Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெ. போர் விமானங்கள் இலங்கை வானில் அதிரடிஅனுமதி ஏதும் இன்றிப் பறந்தன அரசு எதிர்ப்பு; கடும் கண்டனம்

Featured Replies

அமெ. போர் விமானங்கள் இலங்கை வானில் அதிரடிஅனுமதி ஏதும் இன்றிப் பறந்தன அரசு எதிர்ப்பு; கடும் கண்டனம்

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான 10 போர் விமானங்கள் கடந்த வாரம் இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறிப் பறந்துள்ளன. இது குறித்து விசனம் அடைந்துள்ள இலங்கை தனது கண்டனத்தையும் கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது.

இது நாட்டின் இறைமையை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளது.தென்கிழக்காசியக் கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பலில் இருந்து கிளம்பிய போர் விமானங்களே இலங்கையின் வான்பரப்புக்குள் அனுமதி ஏதுமின்றித் திடீரெனப் புகுந்து வெளியேறின என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்க விமானங்கள் 10 இலங்கை வான் பரப்பைக் கடந்து சென்றமையை பேதுருதாலகாலவில் உள்ள விமானப் பறப்புக் கட்டுப்பாட்டுத் தலைமையகம் உறுதிப்படுத்தியது. இலங்கை விமானப் படையினரும் இதனை உறுதி செய்துள்ளனர். அனுமதி இன்றிச் சில விமானங்கள் கடந்த வாரம் இலங்கை வான் பரப்பில் பறந்தன என்பதை பொதுமக்கள் வானூர்தி கட்டுப்பாட்டுச் சபையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

அமெரிக்கப் படையினரின் வழக்கமான பயிற்சி நடவடிக்கை ஒன்றின்போதே விமானங்கள் இலங்கை வான்பரப்பைத் தாண்டிச் சென்றதாக அமெரிக்கப் படைத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறின. ஆனால், இது பற்றி கருத்துத் தெரிவிக்க கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்துப் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்று இலங்கை அமெரிக்கா வற்புறுத்திவரும் நிலையில், அதன் போர் விமானங்கள் இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறிப் பறந்துள்ளன.

நன்றி : உதயன்

நல்ல விசயம் பறக்கட்டும். முன்பும் ஒருமுறை பக்கத்து வீட்டுக்காறர் பறந்ததால் தமிழினம் அழிவைத்தான் சந்தித்தது. பொறத்த நேரத்தில் பறந்து இருந்தால் இவ்வளவு பேர் அழிவோமா?????????????, அம்புலிமாமா கதையள் எங்களுக்கு வேண்டாம். ^_^^_^^_^

சீனாகாறன் எங்கேயோ பொறுப்பாய் ஆப்பு இறுக்கியிருக்கிறன் போலை. கண்டு பிடிக்கிறத்துக்கு விழுந்த்தடிகினமோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான 10 போர் விமானங்கள் கடந்த வாரம் இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறிப் பறந்துள்ளன. இது குறித்து விசனம் அடைந்துள்ள இலங்கை தனது கண்டனத்தையும் கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது.

இந்தியா கொடுத்த ராடரை எல்லாம் கழட்டி, வைச்சிட்டாங்களா?

பத்தில் ஒன்றைக்கூட... விமான எதிர்ப்பு பீரங்கியால் சுட்டு விழுத்த முடியவில்லையா.......

  • கருத்துக்கள உறவுகள்

சீனாகாறன் எங்கேயோ பொறுப்பாய் ஆப்பு இறுக்கியிருக்கிறன் போலை. கண்டு பிடிக்கிறத்துக்கு விழுந்த்தடிகினமோ தெரியாது.

நாளை மகிந்தர் சீனா செல்கின்றார் அதுவாக இருக்குமோ ..........................??

அமெ. போர் விமானங்கள் இலங்கை வானில் அதிரடிஅனுமதி ஏதும் இன்றிப் பறந்தன அரசு எதிர்ப்பு; கடும் கண்டனம்

:D:rolleyes:<_<:mellow::blink::unsure:

ஸ்ரீலங்கா இறையாண்மை எங்கே :blink::o<_<

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=qlHm8FK5ZWo

இவனுங்க கடும் கண்டனம் தெரிவிப்பதே... விமான எதிர்ப்பு பீரங்கிய சுடத்தெரியாம பின்பக்கமாக திருப்பி வைச்சு சுட்டதால்தான்... ஒரே டமாஸ்தான்... :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=qlHm8FK5ZWo

இவனுங்க கடும் கண்டனம் தெரிவிப்பதே... விமான எதிர்ப்பு பீரங்கிய சுடத்தெரியாம பின்பக்கமாக திருப்பி வைச்சு சுட்டதால்தான்... ஒரே டமாஸ்தான்... :lol: :lol:

சுட்டானுகள் போர் விமானத்தையில்லை அடுப்பில் மாலு ரோட்டி .......... :lol:

இலங்கை வான்பரப்பில் விமானங்கள் ஊடுருவவில்லை: அமெரிக்கா

இலங்கை வான்பரப்பில் அமெரிக்க ஜெட் விமானங்கள் எதுவும் ஊடுருவவில்லையென கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று டெய்லிமிரருக்கு தெரிவித்துள்ளது.

எந்தவிதமான ஊடுருவல் நடவடிக்கையும் இடம்பெறவில்லை. எனக் கூறிய அமெரிக்கத் தூதரக அதிகாரி கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளார்.

அமெரிக்காவின் பத்து போர் விமானங்கள் இலங்கை வான்பரப்பில் பறந்தமையை எதிர்ப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி.நிமலசிறி கூறியிருந்தார். அமெரிக்க ஜெட் விமானங்கள் இலங்கை நிலப்பரப்பின் மேலாகாவா அல்லது சமுத்திர வான்பரப்பின் மேலாகாவா பறந்ததென்பதை கண்டறிவதற்கு முயற்சிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு நாட்டின் வான்பரப்பின் ஊடாக விமானங்கள் செல்ல வேண்டுமாயின் அந்த நாட்டின் முன்னனுமதி பெற வேண்டுமென்பது சர்வதேச விதிமுறையாகும்.

இதேவேளை, இலங்கை வான்பரப்பில் அமெரிக்க போர் விமானங்கள் அவ்வப்போது ஊடுருவதாக இலங்கை விமானப்படை தெரிவித்தது.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/25989-2011-08-08-08-07-44.html

Edited by akootha

அமெரிக்கா மீது ஜே.வி.பி. குற்றச்சாட்டு

இலங்கை வான் பரப்பிற்குள் ஊடுருவியதன் மூலம் சர்வதேச சட்டத்தை அமெரிக்கா மீறியுள்ளதாக ஜே.வி.பி. இன்று குற்றம் சுமத்தியுள்ளது. இது இலங்கையின் இறைமை மீதான சவால் என ஜே.வி.பியின் அரசியல் விவகார குழு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கு என்ன நடக்கப்போகிறது என்ற தெரியாத மர்ம நிலையில் மக்கள் வாழ்கின்றனர் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த ஊடுருவலுடன் 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட உடன்படிக்கைக்கு தொடர்புள்ளதா எனவும் ஜே.வி.வி. சந்தேகம் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பாக அரசாங்கம் விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு உண்மையை அறிவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/26009-2011-08-08-11-14-55.html

அமெரிக்க விமானம் இலங்கை வானில் அத்துமீறியமை உண்மை: விமானப்படை

அமெரிக்கா மீண்டும் மறுத்துள்ள போதிலும், இலங்கையின் வான் பரப்புக்குள் அந்நாட்டின் போர் விமானங்கள் அத்துமீறி பிரவேசித்தமையை இலங்கை விமானப்படை உறுதி செய்துள்ளது.

எமது வான் பரப்புக்குள் பறந்துகொண்டிருந்த விமானமொன்றை நாம் கண்டோம் என்பதே எமது நிலைப்பாடு என விமானப் படையின் பேச்சாளரும் குரூப் கெப்டனுமாகிய அன்ரூ விஜேசூரிய தெரிவித்தார்.

விமானத் தாங்கிகள் கப்பலான USS RONALD REAGAN அல்லது அதிலுள்ள விமானம் இலங்கையின் கடல் அல்லது வான் பாரப்பை அனுகவில்லை என அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.

அத்துடன், இலங்கை விமானப்படை தனது வான் பரப்புக்கு வெளியேயும் கண்காணித்து வருகின்றது. இதன்போதே விமானம் தாங்கிக் கப்பலின் விமானத்தை அவதானித்திருக்கலாம் என்று அமெரிக்காவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கெப்டன் விஜேசூரிய, நாம் எமது வான் பரப்புக்கு அப்பாலும் கவனித்து வருகின்றோம். எமது ராடார்களினால் இயன்றளவுக்கு நாம் அவதானிக்கின்றோம் என்றார்.

விமானம் தாங்கிக் கப்பலான USS RONALD REAGAN அதன் கப்பல்கள் சூழ்ந்துவர இந்து சமுத்திரத்தைக் கடந்து பசுபிக் சமுத்திரத்தை நோக்கிச் சென்றது. அப்போது வழமையான சில விமானப் பரப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் இதன்போது எந்தவொரு நாட்டினதும் வான் மற்றும் கடற்பரப்புக்குள் எமது விமானங்கள் செல்லவில்லை என இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரி கடந்த ஓகஸ்ட் 2ஆம் திகதி வெளிவிவகார அமைச்சருக்கு அறிவித்தார்.

இருப்பினும் சிவில் விமானச் சேவை அதிகாரசபை இது விடயமாக எதுவும் சொல்லவில்லை. ஆனால் சரியான தகவல்களைப் பெற்றபின், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவினால் அறிக்கையொன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/26073-2011-08-09-14-11-28.html

  • கருத்துக்கள உறவுகள்

புலியின்ரை விமானத்தை கண்டுபிடிக்கவே.... கஷ்டப்பட்டவங்கள். அமெரிக்க விமானத்தை கண்டு பிடிச்சாங்களாம்.

சிங்களவனுக்கு விசர் முத்தீட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ இனி அண்ணாந்து பாத்துக்கொனடிருக்க வேன்டியதுதான் :lol::lol:

அமெரிக்க காலம் தாழ்த்திவிட்டது. போர்நேரம் ஒரு பிலேனைத்தன்னும் கொழும்புவில் கொண்டுவந்து வலிந்து இறக்கியிருந்தால் இந்தியா, சீனா ஒருவராலும் ஒன்றும் செய்திருந்திருக்க முடியாது. இனி அணில் ஏறவிட நாயின் கதை தான்.

விமானம் எதுவும் ஊடுருவவில்லை: அமைச்சர்

சிலர் கூறியதுபோன்று இலங்கையின் வான்பரப்பிற்குள் எந்த வெளிநாட்டு விமானமும் அத்துமீறி பறக்கவில்லையென நாடாளுமன்றத்தில் சிவில் விமானப்பயண அமைச்சர் தெரிவித்தார்

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/26116-2011-08-10-11-33-47.html#comments

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ இனி அண்ணாந்து பாத்துக்கொனடிருக்க வேன்டியதுதான் :lol::lol:

எங்களுக்குத்தான் அண்ணா இந்தியா உள்ளதே சுட்டு விழ்த்த ஹ ......ஹ ........ :lol: :lol:

பொய் சொல்வது யார்?: ஜே.வி.பி

அமெரிக்க விமானங்கள் இலங்கையின் வான் பரப்புக்குள் அத்துமீறியதாக கூறப்படும் சம்பவத்தின் உண்மைத் தன்மைப் பற்றியும் இச்சம்பவம் தொடர்பில் பெறப்பட்ட முரண்பாடான அறிக்கைகள் பற்றியும் ஜே.வி.பி. அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.யார் பொய் கூறுகிறார்? யாரை நாம் நம்புவது? இதுவே எமது கேள்வி என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க கூறினார்.அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பணிந்து ஊடுருவல் ஏதும் நடக்கவில்லை என்று கூறியதற்கு பதிலாக இந்த விடயத்தை அரசாங்கம் விசாரித்திருக்க வேண்டுமென அவர் கூறினார். ஊடுருவல் நடந்ததாக விமானப்படையின் பேச்சாளர் கூறியுள்ளார். அவர்தான் ராடர்களை கண்காணிப்பவர். இவர் கூறுவதை நம்பாமல் அமைச்சர் சொல்வதை கேட்பது எவ்வாறு பொருந்தும்? இந்த விடயங்கள் அமைச்சருக்கு விளங்காதவை என சோமான்ஸ அமரசிங்க கூறினார். அமெரிக்க விமானத்தின் ஊடுறுவல் பற்றி உண்மை கூறிய விமானப்படை அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டாமெனவும் அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/26171-2011-08-11-12-44-04.html

சிறீலங்கா மீது அமெரிக்க விமானங்கள் ஏன் பறந்தன.. அதிரடி உண்மைகள்..

மானிடப்படுகொலையாளருக்கு எதிராக அமெரிக்காவின் இராணுவம் செயற்படப்போகிறது.. அமெரிக்க அதிபர் அமைக்கும் புதிய அற்றோசிற்றி பிறவின்சன் போட்..

சென்ற வாரம் சிறீலங்காவின் வான் பரப்பின்மீது அமெரிக்க விமானங்கள் சுமார் பத்துவரை பறந்து போனது தெரிந்ததே. இந்த விமானங்கள் தற்செயலாக சிறீலங்கா மீது பறப்பதற்கு யாதொரு முகாந்திரமும் கிடையாது. அதற்கான காரணங்கள் பல உள்ளன.

முதலாவது உலக சமுதாயமும், ஐ.நாவும் சிறீலங்கா ஆட்சியாளரால் ஏமாற்றப்பட்டுள்ளன. கடந்த 2009 ம் ஆண்டு மே மாதம் வன்னியில் நடைபெற்றது போரல்ல மானிடப் படுகொலைகளே.. அரசு என்ற காரணத்திற்காக.. இந்தியா துணையிருக்கிறது என்ற காரணத்திற்காக சிறீலங்கா மானிடப் படுகொலையின் திறந்தவெளி லைசென்சை கையில் எடுக்கவோ பயன்படுத்தவோ முடியாது.

இன்று அமெரிக்காவில் வெளியாகியுள்ள செய்தி ஈழத் தமிழ் மக்கள் வயிற்றில் பால் வார்க்கும் செய்தியாகும்..

சிறீலங்கா மட்டுமல்ல உலகின் எப்பகுதியானாலும் மானிடப் படுகொலைகளை செய்வோர், அதற்கான முஸ்தீபுகளில் தமது இராணுவத்தை முன் நகர்த்தும் கொடியவர்கள் அனைவருடைய கரங்களும் முறிக்கப்படப் போகின்றன.. இதுவரை தமிழர்கள் வராதா என்று கலங்கிய நாட்கள் கைகளுக்கு வரப்போகிறது. அதற்கான முதல் நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முடுக்கிவிட்டுள்ளார். அதன் பிரகாரம் உலகத்தில் நடைபெறும் இனப் படுகொலைகளை கண்காணிக்க அமெரிக்கா புதியதோர் குழுவை நியமிக்கப் போகிறது. அத்தகைய வரலாற்றுப் புகழ் மிக்க குழுவை அமைத்து பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதிகளில் முதலாவது சாதனை ஜனாதிபதியாக இடம் பெறப்போகிறார்.

இன்று வெளியான பென்டகன் செய்திகளின்படி திட்டமிட்ட முறையில் இன அழிப்பு செய்யும் ஆட்சியாளர்களை கண்காணித்து, அவர்கள் மீதான அமெரிக்க நடவடிக்கைகளை எடுக்கும் விசேட குழுவை அமெரிக்க அதிபர் அமைக்கவுள்ளார் என்று தெரிவிக்கிறது. அமெரிக்க பாதுகாப்புப் படைப்பிரிவின் அதிகாரிகள், ஒரு தொகுதி மந்திரிகள், பென்ரகன் அதிகாரிகள் கொண்ட ஆயமாக இது மலரும். அற்றோசிற்றி பிறவின்சன் போட் என்பது இதனுடைய பெயராகும்.

x-1.jpg

இனப்படுகொலைகளை செய்வோரை வெறுமனே கண்டிக்கப்படாமல் அவர்களுக்கு எதிராக வான் தாக்குதல் மூலம் உடன் நடவடிக்கை எடுப்பதற்கும் இது தயாராகும். வரும் 120 நாட்களுக்குள் இந்தச் சபை தனது பணிகளை ஆரம்பிக்கும்.

இதற்கான விசேட கருவிகளை பொருத்திய விமானங்கள் சம்மந்தப்பட்ட பகுதிகள் மீது கண்காணிப்பை நடாத்தும். இன ஒடுக்குமுறை, உளவுப்பிரிவுகளின் அட்டகாசம், கூலிக்குழுக்களின் கொலைகள் யாவும் மின்னல் வேகத்தில் பதிவுக்கு வரும். இதற்காக அதி நவீன கருவிகள் பொருத்திய விமானங்கள் செயற்படும். உளவு விமானங்கள் தரும் தகவலுக்கு அமைவாக சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பது தொடர்பான முடிவுகளை இந்த ஆயம் மேற்கொள்ளும். இதன் ஓரங்கமாக வான்வழித் தாக்குதல்கள் நடாத்தப்பட வழியுள்ளதாக பெயர் குறிப்பிடாத அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பதவியில் இருக்கும்போதுதான் சிறீலங்காவின் இனப்படுகொலை நடைபெற்றது. மற்றும் சூடான், ஐவரிக்கோஸ்ட், ஏமன் போன்ற இடங்களில் மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் லிபியாவில் இருந்துதான் இத்தகைய அநீதிகளை நேட்டோ தடுக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்கு முன்னர் சிறீலங்காவில் மாபெரும் தவறு நடந்துவிட்டது. எனினும் இந்தத் தவறுகளை இனியும் அமெரிக்கா அனுமதிக்கப்போவதில்லை என்று அந்தச் செய்தி வன்மையாக சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்க இராணுவப் போர்க்கல்லூரியின் உலக ஸ்திரத்தன்மைப் பிரிவு இதற்கான வேலைத்திட்டம் அடங்கிய கைநூலை 2007ம் ஆண்டிலேயே தயாரித்துவிட்டது. ஏ மிலிட்டரி பிளானிங் புக் என்ற பெயரில் இது வெளியாகியுள்ளது.

இன்றிரவு வெளியாகியுள்ள மேற்கண்ட செய்தி சிறீலங்கா மீது அமெரிக்க விமானங்கள் ஏன் பறந்தன என்ற கேள்விக்கு விடை தருவதுபோலவே அமைந்துள்ளன. இந்தியா, சீனா, ரஸ்யா போன்ற நாடுகள் தம்மைக் காப்பாற்றும். அமெரிக்கா மட்டும் நாடல்ல என்று சிறீலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று கூறியிருந்தார்.

ஆனால்..

சீனாவுக்கு தெரியும்படியாகவே அமெரிக்க விமானங்கள் சிறீலங்கா மீது பறந்துள்ளன. இந்தியா வாய் மூடி மௌனியாக இருந்துள்ளது. இந்தப்பறப்பு சிறீலங்காவுக்கு சில செய்திகளைச் சொல்லப்போகிறது.

சனல் 4 வெளியிட்ட காணொளியை மறுத்து, சிறீலங்கா லங்காபுவத் செய்திபோல போலி விளையாட்டுக்களைக் காட்டி இனியும் காலம் ஓட்ட முடியாது. இந்தியா உன்னிப்பாக அவதானிப்பதாக ரீல் விட முடியாது. புத்தபிக்குகள் வீண் புலம்பல் புலம்ப முடியாது.

சிறீலங்காவில் நடந்த, நடக்கும் இன ஒடுக்குதல் அனைத்தும் உண்மையே..! அதை உடனடியாக உலகம் நிறுத்தும் நாட்கள் நெருங்குகின்றன..

சிறீலங்கா நடாத்தி முடித்த மானிடப்படுகொலைக்கான விலையை கொடுக்க வேண்டிய நாட்கள் விரைவாக இல்லை.. மிக விரைவாக நெருங்குகின்றன..

இனி மானிடப் படுகொலைகள் இல்லை.. என்ற அமெரிக்க அதிபரின் முடிவு ஈழத் தமிழருக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஆறுதல்…வெற்றியாகும்..

அதமட்டுமல்ல..

நடந்த மானிடப்படுகொலைக்கும் சிறீலங்கா விலை கொடுக்க வேண்டிய நிலை வரும்.. என்ற அமெரிக்காவின் உறுதி இன்னொரு ஆறுதல்..

தமிழருக்கு நீதி கிடைக்கும் நாட்கள் நெருங்குகின்றன..

ஐ.நாவும், சீனாவும் உள்ளன.. போர்க்குற்ற நீதிமன்றில் நாம் நம்மை பதியவில்லை என்ற சிங்கள அரசியல் தலைவர்களின் வாதம் செல்லாக்காசாகப் போகிறது..

பின்லேடனுடன் முடிவடைந்த பயங்கரவாதத்திற்கு எதிரான சூறாவளி இனி அரச பயங்கரவாதத்திற்கு எதிராக வீசப்போகிறது..

அதற்கான அதிர்வலையே அமெரிக்க விமானங்களின் சிறீலங்கா மீதான பறப்பு என்று ஏன் கூற முடியாது..

அமெரிக்கா மட்டும் இதைச் செய்தால் ஒடுக்கப்பட்ட உலக இனங்களுக்கு அதைவிட பெரிய நன்மை வேறென்ன இருக்கப்போகிறது…

நல்வரவாகட்டும் அற்றோசிற்றி பிறவின்சன் போட் !

அலைகள் அமெரிக்க இராணுவ விவகாரங்கள் மீதான பார்வை 10.08.2011

-நன்றி அலைகள்

அலைகளின் பார்வை நல்லதாகத்தான் உள்ளது. அதில் சொல்லப்பட்ட விடயங்கள் நடந்தால் நன்மைதான்.

Good

ஆராவமுதன்: நீங்கள் திரும்பி வந்ததில் சந்தோசம். இன்னமும் களத்தில் எழுத கஸ்டபடுகிறீர்களா?

Edited by மல்லையூரான்

ஆராவமுதன்: நீங்கள் திரும்பி வந்ததில் சந்தோசம். இன்னமும் களத்தில் எழுத கஸ்டபடுகிறீர்களா?

உங்கள் கரிசனைக்கு நன்றி மல்லையூரன்.

தற்போது எந்த சிக்கலும் இல்லையெனத் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

U.N.'s Ban hails U.S. genocide measure

UNs-Ban-hails-US-genocide-measure.jpg

Secretary-General of the United Nations, Ban Ki Moon, who described efforts to prevent genocide positive steps. UPI/keizo Mori clear.gif

Related Stories

Advertisement

UNITED NATIONS, Aug. 9 (UPI) -- Measures declared last week by Washington to work to prevent genocide and mass atrocities are positive steps, the U.N. secretary-general said.

U.S. President Barack Obama called for an atrocities prevention board to respond quickly to early signs of alleged human rights abuses. Human rights abusers and war criminals would be hindered from getting visas into the United States under the initiative.

Obama said prevention of atrocities and respect for human rights laws are fundamental U.S interests.

U.N. Secretary-General Ban Ki-moon in a statement praised the Obama administration for upholding its responsibility to protect civilians from atrocities.

"If the responsibility to protect is to become fully operational, the solemn commitments undertaken by member states at the United Nations will have to be matched by innovative and sustained measures at the national level," he added in a statement through his spokesman.

Ban last month at a meeting of the U.N. General Assembly called for international efforts to make sure the 21st century was not one in which the pages of history were "written in the blood of innocents."

Read more: http://www.upi.com/T.../#ixzz1UmKzlQyj

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.