Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமிர்தலிங்கம் கொலையின் பின்னணி என்ன?

Featured Replies

Amirthalingam.gif

(சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு)

பிரேமதாசாவும் விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தைத் தொடங்கியதை குலைத்து பிரேமதாசாவுக்கு கடும் நெருக்கடிகளை உருவாக்க திட்டமிட்டது இந்திய உளவுத் துறை! தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இருவரும் 1989 ஜூலை 13 ஆம் தேதி கொழும்பில் அமிர்தலிங்கம் வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். அமிர்தலிங்கம் அவர்களோ, யோகேஸ்வரனோ, ஆயுதம் தாங்கிய போராளிகள் அல்ல. காந்திய வழியைப் பின்பற்றியவர் அமிர்தலிங்கம். அவர் செய்த ஒரே தவறு, இந்திய உளவுத் துறையை முழுமையாக நம்பியதுதான். தமிழ் ஈழ விடுதலையை இந்தியா மீட்டெடுத்து, தன்னிடம் ஒப்படைக்கும் என்று அவர் மலை போன்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தார். ஆனால் நடந்ததோ வேறு.

அமிர்தலிங்கம் - யோகேஸ்வரன் ஆகிய இரு தலைவர்களையும், அவரது வீட்டில் சுட்டுவிட்டு தப்பி வெளியே ஓடி வந்த 3 பேரை அமிர்தலிங்கம் வீட்டில் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட காவலர்கள் சுட்டுக் கொன்றனர். இந்தக் கொலைப் படைக்கு தலைமை தாங்கி காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டவர் விசு, அலாய்சியஸ், விக்னம் ஆகிய மூன்று பேர். இதில் விசு - யார்? மாத்தையாவின் வலதுகரமாக செயல்பட்டவர்.

இந்திய உளவுத் துறையின் வலையில் சிக்கியிருந்த மாத்தையா - பிரேமதாசாவுடன் புலிகள் பேச்சுவார்த்தையைக் குழப்பிட இந்திய உளவுத் துறையின் திட்டத்தை ஏற்று நடத்திய கொலைதான் இது! இதைச் செய்தது யார் என்பது பற்றி பத்திரிகைகளிலே குழப்பமான செய்திகள் வந்தன. ‘வீரகேசரி’ நாளேடு விடுதலைப் புலிகள், அமிர்தலிங்கத்தைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுவிட்டதாக செய்தி வெளியிட்டது. அதே நாளில் கொழும்பிலிருந்து வெளிவந்த ஆங்கில நாளேடுகள், இந்தக் கொலையில் தங்களுக்கு தொடர்பில்லை என்று புலிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர் என்று செய்தி வெளியிட்டன. ஒரே நாளிலேயே இரண்டு செய்திகளும் வெளி வந்ததுதான் வேடிக்கை.

“விடுதலைப் புலிகள் தமிழர்களைக் கொல்லும் சக்தியுடனேயே இருக்கிறார்கள். இலங்கை அரசால் விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, இந்திய ராணுவம் வடக்கு - கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேறுவது ஆபத்து” என்ற கருத்தை உருவாக்குவதே உளவு நிறுவனங்களின் திட்டம். இந்தத் திட்டத்தை அப்படியே ஜே.என். தீட்சத்தும் தனது நூலில் (Assignment in Colombo) வழிமொழிந்து அமிர்தலிங்கம் கொலையை நடத்தியது விடுதலைப் புலிகளே என்று எழுதினார்.

“இலங்கைத் தமிழர்களை ஜனநாயகப் பாதைக்கு அமிர்தலிங்கம், திருப்பி விடுவார் என்ற அச்சத்தின் காரணமாகவே விடுதலைப் புலிகள் அமிர்தலிங்கத்தைக் கொலை செய்தார்கள்” என்று ஜே.என். தீட்சத் உண்மையை மறைத்து எழுதினார். கொன்றது விடுதலைப் புலிகள் அல்ல; இந்திய உளவு நிறுவனம் - மாத்தையாவைப் பயன்படுத்தி நடத்திய சதி என்பது தெரிந்திருந்தும் புலிகள் மீதே பழி போடும் நோக்கத்தையே பிரதிபலித்தார்.

அமிர்தலிங்கத்தைச் சுட்ட 3 பேரும் தப்பி வந்தபோது, அமிர்தலிங்கத்தின் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதும், அவர்கள் மாத்தையாவின் ஆட்கள் என்பதும் உண்மை. இது பற்றி மற்றொரு ஆதாரத்தை நான் முன் வைக்க விரும்புகிறேன். தமிழ் ஈழத்திலே நடந்த அரசியல் படுகொலைகள் பலவற்றுக்கும் காரணமாக இருந்த இந்திய உளவுத் துறை, அத்தனை பழிகளையும் விடுதலைப் புலிகள் மீதே போட்டதும், இங்கே பார்ப்பன ஊடகங்கள் அதையே மீண்டும் மீண்டும் எழுதி, உண்மையாக உறுதி செய்ததும், பாமர மக்களை நம்பச் செய்ததும், எவ்வளவு மோசமான பார்ப்பன சூழ்ச்சி என்பதை, நாம் புரிந்து கொள்ள வேண்டும். ராஜீவ் சர்மாவும் கூசாமல் இந்த நூலில் அதே பழியைத்தான் போடுகிறார்!

ஒரு மகத்தான விடுதலை இயக்கத்தின் மீது, இப்படி புழுதிவாரி தூற்றி, களங்கப்படுத்திய இந்த கயமைப் பிரச்சாரங்களுக்கு பதில் கூறுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றே கருதுகிறேன். அவர்களோ விடுதலைப் புலிகள் மீது எந்த ஆதாரமும் இல்லாமல் அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள். அதே வழியில் எந்த ஆதாரங்களும் இல்லாமல், ஏதோ, உணர்வுகளின் அடிப்படையில் நாம் அவற்றை மறுக்கவில்லை. மாறாக, மறுப்புகளை உரிய ஆதாரங்கள் தரவுகளுடன் தான் மறுக்கிறோம். அமிர்தலிங்கத்தை விடுதலைப் புலிகள் ஏன் கொலை செய்ய வேண்டும்? தீட்சத் கூறுவதுபோல் ஈழத் தமிழர்களின் கருத்துகளை அப்படியே தன் பக்கம் திருப்பிவிடக் கூடிய செல்வாக்குள்ள தலைவராகத் தான் அமிர்தலிங்கம் இருந்தாரா?

அந்தக் காலக்கட்டத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் முழுமையாக விடுதலைப் புலிகளிடமே தங்கியிருந்தது என்ற உண்மை சிறு குழந்தைகளுக்குக்கூட தெரியுமே! அமிர்தலிங்கத்தையும், யோகேஸ்வரனையும் விடுதலைப் புலிகள் கொல்வதற்கு ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறியாக வேண்டிய கட்டாயம் - உளவு நிறுவனத்துக்கும், ஜெ.என். தீட்சத்துக்கும் இருந்தது. எனவே சொத்தையான எவருமே ஏற்றுக் கொள்ள முடியாத காரணத்தை ஜே.என். தீட்சத் முன் வைக்கிறார்; அவ்வளவுதான்.

அமிர்தலிங்கத்தை சுட்டுக் கொன்றவர்கள் பற்றிய விவரங்களை அமிர்தலிங்கத்தின் வரலாற்றை எழுதிய டி.சபாரத்தினம் விளக்கிக் கூறியுள்ளார். டி.சபா ரத்தினம், 1996 ஆம் ஆண்டு, அமிர்தலிங்கத்தின் வரலாற்றை எழுதி ‘The Murder of a Moderate’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். அதில் அமிர்தலிங்கம் கொலை பற்றி எழுதப்பட்டுள்ளது. என்ன?

“அமிர்தலிங்கத்தைக் கொன்றவர்கள், எந்த அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதில் பெரும் குழப்பமே நீடிக்கிறது. இதில் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. அமிர்தலிங்கத்தை சுட்ட விசு, வவுனியாவுக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுக்கு தலைவராக இருந்தவர். அதுவரை அந்தப் பதவியில் இருந்த தினேஷ் என்பவர் காணாமல் போன பிறகு நியமிக்கப்பட்ட விசு, அதன் பிறகு, விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி விட்டதாகக் கூறுகிறார்கள். வேறு சிலர், “இல்லை, விசு, அப்போதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில்தான் இருந்தார்” என்றார்கள். லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் தலைமையகம் அமிர்தலிங்கம் கொலையில், விடுதலைப் புலிகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிக்கையே வெளியிட்டது. புலிகளின் அந்த அறிக்கை அமிர்தலிங்கம், கொலையைக் கண்டித்தது. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையை விரும்பாத சக்திகளே, இந்தக் கொலையை செய்து, விடுதலைப் புலிகள் மீது பழிபோட்டு, களங்கம் கற்பிக்கின்றன என்றும் அந்த அறிக்கை குற்றம் சாட்டியது. அத்துடன், “தமிழர் அய்க்கிய விடுதலை முன்னணி தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரின் மறைவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் ஆழ்ந்த கவலையுடன் துயரத்தை வெளிப்படுத்திக் கொள்கிறது. சில ஈவிரக்கமற்ற கொடூர சக்திகள் விடுதலைப் புலிகளை களங்கப்படுத்தி, அரசுக்கும் புலிகளுக்குமிடையே நடக்கும் பேச்சு வார்த்தையை சீர்குலைக்க திட்டமிடுவதாகவே சந்தேகிக்கிறோம்.”

- “The LTTE learned with deep distress the tragic demise of the T.U.L.F. leaders, Amirthalingam and Yogeswaran. We suspect that diabolical forces are at work to discredit the organization and to disrupt the current peace talks between the LTTE and the government of Sri Lanka” - என்று அந்த அறிக்கை கூறியது.

ஆக, அமிர்தலிங்கம் வரலாற்றை எழுதியவறே புலிகள் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்யவில்லை. இத்தகைய ராணுவ ரீதியான நடவடிக்கைகளை புலிகள் மேற்கொண்டால் அவர்கள் அதை மறுக்கும் வழக்கமுமில்லை என்பது புலிகள் வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

- இந்திய ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற விடுதலைப் புலிகள் நியாயமான கோரிக்கைக்கு இலங்கை அரசே ஆதரவு தந்து போர் நிறுத்தம் செய்து புலிகள் சம்மதத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்த ஒரு நல்ல வாய்ப்புச் சூழலில் கிடைத்த நல்ல வாய்ப்பை விடுதலைப் புலிகளே குலைப்பார்களா என்பதை நடுநிலையில் சிந்திக்கும் எவருமே புரிந்து கொள்ள முடியும்.

இந்த உளவு நிறுவன சதியை அன்றைய பிரேமதாசா அரசும் நன்றாகவே புரிந்து கொண்டது. இலங்கை அரசாங்கமே நடத்தும் ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகை இது பற்றி வெளியிட்ட செய்தியே (1989 ஜுலை 14) என்ன தெரியுமா?

“அமிர்தலிங்கம் கொலையை நடத்தியதே விடுதலைப் புலிகள்தான் என்று தவறாக, புலிகள் மீது பழிபோடும் முயற்சிகள் நடக்கின்றன. இத்தகைய முயற்சிகள் பற்றி, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்” - இதுதான் இலங்கை அரசின் அதிகாரபூர்வ பத்திரிகை வெளியிட்ட செய்தி.

ஈழப் போராட்டத்தின் தொடக்கக் காலத்திலிருந்து உன்னிப்பாக ஆராய்ந்து ஜெயரத்தினம் வில்சன் என்ற ஆய்வாளர் ‘Break-up of Srilanka’ என்ற நூலை எழுதியுள்ளார். அதில் 1983-86 ஆம் ஆண்டுகளின் நிலையை இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“எனக்கு தெரிந்தவரை இலங்கையில் தங்களின் தலையீட்டுக்காகவே இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் திட்டங்களை உருவாக்கி வெவ்வேறு கட்டங்களில் அமுல்படுத்தி வந்துள்ளனர். இந்தியாவின் இத் திட்டத்தால் தமிழர் அய்க்கிய முன்னணி தலைவர்களும், போராளி இயக்கங்களும் நம்பிக்கை பெற்றன. தமிழர் தலைவர்களை ஏமாற்றி திசை திருப்புவதுதான் இந்தியாவின் நோக்கம் என்ற கருத்து ஊகமாகக்கூட இருக்கலாம். ஆனால் - ஒன்று மட்டும் உண்மை. தமிழ் தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் இந்தியா இந்த உதவிகளை செய்ததன் மூலம் அவர்கள் அனைவரும், இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டார்கள்” என்று எழுதும் ஜெயரத்தனம் வில்சன், மேலும் எழுதுகிறார்:

“இந்தியாவின் ‘ரா’ (RAW) உளவு நிறுவனம், இந்தக் கருத்தை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டது. ‘ரா’வின் ஏஜெண்டுகள் தமிழ் போராளி குழுக்களிடையே ஊடுருவினார்கள். அவர்களிடமிருந்து பல முக்கிய ரகசிய தகவல்களை சேகரித்ததோடு, போராளிகள் குழுக்களிடையே பிளவுகளை உருவாக்கி, ஒரு குழு, மற்ற குழுவை அடக்கிடும் வலிமை பெற்று விடாமல், சமநிலையில் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர். இந்த முயற்சியில் முதல் கூட்டத்தில் ‘ரா’ உளவு நிறுவனம் வெற்றிப் பெற்றது என்பது உண்மைதான். ஆனால், கடைசியாக விடுதலைப் புலிகள், வலிமை பெற்று உயர்ந்து நின்றதைத் தடுக்க முடியாமல் ‘ரா’ அவர்களிடம் தோற்றுப் போய் விட்டது” - என்று எழுதுகிறார். ஆக -

• அமிர்தலிங்கத்தை சுட்டவர்கள் - மாத்தையாவின் ஆட்கள்.

• அமிர்தலிங்கம் மரணத்தைக் கண்டித்த - புலிகள் இயக்கம். அவரைக் கொன்றவர்கள் பேச்சுவார்த்தையை குலைக்க விரும்பும் சக்திகள் என்று பகிரங்க அறிக்கை விடுத்தது.

• அமிர்தலிங்கம் வரலாற்றை எழுதியவரே கொலையில் உறுதியான முடிவுக்கு வரவில்லை.

• இலங்கை அரசே, அமிர்தலிங்கம் கொலையில் புலிகள் தொடர்பை மறுத்தது.

• அமிர்தலிங்கத்தை கொலை செய்யக் கூடிய தேவையோ, அரசியல் சூழலோ புலிகளுக்கு இல்லை - இவ்வளவுக்குப் பிறகு ராஜீவ் சர்மா, அமிர்தலிங்கத்தைக் கொன்றது புலிகள் தான் என்று பழிபோட்டு விடுகிறார்.

ஒரு காலத்தில் ஈழத்தில் தமிழர்களின் செல்வாக்கு மிக்க தலைவராக உயர்ந்து நின்ற அமிர்தலிங்கம், 1981க்குப் பிறகு இந்தியாவை நம்பினார். இந்திரா காந்தி தமிழ் ஈழத்தை வென்று, தம்மிடம் ஒப்படைப்பார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால், 1984 இல் இந்திரா, சீக்கியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டவுடன் அவரது கனவு தகர்ந்தது.

அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர் 5 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அந்த 5 ஆண்டுகாலமும் தற்காலிகமாக தமிழ்நாட்டில் அரசு பாதுகாப்போடு தங்கியிருந்தார். இந்திய உளவு நிறுவனத்தோடு அமிர்தலிங்கம் மேற்கொண்ட ரகசிய உடன்பாடுகள் இலங்கை நாடாளுமன்றத்துக்கு வந்த அமிர்தலிங்கம் வழியாக அம்பலமாகிவிடுமோ என்ற அச்சம், ‘ரா’ உளவு நிறுவனத்துக்கு வந்திருக்கக் கூடும். தாங்கள் வகுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கும் ரகசிய திட்டங்கள் அம்பலமாவதற்கு உளவுத் துறை எப்போதுமே வாய்ப்புகளைத் தருவதில்லை, இது உளவுத் துறையின் செயல்பாடுகளை அவதானிப்போருக்கு நன்றாகவே தெரியும். அந்த சதிக்கே அமிர்தலிங்கம் பலியானார்.

இதேபோல், 1985 ஆம்ஆண்டில் யாழ்ப்பாணத்தில், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான வி.தர்மலிங்கம், எம். ஆலால சுந்தரம் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டபோது அந்தப் பழியும் விடுதலைப் புலிகள் மீது தான் போடப்பட்டது. அது உண்மை தானா? அதையும் தான் பார்த்து விடுவோமே!

(தொடரும்)

... நன்றிகள் அஜீவன் ...

அமிர்தலிங்கம் கொலை. முஸ்லிம்கள் வடக்கில் இருந்து வெளியேற்றம். ராஜிவு கொலை இந்த மூன்றும் புலிகளை மீறிச் செயற்ப்பட்டது?

உண்மையாக இருக்கலாம் ஆனால்? அந்தளவுக்கு கையேலாமலா இருந்தார்?????????????????

யார் இந்த விடுதலை ராசேந்திரம்?

புலிகளின் முன்னாள் முக்கிய உறுப்பினரா?

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கம் கொலை. முஸ்லிம்கள் வடக்கில் இருந்து வெளியேற்றம். ராஜிவு கொலை இந்த மூன்றும் புலிகளை மீறிச் செயற்ப்பட்டது?

உண்மையாக இருக்கலாம் ஆனால்? அந்தளவுக்கு கையேலாமலா இருந்தார்?????????????????

இப்போது யாரும் மறுப்பு சொல்வதற்கு இல்லை என்பதினாலா எது வேண்டுமானாலும் புலிகளைப்பற்றி எழுதலாம் என நினைக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல அமிர்தலிங்கத்தின் தவறான முடிவுகளால் கொல்லப்பட்ட மக்களுக்கு தீர்ப்பை சொல்லுங்க.

சும்மா தேவையற்று.. அமிர்தலிங்கம்.. ராஜீவ் காந்தி.. முஸ்லீம் ஜிகாத் இவற்றை இங்கு முன்னிறுத்த வேண்டாம்.

இவர் கிழக்கைச் சேர்ந்த சசி.. ஒன்றை உணர வேண்டும்.. முஸ்லீம் ஜிகாத் கும்பலின் மிக மோசமான செயற்பாடுகள் கிழக்கை மையமாக கொண்டிருந்து அதன் அடிப்படையில் தான் வடக்கில் இருந்து அவர்களை இரு இன மக்களின் பாதுகாப்புக் கருதி வெளியேற்ற வேண்டி வந்தது.

அவை முடிந்து போன விடயங்கள். புலிகள் முஸ்லீம்களை மன்னிச்சிருக்கலாம். ஆனால் மூதூரிலும்.. கிண்ணியாவிலும்.. மட்டக்களப்பிலும்.. அம்பாறையிலும்... மன்னாரிலும்.. ஜிகாத்தால்.. முஸ்லீம் ஊர்காவல் கும்பலால் பாதிக்கப்பட்ட மக்கள் இவற்றை மன்னிக்கத் தயார் இல்லை. மனங்களில் உள்ள காயங்களை இப்படியான கட்டுரைகளால் கிஞ்சுதமும் ஆற வைக்க முடியாது.

அதே நிலைதான்.. அமிர்தலிங்கமும்.. ராஜீவும். ராஜீவ் 1987 -90 வரையான அனைத்துப் படுகொலைக்கு பொறுப்பானவர். அவரும் அவர் சார்ந்த அதிகாரிகளும் சர்வதேச போர்க் குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். தண்டிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள். அதே நிலையில் தான் அமிர்தலிங்கமும்.

அமிர்தலிங்கத்தின் கொலையை யார் செய்திருந்தாலும்.. அதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை..!

Edited by nedukkalapoovan

அவர்கள் செய்தார்கள் என்று நாமும் செய்யலமோ? அவர்கள் செய்தார்கள் அதை ஆதரத்துடன் பழிவாங்க வேண்டும் அதை விடுத்து குற்றவளி என்று சொல்லி நாமே கொலைசெய்யலாமா? செய்த கொலைய வேற என்னை க்கு தெரியாமல் நடைபெற்றது அந்த தலை வர் செய்தார் இந்த தலவர் என் அனுமதி இல்லம செய்தார் என்று நொண்டிச் சாக்கு சொல்லுவதில் என்ன பலன் கிடைக்க போகிறது?

குழந்தைத்தனமாக இல்லை?

இது உண்மையான செய்திதான்.ஆனால் புலிகளின் உயர்மட்டத்திலும் கூட்டணியிலும் ஒரு பெரிய குழப்பமே இருந்தது.அக்கால கட்டத்தில் கூட்டணி கட்சிக்குள் நித்தியானந்தா வழிச்சமாச்சாரம் பெரிய அளவில் மையம் கொண்டிருந்தது.இதில் மட்டக்களப்பு ராசதுரை,செல்லத்தம்பு,ஆலாலசுந்தரம் ஆகியோர் அங்கம் வகித்திருந்தார்கள்.கட்சிக்குள் பல ஆண்டுகாலமாகவலம் வந்த சூறாவளியால் அமிர்தலிங்கம் விரும்பியோ விரும்பாமலோ இந்தியா பக்கம் சாரவேண்டியிருந்தது.அதே நேரம் இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகள்,மாற்று அணிகளுடன் சீரான தொடர்பும் இருந்தது.இது றோவுக்கு பெரும் எரிச்சலான காலகட்டம்.பல தடவைகள் சந்திப்பு நடத்திய இவர்களையே வைத்து மாத்தையா மூலம் காரியத்தை நிறைவேற்றியது றோ தான்,ஆனால் ரோ இதன் மூலம் சாதித்தது தமிழர்களை பிரித்தது.பலவீடுகளில் இயக்கத்தை அப்பா அம்மாக்களுக்கு பிடிக்காது.பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்,இதே பாணியில் தான் கருணா பிரிக்க பட்டார் ஆனாலும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குள் தலைவருக்கும் மாத்தயாவுக்கும் பெரிய விவாதமே நடந்தது.இவ் விவாதங்களுக்கு பின் தான் மாத்தையா கண்காணிக்க பட்டார்.இந்திய ராணுவம் புலிகள் மீது தாக்குதல் நடத்த தொடங்கிய காலம் நல்லூரை நோக்கிய பாதையில் மகளீர் அணியால் கோப்பாயில் துவசம் செய்ய பட்டது.அதி ஒரு அணித்தலைவி கொல்லபட்டார்(பெயர் ஞாபகம் இல்லை)அந்த நிகழ்வு நடந்து சொற்ப நேரத்தில் மா நில செய்தியில் அப்பெண்ணின் முழு விபரமும் வெளியிடப்பட்டது.அதிலிருந்து தான் மாத்தையாவின் ரோவுடனான செய்தி உறுப்படுத்தபட்டது.டிக்ஸீற் மற்றும் பூரி அவர்கள் கூட்டணி மூலமாகவும் மாத்தையாவின் மூலமாகவும் விரித்த சதிவலைகளிலிருந்து தலைவர் புத்திசாதுரியமாக தப்பினார்.தற்போது புலம் பெயர் மண்ணில் இருக்கும் நிலைதான் அப்போது இருந்தது.கதிரைப்போராட்டம் அல்லது பதவி ஆசையென்றே கூறலாம்.தலைவர் ஒரு போதும் அறிவாளிகளை, சர்வதேச தொடர்பாளிகளை போட்டுதள்ள நினைத்தது கிடையாது.எப்படியாவது வழிக்கு கொண்டுவருவோம்.என்றுதான் கூறுவார்.ஆனால் கூட்டணியிடம் இருந்த நிலை வேறு.புலிகள் போராட வேண்டும்.எங்கள் கைகளுக்குள் இருக்க வேண்டும்.இதைத்தான் இந்தியா,அமெரிக்கா எல்லோரும் எதிர்பார்த்தது.91ம் ஆண்டு திலகர் அவர்கள் அமெரிக்கா பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து இருந்தார்.அவர் சந்திபதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்திய உளவுத்துறை வழங்கிய செய்தி இவர்களை கட்டுபடுத்த முடியாது என்பதுதான்.அந்த சந்திப்பும் பிசுபிசுத்தது.வல்லரசுகள் பார்வையில் புலிகளின் வளர்ச்சி பிற்காலத்தில் தங்களுக்கு சவாலாக அமையும் என்பதாலும் இலங்கை அரசின் பயங்கரவாத முத்திரையும் சேர்ந்து எடுத்த முடிவுதான் தமிழரின் பலத்தையழித்து அதன் பின்னர் அவர்களுக்கு உரிமை பெற்றுகொடுத்தல்.பலத்தை அழித்தாயிற்று,இப்போ உரிமை வழங்க வேண்டும் அனால் இலங்கையரசு முரண்டு பிடிக்கிறது.இதை ஒரு கட்டத்தில் நேரு குணரத்தினம் புலிகள் அழிந்துவிட்டார்கள் என்றார்.(இது சர்வதேசத்தின் நிகழ்சி நிரல்)உங்கள் நிகழ்ச்சி நிரலின் படி அடுத்தது என்ன?

சும்மா தேவையற்று.. அமிர்தலிங்கம்.. ராஜீவ் காந்தி.. முஸ்லீம் ஜிகாத் இவற்றை இங்கு முன்னிறுத்த வேண்டாம்.

இவர் கிழக்கைச் சேர்ந்த சசி.. ஒன்றை உணர வேண்டும்.. முஸ்லீம் ஜிகாத் கும்பலின் மிக மோசமான செயற்பாடுகள் கிழக்கை மையமாக கொண்டிருந்து அதன் அடிப்படையில் தான் வடக்கில் இருந்து அவர்களை இரு இன மக்களின் பாதுகாப்புக் கருதி வெளியேற்ற வேண்டி வந்தது.

அவை முடிந்து போன விடயங்கள். புலிகள் முஸ்லீம்களை மன்னிச்சிருக்கலாம். ஆனால் மூதூரிலும்.. கிண்ணியாவிலும்.. மட்டக்களப்பிலும்.. அம்பாறையிலும்... மன்னாரிலும்.. ஜிகாத்தால்.. முஸ்லீம் ஊர்காவல் கும்பலால் பாதிக்கப்பட்ட மக்கள் இவற்றை மன்னிக்கத் தயார் இல்லை. மனங்களில் உள்ள காயங்களை இப்படியான கட்டுரைகளால் கிஞ்சுதமும் ஆற வைக்க முடியாது.

உண்மையில் கிழக்கில் தான் ஜிகாத் அதிகாரம் செல்லுபடியானது. ஆனால் அங்கே யாரும் வெளியேற்றப்படவில்லை. - வெளியேற்றப்பட முடியாது. ஆனால் யாழ் முஸ்லிம்கள், பாவம் - சில மணி நேர அவகாசத்தில், தாம் பிறந்து, வளர்ந்து, வாழும் ஊரை விட்டு விரட்டியடிக்கப்பட்டது கொடுமை. அதுவும் கையில் கிடைத்த சொத்துக்களை மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதி.

இதே கொடுமை தான் தமிழருக்கு 95 இறுதியில் இலங்கை இராணுவம் செய்தது. எமக்கு எப்படி வலித்தது?

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் செய்தார்கள் என்று நாமும் செய்யலமோ? அவர்கள் செய்தார்கள் அதை ஆதரத்துடன் பழிவாங்க வேண்டும் அதை விடுத்து குற்றவளி என்று சொல்லி நாமே கொலைசெய்யலாமா? செய்த கொலைய வேற என்னை க்கு தெரியாமல் நடைபெற்றது அந்த தலை வர் செய்தார் இந்த தலவர் என் அனுமதி இல்லம செய்தார் என்று நொண்டிச் சாக்கு சொல்லுவதில் என்ன பலன் கிடைக்க போகிறது?

குழந்தைத்தனமாக இல்லை?

சசி, அருமையாகத் தெரியும் வரிகள். ஆனால் எப்படி அமிர்தர், ராஜிவ், நீலன் போன்றோரை "ஆதாரத்துடன் நீதியின் முன்" நிறுத்தியிருக்க முடியும் என்றும் விளக்க இயலுமா? ஏனெண்டா இப்பவும் கூட நாங்கள் டக்ளஸ் செய்த கொலைகளுக்கு ஆதாரத்தைத் தூக்கிக் கொண்டு உலகம் முழுக்க அலைகிறோம். எதுவும் நடக்கவில்லை. ஏன் என்று உங்களால சொல்ல முடியுமா? (அந்தக் காலத்தில புலிகளுக்கு ஆலோசனை சொல்ல உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.இப்ப புலிகள் இல்லாத காலத்திலயாவது இதையெல்லாம் எப்படி வித்தியாசமாகச் செய்திருக்கலாம் எண்டு ஆலோசனை தாங்கோவன்? இப்ப உங்கட காலம் தானே?)

1977 இனக் கலவரத்திற்குக் காரணமான திருமதி அமிரையும் மறக்காதையுங்கோ!

Edited by அலைமகள்

1977 இனக் கலவரத்திற்குக் காரணமான திருமதி அமிரையும் மறக்காதையுங்கோ!

இது பற்றி விளக்கமாக சொன்னால் நாங்களும் அறிந்து கொள்ளலாம் அலைமகள்.

உண்மையில் கிழக்கில் தான் ஜிகாத் அதிகாரம் செல்லுபடியானது. ஆனால் அங்கே யாரும் வெளியேற்றப்படவில்லை. - வெளியேற்றப்பட முடியாது. ஆனால் யாழ் முஸ்லிம்கள், பாவம் - சில மணி நேர அவகாசத்தில், தாம் பிறந்து, வளர்ந்து, வாழும் ஊரை விட்டு விரட்டியடிக்கப்பட்டது கொடுமை. அதுவும் கையில் கிடைத்த சொத்துக்களை மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதி.

இதே கொடுமை தான் தமிழருக்கு 95 இறுதியில் இலங்கை இராணுவம் செய்தது. எமக்கு எப்படி வலித்தது?

- வடக்கில் இருந்து முஸ்லீம் மக்கள் வெளியற்றப்பட்டது பிழை. இதற்கு பல தடைவைகள் தமிழர் தரப்பு மன்னிப்பு கேட்டுவிட்டது. ஆனால், இந்த மக்களின் துன்பியலில் பலரும் அரசியல் இலாபமே தேடுகிறார்கள், ஏனெனில் அந்த மக்களில் பலரும் இன்னும் மீளக்குடியமர்த்தப்படவில்லை.

- கிழக்கில் உள்ள ஜிகாத் நாளை வடக்கு உட்பட எங்கும் வரலாம், பரவலாம்.

- ஜிகாத் நேரடியாக வேற்று மத மக்களை வெளியேற்றா விட்டாலும் அது ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நேரத்தில்

அவர்கள் வெளியேற்றப்படவேண்டியவர்களே. முடிவு பிழை என்று எப்போதும் சொல்லப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே மன்னிப்பு கோரப்பட்டது.

வெளியேற்றப்படாதிருந்தால்.....?

எதுவுமே சாத்தியமில்லை. இன்றுவரை அவர்கள் எதையும் மாற்றிக்கொள்ளவுமில்லை. மாறப்போவதுமில்லை. :(

அமிர்தலிங்கம் கொலை. முஸ்லிம்கள் வடக்கில் இருந்து வெளியேற்றம். ராஜிவு கொலை இந்த மூன்றும் புலிகளை மீறிச் செயற்ப்பட்டது?

உண்மையாக இருக்கலாம் ஆனால்? அந்தளவுக்கு கையேலாமலா இருந்தார்?????????????????

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு குப்பைகொட்ட முயலுபவர்கள் பலரின் உள்நோக்கமும், தமிழினப் படுகொலையாளர்களின் உள்நோக்கமும் ஒன்றுதான்.

சசி, அருமையாகத் தெரியும் வரிகள். ஆனால் எப்படி அமிர்தர், ராஜிவ், நீலன் போன்றோரை "ஆதாரத்துடன் நீதியின் முன்" நிறுத்தியிருக்க முடியும் என்றும் விளக்க இயலுமா? ஏனெண்டா இப்பவும் கூட நாங்கள் டக்ளஸ் செய்த கொலைகளுக்கு ஆதாரத்தைத் தூக்கிக் கொண்டு உலகம் முழுக்க அலைகிறோம். எதுவும் நடக்கவில்லை. ஏன் என்று உங்களால சொல்ல முடியுமா? (அந்தக் காலத்தில புலிகளுக்கு ஆலோசனை சொல்ல உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.இப்ப புலிகள் இல்லாத காலத்திலயாவது இதையெல்லாம் எப்படி வித்தியாசமாகச் செய்திருக்கலாம் எண்டு ஆலோசனை தாங்கோவன்? இப்ப உங்கட காலம் தானே?)

அமிதலிங்கத்தை சுட்ட போது அந்தா aaL ஒன்றும் தெருநாயாக இருக்கவில்லை. 2 வது டக்கிளஸ் செய்த கொலையி பட்டியலை சொன்ன புலிகள் செய்த படுகொலையின் பட்டியல் அதை விட நீண்டு போகிறது....

என்ன செய்வது மற்றவன் கண்னில் பூளை இருக்கு என்று சொல்லுபவன் மூக்கில் சளி வடிந்த கதை தான் ஈழத்துக் கொலைகள்./

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு குப்பைகொட்ட முயலுபவர்கள் பலரின் உள்நோக்கமும், தமிழினப் படுகொலையாளர்களின் உள்நோக்கமும் ஒன்றுதான்.

நல்லது . இனி கொலைகள் செய்யபவர் இல்லை ஆனால் கொலைசெய்யபடவேண்டியவர்கள் பட்டியல் நீண்டு செல்கிறது??????!!!!!!!

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது..... பழைய நிகழ்வுகளை தூசி தட்டி, எடுத்து கருத்துப் பகிர்வதில் என்ன நன்மை?

உண்மையில் இனத்தை நேசிப்பவன், இனி நடக்கப் போகும் விடயங்களை ஆராய்வதே நல்லது.

அமிதலிங்கத்தை சுட்ட போது அந்தா aaL ஒன்றும் தெருநாயாக இருக்கவில்லை. 2 வது டக்கிளஸ் செய்த கொலையி பட்டியலை சொன்ன புலிகள் செய்த படுகொலையின் பட்டியல் அதை விட நீண்டு போகிறது....

என்ன செய்வது மற்றவன் கண்னில் பூளை இருக்கு என்று சொல்லுபவன் மூக்கில் சளி வடிந்த கதை தான் ஈழத்துக் கொலைகள்./

நல்லது . இனி கொலைகள் செய்யபவர் இல்லை ஆனால் கொலைசெய்யபடவேண்டியவர்கள் பட்டியல் நீண்டு செல்கிறது??????!!!!!!!

அண்மையில் தமிழினப் படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் சிங்கள அரச பயங்கரவாதிகளும், அதுகளுக்கு உதவி செய்து போற்குற்றசாட்டில் நடுங்க ஆரம்பித்திருக்கும் காட்டுமிராண்டி ஜனநாயகப் பயங்கரவாதிகளும் பெருமளவு பணத்தை தமது கைக்கூலிகளுக்கு வழங்கியிருப்பதாக கேள்விப்படுகிறோம். கடத்தல், கொலை, கப்பம், கொள்ளைக்காரக் கும்பலான டக்லஸ் மேல வேற இவ்வளவு பாசமா இருக்கும் உங்களைப் போன்றவர்கள் இதைப்பற்றிய விபரங்களைச் சொன்னால் நம்பக் கூடியதாக இருக்கும். அதைவிட்டுவிட்டு ஏன் தெரியதவற்றை எல்லாம் கற்பனைசெய்து பிழை பிழையாய் எழுதி உங்களுக்கு இருக்கக் கூடிய புத்தியையும் மழுங்கடிக்கிறீர்கள்?

தெருநாய்களைச் சுட வேணுமெண்டு புலிகள் கங்கணம் கட்டித் திரிந்ததாக எனக்கு நினைவில்லை. அல்லது "தெருநாய்களைச் சுட்டால் எங்களுக்கு ஓ.கே, மாடமாளிகையில் அரச பாதுகாப்போடு இருந்த அமிரைச் சுட்டால் தான் நாங்கள் கொதிப்போம்" என்று நீங்கள் சொல்வதாக எடுக்கலாமோ தெரியாது. நாய் எங்க அடி பட்டாலும் காலைத் தூக்கிற மாதிரி கேட்கிற கேள்விக்கெல்லாம் "புலிகளும் செய்தார்கள், கூடச் செய்தார்கள்" என்கிற பதிலை விடுங்கோ. எப்படி ஆயுதம் பாவிக்காமல் தமிழர் நலனை அடகு வைத்த மிதவாதிகளை (அல்லது டக்கி போன்ற தெருநாய்களை) புலிகள் கட்டுப் படுத்தியிருக்கலாம் என்று சொல்லுங்கோ. அதுக்குப் பதில் தெரியாட்டி ஓடிப் போய் ஒளிச்சிருந்துட்டு திரும்பவும் யாராவது கல்லெறியேக்க திரும்ப வந்து காலத் தூக்குங்கோ! சரியா? :rolleyes:

தாங்கள் செய்தது,செய்வது சரி என்று அரசாங்கம் கூறுவதும் சிலர் அப்படி எதுவுமே நடக்கவில்லை என கூறுவதும் புலிகளிடம் இருந்து படித்த பாடமாக இருக்கலாம்.

புலிகள் செய்தது சரியென்றால் அரசாங்கம் செய்ததும் சரிதான் என்றுஆகிவிடும்.

பீற்றர் சில்வர்மன் அன்றும் சொன்னார் தமிழர்களது மீள்குடியேற்றம் பற்றி கதைக்கும் நீங்கள் முஸ்லிம்கள் இன்னமும் முகாம்களிலிருப்பதை மறந்துவிடக்கூடாது என்று.

விசுகுவின் கருத்தின்படி முஸ்லிம்களை வெளியேற்றாவிட்டால் புலிகள் அப்பவே அழிந்திருக்கும் ஆன படியால் தான் வெளியேற்றினார்கள் என்று.அரசாங்கமும் இப்ப அப்படித்தானே சொல்லுது.அப்ப அவர்கள் செய்ததும் சரி என்று விட்டுவிடுவம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுத்திச், சுத்திச் சுப்பற்றை கொல்லைக்குள் உலாத்துவதை விட்டு, விட்டு.... ஏதாவது பிரயோசனமாய் பாருங்கோப்பா.....

சுத்திச், சுத்திச் சுப்பற்றை கொல்லைக்குள் உலாத்துவதை விட்டு, விட்டு.... ஏதாவது பிரயோசனமாய் பாருங்கோப்பா.....

என்னடாப்பா எத்தனையோ இலச்சம் சனம் அழிந்து போச்சு. அதை கதைப்பார் இல்லை

சும்மா கிடந்த அரசியல் வாதி அமிர்தலிங்கம் செத்ததை போட்டு ஆராயுகிறீர்கள்.(பண்ணாகம் மக்களே அவரை யார் என்று மறந்து போய் இருப்பினம்)

அவரும் ஈழ்த்துக்காக செத்தார் அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

தெருநாய்களைச் சுட வேணுமெண்டு புலிகள் கங்கணம் கட்டித் திரிந்ததாக எனக்கு நினைவில்லை. அல்லது "தெருநாய்களைச் சுட்டால் எங்களுக்கு ஓ.கே, மாடமாளிகையில் அரச பாதுகாப்போடு இருந்த அமிரைச் சுட்டால் தான் நாங்கள் கொதிப்போம்" என்று நீங்கள் சொல்வதாக எடுக்கலாமோ தெரியாது. நாய் எங்க அடி பட்டாலும் காலைத் தூக்கிற மாதிரி கேட்கிற கேள்விக்கெல்லாம் "புலிகளும் செய்தார்கள், கூடச் செய்தார்கள்" என்கிற பதிலை விடுங்கோ. எப்படி ஆயுதம் பாவிக்காமல் தமிழர் நலனை அடகு வைத்த மிதவாதிகளை (அல்லது டக்கி போன்ற தெருநாய்களை) புலிகள் கட்டுப் படுத்தியிருக்கலாம் என்று சொல்லுங்கோ. அதுக்குப் பதில் தெரியாட்டி ஓடிப் போய் ஒளிச்சிருந்துட்டு திரும்பவும் யாராவது கல்லெறியேக்க திரும்ப வந்து காலத் தூக்குங்கோ! சரியா? :rolleyes:

ஓ.கே போராட்டத்தை எப்படி நடத்தியிருக்கலாம் என்பது எல்லாம் எமக்கு தேவையில்லாதது.............

புலிகள் கொலைசெய்தார்கள் இதை புலம்புவதே எமது தலையாய கடமை இப்பபோது.

(போர் என்றால் கட்டிபிடித்து கொஞ்சுவது என்று நினைத்திருப்பாங்களோ?)

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் செய்தது,செய்வது சரி என்று அரசாங்கம் கூறுவதும் சிலர் அப்படி எதுவுமே நடக்கவில்லை என கூறுவதும் புலிகளிடம் இருந்து படித்த பாடமாக இருக்கலாம்.

புலிகள் செய்தது சரியென்றால் அரசாங்கம் செய்ததும் சரிதான் என்றுஆகிவிடும்.

பீற்றர் சில்வர்மன் அன்றும் சொன்னார் தமிழர்களது மீள்குடியேற்றம் பற்றி கதைக்கும் நீங்கள் முஸ்லிம்கள் இன்னமும் முகாம்களிலிருப்பதை மறந்துவிடக்கூடாது என்று.

விசுகுவின் கருத்தின்படி முஸ்லிம்களை வெளியேற்றாவிட்டால் புலிகள் அப்பவே அழிந்திருக்கும் ஆன படியால் தான் வெளியேற்றினார்கள் என்று.அரசாங்கமும் இப்ப அப்படித்தானே சொல்லுது.அப்ப அவர்கள் செய்ததும் சரி என்று விட்டுவிடுவம்.

ஓ.கே புலிகள் முஸ்லீம்களை விரட்டியதும் தவறு.

அரசாங்களம் குண்டு போட்டு மக்களை கொன்றதும் தவறு. ( நாட்டாமை தீர்ப்பு சொல்லிட்டார்)

இப்ப என்ன ஈழத்திலே போய் புல்லுபுடுங்க போறீங்களோ?????????????

நீங்கள் மக்களுக்காக எதையும் செய்ததும் இல்லை செய்ய போவதும் இல்லை ( முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியிலே தெரியுமாம்) புலிகள் இறுதிவரை போராடினார்கள் சில தவறுகளை புலிகளில் இருந்த உறுப்பினர்கள் செய்தார்கள் அந்த பழிகளையும் சுமந்தார்கள்.

இனியும்......................... புலிகளை சுமந்தவன் எவனோ அவனே மக்களை சுமக்க போகிறான் சுமக்கிறான்.

புலி புராணம் பாட நீங்கள் மாறி மாறி வேடம் போடலாம். புதிது புதிதுதாக ராகம் தேடி இசையமைத்து பாடலாம்.

மக்களுக்கும் தாயகத்திற்கும் உழைப்பவனுக்கு புலி என்ன செய்தது எலி என்ன செய்தது என்பது பொருட்டல்ல. நான் என்ன செய்தேன்??? அவனே செய்கிறான்!

அண்மையில் தமிழினப் படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் சிங்கள அரச பயங்கரவாதிகளும், அதுகளுக்கு உதவி செய்து போற்குற்றசாட்டில் நடுங்க ஆரம்பித்திருக்கும் காட்டுமிராண்டி ஜனநாயகப் பயங்கரவாதிகளும் பெருமளவு பணத்தை தமது கைக்கூலிகளுக்கு வழங்கியிருப்பதாக கேள்விப்படுகிறோம். கடத்தல், கொலை, கப்பம், கொள்ளைக்காரக் கும்பலான டக்லஸ் மேல வேற இவ்வளவு பாசமா இருக்கும் உங்களைப் போன்றவர்கள் இதைப்பற்றிய விபரங்களைச் சொன்னால் நம்பக் கூடியதாக இருக்கும். அதைவிட்டுவிட்டு ஏன் தெரியதவற்றை எல்லாம் கற்பனைசெய்து பிழை பிழையாய் எழுதி உங்களுக்கு இருக்கக் கூடிய புத்தியையும் மழுங்கடிக்கிறீர்கள்?

ஒருத்தி வேசையாடுகிறால் என்று அவளை கனவன் கொள்கிறான் அதை சிரல் சரி என்று சொல்கிறார்கள் அதில் ஒரு சிலர் வேசையாக இருந்தாலும் சுட்டுக் கொள்ளுவது மனிதத்தன்மை இல்லை என்று சொல்கிறார்கள். அப்போது முதல் சரி என்று சொன்னவர்கள் சொல்கிறார்கள் , பிழை என்று சொன்னவர்களும் அவளுடன் கூடப்படுத்து இருப்பார்கள் எனறு?

இது தான் உங்கள் நிலைப்பாடு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஒண்ணுமே பிரியலியே :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.