Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"யாராவது ஒரு தமிழ்ப்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய வேண்டுமென்றால் அவளை அடித்துத் துன்புறுத்தி அவர்கள் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டார்கள். அவளது பெற்றொர்கள் அதைத் தடுக்க முற்பட்டபோது அவர்களை அடித்தே கொன்றார்கள்.அது அவர்களின் ராட்சியமாக அவர்களுக்குத்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரக்கணக்கான தமிழர்களும் போராளிகளும் சுற்றிவளைக்கப்பட்டிருந்ததும் இறுதியுமான சிறிய நிலப்பரப்பைக் கைப்பற்றுமுன்னர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் கட்டளைக்கு அமைய 58 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சவீந்திர சில்வா தனக்குக் கீழிருந்த படையினரை ஒன்றுதிரட்டி, இந்தக் கட்டளையைப் பணித்ததாகவும், அதன்போது கைதிகளாக எவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டாமென்று கட்டளையிட்டதாகவும் இந்தப் படைப்பிரிவில் பணியாற்றிய ராணுவ அதிகாரியொருவர் சனல் 4 தொலைக்காட்சிக்குச் சாட்சியமளித்திருக்கிறார். சவீந்திரசில்வாவின் கீழ் அப்போது பணியாற்றிய இந்த அதிகாரியின் சாட்சியத்துக்கமைய கைதிகள் எல்லோரையும் கொல்லும்படியான உத்தரவு கோத்தபாயவினால் அனைத்துப் படைப்பிரிவுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இது இவ்வாறிருக்க இதே படைப்பிரிவில் கடமையாற்றிய முண்னனிப் படைவீரன் ஒருவனின் சாட்சியத்தின்படி, இறுதி நாட்களில் நடந்த கூட்டுப்படுகொலைகள், கூட்டுப் பாலியல் வண்புணர்வுகள், சித்திரவதைகள், மிருகத்தனமான அங்க அவயக் குதறல்கள் ஆகியவற்றினூடாக படுகொலைசெய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் கொலைக் காட்சிகள் வெளிக்கொண்ரப்பட்டிருக்கின்றன.

இலங்கையில் நடைபெற்ற இனக்கொலை பற்றி தொடர்ச்சியாக ஆராய்ந்துவரும் சனல் 4 தொலைக்காட்சி கடந்த புதன்கிழமை ஒளிபரப்பின்போது 58 ஆம் படைப்பிரிவின் அதிகாரி மற்றும் ராணுவ வீரரின் சாட்சியங்களைப் பதிவுசெய்திருக்கிறது. சாட்சியங்களின் பாதுகாப்புக் கருதி அவர்களின் உண்மையான பெயர்கள் மறைக்கப்பட்டிருந்தன.

மே 15, 2009 இல் இறுதியான தாக்குதலை ஒருங்குசெய்யுமுன்னர் பிரிகேடியர் சவீந்திர சில்வா தனது படையினரை ஒன்றுதிரட்டிச் சொன்ன செய்தி இதுதான், " இன்று எம்மைப்பொறுத்தவரையில் மிகவும் தீர்க்கமான நாள், ஏனென்றால் நேற்றிரவு பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. இன்னுமொரு சிறிய நிலப்பரப்பு மட்டுமே எம்மால் கைப்பற்றப்பட வேண்டி இருப்பதாக என்னிடம் அவர் கூறினார். அதைக்கைப்பற்றுவதற்கு உங்களால் என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்யுங்கள். இறுதி முடிவு எப்படியாக அமைய வேண்டுமோ அவ்வாறே நீங்கள் செய்யுங்கள்"

அந்த அதிகாரி மேலும் கூறியதாவது : "எங்களுக்கு மேலிடத்திலிருந்து சரணடைந்தவர்களைச் சுட்டுக் கொல்லும்படி கட்டளை வந்தது. எல்லாப் படைப்பிர்வுகளுக்கு இதே கட்டளை உத்தியோகப்பற்றற்ற முறையில் கிடைத்திருந்தது"

புலிகளியக்கத்தின் அரசியல்துறைபொறுப்பாளர் நடேசன், புலித்தேவன், அவர்களது குடும்பங்கள், மற்றும் பல நூற்றுக்கணக்கான போராளிகள் சரணடைந்த நிகழ்வு இதற்கு அடுத்தநாள் நடைபெற்றது. இந்த சரணடைதல் நிகழ்வை ஒழுங்குசெய்திருந்த சில வெளிநாட்டு அதிகாரிகளையும் சனல் 4 பேட்டி கண்டிருந்தது. அவர்களின் சாட்சியத்தின்படி இந்தச் சரணடைதல் நிகழ்வு மகிந்தவினூடாக அவரது அனுமதியுடனேயே அரங்கேற்றப்பட்டிருந்தது. ஆனால் சரணடைந்த அனைவரையுமே சிங்கள ராணுவம் கொன்று தள்ளியது.

அந்த அதிகாரியின் சாட்சியத்தின்படி, கோத்தபாயவிடமிருந்து வந்த இன்னொரு தொலைபேசிக் கட்டளைக்கமைய சரணடைந்த அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப்படுகொலை நடைபெற்ற பின்னர் தான் எடுத்த புகைப்படங்களையும் அந்த அதிகாரி சனல் 4 இற்குக் கொடுத்துள்ளார்.

சனல் 4 இன் ரெண்டாவது சாட்சி, இறுதி நாட்களில் 58 ஆம் படைப்பிரிவில் கடமையாற்றிய முன்னிலைப் படைவீரராகும். "உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்போல இருக்கிறதோ அதைச் செய்து அலுவலை முடியுங்கள் " என்று கோத்தபாய கூறியது தங்களைப் பொறுத்தவரை படுகொலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமாகவே உணரப்பட்டதாக அந்தப் படைவீரர் கூறினார்.

பாரியளவிலான படுகொலை ஒன்றுக்கு இது அத்திவாரமிட்டது.

பெருந்தொகையான சிறுவர்கள் குழந்தைகள் உற்பட பல்லாயிரக்கணகான பொதுமக்கள் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். பல பெண்கள் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டதுடன் அவர்களின் உடல் அவயங்கள் கொடூரமாக வெட்டிக் குதறப்பட்டன, இவற்றுள் பல சிறுவர்களும் அடங்கும்.

சனல் 4 இனால் பெர்ணான்டோ என்று பெயரிடப்பட்ட இந்த படைவீரர் தான் கண்ட இறுதிநாட்களின் கொடூரத்தை இவ்வாறு வர்ணித்தார்:

"இதை வெளியிலிருந்து பார்க்கும்போது அவர்கள் மிகவும் கொடூரமான விலங்குகளாகவே செயற்பட்டனர். அவர்களின் இதயங்கள் கொடூர மிருகங்களினதைப்போல் எந்தவித ஈவு இரக்கமுமின்றி அவர்கள் வேட்டையில் ஈடுபட்டனர்"

"அவர்கள் சகட்டுமேணிக்கு மக்களைச் சுட்டுத் தள்ளினார்கள், கத்தியால் குத்திக் கொலை செய்தார்கள், கூட்டாகப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டார்கள், ஓலமிட்ட மக்களின் நாக்குகளை அறுத்தெறிந்தார்கள், வண்புனர்வுள்ளாகிய பின் பெண்களின் மார்பகங்களை அறுத்தெறிந்தார்கள். இவையெல்லாவற்ரையும் நான் எனது கண்களால் பார்த்தேன். நூற்றுக்கணக்கான சிறுவர்களின் உடல்கள் அந்தப் பிரதேசமெங்கும் சிதறிக்கிடப்பதையும் கண்டேன்".

"பெருந்தொகையான அப்பாவிச் சிறுவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டேன், பெரியவர்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை".

"கடல்நீரேரியைக் கடக்க முற்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது அவர்கள் கடுமையாகத் தாக்குதல் நடத்துவதைக் கண்டேன். அவர்கள் புலிகளல்ல, சாதாரண பொதுமக்கள். பெண்களும், குழந்தைகளுமாக இவ்வாறு நீரேரியைக் கடக்க முற்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்வதை என் கண்களால் பார்த்தேன்".

"நான் ஒரு தாயையும் அவளது மூன்று பிள்ளைகளையும் பார்த்தேன். அவர்களை நாங்கள் பொறுப்பெடுக்க முற்பட்ட போது ஒரு ராணுவ வீரர் அந்தப் பிள்ளைகளில் ஒன்றைச் சுட்டார். அந்தப் பிள்ளைக்குக் காலில் காயம் ஏற்பட்டது. கீழே விழுந்த அந்தப் பிள்ளையை நான் எனது கைகளால் தூக்கிக் கொண்டேன். அந்தத்தாய் தொடர்ந்து கதறியபடி இருந்தாள்".

"காயப்பட்டவர்களுக்குக் கூட அவர்கள் கருணை காட்டவில்லை. ஒருநாள் வைத்தியசாலை ஒன்றிற்குச் சென்ற நான், அங்கே காயப்பட்டு படுத்திருந்த ஒரு பெண்ணை ஆறு ராணுவ வீரர்கள் சேர்ந்து கூட்டாகப் பாலியல் வல்லுறவு புரிவதை கண்டேன்".

எந்தக் கட்டுப்பாடுமற்ற விதத்தில் ராணுவவீரர்கள் தமக்கு விரும்பியதைச் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்று அந்த ராணுவ வீரர் சனல் 4 இடம் கூறினார்.

"யாராவது ஒரு தமிழ்ப்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய வேண்டுமென்றால் அவளை அடித்துத் துன்புறுத்தி அவர்கள் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டார்கள். அவளது பெற்றொர்கள் அதைத் தடுக்க முற்பட்டபோது அவர்களை அடித்தே கொன்றார்கள்.அது அவர்களின் ராட்சியமாக அவர்களுக்குத் தெரிந்தது"

"யுத்தகளத்திலிருந்த படைவீரரகளைப் பொறுத்தவரை அவர்களின் இதயங்கள் கல்லாக மாறியிருந்தன. ரத்தத்தையும், படுகொலைகளையும், மரணங்களையும் தொடர்ச்சியாகப் பார்க்கப் பழகிவிட்ட அவர்களுக்கு மனிதநேயம் என்பது துளியளவும் இருக்கவில்லை. அவர்கள் ஒரு கட்டத்தில் இரத்தக் காட்டேரிகளாகவே மாறியிருந்தனர்".

இந்த மிருக் குணங்களே அவர்கள் கொடூர சித்திரவ்தைகளைப் புரியவும், பொதுமக்களை உயிருடன் துண்டு துண்டுகளாக வெட்டி எறியவும் காரணமாக அமைந்தது என்று அந்தப் படை வீரர் சனல் 4 இடம் மேலும் கூறினார்.

"பெருந்தொகையான நிர்வாணமாக்கப்பட்டுத் தலை துண்டிக்கப்பட்ட பெண்களின் உடல்களைக் கண்டேன். அந்த உடல்களில் இன்னும் பல உறுப்புகளும் வெட்டி அகற்றப்பட்டிருந்தன".

"கொல்லப்பட்ட ஒரு தாயையும் அவளது கைக்குழந்தையையும் கண்டேன். அந்தக் குழந்தையின் உடலில் தலையைக் காணவில்லை".

"பெருந்தொகையான குழந்தைகளும், பெண்களும் ஆண்களும் போரின் இறுதிக் கட்டத்தில் படுகொலை செய்யப்பட்டனர். பெருந்தொகை என்று நான் சொல்லும்போது, புதுமாத்தளன் பகுதியில் மாத்திரம் குறைந்தது 1500 உடல்களை நான் கண்டேன்".

"ஆனால் அவர்களால் கொல்லப்பட்ட பொதுமக்கள் எல்லோரையும் உடனடியாகப் புதைக்க முடியவில்லை. அவர்கள் என்ன செய்தார்களென்றால், கொல்லப்பட்ட உடல்கள் எல்லாவற்றையும் பரவி விட்டு புல்டோசர் கொண்டு மண்ணினால் மூடினார்கள். அதைப் பார்க்கும்போது ஒரு மண் அணையைப் போல இருந்தது".

"புதுமாத்தளன் பகுதியில் மட்டுமே நான் 1500 உடல்களைப் பார்த்தேன். ஆனால் எல்லா இடங்களிலுமாகச் சேர்த்து குறைந்தது அவ்வாறான 50,000 உடல்களைப் பார்த்தேன்".

இந்த எண்ணிக்கை சரியானதுதானா என்று சனல் 4 கேள்வி கேட்டபோது, "இறுதிப்போரின்போது புதுமாத்தளன் பகுதியில் நான் கண்டதெல்லாம் கொல்லப்பட்ட மக்களின் உடல்களை மட்டும்தான். அந்தப் பகுதியில் நான் நுழைந்தபோது அந்தப் பகுதியெங்கும் உடல்களால் நிரம்பியிருந்தது".

"தம்மால் படுகொலைசெய்யப்பட்ட பொதுமக்களின் உடல்களை உடனடியாக அகற்றவேண்டிய தேவை அவர்களுக்கிருந்தது. அதற்காகவே அந்த பாரிய புல்டோசரைக் கொண்டுவந்திருந்தனர். அவர்கள் செய்ததெல்லாம் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உடல்கள் மீது மண்ணை அள்ளிக் கொட்டியதுதான். சில இடங்களுக்கு என்னால் போகக் கூட முடியவில்லை, அந்தத் தேசமெங்கும் பழுதடைந்த உடல்களின் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது".

" அவர்கள் அனைவரும் சாதாரண பொதுமக்கள், அவர்கள் போரிடும் எந்தப் பகுதியையும் சார்ந்தவர்களல்ல".

நன்றி தமிழ்நெட்.

Edited by நிழலி
பாலியல் வல்லுறவு என்ற சொல்லை பயன்படுத்த

- மொழிபெயர்ப்புக்கு நன்றிகள்

இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்?

இன்று சனல் நாலின் ஆவணங்கள் விடுதலைப்புலிகளை மட்டுமே நன்கு திட்டமிடப்பட்டு உலகத்திற்கு பயங்கரவாதிகள், கொடூரமானவர்கள் என காட்டிய சிங்களம் தான் உண்மையான பயங்கரவாதிகள், நாசிகள்

என முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.

சில சக்திகள் புலம்பெயர் மக்கள் போர்குற்ற விசாரணைகளை முன்னெடுத்தால் தாயக மக்களின் வாழ்வாதரம் மேலும் மறுக்கப்படும் என கூறி வந்தனர். ஆனால் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் மக்கள் அரசியல் உரிமைகளையே வேண்டி நிற்கின்றனர் என சொல்லி நிற்கின்றது.

அந்த வகையில் புலம்பெயர் மக்கள் தொடர்ந்தும் அந்த அரசியல் தீர்வை பெற்றுத்தர சிங்களம் மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க பரப்புரை வேலைகளை முன்னெடுக்கவேண்டும். அதன்மூலம் ஒரு சுயாதீன விசாரணைகள் நடாத்தப்பட்டு அதுவே ஐ.நா. மேற்பார்வையிலான ஒரு வாக்கெடுப்புக்கு வித்திடவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை அப்படியே ஒரு பிரதி உள்ளூராட்சித் தேர்தலில் "கக்கூஸ்" கட்ட மக்கள் ஆணை பெற்ற சம்பந்தருக்கும் அனுப்பி விடுங்கோ! ஒருங்கிணைந்த இலங்கைக்காக உழைக்கும் அவர் தமிழ்நெற், சனல் 4 போன்றவற்றைப் பார்க்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், நாகரிக மனித வேடம் தாங்கியிருக்கும் அசல் காட்டுமிராண்டிகள், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், போர்க் குற்றவாளிகள், ஏமாற்றிகள், ………….., சிங்களவர் வந்தேறு குடிகள், போலி வரலாறுகளை தயாரித்து மகா பொய்வம்சத்தை உருவாக்கி வருபவர்கள், வெகுமதிகளையும் மதுவகைகளையும் பெண்களையும் வழங்கி சர்வதேச பிரதிநிகளை மடக்கி சர்வதேசத்தை ஏமாற்றும் ஈனர்கள், ......, ……

  • கருத்துக்கள உறவுகள்

- மொழிபெயர்ப்புக்கு நன்றிகள்

இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்?

இன்று சனல் நாலின் ஆவணங்கள் விடுதலைப்புலிகளை மட்டுமே நன்கு திட்டமிடப்பட்டு உலகத்திற்கு பயங்கரவாதிகள், கொடூரமானவர்கள் என காட்டிய சிங்களம் தான் உண்மையான பயங்கரவாதிகள், நாசிகள்

என முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.

சில சக்திகள் புலம்பெயர் மக்கள் போர்குற்ற விசாரணைகளை முன்னெடுத்தால் தாயக மக்களின் வாழ்வாதரம் மேலும் மறுக்கப்படும் என கூறி வந்தனர். ஆனால் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் மக்கள் அரசியல் உரிமைகளையே வேண்டி நிற்கின்றனர் என சொல்லி நிற்கின்றது.

அந்த வகையில் புலம்பெயர் மக்கள் தொடர்ந்தும் அந்த அரசியல் தீர்வை பெற்றுத்தர சிங்களம் மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க பரப்புரை வேலைகளை முன்னெடுக்கவேண்டும். அதன்மூலம் ஒரு சுயாதீன விசாரணைகள் நடாத்தப்பட்டு அதுவே ஐ.நா. மேற்பார்வையிலான ஒரு வாக்கெடுப்புக்கு வித்திடவேண்டும்.

அகூதா அவர்களே தங்களின் கூற்று மிகச் சரியானது. ஆனால் இங்கும் பலதுண்டாகப் பிளவடைந்து, ஏட்டிக்குப் போட்டியானதொரு நிலையொன்று காணப்படுகிறது. இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழர் நலன் காக்க முன்வராவிடில், நாங்கள் தாயகத்தை மீட்பதற்காகவும் தமிழரின் சுயநிர்ணய உரிமையை உலகிலே வலியுறுத்தவும் தகமைகொண்ட அனைத்து நாடுகளிலிலுமுள்ள இளையதலைமுறையைக் கொண்டதொரு நிறுவனமயப்பட்ட செயற்பபாடொன்றை முன்மொழிவதே சிறந்த வழியாகப்படுகிறது. பொருத்தமான நேரத்தில் பொருத்தமற்ற செயற்பாடுகளை முன்னெடுக்கும் எந்தத் தலைமையையும் நிராகரிப்பதே விடுதலைக்கான முதலாவது வழியாகும். ஏனெனில் இளையோரிடமுள்ள செயல்நெறி வீச்சும் மொழிவளமும் பக்கச்சார்பற் தன்மையும் கொண்ட மனப்பாங்கு இன்றைய தேவையாகும்.

Edited by nochchi

ஆனால் இங்கும் பலதுண்டாகப் பிளவடைந்து, ஏட்டிக்குப் போட்டியானதொரு நிலையொன்று காணப்படுகிறது. இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழர் நலன் காக்க முன்வராவிடில், நாங்கள் தாயகத்தை மீட்பதற்காகவும் தமிழரின் சுயநிர்ணய உரிமையை உலகிலே வலியுறுத்தவும் தகமைகொண்ட அனைத்து நாடுகளிலிலுமுள்ள இளையதலைமுறையைக் கொண்டதொரு நிறுவனமயப்பட்ட செயற்பபாடொன்றை முன்மொழிவதே சிறந்த வழியாகப்படுகிறது.

எனது பார்வையில் இவ்வளவு பிளவுகளுக்குள் மத்தியில் கூட முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் சில குறிப்பிடத்தக்க வெற்றிகளை கண்டுள்ளோம். அதில் குறிப்பிட்டுக்கூறவேண்டியது சனல் நாலின் தொடரும் ஆவணப்படங்கள்.

இன்று எமது எல்லா அமைப்புக்களும் செய்வேண்டிய வேலை ஐ.நா. வின் மூனை செப்டெம்பர் மாதம் நடக்க இருக்கும் மனித உரிமைகள் தொடரில் சிங்களத்திற்கு எதிராக பிரேரணை கொண்டுவருதலில் கவனம் செலுத்தல்.

பொருத்தமான நேரத்தில் பொருத்தமற்ற செயற்பாடுகளை முன்னெடுக்கும் எந்தத் தலைமையையும் நிராகரிப்பதே விடுதலைக்கான முதலாவது வழியாகும். ஏனெனில் இளையோரிடமுள்ள செயல்நெறி வீச்சும் மொழிவளமும் பக்கச்சார்பற் தன்மையும் கொண்ட மனப்பாங்கு இன்றைய தேவையாகும்.

அதேவேளை சில குறிப்பிட்டு சொல்லக்கூடிய இளையோர்களும் பல விடயங்களை செய்துவருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் பேர்ல் (PEARL) அமைப்பு, இங்கிலாந்தில் TYO - UK என்பன குறிப்பிடத்தக்க வேலை திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்கிறன.

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா அவர்களே தங்களின் கூற்று மிகச் சரியானது. ஆனால் இங்கும் பலதுண்டாகப் பிளவடைந்து, ஏட்டிக்குப் போட்டியானதொரு நிலையொன்று காணப்படுகிறது. இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழர் நலன் காக்க முன்வராவிடில், நாங்கள் தாயகத்தை மீட்பதற்காகவும் தமிழரின் சுயநிர்ணய உரிமையை உலகிலே வலியுறுத்தவும் தகமைகொண்ட அனைத்து நாடுகளிலிலுமுள்ள இளையதலைமுறையைக் கொண்டதொரு நிறுவனமயப்பட்ட செயற்பபாடொன்றை முன்மொழிவதே சிறந்த வழியாகப்படுகிறது. பொருத்தமான நேரத்தில் பொருத்தமற்ற செயற்பாடுகளை முன்னெடுக்கும் எந்தத் தலைமையையும் நிராகரிப்பதே விடுதலைக்கான முதலாவது வழியாகும். ஏனெனில் இளையோரிடமுள்ள செயல்நெறி வீச்சும் மொழிவளமும் பக்கச்சார்பற் தன்மையும் கொண்ட மனப்பாங்கு இன்றைய தேவையாகும்.

This post has been edited by nochchi: Today, 06:25 PM

நொச்சியின் கருத்துக்களை நான் ஆமோதிகிறேன். புலத்தில் பிளவுண்டு கிடக்கும் தமிழ் அமைப்புக்களே இந்த நேரத்திலாவது நீங்கள் ஓன்று சேராவிட்டால் நீங்கள் மனித ஜென்மங்களே அல்ல.

நொச்சியின் கருத்துக்களை நான் ஆமோதிகிறேன். புலத்தில் பிளவுண்டு கிடக்கும் தமிழ் அமைப்புக்களே இந்த நேரத்திலாவது நீங்கள் ஓன்று சேராவிட்டால் நீங்கள் மனித ஜென்மங்களே அல்ல.

பிரிந்து நிற்பவர்களை இணைப்பது இணைந்து நிற்பவர்களின் செயற்பாடுகளே.

  • கருத்துக்கள உறவுகள்

நொச்சியின் கருத்துக்களை நான் ஆமோதிகிறேன். புலத்தில் பிளவுண்டு கிடக்கும் தமிழ் அமைப்புக்களே இந்த நேரத்திலாவது நீங்கள் ஓன்று சேராவிட்டால் நீங்கள் மனித ஜென்மங்களே அல்ல.

தமிழனிடம் இருப்பதே ஈகோ பிரச்சனை, இதைவிட்டு இவர்கள் ஒன்று சேர்ந்து பேரடுவார்களா & இந்த அநீதியை உலகிற்கு கொண்டு செல்வார்களா விரைவில்.

இவ்வளவு கொடுமை சொய்த அவர்கள் என்றோ ஒரு நாள் பதில் சொல்லியே ஆக வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

- இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்?

solidaritymarchforwarcr.jpg

  • கருத்துக்கள உறவுகள்

solidaritymarchforwarcr.jpg

கந்தப்பு, நான் கட்டாயம் வருவேன்!!!

solidaritymarchforwarcr.jpg

இதைத்தான்.

செய்பவர்களை ஆதரிக்கவேண்டும், ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும், அவர்கள் ஏதாவது தவறு செய்தால் உள்ளிருந்தே அன்புடன் சுட்டிக்காட்டவேண்டும். மிச்சம் தானாக, சரியாக நடக்கும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

மனித நாகரீகத்தின், கீழ்மட்டத்தையே சிங்களம் தொட்டுவிட்டது!

நாங்கள் அழிந்து போவது தான் எமது தலை விதியெனில், அழியும் முன்பு ' இறுதியாக ஒரு முறை பிரகாசித்து விட்டே' எமது இனம் அழியும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு, நான் கட்டாயம் வருவேன்!!!

Important Travel Announcement for those planning on traveling by train from the Western suburbs

Track work is organised by City Rail between the stations of St Marys and Granville.

Trains are replaced by buses for the following stations St Marys, Rooty Hill, Doonside, Blacktown, Sevenhills, Toongabbie, Pendle Hill, Wentworhville, Westmead, Parramatta.

Trains services will operate from Granville to City circle.

Please make sure you try and leave accordingly to avoid the time delays or alternatively you can park the cars at any of the stations east of Granville and catch the train to City circle.

மனித நாகரீகத்தின், கீழ்மட்டத்தையே சிங்களம் தொட்டுவிட்டது!

நாங்கள் அழிந்து போவது தான் எமது தலை விதியெனில், அழியும் முன்பு ' இறுதியாக ஒரு முறை பிரகாசித்து விட்டே' எமது இனம் அழியும்!!!

நாங்கள் அழிந்து போவது தான் எமது தலை விதியெனில், அழியும் முன்பு ' இறுதியாக ஒரு முறை பிரகாசித்து விட்டே' எமது இனம் அழியும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

மனித நாகரீகத்தின், கீழ்மட்டத்தையே சிங்களம் தொட்டுவிட்டது!

பௌத்த மதத் பஞ்ச சீலங்களில் முதலாவது

1. ஓருயிரையும் கொல்லாமலும் தீங்கு செய்யாமலும் இருத்தலோடு அவற்றினிடம் அன்பாக இருத்தல்.

http://sites.google.com/site/budhhasangham/Home/mylaiseeni/bauthamumthamilum3

இப்படி கொடூரம் செய்த்தவர்கள் எல்லாம் எப்படி விகரை படியை மிதிக்கிறார்கள், வெசாக் மகழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள்

ஆதாரங்களுக்கு மேல் ஆதாரங்கள். ஆனால் என்ன நடக்கும். இதில் சரியான முடிவை சர்வதேசம் எடுக்க வேண்டுமானால், அவர்கள் முதலில் இந்தியாவைப் பணிய வைக்க வேண்டும். இதைத் தவிர வேறு மார்க்கமில்லை.

ஆதாரங்களுக்கு மேல் ஆதாரங்கள். ஆனால் என்ன நடக்கும். இதில் சரியான முடிவை சர்வதேசம் எடுக்க வேண்டுமானால், அவர்கள் முதலில் இந்தியாவைப் பணிய வைக்க வேண்டும். இதைத் தவிர வேறு மார்க்கமில்லை.

அந்தக் காட்டுமிராண்டிகளுக்கு சாமரம் வீசும் சம்பந்தன் போன்றவர்கள் இருக்கும்வரை அதற்கான சாத்தியம் குறைகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.