் எவரும் முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்தேறிக் கொண்டிருக்கும் போது வாயே திறக்கவில்லை. அதிலும் ஆனந்த சங்கரி ஒரு படி மேலே போய் இழப்புக்களைப் பார்த்தால் புலிகளை அழிக்க முடியாது.. புலிகளை அழிக்காமல் சிறீலங்காவில் குறிப்பாக வடக்குக் கிழக்கில் ஜனநாயகம் திரும்பாது என்று சொன்னவர். தமிழ் மக்கள் சிறீலங்காவில் ஜனநாயகம் வேண்டிப் போராடவில்லை. தமிழ் மக்கள் தங்கள் சுயநிர்ணய அரசியல் உரிமை.. தாயகம் போன்ற அடிப்படை மனித தேவைகளைக் கேட்டே போராடினர். தாயகமே இல்லை.. அரசியல் உரிமையே இல்லை.. அந்த இடத்தில் எப்படி ஜனநாயகம் செயற்பட முடியும். ஆனந்த சங்கரி வெளிப்படுத்தும் இதே கொள்கையை தான் அமிர்தலிங்கமும் கொண்டிருந்தார். நாம் சுதந்திர தாயகம் கேட்டுப் போராடினோமே தவிர ஜனநாயகத்தை சிறீலங்காவில் பாதுகாக்கப் போராடவில்லை. ஜனநாயகம் ஒன்றும் சிறீலங்காவில் செத்துக் கொண்டும் இருக்கவில்லை. ஆக.. ஜனநாயக உச்சரிப்பை முன்னிலைப்படுத்தி.. எமது போராட்டத்தை மலினப்படுத்தி.. அதை ஜனநாயக விரோதமாகக் காட்டி... அதன் மீது பயங்கரவாத முலாம் பூச முன்னின்றவர்களில் முதன்மையானவர்கள்.. இந்த மிதவாத தமிழ் சுயநல அரசியல்வாதிகள். டக்கிளஸ் தேவானந்தா.. கருணா.. பிள்ளையான்.. வரதராஜப் பெருமாள் போன்ற ஆயுத தாரிகளை உலகம்.. அரசு சார்ப்பு ஆயுதக் குழுக்கள் என்று இனங்கண்டு கொண்ட பொழுதும்.. இந்த மிதவாதிகள் என்போர் ஜனநாயகப் போர்வைக்குள் இருந்து கொண்டு.. தமிழீழ விடுதலைப் புலிகள் ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள் என்று சித்தரித்துக் கொண்டிருந்ததோடு.. எதிரிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு செயல்வடிவமும் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

அண்மையில்.. ஆனந்த சங்கரி விடுத்துள்ள அறிக்கையில்.. முள்ளிவாய்க்கால் படுகொலைகளை மறப்போம்.. மன்னிப்போம்.. சிங்கள அரசோடு சேர்ந்து பயணிப்போம்.. என்று கூறி இருந்தார். இதையே தான் அமிர்தலிங்கமும்.. இந்தியப் படைகளோடு நின்று கொண்டு சொன்னார்..! ஆக.. நீங்கள் ஆனந்த சங்கரியின் மறப்போம்.. மன்னிப்போமை.. ஏற்று ஒரு இனப்படுகொலையாளனோடு சேர்ந்து பயணிக்க தயாராக இருக்கிறீர்களா..??! அப்படி என்றால்.. அதனால் எமது இனம் அடையப் போகும்.. குறுகிய கால.. நீண்ட கால நன்மைகள் என்ன..???!

அமிர்தலிங்கத்திற்கும்.. ஜோசப் பரராஜசிங்கத்திற்கும் என்ன வேறுபாடு.. ஏன் அமிர்தலிங்கத்தை தூற்றிய மக்கள்.. ஜோசப்பை போற்றினார்கள்.. ஜோசப் பரராஜசிங்கத்தை சிங்களம் கொன்றதை இட்டு ஏன் ஒரு மீள்பார்வையை நீங்கள் செய்யவில்லை.. அமிர்தலிங்கம் மட்டும் தானா.. ஆயுதம் தரிக்காது நின்று கொல்லப்பட்டார்... இல்லையே..???!

அடிப்படையில் உங்கள் எண்ணத்தில் ஒரு நிரந்தரப் பதிவை உண்டு பண்ணி இருக்கிறீர்கள். புலிகள் செய்தவை.. கொலைகள்.. வீணானவை என்று. அதில் இருந்து கொண்டு.. நிகழ்வுகளை உங்களுக்கு ஏற்ற மாதிரி வரிசைப்படுத்துகிறீர்களே தவிர.. ஆயுதம் ஏந்தாத.. பலரை சிங்களம்.. இந்தியம்.. தமிழ் கூலிகளை வைத்து போட்டுத் தள்ளி இருப்பதை.. அதன் பின்னணியில் ஆயுதம் தரிக்காத அமிர்தலிங்கங்கள் இருந்ததை நீங்கள் இன்னும் அப்பாவித்தனமாக இனங்காணாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது..!

தமிழ் போராளி அமைப்புக்களைச் சேர்ந்த ஆரம்ப கால செயற்பாட்டாளர்களை காட்டிக் கொடுத்ததில் இருந்து அமிர்தலிங்கம் குழுவினர் மீது பலமான இனத் துரோக செயற்பாட்டுக் குற்றங்கள் பதிவாகி உள்ளன. அவற்றிற்கு நீங்கள் அவர்களுக்கு வழங்கும் தீர்ப்புத் தான் என்ன..?????!

5. சர்வதேசத்தின் முன் நெல்சன் மண்டேலா பயங்கரவாதியாக நின்ற அதே காரணங்கள் தான் எம் மீதும். மண்டேலா மீதான ஒரு மீள் பார்வை என்ற போர்வையில் அவர் மீது இன்று இதே சர்வதேசம் பயங்கரவாத முலாம் பூசி.. வழங்கிய விருதுகளையும்.. நோபல் பரிசையும் வாபஸ் வாங்குமா...???! இல்லவே இல்லை. நாமும் சரியான சந்தர்ப்பத்தில் சரியான வாய்ப்புக்களை பாவித்து.. மண்டேலாவின் நிலைக்கு வரும் போது.. சர்வதேசம்.. எமக்கும் விருது வழங்கலாம். விடிவையும் தரலாம். மீள் பார்வை என்ற போர்வையில்.. எம்மை நாமே காட்டிக் கொடுத்து எதிரியின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த ஆட்சேர்ப்பதால்.. அது சாத்தியப்படாது. அது எமது இனத்தை மேலும் மேலும் பேரழிவுகளுக்குள்ளேயே தள்ளும்.

Edited by nedukkalapoovan

இந்த திரியில் நான் பற்ற வைத்த நெருப்பு சுமார் 111 பதில்களையும் தாண்டி கொழுந்து விட்டு எரிகின்றது :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் நான் பற்ற வைத்த நெருப்பு சுமார் 111 பதில்களையும் தாண்டி கொழுந்து விட்டு எரிகின்றது :)

ஹனுமான் லங்காபுரியை எரித்தார் நீங்கள் ........?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் நான் பற்ற வைத்த நெருப்பு சுமார் 111 பதில்களையும் தாண்டி கொழுந்து விட்டு எரிகின்றது :)

ங்கொக்காமக்கா.. :D நான்கூட நெடுக்கர்மாதிரி எழுத ஆரம்பிச்சிட்டன்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் நான் பற்ற வைத்த நெருப்பு சுமார் 111 பதில்களையும் தாண்டி கொழுந்து விட்டு எரிகின்றது :)

அமிரும் இதற்காகத்தான் தண்டனைக்காளானார்

(தவறான வழி நடாத்துதல்) :lol:

  • கருத்துக்கள உறவுகள்
:) இனி எழுத எதுவுமேயில்லை. கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் !!!

:) இனி எழுத எதுவுமேயில்லை. கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் !!!

அப்பாடா முடிவுக்கு வந்தாய்ச்சு.

மங்கை அக்காவோ ,மகனோ இவ்வளவு விவாதம் நடாத்தி இருக்கமாட்டார்கள்.

சேனாதியால வந்த வினை.

  • கருத்துக்கள உறவுகள்

:) இனி எழுத எதுவுமேயில்லை. கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் !!!

ரகுநாதன்.. நீங்கள் எமது விடுதலைப் போராட்டம் பற்றிய நல்ல புரிதலைக் கொண்ட ஒரு கள உறவு. உங்களால் இந்தத் தலைப்பும் செய்தியும் விரிவான ஒரு கருத்தியல் பகிர்விற்குள் கொண்டு செல்லப்பட்டமை நல்ல விடயமே ஆகும். கருத்தியல் பன்முகத் தன்மை என்பது ஜனநாயகத்திற்கு அழகோ இல்லையோ.. ஒரு இனம் பரந்து சிந்திக்க தலைப்படுகிறது என்பதை இனம் காட்டும். அது அந்த இனம் தனது இருப்பை உரிமையை நிலைநாட்ட உதவும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. :)

தங்களுக்கும் பிற கள உறவுகளுக்கும் இங்கு கருத்துப் பகிர்ந்தவன் என்ற வகையில் நன்றி.

Edited by nedukkalapoovan

மக்கள் இறப்பு, ஊனம் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள்..! இருபதினாயிரம் போராளிகள் உயிரிழந்து, மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்துவிட்ட நிலையில், நான்காம் ஈழப்போரை சிங்களவன் ஆரம்பித்த நிலையில் ஏன் புலிகளை போர் வேண்டாம் என்று நாங்கள் யாரும் நிறுத்தவில்லை?? முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் இறந்தவர்கள் யாரும் மனிதர்கள் இல்லையா? இப்போதுமட்டும் என்ன புதிய கரிசனை? :rolleyes:

ஏனெனில் நான்காம் ஈழப் போர் தொடங்கும் போது போராட்டத்தினை ஆதரித்த பெரும்பாலானோரை போல இது இறுதி யுத்தம் என்றும் அதன் பின் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கும் என்று நம்பி இருந்தோம். மூன்றாம் ஈழப் போரின் முடிவில் கிடைக்கபெற்ற இராணுவ அரசியல் வெற்றிகள் மற்றும் புலிகளின் இராணுவ பலத்தின் மீது இருந்த நம்பிக்கை, இலங்கை அரசின் ஆயுதப் படையினரின் செயல்திறன் மீதான அவநம்பிக்கை என்பன தீர்ககரமான வெற்றியை தரும் என்று நம்பியிருந்தோம். இவ்வளவு காலம் இறந்த போராளிகளினது சாவுக்கும் தியாகத்துக்கும் மக்களின் இழப்புக்கும் பெறுமதியான ஒரு விடை கிடைக்கும் என்று நம்பி இருந்தோம் .ஆனால் எம் எதிர்பார்ப்பு மிக கோரமான விதத்தில் நிறைவாகமால் போனது . இப்படி அனைத்தையம் இழந்து போராடும் மக்களின் வலு முற்றாக சிதைக்கப்பட்டு போகும் என்பதை எவரும் எதிர்பார்த்து இருக்கவில்லை. இப்படி ஒரு நிலையை அடைந்த பின் நாங்கள் முன்னர் செய்ததெல்லாம் சரி, அது பற்றிய எந்த மீள் பார்வையும் அவசியம் இல்லை என்பது மிகவும் தவறான ஒரு அணுகு முறை.

உங்களின் கருத்துகளின் சாராம்சம், இப்படி மீள் பார்வை செய்யும் செயலானது புலிகளினது போராட்டத்தினை கொச்சை படுத்தும் செயல் என்றும் , அவர்களின் தியாகத்தினை அவமதிக்கும் செயல் என்றும் அமைகின்றது. இந்தப் போக்கு மிக ஆபத்தானது. இலக்கை அடையாமல் பயணம் தடுக்கப் பட்டால் நிச்சயம் நாம் தெரிவு செய்த பாதையில் தவறு இருக்கின்றது என்றே பொருள். புதிய பாதை பற்றிய முன்னெடுப்புகளுக்கு முதல் தெரிவு செய்யப்பட்ட பாதையில் இருக்கும் பிழைகள் பற்றிய மீள் பார்வை மிக அவசியம். அது அவசியம் இல்லை என்றும் அதே பழைய பாதை தான் மீண்டும் இலக்கை அடைவதற்கு சிறந்ததென்றும் கூறுகின்ற உங்கள் கருத்து மிக ஆபத்தானது

ஆன் சாங் சுகி விடயம் இன்னும் கேவலம்..! ஜனநாயகப் பண்புகளைக் கொண்டிருந்தால் மேற்குலகம் தீர்வுகளை வாரி வழங்கிவிடும் என்கிற வாதத்தை உடைப்பதாக இருக்கிறது..! :unsure: பல ஆண்டுகளாக வெறும் ஜனநாயகம் வேண்டிப் போராடுகிறார். நாட்டைப் பிளவுபடுத்தக் கேட்கவில்லை..! ஆனால் என்ன நடக்கிறது? எண்ணை இல்லை.. அதனால் உதவியும் இல்லை..! :D

அதே நேரத்தில் மத்தியகிழக்குப் பகுதி முழுவதும் ஜனநாயகம் காக்க நேட்டோப் படைகள் அதிரடி..! :wub:

மத்திய கிழக்கு பகுதியில் நடக்கும் சனநாயக போராட்டமும் ஆங் சாங் சுகியும் சனநாயக போராட்டமும் வேறு வேறானவை. அதை ஊக்குவிக்கும் பிறச் சக்திகளும் வேறு வேறானவை. மியான்மாரில் 1990 இல் நடந்த பாராளுமன்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியை ஆட்சி அமைக்க விடாது இராணுவம் தடுத்தது/தடுக்கின்றது. இதற்கு எதிராக சுகி அவர்கள் போராட்டம் நடத்துகின்றார். நீங்கள் ஐயோ பாவம் என்று பரிதாபப் படும் அளவுக்கு அவரது போராட்டம் கேவலமான விதத்தில் அமைய வில்லை. பல நாடுகள் பொருளாதார ரீதியில் பல தடைகளை போட்டுக் கொண்டு அவருக்கு ஆதரவை வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இராணுவ ஆட்சி 2010 நடத்திய முறைகேடுகள் நிறைந்த தேர்தலையும் அதன் மூலம் தெரிவான அரசியலமைப்பினையும், அதில் வெற்றி பெற்ற சனாதிபதியையும் அங்கீகரிக்காமல் தான் இருக்கின்றன

அத்துடன் நீங்கள் சொல்லுவது போல வெறும் 'எண்ணெய்' மட்டுமே பிற நாடுகள் வேறு நாடுகளில் நடக்கும் போராட்டத்தினை ஆதரிக்க காரணமாக அமையாது. மக்கள் போராட்டத்தில் அண்மையில் வெற்றி பெற்ற துநீசியாவிலும், எகிப்திலும் எண்ணெய் வளம் இல்லை !! லிபியாவில் மட்டும் தான் மேலை நாடுகள் நேட்டோ வடிவில் தலையிடுகின்றன. பஹ்ரைனிலும், சிரியாவிலும் எண்ணெய் வளம் கொட்டிக் கிடந்தும் அவை தலையிடவில்லை. ஆகவே எண்ணெய் வளம் மட்டுமே மேலை நாடுகளின் ஆதரவை பெறக் கூடிய காரணி அல்ல

இப்போது நினைத்துப் பாருங்கள்..! ஜனநாயக வழியில் எண்ணையில்லாத நாங்கள் போராடியிருந்தால் தென் சூடான் மாதிரிப் பிரிந்திருப்போமா? அல்லது திபெத் மாதிரி ஒப்புக்குச் சப்பாணி ஆகியிருப்போமா? :rolleyes:

என்னுடைய கருத்தில் எப்போது நாம் சனநாயக வழியில் மட்டுமே போராடி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளேன்? இந்த திரியில் நான் சொல்வது ஆயுதம் தாங்காத அரசியல்வாதிகளை படுகொலை செய்த அரசியல் பிழையானது என்பதையே. இதே யாழில் ஒரு சில வாரங்களுக்கு முன் ஆயுதாரி பதம்னாபாவின் கொலை எனக்கு மிக மகிழ்வு தந்த ஒரு விடயம் என்றும் அதற்காக இன்றும் மகிழ்ச்சி அடைகின்றேன் என்றும் கூறி இருந்தேன்

அப்படியானால் எண்ணையில்லாத நாங்கள் எவ்வாறு சுதந்திரம் அடைவது என்று கேள்வி எழுகிறது..! எண்ணையில்லாமல் சுதந்திரம் அடைந்தவர்களுக்கு உதாரணங்கள் கிழக்கு திமோர், கொசொவொ, பொஸ்னியா இத்தியாதி.. அங்கெல்லாம் ஐநா தலையிடவேண்டி வந்தது.. போர்க்குற்றம் முக்கிய காரணி..! :rolleyes:

இதில் உங்களுடன் ஒத்து போகின்றேன். ஆனால் போர்க் குற்றம் மட்டுமே எமக்கு விடுதலையை தராது. சிங்களம் போர்க் குற்றச் சாட்டில் வகையாக மாட்டிக் கொண்டால் மகிந்தவையும், சரத்தையும், கோத்தாவையும் தாமே பலி கொடுத்தாவது தப்ப நினைக்கும். இந்த போர்க் குற்றத்தினை அரசியல் ரீதியான அறுவடை செய்ய தமிழ் தரப்பில் இன்று எந்த வகையான முயட்சியால் எடுக்கப் படுகின்றது சிந்தித்து பார்த்தால் பூச்சியம் தான் தெரிகின்றது

அமிரும் இதற்காகத்தான் தண்டனைக்காளானார்

(தவறான வழி நடாத்துதல்) :lol:

ஒரு விவாதத்தை ஆரம்பித்து வைப்பது என்பது தவறாக வழி நடாத்தல் என்று சொல்லும் உங்கள் அரசியல் அறிவை பார்க்க புல்லரிக்குதுங்கோ.

ரகுநாதன்.. நீங்கள் எமது விடுதலைப் போராட்டம் பற்றிய நல்ல புரிதலைக் கொண்ட ஒரு கள உறவு. உங்களால் இந்தத் தலைப்பும் செய்தியும் விரிவான ஒரு கருத்தியல் பகிர்விற்குள் கொண்டு செல்லப்பட்டமை நல்ல விடயமே ஆகும். கருத்தியல் பன்முகத் தன்மை என்பது ஜனநாயகத்திற்கு அழகோ இல்லையோ.. ஒரு இனம் பரந்து சிந்திக்க தலைப்படுகிறது என்பதை இனம் காட்டும். அது அந்த இனம் தனது இருப்பை உரிமையை நிலைநாட்ட உதவும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. :)

தங்களுக்கும் பிற கள உறவுகளுக்கும் இங்கு கருத்துப் பகிர்ந்தவன் என்ற வகையில் நன்றி.

நெடுக்சின் இந்த பார்வை மிகவும் ஆரோக்கியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி..

ஐ ஆம் வெரி ரையர்ட்..! :D

நான் சொல்லவரும் ஒரே விடயம்..!

காலம் ஒருநாள் மாறும் - நம்

கவலைகள் யாவும் தீரும்

வருவதை எண்ணி சிரிக்கின்றேன்

வந்ததை எண்ணி அழுகின்றேன்

:wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கர், மருதங்கேணி, விசுகு....மற்றும் அனைவருக்கும்,

உங்களிடம் சில கேள்விகள்:.

1) ஆயுதம் தரிக்காத தனிமனிதர் கொலைகளால் நான் அடைந்த பயன் என்ன?

2) இவ்வாறான கொலைகளால் எமது தேசிய விடுதலைப் போராட்டம் முந்தள்ளப்பட்டதா அல்லது பின்னோக்கி இழுத்துவிடப்பட்டதா??

3) தனிமனிதக் கொலைகளால் நாம் பெற்ற உடனடி, நீண்டகால நண்மைகளை சொல்ல முடியுமா?

4) 2009 இல் எம்மினத்தின்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கூட்டுப் படுகொலைகளுக்கும், எம்மால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் முன்னால் தனிமனித படுகொலைகளுக்கும் சம்பந்தம் ஏதுமிருக்கின்றதா?

5) சர்வதேசத்தில் நாம் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்படுவதன் காரணம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இவற்றிற்கான தெளிவான பதிலை நீங்கள் யாராவது தந்தால் நான் எழுதியதைத் தவறென்று ஒத்துக்கொள்கிறேன்.

டக்ளஸ்,கருணா போன்றவர்கள் கொல்லப்படவேண்டியவர்ளா இல்லையா?

இதற்கு உங்கள் பதிலைப் பொறுத்து நாங்களும் உங்களுக்குரிய பதிலை வழங்குகிறோம் அண்ணா.

(i´m sorry...

எல்லாம் முடிஞ்சதுக்கு பிறகா நான் வந்தேன்???? :lol: )

Edited by ஜீவா

நிழலி..

ஐ ஆம் வெரி ரையர்ட்..! :D

நான் சொல்லவரும் ஒரே விடயம்..!

காலம் ஒருநாள் மாறும் - நம்

கவலைகள் யாவும் தீரும்

வருவதை எண்ணி சிரிக்கின்றேன்

வந்ததை எண்ணி அழுகின்றேன்

:wub:

அப்பாடா...நானும் ரையர்ட்....இனி காணும் இந்த திரியில் ....

மற்றப் படி, உங்களின் பாட்டு என்னாலும் ஏற்றுக் கொள்ளப் படுகின்ற பாட்டு

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசத்தில் நாம் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்படுவதன் காரணம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

சர்வதேச பயங்கரவாத நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப புலிகள் நடக்காமல் அல்லது அடிபணியாமல் தமிழ் மக்களின் துணை மட்டுமே போதும் என்று புலிகள் இருந்தது.

உதாரணமாக இந்தியாவின் சொல் கேட்காத புலிகள் ராஜீவ் காந்தியின் கொலையை மட்டும் சாட்டாக வைத்து எப்படி தமிழ் மக்களை கொன்று குவித்து இருக்க முடியும் புலிகளை அல்லவா கொன்றிருக்க வேண்டும்??

மேற்கு நாடுகளுக்கு அரசியல் தஞ்சம் புகுந்த தமிழர்களில் ஏறத்தாள அனைவரும் புலிகளால் தமக்கு பிரச்சனை உண்டு என்று கூறி தமது சுயநல வாழ்வை மேம்படுத்தியது.இதனை சாதகமாக பயன்படுத்திய சிறிலங்கா அரசு கதிர்காமர் என்ற தமிழர் மூலம் எமது கண்ணை எமது விரல் கொண்டு குற்றினார்கள்.இவர்களுடன் ஒட்டுக்குழுக்களின் பங்கும் மிக முக்கியமானது.

புலிகளின் ஆயுத ஆள் பலம் எதிரிகளுடன் ஒப்பிடும் போது குறைவானது. ஆனால் எதிரியை தற்கொலை தாக்குதல்கள் மூலம் பலத்த வெற்றியை தந்திருந்தார்கள்.இது ஆயுதங்கள் மூலம் அடக்கி ஆளும் உலகுக்கு (குறிப்பாக மேற்குலகுக்கு) மிகுந்த சவாலாகவே இருந்தது.

இறுதியாக புலிகளின் அசாரதாரண தாக்குதல்கள் (அனுராதபுரத்தை குறிப்பிடலாம்) வேறு நாட்டு விடுதலை இயக்கங்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கக்கூடாது என்பதில் மேற்கு நாடுகள் ,இந்தியா என்பன புலிகளை எப்படியும் முறியடிக்க வேண்டும் என்றே இருந்தன.குறிப்பாக புலிகளின் தற்கொலை வான் தாக்குதல்கள் இரட்டை கோபுர தாக்குதல் போல் கூடிய விரைவில் அமையும் என்பது இந்தியாவுக்கு தெரியும்.அத்தோடு அவர்களின் அணு உலைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியானது என்று இந்தியா நினைத்து இருக்கலாம்.( இந்தியா தமிழர்களை எதிரியாக பார்ப்பதற்கு இது ஒரு சிறு காரணம்)

அப்பாடா........

இன்னமும் தலை சுத்துது...........

வாறன் வாறன்.........என்ன? ஏதோ கதைச்சனாங்கள் இல்லையே?......

எதிலை நிண்டநாங்கள் என்டாள்.....பொறுங்கோ பொறுங்கோ....... எனக்கு தெரியும்....... முள்ளி வாய்க்காள்..........

ஓ ஓ அங்கைதானே ............. அந்த பெரிய கதை...... கடைசி 100,000 தமிழ் சனம்.............

அதுக்கு என்ன செய்ய வேண்டும்?.............ம். ம்......

உண்மையாய் தலை சுத்துது..........

பழரசம் ஒருத்தரும் குடுக்க மாட்டினமோ

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.